You are on page 1of 8

பெற்றோர் ஆசிரியர் சங்கம்

தேசிய வகை செலாபா தோட்டத் தமிழ்ப்பள்ளி

36000 தெலுக் இந்தான்

நாள்: 28.5.2022 (சனிக்கிழமை)


நேரம்: மாலை 4.30
இடம்: தேசிய வகை செலாபா தோட்டத்தமிழ்ப்பள்ளி மண்டபம்

நிகழ்வுச்சாரம்

1.0 இறை வணக்கம்


1.1 இன்றைய நிகழ்வு இறை வணக்கத்துடன் ஆரம்பமானது.

2.0 வரவேற்புரை
2.1 பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் திருமதி சரஸ்வதி
சஞ்சிராயன் அவையினரை 32 வது பெற்றோர் ஆசிரியர் சங்கக்
கூட்டத்திற்கு வருகை தந்தமைக்கு தன்னுடைய நன்றியைத்
தெரிவிவித்தார்.

3.0 சங்க தலைவர் உரை


3.1 திருமதி இரா.புஷ்பா, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவி
உரையாற்றினார்.
3.2 32 வது பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்திற்கு வருகைப்
புரிந்த அனைவருக்கும் வாழ்த்துகளையும் நன்றியையும்
தெரிவித்துக் கொண்டார்.
3.3 பெற்றோர் ஆசிரியர் சங்கம் எப்பொழுதும் தங்களது
ஒத்துழைப்பை பள்ளிக்கு நல்கும் என்பதனைத் தெரிவித்தார்.
3.4 மாணவர்கள் கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும்
பல்வேறு வெற்றிகளைப் பெற அல்லும் பகலும் பாடுபடும்
பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கும் தனது
நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
3.5 பெற்றோர் ஆசிரியர் சங்கம் பள்ளியின் திட்டங்களுக்கு முழு
வகையிலும் ஒத்துழைப்பு நல்கும் என்பதையும் தெரிவித்துக்
கொண்டார்.

4.0 ஆலோசகர் உரை

4.1 தலைமையாசிரியர் வருகை புரிந்த பெற்றோர் ஆசிரியர் சங்க


உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அனைவருக்கும்
நன்றி கூறி வரவேற்றார்.
4.2 அவ்வப்போது பள்ளிக்கு உறுதுணையாக இருந்து சேவைகள்
ஆற்றி வரும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு தாம் மிகவும்
கடமைப்பட்டிருப்பதாகக் கூறினார்.
4.3 பள்ளிக்கு மட்டம் போடும் மாணவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு
காணும் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய பெற்றோருக்கு
நன்றிக் கூறிக் கொண்டார்.
4.4 2020 ஆம் ஆண்டு முதல் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு இரத்து
செய்யப்பட்டதையும், தற்போது பள்ளி அளவிலான தர மதிப்பீடு
(PBD) அமலுக்கு வந்திருப்பதாகக் கூறினார்.
4.5 கீழ்க்கண்ட புதிய மாற்றங்களுக்கான விளக்கங்களை
வழங்கினார்:
4.5.1 கோவிட் 19
4.5.2 நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை
4.5.3 யூ.பி.எஸ் ஆர் இரத்து
4.5.4 இல்லிருப்புக் கற்றல்
4.5.5 கல்வி அமைச்சின் கோட்பாடு
4.6 பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு
பெற்றோரின் வருகை அதிகரிக்கப்பட வேண்டும், இதற்கு
பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் முயற்சிக்க வேண்டும்
எனக் கேட்டுக் கொண்டார்.
4.7 மேலும் தனது உரையில், பள்ளிக்கு வருகை தரும் பெற்றோர்
மறவாமல் பள்ளி வருகை புத்தகத்தில் பெயரை எழுதுமாறும்,
உடல் வெப்ப நிலையை சோதிக்கும்படியும், தவறாமல்
முகக்கவரி அணிந்து வரும்படியும், கைகளில் கைத்தூய்மையும்
பயன்படுத்திய பின் ஆசிரியர்கள் அல்லது பிள்ளைகளை
சந்திக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.
4.8 தினசரி பள்ளிக்கு வருகை புரியும் மாணவர்களின் தரவு APDM
எனும் செயலியின் வழி பதிவு செய்யப் படுகிறது, ஆகையால்
சரியான காரணம் மற்றும் மருத்துவச் சான்றிதழ்
இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத்
தெரிவித்தார்.

5.0 2022/23 ஆம் ஆண்டு பொதுக்கூட்டச் செயலறிக்கையை வாசித்து


ஏற்றல்.

5.1 செயலாளர் திருமதி. ச. சரஸ்வதி 2022/2023 ஆண்டு


பொதுக்கூட்டச் செயலறிக்கையை வாசித்தார்.
முன்மொழிந்தவர் : திருமதி.திலகா
வழிமொழிந்தவர்: திருமதி.சாந்தி
6.0 2022/2023 ஆம் ஆண்டு நடவடிக்கைகள், திட்டங்களை வாசித்து ஏற்றல்

6.1 செயலாளர் திருமதி.ச.சரஸ்வதி கடந்த ஆண்டு நடத்தப்பட்ட


நடவடிக்கைகளையும் திட்டங்களையும் அறிக்ககையின் ஊடே
வாசித்தார்.
முன்மொழிந்தவர்: திருமதி. திலகம்
வழிமொழிந்தவர்: திருமதி நாகம்மாள்

7.0 2022/2023 ஆம் ஆண்டு கணக்கறிக்கையை வாசித்து ஏற்றல்

7.1 பொருளாளர் திருமதி.இரா.விஜயா கணக்கறிக்கையை


வாசித்தார்.
முன்மொழிந்தவர்: திருமதி நாகம்மாள்
வழிமொழிந்தவர்: திரு.சந்திரன்

8.0 2022/2023 ஆம் ஆண்டிற்கான புதிய செயலவை உறுப்பினர்கள் தேர்வு

8.1 2022/2023 க்கான செயலவை உறுப்பினர்களிடையே எந்த


மாற்றமும் இல்லை.
8.2 இதற்கு முன் இருந்த துணைத் தலைவர் திரு.மகேந்திரன்
காலமானதால்
அவருக்குப் பதிலாக திருமதி திலகா துணைத் தலைவராக
ஏகமனதாக
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
8.3 திருமதி திலகா துணைத்தலைவர் பொறுப்பிற்கு
தேர்வானதால் செயலவை
உறுப்பினராக திருமதி திலகம் புதிதாக நியமனப்பட்டார்.
பெற்றோர் ஆசிரியர் சங்க செயலவை 2022/2023

ஆலோசகர் : திருமதி. செல்வராணி சுப்புராயன்


(தலைமையாசிரியர்)
தலைவர் : திருமதி. புஷ்பா இராமசந்திரன் ( பெற்றோர்)
துணைத் தலைவர் : திருமதி. திலகா ( பெற்றோர்)
செயலாளர் : திருமதி. சரஸ்வதி சஞ்சிராயன் ( ஆசிரியர்)
பொருளாளர் : திருமதி. விஜயா இராமன்
(துணைத்தலைமையாசிரியர்)
சங்க உறுப்பினர்கள் : திருமதி. திலகம் ( பெற்றோர்)
: திருமதி. சாந்தி ( பெற்றோர்)
: திரு. உதயகுமார் ( பெற்றோர்)
: திருமதி.பா.கோகிலவாணி ( பெற்றோர்)
: திருமதி.அ.ஸ்ரீ தேவி ( ஆசிரியர்)
: திருமதி.வே.கோமதி ( ஆசிரியர்)

கணக்காய்வாளர் : திரு.சு.பத்துமலை ( பெற்றோர்)


: திரு.க.உதயகுமார் ( பெற்றோர்)

9.0 பொது

9.1 பெற்றோர் ஆசிரியர் சங்க கட்டணமாக ஒரு குடும்பத்திற்கு ரிம


50.00 பெற்றோரிடமிருந்து வசூலிப்பதைப் பற்றி
கலந்துரையாடப்பட்டது. வருகைப் புரிந்த அனைத்துப்
பெற்றோரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர்.
9.2 மாணவர் நல பொறுப்பாசிரியர் திருமதி.அ.ஸ்ரீ தேவி அவர்கள்
‘KWAMP’ உதவிப்பணம் மற்றும் ‘RMT’ இலவச உணவுத்
திட்டத்திற்கான புதிய விதிமுறைகளை எடுத்துரைத்தார்.
9.3 மேலும் அவர் மாணவர்களை முழு பள்ளிச் சீருடையில்
பள்ளிக்கு வருவதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும் என்று
கூறினார். பள்ளியின் சட்டத் திட்டங்களை எப்பொழுதும்
கடைப்பிடிக்க வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்
கொண்டார்.

10.0 வங்கிப் புத்தகத்தின் கையொப்பம்

10.1 பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் 3 நபர்களை


ஏகமனதாக தெரிவுச்
செய்தனர்.
1. திருமதி.புஷ்பா இராமசந்திரன் ( தலைவர்)
2. திருமதி. சரஸ்வதி சஞ்சிராயன் ( செயலாளர்)
3. திருமதி.விஜயா இராமன் ( பொருளாளர்)

10.2 பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஏக மனதாக 2


நபர்களை வங்கிப்
புத்தகத்தில் கையொப்பமிடவும் மற்றும் வங்கியில் பணம்
எடுக்கவும் தெரிவுச்
செய்தனர்.
1. திருமதி.புஷ்பா இராமசந்திரன் ( தலைவர்)
2. திருமதி. சரஸ்வதி சஞ்சிராயன் ( செயலாளர்)
அல்லது
3. திருமதி.விஜயா இராமன் ( பொருளாளர்)

11.0 நன்றியுரை/கூட்ட ஒத்திவைப்பு


11.1 செயலாளர் இந்நிகழ்வை சிறப்பாக நிகழ ஒத்துழைப்பு நல்கிய
அனைவருக்கும்
நன்றியைத் தெரிவித்துக் கொண்டு; இன்றையக் கூட்டத்தை
ஒத்தி வைத்தார்.

பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் மாலை மணி 6.40 க்கு


ஒத்தி வைக்கப்பட்டது.

தயாரித்தவர்,

...........................................
திருமதி ச.சரஸ்வதி
செயலாளர்
பெற்றோர் ஆசிரியர் சங்கம்,
செலாபா தோட்டத் தமிழ்ப்பள்ளி

மீள்பார்வையாளர்,

..............................................
திருமதி.இரா.புஷ்பா
தலைவர்
பெற்றோர் ஆசிரியர் சங்கம்
செலாபா தோட்டத் தமிழ்ப்பள்ளி
உறுதிப்படுத்தியவர்,

...............................................
திருமதி.சு.செல்வராணி
ஆலோசகர்
பெற்றோர் ஆசிரியர் சங்கம்
செலாபா தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like