You are on page 1of 6

திருக்குறளும் மனிதநேயமும் (அருளுடைமை)

முன்னுரை:

      உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள், அற நூல்களாக


தோன்றினாலும் இதில் சமூக சிந்தனை, சமூக தேடல், விழிப்புணர்வு,
வாழ்வியல் சிந்தனை என பல்வேறு நிலைகளை உடையது.
அவ்வகையில் மனிதநேயக் கருத்துக்களும் நிறைந்து வழிகின்ற
ஊற்றாக திகழ்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அருளுடைமை
என்னும் அதிகாரம் ஆகும். மேலும் அன்புடைமை, புலால் மறுத்தல்,
இரவு அச்சம், கொள்ளாமல், இரவு ஆகிய அதிகாரங்களில் உள்ள
மனிதநேயக் கருத்துக்கள் இக்கட்டுரையில் காணலாம்.

மனிதநேயம் - விளக்கம்:

     மனிதன் பிற மனிதனிடத்தில் பிற உயிர்களிடத்தும் காட்டும் நேயமே,


மனிதநேயம் ஆகும். பழங்காலத்தில் மனிதநேயம் என்பது
அருளுடைமை என்ற சொல்லால் அளிக்கப்பட்டது.

அருளுடைமை - விளக்கம் :

       பிறர் ஒருவருக்கு இடர் ஏற்பட்டிருந்தும், அது தமக்கு ஏற்பட்ட துன்பம்


போல் கருதி பிறருக்கு உதவுமாறு செய்யும் ஈகைக் குணமே,
அருளுடைமை. ஓர் உயிர் துன்பப்படும் போது, அவர் உயிர் பால் கசியும்
ஈரமுடைமையை அருளுடைமை எனலாம்.

அன்புடைமையும் - அருளுடைமையும் :

        குடும்ப இல்லற வாழ்வில் அண்புடைமை முதிர்ச்சி அடைந்து, பின்


விருந்தோம்பல், ஒப்புரவு, ஈகையார் படர்ந்து துறவியலில்
அருளுடைமை ஆக ஆகிறது. இதனை,
   
"அருளென்னும் அன்பீன் குழவி .." 
(குறள் 757) என்றார் வள்ளுவர்.

வேறு வகையில் கூறுவதென்றால்,


கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் மேற்கொண்டது அன்பு ;
புறாவுக்கு தன் தசையை கொடுத்த சிபி மன்னனின் செய்யுள் அருள்.
ஆக, அன்புடைமையும், அருள்உடைமையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு
கொண்டவையே.

அன்பும் - இல்லற அன்பும்:

      "அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்


      புன்கண ீர் பூசல் தரும்"

என்ற குறட்பாவில் கண்ணரின்


ீ அளவைப் பொறுத்து அன்பு வெளிப்பட்டு
நிற்கும் என்பது தெரிகிறது. ஒத்த அன்புடையவர்களால் உருவாகும்
அன்பு வாழ்க்கையே, அன்புடமையாகும். ஆகவே தன் மகன் கால்
உடைந்து வருந்தினாள் வரும் கண்ண ீர் அன்பு. இவ்வன்பு
தொடர்புடையவர்கள் அன்பும், பிறர் உணர்வு பகுதியாகும்.

மேலும்,

     "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்


      என்பும் உரியர் பிறர்க்கு"

என்ற குறட்பா தம் உறவு கார்களிலும் மட்டுமின்றி அதனையும் தாண்டி


அன்பு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இவ்வன்பு
உணர்வு மிகுதி படுத்தும்போது அருளுடமையாக மலர்கிறது என்கிறார்
வள்ளுவர். எனவே அனைத்து உயிர்களிடத்தும் காட்டும் இரக்க
உணர்வே அருளுடைமை என்னும் அன்பு.

அருளுடைமை - செல்வம் :

      கல்வி, கேள்வி, பொருள் என பல வகையாக விரிந்து நிற்கக் கூடியது


செல்வம். இருப்பினும்,
      "தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
      வேளாண்மை செய்தற் பொருட்டு"

என்ற குறட்பா, பிறருக்கு உதவும் பொழுது தான் செல்வமானது அதன்


பயனை அடைகிறது என்கிறார். இரக்கமற்ற கயவர்களிடம் செல்வம்
உயர்வு படாது, மேலும் அவர்களிடம் அருள் பிறப்பதில்லை என்கிறார்.

அருளென்னும் உயர்வு உடைய செல்வம் பிறக்கும் வழியை,


      "வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
      மெலியார்மேல் செல்லும் இடத்து"

என்ற குறல் காட்டுகிறது. இங்கு மெல்லிய உயிர்கள் அதாவது


அடக்கப்பட்ட ஆடு மாடு போன்ற உயிர்கள் மேலும் கொள்ளும் இரக்கம்,
அருள் பிறப்பதற்கு வழியாகிறது.

கொல்லாமை - புலால் உண்ணல்:

      நம்மிலும் மெல்லிய உயிர்களிடம் காட்டும் அன்பினால் அருள்


பிறக்கும். பின்னது வையகம் அளவில் வளரும், முடிவில் அது
கொல்லாமை என்ற உயர் மீ து அன்பில் வளர்ந்து நிற்கும் என வள்ளுவர்
கூறுகிறார்.

      "மெல்லிய உயிர்களை மதித்தலும், பிரிவு காட்டலும்,


உண்ணாதிருத்தல்உம் அருளை பெறுவதற்கு வழியாகும்" 
என்பது வள்ளுவர் கருத்து.

மேலும் உண்ணக்கூடிய மெல்லிய உயிர்களை கொன்று தின்று


கொண்டே இருந்தால், முடிவில் நாமும் மெல்லிய கிருமிகளுக்கு
உணவாக மாறுவோம் என எச்சரிக்கிறார். (எடுத்துக்காட்டு - 2019 இல்
தொடங்கிய கோரணா பெரும் தொற்று) எனவே அருளுடைமையே
மனிதர்களை பிற அழிவிலிருந்து காக்கக்கூடியது.
அருளுடைமை - மதம் :

     ஒரு மதம் கூறிய சில கருத்துக்களை பிற மதங்கள் ஏற்றுக்


கொள்ளக்கூடியதில்லை. ஆயினும் அனைத்து மதங்களும் ஏற்றுக்
கொள்ளக்கூடிய கருத்துக்களில் ஒன்றுதான் அருளுடைமை என்னும்
மனிதநேயம்.
"உன் உயிரைப் போல் பிற உயிரையும் நேசி" னஎன்ற மனிதநேயக்
கருத்தை அனைத்து சமயங்களும் கூறுகிறது. இதனையே வள்ளுவர்,
  
 "நல்லா ட்டால் நாடி அருளாள்க பல்லாற்றால்
      தேரினும் அஃதே துணை"

வள்ளுவர் காலத்தில் சமணம் புத்தம் சைவம் வைணவம் என பல


சமயங்களில் இருந்தபோதிலும், அருளை மனதில் வைத்துக் கொண்டு
வாழுங்கள் என அறிவுறுத்துகின்றார். எச்செயலை செய்தாலும் மனித
நேயத்துடனும் மனிதாபிமானத்தோடு நடப்பதே சிறந்தது என்கிறார்.

அருளும் - உயிரும்:

     "மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப 


     என்னுயிர் என்றும் அன்பு"

இவ்வுலகில் வாழ்வதற்கு ஏற்ற சூழலையும் வளத்தையும் இனி வரும்


தலைமுறையினருக்கு உருவாக்கம் முனைப்பவருக்கு, தன் உயிரை
பற்றி அச்சம் இல்லை என்பதே இக்குறளின் கருத்து. மேலும்
சுற்றுச்சூழல் வளம் என பலவற்றையும் எண்ண வைக்கும்
மனிதாபிமானமிக்க குறலாக அமைகிறது.

(ஐநா அமைப்பு - உலகம் 'நிலையான நீ டித்த மேம்பாடு' அடைய - 17


குறிக்கோள்களை 2030 க்குள் அடைய நிர்ணயித்தது)
  
 "அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
      மல்லன்மா ஞாலங் கரி"
என்ற குறட்பா அருள் உடையவராக வாழ்கின்ற அவர்களுக்கு தீங்கு
என்னும் துன்பமில்லை, தன்னைப்போல் பிறரையும் நேசிக்கும் பண்பு
ஒரு நாட்டில் நிறைந்திருக்கும் ஆனால் அந்நாடு நிச்சயமாக
வளம்பெற்று திகழும். எனவே அருளுடைமை சிந்தனையோடு
கூடியவர்கள் பெருக வேண்டும் என்பதை இக்குறள் வலியுறுத்துகிறது.

இரவும் - இரவு அச்சமும்:

     வள்ளுவர் இரவு அதிகாரத்தில் வரியோனின் இருத்தலுக்குப் பரிந்து


பேசுவோர். இரவச்சம் அதிகாரத்தில் இரத்தலின் இழிவை பேசுவார். 

"வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை" 

என்றார். ஆயினும் இரத்தலை தொடர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும் என


எண்ணியவர் வள்ளுவர்.
ஏனென்றால் அது மிக மிக இழிவான செயல் என்றும், அதனை விடுத்து
உழைத்து முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறார். இத்தகைய
உழைப்பு உயர்வு தரும் நிலையில், இரத்தலும் ஈகையும் மெல்ல மெல்ல
குறைந்து இறுதியில் மழையும் நிலை உருவாகும். 

இரக்கும் நிலை ஏற்படினும் முயற்சியைக் கைவிடக்கூடாது, உழைக்கும்


நிலை உருவாகி ஏற்றத்தாழ்வுகள் நீங்க வேண்டும் என்ற மனித நேய
சிந்தனையை வள்ளுவர் தருகிறார்.

முடிவுரை:

    அனைத்து உயிர்களிடத்தும் காட்டும் இரக்கமே அருளுடைமை;


     அன்பும் அருளும் ஒன்றுகொன்று தொடர்பு உடையவை, அன்பின்
வளர்ச்சியே அருளுடைமை;
     எளிய உயிர்களையும் பேணுவதால் அருள் பிறக்கும்;
     கொல்லாமை புலால் உண்ணாமை என்ற உயர்ந்த நிலையை
கடைப்பிடித்தால் அருளுடைமை அழகுற உயர்வு பெறும்;
     முடிந்தவரை அருளைக் கொண்டு வாழுதல் என்பதே நல்ல நெறி.
இழிந்தது இரத்தல், உயர்ந்தது உழைப்பு, அதுவே மனித நேயத்தை
வளர்க்கும்.

You might also like