You are on page 1of 4

திருக்குறள்

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

2. இனிய உளவாக இன்னாத கூறல்


கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

3. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்


ஞாலத்தின் மாணப் பெரிது. 

4. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே


நாவினாற் சுட்ட வடு.

5. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது


அன்றே மறப்பது நன்று.

6. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு


புண்ணுடையர் கல்லா தவர்.

7. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்


கற்றனைத் தூறும் அறிவு.
8. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

9. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்


மிகைநாடி மிக்க கொளல்
10. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

ஆத்திச்சூடி
1. அறம் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஔவியம் பேசேல்
பழமொழி
1.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

2.அழுத பிள்ளை பால் குடிக்கும்

3.அறிவுடையாரை அரசனும் விரும்பும்

4.அன்பான நண்பனை ஆபத்தில் அறி

5.ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

6.ஆழம் அறியாமல் காலை விடாதே

7.ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்

8.இளங்கன்று பயம் அறியாது


9.இளமைக் கல்வி சிலைமேல் எழுத்து

10.உப்பிட்டவரை உள்ளளவும் நினை

கொன்றை வேந்தன்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று

3. எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்

4. ஏவா மக்கள் மூவா மருந்து

5. ஐயம் புகினும் செய்வன செய்

6. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

7. சூதும் வாதும் வேதனை செய்யும்

8. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

9. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

10. தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை

11. நுண்ணிய கருமமும் எண்ணித்துணிக

You might also like