You are on page 1of 31

தமிழ் நாட் டின்

மாவட் டங் கள்


இந்தியாவின், தமிழ்நாடு
மாநிலத்திலுள்ள 38 மாவட்டங்கள்;
விக்கிப்பீடியா பட்டியலிடல்.

இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு


மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக
நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள்
கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின்
பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில்,
நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள
மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம்
பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம்
சென்ற தமிழ்நாட்டின் தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு
அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின்
பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.
தமிழக மாவட்டங்கள்

வகை மாவட்டங்கள்

அமைவிடம் தமிழ்நாடு

எண்ணிக்கை 38 மாவட்டங்கள்

மக்கள்தொகை பெரம்பலூர் – 565,223 (குறைவு);


சென்னை – 4,646,732 (அதிகம்)

பரப்புகள் 426 km2 (164 sq mi) சென்னை (சிறியது)  –


6,266.64 km2 (2,419.56 sq mi) திண்டுக்கல்
(பெரியது)

அரசு தமிழ்நாடு அரசு

உட்பிரிவுகள் தாலுகாக்கள், வருவாய் கிராமங்கள்

மாவட் டங் களை பிரித் தல் 2019-2020


நவம்பர் 2019-இல் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி
மாவட்டம் (33), விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் (34),
வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் (35) மற்றும்
இராணிப்பேட்டை மாவட்டம் (36), காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு
மாவட்டம் (37), என 5 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டன.[1] [2] இப்புதிய
மாவட்டங்களுக்கு 2019 நவம்பர் 16 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள்
நியமிக்கப்பட்டனர்.[3] பின்னர் 2020 மார்ச் 24 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைப்
பிரித்து, புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் (38) உருவாக்கப்பட்டது.[4][5]

வரலாறு

தமிழ்நாட்டின் மாவட்டங்களின் பிரிவினை விவரிக்கும் அசைபடம் 1956 முதல் 2009 வரை


இந்திய வரைபடத்தில் உள்ள தமிழ்நாடு மாநிலம்

1947 ஆகத்து மாதம் இந்திய விடுதலை பெற்ற பின்னர், பிரித்தானிய இந்தியாவின்


சென்னை மாகாணமானது, சென்னை மாநிலம் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக
தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலமானது, 1969ஆம்
ஆண்டில் அதிகாரப்பூர்வமாக, தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது. முந்தைய
சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை:
செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட
ஆற்காடு, இராமநாதபுரம், சேலம், தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,
திருநெல்வேலி ஆகியனவாகும். இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில்
பிரிக்கப்பட்டு, தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.[6]

1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1974: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம்


உருவாக்கப்பட்டது.
1979: கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1985: மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து, புதிதாக


சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1985: மதுரை மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1986: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தூத்துக்குடி மாவட்டம்


உருவாக்கப்பட்டது.
1989: வட ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக வேலூர், திருவண்ணாமலை
மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1991: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக நாகப்பட்டினம், திருவாரூர்
மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1993: தென் ஆற்காடு மாவட்டம், புதிதாக விழுப்புரம், கடலூர் ஆகிய இரு
மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
1995: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக கரூர், பெரம்பலூர்
மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1996: மதுரை மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக நாமக்கல் மாவட்டம்


உருவாக்கப்பட்டது.
1997: முந்தைய செங்கல்பட்டு மாவட்டமானது, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய
இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
2004: தர்மபுரி மாவட்டத்திலிருந்து புதிதாக கிருட்டிணகிரி மாவட்டம்
உருவாக்கப்பட்டது.
2007: பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக அரியலூர் மாவட்டம்
உருவாக்கப்பட்டது.
2009: கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள்
பிரிக்கப்பட்டு, புதிதாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2019: விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், (2019,
சனவரி 8 ஆம் நாள் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழ்நாட்டின் 33 வது
மாவட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது); மற்றும்
காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக செங்கல்பட்டு மாவட்டமும் (2019 ஆம்
ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து
பிரிக்கப்பட்டது); மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக
தென்காசி மாவட்டமும் 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி
உருவாக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக திருப்பத்தூர்
மாவட்டமும் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டமும் 2019 ஆம் ஆண்டு ஆகத்து
மாதம் 15 ஆம் தேதி உருவாக்கப்பட்டன.
2020: நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம்
ஆனது மார்ச் 24, 2020 அன்று உருவாக்கப்பட்டது.
மாவட்டம் பிரிப்பு கோரிக்கை
வ ரி பு கோ ரி க்கை
அதிகரிக்கும் மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டும் மற்றும் நிர்வாக
வசதிகளுக்காகவும் மாவட்டம் பிரிப்பு கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆரணி, போளூர்,


வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யார், வெம்பாக்கம், சமுனாமரத்தூர் ஆகிய
தாலுகாக்களை உள்ளடக்கி ஆரணி தலைமையில் விரைவில் புதிய மாவட்டம்
உருவாக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர்
ராமச்சந்திரன் தெரிவித்தார்.[7] ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய
மாவட்டம் உருவாக்கப்படும் என எடப்பாடி க. பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.[8]

திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு


புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.[9]
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைப் பிரித்து பொள்ளாச்சியைத்
தலைமையிடமாகக் கொண்டு உருவாக்க வேண்டும்; அதேபோல் ஈரோடு
மாவட்டத்தைப் பிரித்து கோபிச்செட்டிப்பாளையம் நகரைத் தலைமையகமாகக்
கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள்
எழுந்துள்ளன.[10].
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கும்பகோணம், பாபநாசம்,
திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்களை உள்ளடக்கி, புதிய
மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்; தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள
கும்பகோணம் (மத்திய பிராந்தியத்தில் மூன்றாவது பெரிய நகரமாகவும், 150
ஆண்டுகள் பழமையான நகராட்சியில் ஒரு தலைமை நீதித்துறை நீதிமன்றம்
மற்றும் முக்கிய அரசாங்க அலுவலுகங்களும் உள்ளன) என்ற புதிய மாவட்டம்
உருவாக்கப்பட வேண்டும்;[11]
வடக்கு சென்னை மக்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னையை
இரண்டாகப் பிரித்து, வடசென்னையை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி
வருகிறது.[12]

திருவள்ளூர் மாவட்டத்தைப் பிரித்து, பொன்னேரியைத் தலைநகராகக் கொண்டு,


புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி
வருகின்றனர்.[13]
தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து பட்டுக்கோட்டை தலைமையில் புதிய மாவட்டம்
அமைக்க வேண்டும் என பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகர்
கோரிக்கை வைத்துள்ளார்.[14]
திருவாரூர் மாவட்டத்தைப் பிரித்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி
ஆகிய பகுதிகளை உள்ளடக்கி மன்னார்குடி தலைமையில் புதிய மாவட்டம்
அறிவிப்பு வெளியிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.[15]
சங்கரன்கோவிலைத் தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க
வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்
வி.எம். ராஜலெட்சுமி கோரிக்கை வைத்துள்ளார். திருநெல்வேலி மற்றும்
தென்காசி மாவட்டங்களைப் பிரித்து சங்கரன்கோவிலைத் தலைமையிடமாகக்
கொண்டு உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.[16]
கோவில்பட்டியைத் தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க
வேண்டும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோரிக்கை வைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தை பிரித்து கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு
உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.[17]
கடலூர் மாவட்டத்தை பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு
விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, முஷ்ணம் ஆகிய வருவாய் வட்டங்களுடன்,
பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டங்களில் உள்ள சில வருவாய் கிராமங்களை
பிரித்து புதிதாக நெய்வேலி வட்டத்தையும் உருவாக்கி, 5 வட்டங்கள், 1 கோட்டம்
அடங்கிய விருத்தாசலம் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என பொதுமக்கள்
வலியுறுத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு
புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார். சேலம் மாவட்டத்தை
பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்க வேண்டும் என
பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மாவட் டங் கள் பட் டியல்


இந்த மாவட்டங்களின் மண்டல வகைப்பாடு பொதுவாக மக்கள், ஊடகங்கள்,
தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படுகிறது.

மண்டல வாரியாக மாவட்டங்களின் பட்டியல்


கு (தொண்டை மத்திய (சோழ மேற்கு (கொங்கு தெற்கு (பாண்டிய
லம்) மண்டலம்) மண்டலம்) மண்டலம்)
சென்னை அரியலூர் தருமபுரி கன்னியாகுமரி
காஞ்சிபுரம் கடலூர் திண்டுக்கல் மதுரை
செங்கல்பட்டு மயிலாடுதுறை கோயம்புத்தூர் இராமநாதபுரம்
ருவள்ளூர் நாகப்பட்டினம் கரூர் சிவகங்கை
ருவண்ணாமலை பெரம்பலூர் ஈரோடு தேனி
வேலூர் புதுக்கோட்டை கிருஷ்ணகிரி தூத்துக்குடி
ழுப்புரம் தஞ்சாவூர் நாமக்கல் திருநெல்வேலி
ள்ளக்குறிச்சி திருச்சிராப்பள்ளி நீலகிரி தென்காசி
ருப்பத்தூர் திருவாரூர் சேலம் விருதுநகர்
ராணிப்பேட்டை திருப்பூர்

மக் கள் தொகை


தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் மக்கட் தொகை 2011 ஆண்டு மக்கட்தொகை
கணக்கெடுப்பின்படி 7,21,38,958 ஆகும். இதில் அதிக மக்கள்தொகை உள்ள
மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 46,81,087 பேர்
வசித்து வருகின்றனர்[18]. இம்மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி ஒரு ச.கி.மீ.க்கு
26,903 ஆக இருக்கிறது. இதன்படி மாநிலத்தில் அதிக மக்கள் அடர்த்தி பெற்ற
மாவட்டமாக சென்னை உள்ளது. மாநிலத்தின் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக
உள்ள மாவட்டம், நீலகிரி மாவட்டம் ஆகும். நீலகிரி மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி
ஒரு ச.கி.மீ.க்கு 288 பேர். கல்வியறிவில் கன்னியாகுமரி மாவட்டம் முதன்மையாக
உள்ளது. இங்கு மாவட்டத்தின் 92.14% பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
கல்வியறிவில் 64.71% பெற்று, தருமபுரி மாவட்டம் கடைசி நிலையில் உள்ளது.

அட்டவணை
கீழே உள்ள அட்டவணையில், அனைத்து 38 மாவட்டங்களுக்கான புவியியல் மற்றும்
மக்கட்தொகை அளவுருக்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.[19]
மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

ர் 23 நவம்பர் 2007 பெரம்பலூர் 1949.31 7,54,894 390

பட்டு 29 நவம்பர் 2019 காஞ்சிபுரம் 2,944.96 2,556,244 868


மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

ஆரம்பகால 13
மாவட்டங்களுள்
னை 1 நவம்பர் 1956 ஒன்று (முன்னாள் 426 4,646,732 26,07
பெயர் "மெட்ராஸ்
மாவட்டம்")
மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

ஆரம்பகால 13
புத்தூர் 1 நவம்பர் 1956 மாவட்டங்களுள் 4,723[22] 3,458,045 732
ஒன்று

30 செப்டம்பர் தென் ஆற்காடு


3,678 2,605,914 709
1993 மாவட்டம்
மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

2 அக்டோபர் 1965 சேலம் 4,497.77 15,06,843 335

15 செப்டம்பர்
கல் மதுரை 6,266.64 21,59,775 345
1985
மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

31 ஆகத்து 1979 கோயம்புத்தூர் 5,722[23] 22,51,744 394

குறிச்சி 26 நவம்பர் 2019 விழுப்புரம் 3,520.37 13,70,281 389

செங்கல்பட்டு
ரம் 1 சூலை 1997 (சென்னை 1,655.94 11,66,401 704
மாகாணம்)
மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

ஆரம்பகால 13
மாவட்டங்களுள்
ஒன்று
கோவில் 1 நவம்பர் 1956 1,672 18,70,374 1,119
(திருவாங்கூர்-
கொச்சினிலிருந்து
மாற்றப்பட்டது)

30 செப்டம்பர்
திருச்சிராப்பள்ளி 2,895.57 10,64,493 357
1995
மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

ணகிரி 9 பிப்ரவரி 2004 தருமபுரி 5,143 18,79,809 366

ஆரம்பகால 13
1 நவம்பர் 1956 மாவட்டங்களுள் 3,741.73 30,38,252 812
ஒன்று
மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

துறை 7 ஏப்ரல் 2020 நாகப்பட்டினம் 1,172 9,18,356 784

18 அக்டோபர்
டினம் தஞ்சாவூர் 1,397 6,97,069 498
1991

ல் 1 சனவரி 1997 சேலம் 3,363 17,26,601 513


மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

ஆரம்பகால 13
ண்டலம் 1 நவம்பர் 1956 மாவட்டங்களுள் 2,452.5 7,35,394 300
ஒன்று

30 செப்டம்பர்
லூர் திருச்சிராப்பள்ளி 1,752 5,65,223 320
1995
மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

தஞ்சாவூர் மற்றும்
கோட்டை 14 சனவரி 1974 4,663 16,18,345 347
திருச்சிராப்பள்ளி

ஆரம்பகால 13
நாதபுரம் 1 நவம்பர் 1956 மாவட்டங்களுள் 4,089.57 13,53,445 331
ஒன்று
மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

ப்பேட்டை 28 நவம்பர் 2019 வேலூர் 2,234.32 12,10,277 542

ஆரம்பகால 13
1 நவம்பர் 1956 மாவட்டங்களுள் 5,205 34,82,056 669
ஒன்று
மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

மதுரை மற்றும்
கை 15 மார்ச் 1985 4,086 13,39,101 328
இராமநாதபுரம்

சி 22 நவம்பர் 2019 திருநெல்வேலி 2916.13 14,07,627 483


மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

ஆரம்பகால 13
ர் 1 நவம்பர் 1956 மாவட்டங்களுள் 3,396.57 24,05,890 708
ஒன்று

25 சூலை 1996 மதுரை 3,066 12,45,899 406


மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

20 அக்டோபர்
குடி திருநெல்வேலி 4,621 17,50,176 379
1986

ஆரம்பகால 13
ராப்பள்ளி 1 நவம்பர் 1956 மாவட்டங்களுள் 4,407 27,22,290 618
ஒன்று
மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

ஆரம்பகால 13
ல்வேலி 1 நவம்பர் 1956 மாவட்டங்களுள் 3842.37 16,65,253 433
ஒன்று

தூர் 28 நவம்பர் 2019 வேலூர் 1,797.92 11,11,812 618

கோயம்புத்தூர்
22 பிப்ரவரி 2009 5,186.34 24,79,052 478
மற்றும் ஈரோடு
மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

செங்கல்பட்டு
ளூர் 1 சூலை 1997 (சென்னை 3424 37,28,104 1,089
மாகாணம்)

30 செப்டம்பர் வட ஆற்காடு
ண்ணாமலை 6,191 24,64,875 398
1989 மாவட்டம்
மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

18 அக்டோபர்
ரூர் தஞ்சாவூர் 2,161 12,64,277 585
1991

30 செப்டம்பர் வட ஆற்காடு
2030.11 16,14,242 795
1989 மாவட்டம்
மக்கள் தொ
கணக்கெடுப்
முந்தைய பரப்பளவு மக்க
நகரம் நிருவப்பட்டது
மாவட்டம் (கி.மீ²) மக்கள் அ
தொகை[21] கண

30 செப்டம்பர் தென் ஆற்காடு


ம் 3725.54 20,93,003 562
1993 மாவட்டம்

மதுரை மற்றும்
கர் 15 மார்ச் 1985 4,288 19,42,288 453
இராமநாதபுரம்

முந் தைய மாவட் டங் கள்


வரைபடம் மாவட்டம் ஆண்டுகள் பின்னர் வந்த மாவட்டங்கள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு(2019 முதல்)


செங்கல்பட்டு 1956–1997
மற்றும் திருவள்ளூர்

திருவண்ணாமலை, வேலூர்,
வட ஆற்காடு 1956–1989 இராணிப்பேட்டை(2019 முதல்) மற்றும்
திருப்பத்தூர்(2019 முதல்)

TN Districts தென் கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி


1956–1993
South Arcot.png ஆற்காடு (2019 முதல்)

இதனையும் காண் க
தமிழக வருவாய் வட்டங்கள்
தமிழக மாநகராட்சிகள்
தமிழக நகராட்சிகள்
தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
தமிழகப் பேரூராட்சிகள்

மேற் கோள் கள்


1. புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு (https://w
ww.dinamani.com/tamilnadu/2019/nov/14/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A
4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9
F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B
3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8
D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B
5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8
5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B
5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9
F%E0%AF%81-3279030.html)

2. தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு (https://www.dinamal


ar.com/news_detail.asp?id=2410912)

3. செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள்


நியமனம் (https://tamil.oneindia.com/news/chennai/five-collectors-appointed-for-
new-districts-in-tamilnadu-368626.html)

4. "தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை: முதல்வர்


பழனிசாமி அறிவிப்பு" (https://www.hindutamil.in/news/tamilnadu/545916-mayilad
uthurai-will-become-new-district.html) . இந்து தமிழ் (24 மார்ச், 2020)

5. "கொரோனா பரபரப்புக்கு மத்தியில் பிறந்தது மயிலாடுதுறை புதிய மாவட்டம்..


முதல்வர் அறிவிப்பு!" (https://tamil.oneindia.com/news/chennai/mayiladuthurai-bec
ome-a-new-district-in-tamil-nadu-says-chief-minister-edappadi-palanisamy-3806
91.html) .ஒன்இந்தியா தமிழ் (24 மார்ச், 2020)

6. தமிழக மாவட்டங்கள் பிரிந்த வரலாறு! (https://www.dinamani.com/editorial-articl


es/center-page-articles/2019/jul/31/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%
AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%
AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%A
F%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%A
F%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%A
E%B1%E0%AF%81-3203523.html)

7. "Minister visits villages to receive grievance applications" (https://www.thehindu.com/


news/national/tamil-nadu/minister-visits-villages-to-receive-grievance-application
s/article29303360.ece) (in en-IN). The Hindu. 31 August 2019.
https://www.thehindu.com/news/national/tamil-nadu/minister-visits-villages-to-
receive-grievance-applications/article29303360.ece . பார்த்த நாள்: 1 April 2020.

8. | ஆரணி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் இபிஎஸ் அவர்கள் உறுதி (https://m.d


inamalar.com/detail.php?id=2734671)

9. பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்’முதல்-அமைச்சர்


எடப்பாடி பழனிசாமி உறுதி (https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/
03/25015023/New-district-headed-by-PalaniEdappadi-Palanisamy-confirmed.vp
f)
10. "Increase in demands for new districts in Tamil Nadu" (https://www.newindianexpres
s.com/states/tamil-nadu/2019/aug/19/increase-in-demands-for-new-districts-in-ta
mil-nadu-2020873.html) . The New Indian Express. 19 August 2019.
https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/aug/19/increase-in-
demands-for-new-districts-in-tamil-nadu-2020873.html . பார்த்த நாள்: 1 April
2020.

11. "CM will announce Kumbakonam district soon: Min | Trichy News - Times of India" (ht
tps://timesofindia.indiatimes.com/city/trichy/cm-will-announce-kumbakonam-distric
t-soon-min/articleshow/72285132.cms) (in en). The Times of India. 29 November
2019. https://timesofindia.indiatimes.com/city/trichy/cm-will-announce-
kumbakonam-district-soon-min/articleshow/72285132.cms . பார்த்த நாள்: 1 April
2020.

12. "Increase in demands for new districts in Tamil Nadu - The New Indian Express" (http
s://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/aug/19/increase-in-deman
ds-for-new-districts-in-tamil-nadu-2020873.amp) . www.newindianexpress.com.
25 September 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (https://web.archi
ve.org/web/20190925204805/http://www.newindianexpress.com/states/tamil-nadu/
2019/aug/19/increase-in-demands-for-new-districts-in-tamil-nadu-2020873.am
p) எடுக்கப்பட்டது. 31 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
13. பொன்னேரி தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் மக்கள்
வலியுறுத்தி வருகின்றனர் (https://www.dinamani.com/all-editions/edition-chenn
ai/thiruvallur/2019/dec/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E
0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%BE%E
0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E
0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E
0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E
0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E
0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E
0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E
0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E
0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E
0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E
0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-329
6475.html%7C)
14. | பட்டுக்கோட்டை மாவட்டம் கோரிக்கை (https://makkalkural.net/news/pattukottai-
new-district-formation-in-plan/)

15. "மன்னார்குடி மாவட்டம் உருவாக்க கோரிக்கை" (https://web.archive.org/web/202


00714054749/https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kamaraj) .
2020-07-14 அன்று மூலம் (https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhaga
m/kamaraj) பரணிடப்பட்டது. 2020-07-11 அன்று பார்க்கப்பட்டது. Invalid |dead-
url=dead (உதவி)

16. https://www.hindutamil.in/news/tamilnadu/516319-it-is-possible-to-establish-a-
district-in-sankarankoil.html

17. "தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: கோவில்பட்டி புதிய மாவட்டம்


அறிவிக்கப்படுமா?" (https://www.hindutamil.in/news/tamilnadu/703876-kovilpatt
i.html) . இந்து தமிழ்(12 ஆகத்து 2021)

18. http://www.census2011.co.in/district.php

19. "Districts of Tamil Nadu" (http://www.tn.gov.in/district_view) . Government of Tamil


Nadu. 24 January 2014 அன்று பார்க்கப்பட்டது.

20. "Government of Tamil Nadu – Taluks" (https://www.tn.gov.in/government/taluk) .


Information Technology Department, Government of Tamil Nadu. National Informatics
Centre. 3 October 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (https://web.a
rchive.org/web/20191003032028/http://www.tn.gov.in/government/taluk)
எடுக்கப்பட்டது. 19 April 2020 அன்று பார்க்கப்பட்டது.
21. "A – 2: Decadal Variation Population Since 1901" (http://www.censusindia.gov.in/2011
census/PCA/A-2_Data_Tables/33%20A-2%20Tamil%20Nadu.pdf) (PDF). Registrar
General and Census Commissioner of India. 13 November 2014 அன்று
மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (https://web.archive.org/web/2014111318264
0/http://www.censusindia.gov.in/2011census/PCA/A-2_Data_Tables/33%20A-2%20
Tamil%20Nadu.pdf) (PDF) எடுக்கப்பட்டது. 30 November 2019 அன்று
பார்க்கப்பட்டது.
22. "Coimbatore District Statistical Handbook" (http://www.coimbatore.nic.in/handboo
k.html) . Coimbatore District Administration. 4 December 2015 அன்று
மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (https://web.archive.org/web/2015120404135
8/http://coimbatore.nic.in/handbook.html) எடுக்கப்பட்டது. 21 November 2015
அன்று பார்க்கப்பட்டது.
23. "Erode District – District At a Glance" (https://erode.nic.in/) . National Informatics
Centre. 11 September 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (https://w
eb.archive.org/web/20190911203220/http://www.erode.nic.in/) எடுக்கப்பட்டது.
22 November 2019 அன்று பார்க்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?
title=தமிழ்நாட்டின்_மாவட்டங்கள்&oldid=345
0046" இருந்து மீள்விக்கப்பட்டது


Last edited 10 days ago by Eniisi Lisika

You might also like