You are on page 1of 1

கதைச் சுருக்கம் – இங்கேயும் ஒரு கங்கை

தமிழ்நாட்டை சேர்ந்த கோவில் உதவியாளன் ஒருவன் மலேசியாவில் வசிக்கும் தன்


மாமாவின் வீட்டிற்கு நல்வாழ்வைத் தேடி வருகின்றான். அங்கு அவனின் மாமா பினாங்கு
மாநிலத்தின் மிக பிரபலமான முருகர் கோயிலான பால தண்டாயுதபாணி ஆலயத்தில்
அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். தன் ஊர் கோவிலில் பணி புரிந்த நினைவுகளை
நினைவு கூர்ந்து வருந்துகிறான். பினாங்கு கோவிலிருக்கு வருகையளிக்கின்ற மலேசிய
மனிதர்களின் பண்பற்ற நிலையைக் கண்டு திகைத்து புலம்புகிறான். ஆனால், சில மக்கள்
கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நினைவு கூர்ந்து சரியான முறையில் ஆடை அணிந்து
வருபவர்களையும் பாராட்டுகிறான். பிறகு, செட்டியார் கோவிலில் மணி அடித்தவுடன்
இவனும் மேல் கோவிலில் மணி அடிக்க செல்கிறான். அப்பொழுது டான்..டான்...டான்
என்று ஓசை எழுப்ப இவன் மெல்லிய கிணிங்...கிணிங்.. என்ற பூஜை மணியின் ஒலியை
நினைவு கூறுகிறான். மலேசிய மக்களிடையே இறைவழிப்பாட்டில் கலாச்சாரத்தில் பல
குறைகள் இருந்தாலும் எதிர்வரும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு சிறப்பாக கொண்டாட
வேண்டும் என்று எண்ணுகிறான். அனைத்து மலேசிய மக்களும் தைப்பூசத் திருநாளைக்
கொண்டாட முன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றனர். அப்பொழுது, தைப்பூசத்
திருநாளும் நெருங்கியது. அத்திருநாளில் பக்தர்கள் ஜாதி, மதம் கருதாமல் தனது
நேர்த்திகடனை முறையாக செய்வதைப் பார்த்து திகைத்துப் போகின்றான். அச்சமயத்தில்
தெய்வத்தின் மீதான தவறான கண்ணோட்டத்தை உணர்ந்து தெய்வத்தின் மகிமையைப்
புரிந்து கொள்கிறான்.

You might also like