You are on page 1of 50

இந்தியாவின் தலைநகரம் புது டெல்லியாக இருக்கலாம்...

ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு


தலைநகர் என்பது, அவரவர் பிறந்த ஊர்தான்’ என்கிறார் ஒரு பிரபல கவிஞர்.

தஞ்சாவூர்

வணக்கம் சுட்டி நண்பர்களே...

‘இந்தியாவின் தலைநகரம் புது டெல்லியாக இருக்கலாம்... ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு


தலைநகர் என்பது, அவரவர் பிறந்த ஊர்தான்’ என்கிறார் ஒரு பிரபல கவிஞர்.

உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் அதே நேரம், நாம்


பிறந்த மண்ணின், நம் ஊரின் வரலாற்றையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளும் அவசியத்தை
நோக்கமாகக் கொண்டு உருவாக்கிவருவதுதான் இந்த இணைப்பிதழ். இதில், திருச்சி
மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சாதனைகள், பிரபலங்கள் எனப் பல்வேறு
தகவல்களைத் திரட்டிக்கொடுத்திருக்கிறோம். இது, உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும்.
அத்துடன், பிரமாண்டமான போட்டியும் வைத்துப் பரிசும் அளித்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும்
அல்லவா?
சேலம், சென்னை, தருமபுரி, மதுரை, கோவை, நெல்லை, விருதுநகர், புதுச்சேரி, திருச்சி மற்றும்
கிருஷ்ணகிரி ஆகிய இணைப்பிதழ்களைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் நடத்திய
போட்டிகளில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அந்தப்
புத்தகத்துக்கும், நீட் தேர்வு போன்று OMR ஷீட் முறையில் நடத்தப்பட்ட தேர்வுக்கும் பெரும்
வரவேற்பு கிடைத்தது.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்போல, எங்கள் மாவட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும்,


வருங்காலத்தில் பல போட்டித் தேர்வுகளைக் குழப்பமின்றி எதிர்கொள்ளவும் இணைப்பிதழ்
வழிவகுத்தது’ என மாணவர்கள் சொல்லியிருந்தனர். ஆசிரியர்களும், ‘எங்கள் மாணவர்களுக்குக்
கிடைத்த இந்த நல்ல வாய்ப்பை, தமிழ்நாட்டின் மற்ற மாணவர்களும் பெற வேண்டும். உங்கள் பணி
தொடரட்டும்’ என வாழ்த்தியிருந்தனர். அந்த வரவேற்பு கொடுத்த உற்சாகத்தில் தொடர்கிறோம்.

சென்னை, மதுரை, நெல்லை,கோவை, மற்றும் திருச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து, இப்போது


`தஞ்சாவூர் 200' இன்ஃபோ புக் இதோ... உங்கள் கைகளில்.

அன்பு தஞ்சை சுட்டிகளே... வாருங்கள் நம்மைச் சுற்றி உள்ளவற்றை அறிவோம்.

ADVERTISEMENT
POWERED BY PLAYSTREAM

1. பெயர் வந்தது எப்படி?

தஞ்சன் என்ற அசுரனை சிவபெருமான் வதம் செய்த இடம் என்பதால், 'தஞ்சாவூர்' என்ற பெயர்
வந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமான்
கோயில் கொண்டுள்ளதால், இவ்வூருக்கு, தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயர் வந்ததாகவும்
குறிப்பிடுகின்றனர். இந்தக் கோயில், தஞ்சாவூருக்கு அருகே பள்ளி அக்ரஹாரம் என்ற இடத்தில்
உள்ளது.

2. எல்லைகள்

தஞ்சை மாவட்டத்திலிருந்து அரியலூர், திருச்சி மாவட்டங்களைப் பிரிக்கும் கொள்ளிடம் ஆறு,


வடக்கு எல்லையாகவும்... திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் கிழக்கு எல்லையாகவும், பாக்
ஜலசந்தி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு எல்லையாகவும், புதுக்கோட்டை மற்றும்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேற்கு எல்லையாகவும் அமைந்துள்ளது.

3. பரப்பும் சிறப்பும்

தஞ்சாவூர் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 3396.57 சதுர கிலோமீட்டர்கள். தஞ்சாவூர்,


கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய மூன்று வருவாய் கோட்டங்கள் உள்ளன. கும்பகோணம்,
திருவிடைமருதூர், பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர், பட்டுக்கோட்டை,
பேராவூரணி போன்ற ஒன்பது தாலுகாக்கள் உள்ளன.

4. என் மக்கள் எவ்வளவு பேர்?

தஞ்சாவூர் மாவட்டத்தின் மக்கள்தொகை அடர்தத ் ி, சதுர கிலோமீட்டருக்கு 708 பேர். 2011 ஆம்
ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தஞ்சை மாவட்டத்தில் 24 லட்சத்து 5 ஆயிரம் பேர்
வசிக்கின்றனர். இதில், 82.72 சதவிகிதம் பேர் கல்வி கற்றவர்கள்.
5. எங்கே எனது தஞ்சை?

தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ளது. பூமியின் 9.50'


முதல் 11.25' வரையிலான கடக ரேகை பகுதிக்கும் 78.43' முதல் 70.23' வரையிலான அட்சரேகை
பகுதிக்கும் இடையே அமைந்துள்ளது.

6. நீராரும் கடலுடுத்த

பண்டைத் தமிழர்களின் நீர் மேலாண்மையால் சோழநாடு `நீர் நாடு' என்றும், `நீர் வள நாடு' என்றும்,
நீரால் நெல் அதிகம் விளைந்ததால், `சோழ நாடு சோறுடைத்து' என்றும் புகழப்பட்டது.

7. நெற்களஞ்சியம்

தஞ்சாவூர் மாவட்டம் விவசாயத்துக்கு பெயர் பெற்றது. முக்கிய சாகுபடி நெல். 1991-92 ஆம்
ஆண்டுகளில் இம்மாவட்டத்தின் சராசரி நெல் உற்பத்தி 6 லட்சம் மெட்ரிக் டன். அதனால்தான்,
'தமிழகத்தின் நெற்களஞ்சியம்' என அழைக்கப்படுகிறது.

8. தாய் தஞ்சை மாவட்டம்

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் பரப்பளவில் பெரியதாக இருந்தது. அதன் நிர்வாக நலன்


கருதி, திருவாரூர், நாகப்பட்டினம், மன்னார்குடி, மயிலாடுதுறை கோட்டங்களையும், கும்பகோணம்
கோட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும் பிரித்து, 19.1.1991-ல் நாகப்பட்டினம் மாவட்டம்
ஏற்படுத்தப்பட்டது.

9. தஞ்சையில் இருந்து பிரிந்த திருவாரூர்

தஞ்சாவூர் மாவட்டம் 1991-ல் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, நிர்வாக நலன் கருதி மீண்டும்
1997 ஆம் ஆண்டில், திருவாரூர், மன்னார்குடி கோட்டங்களை உள்ளடக்கி, திருவாரூரை
தலைமையிடமாகக்கொண்டு திருவாரூர் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது.

10. தொகுதிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரு பாராளுமன்றத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.


பாராளுமன்றத் தொகுதி, தஞ்சாவூர். சட்டமன்ற தொகுதிகள், மன்னார்குடி, திருவையாறு,
தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி.

11. வட்டங்களும் கோட்டங்களும்

தஞ்சாவூர் மாவட்டம் மூன்று கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, தஞ்சாவூர்,


கும்பகோணம், பட்டுக்கோட்டை. மேலும், தஞ்சாவூரில் ஒன்பது தாலுகாக்கள் உள்ளன. அவை
கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருவிடைமருதூர்,
திருவையாறு, பூதலூர் மற்றும் தஞ்சாவூர்.

12. ஒன்றியங்கள்
தஞ்சாவூர் மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, தஞ்சாவூர்,
கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருப்பனந்தாள், ஒரத்தநாடு, பாபநாசம், பேராவூரணி,
திருவையாறு, திருவிடைமருதூர், திருவோணம், அம்மாபேட்டை, பூதலூர், மதுக்கூர்,
சேதுபாவாசத்திரம் ஆகியன.

13. பேரூராட்சிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், திருவையாறு, பேராவூரணி, திருவிடைமருதூர், திருப்பனந்தாள்,


அதிராம்பட்டினம், அம்மாபேட்டை, மதுக்கூர், வல்லம், ஆடுதுறை, திருக்காட்டுப்பள்ளி, தாராசுரம்,
மெலட்டூர், சுவாமிமலை, திருநாகேஸ்வரம், திருபுவனம், சோழபுரம், மேலத்திருப்பந்துருத்தி,
பெருமகளூர், ஒரத்தநாடு, அய்யம்பேட்டை, வேப்பத்தூர் என 22 பேரூராட்சிகள் உள்ளன.

14. மாநகராட்சியாக மாறிய தஞ்சாவூர்

தஞ்சாவூர், தமிழ்நாட்டின் 12 ஆவது மாநகராட்சியாகும். 2014 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம்


உயர்த்தப்பட்டது. 1866 மே 9 ஆம் தேதி முதல், நகராட்சியாக செயல்பட்டுவந்தது. 1983 ஆம்
ஆண்டு, சிறப்பு நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

15. உள்ளாட்சி

ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள், 589 கிராம


பஞ்சாயத்துகளுடன் தஞ்சாவூர் மாவட்டம் இயங்கிவருகிறது. கிராமங்களின் எண்ணிக்கை 906.
16. காவிரி

கர்நாடகாவில் உற்பத்தியாகி தமிழ்நாட்டுக்குள் புகுந்து, தஞ்சை மண்ணின் வளம் கொழிக்கச்


செய்யும் நதி, காவிரி. இதன் பல கிளை ஆறுகள், தஞ்சை மாவட்டம் முழுக்க நெல்வயல்களில்
நீர்ப்பாசனம் பெற உதவுகின்றன. டெல்டா பகுதிகளில் வயல்களை வளம் கொழிக்கச் செய்தபின்,
பூம்புகார் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது காவிரி.

17. கொள்ளிடம்

காவிரியின் ஒரு கிளை நதி கொள்ளிடம். காவிரியில் இருந்து பிரியும் கொள்ளிடம் தஞ்சை, நாகை,
கடலூர் மாவட்டங்களுக்கு இடையே ஓடி, பரங்கிப்பேட்டைக்கு 5 கிலோமீட்டர் தெற்கில் வங்காள
விரிகுடாவில் கலக்கிறது.

18. வெண்ணாறு

காவிரியின் கிளை நதி, வெண்ணாறு. தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களின்


நீர்ப்பாசனத்துக்கு உதவுகிறது. தூய்மையான மணல் மேல் பாயும் நதி வெண்மையாக இருந்ததால்,
(வெண்மை+ஆறு), வெண்ணாறு என அழைக்கப்பட்டது. சோழ மன்னன் பராந்தகன்,
வெண்ணாற்றில் இருந்து கால்வாய் அமைத்து, நீர் பாசனத்தை பெருக்கினான் என்பது வரலாற்றுச்
செய்தி.

19. வெட்டாறு

தஞ்சாவூரின் முக்கிய நதிகளில் ஒன்று, வெட்டாறு. தஞ்சாவூருக்கு மட்டுமல்லாமல்


தஞ்சாவூரிலிருந்து பிரிந்துசென்ற திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட விவசாயத்துக்கும் உதவுகிறது.
திருவாரூர் மாவட்டத்தை அடைந்தவுடன் பெருமளவு வடிகாலாக ஓடும் வெட்டாறு, நாகூர் அருகே
கடலில் கலக்கிறது.

20. திருமலை ராஜன் ஆறு

காவிரியின் நதியாகப் பாய்ந்து ஓடும் குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரியும் ஆறுதான், திருமலைராஜன்


ஆறு. நாயக்க மன்னரான திருமலைராயன் பெயரில் அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் அருகே, ராஜகிரி என்ற இடத்தில் குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரியும் திருமலைராஜன் ஆறு,
காரைக்கால் அருகே திருமலைராஜன்பட்டினத்தில் கடலில் கலக்கிறது.

21. கல்வியறிவு எவ்வளவு?

தஞ்சாவூர் மாவட்டம் விவசாய பூமி. நெல் விளையும் பூமி. அதுபோலவே கல்வியிலும் சிறந்து
விளங்கும் பூமி. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், தஞ்சாவூரின் சராசரி
கல்வியறிவு 82.64 சதவிகிதம். தமிழ்நாட்டின் சராசரி கல்வியறிவு பெற்றவர்கள் 80.1 சதவிகிதம்.

22. முன்கதைச் சுருக்கம்

தஞ்சாவூரின் வரலாறு 2000 ஆண்டுகள் பழைமையானது. கி.மு இரண்டாம் நூற்றாண்டில் சங்க


கால சோழ மன்னன் கரிகாலனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததை சில கல்வெட்டுகள் மூலமாகவும்,
சங்கத்தமிழ் இலக்கியங்கள் மூலமாகவும் தெரிந்துகொள்ள முடிகிறது. தஞ்சை மாவட்டம் பற்றிய
ஆதாரங்கள், கி.பி.ஏழாம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கின்றன.

23. முத்தரையர்கள் ஆட்சி

தஞ்சாவூர் பகுதியை கி.பி 655 ஆம் ஆண்டு முதல் கி.பி 850 ஆம் ஆண்டு வரை முத்தரையர்கள்
என்ற குறுநில மன்னர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். முத்தரையர்களின் 200 ஆண்டுகால
ஆட்சியில், தஞ்சைப் பகுதியை வளமும் நலமும் பெற்றதாக உருவாக்கினார்கள்.

24. சொர்க்கமாக மாற்றிய சோழர்கள்

தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் சோழர்கள் முக்கியமானவர்கள். சங்க காலத்துக்குப் பிறகு,


சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் தலையெடுத்தனர். கி.பி 850 ஆம் ஆண்டு
முத்தரையர்களை தோற்கடித்து, விஜயாலய சோழன் பிற்கால சோழர் மரபை (ஆட்சியைத்)
தோற்றுவித்தார்.

25. தலைநகரான தஞ்சாவூர்

சோழர்களின் ஆட்சி தொடங்கிய பிறகு, தஞ்சாவூர் சோழர்களின் நிரந்தர தலைநகராயிற்று.


ராஜராஜ சோழரின் ஆட்சிக்காலத்தில் (கி.பி 985 -1014), தஞ்சாவூர் புகழின் உச்சியை அடைந்தது.
ராஜராஜ சோழன், தனது ஆட்சிப் பகுதியை எல்லா திசைகளிலும் விரிவுபடுத்தி, அதனை ஒரு
பேரரசாக மாற்றினார்.

26. கங்கைகொண்ட சோழபுரம்

அப்பா எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதற்கு உதாரணமாக, ராஜேந்திர சோழனை
சொல்லலாம். சோழப் பேரரசை ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் பல மடங்கு
விரிவுபடுத்தினார். கி.பி 1025 ஆம் ஆண்டு தலைநகரை தஞ்சாவூரிலிருந்து கங்கைகொண்ட
சோழபுரத்திற்கு மாற்றினார்.

27. பாண்டியர்களின் பங்களிப்பு

முடியுடை மூவேந்தர்கள் (சேர, சோழ, பாண்டியர்கள்) தங்களுக்குள் சண்டையிட்டவாறு


இருந்ததால், தஞ்சைப் பகுதியில் ஆட்சி மாறிக்கொண்டே இருந்தது. கி.பி 13 ஆம் நூற்றாண்டில்
மதுரை பாண்டியர்கள் எழுச்சி பெற்றதன் விளைவாக, மதுரை பாண்டியர்கள் வசம், தஞ்சைப் பகுதி
வந்தது.

28. விஜயநகரம் வென்றது

தென்னிந்தியா முழுவதும் விரைவாகப் பரவிக்கொண்டிருந்த விஜய நகரப் பேரரசு, தஞ்சாவூரையும்


விட்டுவைக்கவில்லை. பாண்டியர்களை வென்று, 15 ஆம் நூற்றாண்டில், தஞ்சாவூரில் தனது
ஆட்சியை நிறுவியது.

29. நாடாண்ட நாயக்க வம்சம்

தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியபோது, விஜயநகரப்


பேரரசிடம் வரிவசூல் அதிகாரிகளாக இருந்த நாயக்கர்கள், தங்களை சுயாட்சி பெற்ற அரசர்களாக
அறிவித்துக்கொண்டனர். தொடர்ந்து, கி.பி 1532-ல் தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி
தொடங்கியது.

30. தஞ்சையை ஆண்ட மதுரை நாயக்கர்கள்

தமிழகத்தை ஆண்ட மதுரை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள் என்று


பிரிந்து கிடந்தனர். இவர்களுக்குள்ளேயே சண்டைகள் நடந்தன. அப்படியான ஒரு சண்டையில்,
மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர், கி.பி 1673 ஆம் ஆண்டு தஞ்சாவூரை வென்று, தஞ்சையை
மதுரை நாயக்க அரசுடன் இணைத்துக்கொண்டார்.

31. வா...ஜி...வா...ஜி...வெங்கோஜி..

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜியால் தோற்றுவிக்கப்பட்ட மராத்தியப் பேரரசு, தன் ஆட்சியை


விரிவுபடுத்தி வந்த நேரம். அது, தஞ்சையையும் விட்டுவைக்கவில்லை. கி.பி.1674 ஆம் ஆண்டு,
நாயக்கர்களை தோற்கடித்து, வெங்கோஜி தஞ்சையில் மராத்தியர் ஆட்சியை நிறுவினார்.

32. அடுத்து வந்த ஆங்கிலேயர்

தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி (கி.பி. 1798-1832), ஆங்கில கவர்னர்
ஜெனரல் வெல்லெஸ்லி பிரபுவுடன் 1799-ல் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். இந்த ஒப்பந்தப்படி,
தஞ்சை கோட்டையையும் சில பகுதிகளையும் வைத்துகொண்டு பிற பகுதிகளை ஆங்கிலேயருக்கு
கொடுத்துவிட்டார், இரண்டாம் சரபோஜி.

33. தஞ்சாவூரில் ஆங்கிலேயர் ஆட்சி


இரண்டாம் சரபோஜிக்குப் பின்னர், 1832 ஆம் ஆண்டு, இரண்டாம் சிவாஜி தஞ்சாவூரின்
(கோட்டையின்) மன்னரானார். 1855 ஆம் ஆண்டு, ஆண் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டார். எனவே,
தஞ்சாவூர் கோட்டையையும் ஆங்கிலேயர் எடுத்துக்கொண்டனர்.

34. ஆட்சி... நகராட்சி... மாநகராட்சி...

தஞ்சாவூரின் முழு ஆட்சிப் பொறுப்பும் 1855 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் வசம் வந்தது. 1866 ஆம்
ஆண்டு, தஞ்சாவூரை நகராட்சியாக அறிவித்தனர்.
35. கலைகளின் ஆட்சி

சோழர்களின் ஆட்சி கி.பி 985 முதல் கி.பி 1070 வரை (ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன்
காலம்) உச்ச நிலையை அடைந்திருந்தது. இந்த காலகட்டத்தில் ஏராளமாக கோயில்கள் கட்டப்பட்டு,
பரந்துவிரிந்துகிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக
நடைபெற்றது.

36. ராஜ ராஜ சோழன்

சோழப் பேரரசன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில்


என்றும் அழைக்கப்படுகிறது. மற்ற கோயில்களில் ராஜகோபுரம் உயரமாக இருக்கும். விமான கோபுரம்
சிறியதாக இருக்கும். ஆனால், தஞ்சை பெரிய கோயிலில், ராஜ கோபுரத்தைவிட விமான கோபுரம்
உயரமானது. 216 அடிகள். 25 டன் எடையுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தி, இக்கோயிலுக்கு
இன்னொரு சிறப்பு.

37. சிவகங்கைக் குளம்

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வடக்கே உள்ளது, சிவகங்கை பூங்கா. இந்தப் பூங்காவின் நடுவே
அமைந்திருக்கிறது சிவகங்கை குளம். 1000 ஆண்டுகள் பழைமையான குளம் இது. தஞ்சைப்
பெரிய கோயில் கட்டப்பட்டபோது இந்தக் குளம் வெட்டப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள்
கூறுகிறார்கள்.

38. ராணி சமுத்திர ஏரி

ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகருக்கு அருகே கடல் இல்லை என்ற ஒரு
காரணத்தினால், கடல் போன்ற ஏரி அமைத்ததாகக் கூறப்படுகிறது. வடவாற்றிலிருந்து பிரியும்
வாய்க்கால்கள், பாசன வயல்களுக்கு நீர் பாய்ச்சிய பின், ராணி சமுத்திரம் ஏரியில் கலக்கின்றன.
தற்போது, ராணி சமுத்திரம் ஏரியில் படகுப் போக்குவரத்து விடுவதற்கு முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

39. சாமந்தான் குளம்

தற்போது தஞ்சைக்கு அருகிலுள்ள கொண்டு ராஜபாளையத்துக்கு, 'சாமந்த நாராயண


விண்ணகரம்' என்பது பழைய பெயர். இங்கு உள்ள குளத்தை சாமந்தன் குளம் என்று
அழைக்கிறார்கள். நிலத்தடி நீரைச் சேகரிப்பதற்காக வெட்டப்பட்ட குளம். சிவகங்கை பூங்காவில்
இருந்து சுடுமண் குழாய்கள் மூலம் நீரைக் கொண்டு சென்று நிரப்பி வந்திருக்கிறார்கள். தற்போது
அந்த வழிகள் அடைக்கப்பட்டுவிட்டன.

40. டபீர் குளம்

தஞ்சாவூர் நகரத்தின் கீழ் கோடியில் வடவாற்றின் தெற்குக் கரையில் இருக்கிறது இக்குளம்.


வடவாற்றின் தெற்குக் கரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் அரிசி தெருவுக்கு
போகும் வழியில் உள்ள குளம் என்றால் நன்றாக தெரியும். அரண்மனை இதோடு தொடர்புடைய டபீர்
பண்டிதரின் பெயரில் இக்குளம் அழைக்கப்படுகிறது. 1000 ஆண்டுகள் பழைமையான குளம்.

41. அய்யன் குளம்


தஞ்சையில் நாயக்க மன்னர்கள் ஆட்சி நடந்தபோது, செவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், விஜய
ரகுநாத நாயக்கர் ஆகிய மூன்று மன்னர்களிடம் அமைச்சராகப் பணியாற்றியவர், கோவிந்த
தீடச
் ிதர். இவரை எல்லோரும் கோவிந்தய்யா என்றே அழைப்பார்கள். கோவிந்தய்யாவின்
பணிகளைப் பாராட்டி விஜய ரகுநாத நாயக்கர் வெட்டிய குளம் அய்யன் குளம். மிக ஆழமான குளம்.
இதில் பலர் மூழ்கி இறந்திருக்கிறார்கள். எனவே, ஒரு காலத்தில் தஞ்சாவூரின் `தற்கொலை முனை'
என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

42. அழகி குளம்

தஞ்சை நகரிலேயே இருக்கிறது, அழகி குளம். இதன் பெயர், `அழகிய குளத்து வாரி' என்று ஒரு
கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு, தஞ்சை ரயில் நிலையம் அருகில் ஒரு மசூதியில்
உள்ளது. இந்தக் கல்வெட்டைப் பொறித்தவர், மன்னர் செவப்ப நாயக்கர். தஞ்சையில் ஓடும் ராணி
வாய்க்காலிலிருந்து நீர் நிரப்பப்பட்டு வருகிறது.

43. பாகவத மேளா

தஞ்சாவூர் அருகில் இருக்கிறது, மெலட்டூர். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பாகவத மேளா


என்ற தொடர் நாட்டிய நாடக நிகழ்ச்சி, இப்பகுதியின் டூரிஸ்ட் அட்ராக் ஷன்களுள் ஒன்று. இது,
மெலட்டூரை சுற்றியுள்ள சாலியமங்கலம், நல்லூர், ஊத்துக்காடு, குலமங்கலம் மற்றும்
தேப்பெருமாநல்லூர் ஆகிய இடங்களில் நடக்கிறது.

44. மக்கள் கவிஞரின் மணிமண்டபம்

தமிழ் திரைப்படங்களில் வெற்றிகரமான பாடலாசிரியராகத் திகழ்ந்தவர், பட்டுக்கோட்டை


கல்யாணசுந்தரம். முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரத்துக்கு பட்டுக்கோட்டையில் நாடியம்மாள்புரத்தில் 22 லட்ச ரூபாய் செலவில்,
அழகிய மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, தினமும் அவரது பாடல்கள்
ஒலிபரப்பப்படுகின்றன.

45. சரஸ்வதி மஹால் நூலகம்

'ஆசியாவிலேயே மிகப் பழைமையான நூலகம்' என்ற புகழைப் பெற்றுள்ள நூலகம் இது. தஞ்சாவூர்
நகரில் விஜயநகர கோட்டைக்குள் உள்ளது இந்த நூலகம். மிகப் பழைமையான ஓலைச்சுவடிகள்
இங்கு பராமரிக்கப்பட்டுவருகின்றன. தமிழ், மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில்
ஏராளமான நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
சரஸ்வதி மஹால் நூலகம்

46. விஜயநகர கோட்டை

தஞ்சைப் பெரிய கோயிலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் வடக்கே இருக்கிறது, விஜய நகர கோட்டை.
16 ஆம் நூற்றாண்டின் மத்தியில், நாயக்க மன்னர்களால் உருவாக்கப்பட்டது இக்கோட்டை. மராட்டிய
மன்னர்களும் இக்கோட்டையின் சில பகுதிகளைக் கட்டியிருக்கிறார்கள்.

47. சங்கீத மஹால்

இந்த இசைக்கூடம், தஞ்சாவூரில் அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும். இந்த மஹால், தஞ்சை
அரண்மனையின் முதல் தளத்தில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் ஒலியியல் நுட்பங்களுடன்
அமைக்கப்பட்டிருக்கும் இசைக்கூடம் இது. மன்னர்கள் காலத்தில், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள்
இங்கு அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.

48. தஞ்சைக் கலைக்கூடம்

தஞ்சாவூர் 'ஆர்ட் கேலரி' என்று அழைக்கப்படும் ஓவியக்கூடம் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.


'ராஜராஜ சோழன் கலைக்கூடம்' என்றும் அழைக்கிறார்கள். சோழர் கால அரிய செப்புச் சிலைகளை
பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த கலைக்கூடம் இந்திர மந்திர், பூஜா மஹால், ராமசௌடம்
எனப்படும் ஒரு கூடம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

49. மனோரா கோட்டை

தஞ்சாவூரிலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் பட்டுக்கோட்டை நகரத்துக்கு அருகே இந்த மனோரா


கோட்டை அமைந்திருக்கிறது. 1815 ஆம் ஆண்டு, இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது.
ஆங்கிலேயர்கள், நெப்போலியனின் பிரெஞ்சுப் படையை அடக்கிய வாட்டர்லூ போரின் வெற்றிச்
சின்னமாக இது எழுப்பப்பட்டுள்ளது. சரபோஜி மன்னர், ஆங்கிலேயர்களுடனான நெருக்கத்தை
இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

மனோரா கோட்டை

50. சுவார்ட்ஸ் தேவாலயம்

சரபோஜி மன்னரால் 1779 ஆம் ஆண்டு கட்டப்பட்டது, ஸ்வார்ட்ஸ் தேவாலயம். தஞ்சை


அரண்மனையின் நந்தவனப் பகுதியில் உள்ளது. ரெவரெண்ட் ஃபிரடெரிக் கிறிஸ்டியன் ஸ்வார்ட்ஸ்
என்ற டேனிஷ் மதகுருவின் மீது இருந்த அன்பின் காரணமாக, இத்தேவாலயத்தை சரபோஜி மன்னர்
கட்டினார்.

51. சுவாமி மலை முருகன் கோயில்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ளது, சுவாமி மலை முருகன்


கோயில். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. செயற்கையான குன்று போன்ற அமைப்பில்
கட்டப்பட்டிருக்கிறது. 60 படிகளில் ஏறி, கருவறையை அடையவேண்டும். இந்த 60 படிகள் என்பது,
மனித வாழ்வின் சராசரி 60 வயதை குறிப்பதாகவும், 60 தமிழ் வருடங்களைக் குறிப்பதாகவும்
சொல்கின்றனர்.

52. தஞ்சாவூர் அரண்மனை

தஞ்சாவூர் அரண்மனை, கி.பி 1650 ஆம் ஆண்டு மராத்தியர் மற்றும் நாயக்கர்களால் கட்டப்பட்டது.
இந்த அரண்மனையில், பெரிய கோட்டை மற்றும் சிறிய கோட்டை என்று இரண்டு பாகங்களாக
பிரிக்கப்பட்டுள்ளது. அரண்மனை பெரிய கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டை,
110 ஏக்கர் பரப்பளவில் தஞ்சை நாயக்கரின் கடைசி அரசரான விஜயராகவ நாயக்கரால்
கட்டப்பட்டது.

53. ராஜராஜன் மணிமண்டபம்

ராஜராஜன் மணி மண்டபம், நகரின் நடுவில் அமைந்துள்ளது. இந்த அழகிய மணி மண்டபம், சோழர்
காலத்து கட்டடக் கலையின்படி கட்டப்பட்டது. இங்கு ஓர் அழகிய தோட்டம் இருக்கிறது. இந்தத்
தோட்டத்தில் நீரூற்று, ஊஞ்சல், சறுக்கு மரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த
மண்டபத்தின் அடித்தளத்தில் 1984 ஆம் ஆண்டில், ராஜராஜ சோழனின் 1000 ஆவது பிறந்த
தினத்தின் நினைவாகக் கட்டப்பட்ட அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

54. புன்னை நல்லூர் மாரியம்மன்

தஞ்சாவூர் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில், புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்.


தஞ்சாவூரை ஆண்ட வெங்கோஜி மன்னரால் கட்டப்பட்டது. இக்கோயில், புன்னை மரக் காடுகள்
நிறைந்த பகுதியில் இருப்பதால், புன்னைநல்லூர் என்று இப்பகுதி அழைக்கப்படுகிறது. வெங்கோஜி
மகாராஜாவுக்கு பின்னர் வந்த துளஜா மகாராஜாவும் இக்கோயிலுக்கு கொடைகள்
கொடுத்திருக்கிறார்.

55. குந்தவை நாச்சியார் கல்லூரி

பெண்களுக்கு உயர் கல்வி கொடுப்பதற்காக, 1966 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் ஆரம்பிக்கப்பட்டது


அரசுக் கலைக் கல்லூரி. பின்னர், 'குந்தவை நாச்சியார் அரசுக் கலைக் கல்லூரி' என்று பெயர்
மாற்றம் செய்யப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வந்த இக்கல்லூரி,
1970 ஆம் ஆண்டு, சொந்தக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.

56. மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி

மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, தன்னாட்சி பெற்ற கல்லூரி ஆகும். திருச்சி பாரதிதாசன்
பல்கலைக்கழகத்தின் இணைப்பைப் பெற்றிருக்கும் கல்லூரி. 1955 ஜூன் 23 ஆம் தேதி
தொடங்கப்பட்டது.

57. கரந்தை தமிழ்க் கல்லூரி

தஞ்சாவூரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கரந்தட்டாங்குடியில் உள்ளது. (கரந்தட்டாங்குடி


என்பதுதான் கரந்தை) 1911 ஆம் ஆண்டு, கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. 1916 ஆம்
ஆண்டு, கரந்தைத் தமிழ்சச் ங்க செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரியானது.

58. திருவையாறு அரசு இசைக் கல்லூரி

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள கல்லூரி இது. சமஸ்கிருதம், தமிழ் மற்றும் இசைக்
கல்வியும் வழங்கப்படுகின்றன. தஞ்சை மராட்டிய மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட கல்யாணி
அம்மாள் சத்திரம், 1881-ல் வடமொழிப் பள்ளியாக மாற்றப்பட்டது. பிறகு, 1910 ஆம் ஆண்டு,
வடமொழி கல்லூரியாக மாற்றப்பட்டது. 1924 ஆம் ஆண்டு, இந்தக் கல்லூரி திருவையாறு அரசர்
கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கொள்ளிடம் ஆறு

59. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம். 1988 ஆம் ஆண்டு,
பெண்களுக்கான பொறியியல் கல்லூரியாகத் தொடங்கப்பட்டது. இப்போது, நிகர்நிலைப்
பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. உலகத்திலேயே பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட
முதல் பொறியியல் கல்லூரி இதுதான்.

60. பூண்டி புஷ்பம் கல்லூரி

தஞ்சாவூருக்கு அருகில் உள்ள பூண்டி என்ற ஊரில் உள்ளது, பூண்டி புஷ்பம் கல்லூரி. வீரையா
வாண்டையார் நினைவு புஷ்பம் கல்லூரி என்று அழைக்கப்படும் இக்கல்லூரி, ஒரு தன்னாட்சி கல்வி
நிறுவனம். 1956 ஆம் ஆண்டு, துளசி அய்யா வாண்டையார் இக்கல்லூரியை நிறுவினார்.

61. ஈச்சங்கோட்டை விவசாயக் கல்லூரி

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகாவில் இருக்கிறது, ஈச்சங்கோட்டை. இங்கு, தமிழ்நாடு


வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி
நிறுவனம் செயல்படுகிறது. 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரி, காவிரி டெல்டா பகுதி
விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிவருகிறது.
62. சாஸ்திரா பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் மாவட்டம், திருமலை சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் இது.


1984 ஆம் ஆண்டு, சண்முகா பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்டது. இங்கு கலை அறிவியல்
படிப்புகளுடன் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகச் செயல்படுகிறது.

63. மன்னை நாராயணசாமி நர்ஸிங் கல்லூரி

அடித்தட்டு மக்களுக்கும் கல்வியை கொண்டுசேர்க்க வேண்டும் என்று உழைத்தவர், மன்னை


நாராயணசாமி. அவர் நினைவாக, 1997 ஆம் ஆண்டு, மன்னை நாராயணசாமி கல்வி
அறக்கட்டளை நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளையின் கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள்
செயல்படுகின்றன. அதில் ஒன்று, தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் தண்டாங்கோரை என்ற
ஊரில் உள்ள மண்ணை நாராயணசாமி நர்ஸிங் கல்லூரி.

64. பரிசுத்தம் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி

தஞ்சாவூர் - நாஞ்சிக்கோட்டை சாலையில் இருக்கிறது, பரிசுத்தம் அறிவியல் தொழில்நுட்பக்


கல்லூரி. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்று செயல்பட்டுவரும் கல்லூரி.
எஸ்.பி.அந்தோணிசாமி என்பவரால் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்லூரி, விளையாட்டுக்கு
அதிக முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்களைக் கல்லூரி நிர்வாகம் ஊக்குவித்துவருகிறது.

65. ரஸ்கின் மேலாண்மைக் கல்லூரி

தஞ்சாவூரில் இயங்கும் ரஸ்கின் சர்வதேச பயிற்சிக் கல்லூரி, மேலாண்மைப் படிப்புகளை


வழங்குகிறது. இது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பை வழங்கும் சான்றிதழ் படிப்புகளையும்
இக்கல்லூரி வழங்குகிறது. சரபோஜி கல்லூரி அருகில் இருக்கும் வளாகத்தில் வணிக
மேலாண்மைப் படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன.

66. மன்னை நாராயணசாமி

மன்னார்குடியைத் தான் மன்னை என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள். மன்னை நாராயணசாமி


ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக அறியப்படுபவர். அனைவருக்கும் கல்வியைக்
கொண்டுசேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டவர். மூட நம்பிக்கைகளை எதிர்த்து
குரல் எழுப்பியவர். அதனால், `தஞ்சாவூரின் பெரியார்' என அழைக்கப்பட்டவர்.

67. அவர் லேடி மருத்துவமனை

தஞ்சையில், 'அவர் லேடி மருத்துவமனை' என்றால், பலருக்கும் தெரியாது. ஆண்டவர் ஆஸ்பத்திரி


என்று சொன்னால்தான் தெரியும். பாதிரியார் ஆரோக்கியசாமி சுந்தரம் என்பவரால், 1961 ஆம்
ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் 300 படுக்கைகள் உள்ளன. இதில், 50
சதவிகித படுக்கைகள், ஏழைகள் இலவச சிகிச்சை பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

68. தஞ்சாவூர் தட்டு

'தஞ்சாவூர் கலைத்தட்டு' என்பது, தஞ்சாவூரில் தயாரிக்கப்படும் அலங்கார பரிசுப் பொருள். வெள்ளி,


பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களைக்கொண்டு உருவாக்கப்படும் அழகிய கிஃப்ட் இது.
தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி காலத்தில், தஞ்சையில்
அறிமுகப்படுத்தப்பட்டது. தஞ்சாவூர் தட்டு, இந்திய அரசாங்கத்தின் புவிசார் குறியீட்டு பட்டியலில்
இடம்பிடித்துள்ளது.
69. தஞ்சாவூர் வீணை

தஞ்சாவூர் தட்டு போலவே, தஞ்சாவூர் வீணையும் தஞ்சாவூரின் தனிச்சிறப்புகளில் ஒன்று. 17 ஆம்


நூற்றாண்டில் தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத மன்னர் காலத்தில், முதன்முதலில் இவ்வகை வீணை
செய்யப்பட்டது. தஞ்சாவூர் வீணை, பலா, வாகை மரங்களால் செய்யப்படுகின்றன. இதற்காக
பண்ருட்டியிலிருந்து பலா மரங்களில் வாங்கப்படுகின்றன. தஞ்சாவூர் வீணையும் புவிசார் குறியீடடு

பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

70. ஐ.நா-வும் பெரிய கோயிலும்

தஞ்சாவூர் பெரிய கோயிலை கி.பி 1003 ஆம் ஆண்டு மற்றும் 1004 ஆம் ஆண்டுகளில் கட்டத்
தொடங்கி, 1010 ஆம் ஆண்டு முடித்துள்ளனர். 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள்
நிறைவடைந்திருக்கின்றன. தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
1987 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் தஞ்சாவூர் பெரிய
கோயிலை உலக பாரம்பர்ய சின்னமாக அறிவித்தது.

71. முந்தி நிற்கும் நந்தி

தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருக்கும் நந்தியும் பெரியது. இக்கோயிலின் நந்தி ஒரே கல்லில்
அமைக்கப்பட்டுள்ளது. 25 டன் எடையும் 2 மீட்டர் உயரமும் 6 மீட்டர் நீளமும், இரண்டரை மீடட
் ர்
அகலமும் கொண்டதாக உள்ளது. இது, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தி.

72. பெரிய ரகசியம்

பெரிய கோயில் விமானத்தின் உயரம் 216 அடிகள். கற்களே கிடைக்காத சமவெளிப் பகுதியில், 15
தளங்கள்கொண்ட 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் கட்டியிருக்கிறார். கோயிலும்
பெரியது. நந்தியும் பெரியது. அதுபோல, கோயிலின் கருவறையில் உள்ள மூலவர் சிவலிங்கமும்
பெரியது. இந்த சிவலிங்கம்தான் உலகிலேயே பெரியது. இதன் உயரம் 23 1/2 அடிகள்.

73. வீணையை மீட்டும் தஞ்சை

மனதை வருடிச்செல்லும் இசையைத் தரும் மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம்,


தபேலா, தம்புரா போன்றவை தஞ்சாவூரில்தான் செய்யப்படுகின்றன.

74. தென்னக பண்பாட்டு மையம்

கலை மற்றும் பண்பாட்டை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசால்


அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில்தான் அமைந்துள்ளது. தமிழ்நாடு,
ஆந்திரா, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய
தென்னிந்தியாவின் தலைமை மையம் இது.

75. தஞ்சாவூரில் ஒரு பிரமிட்

எகிப்து நாட்டின் பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும் தஞ்சாவூர் பெரிய கோயிலின் கட்டுமான


முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்நதெ ் டுக்கப்பட்ட
கற்களை அடுக்கியும் கோர்த்தும் கட்டப்பட்டுள்ளது. இரண்டிலுமே கோள்களின் கதிர் வீச்சுகள்
அதன் மையப்பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

76. நாகரிகத்தின் தொட்டில்

தஞ்சாவூர் பெரிய கோயிலின் கட்டடக் கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை வெண்கலச் சிலை


உருவாக்கம் ஆகியவை சோழர்களின் திறமைக்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாகத்
திகழ்கின்றன. அதுமட்டுமல்லாமல், இவை தென்னிந்திய கோயில் கட்டடக்கலைக்கும் சோழர்களின்
ஆட்சி மற்றும் தென்னிந்தியாவில் தமிழர்களின் நாகரிகத்துக்கும் சான்றாக அமைந்துள்ளன.

77. தலையாட்டி பொம்மை

தஞ்சாவூர் என்றால், எல்லோருக்கும் தலையாட்டி பொம்மை ஞாபகம் வந்துவிடும். இந்தத்


தலையாட்டி பொம்மை மூன்று பாகங்களாக இருக்கும். காற்றில் பொம்மை ஆடுவது பார்ப்பதற்கு மிக
அழகாக இருக்கும். தலையாட்டி பொம்மை செய்யும் கலைஞர்கள் குறைந்துவருகிறார்கள்.
78. தஞ்சாவூர் ஓவியங்கள்

தஞ்சாவூர் ஓவியங்கள் மிகப் பிரபலமானவை. ராமாயணம் மற்றும் மகாபாரத இதிகாசத்தின்


காட்சிகளை முக்கிய கருப்பொருளாகக்கொண்டு இந்த ஓவியங்கள் வரையப் பட்டிருக்கின்றன.
மற்ற ஓவியங்களில் இருந்து வேறுபட்டு, தங்க நிறத்தில் ஜொலிக்கின்றன.

79. திருக்கருகாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகாவில் வெண்ணாற்றங்கரையில் அமைந்திருக்கிறது,


திருக்கருகாவூர். கும்பகோணத்திலிருந்து ஆவூர் மெலட்டூர் வழியாக, தஞ்சாவூர் செல்லும்
சாலையில் அமைந்திருக்கிறது. இந்த ஊரில் உள்ள முல்லைவன நாதர் சுவாமி சிவன் கோயில்,
மிகவும் புகழ்பெற்றது.

80. தர்பார் ஹால்

தஞ்சையில் உள்ள தர்பார் ஹால், மதுரையில் உள்ள நாயக்கர் மஹால் போன்று கட்டப்பட்டிருக்கிறது.
அரசர் அமரும் இடத்தின் பின்புறம், சிவாஜி அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் தோற்றம்
வரையப்பட்டிருக்கிறது. அரண்மனையின் மையப்பகுதியில் `கூட கோபுரம்' இருக்கிறது. இதன்
மேலிருந்து 10 கிலோமீட்டர் வரை தெளிவாகப் பார்க்கமுடியும்.

81. பீரங்கி மேடு

தஞ்சாவூர் கோட்டையின் கிழக்கு வாசலின் இடதுபுறம் ஒரு மேடான பகுதி உள்ளது. இந்த மேட்டில்
மிகப்பெரிய பீரங்கி உள்ளது. இது, நிலை பீரங்கி வகையைச் சார்ந்தது. குழாய்களுக்குள்
வெடிமருந்தை முழுவதும் இடித்துவைத்து பிறகு, கீழே உள்ள கிணற்றிலிருந்து வெடியின் திரியைக்
கொளுத்தும் அமைப்பு காணப்படுகிறது.

82. அகழி

தஞ்சாவூர் நகரைச் சுற்றி பெரிய அகழியை இன்றும் நாம் பார்க்க முடியும். அகழியின் கிழக்கு,
வடக்கு, தெற்கு பகுதிகள் மண் மேடிட்டு சாலைகள் போடப்பட்டுவிட்டன. சிவகங்கை குளம்,
சாமந்தன் குளம், சேவப்ப நாயக்கர் ஏரி போன்றவை நாயக்க, மராட்டிய கால நீர்நிலை தேக்க
அமைப்பின் அழகைப் பறைசாற்றுகின்றன.

83. ஆங்கிலேயர் வெட்டிய ஆறு

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டபோது, நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு


முயற்சிகளை மேற்கொண்டனர். தடுப்பணைகள் அமைப்பது, நீர்த்தேக்கங்கள் கட்டுவது,
இவற்றுடன் சில ஆறுகளையும் வெட்டினார்கள். அப்படியான ஆறுதான், ஒரத்தநாடு பகுதியில் பாயும்
`கல்யாண ஓடை'. 1935 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்கள் காவிரியின் தெற்கில் இந்த ஓடையை
வெட்டினார்கள்.

84. கரும்பாலை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடியில் இயங்கிவருகிறது, திருஆரூரான்


சர்க்கரை ஆலை. தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் நெல், உளுந்து, இஞ்சி,
மஞ்சள் போன்றவற்றுடன் கரும்பு பயிரிடுகின்றனர். கரும்பு வெட்டப்பட்ட பிறகு, நீணட் தூரம்
எடுத்துச் செல்லப்பட்டால், அதன் சாறு காய்ந்து போய்விடும் என்று, கரும்பு வயல்களுக்கு
அருகிலேயே கரும்பாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட
திருஆரூரான் சர்க்கரை ஆலையின் கிளைகள் பல மாவட்டங்களில் இயங்கிவருகின்றன.

85. மகாத்மா காந்தி

தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காகப் பலமுறை விழிப்புணர்வுப் பயணங்களை மேற்கொண்டார்


மகாத்மா காந்தி. இவர், 1934 ஜனவரி 22 ஆம் தேதி, நாகர்கோயிலிலிருந்து புறப்பட்டு, நெல்லை,
தூத்துக்குடி மதுரை வழியாக தஞ்சாவூர் வந்துள்ளார்.

86. சோழன் மாளிகை

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள ஊர், சோழன் மாளிகை. பழையாறை


தலைநகராக இருந்தபோது, சோழர்களின் குடியிருப்பாக இந்த ஊர் இருந்திருக்கக் கூடும் என்று
கருதுகிறார்கள். பார்த்தாலே தெரியும் 1000 ஆண்டு கால வரலாற்றுச் சுவடுகளை தாங்கி நிற்கும்
அழகு மிக்க ஊர்.

87. கபிஸ்தலம் பட்டு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகாவில் இருக்கிறது, கபிஸ்தலம் கிராமம். காவிரிக் கரையில்


அமைந்திருக்கும் அழகிய கிராமம். இவ்வூர் மக்கள் நெல், கரும்பு மற்றும் காய்கறிகளைப்
பயிரிடுகிறார்கள். இவ்வூர் மக்கள், பட்டு நெசவுத் தொழிலிலும் ஈடுபடுகிறார்கள். கபிஸ்தலத்தில்
நெய்யப்பட்ட பட்டுப் புடவைகளுக்கு உள்ளூர் சந்தையில் எப்போதுமே டிமாண்டுதான். பிரபல
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மூப்பனார் இந்த ஊர்க்காரர்.

88. நான்கு டன் கருடன்

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில், நான்கு டன் கல்லால் ஆன கருடன் விக்ரஹம்


உள்ளது. மார்கழி மற்றும் பங்குனி மாதத்தில் நடைபெறும் கல்கருடன் விழா இங்கு புகழ்பெற்றது.
89. பரதநாட்டியம்

தஞ்சாவூரிலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, மெலட்டூர். இது ஒரு பேரூராட்சி. கலை


வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்த ஊர்களில் மெலட்டூரும் ஒன்று. மாங்குடி துரைராஜ ஐயர் குருவாக
இருந்து உருவாக்கிய பரதநாட்டியத்தின் ஒரு வகை, மெலட்டூர் பரதநாட்டியம் என்று
அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் பாகவத மேளா நாட்டிய நிகழ்ச்சிகளில்,
இந்த மெலட்டூர் பரதநாட்டியமே நிகழ்த்தப்படுகிறது.

90. வல்லம் பிளாஸ்டிக் சாலைகள்

விரிவடைந்துகொண்டே செல்லும் தஞ்சாவூர் நகரம் விழுங்கக் காத்திருக்கும் ஒரு பேரூராட்சி,


வல்லம். வழிபாட்டு முக்கியத்துவமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர். வல்லத்தில் பிரைஸ்ட்,
சாஸ்த்ரா மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உள்ளன. வல்லம் பேரூராட்சி
சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. இங்கு, சுமார் 1075 மீட்டர்
தூரத்துக்கு பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

91. ஏழூர் திருவிழாவும், அய்யம்பேட்டையும்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகாவில் அமைந்திருக்கிறது அய்யம்பேட்டை. இது ஒரு


பேரூராட்சி. தஞ்சாவூர் மாவட்டத்தில் சௌராஷ்டிரா இன மக்கள் அதிகம் வாழும் பகுதி. இந்த
ஊரில் ஒரு சிறப்பான திருவிழா நடைபெறுகிறது. சக்கரவாக்கீஸ்வர சுவாமி கண்ணாடி பல்லக்கில்
ஏழு ஊர்களை வலம் வந்தவுடன், அய்யம்பேட்டை நகரில் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.

92. திருவோணம் கால்பந்து மன்றம்

தஞ்சாவூர் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்று, திருவோணம். ஏற்கனவே சட்டமன்றத்


தொகுதியாக இருந்தது. 2008 ஆம் ஆண்டு, தொகுதி மறுவரையறையின்போது
நீக்கப்பட்டுவிட்டது. திருவோணம் ஒன்றியத்தில் 20 கிராமங்கள் உள்ளன.

93. பந்தநல்லூர் பரதநாட்டியம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே ஆடுதுறைக்கு வடக்கே அமைந்துள்ளது


பந்தநல்லூர். 1000 ஆண்டுகால வரலாற்றினை உடையது இக்கிராமம். தஞ்சை நால்வரின் வழி வந்த
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஒரு பரத நாட்டிய குரு. பரதநாட்டியத்தில் இவர் புகுத்திய புதுமையான
நுட்பங்கள், பந்தநல்லூர் பரதநாட்டியம் என்ற புதியதொரு வடிவத்தை உருவாக்கி தந்திருக்கிறது.
இன்றுவரை பல்வேறு மேடைகளில் பந்தநல்லூர் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டே பரதநாட்டியங்கள்
அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.

94. மகாத்மா காந்தி நினைவு காசநோய் மருத்துவமனை

தஞ்சாவூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில், தஞ்சாவூரிலிருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில்


உள்ளது செங்கிப்பட்டி கிராமம். திருச்சியிலிருந்து 33 கிலோமீட்டர் தூரம். பூதலூர் தாலுக்காவில்
வரும் செங்கிப்பட்டி கிராமத்தில் இருக்கிறது, மகாத்மா காந்தி நினைவு காசநோய் மருத்துவமனை.
சுற்றுவட்டார மக்களுக்கு பெரும் மருத்துவ சேவையாற்றி வருகிறது.

95. விமானப் படைத்தளம்

தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது, விமானப் படைத்தளம்.


2006 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டு, இந்த விமானப்படைத் தளம் அமைக்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டு முதல், முதன்மையான வான்படைத் தளமாக இயங்கிவருகிறது.

96. வேம்புகளின் காடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் ஒன்று, வேப்பத்தூர். கும்பகோணத்திலிருந்து 10


கிலோமீட்டர் தூரத்திலும், திருவிடைமருதூரிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.
தொடக்கத்தில் இந்த ஊர் 'நிம்மாபுரம்' என்று அழைக்கப்பட்டு இருந்தது. வடமொழியில் நிம்மாபுரம்
என்றால், வேப்ப மரங்கள் நிறைந்த ஊர் என்று அர்த்தம். ஆங்கிலத்தில் `நீம்'என்றால் வேப்ப
மரம்தானே! அதனால்தான், நிம்மாபுரம் தூய தமிழில் வேப்பத்தூர் ஆயிற்று.
97. சீர் வரிசையாக வந்த ஊர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் பேரூராட்சிகளில் ஒன்று, பெருமகளூர். பெரிய மகளுக்கான ஊர்


என்று அர்த்தம். மாமன்னர் ராஜராஜ சோழன் தன் மூத்த மகளின் திருமணத்தின்போது,
மருமகனுக்கு சீர்வரிசையாக (வரதட்சணையாக) கொடுத்த ஊர் என்று சொல்லப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு, இந்த ஊரில் 11 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

98. சோளம் விளையும் சோழபுரம்

தஞ்சாவூர் மாவட்டத்தின் பேரூராட்சிகளில் சோழபுரமும் ஒன்று. கும்பகோணம் அருகில் இருக்கிறது.


தஞ்சாவூரிலிருந்து 50 கிலோமீட்டர்கள். இதன் பழைய பெயர், பைரவபுரம். விவசாயம்தான்
முக்கியமான தொழில். நிலக்கடலை, இஞ்சி, மஞ்சள், நெல் மற்றும் கரும்பு பயிரிடுகிறார்கள்.
சோழர்களின் நினைவாக பெயர் சூட்டப்பட்ட நகரம். இந்த ஊரில் மக்காச்சோளம் அதிகம்
விளைகிறது.

99. நேதாஜிபடையில் அத்திவெட்டி...

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் இருக்கிறது, அத்திவெட்டி. சுதந்திரப்


போராட்டத்தின்போது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் வழிநடத்தப்பட்ட இந்திய தேசிய
ராணுவத்தில், அத்திவெட்டியைச் சேர்ந்த பலர் சேர்ந்திருந்தார்கள் என்பது, இந்தக் கிராமத்துக்குப்
புகழ் சேர்க்கும் செய்தி.

100. பூதலூர் புகைவண்டி நிலையம்


மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புகைவண்டி நிலையம் இது. திருச்சிக்கும் தஞ்சாவூருக்கும்
இடையில் இருப்பதால், இவ்வூர் மக்கள் இரண்டு நகரங்களுக்கும் விரைவாகப் பயணம் செய்ய இந்த
ரயில் நிலையம் உதவுகிறது. 140 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ரயில் நிலையம்.

101. ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிறுவனம்

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் இருக்கிறது தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம். தமிழ்நாடு


வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகிறது இந்நிறுவனம். இது, நெல் சாகுபடியில்
மகசூல் அதிகரிக்க செய்வது, பயிர் பாதுகாப்பு போன்ற செயல்பாடுகளில் விவசாயிகளுக்குத்
தேவையான அறிவுரைகளை வழங்கிவருகிறது.

102. சங்ககால பெருமைமிக்க திருக்காட்டுப்பள்ளி

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி, திருக்காட்டுப்பள்ளி. தஞ்சாவூரிலிருந்து 28


கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்குள்ள 'தீயாடியப்பர்' கோயில் பற்றி சங்க கால இலக்கியங்களில்
குறிப்புகள் காணப்படுகின்றன. சோழ மன்னர்கள் பலர் குலதெய்வமாக வழிபட்ட கோயில். பூதலூர்
ரயில் நிலையத்திலிருந்து 6 கிலோமீட்டர் பயணம் செய்தால் திருக்காட்டுப்பள்ளி வந்துவிடும்.

103. நாவலின் களமான நகரம்

'பொன்னியின் செல்வன்' நாவலில், கும்பகோணம் அருகில் உள்ள பழையாறை பற்றி நிறைய


தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ராஜராஜசோழனின் தங்கை குந்தவை, பழையாறையில்
வசித்துவந்ததாக கல்கி குறிப்பிடுகிறார்.

104. ஏற்றுமதி செய்யும் பேராவூரணி

பேராவூரணியில், தென்னை நாரிலிருந்து கயிறு திரிப்பதை முக்கியத் தொழிலாகச்


செய்துவருகிறார்கள். வாழை, இஞ்சி, மஞ்சள், கரும்பு போன்றவற்றையும் பயிரிடுகிறார்கள்.
தேங்காயுடன் சேர்த்து கரும்பு, இஞ்சி, மஞ்சள், நிலக்கடலை போன்றவை வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதியாகின்றன.

105. தேங்காய் உற்பத்தியில் முதலிடம்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர். இங்கு நெல் மட்டுமல்ல, தஞ்சாவூர் மாவட்டத்தின்


கடற்கரைப் பகுதிகள் தேங்காய் விளைச்சலுக்குப் பெயர் பெற்றவை. தேங்காய் உற்பத்தியில்
தமிழகத்திலேயே முதலிடம் வகிப்பது பேராவூரணிதான்.

106. கலை வளர்த்த தஞ்சை

தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவுத்தொழில் வளமாக நடந்ததால், மற்ற நேரங்களில் கலை வளர்வதற்கு


தஞ்சை மக்கள் அதிக நேரம் செலவிட்டனர். அதனால்தான் ஆடல், பாடல், நாடகம், கல்வி, கலை,
கைத்தொழில்கள், நாட்டுப்புற கலைகள் முதலியவை பெருமளவு வளர்ந்து, தமிழகம்
முழுவதற்குமான கலைஞர்களை அளித்துள்ளது.
107. காயும் கனியும்

தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி இந்த இரண்டு ஊர்களைச் சுற்றி உள்ள


கிராமங்களில் இருந்துதான் வாழை இலை, வாழைப்பூ, முருங்கைக்காய், கீரை வகைகள்,
வெற்றிலை முதலியவை மொத்த வியாபாரத்துக்குச் செல்கின்றன. ஆண்டு முழுவதும்
வேளாண்மை நடைபெறும் பகுதிகள் இவை.

108. கடவுள் கண்ட தொழிலாளி

தஞ்சாவூர் மாவட்ட விவசாயத்தின் சாகுபடிப்பரப்பு 2,56,247 ஹெக்டேர். இதில், நெல் சாகுபடி மட்டும்
2,29,079 ஹெக்டேர். நெல் சேமிக்க உதவும் கிடங்குகள் அந்தந்தப் பகுதியில் கட்டப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றத்தால் வருடத்துக்கு மூன்று போகம் (மூன்று தடவை) சாகுபடி செய்வது குறைந்து,
இரண்டு முறை மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.

109. வேளாண்மை ஆய்வு நிறுவனங்கள்

நெல் விதையின் தரம், நேர்த்தி இவற்றை ஆய்வுசெய்யும் நிறுவனங்களை தஞ்சாவூர் மாவட்டத்தில்


ஆடுதுறை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு முதலிய ஊர்களில் அரசு நிறுவியுள்ளது. இதுதவிர,
அம்மாபேட்டையில் நவீன அரிசி ஆலை ஒன்று செயல்பட்டுவருகிறது.

110. `பட்டு'கோட்டை

தாராசுரம், திருபுவனம், அம்மாப்பேட்டை முதலிய இடங்களில் பட்டு நெசவு பெருமளவு


செய்யப்படுகிறது. பட்டு உற்பத்தியில் கும்பகோணம்தான் முக்கிய இடமாக உள்ளது. ஆண்டுக்கு 150
கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 8 லட்சம் பட்டுப்புடவைகள் கும்பகோணத்தில் உற்பத்தி
செய்யப்படுகின்றன. பட்டுப்புடவையில் ஒரு பக்க பார்டர் என்பது, கும்பகோணத்தின் ஸ்பெஷல்.
111. விவசாய வளர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயம் மட்டுமில்லாமல், அது சார்ந்த தொழில்களும் அதிகம்


நடைபெறுகின்றன. நெல் சாகுபடியைத் தவிர, வாழை சுமார் 4700 ஹெக்டேர் பரப்பளவிலும், கரும்பு
9013 ஹெக்டேர் பரப்பளவிலும் பருத்தி 1585 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிர் செய்யப்படுகின்றன.

112. தியாகராஜர் ஆராதனை

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், திருவாரூரில் பிறந்து திருவையாறில்


வாழ்ந்துவந்தார். திருவையாறில் தியாகராஜர் சமாதியை அமைத்தவர், பெங்களூர்
நாகரத்தினம்மாள். ஆண்டுதோறும் திருவையாறு காவிரிக் கரையில், தியாகராஜர் ஆராதனை
விழா நடத்தப்படுகிறது.

113. திருவையாறில் கட்டடக்கலை

திருவையாறு ஆற்றங்கரை மண்டபம், கல்யாண மகால், இசைக் கல்லூரி போன்ற இடங்களில்


மராட்டியர் கால கட்டடக் கலையை ரசிக்கலாம். அதுபோல திருவையாறு கோயிலில் சோழர்,
நுளம்பர், நாயக்கர் ஆகியோரின் கட்டடக் கலைநுட்பங்களையும் நாம் ரசிக்க முடியும்.

114. தமிழ் வளர்த்த சங்கம்

தஞ்சாவூருக்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கரந்தட்டாங்குடி.


சுருக்கமாக, கரந்தை என்று அழைக்கிறார்கள். இங்கு, 1911 ஆம் ஆண்டு, கரந்தைத் தமிழ்ச்
சங்கம் தொடங்கப்பட்டது. தமிழ், தமிழர், தமிழ் இலக்கியம், இசை போன்றவற்றுக்கு இச்சங்கம் பல
வகையில் பணியாற்றியிருக்கிறது. இதன் வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக இருந்தவர்,
வழக்கறிஞர் தமிழவேள் உமாமகேசுவரனார்.

115. தமிழ் வளர்த்த இதழ்

தஞ்சாவூரில் தமிழ் வளர்ப்பதில், `தமிழ்ப் பொழில்' இதழுக்கு பெரும்பங்கு இருக்கிறது. பல


ஆண்டுகளாக `தமிழ்ப் பொழில்' இதழை கரந்தைத் தமிழ்ச்சங்கம் நடத்திவருகிறது.
ந.மு.வேங்கடசாமி நாட்டார், நீ.கந்தசாமிப்பிள்ளை, பேரா.பாலசுந்தரம், வரலாற்று அறிஞர்
சி.கோவிந்தராசனார் உட்பட, பலர் தமிழ்ப் பொழில் இதழில் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.

116. மகாமகம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடக்கும் 'மகாமக திருவிழா' புகழ்பெற்றது. 12


ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் திருவிழா நடைபெறும். இவ்விழாவின்போது, மகாமகக்
குளத்தில் லட்சக் கணக்கனவர்கள் புனித நீராடுவர்.

117. ஸ்பெஷல் கரன்சி

தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பெருமைசேர்க்கும் வகையில், மத்திய அரசு 1954 ஆம் ஆண்டு
ஏப்ரல் முதல் தேதி, சிறப்பு 1000 ரூபாய் நோட்டை வெளியிட்டது. தஞ்சைப் பெரிய கோயிலின்
அழகிய தோற்றம் அதில் அச்சிடப்பட்டிருந்தது. அப்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சர் பெனசுல்
ராமாராவ் அதில் கையெழுத்திட்டார்.

118. தபால்தலையில் தஞ்சாவூர்

தஞ்சைப் பெரிய கோயிலின் 1000 ஆண்டு நிறைவு விழா, தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25
மற்றும் 26 தேதிகளில் நடத்தப்பட்டன. அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா, பெரிய கோயில்
உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால்தலையை முதல்-அமைச்சர் மு.கருணாநிதி முன்னிலையில்
வெளியிட, அப்போதைய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.

119. கும்பகோணம் டிகிரி காபி

காபி என்றாலே கும்பகோணம் டிகிரி காபி நினைவில் வந்து, நாக்கில் நீர் ஊறச்செய்யும். தரமான
காபிக் கொட்டைகளை அரைத்து, தாமிரத்தாலான ஃபில்டட ் ர்களில் வடிகட்டி, டிக்காஷன் தயாரித்து,
சுத்தமான பசும்பால் கலந்து காபி தயாரிக்கப்படுகிறது.

120. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்

1981 செப்டம்பர் 15 ஆம் தேதி உருவாக்கப்பட்டது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம். தமிழ்


மொழிக்கென்றே உருவாக்கப்பட்ட சிறப்புப் பல்கலைக்கழகம் இது. சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில்
அமைந்திருக்கிறது. தமிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வுப் பணிகளைத்
தொடர்ந்து செய்துவருகிறது. சிற்பத்துறை, இசைத்துறை, நாடகத்துறை ஆகியவற்றில் இங்கு
பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

121. எழுத்து வடிவில் கட்டடங்கள்


தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு துறைகளுக்கு எழுப்பப்படும் கட்டிடங்கள் `த மி ழ் நா டு''
என்று எழுத்து வடிவில் உருவாக்கப்பட்டுள்ளன. `த' வடிவத்தில் கலைத் துறை `ழ்' வடிவத்தில்
மொழித் துறை கட்டடங்களும், இதர துறைகளுக்கு மற்ற எழுத்து வடிவ கட்டடங்கள்
கட்டப்பட்டுள்ளன.

122. ஆறுகள்

தஞ்சாவூர் நெற்களஞ்சியமாகத் திகழ்வதற்கு ஆறுகள்தான் காரணமாம். வெண்ணாறு, குடமுருட்டி


ஆறு, பாமினி ஆறு, அரசலாறு, காவிரி, கொள்ளிடம் போன்ற ஆறுகள் மாவட்டத்தில் பாய்ந்து, வளம்
கொழிக்கச்செய்கின்றன.

123. சரஸ்வதி பாடசாலை கும்பகோணம்

கும்பகோணம் நகரின் மத்தியில் இருக்கிறது, சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி.


இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். சுதந்திரப் போராட்ட வீரரும் பிரம்ம
ஞான சபையின் தலைவராகவும் விளங்கிய அன்னிபெசன்ட் அம்மையாரால் நிறுவப்பட்டது
இப்பள்ளி. 2008 ஆம் ஆண்டில், நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது.

124. எத்தனை ஆடுதுறை

ஆடுதுறை என்ற ஊர் பெயர்களை, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகம் பார்க்கலாம்.


ஆடுதுறை, மயிலாடுதுறை, திருவாடுதுறை போன்ற ஊர்கள் இங்கு பிரபலம். அதுபோலவே
இன்னொரு ஆடுதுறையும் இருக்கிறது. அதன் பெயர் குரங்காடுதுறை. பாபநாசத்திலிருந்து 4
கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. மயிலாடுதுறையில் மயில்கள் ஆடுவது போல இங்கு குரங்குகள்
விளையாடும்.

125. பூண்டி மாதா பேராலயம்


தஞ்சாவூரிலிருந்து 35 கிலோமீட்டர் வடமேற்கில், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி என்ற ஊரில்
இருக்கிறது, பூண்டி மாதா தேவாலயம். கொள்ளிடம் ஆற்றுக்கும் காவிரி ஆற்றுக்கும் இடையே
அமைந்துள்ளது. கி.பி.18 ஆம் நூற்றாண்டில், கிறிஸ்தவ தமிழறிஞரான வீரமாமுனிவரால்
கட்டப்பட்டது.

126. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி

தமிழகத்தின் பழைமையான மருத்துவ கல்லூரி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி. தஞ்சாவூர்,


திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு மருத்துவ சேவை
ஆற்றிவருகிறது.

127. அம்மாப்பேட்டை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகாவில் இருக்கும் ஒரு பேரூராட்சி, அம்மாப்பேட்டை.


தஞ்சாவூரிலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. பாபநாசம் சட்டமன்றத் தொகுதி மற்றும்
மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதிகளின் எல்லைக்குள் வருகிறது.

128. மேலும் சில தொழில்கள்

தஞ்சாவூர் விவசாய பூமி என்றாலும், இங்கும் ஊருக்கு ஏற்ப, சில தொழில்கள்


மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. காகித பொம்மை தயாரித்தல், மெட்டி வேலைகள்,
இசைக்கருவிகள் தயாரிப்பது போன்ற சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். சீவல்,
புகையிலை தயாரிக்கும் தொழிற்கூடங்களும் கும்பகோணம் பகுதியில் செயல்படுகின்றன.

129. சாக்பீஸ் கூடங்கள்

கீழத்தஞ்சை மாவட்டப் பகுதிகளில், சாக்பீஸ் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் நிறைய


இயங்கிவருகின்றன. பல இடங்களில் மெழுகுவத்தி, உமி எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள்
இயங்கிவருகின்றன. கும்பகோணமும் சுவாமிமலையும் சிற்ப வேலைகள் செய்யும் தொழிலுக்கு
புகழ்பெற்றவை.

130. பாப்பா நாடு

`பாப்பா நாடு' என்பது, தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்த ஒரு ஜமீன் பகுதி. தஞ்சாவூர் பட்டுக்கோட்டை
சாலையில், பட்டுக்கோட்டையிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. `விஜய தேவர்' என்று
பட்டம் சூட்டிய கள்ளர் குலத்தினரால் ஆளப்பட்டு வந்தது. பாப்பா நாட்டுக்கு கிழக்கே இரண்டு
கிலோமீட்டர் தூரத்தில், வெள்ளுவாடி என்ற ஊரில் இவர்களின் அரண்மனையும் இருந்தது.
1879 ஆம் ஆண்டு, 36 கிராமங்களோடு இருந்த ஜமீன், சுதந்திரத்துக்குப் பிறகு மாவட்ட
நிர்வாகத்துடன் இணைந்துவிட்டது.

131. முன்னேறிச் செல்லும் பின்னையூர்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகாவில் இருக்கிறது, பின்னையூர் கிராமம். 2500 ஹெக்டேர்


விவசாய நிலங்களைக்கொண்டிருக்கும் ஊர். உள்ளூரில், `பின்னையூர் நாடு' என்றுதான்
குறிப்பிடுகிறார்கள். கடினமாக உழைக்கும் மக்களால் விவசாய வருமானத்தைப்
பெருக்கிக்கொண்டு வளர்ந்துகொண்டே இருக்கிறது பின்னையூர். நிர்வாக வசதிக்காக, கீழப்
பின்னையூர் மற்றும் மேலப் பின்னையூர் என்று பிரித்திருக்கிறார்கள்.

132. திருப்புள்ளமங்கை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகாவில் இருக்கும் திருப்புள்ளமங்கை‌, மிகவும் பழமையான


ஊர். 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றினை உடையது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட
பிரம்மபுரீஸ்வரர் கோயில், இந்த ஊருக்கு பழைமையும் பெருமையும் சேர்க்கிறது.

133. ஒற்றுமைக்கு ஒரு கிராமம் வடசேரி

தஞ்சாவூரிலிருந்து தென்கிழக்கே 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமம், வடசேரி. இந்துக்களும்


முஸ்லிம்களும் இணைந்து வாழும் கிராமம். கடுமையான உழைப்பாளிகள் நிறைந்த விவசாய பூமி.
சமீபகாலமாக வேலை மற்றும் தொழில் நிமித்தமாக மக்கள் வெளியூர்களுக்கும்
வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்து வருகிறார்கள்.

134. ஒரு ஊர் மூன்று மாவட்டங்கள்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் உள்ள ஊர், மானம்பாடி. கும்பகோணத்திலிருந்து 12


கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. விவசாய கிராமம். வானம் பார்த்த பூமி மானம்பாடி. இந்த ஊருக்கு
ஒரு ஸ்பெஷல். என்னவென்றால், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் மானம்பாடி, திருவாரூர் மற்றும்
அரியலூர் மாவட்டங்களின் எல்லையைத் தொட்டு நிற்கிறது.

135. விளக்கேற்றும் ஊர்

கும்பகோணம் அருகில் இருக்கிறது, நாச்சியார்கோயில். இங்கு உருவாக்கப்படும் குத்துவிளக்குகள்,


உலகளவில் புகழ்பெற்றவை. நாச்சியார்கோயிலில் பெரும்பாலானோர் குத்துவிளக்கு மற்றும் பித்தளை
பாத்திரம் தயாரிப்பு சார்ந்த தொழில்களில் ஈடுபடுகின்றனர். நாச்சியார்கோவில் குத்துவிளக்கு,
புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது.

136. தேவனாஞ்சேரி

கும்பகோணத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, தேவனாஞ்சேரி. விவசாயம்தான்


முக்கியத் தொழில். நெல், நிலக்கடலை, கரும்பு, சோளம் முதலியவை பயிரிடப்படுகிறது.
கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிக்குத் தேவையான சுண்ணாம்பு இங்கு இருக்கும் காளவாய்கள்
மூலம் தயாரித்து அனுப்பப்படுகின்றன.
திருவையாறு

137. அதம்பை (எல்லையூர்)

பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஊர். திருவோணம் வட்டாரத்தில் இருக்கிறது. நெல், தென்னை,


கரும்பு, எள், நிலக்கடலை போன்றவை பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் அரிதாகக் காணப்படும்
சோமநாதர் கோயில் அதம்பையில் இருக்கிறது. தஞ்சாவூருக்கும் புதுக்கோட்டைக்கும் எல்லையாக
அமைந்திருக்கிறது அதம்பை.

138. நாஞ்சிக்கோட்டை

தஞ்சாவூரில் இருக்கும் ஒரு பேரூராட்சி. விரிவடைந்துகொண்டே இருக்கும் நகர எல்லையால்,


விரைவில் தஞ்சை நகரின் ஒரு பகுதியாக மாறிவிடும் வாய்ப்பு நாஞ்சிக்கோட்டை உள்ளது.

139. கல்வியில் சிறந்த கண்டியூர்

திருவையாறு வட்டாரத்தில் இருக்கும் ஒரு கிராமம்தான் கண்டியூர். திருவையாறிலிருந்து 4


கிலோமீட்டர்கள். கண்டீஸ்வரர் சிவன் கோயில் இருப்பதால், இந்த ஊருக்கு கண்டியூர் என்று பெயர்.
திருக்கண்டியூர் என்றும் வழங்குகிறார்கள். இவ்வூரின் கல்வியறிவு 88 சதவிகிதம்.

140. உடையாளூர்

மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதி இங்கு இருப்பதாகச் சொல்லப்பட்ட தகவலை அடுத்து,


ஆய்வுநடத்த உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். கும்பகோணத்துக்கு அருகே `கீழப்பழையாறை' என்ற
பழங்கால சோழர் நகரில் இருக்கிறது, உடையாளூர்.
141. பழைமை போற்றும் பழையாறை

1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் குலம் தழைக்க அடித்தளமிட்ட ஊர், பழையாறை. இது,
சோழர்களின் தலைநகரங்களில் ஒன்றாகும். கும்பகோணத்துகு அருகில் இருக்கிறது.

142. மாவடி குறிச்சி

`தேனாறும் பாலாறுமா ஓடுகிறது உங்கள் ஊரில்?' என்று கேட்பார்கள். தேனாறு இல்லாவிட்டாலும்,


பாலாறு ஓடுகின்ற ஊர், மாவடி குறிச்சி. மாவடி குறிச்சியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர்
பால் கறக்கப்பட்டு விற்பனையாகிறது. வீட்டுக்கு ஒரு எருமையாவது வளர்க்கிறார்கள்.

143. நம்பும் வயல் நம்பிவயல்

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் இருக்கும் அழகிய ஊர், நம்பிவயல். பட்டுக்கோட்டையிலிருந்து 13


கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‌இயற்கை அழகு மிக்க ஊர். கடற்கரையை ஒட்டி இருப்பதால், குளிர்
காற்று இதமாக வீசிக்கொண்டே இருக்கும். விவசாயமே இங்கு பிரதானம்.

144. பெரியகோட்டை

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள ஊர், பெரியகோட்டை. தஞ்சாவூரிலிருந்து 53


கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தென்னந்தோப்புகள் நிறைந்த ஊர். இதுவும் கடற்கரையை ஒட்டி
உள்ள ஊர்தான். மயில்கள் தோகை விரித்து ஆடும் காட்சியைப் பார்க்கலாம். அதனால், தஞ்சாவூர்
மாவட்டத்தில் `மயில் ஆடும் துறை' எனப் பெரியகோட்டையைச் சொல்கிறார்கள்.
கணித மேதை ராமானுஜம்

146. மதுக்கூர்

பட்டுக்கோட்டையிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்திலும் அதிராம்பட்டினத்தில் இருந்து 15


கிலோமீட்டர் தூரத்திலும் இருக்கிறது. காவிரி டெல்டா பகுதி என்பதால், நெல் அளக்கும் ஊர்களில்
மதுக்கூரும் ஒன்று.

147. காற்று வாங்க ஆண்டிக்காடு வாங்க!

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உள்ள ஊர், ஆண்டிக்காடு.


சேதுபாவாசத்திரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும், தஞ்சாவூரிலிருந்து 69 கிலோமீட்டர்
தூரத்திலும் உள்ள ஊர். வங்காளவிரிகுடா கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் ஊர்
என்பதால், இதமான குளிர் காற்று எப்போதும் வீசும்.

148. குருவிக்கரம்பை

தமிழ்நாட்டுக்குப் பல சான்றோர்களைத் தந்த ஊர், குருவிக்கரம்பை. சேதுபாவாசத்திரம்


வட்டாரத்தில் இருக்கிறது. சேதுபாவாசத்திரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர். குருவிக்கரம்பை
சண்முகம், குருவிக்கரம்பை வேலு போன்ற கவிஞர்கள் இலக்கியவாதிகளைத் தமிழ் நிலத்துக்குத்
தந்த ஊர்.

149. ஆவணம்

இது ஏதோ தஞ்சாவூர் மாவட்டத்தை பற்றிய டாக்குமெண்ட் என்று நினைக்காதீர்கள். ஆவணம்


என்பது, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரத்தில் இருக்கும் ஊரின் பெயர்.
பேராவூரணியிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஆண்டு முழுவதும் விவசாயம்
நடப்பதால், `ஆவணம்' உழைப்பின் அழகில் மிளிர்கிறது.

150. பாபநாசம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா பாபநாசம். 1910 ஆம் ஆண்டிலிருந்து தனி
தாலுகாவாக செயல்படுகிறது. உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தது பாபநாசத்துக்கு அருகில் உள்ள
உத்தமதானபுரத்தில். பாபநாசம் கோயிலில் உள்ள 108 லிங்கங்கள் பாபநாசத்தில் குறிப்பிடத்தக்க
ஒன்று. பாபநாசத்தில் இருந்து தஞ்சாவூர் சந்தைக்கு தினமும் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

151. ஒரத்தநாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1954 ஆம் ஆண்டு முதல், தனி தாலுகாவாக இயங்கிவருகிறது


ஒரத்தநாடு. நெல், கரும்பு, வேர்க்கடலை போன்றவை சாகுபடி செய்யப்பட்டுவருகின்றன. 99
கிராமங்களை உள்ளடக்கியது ஒரத்தநாடு. சரபோஜி மன்னர் கால கட்டடக் கலைக்கு
எடுத்துக்காட்டான சில கட்டடங்கள் ஒரத்தநாடு பகுதியில் உள்ளன.

152. கடற்கரைப் பட்டினங்கள்


தஞ்சாவூர் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதி அதிராம்பட்டினம். அதிராம்பட்டினம் மற்றும் அருகில்
உள்ள சாளுவநாயக்கன்பட்டினம், சேதுபாவாசத்திரம் போன்ற ஊர்களில் மீன்பிடித்தல் முக்கியத்
தொழிலாகும். இங்கு பிடிக்கப்படும் மீன்களுக்கு உள்ளூர் மார்க்கெட்டில் அதிக வரவேற்பு
இருக்கிறது. அதுபோலவே கருவாட்டுக்குப் பெயர்பெற்ற ஊர், அதிராம்பட்டினம்.

153. காசநோய் மருத்துவமனை

தஞ்சாவூரிலிருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது, செங்கிப்பட்டி


இவ்வூரில் உள்ள காசநோய் மருத்துவமனை, நோயாளிகளுக்குச் சிறந்த மருத்துவ சேவையை
வழங்கிவருகிறது.
உ.வே.சாமிநாத ஐயர்

154. திருப்பனந்தாள்

கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஊர், திருப்பனந்தாள். இங்குள்ள சைவமடம் தமிழ்ப் பணியாற்றி


வருகிறது. திருப்பனந்தாள் மடத்துக்க்ச் சொந்தமான செந்தமிழ் கல்லூரி, பல ஆண்டு காலமாக
இயங்கிவருகிறது. இங்கு தமிழ் படிக்கும் மாணவர்களின் அனைத்து செலவுகளையும் மடமே
ஏற்றுக்கொள்கிறது.

155. திருவாடுதுறை

கும்பகோணம் அருகில் உள்ள ஊர், திருவாடுதுறை. திருவாடுதுறை மடம் 15 ஆம் நூற்றாண்டில்


தோன்றியது. சைவத்தையும் தமிழையும் இரண்டு கண்களாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது.
இங்குதான் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தமிழ் கற்பித்துவந்தார். இவருடைய மாணவர்
தான் உ.வே. சாமிநாத அய்யர். திருவாடுதுறை மடத்தின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள்
வெளியிடப்பட்டுள்ளன.

156. பட்டுக்கோட்டை

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொழில் பகுதிகளில் ஒன்று, பட்டுக்கோட்டை. தென்னை மரங்கள்


நிறைந்து காணப்படும் பகுதி. அதனால், இங்கு கயிறு திரிக்கும் தொழிலும் தேங்காய் எண்ணெய்
எடுக்கும் தொழிலும் நடைபெறுகின்றன.

157. பேராவூரணி

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வட்டத்தில் 85 பெரிய கிராமங்கள் உள்ளன. இந்த


ஊர்களுக்கு பேராவூரணி மையமாக இருப்பதால், வணிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக
பேராவூரணி இருக்கிறது. பட்டுக்கோட்டை போலவே பேராவூரணியில் தென்னந்தோப்புகள் அதிகம்.
எனவே, தென்னை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். மீன் வலைகளும் இங்கு
தயாரிக்கப்படுகின்றன.

158. தாராசுரம்

தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், கும்பகோணத்திலிருந்து 5 கிலோமீட்டர்


தூரத்தில் அமைந்திருக்கிறது, தாராசுரம். கும்பகோணத்தின் நுழைவாயில் என்று குறிப்பிடுவர்.
கற்களை சிற்பமாக்கிய பின், வழவழப்பாக மெருகேற்றும் பாணி இருப்பதை தாராசுரத்தில் பார்க்க
முடியும். இதனால், தாராசுரத்தை `சிற்பங்களின் கலைக்கூடம்' என்று அழைக்கின்றனர்.

159. கும்பகோணம்

மிகவும் பழைய நகரம். கும்பகோணத்தை, குடமூக்கு என்றும் குடந்தை கீழ்க்கோட்டம் என்றும்


தேவாரம் குறிப்பிடுகிறது. கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயிலில், பரதநாட்டியத்தை
உணர்த்தும் 108 கரணச் சிற்பங்களைப் பார்க்கலாம்.

160. பட்டீஸ்வரம்
தாராசுரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பட்டீஸ்வரம், சோழர்களின் கருவூலம். இந்த
`பழையாறை' என்ற ஊர் பட்டீஸ்வரத்தில் தான் இருக்கிறது. இங்குள்ள கோயிலில் சோழர் காலத்தில்
பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்க்கை ரொம்பவே புகழ்பெற்றது. நாயக்கர் கால ஓவியங்களையும்
இங்குள்ள கோயில்களில் பார்க்கலாம்.

161. திருபுவனம்

தஞ்சாவூரிலிருந்து 44 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, திருபுவனம். கும்பகோணத்திலிருந்து 10


கிலோமீட்டர் தூரம். திருபுவனம் பட்டு உலகப் புகழ்பெற்றது. திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர்
தெரு அழகு என்பார்கள். அதுபோல திருபுவனம் வீதி அழகை வியந்து ரசிக்கலாம்.

162. திருவலஞ்சுழி

தஞ்சாவூரிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, சுவாமிமலை. இங்கு, முருகன் கோயில்


இருப்பது தெரியும். இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, திருவலஞ்சுழி.
திருவலஞ்சுழியில் உள்ள விநாயகர் கோயிலில் 17 ஆம் நூற்றாண்டின் ஓவியங்களைக் கண்டு
ரசிக்கலாம்.

163. திருவையாறு

தஞ்சாவூரிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் காவிரி சூழ அமைந்திருக்கிறது. காவிரி 5


ஆறுகளாகப் பிரிந்து செல்லும் இடம் என்பதால், 'ஐயாறு' என்று அழைக்கப்பட்டு `திரு' என்ற
அடைமொழியுடன் திருவையாறு என்று அழைக்கப்படுகிறது.

164. சுந்தர பெருமாள் கோவில்

இது ஓர் ஊரின் பெயர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் செல்லும் வழியில் இருக்கிறது.
கும்பகோணத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஊரில், சௌந்தரராஜப் பெருமாள்
கோயில் உள்ளது. முதலில் சௌந்தரராஜப் பெருமாள் கோயில் என்று அழைக்கப்பட்டு, மருவி
சுந்தரபெருமாள் கோவில் ஆயிற்று.

165. சுவாமிமலை

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில்,


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வடகிழக்கில் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
காவிரிக்கரையில் அமைந்துள்ள கோயில். நான்காவது படைவீடு. இங்குள்ள முருகனுக்கு
`தகப்பன்சாமி' என்ற பெயரும் உண்டு. சுவாமிமலைக்கு `குருமலை' என்ற பெயரும்
வழங்கப்படுகிறது.

166. கதிராமங்கலம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கிராமம், கதிராமங்கலம். திருவாரூர் மற்றும்


நாகப்பட்டினம் மாவட்டங்களில் எல்லையைத் தொட்டு நிற்கும் கிராமம். விவசாயம்தான் முக்கியத்
தொழில். இந்த ஊரில் உள்ள வனதுர்க்கை கோயில் புகழ்பெற்றது.

167. தென்னம நாடு


`தென்னம நாடு' என்பது ஒரத்தநாடு தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கிராம ஊராட்சி. ஆனாலும்,
அழகிய வரலாறு ஒன்று இதற்கு இருக்கிறது. கி.பி. 883 ஆம் ஆண்டில், பாண்டிய மன்னன் பாண்டி
உண்டான், இங்கு ஒரு சிவன் கோவிலை கட்டினான். பிறகு, பாண்டியர்களின் பெயரான `தென்னவன்
நாடு' என்று அழைக்கப்பட்டு, இப்போது தென்னமநாடு என்று அழைக்கப்படுகிறது.

168. உணவுப்பொருள் பதப்படுத்தும் நிறுவனம்

Indian Institute of Food Processing Technology (IIFPT), இந்தியாவின் பழமையான முன்னோடி


ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று. முன்னதாக, `விதை நேர்த்தி ஆராய்ச்சி நிறுவனம்' என்று
அழைக்கப்பட்டது. புதுக்கோட்டை சாலையில், 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது.
அவ்வப்போது தரம் உயர்த்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் இந்நிறுவனம், விளைச்சல் மற்றும்
மகசூல் அதிகரிப்பு போன்றவற்றுக்கான தொடர் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறது.

169. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்

`தமிழ்த் தாத்தா' என்று அழைக்கப்படும் உ.வே. சாமிநாதய்யர், பாபநாசம் அருகே உள்ள


உத்தமதானபுரம் என்ற ஊரில் பிறந்தவர். அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கிய
நூல்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். 90-க்கும் மேற்பட்ட நூல்களை அச்சிட்டதுடன்,
மூவாயிரத்துக்கும் அதிகமான சுவடிகளையும் சேகரித்திருந்தார்.

170. கணித மேதை ராமானுஜம்

கணித மேதை ராமானுஜம், 1887 டிசம்பர் 22 ஆம் நாள் பிறந்தார். கும்பகோணம் சாரங்கபாணி
தெருவில்தான் ராமானுஜத்தின் பெற்றோர் வாழ்ந்தனர். ஈரோடு, காஞ்சிபுரம் என்று
இடம்பெயர்ந்துகொண்டே இருந்தனர். பிறகு, 1897-ல் கும்பகோணம் வந்தனர். `கும்பகோணம்
கல்யாணம் தொடக்கப் பள்ளி'யிலும் நகர மேல்நிலைப் பள்ளியிலும் படித்து, கும்பகோணத்தில்
பெருமைக்குரிய மாணவராக விளங்கியவர் ராமானுஜம்.

171. ஆப்ரஹாம் பண்டிதர்

ராவ் சாகிப் ஆப்ரஹாம் பண்டிதர், புகழ்பெற்ற தமிழ் இசைக் கலைஞர். சித்த மருத்துவர் மற்றும்
தமிழ் இசைக் கலைஞர். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு பெரும் பங்காற்றியவர். பழைய தமிழ்
இலக்கிய நூல்களை ஆய்வுசெய்து `கருணாமிர்த சாகரத் திரட்டு' என்ற நூலை எழுதினார். இது,
இசை வரலாறு மற்றும் தமிழ் மருத்துவம் பற்றிய கலைக்களஞ்சியம். பிறந்தது திருநெல்வேலி
என்றாலும், ஆசிரியராக பணியாற்றியது தஞ்சாவூரில்தான்.

172. ஆர்.வெங்கட்ராமன்

இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர். ஏழாவது குடியரசுத் துணைத்


தலைவர். இந்திரா காந்தி அமைச்சரவையில் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சராகப் பதவி
வகித்தவர். இவர் ஜனாதிபதியாக இருந்த (1987-92) காலகட்டங்களில் ராஜீவ்காந்தி, வி.பி.சிங்,
சந்திரசேகர், பி.வி.நரசிம்மராவ் ஆகிய 4 பேர் பிரதமர்களாக பதவி வகித்தனர். இவர் பிறந்தது,
பட்டுக்கோட்டை அருகில் உள்ள ராஜாமடம்.

173. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


`மக்கள் கவிஞர்' என்று பாராட்டப் பெற்றவர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பட்டுக்கோட்டை
அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு என்ற ஊரில் 1930 ஏப்ரல் 13-ஆம் தேதி பிறந்தவர். சமூக
சிந்தனையோடு மக்கள் பிரச்னைகளை மையப்படுத்தி பாடல்கள் எழுதியதால், மிகப்பெரிய
புகழ்பெற்றார். இவருடைய இலக்கிய படைப்புகள் 1993 ஆம் ஆண்டு நாட்டுடமை ஆக்கப்பட்டன.

174. அத்திவெட்டி காந்தி

சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் அத்திவெட்டியை சேர்ந்த பலரும்


பணியாற்றினார்கள். அதில், தீவிரமாகப் பணியாற்றியவர், பெரியதம்பி மாயத்தேவர். சுதந்திரப்
போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு, அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
`அத்திவெட்டி காந்தி' என்று அழைக்கப்பட்டார்.

175. எம்.வி.வெங்கட்ராம்

கும்பகோணத்தில் 1920 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி பிறந்தவர் எம்.வி.வெங்கட்ராம். பட்டுப்
புடவை நெய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். சௌராஷ்டிர குடும்பத்தை சேர்ந்த இவர்
பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். நவீன தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராக
கருதப்படுபவர். "காதுகள்" என்ற நாவலுக்காக 1993 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது
பெற்றவர். நூற்றுக்கணக்கான சிறுகதை சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.

176. பாபநாசம் சிவன்

கர்நாடக இசை அறிஞர், அமைப்பாளர் மற்றும் பாடகர். 1990 ஆம் ஆண்டு, சென்னை மியூசிக்
அகாடமியில் சங்கீத கலாநிதி விருது பெற்றவர். முழுப் பெயர் பாபநாசம் ராமையா சிவன். தஞ்சாவூர்
மாவட்டம் போலகம் என்ற கிராமத்தில் பிறந்தவர். பாபநாசம் கோயிலுக்கு அடிக்கடி சென்று இறை
சக்தியைப் பெற்றதால், பாபநாசம் சிவன் என்று அழைக்கப்பட்டார்.

177. நம்மாழ்வார்

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்தவர்,


கோ.நம்மாழ்வார். தமிழ்நாட்டின் முதன்மையான இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர். இயற்கை விவசாயத்தால்
ஏற்படும் நன்மைகள் குறித்து தமிழகம் முழுவதும் களப்பணி மேற்கொண்டு, விவசாயிகளிடையே
இயற்கை விவசாயத்தின் மீது நம்பிக்கையை விதைத்தார்.

178. எம்.எஸ்.சுவாமிநாதன்

`இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை' எனப்படும் எஸ்.எஸ்.சுவாமிநாதன், 1925 ஆகஸ்ட் 7 ஆம்


தேதி, கும்பகோணத்தில் பிறந்தவர். கும்பகோணத்தில் பள்ளிப் படிப்பு, தமிழ்நாடு வேளாண்
பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்து, டெல்லியில் முதுநிலை படித்தார். கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். தேடிவந்த வெளிநாட்டு வேலையையும்,
ஐ.பி.எஸ் வேலையையும் உதறிவிட்டு, வேளாண் துறையில் சேர்ந்தார். அப்போது, நாட்டில் கடுமையான
பஞ்சம் ஏற்பட்டது. வெளிநாட்டிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதைவிட, குறுகிய
கால உணவுப் பயிர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என்று செயல்படுத்தினார்.
வேளாண்மை துறைச் செயலாளர், நடுவண் திட்டக் குழுவின் உறுப்பினர் மற்றும் துணைத் தலைவர்
பதவிகளையும் வகித்துள்ளார்.
179. கரிச்சான் குஞ்சு

கரிச்சான் குஞ்சு என்பவர், பிரபலமான எழுத்தாளர். 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளின்
தொடக்கத்தில், சமூகம் சார்ந்த சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியவர். சமூக நாவல்கள்
மட்டுமில்லாமல், வரலாற்று சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் எழுதிவந்தவர். இவரின்
உண்மையான பெயர், ஆர்.நாராயணசாமி.

180. தஞ்சை பிரகாஷ்

தஞ்சை பிரகாஷ் நவீன தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர். தமிழில் நவீனத்துவமான


படைப்புகளைப் புதிய மொழி நடையில் எழுதி கவர்ந்தவர். இவருடைய `கரமுண்டார் வூடு' நாவல்
மிகப் பிரபலமானது.

181. சாக்கோட்டை கிருஷ்ணசாமி ஐயங்கார்

கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டையில் பிறந்தவர், கிருஷ்ணசாமி அய்யங்கார். சிறந்த


திராவிடச் சிந்தனையாளர், கல்வியாளர் மற்றும் வரலாற்றாசிரியர். சென்னை பல்கலைக்கழகத்தில்
வரலாறு மற்றும் தொல்பொருள் துறையின் தலைவராகப் (1914-1929) பணியாற்றியவர்.

182. கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை

கும்பகோணத்தைச் சேர்ந்த சிறந்த வயலின் இசைக் கலைஞர், ராஜமாணிக்கம் பிள்ளை (1898 -


1970). தன்னுடைய வாழ்நாள் முழுவதும், தமிழகத்தின் சிறந்த இசைக் கலைஞராகத் திகழ்ந்து,
பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர்.

183. தஞ்சை நால்வர்

தமிழகத்தில் கலைகளுக்காக செயல்படுபவர்கள், இரண்டு பேர்களாக, மூன்று அல்லது நான்கு


பேர்களாக இணைந்து, செயல்படுவதைப் பார்க்கிறோம். இரட்டைப் புலவர்கள், இரட்டை இசை
அமைப்பாளர்கள் இயங்கிவருகிறார்கள். அப்படி நான்கு பேரை `தஞ்சை நால்வர்' என்று
முக்கியமாகக் குறிப்பிடுகிறார்கள். சின்னையா, பொன்னையா, சிவானந்தம் மற்றும் வடிவேலு
ஆகியோர்தான் அந்த நான்கு பேர். 19 ஆம் நூற்றாண்டில், தமிழ்நாட்டில் பரதநாட்டியம் மற்றும் இசை
வளர்ச்சிக்காக இணைந்து பங்காற்றியவர்கள் இவர்கள்.

184.ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

`வாழும் கலை' அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர். 1956 மே 13 ஆம் தேதி, பாபநாசத்தில்
பிறந்தவர். காந்தியின் நெருங்கிய நண்பரான சுதாகர் சதுவேதியைத் தனது குருவாகக்கொண்டு,
யோகாவை கற்றுக்கொண்டவர். இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி நகரங்களிலும் `வாழும் கலை'
அமைப்பை நிறுவியிருக்கிறார். மத்திய அரசின் பத்மவிபூஷன் விருதுபெற்றிருக்கிறார்.
185. குருவிக்கரம்பை சண்முகம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகாவில் இருக்கிறது குருவிக்கரம்பை.


சேதுபாவாசத்திரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம்தான். இங்கு பிறந்தவர், பிரபல
திரைப்பட பாடலாசிரியர், குருவிக்கரம்பை சண்முகம். சென்னை பச்சையப்பன் கல்லூரியில்
தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். கவிதைக்காகப் பல்வேறு விருதுகளையும் பெற்றவர்.

186. ஜி.ஏ.நடேசன்

தஞ்சாவூர் மாவட்டம், கணபதி அக்ரஹாரத்தில் 1873 ஆம் ஆண்டு பிறந்தவர், ஜி.ஏ. நடேசன்.
கணபதி அக்ரஹாரம் நடேசன் என்றால்தான், பலருக்கும் தெரியும். பத்திரிக்கை மற்றும் எழுத்து
மூலம் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடியவர். ஆரம்பத்தில், தன்னை இந்திய தேசிய காங்கிரசில்
இணைத்துக்கொண்டு போராடியவர். 1922 ஆம் ஆண்டு, லிபரல் கட்சியில் இணைந்தார்.
முன்னதாக, 1915-ல் காந்தி சென்னை வந்தபோது, நடேசன் வீட்டில்தான் தங்கியிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.

187. ந.மு.வேங்கடசாமி நாட்டார்

நடுக்காவேரி முத்துசாமி வேங்கடசாமி நாட்டார் என்பதன் சுருக்கமே ந.மு.வேங்கடசாமி நாட்டார்.


தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகாவில் உள்ள நடுக்காவேரி என்ற ஊரில் பிறந்தவர். சிறந்த
தமிழ் அறிஞராகவும் சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். `சோழர் சரித்திரம்', `கள்ளர்
சரித்திரம்', `கபிலர்' உள்ளிட்ட பல்வேறு நூல்களைப் படைத்தவர். 188. குருவிக்கரம்பை வேலு
குருவிக்கரம்பை, பல இலக்கியவாதிகளையும் தலைவர்களையும் தமிழ் உலகத்துக்குத் தந்த ஊர்.
அந்த வரிசையில் ஒருவர்தான், குருவிக்கரம்பை வேலு. பகுத்தறிவு சிந்தனைவாதியாக,
மக்களிடையே நிலவிவந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை எழுதியும் பேசியும்
வந்தவர்.

189. இயக்குநர் ஷங்கர்

தமிழ்த் திரைப்படங்களில் பிரமாண்டத்தை அறிமுகப்படுத்தியவர். அதிரடியான சமூகப் புரட்சி


கருத்துக்களை மையமாகக்கொண்ட திரைப்படங்களை இயக்கிவருபவர். எஸ் பிக்சர்ஸ் என்ற
திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார்‌. 1993 ஆம் ஆண்டு வெளிவந்த இவரின்
`ஜென்டில்மேன்' திரைப்படம் பிலிம்பேர் விருது பெற்றது. இவர் பிறந்தது, கும்பகோணத்தில்.

190. நடிகர் ராஜேஷ்

20 வருடங்களுக்கு முன்பு, தமிழ் சினிமாவில் பரபரப்பாக வலம்வந்தவர், நடிகர் ராஜேஷ்.


`கன்னிப்பருவத்திலே' என்ற படத்தில், ஹீரோவாக நடித்தார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் இவர்
நடித்த `அச்சமில்லை அச்சமில்லை' படம், இவருக்கு புகழைப் பெற்றுத்தந்தது. தஞ்சாவூர்
மாவட்டத்தின் அணைக்காடு, இவரது பூர்விகம்.

191. நடிகர் விஜயகுமார்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ள நாட்டுச்சாலையில் பிறந்தவர், நடிகர்


விஜயகுமார். உண்மையான பெயர், பஞ்சாட்சரம். திரைப்படத்துக்காக பெயர் மாற்றிக்கொண்டார்.
1974 ஆம் ஆண்டு வெளிவந்த கே,பாலச்சந்தரின் `அவள் ஒரு தொடர்கதை' படம் இவருக்குத்
திருப்புமுனையைத் தந்தது.

192. ஹேமாமாலினி

பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்த ஹேமாமாலினி, தஞ்சாவூர் தமிழ் பெண். இவர் பிறந்தது,
ஒரத்தநாடு அருகே உள்ள அம்மன்குடி என்ற கிராமம். `இது சத்தியம்' என்ற தமிழ்ப் படத்தில்
அறிமுகமாகி, இந்திப்பட உலகில் கொடி நாட்டியவர். 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு
வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். 2014 மற்றும் 2019-ல் நடந்த தேர்தல்களில், மதுரா
நாடாளுமன்ற தொகுதியிலிருந்து தேர்நதெ ் டுக்கப்பட்டார்.

193. டி.ஆர்.ராஜகுமாரி

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் வெற்றிகரமாக வலம்வந்தவர், டி.ஆர்.ராஜகுமாரி.


கர்நாடக இசைக் கலைஞர், நடன கலைஞர், நடிகை எனப் பன்முகம் காட்டியவர். 1922 ஆம் ஆண்டு
தஞ்சாவூரில் பிறந்தவர். அவருடைய சகோதரரும் சினிமா துறையைச் சேர்ந்தவர்தான்.
டி.ஆர்.ராமண்ணா என்கிற திரைப்பட இயக்குநர்.

194. கோ.சி.மணி

கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவையில் கூட்டுறவு, விவசாயம் மற்றும்


உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றியவர். கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து,
தமிழக சட்டமன்றத்துக்கு நான்கு முறை தேர்நதெ
் டுக்கப்பட்டவர். தமிழகத்தில் சட்ட மேலவை
உறுப்பினராகவும் பணியாற்றிவர். கும்பகோணம் நகர மேம்பாட்டில் பெரும் பங்காற்றியவர்.

195. கிருஷ்ணசாமி துளசி அய்யா வாண்டையார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் பூண்டி எஸ்டேட்டின் சேர்மன். 1991 முதல் 1996 வரை தஞ்சாவூர்
நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக பணியாற்றினார். பூண்டியில் செயல்படும் ஏ.வி.வி.எம்.
புஷ்பம் கல்லூரியின் தலைவராகவும் இருக்கிறார்.

196. மராத்திய மன்னர் கட்டிய மாரியம்மன் கோயில்

தஞ்சாவூரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, புன்னைநல்லூர். இங்குள்ள மாரியம்மன்


கோயில் மிகவும் புகழ்பெற்றது. மராட்டிய மன்னர் சத்ரபதி வெங்கோஜியின் முயற்சியால் கட்டப்பட்ட
கோயில் இது. புன்னைமர காடுகளின் நடுவே புற்றாக இருந்த இடத்தில் மாரியம்மன்
வீற்றிருக்கிறாள்.

197. இரண்டு முகம் காட்டும் அம்மன்

தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்திலிருக்கும் அகோரி அம்மன் கோயில், 1000 முதல் 2000 ஆண்டுகள்
பழைமையானது. இரண்டு முகங்களுடன் தாமரை வடிவ பீடத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள். ஒரு
முகம் கோரமாகத் தீயவர்களுக்கு உள்ள முகம். இன்னொரு முகம், அன்பு தவழ நல்லவர்களுக்காக
உள்ள முகம். இந்தக் கோயிலில் வெற்றிக்காகப் பலரும் மஹா சண்டி ஹோமம் நடத்துகிறார்கள்.
ராஜராஜன் மணிமண்டபம்

198. வல்லர் நான்கு பள்ளி வாசல்கள்


தஞ்சாவூரில் அருகிலுள்ள வல்லத்தில், நான்கு பள்ளிவாசல்கள் இருக்கின்றன. ஈத்கா பள்ளிவாசல்,
வல்லத்தில் உள்ள மலையின் மீதுள்ளது. இதன் அருகிலேயே ஜூமா மஸ்ஜித் மற்றும் ஈதுல் அல்ஹா
பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இன்னொரு பள்ளிவாசல், அண்ணா சிலைக்கு அருகில் உள்ளது.
இவை அனைத்தும் 100 ஆண்டுகள் பழமையானவை.

199 தூய இருதய கிறிஸ்துவ தேவாலயம்

பாரம்பர்யமான ஒரு தேவாலயம். தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே இருக்கிறது. இந்த தேவாலய
வளாகத்திலேயே, `மாதா ஸ்கூல்' என்று ஒரு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி 100
ஆண்டுகளாகக் கிராமப் பகுதி மாணவர்களுக்குக் கல்வி பணியாற்றி வருகிறது.

200. கல்லணையின் அண்ணன்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்காவில் இருக்கிறது கச்சமங்கலம். இங்கு கல்லணை


கட்டுவதற்கு முன்பு, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு, சோழ மன்னன் அழிசியின் மகன்
சேந்தனால் கட்டப்பட்ட அணை இருக்கிறது. இதற்கு கச்சமங்கலம் அணை என்று பெயர். நீண்ட
வருடங்களுக்குப் பிறகு உலக வங்கி உதவியுடன், தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.

தொகுப்பு : ஆதலையூர் த.சூர்யகுமார்

உதவி: ஞா.சக்திவேல் முருகன், கே.ஆர்.ராஜமாணிக்கம்

படங்கள்: ம.அரவிந்த்

நன்றி: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

You might also like