You are on page 1of 3

அவனேதான்

சேவலின் கூவும் சத்தத்தைக் கேட்டு துயில் எழுந்தார் திரு.கதிரன். சில்லென்ற பொழுதில்


மீதமான வெண்ணீரில் குளித்துக்கொண்டே இறுதிநாள் பணிக்கு புறப்பட்டார் அவர். பள்ளிக்கு
தற்காலிக ஆசிரியராக முதன் முதலாக பணிக்குச் செல்லும் போது ஏற்பட்ட புதுமையுணர்வு அது.
பனிவோய்வுக்கு பிறகு தனது நிலத்தில் செம்பனை மரங்களை நட்டு விவசாயம் பார்பதாக
திட்டமிட்டுக் கொண்டிருந்தார். 45 ஆண்டு கால பனியிலிருந்து ஓய்வு பெறுவது அவருக்கு உடல்
ரீதியில் ஏற்புடையாக இருந்தாலும் மனம் ஏற்க மறுத்தது. 45 வருட காலக்கட்டத்தில்
எத்தனையோ நினைவுகளையும் படிப்பினைகளையும் பெற்றிருந்தார். அறிவிலும் அனுபவத்திலும்
பழுத்த பழமாக இருந்தார். வழக்கத்திற்கு மாறாக அன்று சற்று விரைவாகவே பள்ளிக்குத்
தயாரானார். பழையதை என்றுமே மறந்திட கூடாது என்பதற்காக தான் முதன்முதலாக பனிக்கு
எடுத்துச் சென்ற மோட்டார் வண்டியிலேயே பள்ளிக்குச் சென்றார். மகிழந்தில் வரும் ஆசிரியரை
மோட்டார் சைக்களில் வருவதை கண்டு மற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் புதுமையுணர்வுடன்
பார்த்தனர்.
“என்ன சார் பழைய ஞபகமோ” என்று ஆசிரியர் கணேசன் கேட்ட கேள்விக்கு தனது
சிரிப்பையே பதிலாகக் கொண்டார். பள்ளியின் நுழைவாசலில் நுழையும்போது அவருடைய
பணிவோய்வின் படங்கள் தெளிவிர பதாகைகளில் காட்சியளிக்கப்பட்டிருந்தது. என்றுமே
இன்பமளிக்கும் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் அவருக்கு ஏக்க உணர்வையும் கவலையையும்
ஒரே நாளில் சேர்த்துக் கொட்டியது. பள்ளியில் அவருக்கு பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நெறியாளர் தன்னை பேச அழைப்பதுக் கூட அறியாது தனது
பழைய நினைவலைகளுக்கு உயிர் கொடுத்தார் திரு.கதிரன். தனது தற்போதைய
மனநிலையையும் அனுபவத்தையும் பிரியாவிடை நிகழ்வில் பகிர்ந்துக் கொண்டார். “நான்
பனிவோய்வு பெற்றாலும் ஓர் ஆசிரியராக எனது சேவைகள் உயிருள்ள தொடரும்” என்ற
அவருடைய வார்த்தைகளுக்கு கைத்தட்டல் மெருகூட்டியது. தான் இலவச கூடுதல் வகுப்பு
நடத்துவதாகவும் அந்நிகழ்வில் அவர் தெரிவித்திருந்தார். அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட
அந்நிகழ்வில் அவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆனால் அவர் மனதை தொட்டப் பரிசு
அவருக்காக அவருடைய முன்னால் மாணவர்கள் தயாரித்த அக்காணொளிதான். மேலும்
அவரிடம் கல்வியறிவு பெற்று தற்பொழுது அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியராக இருந்த
தேன்மொழியின் உரை அவரின் மனதை நெகிழச் செய்ததது.
டிரிங்……… என மணியடிக்கப்பட்டதும் மாணவர்கள் ஆசிரியர் அறையிலிருந்து பள்ளியின்
நுழைவாசல் வரை திரு.கதிரனை வழியனுப்பி வைக்க மாணவர்கள் வரிசையாக நின்றுக்
கொண்டிருந்தனர். அவர் பள்ளியை விட்டு செல்வதால் மாணவர்களின் கண்கள்
குளமாயிருந்தன. பார்பதற்கு கண்டிப்பான ஆசிரியரை போல் தோற்றமளித்தாலும் அன்புமிக்கவர்
திரு கதிரன். அரசாங்க விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு மனமில்லாமல் அப்பள்ளியின்
நுழைவாசலை தாண்டினார். அவரின் மேல்பட்ட சூரிய ஓளி அவரின் கடந்த கால நினைவுகளை
தட்டி எழுப்பியது. தற்போது நல்ல வசதியோடு வாழ காரணமாயிருந்த தமிழ்மொழிக்கும்
ஆசிரியர் பணிக்கும் என்றும் நன்றியுணர்வோடு இருப்பதாக மனத்தால் உறுதி மொழி
எடுத்துக்கொண்டார்.
அவரின் பணிவோய்வு பற்றிய தகவலை அறிந்த முன்னால் மாணவர்கள் அலைப்பேசியிளூ
சமுக வலைத்தளங்களிலும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர் பணிவோய்வு பெற்ற
அன்றொருநாள் முழுதும் அவரின் திறன்பேசி ஒய்வாகவே இல்லை. கனவனின் மனநிலையை
அறிந்த அவரின் மனைவி மாலதி ” கவலா படாதிங்க, எல்லாத்துக்கும் ஒரு வயசு வந்துட்ட
பணிவோய்வு கிடைச்சுதானே ஆகனும்” கொஞ்ச நாள்தான் அப்புறம் வீட்டில இருக்கறது
பழகிடும், அதுக்குதான் இலவச கூடுதல் வகுப்பு நடத்த போறிங்கலே, இப்போதைக்கு அத
மட்டும் யோசிங்க”என ஆறுதல் வார்தைகள் கூறினாள். திருமண ஆகி 40 ஆண்டுகளாகியும்
குழந்தை பாக்கியமில்ல அத்தம்பதியினருக்கு ஆறுதல் அவர்கள் பாடம் கற்பிக்கும்
மாணவர்கள்தான்.
பணிவோய்வுக்கு பிறகு வந்த முதல் திங்கட்கிழமையது. வழக்கம்போல சேவல் கூவி
தூக்கத்திலிருந்த அவரை எழுப்பியது. அவரும் எழுந்தார் ஆனால் பள்ளிக்கு தயாராகவில்லை
மனைவியை பள்ளிகூடத்தில் இறக்கிவிட்டு 8 மணியளவில் வீடு வந்து சேர்நத
் ார். சூரிய கதிரின்
மஞ்சையொளி இலைகளின் மேல் படர்ந்து பனிகளை சொட்ட செய்து கண்கூசும் அழகிய காட்சி
அவர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. குயிலின் கீதம் வானொலி கேட்கும் ஆசையை
அவரிடையே தூண்டிவிட்டது. சுட சுட தேநீருடன் வானொலியைக் கேட்க ஆரம்பித்தார்.
அறிஞர்களை அறிவோம் எனும் அங்கத்தில் வெற்றிமாறன் எனும் அறிஞர் கல்வி என்ற தலைப்பில்
பேசிக் கொண்டிருந்தார்.
வெற்றிமாறன் என்ற பெயரை கேட்டதுமே அவருக்கு அவருடைய முன்னால் மாணவன்
நினைவுக்கு வந்தான். 1997-ஆம் ஆண்டில் 10 வயது மாணவன் அவன் . இவ்வருடத்தில் 33
வயாதாகியிருக்கும். அவனது தற்போதைய நிலையை பற்றி யோசித்த அவர் அம்மாணவன் கற்று
தந்த பாடத்தை நினைத்து பெருமூச்சு விட்டார். தோட்டப்புறத்திலிருத்தாலும் கெட்டிகார
மாணவர்கள் நிரம்பியிருந்த பள்ளிக்கூடம் அது . அப்பள்ளியில் திரு.கதிரன் 4-ஆம் ஆண்டு
வகுப்பாசிரியராக பணிப்புரிந்தார். அவ்வகுப்பில் சிக்கலுக்குட்பட்ட மாணவனாக
இருந்தவன்தான் வெற்றிமாறன் . பள்ளிக்கு மட்டம் போடுவதில் அவனை மிஞ்ச ஆளிலில்லை.
அப்படியே பள்ளிக்கு வந்தாலும் மேசையின் மேலே படுத்து தூங்கிடுவான். இவனது நிலை
இப்படியிருக்க வகுப்பாசிரியராக அவனை பல முறை கண்டித்துள்ளார் திரு.கதிரன். அவனை
திருத்த முடியாது என்ற மனநிலையில் இருந்த அச்சமயம் அவன் சீனர் கோப்பி கடையில் வேலை
செய்வதை பார்த்துவிட்டார். திடுக்கிட்ட திரு.கதிரன் அவனை பின் தொடர்ந்து அவன் வீட்டை
அடையாளங்கண்டு கொண்டார். அவன் சீன கோப்பி கடைக்கு வேலைக்குச் சென்றதும் அவர்
அவனின் பெற்றொர்களை சந்திக்கச் சென்றார். ஆனால், அங்கே இருந்தது அவனுடைய பாட்டி
மட்டுமே விவாகரத்து காரணத்தால் அவனுடைய பெற்றோர் இவனை கைவிட்டுவிட்டனர்.
அவனின் பின்புலத்தை அறிந்த அவர் அவனுக்கு தேவையான உதவிகளைச் செய்து அவர்
வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் அவனுக்கு தங்க இடம் கொடுத்து தனியாள் முறையில் பாடம்
கற்பித்தார். அவனது பாட்டியின் இறப்பிற்கு பின்னால் அவனுடைய தந்தை அவனை அழைத்து
சென்றார் . அன்றுதான் அவனை பார்த்தா கடைசி நாள். இப்படி தனது நினைவலையிலிருந்து
திரும்பிய பொழுது அவரிருக்குமிடத்தில் வானொலியில் பேசிய அறிஞர் இலவச பட்டறை
நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. வீட்டில் வெறுமனே இருப்பதற்கு பதிலாக அப்பட்டறையில்
கலந்துக் கொள்ள எண்ணினார். பட்டறையில் கலந்தும் கொண்டார். அறிஞர் தனது உரையில்
அவரின் வாழ்கையில் ஒளியேற்றிய ஆசிரியரை பற்றி கண்ணீர் மல்க பேசினார். வேகமாக துடித்த
அவர் இதயத்தில் கை வைத்துக் கொண்டே மனத்துக்குள் சொன்னார் அவனேதான் என்று .
”என் ஆசிரியை கட்டியணைக்கும் தருணத்திற்கு காத்திருக்கிறேன்” என்ற வெற்றிமாறனின்
ஆசை நிறைவேறும் நொடியும் அதுவே. இதுவே ஓர் ஆசிரியரின் வாழ்வு.

You might also like