You are on page 1of 6

துன் டாக்டர் மகாதீர் முகமது

 இவர் 1981 முதல் 2003 வரையும், பின்னர் 2018 முதல் 2020 வரையும் மலேசியப்
பிரதமராகப் பதவி வகித்தார்.
 இவர் லங்காவி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்நதெ
் டுக்கப்பட்டார். முன்னர் 1981
முதல் 2003 வரை நான்காவது பிரதமராகப் பதவியில் இருந்தார்.
 1946 ஆம் ஆண்டில் இவர் புதிதாக உருவாக்கப்பட்ட அம்னோ கட்சியில் சேர்ந்து தீவிர
அரசியலில் இறங்கினார். 2016 ஆம் ஆண்டில் இவர் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி என்ற
பெயரில் தனிக் கட்சி தொடங்கினார்.
 10 மே 2018 அன்று 92 வயதுடைய மகாதீர் முகமது, மலேசியா நாட்டின் பிரதம அமைச்சராக
மீண்டும் பொறுப்பேற்றார்.
 24 பிப்ரவரி 2020 அன்று, மகாதீர் பின் முகமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
 இவரது பதவிக்காலத்தில் இவர் ஆசியாவின் ஒரு முக்கிய அரசியல் தலைவராகக்
கருதப்பட்டார்.
 மேற்கத்தைய வாழ்க்கை முறையைப் பெரிதும் விமர்சித்து வந்தார்.
 கடாரம், அலோர் ஸ்டார் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவரான மகாதீர் மருத்துவக் கல்வி
படித்து மருத்துவராகப் பட்டம் பெற்றார். அம்னோ கட்சியில் இணைந்து செயற்பட்டு வந்த இவர்
1964 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்குத் தேர்நதெ் டுக்கப்பட்டார்.
 அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த இவர் அன்றைய பிரதமர் துங்கு அப்துல்
ரகுமானுடன் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
 துங்கு அப்துல் ரகுமான் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, மகாதீர் மீண்டும்
அம்னோ கட்சியில் இணைந்து நாடாளுமன்றம் சென்றதுடன், அமைச்சரவையிலும் இணைந்தார்.
 1976 ஆம் ஆண்டில் துணைப் பிரதமராகத் தேர்நதெ
் டுக்கப்பட்டார். 1981 இல் பிரதமர் உசேன்
ஓன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து மகாதீர் மலேசியாவின் 4-வது பிரதமராகத்
தெரிவானார்.
 24 பிப்ரவரி 2020 அன்று, மகாதீர் பின் முகமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
துன் அப்துல்லா பின் அகமது படாவி

o அப்துல்லா அகமது படாவி (Abdullah bin Haji Ahmad Badawi, பிறப்பு: நவம்பர் 26, 1939) 


இவர் மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் ஆவார்.

o முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது, அவரின் துணைப் பிரதமராக இருந்த அன்வார்


இப்ராகிமை பதவி நீக்கம் செய்த பின்னர், அந்த இடத்திற்கு அப்துல்லா படாவி துணைப்
பிரதமராக நியமிக்கப் பட்டார்.

o அதன் பின்னர் மகாதிர் பதவி ஓய்வு பெற்றதும் அப்துல்லா படாவி பிரதமராக நியமிக்கப்பட்டார்.

o 2004-ஆம் ஆண்டில் இடம்பெற்ற மலேசியப் பொதுத் தேர்தல்களில் அப்துல்லா படாவி


குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்தார்.

o 2008-ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் அப்துல்லா படாவியின் ஆளும் பாரிசான்


நேசனல் கூட்டணி மிகச் சிறுபான்மை வலுவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
முகமது நஜிப் பின் துன் ஹாஜி அப்துல் ரசாக்

 முகமது நஜிப் பின் துன் ஹாஜி அப்துல் ரசாக்  மலேசியாவின் அரசியல்வாதியும் மலேசியாவின்


ஆறாவது பிரதமரும் ஆவார்.

 2004 சனவரி 7 ஆம் நாளில் இருந்து மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்த இவர் 2009,
ஏப்ரல் 3 ஆம் நாளில் இருந்து பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 நஜிப் துன் ரசாக் மலேசியாவின் 2 ஆவது பிரதமர் அப்துல் ரசாக்கின் மகனாவார்.

 மலேசியாவில் மிகவும் இளம் வயதில் எம்.பி ஆன முதல் நபர் என்ற பெருமையும் நஜீப்க்கு
உண்டு. தந்தையின் மறைவைத் தொடர்ந்து 22 ஆம் வயதில் பெகான் தொகுதி இடைத்
தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி
தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 9 மே 2018 வரை இவர் மலேசியாவின் 6 ஆவது பிரதமராகப் பொறுப்பு வகித்தார். 9 மே


2018 இல் நடைபெற்ற 14 ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு சட்டமன்றத்தில் அதி
பெரும்பான்மையைத் தக்கவைக்க தவறியதால் பக்கத்தான் கூட்டணியிடம் ஆட்சி மாற்றம்
நடந்தது. இதனைத் தொடர்ந்து மகாதீர் பின் முகமது 7 ஆவது மலேசிய பிரதமராக 10 மே
2018 இல் பதவியேற்றார்.

You might also like