You are on page 1of 2

கொன்றை வேந்தன்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.


தாயும் தந்தையுமே நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டிய
தெய்வம் ஆவர்.

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.


கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிக்க நன்மை தரும்.

3. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.


விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.

4. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.


எண்களையும் மொழியையும் நமது இரு கண்களுக்கு ஒப்பானதாகக்
கருத வேண்டும்.

5. ஏவா மக்கள் மூவா மருந்து.


சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்கு
நீண்ட ஆயுளைத் தரும் அமிர்தம் போல் ஆவர்.

6. ஐயம் புகினும் செய்வன செய்.


பிச்சையெடுக்கும் அளவுக்கு வறுமை ஏற்பட்டாலும் செய்ய
வேண்டிய நற்செயல்களைச் செய்ய வேண்டும்.

7. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.


பிறரின் குறைகளையே பெரிதுபடுத்திக் கொண்டிருந்தால்
உறவினர்களோ நண்பர்களோ யாரும் நம்மோடு இருக்க மாட்டார்கள்.

8. சூதும் வாதும் வேதனை செய்யும்.


சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம் செய்தலும் துன்பத்தையே
தரும்.

9. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.


கடல் கடந்து பிற நாடுகளுக்குச் சென்றாவது செல்வத்தைச் சேர்க்க
வேண்டும்.

10. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.


தந்தையின் சொல்லை விட மேலான அறிவுரை கிடையாது.

11. தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை.


பெற்ற தாயைவிட ஒருவருக்குச் சிறந்த கோயில் வேறெதுவும்
கிடையாது.

12. நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.


மிகச் சிறிய செயலாக இருப்பினும் அதனை நன்கு ஆராய்ந்த பிறகே
மேற்கொள்ள வேண்டும்.

13. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.


மூத்தவர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது சிறப்பைத் தரும்.

14. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.


உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.

You might also like