You are on page 1of 1

ஞானத்தைத் தேடி ….

நான்கு வேதங்களுக்கும் வேதசாகைகள் (நான்கு வேதங்களுக்கும் கிளைகளாக உள்ள உபபிரிவுகள் சாகைகள் எனப்படும்.) என்று பெயருள்ள


பல கிளைகள் உள்ளன. 

ருக் வேதத்தில் ஐதரேய சாகை மந்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது. யஜுர் வேதத்தில் காண்வ சாகை, தைத்திரிய சாகை,மாத்தியந்தன சாகை, என
மூன்று சாகைகள் கிடைத்துள்ளன. சாம வேதத்தில் கௌதம சாகை, தலவகார சாகை என இரண்டுள்ளன.

வேதத்திலுள்ள சாகைகள் ஒவ்வொன்றும் மந்திரம், பிராமணம், உபநிடதம் என மூன்று பிரிவுகளாகக் காணப்படும்.

உபநிஷத்துக்களில் சில மிகச் சிறியவை, சில கிறிஸ்தவ மதத்தின் பைபிள் அளவுக்குப்பெரியவை. சில உரைநடையிலும் சில செய்யுள்நடையிலும்
உள்ளன.

 'உப' என்ற சொல்லினால் குருவை பயபக்தியுடன் அண்டி அவர் சொல்லும் உபதேசத்தைக் கேட்பதைக் குறிக்கிறது.
 'நி' என்ற சொல்லினால், புத்தியின் மூலம் ஏற்படும் ஐயங்கள் அகலும்படியும், மனதில் காலம் காலமாக ஊறியிருக்கும் பற்பல
எண்ண ஓட்டங்களின் பாதிப்பு இல்லாமலும், அவ்வுபதேசத்தை வாங்கிக் கொள்வதைக் குறிக்கிறது.
 'ஸத்3' என்ற சொல்லினால் அவ்வுபதேசத்தின் பயனான அஞ்ஞான-அழிவும், பிரம்மத்தின் ஞானம் ஏற்படுவதைக் குறிக்கிறது.

ஞான காண்டம் தான் 'உபநிஷத்' எனப்படுவது. 

108 உபநிஷத்துக்கள் இருப்பதாக முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்குச் சொல்கிறார். அவற்றில் பத்து மிக
முக்கியமானவை என்பது வழக்கு.

காலடி தந்த ஆதிசங்கரர், ஸ்ரீபெரும்புத்தூர் வள்ளல் இராமானுஜர், உடுப்பி மத்வர், நீலகண்ட சிவாசாரியார் ஆகிய நான்கு
சமயாசாரியர்களும் முறையே அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், சித்தாந்தம் என்னும் கொள்கைகளையொட்டி மேற்கூறிய பத்து
முக்கிய உபநிஷத்துக்களுக்கும் விரிவுரை எழுதியுள்ளனர்.

அத்வைதம் (அ + துவைதம், அத்துவிதம் (अद्वैत वेदान्त ) ("non-dualism") இரண்டற்ற நிலை என்று பொருள் தருகிறது. (The essential identity
of the Atman and brahman is the most important tenet of advaita.) இது இந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை பற்றிய ஒரு கொள்கை
ஆகும். ஜீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பிரம்மம்|பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல
உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மாவாக விளங்குகின்றது என்றும் இத்தத்துவம் கூறுகிறது. (Brahman is the substratum on which
all phenomena are experienced, and also the Antaramian (inner self), the One Lord who dwells in all beings.)

108 உபநிஷத்துக்களும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்படுகின்றன:

10 முக்கிய உபநிஷத்துக்கள். அவையாவன:


 ஈசா வாஸ்ய உபநிடதம் (சுக்ல யசூர்வேதம் - வாஜஸனேய சாகை)
 கேன உபநிடதம் (சாம வேதம் - தலவகார சாகை)
 கடோபநிடதம் (கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)
 பிரச்ன உபநிடதம் (அதர்வண வேதம்)
 முண்டக உபநிடதம் (அதர்வண வேதம்)
 மாண்டூக்ய உபநிடதம் (அதர்வண வேதம்)
 ஐதரேய உபநிடதம் (ரிக் வேதம் - ஐதரேய சாகை)
 தைத்திரீய உபநிடதம் (கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)
 பிரகதாரண்யக உபநிடதம் (சுக்லயஜுர் வேதம் - கண்வ சாகை, மாத்யந்தின சாகை)
 சாந்தோக்யம் (சாம வேதம் - கௌதம சாகை)

 24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள்


 20 யோக உபநிடதங்கள்
 17 சன்னியாச உபநிடதங்கள்
 14 வைணவ உபநிடதங்கள்
 14 சைவ உபநிடதங்கள்
 9 சாக்த உபநிடதங்கள்

இவைகளில்,

 10 ரிக்வேதத்தைச் சார்ந்தவை
 32 கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை
 19 சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை
 16 சாம வேதத்தைச் சார்ந்தவை
 31 அதர்வணவேதத்தைச்சார்ந்தவை.

You might also like