You are on page 1of 16

பாரம்பரியப் பொருள்கள்

மின்சாதனங்கள் வந்துவிட்ட பிறகு, நம் தமிழர்


பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் அழிந்துக்
கொண்டே வருகின்றன. முக்கால்வாசி
பொருட்கள் புழக்கத்தில் இல்லை.
அவற்றையெல்லாம் சேமித்து, அடுத்த
தலைமுறைக்கு நினைவில் கொள்ள காட்சி
பொருளாக பாதுகாக்க வேண்டியது நமது
கடமை.
மரப்பாச்சி

பெண் குழந்தைகளின் விளையாட்டு


பொருளான மனித உருவம் செதுக்கப்பட்ட
மரப்பொம்மை  மரப்பாச்சி.
பிரிமனை

பானை போன்றவை உருண்டுவிடால்


இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின்
அடியில் வைக்கும் வைக்கோல் கொண்டு
வளையம் போல் பின்னப்பட்ட சாதனம்
பிரிமனை.
பாக்குவெட்டி

சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும்


வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய
மேற்பகுதியையும் கொண்ட பாக்குவெட்டி.
பஞ்சமுக வாத்தியம்

கோயில்களின் பூஜையின்போது
வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும்
பரப்புகளைத் தனித்தனியாகக்
கொண்டிருப்பதுமான, பெரிய குடம் ஒரு
தாள வாத்தியக் கருவி பஞ்சமுக வாத்தியம்

நடைவண்டி
குழந்தை நடைபழகுவதற்காக, நின்று,
நடப்பதற்கு ஏற்றவகையில் மரச்சட்டத்தை
உடைய மூன்று சிறிய சக்கரங்களைக்
கொண்ட விளையாட்டுச் சாதனம்
நடைவண்டி.

சொளகு
வாய்ப்பகுதி குறுகளாகவும், கீழ்ப்பகுதி
அகலமாகவும் இருக்கும்படி ஓலை
முதலியவற்றால் பின்னப்பட்டு
தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்,
முறத்தைவிடச் சற்று நீளமான ஒரு சாதனம்
சொளகு.
கொடியடுப்பு

ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து


கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும்
வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும்
கொண்ட அமைப்பு கொடியடுப்பு.
கூஜா

குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை


வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்
புடைத்த நடுப்பகுதியும், சிறியவாய்ப்
பகுதியும் கொணடது கூஜா.
குஞ்சலம்

பெண்களின் சடையில் இணைத்துத்


தொங்கவிடப்படும் கயிற்றில்
இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது
துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்
குஞ்சம் என்ற குஞ்சலம்.
உரல்

வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம்


போன்று குழியுடையதும், குறுகிய இடைப்
பகுதியை உடையதும் தானியங்களைக்
குத்த அல்லது இடிக்கப்
பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது
மரத்தால் செய்யப்பட்ட சாதனம் உரல்.
திரிகை

அரிசி, உளுந்து முதலிய தானியங்களை


அரைக்கவோ, உடைக்கவோ பயன்படுத்திய
கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில்
சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட
வட்டவடிவச் சாதனம் திரிகை என்ற
இயந்திரம்.
அடுக்குப்பானை

ஒன்றின் மேல் ஒன்றாக கீழே


பெரியதிலிருந்து மேலே சிறியது வரை
வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு.
இதில் உப்பு, புளி, தானியங்கள் சேமித்து
வைக்கும் அடுக்குப்பானை
அம்மி

குழவி கொண்டு மிளகாய், தேங்காய்


முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு
அரைக்கப் பயன்படும் நீள்சதுரக் கல் அம்மி.
அரிக்கன் விளக்கு

காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி


கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட
கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய்
விளக்கு அரிக்கன் விளக்கு. 
உரி

பால், தயிர், வெண்ணெய் முதலிய


பொருள்களை வைத்திருக்கும்
பானைகளைத் தாங்கி இருக்கும்.
உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும்
கயிறு அல்லது சங்கிலியால் ஆன
கூம்புவடிவ அமைப்பு உரி.

You might also like