You are on page 1of 2

பழமொழி.

1. இளங்கன்று பயம் அறியாது.

இளவயதினர் எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஒரு செயலில்


துணிந்து இறங்கி விடுவர்.

2. இளமைக் கல்வி சிலையில் எழுத்து.


இளமைக் காலத்தில் கற்கப்படும் கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட
எழுத்து அழியாதிருப்பதைப் போல மனதில் அழியாமல்
நிலைத்திருக்கும்

3. முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்.
எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவர்க்கு அச்செயலில்
வெற்றி கிட்டுவது உறுதி.

4. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.


ஒருவருடைய மன உணர்வை அவர் வாய்விட்டுச்
சொல்லாவிட்டாலும் முகம் காட்டிவிடும்.

5. அன்பான நண்பனை ஆபத்தில் அறி.


நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி
செய்வதைக் கண்டு அறியலாம்.

6. விளையும் பயிர் முளையிலே தெரியும்.


ஒரு குழந்தை சிறு வயதிலே எப்படிச் செயல்படுகிறதோ அதைக்
கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து
அறியலாம்.

7. சிறு துளி பெரு வெள்ளம்.


சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாகப்
பெருகிவிடும்.

8. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.


உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த
பெரும் பேறாகும்.

You might also like