You are on page 1of 1

லகர, ழகர, ளகரச் சொற்களையும் அதன் பொருளையும் வாசித்திடுக.

வாள் - கைப்பிடியுடன் கூடிய, உலோகப் பகுதியின் இரு ஓரங்களும் கூர் முனை

கொண்ட நீண்ட கத்தி.

வால் - (விலங்குகளின்) உடலின் பின்புறத்தில் நன்றாக அசைக்கக் கூடியதாக

இருக்கும் நீளமான உறுப்பு.

வாழ் - (ஓர் இடத்தில்) வசித்தல்.

அளை - (விரல்களால் அங்குமிங்கும்) ஒதுக்குதல்.

அழை - (ஒருவரைப் பெயர் சொல்லி அல்லது பிற முறையில்) கூப்பிடுதல்.

அலை - காற்றின் இயக்கத்தால் (கடல், ஏரி போன்ற) நீர்ப்பரப்பிலிருந்து உயர்ந்தும்

சுருண்டும் தொடர்ந்து வரும் நீர்த் திரள்.

வழி - ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்காக இருக்கும்

அல்லது அமைக்கப்பட்டிருக்கும் சாலை.

வலி - (உடம்பில் அல்லது ஏதேனும் ஒரு உறுப்பில்) வேதனை தரும் உணர்வு

உண்டாதல்.

வளி - காற்று.

குலவி - நெருங்கி உறவாடுதல்; பிரியத்தோடு பழகுதல்.

குளவி - மெல்லிய இறக்கைகளைக் கொண்ட, கொட்டும் தன்மையுள்ள

ஓர் பூச்சி இனம்.

குழவி - குழந்தை

கிளி - பச்சை நிறத்தில் சிறகையும் வளைந்த, சிவப்பு நிற அலகையும் உடைய

பறவை இனத்தைப் பொதுவாகக் குறிக்கும் பெயர்.

கிழி - (துணி, தாள் போன்றவை) ஓர் இடத்தில் பிரிதல் அல்லது பிரிந்து


துண்டாதல்

கிலி - பயப்படுகிறபடி ஏதாவது நடந்துவிடுமோ என்ற மனக் கலக்கம்; பீதி

You might also like