You are on page 1of 1

11/1/21, 11:40 AM தலைமுடி வளர்ச்சியில் 3 பருவங் கள் || 3 seasons in hair growth

நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள்
உதிர்வது இயற்கை. முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல்
முடி வளர்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. முடியின் வளர்ச்சி 3 பருவங்களைக்
கொண்டது.

Savahh by Royale Touche


Royalé Touché

VCare Hair And Skin Clinic


No.1 Hair Clinic in India
No.1 Hair Clinic In India - Get in touch for

instant Consultation with our experts today.


vcaretrichology.com

OPEN

இதில் ‘அனாஜன்’ என்பது வளரும் பருவம். ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர்
நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சி பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும். இதைத்
தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள்.

அடுத்தது ‘காட்டாஜன்’ என்று ஒரு பருவம். இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப்
பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் ‘டீலாஜன்’. இது முடி ஓய்வெடுக்கும் பருவம்.
இது சுமார் 2 முதல் 4 மாதங்கள்வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப்
பருவத்துக்கு திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும்.

தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில்


இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்;
வழுக்கை விழும்.

வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன். இந்த மூன்றும்தான் வழுக்கைக்கான முக்கிய


காரணங்கள்.

ஆன்ட்ரோஜன் ஹார்மோன், அளவாகச் சுரந்தால் முடி சரியாக வளரும்; அதிகமாகச் சுரந்தால் முடி
கொட்டும். காரணம், இது முடிக்குழிகளை சுருக்கி வளர்ச்சி பருவத்தை குறைத்துவிடுகிறது.

Related Tags :
Hair Problem | (https://www.maalaimalar.com/topic/Hair-Problem)

Hair Care | (https://www.maalaimalar.com/topic/Hair-Care)


Powered By Unibots
கூந்தல் பிரச்சனை | (https://www.maalaimalar.com/topic/கூந்தல்-பிரச்சனை)

கூந்தல் (https://www.maalaimalar.com/topic/கூந்தல்)
https://www.maalaimalar.com/health/naturalbeauty/2021/10/29080045/3144244/3-seasons-in-hair-growth.vpf 2/9

You might also like