You are on page 1of 10

ஆக, வரைப்படம் 1.

1 பணித்திறக் கற்றல் சமூகத்தின் வரையறை மற்றும் கூறுகளைத்


தெளிவாக விளக்குகின்றது. பணித்திறக் கற்றல் சமூகம் என்பது ஆசிரியர்களின் தரத்தை
மேம்படுத்தவும் கல்வி தரத்தை வளர்ச்சி அடைய செய்வதற்கு எடுக்கப்படும் ஒரு முயற்சியாகும்.
சமூக கற்றல் எனப்படுவது பள்ளிகளோடு வெளி சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து நடத்தும்
நடவடிக்கையைக் குறிப்பதாகும். அதாவது பள்ளி நிர்வாகம் மாணவர்களின் அடைவுநிலையை
மேம்படுத்தவும், கற்பித்தல் நடவடிக்கையை உயர்த்தவும் தலைச்சிறந்த நிபுனர்களை அழைத்துக்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கையைத் தயார் படுத்துதல். பணித்திறக்கற்றல் சமூகம் கூடிக்கற்றல்
கலாச்சாரம், மாணாக்கரின் அடைவுநிலையை உற்றுநோக்கம், கற்றல் கற்பித்தல் நடவடிக்கையினை
உறுதிபடுத்துதல் போன்ற கொள்கைகளைக் கொண்டது. இதன் முதன்மை இலக்கானது பள்ளி
நிர்வாகத்தினையும் ஆசிரியர்களின் தலமைத்துவத்தையும், கற்றல் கற்பித்தல் தரத்தினையும்
உயர்த்துவதோடு மாணவர்களின் அடைவுநிலையைஅயும் உயர்த்துவதே ஆகும். மேலும், அனைத்து
கற்றல் சமுகத்தினையும் ஒன்றிணைத்து மலேசியக் கல்வி மேம்பாட்டு திட்டத்தினை (PPPM 2013-
2025) வெற்றியடையச் செய்தல், சிந்தனை பகிர்வு, ஒத்துழைப்பு, நிபுணத்துவம் திறமைகளையும்
ஆசிரியர்களிடையே வளர்த்தல், கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை வலப்படுத்துதல், திறமையான
ஆசிரியர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே,
பணித்திறக்கற்றல் சமூகத்தின் நோக்கங்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டு 5 அணுகுமுறைகள்
கையாளாப்படுகின்றன. அவை சிந்தனைமீட்சி கலந்துரையாடல், தனியார்மைய நடைமுறை, மாணவர்
கற்றலில் ஒருமித்தகுவியம், கூட்டுச் செயல் மற்றும் இணைந்து பகிரும் வழக்கங்களும் பண்புகளும்.
தற்போதய நிலையில் அனைத்துப் பள்ளிகளிலும் இப்பணித்திறக் கற்றல் சமூகம்
மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

2
அவ்வகையில் நான் பள்ளிச்சார் நடவடிக்கையினை மேற்கொண்ட பள்ளியிலும் பணித்திறக்
கற்றல் சமூக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. நான் தேசிய வகை கம்போங் சிமி
தமிழ்ப்பள்ளியில் என் பள்ளிச்சார் நடவடிக்கையினை மேற்கொண்டேன். இப்பள்ளி தற்போது பேராக்
மாநில அரசாங்கத்தினால் மாற்றியமைப்படையும் பள்ளியாக (Sekolah Transformasi) மாற்றியமைக்கத்
தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆக, இப்பள்ளியில் பணித்திற கற்றல் சமூகம் முன்னரே
மேற்கொள்ளப்பட்டு வந்தது. பள்ளிச்சார் நடவடிக்கையின் போது நான் மேற்கொண்ட பணித்திறக்
கற்றல் சமூக கூறானது இணையர் வழிகாட்டி முறையாகும். இணையர் வழிகாட்டி முறை என்பது
சுயமாகவே சக ஆசிரியர்களுடன் கற்றல் கற்பித்தல் அனுபவங்களையும் அணுகுமுறைகளையும்
பகிர்தலாகும் (Shulman, 1991). மேலும், ஆசிரியர்கள் தங்களின் நிபுனத்துவங்கள், சிந்தனை மீட்சிகள்
போன்றவற்றைப் பகிர்ந்து கற்றல் கற்பித்தலின் தரத்தினை உயர்த்தவும், பிரச்சனைகளைக் களையும்
ஆதவும் உதவியும் செய்தலும் இவ்விணையர் வழிகாட்டி முறையில் அடங்கும் (Dalton & Moir, 1991).
ஆக, ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள், நடவடிக்கைகள் காணப்படும் குறை
நிறைகளை நன்முறையில் எடுத்துரைக்கும் வகையிலும் இம்முறையானது பயன்மிக்கதாக அமைய
வல்லது (Hasbrouck, 1997). இம்முறையானது மூன்று முதன்மை நோக்கங்களைக் கொண்டது. அவை
பின்வருமாறு :

ஆசிரியர்களிடையே
சிறந்த இணையர்
இணையர் வழிகாட்டியைப்
வழிகாட்டி தன்மைகளை
பணித்திறக் கற்றல் சமூகத்தில் அறிய
விளக்கமளித்தல்

முதன்மை கற்றல் கொள்கைகளை அறிய

(முன் கலந்துரையாடல், கண்காணிப்பு


மற்றும் பின் கலந்துரையாடல்)

வரைப்படம் 1.2 :

இணையர் வழிகாட்டி முறையின் முதன்மை நோக்கங்களைக் காட்டுகின்றது.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து நோக்கங்களும் இப்பள்ளியில் அடைந்துள்ளன என்று தான்


கூற வேண்டும். இங்குள்ள ஆசிரியர்களின் துணையுடன் நான் தமிழ்மொழிப் பாடத்திற்கான இணையர்
வழிகாட்டி முறையினை மேற்கொண்டேன். இணையர் வழிகாட்டி முறையில் மொத்தம் 3 மாதிரிகள்
(model) உள்ளன. அவை :

3
மாதிரி 3 :
மாதிரி கற்பித்தலை
மாதிரி 2 : ஆசிரியராக
மாதிரி கற்பித்தலை வழிநடத்தும்
ஆசிரியராக பயிற்சியாளர்
மாதிரி 1 : வழிநடத்தும்
இணையர் பயிற்சி பயிற்சியாளர்
செயல்முறை

வரைப்படம் 1.3: இணையர் வழிகாட்டியின் கீழுள்ள மாதிரிகள் மூன்றினைக்


காட்டுகின்றது.

4
நான் பள்ளிச்சார் பட்டறிவை மேற்கொள்ளும்போது, ஆசிரியர் திருமதி சுலேச்சனாவும்
நானும் இணைந்து இணையர் வழிகாட்டியில் உள்ள மாதிரி 1-இன் அடிப்படையில் பணித்திறக் கற்றல்
சமூகத்தினை மேற்கொண்டோம். இம்முறையில் ஆண்டு 3 தமிழ் ஆசிரியரான திருமதி சுலேச்சனா
அவர்கள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொள்ள வழிக்காட்டுனர்களாக அப்பள்ளியின்
தமிழ் மொழித்துறை தலைவரும் பிற தமிழ் ஆசிரியர்களும் அவர்களோடு சேர்ந்து நானும் அக்கற்றல்
கற்பித்தலினைக் கண்காணித்தனர். வகுப்பறை கற்றல் கற்பித்தலை கண்காணிக்கும் போது சிந்தனை
மீட்சி வழங்குதலும் உற்றுநோக்குதலும், கற்றல் கொள்கைகளை கற்பித்தல் மற்றும் கற்பித்தல்
திட்டமிடுதலும் இணை கற்பித்தலும் (co-teaching) போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டுமென்று
வழிகாட்டி ஆசிரியர் கூறினார். எந்தவொன்றைச் செய்தாலும் முன்னேற்பாடுகள் செய்தாலே, நாம்
செய்யும் செயலானது நோக்கத்தினை அடையும். ஆக, கற்றல் கற்பித்தல் நடவடிக்கையும் அவ்வாறே
என்றால் அது மிகையன்று. சுலேச்சனா ஆசிரியரும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையின்
மேற்கொள்ளும் முன், நடவடிக்கையின் போது, நடவடிக்கையின் பின் என்று பல
முன்னேற்பாடுகளைச் செய்தார். அவ்வகையில் இந்த இணையர் வழிகாட்டி முறையின் கீழ் அவர்
மேற்கொண்ட மூன்று செயல்முறைகள் பின்வருமாறு :

முன்
கலந்துரையாடல்
(Pra-konferens)

இணையர்
வழிகாட்டி
செயல்முறைகள்

பின்
கலந்துரையாடல் உற்றுநோக்கல்
(Pasca konferens) (Pemerhatian)

வரைப்படம் 1.4 :

இணையர் வழிகாட்டி முறையின் செயல்முறைகளைக் காட்டுகின்றது.

முன் கலந்துரையாடல்

5
இந்தப் படியில் கற்றல் கற்பித்தல் மேற்கொள்ளவிருக்கும் ஆசிரியர், வழிகாட்டி
ஆசிரியருடன் சில கருத்துகளைக் கலந்துரையாடினார். வழிகாட்டி ஆசிரியர், தலைப்பு, குறிக்கோள்,
பாட நோக்கம், தகவல் திரட்டுதல் மற்றும் சுருக்கம் போன்றவற்றை முடிவு செய்ய எம்மாதிரியன
கேள்விகளைக் கேட்க வேண்டுமென்று தெளிவு படுத்தினார். அதன் அடிப்படையில் ஆண்டு 3-
க்கான செய்யுளும் மொழியணியின் கீழ், உள்ளடக்கத்தரம் 4.10 உவமைத்தொடர்களின் பொருளை
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர் மற்றும் கற்றல்தரம் 4.10.1 மூன்றாம் ஆண்டுக்கான
உவமைத்தொடர்களின் பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர் என்றவற்றின் அடிப்படையில்
தலைப்பினை முடிவெடுத்தார். பின் பாட நோக்கத்தினை முடிவு செய்தார். மாணவர்கள்
உவமைத்தொடர்களின் பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர் என்று நாள் பாடத்திட்டத்தில்
குறிப்பிட்டார். இதன் மூலம் அத்தமிழ் ஆசிரியர் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையினை நன்முறையில்
முன்னேற்பாடு செய்தார். முறையான பாட நோக்கம், நாள் பாடத்திட்டம், கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகள், விரவி வரும் கூறுகள், மதிப்பீட்டுக் கருவி, பாடத்துணைப்பொருள் போன்றவற்றை
2 நாட்களுக்கு முன்னதாகவே முறையாகத் தயார் செய்தார்.

உற்றுநோக்கல்

தொடர்ந்து, உற்றுநோக்கல நடவடிக்கையினை தமிழ்த்துறை ஆசியரும் சில தமிழ் மொழி


ஆசியர்களோடு நானும் சேர்ந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கையின்போது மேற்கொண்டோம்.
இப்படியில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையினை ஆசிரியர் நிகழ்த்தும் போது நாங்கள் வகுப்பின்
பின் அமர்ந்து உற்றுநோக்குதல் செய்தோம். அவ்வகையில் கற்றல் கற்பித்திலின் தகவலைப் பெற
பல வழிகளில் ஆசிரியர்கள் திரட்டினர்.

படங்களும்

வரைப்படங்க காட்சி

பட்டியலிடுத அமைப்புகளும்
ளும்அட்டவ (gambar dan visual)
பதவு ல்
குறிப்பெடுத் ணைகளும்
செய்தல்
தல் (mencatat)

மேலே குறிப்பிட்ட
வரைப்படம் முறைகளின் மூலம்
1.5 உற்றுநோக்கலின் பிற ஆசிரியர்கள்
மூலம் தகவலைத் அன்றைய கற்றல்
திரட்டும் வழிமுறைகளைக் கற்பித்தல்
காட்டுகின்றது.
நடவடிக்கையினை ஒட்டிய பற்பல தகவல்களைச் சேகரித்தனர். ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல்
நடவடிக்கையினை மொத்தம் 15 கூறுகளின் அடிப்படையில் சிந்தனை மீட்சி செய்தனர். அவை
பின்வருமாறு :

6
நடவடிக்கை பாட வளர்ச்சி பாட முடிவு
நோக்கம் பீடிகை

குழு நடவடிக்கை நேர ஒதுக்கீடு மாணவர் மையம் தொழிற்நுட்ப பயன்பாடு

பண்புக்கூறு பயிற்றுத்துணைப்பொருள் மதிப்பீடு தன் முனைப்பு

ஈடுபாடு மாணவர் விரவிவரும் கூறுகள் சிந்தனை திறன்


& ஆசிரியர் /உயர்நிலை சிந்தனை

வரைப்படம் 1.6 கற்றல் கற்பித்தல் நடவடிக்கையினைச் சிந்தனை செய்யும் கூறுகளைக்


காட்டுகின்றது.

பின் கலந்துரையாடல்

7
இறுதி படிநிலையாக இணையர் முறையில் பின் கலந்துரையாடலாகும். இம்முறையில்
உற்றுநோக்கலில் சக ஆசிரியர்கள் பாடத்தினைப் பற்றி செய்த சிந்தனை மீட்சியினை இங்குக்
கலந்துரையாடுவர். முதலில் வழிகாட்டி ஆசிரியர் வகுப்பறையில் நடந்தேறிய கற்றல்
கற்பித்தலினைப் பற்றியச் சிந்த்னை மீட்சியினைப் பற்றிக் கூற மற்ற ஆசிரியர்களைப் பணித்தார்.
இம்முறையில் முன் கலந்துரையாடலின் போது கலந்துரையாடிய அனைத்து கூறுகளும் இறிதியில்
ஒரு முறை நடந்தேறியக் கற்றல் கற்பித்தலில் இருந்தனவா அல்லது இல்லையா என்று
கலந்துரையாடுவர். அவ்வகையில், அப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட பின் கலந்துரையாடலில் சக
ஆசிரியர்கள் கற்பித்த ஆசிரியரின் தொழிற்நுட்ப பயன்பாடு, கேள்வி கேட்கும் அணுகுமுறைகள்,
மாணவர்களின் பங்களிப்பு மற்றும் பாட இறுதியில் மாணவரின் சிந்தனை மீட்சி மற்றும் அவர்கள்
கூறியக் கருத்துகளைப் பற்றிப் கலந்துரையாடினர். ஆக, கற்றல் கற்பித்தலின் போது ஆசிரியர்கள்
கேட்டவற்றையும் பார்த்தவற்றையும் பற்றி பல கருத்துப் பரிமாற்றங்கள், பரிந்துரைகள்,
ஆலேசனைகள் போன்றவற்றை வழங்கினர். சுலேச்சனா ஆசிரியரின் கற்றல் கற்பித்தலில் 21-ஆம்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை மற்றும் தொழிற்நுட்ப பயன்பாடு இருந்தால் இன்னும் சிறப்பாக
இருக்கும் என்று பல ஆசிரியர்கள் கூறியிருந்தனர். மேலும், தமிழ் மொழி தமிழ் மொழி பாடத்தைப்
பொருத்தமட்டில் மாணவர்களின் கவனம் குறைவே ஆசிரியர்களுக்கு முதன்மை பிரச்சனையாக்க்
கலந்துரையாடினர். ஆக, மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கற்றக் கற்பித்தல்
அவசியம் என்பதையும் அதற்காகவே இம்மாதிரியான தொழிற்நுட்பத்தினை நடவடிக்கையில் புகுத்த
வேண்டும் என்று கூறினர். மேலும், பீடிகையின் போது அன்றையப் பாடத்தலைப்பினை மாணவர்கள்
யூகிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதையும் இங்கு எடுத்துரைத்தனர். ஆக, ஆசிரியர்

சரியான கேள்விகளின் மூலம் மாணவர்களைத் தூண்டவில்லை என்று குறுப்பிட்டனர். கற்றல்

கற்பித்தல் நடவடிக்கையின் தொடக்க நிலையாகும். மாணவர்களின்

துலங்குதலுக்கும் ஆர்வத்தினைத் தூண்டுதலுக்கும் பாட்த்தோடு ஒன்றிணைந்து

கற்கவும் வழிவகுப்பது பீடிகையாகும் Mok Song Sang (2001). மேலும், ஆசிரியரின் கேள்வி

கேட்கும் திறனானது மேலும் வழுவடைய வேண்டுமென்றும் குறிப்பிட்டனர். பின், அனைத்துத்


தகவல்களையும் ஒன்றிணைத்து அன்றையப் பாடத்தினைப் பற்றிய முடிவிற்கும் வந்தனர். சுலேச்சனா
ஆசிரியைத் தன் குறைகளைத் திறந்த மனதுடன் ஏற்று கொண்டு பின், அவ்வாசிரியரை தான்
அடுத்தப் பாடத்தில் பயன்படுத்தும் பாடத்துணைப்பொருள்களை மாணவர்களின் ஆர்வத்தினைத்
தூண்டும் வகையிலும் தொழிற்நுட்பத்தினைப் பயன்படுத்தியும் செய்ய முயற்சிப்பதாகக் கூறினார்.

இவ்வாறே தமிழ்மொழிக்கான பணித்திற கற்றல் சமூக நடவடிகைகளுள் ஒன்றான


இணைவர் வழிகாட்டி முறை அப்பள்ளியில் நடந்தேறியது. இந்நடவடிக்கையின் போது
ஒரு சிறந்த பயிற்சியாளார் எம்மாதிரியான தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும்
என்பதைச் சற்று தெளிவு பெற்றேன் என்று தான் கூற வேண்டும். அவ்வகையில் ஒரு
சிறந்த பயிற்சியாளர் கொண்டிருக்க வேண்டியத் தன்மைகளானது பின்வருமாறு :

8
தன்முனைப்பு விளைபயன்மிக்க தெளிவாகச் சிந்தித்து
உடையவராக தொடர்பாடல் முடிவெடுக்கக்
இருத்தல் கூடியவராக இருத்தல்

தன் கடமையைச் அறிவுப்பூர்வமாகவும்


சரியாகப் புரிந்து சிறந்த நிர்வாகத்திறன்
சிறந்த ஆற்றலுடனும் உடையவராக இருத்தல்
கொண்டு செய்பவராக காரியத்தில்
இருத்தல் செயல்படுதல்

வரைப்படம் 1.7 ஒரு சிறந்த பயிற்சியாளர் கொண்டிருக்க வேண்டியத்

தன்மைகளைக் குறிக்கின்றது.

அதுமட்டுமல்லாது பயிற்சி பெறுநர் பயிற்ச்சியாளரிடம்

எம்மாதிரியான குணங்களை விரும்புகின்றார்கள் என்றும்

எதிர்ப்பார்க்கின்றார்கள் என்றும் கற்றுக் கொண்டேன். அக்குணங்கள்

பின்வருமாறு :

நல்ல தொடர்பாடல்
பொறுப்புடைமை
உடையவர் நேர்மையானவர்
உள்ளவர்

சுறுசுறுப்பு உள்ளவர் பரிவு செலுத்துபவர் அறிவுள்ளவர்

உதவும் மனப்பான்மை மரியாதையுடனும்


நல்ல நட்பு கொள்பவராக
உடையவர் பணிவன்புடனும்
இருத்தல்
பழகுபவர்
வரைப்படம் 1.8 பயிற்சி பெறுநருக்குப் பிடித்த குணங்கள்

முடிவுரை

சுருங்கக்கூறின், பணித்திறக் கற்றல் சமூகத்தில் ஒன்றான இணையர்


வழிகாட்டி முறையினால் உலகளாவிய நிலையில் பல மாற்றங்கள் நடந்துள்ளனர்.
சிகாகோ, போஸ்தோன் மர்றும் சக்ராமென்தோ பொது பள்ளிக்கூடங்களில்

9
மாணவகளின் திறன்களின் அடிப்படைத்திறன்கள், தெற்கு கலோரினா
பள்ளிகளில்கணிதம் மற்றும் அறிவியல் இணையர் வழிகாட்டி மூலம்
கற்பிக்கப்படுவதால் மாணவர்களின் அடைவுநிலை மேம்பாடு அடைந்துள்ளதாக
ஆய்வுகள் கூறுகின்றன (Neufeld& Roper, 2003). நிபுனத்துவம் வாய்ந்த வெளி நபர்
அல்லது உள் நபர்களின் தொடர்ச்சியான வழிகாட்டகள், வகுப்பறையினை சிறந்த
முறையில் மேம்படுத்தும் (Joyce & Showers,1982, 2002). பழைய கற்றல் கற்பித்தல்
அணுகுமுறைகளின் 10% கற்றல் விளைப்பயனையும், இணையர் வழிகாட்டலும்
நடத்தப்படும் கற்றல் கற்பித்தல் 85% விளைப்பயனையும் அளிக்கின்றது
(Knight,2004). இச்சான்றுகள் யாவும் இணையர் வழிகாட்டி முறையின்
பயன்பாட்டினால் மாணவர்களின் அடைவு நிலையில் ஏற்பட்ட
மேம்பாட்டினையும் மாற்றத்தைனையும் உள்ளங்கை நெல்லிக்கனியாக்கின்றன.
ஆக, பணித்திறக் கற்றல் சமூகம் என்பதில் தனியார்மையநடைமுறையில் கற்றல்
நடை, இணையர் வழிகாட்டி, நாள் பாட ஆய்வு மற்றும் ஆசிரியர் பகிர்தல் அமர்வு
ஆகியவை அடங்கும். இந்நான்கு முறையினையும் ஒவ்வொரு பள்ளியிலும்
அமல்படுத்தினால் கற்றல் சமூதாயத்தினை உருவாக்குவதில் ஆசிரியர்கள்,
மாணவர்களோடு சேர்த்து நம் சமூதாயமும் ஒன்றிணைந்து செயல்பட முடியும்
என்பது திண்ணம்.

மேற்கோள்

Dalton, S. and Moir, E. (1991). "Evaluating LEP teacher training and n-service programs."
Paper presented at the Second National Research Symposium on Limited English
Proficient Student Issues. Washington. DC.

Hasbrouck, J. E. (1997). The effects of peer coaching by preservice special educators


using The Scale for Coaching Instructional Effectiveness (SCIE). Unpublished
doctoral dissertation, Texas A&M University, College Station. Google Scholar.

Joyce, B., & Showers, B. (2002). Student achievement through staff development. White
Plains. Longman: New York.

10
Knight, J. (2003). Updated internationalization definition. International Higher Education,
33, 2-3. Google Scholar.

Mok Soon Sang. (2001). Psikologi pendidikan. Subang Jaya: Kumpulan Budiman.

Neufeld & Roper. (2003). Coaching: A Strategy for Developing Instructional Capacity:
Promises and Practicalities. Google Scholar.

Shulman, L. S. (1991). Teaching excellence in the university. Stanford University


Academic Council. Stanford: California.

11

You might also like