You are on page 1of 1

சமூக ஊடகங்கள் விரிவான வாசகப் பரப்பைக் கொண்டிருக்கின்றன.

இதில், ஃபேஸ்புக் மாதிரியான சமூக ஊடகத்தின் வரவு என்பது இந்த


நூற்றாண்டின் முக்கியமான சமீ ப நிகழ்வாகச் சொல்லலாம். இந்தச் சமூக
ஊடகப் பரப்பில், தமிழ் மொழியும் முக்கியமான செயலாற்றிவருகிறது.

முதலாவதாக, மொழியின் பயன்பாடு எப்போதும்


சமூகத்திலிருந்துதான் பயணிக்கிறது. சமூக ஊடகங்களில் எழுதிப் புகழ்
பெற்று அதன் வாயிலாக எழுத்துலகத்துக்குள் வருவோர் மீ து ஏனைய
சமூகங்களைக் காட்டிலும் தமிழ்ச் சமூகத்தில் ஒரு தாக்குதலைப் பார்க்க
முடிகிறது. மற்ற நாடுகளில் விமர்சகர்களும், எழுத்தாளர்களும்
தனித்தனியாக இருக்கிறார்கள். ஆனால், இங்கே எழுத்தாளர்களே விமர்சகர்
அவதாரமும் எடுப்பதால் ஏற்பட்டிருக்கும் விளைவு என்று இதைச்
சொல்லலாம். குறிப்பாக, பெண் களுக்கு, சமூக ஊடகங்களால் நிறைய
எழுதும் சுதந்திரம் கிடைத்துள்ளது.

தமிழைத் தக்கவைத்து வளர்த்தெடுக்க வேண்டுமாயின், அது அடுத்த


தலைமுறையினரைச் சென்றடைவதற்கான ஏற்பாடுகளை எமது
ஊடகங்கள் செய்ய முன்வரவேண்டும். மழலைகள், சிறுவர்கள்,
இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளுக்கென்றும் படைப்புகளுக்கென்றும் அதிக
நேரத்தையும் இடத்தையும் ஒதுக்க ஊடகங்கள் மனம் துணியவேண்டும்.
ஊடகங்களில் முகம் ஒளிர்கின்றபோது, குரல் ஒலிக்கின்றபோது,
படைப்புக்கள் தெரிகின்றபோது வளர்ந்தவர்களே மனதில் பூரிப்பு
அடைகின்றனர். இந்நிலையில் எமது இளம் தலைமுறையினரிடையே
இவை ஏற்படுத்தக்கூடிய நல்ல விளைவுகள் பற்றி விபரிக்க
வேண்டியதில்லை.

You might also like