You are on page 1of 7

இயற்பியல்

1. அலை எண்ணின் பரிமாணம்


A. நீளம் B. நீளம்-1
C. ஒரு பரிமாணமற்ற அளவு D. மேற்கண்ட எதுவுமில்லை
D.
2. துகளின் இயக்கத்திற்கான சமன்பாடு S=(3t³+7t²+14t+8m), t=1 வினாடி எனும் போது துகளின் முடுக்கம்
A. 10 m/s² B. 32 m/s²
C. 23 m/s² D.16 m/s²

3. ஒரு கிரிக்கெட் வீரர் 150 g நிறையுள்ள பந்தை 0.1 நொடியில் 20 m/s திசைவேகத்தில் பிடிக்கிறார் எனில், அவர் நுகரும்
விசை
A. 300 N B.30 N
B. 3 N D. 0.3 N

4. மிதிவண்டி ஓட்டி 10 m நழுவி நிற்கிறார். அச்சமயத்தில், மிதிவண்டி ஓட்டியின் மீது சாலையினால் அளிக்கப்படம் விசை
200N மேலும் அது இயக்கத்திற்கு எதிர்திசையில் செயல்படுகிறது. சைக்கிளால் தரையின் மீது செய்யப்படும் வேலை
A. +200 B. -200 J
C. சுழி D.-20,000 J

5. ஒர் உள்ளீடற்ற உருளையும், திண்ம உருளையும் ஒரு சாய்தளத்தின் வழியே நழுவாமல் உருளச் செய்யப்படும்போது,
முதலில் அடிப்பகுதியை அடைவது
A. திண்ம உருளை B. உள்ளீடற்ற உருளை
C. இரண்டும் ஒரேநேரத்தில் D. உறுதியாக கூற இயலாது

6. பூமியை சுற்றும் ஒரு துணை கோளின் எடையின்மை எதை கணக்கில் கொள்கிறது.


A. திசைவேகம் B. உந்தம்
C. கோணஉந்தம் D. முடுக்கம்

7. வயதான காலத்தில், மனித உடலில் இரத்தத்தை எடுத்து செல்லும் தமனி குறுகலடைவதால் இரத்தஅழுத்தம் ஏற்படுகின்றது.
இதை விளக்குவது
A. பாஸ்கல் விதி B.ஸ்டோக்ஸ் விதி
C. பெர்னௌலி தத்துவம் D.ஆர்க்கிமிடிஸ் தத்துவம்

8. முடுக்குவிக்கப்பட்ட மின்னூட்டம் இயக்கத்தில் உள்ள போது இதை உருவாக்குகிறது.


A. மின்புலம் மட்டும் B. காந்த புலம் மட்டும்
C. மின்மற்றும் காந்த கதிர் மட்டும் D.மேற்கண்ட அனைத்தும்

9. n மின்தடைகள் r ῼ எண்ணிக்கையில் பக்கஇணைப்பில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடை R ஓம். இதே


மின்தடைகள் தொடரிணைப்பில் உள்ள போது தொகுபயன் மின்தடை ஓமில்
A. n²R B. R/n²
C. R/n D. nR

10. காந்த புலத்தில் செல்லும் மின்னூட்டத்துகள் உணரும் நிகரவிசை


A. புலத்தின் திசையில்
B. புலத்திற்கு எதிர்திசையில்
C. புலத்தின் திசைக்குச் செங்குத்தாக உள்ள எந்த திசையிலும்
D. புலத்தின் திசைக்குச் செங்குத்தாகவும் மேலும் இயக்கத் திசைக்குக் செங்குத்தாகவும் உள்ள திசையில்
E.

11. ஓரே திசையில் மின்னோட்டம் பாயும் இரண்டு வட்டவடிவ, ஒத்த ஒரே அச்சில் அமைந்த வளையங்கள் அருகே வரும்
போது என்ன ஏற்படும்
A.ஒவ்வொரு வளையத்தில் பாயும் மின்னோட்டமும் உயரும்
B.ஒவ்வொரு வளையத்தில் பாயும் மின்னோட்டமு ம்குறையும்
C.மின்னோட்டம் மாறாது
D.ஒரு வளையத்தில் மின்னோட்டம் உயரும் மற்றொன்றில் மின்னோட்டம் குறையும்

12. ஒளியின் தளவிளைவின் போது மாறாதது


A. செறிவு B. கட்டம்
C. அதிர்வெண் D. அலைநீளம்
13. 30 cm குவியத்தொலைவு கொண்ட சமபக்க குவிலென்சை கிடைத்தளத்தில் இருசமபாகங்களாக பிரித்தால்.
A. ஊடுறுவும் ஒளி ஒவ்வொரு துண்டிலும் பாதியாகிறது
B. ஒளிச்செறிவு பாதியாகிறது
1
C. குறுக்கு விட்டம், தொடக் கமதிப்பில் மடங்காகும்
√2
D. மேற்காணும் அனைத்தும்

14. எல்லாத் தொலைவுகளிலும் பொருளைத் தெளிவாய்க் காணும் கண் பார்வையை இவ்வாறு அழைக்கலாம்
A. பைனாகுலர் பார்வை B. மயோபியா
C. ஹைபர்மெட்ரோபியா D.பார்க்குந்திறன்

15. ஒரு கதிரியக்கத் தனிமமானது, வெளியிடும் α துகள்களைப் போன்று இருமடங்கு ß துகள்களை வெளியிடுகிறது.
சேயணுவானது
A. தாயணுவின் ஐசோமெர் B. தாயணுவின் ஐசோடோன்
C. தாயணுவின் ஐசோடோப்பு D. தாயணுவின் ஐசோபார்

வேதியியல்
16. குரோமியம் பின்வருவனவற்றுள் எந்த எலக்ட்ரான் அமைப்பின் மூலம் குறிக்கப்படுகிறது
A. [Ne]3s23p63d14s2B B. [Ne]3s23p63d24s1
C. [Ne]3s 3p 3d 4s
2 6 5 1
D.[Ne]3s23p63s24d4

17. முதல் அயனியாக்கும் ஆற்றலின் மதிப்பு குறைதலின் வரிசை


A. Ca> K >Rb> Cs B. Cs >Rb> K >Ca
C. Ca> Cs >Rb> K D.K >Rb> Cs >Ca

18. ஆல்கஹாலின் கொதிநிலை அதிகமாக இருப்பதற்கு காரணம்


A. ஹைட்ரஜன் பிணைப்பு
B. ஆல்கஹாலின் பெரிய உருவளவு
C. –OH தொகுதி உள்ளதால்
D. அதிக மூலக்கூறு எடை

19. பின்வருபவைகளின் சரியான அமிலத்தன்மையின் வரிசை


A. HCIO4 < HCIO2 < HCIO< HCIO3
B. HCIO< HCIO2 < HCIO3 < HCIO4
C. HCIO3 < HCIO4 < HCIO2 < HCIO
D. HCIO2 < HCIO< HCIO3 < HCIO4

20. டைபோரேனில்
A. 2 இடைப்பட்ட ஹைட்ரஜன் மற்றும் 4 முனையில் உள்ள ஹைட்ரஜன் உள்ளன
B. 3 இடைப்பட்ட ஹைட்ரஜன் மற்றும் 3 முனையில் உள்ள ஹைட்ரஜன் உள்ளன
C. 4 இடைப்பட்ட ஹைட்ரஜன் மற்றும் 2 முனையில் உள்ள ஹைட்ரஜன் உள்ளன
D. இவை ஏதுவுமில்லை

21. CH3-C(CH3)2-CH=C(CH3)2 ன் IUPAC பெயர்


A. 1,1,3,3 டெட்ரா மீத்தைல் பியூட் 1 யீன்
B. 1,3,3 டிரை மீத்தைல் பெண்ட் 2 யீன்
C. 2,2,4 டிரை மீத்தைல் பியூட் 4 யீன்
D. 2,4,4 டிரை மீத்தைல் பெண்ட் 2 யீன்

22. டொலுவினை குரோமைல் குளோரைடுடன் ஆக்சிஜனேற்றம் செய்யும்போது கிடைப்பது.


A. பென்சால்டிஹைடு B.பென்சோயிக்அமிலம்
C. அசிட்டோபீனோன் D.பென்சைல்ஆல்கஹால்

23. AB வகை திடபொருள் NaCI அமைப்பை கொண்டுள்ளது A அணுவானது கனசதுர அலகுக்கூட்டில் மூலைகளில்
நிரப்பப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு அச்சில் உள்ளமுகப்புமைய அணுக்கள் அனைத்தையும் நீக்கினால் உருவாகின்ற
திடப்பொருளின் சமன்செய்யப்பட்ட சமன்பாடானது
A. AB B.A2B2
C A2B3 D.A3B4

24. காயங்களிலிருந்து இரத்தம் வழிதலை தடுக்க பெரிக்குளோரைடு பயன் படுத்தபடுவது எவ்வாறு எனில்
A. இரத்தம் ஓட்டம் எதிர்திசையில் நிகழ்கிறது
B. பெரிக்குளோரைடு இரத்த குழல்களை மூடுகிறது
C. இரத்தம் வினை புரிந்து திண்மத்தை உண்டாக்குகிறது அது இரத்தக்குழல்களை மூடுகிறது
D. இரத்தம் உறைந்து இரத்தக்குழாய்களை மூடுகிறது

25. கீழ்க்கண்டவற்றில் எந்த உலோகம் அதன் தாதுவுடன் சரியாக பொருந்துகிறது


உலோகம் தாது
A. Zn காலமைன்
B. Sn அசுரைட்
C. Mg காபிட்டிரைட்
D. Ag இலுமனைட்

26. கீழ்க்கண்ட எந்த கூற்று லாந்தனைடு குறுக்கத்தால் நிகழ்கிறது


A. Zr மற்றும் Y ஒரே மாதிரியான ஆரத்தை பெற்றுள்ளது
B. Zr மற்றும் Zn ஒரே மாதிரியான ஆக்சிஜனேற்ற நிலைகளை பெற்றிருப்பது
C. Zr மற்றும் Hf ஒரே மாதிரியான அணு ஆரம் பெற்றிருப்பது
D. Zr மற்றும் Nb ஒரே மாதிரியான ஆக்சிஜனேற்ற நிலைகளை பெற்றிருப்பது
27. SN1 வினையை நோக்க அதிகளவு வினைபுரியும் ஹாலைடு எது?
A. ஈரிணைய- ப்யூட்டைல் குளோரைடு
B. மூவிணையப்யூட்டைல் குளோரைடு
C. n-ப்யூட்டைல் குளோரைடு
D. அல்லைல் குளோரைடு
28. Pd மற்றும் BaSO4 முன்னிலையில் பென்சாயில் குளோரைடை ஹைட்ரஜன் ஏற்றம் உருவாவது
A. பென்சைல் ஆல்கஹால் B.பென்சால்டிஹைடு
C. பென்சாயிக் அமிலம் D. பினால்

29. பின்வருவனவற்றை பொருத்துக


வரிசை 1 வரிசை 2
1. அயோடோபார்ம் 1. மயக்கமருந்து
2. மெத்தில் சாலிசிலேட் 2. புரை நிவாரணி
3. டை எத்தில் ஈதர் 3. பூச்சி மருந்து
4. ஹெக்ஸா குளோரோ பென்சீன் 4. சோப்புகள்
5. வளைய ஹெக்சேன் 5. வலி நிவாரணி
A. 1 4 2 5
B. 3 4 1 3
C. 2 5 1 3
D. 5 4 1 3
30. 0.01M யூரியா, சோடியம் குளோரைடு மற்றும் சோடியம் சல்பேட் நீர் கரைசல்களின் உறை நிலைத் தாழ்வுகளின் விகிதம்.
A. 1 : 1 : 1 B. 1 : 2 : 3
C. 1 : 2 : 4 D. 2 : 2 : 3

தாவரவியல்
31. ஸ்போரோ போலனின் என்பது
A. பெரும்பாலான அங்கக பொருட்களை தாக்குப் பிடிக்கும்
B. மகரந்தத் துகளின் எக்சைனில் (வெளியுறை) காணப்படும்
C. மகரந்தத் துகளின் முனை துருவத்தில் காணப்படுவதில்லை
D. எதுவுமில்லை

32. மலட்டுத் தன்மையை எதிர் கொள்ள________ போன்ற சிறப்பு உத்திகையாளப்படுகிறது.


A. தூண்டப்பட்ட இனப்பெருக்க நுட்ப முறை
B. உதவியுடன் கூடிய இனப்பெருக்க நுட்ப முறை
C. இனப்பெருக்க வளத்தன்மை நுட்ப முறை
D. ஆய்வுக்கூட கருவுறுதல் முறை

33. பேறு காலத்தை மருத்துவ உதவியுடன் இடையில் முடித்துக்கொள்வதில் பேறுகாலத்தின் __________ காலம் தாய் மற்றும்
சேய்க்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.
A. முதல் மூன்று மாதங்கள் B. இரண்டாவது மூன்று மாதங்கள்
C . மூன்றாவது மூன்று மாதங்கள் D. எதுவுமில்லை

34. கீழ்கண்ட அட்டவணைகள் A மற்றும் B முறையே ஜீனையும், குரோமேசோமையும் குறிக்கிறது?

A B
I. ஜோடியாக காணப்படும் I. ஜோடியாக காணப்படும்
II. கேமீட் உருவாக்கத்தின் போது, ஒரு இணையில் II. கேமீட் உருவாக்கத்தின்போது, ஒரு இணையில்
இருந்து ஒன்றே ஒன்று மட்டும் பிரிந்து, கேமீட்டுக்குள் இருந்து ஒன்றே ஒன்று மட்டும் பிரிந்து,
செல்கிறது கேமீட்டுக்குள் செல்கிறது
III. தனித்த ஜோடிகள், ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து III. ஒரு ஜோடியிலிருந்து ஜோடி தனித்து ஒதுங்கும்
ஒதுங்கும்

A A: ஜீன் B: ஜீன்
A. A: குரோமோசோம் B: குரோமோசோம்
B. A: ஜீன் B: குரோமோசோம்
C. A: குரோமோசோம் B: ஜீன்

35. மனிதரில் காணப்படும் மரபு வழி பண்புகளை ஆராய உதவும் முறை


A. DNA பரிசோதனை B. கட்டுப்படுத்தப்பட்ட கலப்பு
C. சந்ததி வழித்தொடர் ஆய்வு D. மேற்கண்ட அனைத்தும்
36. கீழ்க்கண்ட எல்லா பண்புகளும் டவுன் குறைப்பாட்டுக்கு உரியதாகும். ஒன்றைத் தவிர
A. பிறவி இருதய குறைபாடு B. அகன்ற தட்டையான முகம்
C. சிறிய மற்றும் சுருக்கம் கொண்ட நாக்கு D.விரல் நுனியில் அதிக சுழல்கள்
37. சிக்குன்குனியா நோய் பரப்பி,
A. பூஞ்சை ஸ்போர்கள் B. வீட்டு ஈக்கள்
C கொசு D.ஊர்வன
38. ‘இனம்‘ என்ற வார்த்தை குறிப்பது.
A. தோற்ற மாக்கம் மற்றும் பொதுவான தோற்றம், பண்புகள், அளவு மற்றும் வடிவமைப்புப் போன்ற பலபண்புகளில்,
ஒத்துள்ள விலங்குகளின் ஒரு குழுமம் ஆகும்.
B. ஒன்றையொன்று சார்ந்துள்ள விலங்குகளின் ஒரு குழுமம் ஆகும்.
C. ஒரே வாழிடத்தில் வாழுகின்ற விலங்குகளின் ஒரு குழுமம் ஆகும்.
D. ஒன்றுக்கொன்று தங்களுக்கிடையே இனப்பெருக்கம் செய்துகொள்ள முடியாத விலங்குகளின் ஒரு குழுமம் ஆகும்.
39. _______________ என்பது வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தும், தனித்து வாழும் பாக்டீரியா
ஆகும்.
A. அசோபேக்டீரியம் B. அசிட்டோபாக்டீரியம்
C. அசோட்டோபாக்டர் D,அசாபாக்டீரியம்

40. ஜீன் நகல் பெருக்கத்திற்கு பிளாஸ்மிட்கள் பொருத்தமான கடத்தி. ஏனென்றால்.


A. இவைகள் சிறிய வட்டவடிவ DNA, ஓம்புயிர் ஜீனோமுடன் ஒருங்கிணைந்து செயல்படும் தன்மை உடையது.
B. இவைகள் இரட்டிப்பாவதற்கான தோற்றதளம் காணப்படுகிறது.
C. இவைகள் யூகேரியோட்டுகள் மற்றும் புரோகேரியோட்டுகளுக்கு இடையே மாறி மாறி காண்பது
D. இவைகள் பெரும்பாலும் உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறன் கொண்ட ஜீன்கள் கானப்படுகிறது.
41. புற்றுநோய் பொதுவாக, முடுக்கிவிடப்பட்ட அல்லது மாற்றப்பட்ட ________ லிருந்து ________ மற்றும் தடை செய்யப்பட்ட
_______ ல் உண்டாகின்றது.
A. ஆன்கோஜீன், கட்டிகளை ஒடுக்கும் ஜீன், புரோட்டோ ஆன்கோஜீன்
B. கட்டிகளை ஒடுக்கும் ஜீன், ஆன்கோஜீன், புரோட்டோ ஆன்கோஜீன்
C. புரோட்டோ ஆன்கோஜீன், ஆன்கோஜீன், கட்டிகளை ஒடுக்கும் ஜீன்
D. ஆன்கோஜீன், புரோட்டோ ஆன்கோஜீன், கட்டிகளை ஒடுக்கும் ஜீன்
42. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு
A. உணவூட்டமட்டம் என்பது செயல்நிலையைக் குறிக்கிறது, சிற்றினத்தை குறிப்பது அல்ல.
B. ஒரே சூழலில் ஒரே நேரத்தில் ஒரு சிற்றினம் ஒன்றிக்கும் மேற்பட்ட உணவூட்ட மட்டத்தில் காணப்படுவதில்லை.
C. பெரும்பான்மையான சூழ்நிலை மண்டலத்தில் உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை உயிரித்திரள் தாவர
உண்ணிகளைவிட குறைந்தே காணப்படும்.
D. ஆற்றில் பிரமிடு ஒருபோதும் மேல் நோக்கி காணப்படுவதில்லை.

43. மனிதன் தோன்றுவதற்கு முந்தைய காலத்தைவிட, தற்போதுள்ள இனங்கள் மறைதலின் வேகம், எத்தனை மடங்கு அதிகம்?
A. 10 முதல் 50 B.100 முதல் 1000
C. 1000 முதல் 10,000 D.10,000 முதல் 1,00,000

44. நிலக்கீலுடன் பாலிக்கலவை சேர்த்து போடப்படும் சாலைகள் கீழ்கண்ட பண்புகளில் எந்த ஒரு பண்பைத் தவிர அனைத்து
பண்புகளைப் பெற்றுள்ளது?
A. அதிக அளவு நீரைத் தக்கவைத்துக் கொள்ளாது.
B. சாலையின் ஆயுட்காலம் 3 மடங்கு அதிகமாகிறது.
C. கோடையில் குறைந்த உருகு திறன் கொண்டது.
D. சாலைபோடும் செலவை அதிகரிக்கிறது.
45. UV-B கதிர்வீச்சு உண்டாக்குவது
A. DNA வை சேதப்படுத்துகிறது. B. தோல்வயதாதல் (Ageing of skin)
C தோல் புற்றுநோய் D. இவை அனைத்தும்

விலங்கியல்
46. கையேடுகளில் _________ பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன.
A. ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள விலங்குகளின் வாழிடம் மற்றும் பரவல்.
B. ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள தாவரங்களின் வாழிடம் மற்றும் பரவல்.
C. ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள சிற்றினங்களின் பெயர்களை இனங் கண்டறிதல்
D. ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள பயனுள்ள விலங்குகளின் வாழிடம் மற்றும் பரவல்.

47. கீழ்க்கண்ட பண்புகள் எவ்வகுப்பைச் சார்ந்தது?


I. மைசீலியம் குறுக்கு சுவர் மற்றும் கிளைகளை பெற்றது
II. சில பூஞ்சைகள் மட்குண்ணி அல்லது ஒட்டுண்ணியாக உள்ளது.
III. கொனிடியா மூலம் மட்டும் இனப்பெருக்கம் செய்யும்.
A. ஆஸ்கோமை சீட்டுகள்
B. டியூட்டரோமை சீட்டுக்கள்
C. பெசிடியோமை சீட்டுகள்
D. பைகோமை சீட்டுகள்
48. பின்வருவனவற்றுள் பிரையோ ஃபைட்டுகளின் பண்புகளை மையப்படுத்தி வரும் வாக்கியங்களில் தவறானது எது?
A. தாவர உடலம் தாலஸ் போன்றது, ஆல்காக்களை விட மிகவும் வேறுபட்டது மற்றும் ரைசாய்டுகளின் உதவியுடன்
தளப் பொருளில் ஒட்டிக் கொள்ளக்கூடியது.
B. ஆந்த்ரோவோசாய்டுகள் கருவுறுதலுக்காகநீரில் வெளியிடப்படுகின்றன.
C. சைகோட் உருவான உடனேயே, மையோசிஸ் செல் பகுப்பு அதில் நடைபெறுகிறது.
D. இவற்றில் இலை, தண்டு மற்றும் வேர் போன்றஅமைப்புகள் உள்ளன.
49. ஜிம்னோஸ் பெர்ம்களில்
A. மகரந்தத்தூள்கள், கருப்பையின் உள்ளே முளைக்கின்றது.
B. மைக்ரோஸ் போரகங்களில், மகரந்தத் தூள்களின் வளர்ச்சி நடைபெறுகின்றது.
C. மெகாஸ் போராக இலைகைளை உள்ளடக்கிய கூம்புகள் ஆண் கூம்புகள் அல்லது ஆண்ஸ்டொரைபைலஸ்கள்எ
னப்படும்.
D. இவை அனைத்தும் சரியானவை
50. பொருந்தாதவற்றை தேர்ந்தெடு:
A. லோகஸ்டா - லோகஸ்ட்
B. குக்குமேரியா - கடல் வெள்ளரி
C. மீயான்டிரைனா - கடல் அனிமோன்
D. எக்கினல் - கடல் அர்ச்சின்
51. A. உள்ளுறுப்பு திமில் மீது ____ (i) _____ ஆனது மென்மையான மற்றும் பஞ்சு போன்ற தோல் அடுக்கு காணப்படுகிறது.
B. ______(ii)______குழியில் செவுள்கள் போன்ற______(iii)______அமைப்புக் காணபடுகிறது C. தலையின்
முன்முனையில் காணப்படும் உணர் உறுப்பு ______(iv)______ மெல்லுடலிகளுக்கு உரிய விடைகளை கோடிட்ட இடங்களை
நிரப்புக
A. மேன்டில், மேன்டில், சீப்பு, பாப்பில்லா
B. மேன்டில், மீசோகிளியா, இறகு, பாப்பில்லா
C. மேன்டில், மேன்டில், இறகு, உணர் நீட்சிகள்
D. மேன்டில், மேன்டில், சீப்பு, உணர் நீட்சிகள்
52. கீழ்வருவனவற்றுள் சைக்லோஸ் டோம்களைப் பற்றிய சரியான கூற்று எது?
A. முதிர்ந்த நிலையில் மீன்களின் மீது புற ஓட்டுண்ணியாக காணப்படுதல்.
B. தோலில் செதில்கள் மற்றும் ஒற்றைச் செல் அமைப்பு கொண்ட கோழைச் சுரப்பி காணப்படுதல்.
C. கழிவு நீக்கத்திற்கென ஒரு சிறுநீரகம்.
D. இரண்டு அறைகள் கொண்ட இதயம் மற்றும் சுவாசத்திற்கென நான்கு இணை செவுள் பிளவுகள்.
53. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.
a) ஒரு வித்திலையின், இலையடிப் பகுதியானது நீண்டு இலையடி உறையாக, தண்டை ஒரளவுக்கோ அல்லது
முழுமையாகவே மூடிகாணப்படும்.
b) அனைத்து லெகூம் தாவரங்களிலும், இலையடி பகுதியானது உருண்டையாக இருக்கும், இது பல்வைனஸ்
எனப்படும்.
c) இலைப்பரப்பு அல்லது இலைத்தாள் என்பது நரம்புகள் மற்றும் சிறிய நரம்புகள் கொண்ட இலையின் பசுமையான
அகன்ற பகுதி ஆகும்.
d) இலையில் உள்ள நரம்புகள் இலைப்பரப்புக்கு விறைப்பை கொடுக்கின்றன.
A. A மற்றும் B மட்டும்
B. C மற்றும் D மட்டும்
C. B யை தவிர அனைத்தும்
D. D யை தவிர அனைத்தும்
54. தவறாக பொருந்தியவற்றை தேர்ந்தெடு
A. இலை பற்றுக் கொடியாக மாற்றுரு - பட்டாணி
B. இலை முட்களாக மாற்றுரு - சப்பாத்திக்கள்ளி
C. சதைப்பற்றுள்ள இலை - வெங்காயம், பூண்டு
D. வட்ட இலையமைவு – எருக்கு
55. வைரக்கட்டை இவற்றை கொண்டுள்ளது
A. உயிருள்ள லிக்னின் செறிந்த கூறுகள்.
B. உயிரற்ற லிக்னின் செறிந்த கூறுகள்.
C. உயிருள்ள லிக்னின் படியாத கூறுகள்.
D. உயிரற்ற லிக்னின் படியாத கூறுகள்.
56. கொழுப்புகள், அமிலத்தில் கரையாத பகுதிப் பொட்களோடு பிரித்தெடுக்கப்படுகின்றன, ஏனெனில்
A. இவற்றில் மூலக்கூறு எடை 800 டால்டனுக்குக் குறைவு
B. இது நீரில் கரையாத குழிழ்கள் (அ) மைசில்களை (micelle) உருவாக்குகின்றன
C. இது ஒரு பாலிமர்
D. இது ஒரு பாலிமர் அல்ல
57. கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் கொழுப்பை பற்றிய சரியான கூற்று எது?
A. உருகு நிலையின் அடிப்படையில் அவை கொழுப்பு மற்றும் எண்ணெய் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.
B. நரம்பு திசுக்கள் எளிய லிப்பிடுகளால் மட்டும் ஆனவை.
C. செல் படத்தில் பாஸ்போலிப்பிட் ஒரு அங்கம் வகிப்பது இல்லை.
D. கொழுப்புகள் பெரிய மூலக்கூறுகள் ஆகும்.

58. உயிர்ம பொருள் உற்பத்தி நிலையில், கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது சரியனது?


A. இந்த வழித்தடத்தை அறிவதற்கு C14 ஐசோடோப் பயன்படுத்தப்படுகிறது.
B. இந்த வழித் தடத்தை கால்வின் ஆய்வு செய்துள்ளார்.
C. இந்த வழித்தட ஆய்விற்கு, மெல்வின்கால்வின் ஒளிச்சேர்க்கை செய்யும் ஆல்காக்களை பயன்படுத்தினார்.
D. மேற்க்கூறிய அனைத்தும்.
59. கீழ்வருவனவற்றுள் இரைப்பை நீர் பற்றிய தவறான கூற்று எது?
A. மழலைகளின் இரைப்பை நீரில் ரெனின் என்ற நொதி காணப்படும்.
B. சிறிய அளவிளான லைப்பேஸ் நொதி காணப்படும்
C. இரைப்பை நீர், இரைப்பை சுரப்பிகளால் சுரக்கப்படுகிறது.
D. மழலைகளின் இரைப்பை நீரில் காணப்படும் ரெனின் என்ற நொதியால் பாலில் உள்ள புரத்தை செறிக்க இயாலது.

60. சுயநினைவோடு கூடிய முயற்சியால் மூச்சு விடும் போது, கீழ் கொடுக்கப் பட்டுள்ளவைகளில் எது சாத்தியமாகிறது?
A. ஒருவர் ஆக்ஸிஜன் இல்லாமல் காற்றை முழுவதும் வெளியேற்ற முடியும்.
B. மூக்கு மற்றும் வாயை மூடிக்கொண்டு தொண்டை செவிக்குழல் (Eustachiantube) வழியாகக் காற்றை வெளியேற்ற
முடியும்.
C. விலா எழும்புகளின் இயக்கம் இல்லாமல், உதரவிதானம் மட்டும் இயங்குவதால் சுயநினைவால் காற்றை
வெளியேற்ற முடியும்.
D. அதிக ஆற்றலுடன் காற்றை வெளியேற்றுவதால் (forcefully breathing out) நுரையீரல் முழுவதும்
வெறுமையாக்கப்படுகிறது

You might also like