You are on page 1of 2

தமிழர்களின் கைவினைக் கலைகளாக அறியப்படுபவை மண்பாண்டங்கள்

செய்தல், மூங்கில் கூடைகள் வனைதல், பாய் முடைதல், பட்டு நெசவு செய்தல்,


பிரம்பு பின்னுதல், மற்றும் மண் பொம்மைகள் தயாரித்தல் ஆகியவை ஆகும்.

மட்பாண்டங்கள்:
மட்பாண்டங்கள், கைகளால் வடிவமைத்தல் அல்லது குயவரின் சக்கரம் "வீசுதல்"
முறைகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படுகின்றன. நீர், தூர்வையாகபட்ட மண்
சேர்த்துக் குழைக்கப்பட்ட களி மண்ணை வேண்டிய உருவத்தில் செய்து, அதனை
சூளையில் இட்டு உயர்ந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி மட்பாண்டங்கள்
உருவாக்கப்படுகின்றன.

மூங்கில் கூடைகள்:
மூங்கில் ஓலைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கூடை, முறம், தட்டு, தட்டி
போன்ற பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த காலத்தில் வீடுகளில் மூங்கில்
கூடைகளின் பயன்பாடு வாழ்வியலோடு ஒன்றியதாக இருந்தது. நெகிழி எனப்படும்
பிளாஸ்டிக் பைகளுக்குப் பதில் மூங்கில் கூடைகளைப் பயன்படுத்துவது
சுற்றுச்சூழலுக்கு நல்லது.

கோரைப்பாய்கள்:

கோரைப் பாய் என்பது கோரை எனும் ஒரு தாவரத்தில் செய்யப்பட்ட பாய் ஆகும்.
கரும்பு போலவே இருக்கும் இந்த தாவரம், ஆறு மாதம் வளர்ந்தவுடன் அறுவடை
செய்து, பிறகு இரண்டாக கிழித்து காயவைத்து அதை நெய்வார்கள்.

பட்டு புடவை:

பட்டுப்புழுவானது தன்னைச்சுற்றி கக்கூன் என்னும் கூட்டை உருவாக்கிகொள்ளும்.


பட்டு இழையானது, பட்டுப்பூச்சியின் கக்கூன் நிலையிலிருந்து கிடைக்கிறது. இந்த
பட்டு இழையை தேவையான நிறத்தில் சாயமேற்றி கைத்தறி, விசைத்தறி
போன்றவைகள் மூலம் துணியாக நெய்யப்படுகிறது.

பிரம்பு பொருட்கள்:
பிரம்பு நெகிழ்ச்சித்தன்மையான வன்தண்டைக் கொண்ட பல்லாண்டுத்
தாவரமாகும். உறுதிமிக்க பிரம்பு ஊன்றுகோல், வீட்டுக் கூரை, கதிரை, புத்தக
அலுமாரி, ஆகியவை தயாரிக்கப் பயன்படுத்தப் படுகின்றன. வளையும் தன்மையான
பிரம்பு, தண்டனை வழங்கும் கோலாகவும் பூச்சாடி போன்றவைகள் தயாரிக்கவும்
பயன்படுத்தப்படுகின்றது.

மண் பொம்மைகள்:

சுடுமண் சிற்பங்கள் (Terracotta) என்பவை களிமண்ணால் சிற்பம் செய்து பக்குவமாக


உலர வைத்துச் சூளை போன்ற முறையில் சுட்டெடுத்து செய்யப்படும் உறுதியான
சிற்பங்களாகும். இவ்வகைச் சிற்பங்கள் எளிதில் தேயாது, துருவும் ஏறாது. மேலும்,
இவற்றில் பல்வகை வண்ணங்களைப் பூசி அழகு சேர்ப்பர்.

You might also like