You are on page 1of 5

செய்தி வெளியீடு

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் 'டீப் டெக் ஸ்டார்ட்அப்'


நிறுவனமான த்வஸ்தாவுடன் இணைந்து உத்திசார்
கூட்டுச் செயல்பாட்டை உருவாக்கியுள்ளது.

3 டி பிரிண்டிங் அப்ளிகேஷன்களில் பயன்படுத்தப்படும் புதிய


மூலப்பொருள் வடிவமைப்புகளை உருவாக்குவதற்கான
தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட முயற்சிகளுக்கு, இந்த கூட்டுச்
செயல்பாடு தொழில் நுட்ப ஆராய்ச்சி மற்றும் ஒருங்கிணைந்த
பரிமாற்றத்தை மேற்கொள்ளும்.

சென்னை, 25 மே 2022: தென்னிந்தியாவின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி


மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றான இந்தியா சிமெண்ட்ஸ்
லிமிடெட் மற்றும் 'கன்ஸ்ட்ரக்சன் 3 டி பிரிண்டிங்' தொழில்நுட்பத்தில் சிறந்து
விளங்கும் சென்னையைச் சேர்ந்த 'டீப் டெக் ஸ்டார்ட்அப்' நிறுவனமான
த்வஸ்தா மேனுபேக்சரிங் சொலுசன்ஸ்-உடன் (Tvasta Manufacturing Solutions)
உத்திசார் கூட்டுச் செயல்பாட்டை உருவாக்கியுள்ளது. இந்திய கட்டுமானத்
துறையில் நீடித்த நிலைத்தன்மையின் ஒரு தொடக்கமாக இந்த ஒத்துழைப்பு
அமைந்துள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் த்வஸ்தா ஆகியவை இணைந்து 3 டி


பிரிண்டிங் அப்ளிகேஷன்களில் பயன்படுத்தப்படும் புதிய மூலப்பொருள்
வடிவமைப்பை உருவாக்க தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப
உதவிகளை பரிமாறிக் கொள்வதுடன், சமூகத்தின் பல்வேறு அடுக்குகளுக்கு
குறைந்த செலவில், குறுகிய காலத்தில் குடியிருப்பு தீர்வுகளை வழங்கும்
முக்கிய திட்டங்களுக்கு பரஸ்பர உத்திசார் ஆதரவை வழங்கும்.

இந்திய கட்டுமானத் தொழிலைப் பொறுத்தவரை நீண்ட பாரம்பரியம்


கொண்ட நிறுவனமும், துடிப்புமிக்க தொடக்க நிறுவனமும் இணைந்து
முன்னோடிக் கூட்டாண்மையில் ஈடுபட்டிருப்பது இதுவே முதன்முறை.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. என்.
ஸ்ரீனிவாசன் அவர்களால் பரிந்துரைக்கப்படும் 'இந்திய தேசத்தைக்
கட்டியெழுப்பும் முன்முயற்சி'க்கு இது மிக இணக்கமான ஒன்றாகும்.

2016-ம் ஆண்டு ஐஐடி முன்னாள் மாணவர்களால் நிறுவப்பட்ட த்வஸ்தா, மேட்


இன் இந்தியா தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு
வருவதுடன், '3 டி பிரிண்டிங் பிளாட்ஃபார்ம்'களில் ஆட்டோமேஷன் மற்றும்
ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
வழக்கமான மரபு சார்ந்த தொழில் நுட்பங்களுடன் ஒப்பிடும்போது வேகமான,
சிக்கனமான மற்றும் நிலையான கட்டுமான முறைகளுக்கு உதவும்
வகையில் அமைந்துள்ளது. சென்னை மற்றும் பெங்களூருவை மையமாகக்
கொண்டு இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஆற்றல் நுகர்வைப் பொறுத்தவரை உலகின் மூன்றாவது பெரிய நாடாக


விளங்கும் இந்தியா, பாரம்பரிய ரசாயன அடிப்படையிலான எரிசக்தி
ஆதாரங்களை அதிகம் நம்பியுள்ளது. இந்தப் பின்னணியில், வட்டுவசதி,

சுகாதாரம், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு
ஆற்றல் திறனுள்ள கட்டுமான முறையாக அதன் நம்பகத்தன்மையை
த்வஸ்தா-வின் தொழில்நுட்பம் (கன்ஸ்ட்ரக்சன் 3 டி பிரிண்டிங்) ஏற்கனவே
சிறந்த முறையில் நிரூபித்து உள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரான திருமதி. ரூபா


குருநாத், த்வஸ்தா மேனுபேக்சரிங் சொலுசன்ஸ் நிறுவனத்தின் இணை
நிறுவனரும், தலைமை இயக்க அதிகாரியுமான திரு. சி.வித்யாசங்கர்
ஆகியோர் இன்று (25 மே 2022) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டனர். இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த
நிர்வாகக் குழுவினரும், த்வஸ்தா நிறுவனத்தின் இணை நிறுவனர்கள்
மற்றும் முதலீட்டாளர்கள் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர். சென்னை
ஐஐடி பேராசிரியர்கள், உலகளாவிய தொழில்நுட்ப முன்னோடி நிறுவனமான
அமெரிக்காவின் தர்ட் டெரிவேட்டிவ் (Third Derivative-USA) பிரதிநிதிகள்
ஆகியோர் வடியோ
ீ கான்பரன்சிங் மூலம் இந்த நிகழ்வின் போது நேரலையில்
கலந்து கொண்டனர்.
இந்த கூட்டுச் செயல்பாட்டின் பிரத்யேக அம்சங்களை விளக்கி இந்தியா
சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் திருமதி ரூபா குருநாத்
அவர்கள் தெரிவித்ததாவது: "இந்தியா ஒரு துடிப்பான ஸ்டார்ட்-அப்
சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ள நிலையில், சென்னை ஐஐடி-யின்
முன்னாள் மாணவர்களால் நிறுவப்பட்ட, குறுகிய காலத்தில் வளர்ந்துள்ள 3 டி
பிரிண்டிங் நிறுவனமான த்வஸ்தாவுடன் கூட்டாண்மையை ஏற்படுத்துவதில்
மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். வழக்கமான கட்டுமான முறைகளுடன்
ஒப்பிடுகையில், குறைந்த செலவில் விரைந்த தீர்வுகளுடன், சிக்கனமான
கட்டுமான முறையை வழங்குவதால் ஆவலாக உள்ளோம். குறிப்பாக, இந்த
முறை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதுடன், குறைந்த அளவில் நீர்
மற்றும் மணல் பயன்படுத்தப்படுவது மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் அவை இரண்டும் இயற்கை அன்னை வழங்கிய விலை மதிப்பற்ற
வளங்கள். கட்டுமானத் துறையைப் பொறுத்தவரை 'நிலைத்தன்மை' என்பது
புதிய நிகழ்வாகும். மேலும், இந்த கூட்டாண்மை நம் நாட்டில் உள்ள
சாமானிய மக்களை எளிதில் சென்றடையும் வண்ணம் இருப்பதால்
பெருமையாகக் கருதுகிறோம்.

அவர் மேலும் கூறியதாவது: "அண்மையில் எங்கள் நிறுவனத்தின் 75 வது


ஆண்டு நிறைவைக் கொண்டாடினோம். த்வஸ்தா நிறுவனத்துடனான உறவு,
நிறுவனத்தின் நிலைத்தன்மை, முன்னோக்கிச் செல்வதற்கான பல்வேறு
முயற்சிகளுக்கு புதிய ஊக்கசக்தியாக இருக்கும்"

அண்மையில் ஜெய்சல்மார் மற்றும் காந்தி நகர் ஆகிய இடங்களில் இந்திய


விமானப்படைக்காக நடைபெற்று வரும் திட்டப் பணிகள், மும்பையில்
தற்போது நடைபெற்று வரும் பெருநிறுவனம் ஒன்றின் உள்கட்டமைப்புத்
திட்டப் பணிகள் ஆகியவற்றுக்கான மூலப் பொருட்களை த்வஸ்தா
நிறுவனத்திற்கு மிகப் பெரிய ஆதரவை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்
ஏற்கனவே வழங்கியுள்ளது.

இந்த உத்திசார் கூட்டாண்மை குறித்துப் பேசிய திரு. சி.வித்யாசங்கர்


அவர்கள், இணை நிறுவனர் மற்றும் தலைமை இயக்க அதிகாரி, த்வஸ்தா
மேனுபேக்சரிங் சொலுசன்ஸ் தெரிவித்ததாவது: "இந்தியா சிமெண்ட்ஸ்
போன்ற புகழ்பெற்ற பாரம்பரியமிக்க நிறுவனத்துடன் இணைந்து
செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் கூட்டாண்மையானது எங்களது
தொழில்நுட்ப நிலைத்தன்மைக்கான நோக்குநிலையை கணிசமாக
மேம்படுத்தும் என உறுதியாக நம்புகிறோம். இதன் விளைவாக அதிக
செயல்திறனுடன் கூடிய இலக்கை நோக்கிய தீர்வுகள் கிடைக்கும்.
இந்தியாவின் தொழில்நுட்பம், நிலைத்தன்மை, கட்டுமானம் ஆகியவற்றுக்கு
இடையே விரைந்த ஒருங்கிணைப்புக்கு வழிவகுப்பது மட்டுமின்றி, இந்தியா
சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன், உலகளாவிய சந்தைகளுக்கும்
செல்ல இது வழிவகுக்கும்."

கட்டுமானத் துறையில் 'நிலைத்தன்மை' குறித்த விமர்சனம் மற்றும்


பொருத்தம்:

பொறுப்பான செயல்பாடுகளை நாம் நிகழ்த்த வேண்டும் என மனித இனம்


உறுதியானதொரு குரலை எழுப்பி வருகிறது. கிரகத்தின் அனைத்து தரப்பு
குடிமக்களின் கூட்டுவாழ்வை உறுதி செய்யும் வகையில் திட்டமிட்ட
நடவடிக்கைகளை மேற்கத்திய நாடுகளைப் போன்று அங்கீ கரிப்பது இந்த
தீர்க்கமான தருணத்தில் விவேகமானதாகும். வளர்ந்து வரும் மக்கள் தொகை
மூலம் கிரகத்தில் அசாதாரண சூழலியல் கோரிக்கைகளை முன்வைப்பதும்
இனி சாத்தியமல்ல.

திரு. சி.வித்யாசங்கர் அவர்கள் மேலும் கூறியதாவது: " இந்த சவாலை


எதிர்த்துப் போராடுவதற்கு உலக நாடுகள் கைகோர்த்து வருவதால், தரம்
அல்லது அளவு ஆகியவற்றில் சமரசம் செய்யாமல், மாற்றியமைக்க
முடியாத உறுதிப்பாடு மட்டுமே நிலையான உற்பத்தி வழிமுறைகளுக்கான
வாய்ப்புகளை வழங்கும் என்பது நிச்சயம். பெரும்பாலான தொழில்துறை
நிறுவனங்கள் கார்பன் தடயத்தை அழிக்க இல்லையேல் குறைப்பதற்கான
உத்திகளை வகுத்திருந்தாலும், கட்டுமானத் துறை இன்னும் பல தசாப்தங்கள்
பழமையான வழிமுறைகளுடன்தான் செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில், இந்தியா சிமெண்ட்ஸ், த்வஸ்தா நிறுவனங்களுக்கு


இடையிலான கூட்டாண்மை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 3 டி
முறையிலான கட்டுமானத்தில் 30 விழுக்காடு அளவுக்கு குறைவான நீ ர்,
மணல் ஆகிய விலைமதிப்பற்ற வளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த கூட்டாண்மை, நன்கு நிறுவப்பட்ட, பாரம்பரிய நிறுவனங்கள் மற்றும்
புதிய, புதுமையான நிறுவனங்களுக்கு இடையில், இந்தியாவுக்கான
'தூய்மையான மற்றும் பசுமையான' வரலாற்றை நிலைத்தன்மையின் மூலம்
தொடங்குவதற்கு இதுபோன்ற கூட்டாண்மைகள் உத்வேகத்தை அளிக்கும்
என எதிர்பார்க்கலாம்.

புகழ்பெற்ற இந்த இரு நிறுவனங்களும் புதிய விடியலில் காலடி எடுத்து


வைப்பதன் மூலம், 'இலக்க முறையிலான, நீடித்த' கட்டுமான
முறைகளுக்கான அவர்களின் முயற்சிகள் ஒட்டுமொத்த தொழில்துறையே
இத்தகைய சூழலுக்கு உகந்த நடைமுறைகளைத் தொடர வாய்ப்புள்ளது.
இவ்வாறே தொடர்வது தான் பொருத்தமானதாகவும் இருக்கும்.

நாட்டிலேயே முதன் முறையாக சென்னை ஐஐடி வளாகத்தில் த்வஸ்தா


கட்டியெழுப்பிய 3 டி பிரிண்டட் ஹவுஸ், இயற்பியல் கட்டமைப்பை
செயல்படுத்துவதில் அதன் திறன்கள், சாத்தியக் கூறுகளை நிரூபிக்கும்
வகையில் அமைந்துள்ளது. இந்த சோதனை அடிப்படையிலான
கட்டுமானமும், உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும்,
இந்தியாவின் வட்டுவசதி,
ீ உள்கட்டமைப்பு சவால்களை மிகச் சிறப்பாக
எதிர்கொள்ளக்கூடிய சாத்தியமான மாற்றுத் தீர்வை எடுத்துரைக்கிறது.

கூடுதலாக, கோவிட்-19 நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில்


ஒன்றாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு
மருத்துவமனைகளுக்கு, ‘இந்தியாவின் முதல் 3 டி அச்சிடப்பட்ட டாஃபிங்
யூனிட்களை’ செயின்ட் கோபைன் நிறுவனத்துடன் இணைந்து) அமைப்பதில்
இந்நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது.

###

You might also like