You are on page 1of 4

சங்ககாலப்‌ புலவர்களில்‌ ஒருவராக போற்றப்படும்‌ ஒளவையார்‌.

தமிழ்கூறு
நல்லுலகம்‌ கண்ட ஈடிணையற்ற பல அரும்‌ பெரும்‌ தமிழ்ப்புலவர்களில்‌ தனிச்சிறப்பு
வாய்ந்தவராவார்‌. செம்மொழியாம்‌ தமிழ்மொழியின்‌ த தனிச்சிறப்பினை தரணியிலே
தழைத்தோங்க சங்கம்‌வளர்த்துக்‌காத்த தமிழ்புலவர்களின் வரிசையில்‌நீக்கமற நிறைந்தவர்‌
தமிழ்‌ மூதாட்டி ஒளவை பிராட்டியாவார்‌ என்றால்‌ அது மிகையல்ல. இப்பெருமகள்‌ சங்க
காலத்திலேயே ஆணாதிக்கத்தையும்‌ மீறி தன்‌ தேன்‌ சொட்டும்‌ தமிழ்ப்புலமையின்‌ மூலம்‌
தனிமுத்திரை பதித்து, காலங்களை வென்று உலக மாந்தர்‌ உய்ய சிறப்பான வாழ்க்கைத்‌
தத்துவங்களை தனது படைபிலக்கியங்களின்‌ வழி வாரி வழங்கியுள்ளார்‌. இவர்‌ தமிழுலகு
போற்றும்‌ வள்ளுவர்‌, நக்கீரர்‌, குடையானவர்‌, கம்பர்‌, செயங்கொண்டார்‌, புகழேந்தி,
ஒட்டக்கூத்தர்‌, சேக்கிழார்‌ போன்ற மாபெரும்‌ புலவர்களுக்கு ஈடானவர்‌ என்பதை இவரது
படைப்புகளின்‌ வழி அறிய முடிகிறது. சங்ககாலப்புலவர்களில்‌ ஒருவராகப்‌ போற்றப்படும்‌
ஒளவை பிராட்டியார்‌ அற்புதமான படைப்பிலக்கியங்களை உலகோர்‌ படித்துப்‌ பயன்பெற
படைத்து தந்துள்ளார்‌. அவையாவன எட்டுத்தொகையில்‌ உள்ள புறநானூறு, அகநானூறு,
நற்றிணை, குறுந்தொகை ஆகும்‌, மேற்குறிப்பிட்ட இந்த நூல்களில்‌மொத்தம்‌59 பாடல்களை
ஒளவை பிராட்டியார் பாடிச்‌சென்றுள்ளார்‌.

வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீணட


் காலம்
வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் நல்வழி, கொன்றை
வேந்தன், மூதுரை, ஆத்திசூடி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.

வாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டும் நூல் என்றதால் நல்வழி என்று பெயர் பெற்றது.
கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களையுடைய நூல் நல்வழியாகும்.

தமிழறிஞர்‌ ஒளவைமுதாட்டி தம்‌ நவரத்தினச்‌ சிந்தனைகளை எக்காலத்திற்கும்‌


எவ்வினத்தவருக்கும்‌ எம்மதத்தினருக்கும்‌ எந்நாட்டினருக்கும்‌ சொந்தமான பொதுவுடமைப்‌
பூக்களை முத்தாரமாகத்‌ தொகுத்துக்‌ கொடுத்தவர்‌. மனித மனம்‌ திருந்திட, உயர்ந்திட
சான்றோர்‌‌ சிந்தனைகள்‌ மிகவும்‌ வழிகாட்டியாகத்‌ திகழுகின்றன. திருக்குறள்‌ எப்படி உலக
ஒருமைப்பாட்டிற்கு மனிநேயப்‌ பாலமாக அமைந்துள்ளதோ, அதுபோன்றே ஒளவையின்‌
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்‌, மூதுரை, நல்வழி போன்ற நூற்சிந்தனைகள்‌ இக்கால உலகச்‌
சமுதாயத்திற்கு, குறிப்பாக மாணவர்களுக்கும்‌ இளைஞர்களுக்கும்‌ ஒரு வாழ்வியல்‌
அரிச்சுவடியாக உள்ளன.

மனிதர் மதியீனம்
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு

ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்

பாவிகாள் அந்தப் பணம்?

பதவுரை

 பாடுபட்டு - வருந்தி
 பணத்தைத்‌தேடி - பணத்தைச்‌சம்பாதித்து
 புதைத்து வைத்து - (அதைப்‌பயன்படுத்தாமல்‌) மறைத்து வைத்து
 கேடு கெட்ட - நஷ்டத்தால்‌வருந்திய
 மானிடரே - மனிதரே
 பாவிகாள்‌ - பாவிகளே
 கேளுங்கள்‌ - நான்‌சொல்வதைக்‌கேட்டுக்‌கொள்ளுங்கள்‌
 இங்கு - இவ்வுலகில்‌:
 கூடுவிட்டு - (இந்த) உடலை விட்டு
 ஆலி - உயிரானது
 போயின பின்பு - போன பிறகு
 அந்தப்‌பணம்‌ - (நீங்கள்‌) புதைத்து வைத்த அந்தப்‌பொருளை
 அனுபவிப்பார்‌ - பயன்படுத்துபவர்‌
 ஆர்-யார்‌? - (ஒருவருமில்லை)

பொருள்

பணத்துக்காகப் பாடுபட்டுகின்றனர். பணத்தைத் தேடிக்கொள்கின்றனர். தேடிய


பணத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்து வைக்கின்றனர். அனுபவிக்காமல் மறைத்து
வைக்கின்றனர். இவர்கள் கேடு கெட்ட மனிதர்கள். இப்படிக் கேடுகெட்ட மனிதரே! ஒன்று
சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் உடம்புக் கூட்டை விட்டுவிட்டு உங்கள் ஆவி போன பின்பு
அந்தப் பணத்தை யார்தான் அனுபவிக்கப் போகிறார்கள்?

என ஔவைப் பிராட்டி நாசூக்காக கேட்கிறார்.

அளவு கடந்த செலவு

ஆன முதலி லதிகஞ் செலவானால்

மானமழிந்து மதிகெட்டுப் போன திசை


எல்லார்க்குங் கள்ளனா யேழ்பிறப்புந் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லானா நாடு

பதவுரை

 ஆன - தனக்குண்டான
 முதலில்‌ - ஆதாரமாய்‌உள்ள பொருளில்‌
 அதிகம்‌ - மிகுதியாக
 செலவு ஆனால்‌ - செலவு ஏற்பட்டால்‌
 மானம்‌அழிந்து - பெருமை கெட்ட
 மதி கெட்டு - அறிவு அழிந்து
 போன திசை - (மறைந்து) சென்ற திசைகளிலும்
 எல்லார்க்கும்‌ - யாவர்க்கும்‌
 கள்ளனாய்‌ - திருடனாய்‌
 ஏழு பிறப்பும்‌ - ஏழு முறை பிறக்கும்‌மனிதப்‌பிறவியிலும்‌
 தீயனாய்‌ - கெட்டவனாகி
 நல்லார்க்கும்‌ - விருப்பமுள்ள பெண்களுக்கும்‌
 பொல்லன்‌ஆம்‌ - பொல்லாதவன்‌ஆவான்‌
 நாடு - இதைத்‌தெரிந்து கொள்‌

பொருளுரை:

வரவுக்கு மேல் செலவு செய்கிறவர்களின் மானம் அழியும்; அறிவு கெடும்;

சென்ற இடங்களில் எல்லாம் திருடன் என்ற இழிபெயரை ஏற்க வேண்டி வரும்;

அடுத்து வரும் பிறவிகளிலும் இந்தத் தீமை தொடர்ந்து வரும்;

நல்லவர்கள் கூட அவர்களைத் தீயவர்கள் என்று இகழ்வார்கள்.

எனவே வரவுக்கு மேல் செலவு செய்யக்கூடாது என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.

விளக்கம்

ஒருவன் தன் வருவாயை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன்
மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்படும், போகும் திசை
எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப் போல் பாவித்து அவனிடம் பேச தவிர்ப்பர், ஏழு
பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருவாய்க்கு
அதிகமாக செலவு செய்யக்கூடாது.
என்பது ஔவையாரின் வாக்கு.

You might also like