You are on page 1of 2

தீபாவளி தீபாவளி x2

தீபங்கள் ஒளிரும் தீபாவளி

இன்பங்கள் பொங்கும் தீபாவளி

இருளை போக்கி ஒளியூட்டி

நன்மைகள் நிறைக்கும் தீபாவளி

தீபாவளி

வண்ண வண்ண வண்ண விளக்குகளாய்

வதி
ீ எங்கும் அலங்காரமாய்

எங்கும் மகிழ்ச்சி பொங்கி வரும்

அழகு பண்டிகையாம் தீபாவளி

தந்தை புத்தாடை வாங்கி வர

அம்மா இனிப்புகள் செய்து தர

தாத்தா பாட்டி வாழ்த்துகளோடு

நிறைவாய் கொண்டாடும் தீபாவளி

சிறுவர்கள் கைகளில் மத்தாப்பு

மலர்ந்த முகங்களில் பூஞ்சிரிப்பு

இல்லங்கள் தோறும் கலகலப்பு

இது தீபாவளியின் தனிசிறப்பு

வண்ண வண்ண ஒளிமயமாய்

பொழியும் அழகு பூவானம்

பூத்துக்குலுங்கி பூ மழையாய்

பொங்கி சிதறும் புஸ்வானம்

தரையில் அழகாய் சுத்துமே


பல பல வண்ணங்கள் காட்டுமே

சுழலும் அழகு தரைசக்கரமிதை காண காண அற்புதம்

உறவுகள் அன்பு வாழ்த்தினிலே

நல்ல நட்பின் உறவு நெருக்கத்திலே

ஆனந்தமாய் கொண்டாடுவோம்

நம் பண்பாட்டுப் பண்டிகையாம் தீபாவளி

தீபாவளி தீபாவளி x4

You might also like