You are on page 1of 10

சாதியின் தோற்றம் - 6: பார்ப்பனிய இலக்கியங்கள்

 
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தாங்கள் நிலைகொண்டு விட்டதையும், தங்கள் பாதுகாப்பு
நிலைநிறுத்தப்பட்டதையும் உறுதி செய்து கொண்ட பார்ப்பனர்கள் புதிய சட்டங்களை
இயற்றியதோடு, பழைய சட்டங்களையும் விரிவு படுத்தினார்கள். சமூக வாழ்வின் எல்லா
நடைமுறைகளிலும் தலையிட்டு தங்கள் விருப்பம் போல் அவற்றை மாற்றி அமைத்தார்கள்
எனக் கூறுகிறார் பசாசு(1). கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்குப்பின் தான் மீ மாம்ச சூத்திரம், பிரம்ம
சூத்திரம் போன்ற வேதாந்தக் கருத்துகளுக்கு அடித்தளமாக உள்ள பார்ப்பனிய நூல்கள்
உருவாகின. கி.பி. 1 ஆம் 2 ஆம் நூற்றாண்டுகளில் மனு சுமிருதி எழுதப்பட்டது. கீ தை,
மகாபாரதம், இராமயணம், புராணங்கள் முதலியன எழுதப்பட்டன. இரிக் வேதம் முதல்
அனைத்து வேதங்களும் திருத்தி அமைக்கப்பட்டன. இரிக் வேதத்தில் புருச சூக்தம் போன்ற
இடைச்செருகல்கள் புகுத்தப்பட்டன. பிராமணங்கள் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டன.
தங்கள் சிந்தனைகளுக்கும் கருத்துகளுக்கும் ஒத்து வராத நூல்கள் அழிக்கப்பட்டன, திருத்தி
அமைக்கப்பட்டன. இடைச்செருகல்களால் நிறைக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில்தான்
சாதியத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. வருணம் எனப்பட்ட வகுப்பு, சாதியாக
திட்டமிட்டு பார்ப்பனர்களால் மாற்றப்பட்டது.

வரலாற்றில் உண்மையைப் பேசாதவர்கள் பார்ப்பனர்கள்:

பொதுவாக பார்ப்பனர்கள் உண்மையான வரலாற்றை மறைப்பதிலும் புதைப்பதிலும்


வல்லவர்களாக இருந்துள்ளனர். “இயல்பாகப் பார்ப்பனர்கள் அவர்களைப் பற்றியும் அவர்கள்
அமைப்புகளைப் பற்றியும் எந்தச் செய்தியையும் விட்டுச்செல்லமாட்டார்கள் அல்லது தேவை
என்று கருதினால் அவர்கள் ஏமாற்றுவதற்குப் ‘புராணக்’ கதைகளை புனைந்து விடுவர். அவர்கள்
சில தொடர் வரலாறுகளை எழுதினாலும்….. வருவது உரைக்கும் மொழியைக் கடைப்பிடித்து
நடந்த நிகழ்ச்சிகளின் உண்மையைப் பேசமாட்டார்கள்” எனக் கூறுகிறார் ந.சுப்ரமண்யன் எனும்
பார்ப்பனர்(2).
அப்படிப் புனையப்பட்டவைதான் பிராமணங்களும், இதிகாசங்களும், புராணங்களும் இன்ன பிற
பார்ப்பனிய இலக்கியங்களும். அவற்றில் வரலாறு என்பதும் உண்மை என்பதும் மிக மிகக்
குறைவு. இவை வேதகாலம் முதல் பார்ப்பனர்கள் செல்வாக்குடன் இருந்ததாக ஒரு
மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால் அது உண்மையல்ல. அவர்கள் செல்வாக்குப்
பெற்றது என்பது கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான். அதற்கு முன் வைதீக
பார்ப்பனியமோ, சாதியமோ இருக்க வில்லை.

“பார்ப்பனர்கள் வரலாற்றின்மேல் வெறுப்புடையவர்கள் என்ற கருத்து இருக்கிறது. ஏனென்றால்


அவர்கள் பொதுமக்கள் எவற்றைப் பற்றிய மூலத்தையும் அறிந்து கொள்வதை
விரும்பவில்லை. அல்லது மாந்தரில் சிலர் மற்றவர்களைவிட உயர்வானவர் என்பவை போன்ற
இறுதிப் பொய்யுரையை அறிந்து கொள்வதை விரும்பவில்லை. சமூகத்தின் சமன்மையில்லாத
அமைப்பு பார்ப்பனப் பண்பாட்டின் சிறப்புக் கண்டுபிடிப்பு அன்று. இருந்த போதிலும் அவர்களின்
(பார்ப்பனர்களின்) தேர்வாய்வுகள் மிகவும் வெற்றியானவையாக நெடுங்காலத்திற்குத் தாக்குப்
பிடித்தன” எனக் கூறுகிறார் ந.சுப்ரமண்யன்(3). சமூகத்தின் சமன்மையில்லாத அமைப்பு பிற
இடங்களிலும் இருக்கிறது. ஆனால் அது வகுப்பாக இருக்கிறது. ஆனால் இங்கு அது சாதியாக
இருக்கிறது. ஆகவே இந்த சாதி என்ற அமைப்பு பார்ப்பனர்களின் சிறப்புக் கண்டுபிடிப்பு.

சாதியை ஏற்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள் - ந.சுப்ரமணியன்:

‘அரசப் பொய் என்பதொன்றுண்டு. அது ஆட்சியாளரை ஏமாற்றும்; எவ்வகையிலும் ஏனைய


நகரத்தாரையும் ஏமாற்றும்… இந்தப் பொய்யில் மிக முகன்மையான பகுதி என்னவெனில்
கடவுள் மூன்று வகையான மாந்தரை உருவாக்கினார் என்ற கோட்பாடு’ அதன்படி
முதல்வகையான சிறந்த மனிதனைத் தங்கத்தாலும், இரண்டாம் வகை மனிதனை
வெள்ளியாலும் அடுத்தப் பொதுவான மந்தைக் கூட்டத்தை பித்தளையாலும் இரும்பாலும்
உருவாக்கினார் என பிளட்டோ கூறுவதாக சுப்ரமணியன் கூறுகிறார்(4). “ஏறத்தாழ
பிளட்டோவின் தங்கம், வெள்ளி, பித்தளை, இரும்பை ஒத்த, நான்கு படிநிலைப் பிரிவுகளைப்
பார்ப்பனர்கள் உருவாக்கினர். ஆனால் பார்ப்பனர்கள் அதனைப் பொய் என்று
ஒப்புக்கொள்வதில்லை”. எனவும் இக்கட்டுக்கதையைக் கடைப்பிடிக்கவும் நிலை பேறாக்கவும்
வரலாறு என்ற நிலைப்பேழையைத் திறக்க, அதனை ஆராய யாரையும் பார்ப்பனர்
அனுமதிக்கவில்லை எனவும், வரலாற்றை ஒடுக்கி அதன் மூலம் வருணக் கொள்கை என்ற
மாபெரும் பொய்யை நிலை பெறச் செய்ய வேண்டும் என பார்ப்பனர் விரும்பினர் எனவும்
ந.சுப்ரமணியன் கூறுகிறார்(5). பார்ப்பனர்கள்தான் நால்வகைச் சாதியமைப்பைக் கொண்டு
வந்தனர் என்பதையும், அதனை மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக வரலாற்றை
அவர்கள் திட்டமிட்டு புதைத்து மறைத்துக் குழப்பி வந்தனர் எனவும் அவர் கூறுகிறார். அவர்
கூறுவது முற்றிலும் உண்மை. அவர் ஒரு தமிழ்ப் பார்ப்பனர் என்பது இங்கு முக்கியத்துவம்
பெறுகிறது.

மீ மாம்ச சூத்திரம்:

பார்ப்பனிய இலக்கியங்களில் மிகமிக முக்கியமான மனு சுமிருதி குறித்து முன்பே பார்த்தோம்.


இதுபோக, வைதீக பார்ப்பனியத்தின் அடிப்படையாக இருக்கிற இரு நூல்கள் என்பன
சைமினியின் மீ மாம்ச சூத்திரமும், பரதராயணாரின் பிரம்ம சூத்திரமும். இவை இரண்டும்
குறித்து அறிவது மிக முக்கியம். இவை இரண்டும் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம்
நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டவை. வைதீக பார்ப்பனிய இலக்கியங்கள் அனைத்துமே
புசியமித்திரனின் பார்ப்பன வம்ச ஆட்சிக்குப் பின், அதாவது கி.மு. 2 ஆம்
நூற்றாண்டிற்குப்பின்தான் உருவாகின.

யாக, யக்ஞங்களின் கூட்டுச் சடங்குகளை கர்மகாண்டம் என உபநிடதங்கள் தாழ்த்திக் கூறின.


இதனைவிடப் பிரம்ம அறிவின் ஞானம் பெறுவதே உயர்ந்தது என அவை கூறின. யாக,
யக்ஞங்கள் போன்ற கூட்டுச் சடங்குகளை, அசுவமேத யாகம், இராசசூயம் போன்ற
ஆட்சியாளர்களுக்கான சடங்குகளைச் செய்து நல்ல ஊதியமும் செல்வமும் பெற்றுவந்த
பூசாரிகளும் மந்திரவாதிகளும் பிரம்ம ஞானத்தை எதிர்த்தனர். உபநிடதங்களின்
பிரம்மத்தையும், ஆன்மாவையும், அவை பற்றிய புதிய அறிவையும் எதிர்த்து,
வேதச்சடங்குகளை ஆதரித்தவர்கள் மீ மாம்சகர்கள் எனப்பட்டனர். வேதச் சடங்குகளை ஆதரித்த
இவர்கள் முழுமுதல் கடவுட் கொள்கையை எதிர்த்ததால் இவர்கள் நாத்திகர்களாக ஆகி
விட்டார்கள். இவர்களின் தத்துவ நிறுவனர் மீ மாம்ச சூத்திரம் என்கிற நூலை எழுதிய
சைமினி(6).

வேதத்துடன் மிக நெருங்கிய தொடர்புகொண்ட மெய்யியல் என்பது இந்த மீ மாம்சம்தான்.


வேதத்தின் நம்பகத்தன்மை என்பது மீ மாம்ச மெய்யியல் அறிஞர்களுக்கு முக்கியத்துவம்
வாய்ந்தது. மீ மாம்சத்தின் தலையாய பணிகள் என்பன வேத நூல்கள் குறித்த பொருள்
விளக்கம், அவற்றால் எடுத்துச் சொல்லப்படும் சடங்குகளை நிறைவேற்றல் ஆகியன. வேதம்
தனி நபரைச் சார்ந்தது அல்ல. அது அழிவில்லாதது, சுயமாகத் தோன்றி இருப்பு கொண்டது.
அதற்குப் பேசுபவரும் இலர்; எழுதுபவரும் இலர். அதன் இருப்பில் எந்தக் களங்கமும் இருக்க
வாய்ப்பில்லை(7).

மனித வாழ்வு முக்தி அடைவதற்கு கருமம்(யாகம்) செய்தல் வேண்டும் என்பதே மீ மாம்சத்தின்


உள்ளடக்கம். கருமம் செய்தல் இன்றி வாழ்வில் இன்பம் இல்லை. கருமம் செய்தலே
முக்திக்கான தருமம். கடவுளர்கள் மொழிந்த வேதத்தை வழிமொழிவதற்கு சமற்கிருதமே
குறையற்ற நிறையுடைய மொழி. வேதங்களின் மெய்ப்பொருள் வேறு மொழிகளின் வழியாக
வெளிப்பட்டிருக்க முடியாது. எனக் கூறுகிறார் சைமினி. வேதங்கள் இறைத்தன்மை வாய்ந்தவை
என்ற தனது மிதமிஞ்சிய நம்பிக்கையை சைமினி வெளிப்படையாகவே காண்பிக்கிறார்.
வேதங்கள் நிலையானவை, இயற்றப்பட்டவை அல்ல என்று கூறுவதோடு அவர் நின்று
விடுவதில்லை. வேதங்களின் முன்பு கடவுளர்கள் கூட அற்பமானவர்கள் என்கிறார்.
வேதங்களும் பிராமணங்களும் மனிதனுக்குத் தேவையான அனைத்து மெய்யறிவையும்
கொண்டுள்ளன என சைமினி கூறுகிறார். இந்த மீ மாம்ச சிந்தனையில் மெய்யறிவு என்பது
சிறிதுகூட இல்லை. எனினும் இந்துக்களுடைய அன்றாட வாழ்க்கையின் எல்லாவிதமான
சமயச் சடங்குகளும், குடும்ப விழாக்களும் மீ மாம்சத்தைச் சார்ந்தே உள்ளன. இந்துச் சட்டங்கள்
அனைத்தும் மீ மாம்ச அடிப்படையில்தான் செய்யப்பட்டுள்ளன. இந்தியப் பண்பாட்டின் உயிர்
நாடியே மீ மாம்சம்தான் எனக் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(8).

ஒட்டுமொத்தமாக கடவுளைவிட வேதமே உயர்ந்தது என்று கருதுபவர்கள் மீ மாம்சவாதிகள்.


வேதகாலச் சடங்குகளின், மந்திரங்களின், வேள்விகளின் புனிதத்தைப் பாதுகாப்பதுதான்
மீ மாம்சத்தின் நோக்கம். இந்த சடங்குகள், மந்திரங்கள், வேள்விகள் ஆகியவற்றை நடத்த
அதிகாரம் கொண்டிருப்பதன் மூலமே பார்ப்பனன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறான்.
அதனால்தான் கடவுளும் இவனிடம் அடக்கம் எனக் கூறப்படுகிறது. ஆக இந்த மீ மாம்ச
தத்துவம் பார்ப்பனியத்தின் அடிப்படையைப் பாதுகாக்கிறது. அதன் மூலம் நால் வருண சாதி
முறையையும் பாதுகாக்கிறது எனலாம்.
பிரம்ம சூத்திரம்:

வேதாந்தம் என்பது வேதத்தின் முடிவு, அதாவது வேதநூல்களின் கடைசிப் பகுதியான


உபநிடதங்கள் என்று பொருள் கொள்ளப்படுகிறது. உபநிடத மூலப்பொருள்களிலிருந்து
ஒத்திசைவான ஓர் ஒற்றை மெய்யியலை மெய்ப்பித்துக் காட்டுவதற்கான முயற்சிதான் பிரம்ம
சூத்திரம் என்ற நூல். உபநிடதங்களில் உள்ள ஆன்மா சார்ந்த தத்துவக் கருத்துகளைத்
தொகுத்து, ஒழுங்கு செய்து 555 சூத்திரங்களைக்கொண்ட ‘பிரம்ம சூத்திரம்’ என்கிற நூலை
எழுதியவர் பாதராயணர். இதன் காலம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு என்கிறார் தாசுகுப்தா. சிலர்
இதன் காலத்தை கி.பி. 2 ஆம் நூற்றாண்டு எனக் கூறுகின்றனர். பிரம்ம சூத்திரம் இலக்கியமாக
உருப்பெற்ற காலம் தெரியவில்லை. இதன் சூத்திரங்களை உரையாசிரியர் உதவியின்றிப் புரிந்து
கொள்ளமுடியாது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டு சங்கரர், கி.பி. 11 ஆம் நூற்றாண்டு இராமானுசர்
ஆகிய இருவரின் பிரம்ம சூத்திர உரைகள்தான் சிறந்தன. இருவருமே தமிழகத்தைச்
சேர்ந்தவர்கள். பிரம்ம சூத்திரம் தொல்கபிலரின் சாங்கியத்தைப் பிரதானவாதம் என்கிறது.
பிரதானம் என்பது முதன்மைப் பொருள். சாங்கிய வாதிகள் முதன்மைப்பொருள் இயற்கை
விதிகளின் காரணமாக மாறுதலடைந்து உலகம் தோன்றியது என்பர். சாங்கியம் சுபாவவாதம்
என்கிற இயற்கை விதிக்கொள்கை எனவும் சொல்லப்படுகிறது. பௌத்த மதக் கோட்பாடுகள்
சாங்கியத்திலிருந்து தோன்றியவை என்கிறார் அசுவகோசு. சாங்கியக் கொள்கைகள்
வேதங்களுக்கு எதிரானவை என்கிறது பிரம்ம சூத்திரம். அதனால் கருத்து முதல்வாதிகளான
சங்கரர், இராமானுசர் போன்றவர்கள் சாங்கியத்தைத் தமது முக்கிய எதிரியாகக் கொண்டார்கள்.
சங்கரரின் பிரம்ம சூத்திர உரை, சாங்கியத்தை எதிர்க்க 60 சூத்திரங்களைப்
பயன்படுத்தியுள்ளது(9).

கடவுளும் ஆன்மாவும் ஒன்றே என்பது சங்கரரின் கோட்பாடு. அது அத்வைதம் எனப்பட்டது.


இரண்டும் வேறு வேறு என்பது இராமானுசரின் கோட்பாடு. அது துவைதம் அல்லது
விசிசுடாத்வைதம் எனப்பட்டது. உலகம் மாயத் தோற்றமானது எனக் கூறுகிறார் சங்கரர். அதே
சமயம் அவர் வைதீக பார்ப்பனியத்தை, அதன் நால்வருண சாதியத்தை ஆதரிக்கிறார்.

பிரும்மம் பருப்பொருட்களால் ஆனது அல்ல. அதைப் புலன்களால் உணர முடியாது;


உள்ளத்தால் மட்டுமே உணர முடியும். உயிருள்ள மற்றும் சடப்பொருட்கள் அனைத்தும்
பிரம்மத்திலிருந்தே தோன்றுகின்றன. உலகம் நிலையற்றது; பொய்யானது; அழிவுறும்
தன்மையுடையது. ஆனால் பிரும்மம் மெய்யானது; அழிக்க முடியாதது; என்றும்
நிலைத்திருப்பது. சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுதான். வழிதறிச்செல்லும் சீவாத்மா
பரமாத்மாவிடம் இருந்து பிரிந்து விடுகிறது. பின் தவறிலிருந்து மீ ண்டு வரும் சீவாத்மா
பரமாத்மாவுடன் இணைந்து விடுகிறது என வேதாந்திகள் கூறுகிறார்கள். வேதாந்தத்தின்
அடிப்படை வாதங்களோடு முரண்படும் எல்லாவிதமான சிந்தனைப் போக்குகளையும் வேதாந்த
ஆதரவாளர்கள் தடை செய்தார்கள். வேதாந்தம் உள்ளடக்கத்தில் மீ மாம்சத்தோடு எந்த
வகையிலும் வேறுபட்டது அல்ல. இந்திய வரலாற்றில் புரோகித ஆட்சிக்கு வழியமைத்துக்
கொடுத்ததில், வேறெந்தப் பழமைவாதச் சிந்தனைப் பள்ளிகளையும்விட வேதாந்தம் தீவிரமான
பாத்திரம் வகித்தது. வகித்துக் கொண்டு வருகிறது எனக் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(10).

அம்பேத்கரின் கருத்துகள்:

மீ மாம்ச சூத்திரம், பிரம்ம சூத்திரம் எழுதிய ஆசிரியர்களின் நூல்கள் குறித்து, “சைமினியின்


மீ மாம்ச சூத்திரமும், வாதராயணாரின் பிரம்ம சூத்திரமும் ஆரிய இலக்கியங்களே. ஒரேவகைக்
கருத்துகளை உடைய வாதராயணாரும், சைமினியும் ஒன்றிணைவது இயற்கையே. ஒருவர்
ஒரு செயல் நடந்ததற்கான காரணங்களை ஆராயும்போது மற்றொருவர் அதன் காரியங்களைக்
காண்கிறார். சொல்லாக்கம் செயல்முறைகளில் வாதராயணார் சைமினியை பின்பற்றியுள்ளார்.
சைமினி கையாளும் ஒலிமுறை ஆராய்ச்சி மாதிரியை அப்படியே வாதராயணார் ஏற்றுக்
கொண்டுள்ளார். அவர் கையாண்ட எடுத்துக் காட்டுகளையே இவரும் கையாண்டுள்ளார். இது
ஆச்சரியம் தருகிறது. ஆனால் ஆச்சரியப்படாதது, சித்தாந்தத்தின் மீ து இந்த இரு பிரிவினரும்
கொண்டுள்ள போக்கு”. என அம்பேத்கர் கூறுகிறார்(11). இந்த இருவரின் கோட்பாடுகளும் அவரது
கருத்துகளும் பலவகைகளில் மாறுபடுகிறது என்பதை அம்பேத்கர் விரிவாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த இருவரும் ஒருவர் மீ து ஒருவர் கூறும் கருத்துகள் குறித்து அம்பேத்கர், “சைமினி
வேதாந்தங்கள் யாவும் பொய்யுரைக்கும் சாத்திரங்கள் என்று அவற்றைத் தள்ளிவிடுகிறார்.
அவற்றில் கூறப்படும் கருத்துகள் அறிய முடியாதவை, மிகைப்படக் கூறப்பட்டவை, மனிதச்
செயலுக்கு அப்பாற்பட்டவை, மனிதனுக்குத் தேவையற்றவை எனக் கூறுகிறார். சைமினியின்
கர்மகாண்ட கோட்பாடு ஒரு பொய்யான சமயம் என்பதே வாதராயணாரின் கருத்து. ஆனால்
சைமினியின் கர்மகாண்ட கோட்பாடு வேதங்களில் கூறப்பட்டிருப்பதால் வாதராயணார்
வெளிப்படையாக கர்மகாண்ட கோட்பாட்டை எதிர்க்கவில்லை. எனவே அவர் வேதாந்தக்
கோட்பாடுகளும் உண்மையானவையே எனவும் அவை வேதங்களைத் தழுவியே உள்ளன
எனவும் கூறுகிறார்” எனக் குறிப்பிடுகிறார்(12). இந்த மீ மாம்சம், பிரம்மசூத்திரம் ஆகிய இரண்டும்
ஒன்றையொன்று எதிர்ப்பது போன்று தோன்றினாலும் அவை இரண்டுமே வேதங்களைப்
புனிதமாகக் கருதுபவை என்பதும் வைதீக பார்ப்பனியத்தையும் அதன் சாதியத்தையும்
ஆதரிப்பவை என்பதும்தான் இங்கு முக்கியம்.

பகவத்கீ தை:

‘கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் கீ தை இந்துக்களின் புனித நூலாக ஏற்றம் பெற்றது. கி.பி. 4 ஆம்
நூற்றாண்டிற்கு முன்னதாக இல்லாவிடினும் அதே காலகட்டத்தில்தான் இந்தியா இருண்ட
காலத்தில் மூழ்கியது எனக் கூறுகிறார்’ பிரேம்நாத் பசாசு(13). மேலும் அவர், ‘நடுநிலை
மனப்பான்மையோடு தனிப்பட்ட முன்முடிவுகளுக்கு இடமளிக்காமல் கீ தையை படித்தால், அது
ஆன்ம விடுதலைக்கான அல்லது உலகியல் வாழ்வில் முன்னேறுவதற்கான ஒரு வழிகாட்டி
அல்ல என்பது தெரியவரும். உயர்தரமான சில கோட்பாடுகளை அது கூறுகிறது என்பது
உண்மைதான். விழுமிய சிந்தனைகள் சிலவற்றை அது கொண்டுள்ளது என்பதையும்
மறுப்பதற்கில்லை. மன எண்ணங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான சில
நல்லொழுக்கங்களையும் அது கற்பிக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மனித
முன்னேற்றத்தைப் பாழ்படுத்துவதற்கும் சமூகத்தீமைகளை வளர்ப்பதற்குமே கீ தையின்
போதனைகள் பயன்படும். பயன்பட்டும் வருகிறது. உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட,
சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், கிடைப்பதில் மனநிறைவு பெற்று,
எதிர்த்துக் கேள்வி கேட்காது அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும்
மனப்பான்மையை வளர்த்து விடவும் விரக்தியுற்றுப் போன சமூகத்தை கிளர்ந்தெழவிடாமல்
அடக்கி வைத்துக் கொள்வதற்கும் உயர் வர்க்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுவதே கீ தையின்
தத்துவம்’ எனக் கூறுகிறார்(14).

பேராசிரியர் கார்பேயின் (Richard Garbe) கணிப்புப்படி பகவத் கீ தை எழுதப்பட்ட காலம் ஏறத்தாழ


கி.பி. 200-கி.பி. 400 க்கும் இடைப்பட்ட காலம் எனவும் அதன் பாடல்களில் 146 பாடல்கள்,
அதாவது ஐந்தில் ஒரு பங்கு இடைச்செருகல்கள் எனவும் கூறுகிறார் அம்பேத்கர். மேலும்
அவர், இராசாராம் சாத்திரியின் கருத்துப்படி மொத்தம் 60 பாக்கள்தான் மூலப்பாக்கள், மற்றவை
இடைச்செருகல் செய்யப்பட்டவை எனவும் உறம்போல்டு என்பாரின் கருத்துப்படி பகவத்
கீ தையிலுள்ள 11 அத்தியாயங்கள்தான் மூல அத்தியாயங்கள். மீ தியுள்ள 12-18 அத்தியாயங்கள்
பின்னால் எழுதப்பட்டு மூலத்தோடு சேர்க்கப்பட்டவை எனவும் கூறுகிறார்(15).

புறக்கடை வழியே பார்ப்பனியம் - பிரேம்நாத் பசாசு:

பழைய புரோகிதப் பிழைப்புக்கான அத்தனை சாத்திரங்களும், சடங்குகளும், நீர்த்தெளிக்கப்பட்டு


கீ தையில் புனிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. எதையும் சந்தேகக்கண்கொண்டு துருவிப்பார்க்காத
வாசகர்கள் குற்றம் சொல்ல முடியாதபடியும், குறை காணாத அளவிலும் பார்ப்பனிய
நச்சுக்கொள்கைகள் தேன் தடவித்தரப்பட்டுள்ளது. செல்லரித்துப் போயிருந்த பார்ப்பன சாத்திர
சம்பிராதயங்கள் அனைத்தும் கீ தையில் கவிதை ஆக்கப்பட்டு நிலைத்திருக்கச் செய்து
விட்டார்கள். இந்தியச் சமூகத்தின் சாபக்கேடான சாதி குறித்துக் கீ தையில் ‘குணத்திற்கும்
கருமத்திற்கும் ஏற்றவாறு நான்கு வருணங்களை நான் தான் படைத்தேன். நானே அந்தக்
கருமத்தைச் செய்தவன் என அறிந்து கொள்’ என கிருசுணன் அழுத்தம் திருத்தமாகக்
கூறுகிறான். சாதிய முறைக்கு உயிர்கொடுத்த இந்தப் புதிய பார்ப்பனியத்தின் தலைவன்,
சாதியமுறை என்பது சமூக வாழ்வின் இயல்பான உண்மை என்று ஒளிவு மறைவு இன்றிக்
கூறுகிறான். இவை பிரேம்நாத் பசாசு கூறுபவை(16).

சாதி அடிப்படையிலான இந்திய சமூகத்தை நிலைநிறுத்தி, அதில் பார்ப்பனனை உயர்நிலையில்


அமர்த்திய கீ தையின் ஆசிரியர் யாகம் செய்வதை மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத
சடங்காக உறுதிப் படுத்துகிறார். ஞானத்தின் பயனே யாகம் செய்வதுதான் என்றும், யாகம்
நிறைவேற்றுவதே வாழ்க்கையில் அடைய வேண்டிய உயர்ந்த குறிக்கோள் என்றும் கிருசுணன்
அறிவுறுத்துகிறார். யாகம் என்ற பெயரால் பரமாத்மா முழுமையான பார்ப்பனச் சடங்குகளையே
இங்கு சுட்டிக் காட்டுகிறார். வேத சாத்திரங்களுக்கு மாறாகச் செய்யப்படுவதும்,
அன்னதானமற்றதும், யாக தட்சிணை கொடுக்கப்படாததும், மந்திரங்கள் ஓதப்படாததும்,
பக்தியற்றதுமான யாகங்கள் இருள் என்று கூறப்படுகிறது. இவை இறுதியில் பார்ப்பனனுக்கு
யாக தட்சிணையை தாராளமாக வழங்குவதற்குத் தூண்டுவதிலும் அந்த நடைமுறையை
உறுதிப் படுத்துவதிலும்தான் வந்து முடிகிறது.

அதே சமயம் சாங்கிய யோகம் பற்றிய விவாதத்தில் கிருசுணன் ஞானமுள்ளவனுக்கு


வேதங்கள் பயனற்றவை என வேதத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கூறியுள்ளார்.
ஆனால் அர்ச்சுனனிடம், ‘வேத சாத்திரங்களின் கட்டளைப்படியே நீ இவ்வுலகில்
செயல்படவேண்டும்’ என அறிவுரை கூறுகிறார். மேலும் அவர் அவனிடம், பார்ப்பனிய
சாத்திரங்கள் கூறாத பக்தி முயற்சிகளில் ஈடுபடும் அறிவிலிகள் தங்கள் உள்ளத்தையும், அதில்
உறையும் என்னையும் வதைக்குள்ளாக்குகிறார்கள் எனக் கூறுகிறார். அதே சமயம், வேதத்துக்கு
முக்கியம் தரும் வகையில், ‘வேதங்கள் அனைத்தினின்றும் உணரப்படும் பொருள் நானே.
வேதத்தை இயற்றியவனும் நானே, வேதத்தை அறிந்தவனும் நானே, இரிக் யசூர், சாம
வேதங்களும் நானே’ என கிருசுணன் கூறுகிறான். செத்து மண்ணாகிப் போய்விட்ட வேத
சமூகங்களின் கடைகேடான நம்பிக்கைகளும், இழிசடையான புரோகிதச் சடங்குகளும் மூட
நம்பிக்கையே கருவாகிய பார்ப்பனிய சமயக் கோட்பாடுகளும் புத்துயிர்பெற்றுப் பகவத்
கீ தையில் கீ தம் பாடிக் கொண்டிருக்கின்றன. இறுதியாக பார்ப்பனியம் நிலை
நாட்டப்படுவதற்குத் தேவையான கந்தலாகிப்போன பழைய பார்ப்பன நம்பிக்கைகளையும்
சடங்கு முறைகளையும் சாத்திரங்களையும் ஒன்று விடாமல் கீ தையில் பாடி வைத்துப்
பார்ப்பனியத்தைப் புறக்கடை வழியாக நுழைத்து விட்டார்கள் எனக் கூறுகிறார் பிரேம்நாத்
பசாசு(17).

மகாபாரதம் - அம்பேத்கர்:

மகாபாரதம் மூன்றுமுறை மூலத்திலிருந்து திருத்தி எழுதப்பட்டுள்ளது. வியாசர் எழுதிய மூல


நூலுக்கு வெற்றி என்பதுதான் பெயராக இருந்தது. அதில் 8800 க்கும் குறைவான பாடல்களே
இருந்தன. இது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த போரைப்பற்றிக்கூறும்
சிறு நூலாக இருந்தது. இதனை இரண்டாவதாக எழுதிய வைசம்பாயணர் என்பவர் பாரதம்
என்ற பெயருடன் 24000 பாடல்களைக்கொண்டதாக மாற்றினார். முதல் நூலைவிட இது சுமார்
மூன்று மடங்காக ஆகி இருந்தது. மூலக்கதையோடு பல்வேறு அறிவுரைகள் இடம்பெற்றன.
சாதாரண வரலாற்று நூலாக எழுதப்பட்ட இந்நூல் சமூகத் தார்மீ க, சமய கோட்பாடுகளைப்
போதிக்கும் ஒரு கட்டளை நூலாக வடிவமெடுத்தது. கடைசியாக எழுதிய சவுதி இத்துடன் பல
தனித்தனிக் கதைகளையும் தொல்கதைகளையும் இணைத்து வெளியிட்டார். மகாபாரதம் சகல
அறிவும், கலையும் நிறைந்த ஒரு கருவூலமாகத் திகழ வேண்டும் என அவர் விரும்பினார்.
ஆகவே சவுதியின் பாரதம் 96,836 பாடல்களைக் கொண்டதாக இருந்தது(18).

இதன் காலம் பொதுவாக கி.பி. 200 இல் இருந்து கி.பி. 400 ஆக இருக்க வேண்டும் என
பேராசிரியர் ஆப்கின்சு கூறுகிறார். மகாபாரதம் மிலேச்சர்கள் அல்லது இசுலாமியர்கள் குறித்துக்
குறிப்பிடுகிறது. 190 ஆவது அத்தியாயம் வனப்பருவம் பாடல் 29 இல் “இந்த உலகம்
முழுவதுமே இசுலாமிய உலகமாகவே மாறிவிடும், இதனால் யாகங்கள், புனிதமான சடங்குகள்,
சமய விழாக்கள் யாவுமே அற்றுப்போகும்” என மகாபாரத ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதன்
மூலம் இசுலாமியப் படையெடுப்பு இந்தியாவின் மீ து நடைபெற்ற பின்னரே மகாபாரதம் இறுதி
செய்யப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறுகிறார் அம்பேத்கர். மீ ண்டும் சில ஆய்வுகளுக்குப்
பின்னர், முகம்மது கோரியின் படையெடுப்பு வரை, அதாவது கி.பி. 1200 வரை மகாபாரதம் எழுதி
முடிக்கப்படவில்லை எனக் கூறுகிறார் அம்பேத்கர்(19) ஆகவே மகாபாரதம் தொடர்ந்து
மாற்றப்பட்டு வந்துள்ளது என்பது உறுதியாகிறது. வைதீக பார்ப்பனியத்தை, அதன் நால்
வருணச் சாதியத்தை போற்றிப் பாதுகாக்கும் இதிகாசமாகவே மகாபாரதம் இருந்து வந்துள்ளது.
இன்றும் இருக்கிறது என்பதே இங்கு மிக முக்கியம்.

இராமாயணம் – அம்பேத்கர்:

மகாபாரதம் போலவே இராமாயணமும் மூன்று பதிப்புகளாக திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.


இன்றுள்ள நூல் வால்மீ கி எழுதிய மூல நூல் அல்ல எனவும் அது பிற்காலத்தில் போதிய
அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனவும் சி.வி. வைத்யா கூறுவதாக அம்பேத்கர்
குறிப்பிடுகிறார். முதலில் இக்கதை சீதையைக்கடத்தியதால் ஏற்பட்ட, இராமனுக்கும்
இராவணனுக்கும் இடையேயான போரைப்பற்றிய வரலாற்றுச் சிறுகதையாகவே இருந்தது.
இரண்டாவது பதிப்பில் சமூகம், நீதி, சமயம் ஆகியவற்றிற்கு மக்கள் ஆற்ற வேண்டிய
கடமைகளைப்பற்றி எடுத்துரைக்கும் ஒரு அறிவுரை நூலாக மாறியது. மூன்றாவது பதிப்பில்
தொல்கதைகள், அறிவு, கல்வி, தத்துவம், கலை முதலிய அனைத்தையும் கொண்ட கருவூலமாக
ஆகிப்போனது எனவும், இராமாயணத்தை எழுதிய காலமும் மகாபாரதத்தை எழுதிய காலமும்
ஒன்றாகவே இருந்தாக வேண்டும் எனவும் அம்பேத்கர் கூறுகிறார்(20). இந்த இதிகாசமும்
வைதீக பார்ப்பனியத்தை, அதன் நால் வருணச் சாதியத்தைப் போற்றிப் பாதுகாப்பதாகவே
இருந்து வருகிறது. இந்த இரண்டு நூல்களும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில்தான் முதலில்
எழுதப்பட்டன. அன்றே அவைகளின் நோக்கம் என்பது வைதீக பார்ப்பனியத்தை, அதன்
சாதியத்தைப் பாதுகாப்பதுதான்.

புராணங்கள் – அம்பேத்கர்:

முதலில் ஆதி புராணம் என்ற புராணம் இருந்தது. இது தனிப்புராணம் அல்ல. இன்றைய 18
புராணங்களின் முதல் பதிப்பு தான் ஆதி புராணம். பழங்காலத்தில் படித்தவர்கள் இருவகையாக
இருந்தனர். ஒருவர் பார்ப்பனர். அடுத்தவர் சூதர்கள். இந்த சூதர்கள்தான் தொடக்க காலப்
புராணங்களை இயற்றியவர்கள். தொடக்க காலத்தில் புராணங்கள் அறிவுக் களஞ்சியங்கள்
எனப்பட்டன. இந்த புராணங்கள் அண்ட கோளங்களின் உருவாக்கம், அதன் அழிவு, குலவழி மரபு,
பதினான்கு மனுக்கள் தோன்றி பூமியை பரிபாலனம் செய்த விடயம், அரசவம்ச பரம்பரை
ஆகிய ஐந்து பொருள்கள் குறித்துப் பேசின. இவை அவற்றின் எல்லைகள்.

ஆனால் பிற்காலத்தில் அவை இந்த எல்லைகளைத் தாண்டி புதிய பொருள்கள் குறித்து


நிறையப்பேசின. புதிய பொருள்கள், 1.சுமிருதி தருமம். இதில் வருணாசிரம தருமம், ஆசாரம்,
அணிகம், பாசியபாசியம், விவாகம், அசௌசம், சிரத்தை, திரவிய சுத்தி, படகம், பிராயச்சித்தம்,
நரகம், கர்மவியாபகம், யுகதருமம் ஆகியன உள்ளன. 2.விரகதருமம் - புனித நாட்களையும்,
சத்தியங்களையும் கடைப்பிடித்தல், 3.சேத்திர தருமம் – புனித இடங்களுக்குப் பயணம்
மேற்கொள்ளுதல், 4.தான தருமம் – புனிதர்களுக்குக் கொடை வழங்குதல் ஆகியன. இவை தவிர
கடவுள்களை வழிபடுவது குறித்தும் கடவுளின் அவதாரங்கள் குறித்தும் புராணங்கள் பேசின.
கடவுள்களை வழிபடும் புராணங்கள் 18. அவை, விசுணுவை வணங்குவது குறித்து 5 புராணம்,
சிவனை வணங்குவது குறித்து 8 புராணம், சூரியனை வணங்குவது குறித்து ஒரு புராணம்,
தேவியை வணங்குவது குறித்து 2 புராணம், கணேசனை வணங்குவது குறித்து ஒரு புராணம்,
பிரம்மாவை வணங்குவது குறித்து ஒரு புராணம் ஆகியன(21).

இந்தப் புராணங்களை முதலில் எழுதிய சூதர்களிடமிருந்து, கி.பி. 2 ஆம் நூற்றாண்டிற்குப் பின்


பார்ப்பனர்கள் புராணங்களை எழுதும் பணியைத் தாங்கள் எடுத்துக் கொண்டு புராணங்களைத்
தங்களுக்கு ஏற்றவாறு திருத்தி எழுதிக் கொண்டனர். அப்பொழுதான் எல்லைகளைத் தாண்டி
புதிய பொருள்களைப் பற்றிப் புராணங்கள் பேசின எனக் கருதலாம்.

புராணங்களின் காலத்தை அசாரா என்பவர் கணித்துள்ளதாக அம்பேத்கர் கூறுகிறார்.


அவைகளின் பட்டியலையும் அவர் இணைத்துள்ளார்(22).

1.மார்க்கண்டேய புராணம் : கி.பி. 200-400

2.வாயு புராணம் : கி.பி. 200 – 500

3.பிரம்மானந்த புராணம் : கி.பி. 200 – 500

4.விசுணு புராணம் : கி.பி. 100 – 350

5.மச்சய புராணம் (இரு பகுதிகள்) : கி.பி. 325 & கி.பி. 1100.

6.பாகவத புராணம் : கி.பி. 500 – 600


7.கூர்ம புராணம் : கி.பி. 550 – 1000

8.வாமன புராணம் : கி.பி. 700 – 1000

9.இலிங்க புராணம் : கி.பி. 600 – 1000

10.வராக புராணம் : கி.பி. 800 – 1500

11.பத்ம புராணம் : கி.பி. 600 – 950

12.பிரக நாரதீய புராணம் : கி.பி. 875 – 1000

13.அக்னி புராணம் : கி.பி. 800 – 900

14.கருட புராணம் : கி.பி. 850 – 1000

15.பிரம்ம புராணம் : கி.பி. 900 – 1000

16.கந்த புராணம் : கி.பி. 700 க்குப் பிறகு

17.பிரம்ம வைவரத புராணம் : கி.பி. 700 க்குப் பிறகு

18.பவிசுய புராணம் : கி.பி. 500 க்குப் பிறகு.

இந்தப் புராணங்கள் கடவுள்கள் குறித்தும் அவர்களின் அவதாரங்கள் குறித்தும் கடவுள்களை


வணங்குவது குறித்தும், பல்வேறு தருமங்கள் குறித்தும் பேசுகின்றன. கி.பி. 2 ஆம்
நூற்றண்டிற்குப் பிறகு தான் பார்ப்பனர்கள் இவற்றை எழுதியுள்ளனர். ஆகவே இவை
அனைத்துமே வைதீக பார்ப்பனியத்தை, அதன் சாதியத்தைப் பாதுகாப்பதாகவே இருந்தன.
சாதாரண பொதுமக்களிடம் இவை எளிதாகப் பரவின. ஆகவே இவற்றின் மூலம் தங்கள்
கருத்துக்களைப் பொது மக்களிடம் கொண்டு செல்லவே பார்ப்பனர்கள் இவைகளைச்
சூதர்களிடம் இருந்து கைப்பற்றித் தாங்களே தேவையான திருத்தங்களைச் செய்து புதிய
முறையில் புராணங்களை எழுதினர்.

பார்வை:

1.இந்திய வரலாற்றில் பகவத்கீ தை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன், விடியல்
பதிப்பகம், சனவரி-2016, பக்: 216.
2, 3, 4, 5. தமிழகத்தில் பார்ப்பனர்கள் (The Brahmin in the Tamil Country), ந.
சுப்ரமணியன்(N.Subrahmanian), தமிழாக்கம்: பேராசிரியர் மு.வி. சோமசுந்தரம், பெரியார் சிந்தனை
உயராய்வு மய்யம், 2018, பக்: 75-77.
6. நா. வானமாமலை, இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும், அலைகள்
வெளியீட்டகம், 2009, பக்:68-70; & தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, இந்தியத் தத்துவம் (Indian
Philosophy) - ஓர் அறிமுகம், தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, படைப்பாளிகள் பதிப்பகம், 2010. பக்:
118.
7. இந்தியாவில் மெய்யியல், மிருணாள் காந்தி, காங்கோபாத்தியாயா, தமிழில் – சா. செயராசு,
NCBH, டிசம்பர் – 2011, பக்: 74 – 77.
8. இந்திய வரலாற்றில் பகவத்கீ தை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன், விடியல்
பதிப்பகம், சனவரி-2016, பக்: 95 – 100.
9. தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா (Chhatopadhyay, Debiprasad), இந்தியத் தத்துவம்- ஓர்
அறிமுகம், தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, படைப்பாளிகளின் பதிப்பகம், 2010. பக்: 201-209; &
உலகாயதம் (Ulagayatham, A Study in Ancient Indian Materialism), தேவி பிரசாத் சட்டோபாத்யாயா,
தமிழில் எசு. தோதாத்ரி, NCBH, சூன் 2010, பக்: 486-513.
10. இந்திய வரலாற்றில் பகவத்கீ தை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன், விடியல்
பதிப்பகம், சனவரி-2016, பக்: 101 - 105.
11. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 146.
12. பக்: 146, 152.
13. இந்திய வரலாற்றில் பகவத்கீ தை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன், விடியல்
பதிப்பகம், சனவரி-2016, பக்: 16.
14. பக்: 18, 19.
15. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 127 – 130.
16, 17. இந்திய வரலாற்றில் பகவத் கீ தை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன்,
விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்: 328, 329.
18, 19, 20. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 135 - 140
21. பக்: 140 – 143.
22. பக்: 144 – 155.

You might also like