You are on page 1of 10

09/08/2022

மின் கட்டண உயர்வு அறிக்கை மறுப்புகளும் ஆலோசனைகளும்

1. அறிக்கையின் உண்மைத்தன்மை ;

ஆண்டாண்டுகளுக்கு தரப்பட வேண்டிய ஏ ஆர் ஆர் அறிக்கை


ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மொத்தமாக தரப்பட்டுள்ளது .ஆணையம்
மக்களுக்கான தகவல் அறிவிப்பில் மின் பகிர்மான கழகத்துடன் சேர்ந்து
தவறியிருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு பிறகான அறிக்கையும் அரை அறிக்கை
ஆகவே இருக்கிறது. பாதி வரவு செலவு க்கான தகவல்கள் தரப்படவே இல்லை.
திறந்த வெளி பயன்பாடு கணக்குகள் அறிக்கையில் இல்லை. இது உண்மையான
அறிக்கை( true up )என்பது உண்மையே அல்ல. இந்த அறிக்கையின் தகவல்களும்
10/8/2021 மாநில அரசு அளித்துள்ள வெள்ளை அறிக்கை தகவல்களும் பெரிதும்
வேறுபடுகின்றன. இரண்டு தகவல்களும் பகிர்மான கழகமே அளித்திருக்க
முடியும். அப்படியானால் இதன் உண்மை தன்மை என்பது சரியானது அல்ல.
வெள்ளை அறிக்கை மற்றும் மின்கட்டண உயர்வுக்கான உண்மை அறிக்கை
கீழே ஒப்பிடப்படுகிறது

மின் கொள்முதல் செலவுகள்

16- 17 17-18 18-19 19-20 20-21

வெள்ளை அறிக்கை 37,384.59 41071.77 44,178.31 47,145 89 47,330.8


உண்மை அறிக்கை 24, 283.08 27118.2 29613.87 30 215.63 30,357.87 றது

திறந்தவெளி நிலை நுழைவு உரிமை

2016-17 17-18 18-19 19-20 20-21

வெள்ளை அறிக்கை 14,295 15,611 15,728 16,382 15,242

ஏ ஆர் ஆர் அறிக்கை 15 180 16678 16784 17 554 16951

என சொல்லுகிறது. ஐந்தாண்டுகளில் 5889 மில்லியன் யூனிட் வருவாய் இழப்பு ஏ


ஆர் ஆர் அறிக்கையில் கூடுகிறது இதில் ஏற்படும் வருவாய் இழப்பு 3,739.51
கோடியாக இருகிறது.

மின்சார கொள்முதல் செலவு ஆண்டுதோறும் 13,000 கோடியிலிருந்து 17,000


கோடி வரை வேறுபடுகிறது

1|Page
ஆக ஏ ஆர் ஆர் அறிக்கை உண்மை தன்மையை கொண்டிருக்கவில்லை;
பொய்மையையே கொண்டிருக்கும் அரை அறிக்கை - அதுவும் ஐந்தாண்டு
களுக்குப் பிறகு அளிக்கப்பட்டுள்ளது. ஆணையமும் இது போன்ற அறிக்கையை
மக்கள் முன்வைக்க அனுமதித்ததன் மூலம் மக்களுக்கான நியாயமான
கட்டணத்தை உறுதிப்படுத்துவதில் இருந்து விலகி இருக்கிறது.

2. திறந்த வெளி பயன்பாடு

மின்துறை அமைச்சரின் அறிக்கை மின் வாரியம் 1,59,800 கோடி இழப்பில்


இருப்பதாக சொல்லுகிறது.

மின்பகிர்மான கழகத்தின் வணிக செயல்பாடு மின்சாரக் கொள்முதல் உற்பத்தி


விற்பனை மட்டுமல்ல .அதன் கட்டமைப்பை தனியார் பயன்படுத்திக் கொள்ள
அனுமதிக்கும் திறந்த வெளிப் பயன்பாடு (OPEN ACCESS TO PRIVATE GENERATORS)
ஆகும் .திறந்தவெளி பயன்பாட்டை பயன்படுத்தும் தனியார் நிறுவனங்களே
குறிப்பாக- காற்றாலைகள்- மின்வாரியத்தின் பெரும் இழப்புக்கு காரணமானவர்கள்.

இந்த கணக்கு ஏ ஆர் ஆர் அறிக்கையில் தரப்படவில்லை இதன் பகுதிகளை கீழே


தொகுத்திருக்கிறோம்

2.1 பேங்கிங்

காற்றாலைகளுக்கு தரப்படும் தனிச் சலுகை ஆகும் 8,615 மெகாவாட்டை


மின்வாரியம் மாதக்கணக்கில் சேமித்து வைக்க வழியதும் இல்லை. இதில்
ஆண்டுதோறும் 1,900 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுவதாக மின் பகிர்மான கழகம்
ஆணையத்தில் தெரிவித்துள்ளது. எங்கள் கணக்கீட்டின்படி 2019 ஆம் ஆண்டு
வரை தோராயமாக 20,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை வாரியமோ
ஆணையமோ மறுக்கவில்லை.

ஆண்டுதோறும் பேங்கிங் கணக்கிடப்பட்ட மின்சாரம் எவ்வளவு?

எத்தனை மாதங்கள் பேங்கில் இருந்தன?

திரும்ப வழங்கப்பட்ட மாதத்தில் மின் பயிர்மான கழகத்தின் தோராய விலை என்ன?

இதனால் ஏற்பட்ட ஆண்டு இழப்பு எவ்வளவு?

என அறிக்கை தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் பேங்கிங் என்பது மின்சார


சட்டத்தில் எந்த இடத்திலும் வழங்கப்படாத ஒரு சலுகை ஆகும் இது ஆணையமே
இறக்குமதி செய்து கொண்ட- காற்றாலைகளுக்கான தனிச்சலுகை. இது
சட்டத்திற்கு புறம்பானதும் கூட.

2.2 தன் உற்பத்தியாளர்கள்

உயர் அழுத்த விற்பனையில் தன் உற்பத்தியாளர்களும் தனியார் வணிகர்களும்


எழுபது விழுக்காட்டிற்கு மேல் வணிகம் செய்வதாக வெள்ளை அறிக்கை
சொல்லுகிறது. ஏ ஆர் ஆர் அறிக்கையும் புள்ளி விவரங்களில் மாறுபட்டாலும்

2|Page
இதனையே சொல்லுகிறது. இதன்படி ஆண்டுதோறும் 14,000 கோடி அளவுக்கு
வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது பற்றிய கணக்கீட்டில்

1. தனியார் உற்பத்தியாளர்கள் மின்சாரம் எவ்வளவு ?

2. மூன்றாவது நபரிடம் இருந்தும் சந்தையிலிருந்தும் உயர் அழுத்த


பயனீட்டாளர்கள் வாங்கியது எவ்வளவு?

என்று சொல்லப்படவில்லை. இதில் மூன்றாவது நபரிடம் இருந்து வாங்கப்பட்ட


மின்சாரத்திற்கு இடை மானிய கட்டணமாக (CROSS SUBSIDY SURCHARGE)
யூனிட்டுக்கு ரூ 1.67 பைசா வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும் இந்த வருவாய் எங்கும்
காட்டப்படவே இல்லை. இடை மானிய கட்டணத்துடன் கூடுதல் கட்டணமாக ஒரு
யூனிட்டிற்குரூ.0.70 வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தொகையும்
கணக்கிடப்படவே இல்லை.

ஒருவேளை தனியாருக்கு சாதகமாக மின் பகிர்மான கழகம் இந்தக்


கட்டணங்களை வசூலிக்கவே இல்லையா என்பதும் தெரியவில்லை

ஒரு கணக்கிட்டிற்காக 2016- 17 ஆம் ஆண்டில் 15,180 மில்லியன் யூனிட்டில் மூன்றில்


ஒரு பங்கு மூன்றாவது நபரிடம் வாங்கப்பட்டது என்று கொண்டால்
வசூலிக்கப்பட்டிருக்க வேண்டிய தொகை

இடை மானிய கட்டணம் 5060 * 1. 67 என 8,450.2 மில்லியன் ரூபாய் ஆகும் அதாவது


845 கோடியாகும் கூடுதல் கட்டணம் 5060 * 0.7 என 3542 மில்லியன் ரூபாய் ஆகும்
அதாவது 354.2 கோடியாகும் மொத்தத்தில் 1199.2 கோடியாக உயர்கிறது

2016- 17 ஆம் ஆண்டிலிருந்து 20- 21 ஆம் ஆண்டு வரை ஏ ஆர் ஆர் அறிக்கையின் படி
83,147 மில்லியன் யூனிட்டியின் மூன்றில் ஒரு பங்கு மூன்றாவது நபரிடம் வாங்கப்பட்ட
மின்சாரம் எனில் இந்தக் கட்டணம் 6,568 கோடி அளவுக்கு வசூலிக்கப்பட்டிருக்க
வேண்டும் பகிர்மான கழகம் இதனை கணக்கிடவே இல்லை. இக்கட்டணம்
வசூலிக்க படாவிட்டால் அதன் பொறுப்பு யாருக்கு?

2.2 மின்சார சட்டம் 2003

ஒரு மெகா வாட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே திறந்த வெளி பயன்பாடு


உரிமையை (open access rights ) அளிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அனைத்து உயர்
அழுத்த இணைப்புகளும் 0.15 மெகாவாட்டு அளவிற்குகூட அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே உயர் மின் அழுத்த இணைப்புகளில்
இருந்து பெறப்படும் வருவாய் பாதிக்கும் கீழாக 31 விழுக்காட்டிற்கு விழுந்து
உள்ளது

அவ்வாறு ஒரு மெகா வாட்டுக்கு கீழாக உள்ளவர்கள் கொண்டு சென்ற மின்சாரம்


எவ்வளவு?

அது போன்றவர்கள் எத்தனை பேர்?

3|Page
என்ற தகவல்களை ஏ ஆர் ஆர் அறிக்கை தரவில்லை இந்த ஒரு மெகாவாட் கீழே
உள்ளவர்கள் திறந்தவெளி பயன்பாட்டை அனுமதிக்க மறுக்கப்பட்டால் எவ்வளவு
வருவாய் கூடும் என்ற கணக்கும் ஏ ஆர் ஆர் அறிக்கை சொல்லவில்லை அதன்
மூலம் இந்த மின் கட்டண உயர்வு எவ்வளவு தவிர்க்க முடியும் என்பதும்
சொல்லப்படவில்லை

3. MUST RUN STATUS TO RE POWER

மரபுசாரா மின்சாரத்தினை தவிர்க்காமல் பயன்படுத்த வேண்டும் என மின்


பகிர்மான கழகம் நிர்பந்திக்கப்படுகிறது மரபுசாரா மின்சாரம் அதிக கொண்ட
மாநிலம் தமிழ்நாடு: இது 14 ஆயிரம் மெகாவாட் ஆகும். இதன் மூலம் மின் பகிர்மான
கழகம் ஒவ்வொரு மரபுசாரா யூனிட்டையும் பயன்படுத்த ஒரு ரூபாய் 1.57
செலவழிக்க வேண்டி இருக்கிறது என சென்ட்ரல் எலக்ட்ரிசிட்டி அத்தாரிட்டி
(CENTRAL ELECTRICITY AUTHORITY) கணக்கிட்டு உள்ளது. இந்த கணக்கீட்டின்படி
2016 -17 இல் இருந்து 21 -22 ஆம் ஆண்டு வரை 39,503 மில்லியன் யூனிட் களை மின்
பகிர்மான கழகம் பயன்படுத்தி உள்ளது. இதன் மூலம் 7,492 கோடியை
இழந்திருக்கிறது. இது நடுவர் அரசிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய
இழப்பாகும். இது குறித்தும் அறிக்கை ஏதும் சொல்லவில்லை

ஆக திறந்த வெளி பயன்பாட்டால் இழப்பு என்பது

பேங்கிங் 20,000

தனி உற்பத்தியாளர்கள் 14,000

இடைமானிய கட்டணம் 6,568

மரபுசாரா மின்சாரம் பயன்படுத்த 7,492

என 48,060 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது

கடந்த காலங்களில் தன் உற்பத்தியாளர்கள் ஏற்படுத்திய தோராய இழப்பு 15,000


ஆயிரம் கோடியும் இதில் சேரும் என்றால் இழப்பு 63,060 ஆக உயரும் இந்த
அளவுக்கான இழப்பீடு குறித்த கணக்கு விபரங்கள் தரப்படவில்லை ஏ ஆர் ஆர்
அறிக்கை கோரும் கட்டண உயர்வுக்கான தகுதியை இதன் மூலம் இழக்கிறது.

SHEDULING: மின்சார கட்டமைப்புக்கு மின்சார உற்பத்தியாளர்கள் முதல் நாளே


தங்களின் மின் உற்பத்தி குறித்து தகவல்களை தர வேண்டும் இதனை SHEDULING
என குறிப்பிடுவார்கள். இந்த தகவலில் இருந்து உற்பத்திகள் வேறுபட்டால் அதற்கான
தண்டனை கட்டணமும் உண்டு. அது போன்று மின்வாரியம் கடந்த ஆண்டுகளில்
தண்டனை கட்டணத்தை செலுத்தியும் இருக்கிறது. இது போன்ற SHEDULING
காற்றாலைகளும் சூரிய ஒளி மின்சார உற்பத்தியாளர்களும் செய்திட வேண்டும்.
ஆனால் தமிழ்நாட்டில் இந்த சட்ட விதியை காற்றாலைகள் கொஞ்சமும்
மதித்ததில்லை. மின்வாரியமும் அதனை கண்டு கொள்ளவில்லை. அதுபோன்றே
ஒவ்வொரு நாளும் வகுக்கப்பட்டு இருக்கிற 96 நேர கட்டங்களில் (TIME SLOT)
உற்பத்தி ஒழுங்குபடுத்த டி எஸ் எம் (DEVIATION SETTLEMENT MECHANISM) என்ற

4|Page
சட்ட விதியும் இருக்கிறது ஆனால் காற்றாலைகளுக்கு சாதகமாக மின்வாரியம்
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த சட்ட விதியை அமல்படுத்தவில்லை
இவையெல்லாம் கொண்டுவரப்பட்டிருந்தால் இழப்புக்கள் பெருமளவில் தவிர்த்து
இருக்க முடியும்

4. வழக்குகள் கையாண்டதில் ஏற்பட்ட இழப்பு

4.1 தன்னூற்பத்தியாளர்களின் பெரும்பகுதியினர் நடுவன அரசின் விதிகளை


கடைபிடிக்கவில்லை. 2017 இல் இருந்து உயர் நீதிமன்றம், டிவிஷன் பெஞ்ச்,
ஆணையம், மீண்டும் டிவிஷன் பெஞ்ச், உச்சநீதிமன்றம், ஆணையம், தீர்ப்பாயம்
என வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டன இதில் எங்கள் கணக்கீட்டின்படி 2014- 15 ஆம்
ஆண்டில் இருந்து 2019- 20 ஆம் ஆண்டு வரை தோராயமாக 15,000 கோடி இழப்பு
ஏற்பட்டதாக கணிக்கிறோம். அடுத்த இரு ஆண்டுகளையும் சேர்த்தால் இது மேலும்
கூடும். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும்.
16/7/2021 இல் மின்வாரியம் மேல்முறையீட்டையும் செய்திருந்தது (SR no:16021/2021)
ஆனால் 6 /10/ 2021 இல் இந்த வழக்கை மின்வாரியம் திரும்பப் பெற்றுக் கொண்டு
விட்டது. 1,700 தன் உற்பத்தியாளர்களான தமிழகத்தின் பெரும் தொழில் வணிக
நிறுவனங்களுக்கு சாதகமாக இந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது இதனால்
வாரியம் தன் வருவாய் இழப்பை ஈடு கட்டும் வாய்ப்பை இழந்துவிட்டது. இதில் பெரிய
முறைகேடுகள் மின்வாரியத்தின் உயர் மட்டத்தில் நடந்துள்ளன.

4. 2 மின்வாரியத்தின் நிலக்கரியை கையாளுவதற்காக ஒப்பந்தத்தில் பெரும்


முறைகேடு கண்டறியப்பட்டு அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கப்பட்டது
இதில் இழப்பு என்பது 1,000 கோடி ரூபாய்க்கு மேலாகும் இந்த வழக்கும் 10/2021 ல்
திரும்ப பெறப்பட்டுள்ளது இதற்கான காரணங்கள் சொல்லப்படவே இல்லை.

4.3 பிள்ளை பெருமாள் நிறுவனம் மின்பட்டியலில் செய்த முறை கேடு காரணமாக


1,300 கோடி கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக எந்த முயற்சியும்
இல்லாததால் நிலுவையில் உள்ளது. இந்த நிலையிலும் இந்த நிறுவனத்திற்கு பண
நிலுவை ஏதும் இன்றியே கடந்த 2/ 2022 வரை 473 கோடியை மின்சார மின் பகிர்மான
கழகம் வழங்கியிருக்கிறது இதன் மூலம் மீண்டும் ஒரு ஊழலை மின்பகிர்மான
கழகம் செய்திருக்கிறது. வழக்குகள் திரும்பப் பெற்றதன் மூலம் 15,000+1000+473 –
16,473 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பு ?

5 மின் பகிர்மான கழகத்தில் அனல் மின் உற்பத்தி மின்வாரியத்தில் அனல் மின்


நிலையத் திறன் என்பது 4,320 மெகா வாட்டாகும் சாதாரணமான குறைந்த அளவு
உற்பத்தி என்பது ஒரு மெகா வாட்டிற்கு ஆறு மில்லியன் யூனிட்டாகும்
மின்வாரியத்தின் அனல் மின் உற்பத்தி 25, 920 மில்லியன் யூனிட் ஆக இருக்க
5|Page
வேண்டும் (PLANT LOAD FACTOR) பி எல் எப் 68.49 சதம். மேட்டூர் இரண்டாவது யூனிட்
18 ஆம் நிதி ஆண்டில் 46.63 சத உற்பத்தி செய்துள்ளது இதனால் எரிபொருள் செலவு
யூனிட்டுக்கு ரூபாய் 2.94 பைசாவிலிருந்து ரூபாய் 4.12 பைசாவுக்கு உயர்ந்துள்ளது.
சொந்த உற்பத்தி 2017 ஆம் நிதி ஆண்டில் 8,500 மில்லியன் யூனிட்டும் 2018 ஆம் நிதி
ஆண்டில் 11,000 மில்லியன் யூனிட்டும் குறைந்துள்ளது .இதற்கு அனல் மின் நிலைய
உற்பத்தி மற்றும் 5,500 மில்லியன் யூனிட் மற்றும் 6,700 மில்லியன் யூனிட் முறையை
குறைந்து இருக்கின்றன. 2018 ஆம் நிதி ஆண்டில் குறுகிய கால கொள்முதலாக 871
மில்லியன் யூனிட் 1,057 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது ஒரு யூனிட்டியின் விலை
ரூ.12.14 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது அனல் மின் நிலைய
உற்பத்தி மூலம் இந்தக் கொள்முதல் தவிர்க்கப்பட்டு இருக்க முடியும். குறுகிய கால
கொள்முதல் தேவையே இல்லை. நிதியாண்டு 2019, 20, 21 களில் அனல் மின் நிலைய
உற்பத்தி 23,974, 19,831 14,204 என பெரிய சரிவை சந்தித்துள்ளது இதே
காலகட்டத்தில் இடைக்கால கொள்முதல் குறுகிய கால கொள்முதல் என முறையே
3,183 மில்லியன் யூனிட் 4,843 மில்லியன் யூனிட் 2,838 மில்லியன்யூனிட் கொள்முதல்
செய்யப்பட்டுள்ளது. தன் உற்பத்தியை குறைத்து கொள்முதலில் ஆர்வம்
காட்டப்பட்டுள்ளது. தன் உற்பத்தி வெகுவாக குறைந்ததால் அதன் உற்பத்தி
விலையும் ரூபாய்5.39 ரூபாய்6. 21 ரூபாய் 6.57 என உயர்ந்துள்ளது. இவை
தனியாரிடம் கொள்முதல் செய்யும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாக
கருதப்படுகிறது

6. மின்சாரக் கொள்முதல் நீண்டகால கொள்முதல் என 15 ஆண்டு காலத்திற்கு


2,830 மெகாவாட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் குறைந்தபட்சமாக
19,810 மில்லியன் யூனிட் கொள்முதல் செய்யப்பட வேண்டும் இதில் குறையும்
அளவிற்கு வாங்க படாத மின்சாரத்திற்கான கட்டணமும் செலுத்த வேண்டும் 2016-
17 ஆம் ஆண்டில் 17,000 மில்லியன் யூனிட் அளவுக்கு கொள்முதல்
செய்யப்பட்டுள்ளது இவை ஆர் டி சி (RTC- ROUND THE CLOCK) எனப்படும்
கொள்முதலாகும். இதில் கூடுதலாக கொள்முதல் செய்ய வழி இருக்கும்பொழுது
இடைக்கால கொள்முதல் குறுகிய கால கொள்முதல் செய்யப்பட்டுள்ளன .இதில்
குறுகிய கால கொள்முதல் கட்டணம் என மின்சார விலையை விட 17- 18 ஆம்
ஆண்டில் 666.82 கோடியும் 18- 19 ஆம் ஆண்டில் 605 கோடியும் தரப்பட்டுள்ளது இந்த
1272.27 கோடி எதற்காக கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் இல்லை.

நீண்ட கால கொள்முதல் நிதியாண்டு 21- 22 இல் இருந்து 14,000 11,000 மில்லியன்
யூனிட் என குறைக்கப்பட்டுள்ளது ஒப்பந்த அளவைவிட குறைவானால்
வாங்கப்படாத மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் .ஏன் அவ்வாறு
ஒப்பந்தத்திற்கு எதிராக தேவை இருக்கும் பொழுது கொள்முதல் குறைக்கப்பட்டு
இருக்கிறது. அதே நேரத்தில் இடைக்கால கொள்முதல் மற்றும் குறுகிய கால
கொள்முதல் ஏன் செய்யப்பட உள்ளது என்பது தெளிவுபடுத்தவில்லை.

நெய்வேலி இரண்டாம் நிலை விரிவாக்கம் 5 /2003 இல் துவக்கப்பட்டது இதன்


எரிபொருள் கட்டணம் 257 பைசாவாகும் ஆனால் நெய்வேலி சுரங்கத்தின்
தலைவாயில் உள்ள TAQA என்ற தனியாரின் எரிபொருள் விலை 345 பைசாவாக
இருக்கிறது இரண்டு நிலையங்களுக்கும் நெய்வேலி நிலக்கரியே பயன்படுகிறது

6|Page
இரண்டு நிலையங்களும் ஒரே ஆண்டில் துவங்கப்பட்டவை ஏன் இந்த விலை விலை
வேறுபாடு இருக்கிறது TAQA கணக்கீடுகள் சரிபார்க்கப்பட வேண்டும்.

அது போன்று தால்ச்சர் நிலையம் சுரங்கத்தின் தலைவாயிலில் உள்ளது அதன்


எரிபொருள் விலை 200 பைசா மட்டுமே. நெய்வேலியின் எரிபொருள் விலை 254
பைசாவாக இருக்கிறது. நெய்வேலி தமிழ்நாட்டில் உள்ள எரிசக்தி வளம்.
நெய்வேலியின் நிலக்கரி விலை குறைக்கப்பட வேண்டும்.

SPIC என்ற மின் நிலையத்திலிருந்து மின்சார சட்டம் 62 பிரிவின்படி மின்சார


கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யபட்டிருக்கிறது இது பொதுமக்கள் கருத்து
கேட்புக்கு முன் வைக்கப்படவில்லை. இந்த கொள்முதல் மக்களுக்கு எதிரான
கொள்முதல் ஆகும்

7 .மின் கட்டண உயர்வு 2022-23 ஆண்டில் எஞ்சிய 7 மாதங்களுக்கு 16,158.28 கோடி


கட்டண உயர்வு கோரப்பட்டுள்ளது முழு ஆண்டுக்கான உயர்வாக கணக்கிடப்பட்டால்
இது 27, 700 கோடியாகும் தற்போதைய கட்டணமான 48,163 கோடியிலிருந்து 57.63
சதம் உயர்த்தப்படுகிறது

வீடுகளுக்கான கட்டணம் 67.67 விழுக்காடு உயர்கிறது கடந்த காலங்கள்


இருந்ததைவிட இது அதிகபட்ச உயர்வாகும்

LT தொழில் நிறுவனம் துறைகளில் IIIB பட்டியலுக்கு கட்டணம் 73.85%


உயர்த்தப்பட்டுள்ளது

சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு 63.95 சதம் உயர்த்தப்படுகிறது

விசைத்தறிகளுக்கு 29.28 சதம் உயர்த்தப்படுகிறது

IIIB தொழில் நிறுவனங்கள் 2019 -20 களில் 3,36, 656 இருந்து 21- 22 ஆம் ஆண்டில்
3,06,519 ஆக 9 விழுக்காடு குறைந்துள்ளது இந்த கட்டண உயர்வு இவர்களை மேலும்
நலிவடையச் செய்யும் III B நிலை கட்டணம் கிலோ வாட் 35 லிருந்து 100 ஆகவும்
மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது உயர்மின்பளு இணைப்புகளுக்கு 10 மடங்கும்
உயர்த்தப்பட்டுள்ளது அதேபோல PEAK HOUR கட்டணமும் 25 சதம்
விதிக்கப்படுகிறது இதனை அளவிடும் மின்சார மீட்டர் இல்லாவிட்டாலும் 20 சதம்
விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது தாழ் அழுத்தங்களில்PEAK HOUR
கட்டணம் பொருத்தமற்றது .இது மேலும் இத் தொழில் நிறுவனங்களை பாதிக்கும்.

ஆனால் சேவை நிறுவனமான கணனி துறை வணிகத் துறைக்கு பதிலாக


தொழில்துறையாக கணக்கிடப்பட்டுள்ளது III B விதிக்கப்பட்டிருக்கும் உதயம்
சான்றிதழ் கணணிதுறையை சேவை நிறுவனம் என்று சான்றளிக்கிறது இது
வணிகப்பட்டியலில் இணைக்கப்பட வேண்டும். குறைந்த கட்டணம் உடைய தொழில்
நிறுவன பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. எளிய வணிகம் செய்வோம் கூட
வணிகப்பட்டியலில் இருக்கும் பொழுது ஐடி துறையும் டேட்டா துறையும் தொழில்
துறை பட்டியலில் பொருத்தமற்ற வைக்கப்பட்டுள்ளது வசதி படைத்த இந்த
நிறுவனங்களுக்கு மேலும் சலுகை வழங்கப்படுகிறது பெரும் லாபமீட்டும்
இத்துறைகள் எதனையும் உற்பத்தி செய்வதில்லை ஆனால் உற்பத்தி நிறுவனங்கள்
7|Page
பெரும் மின்சார கட்டணத்தை சந்திக்க சந்திக்க வேண்டி இருக்கிறது இது
காற்றாலை காரர்களுக்கு காட்டும் சட்டத்திற்கு புறம்பான சலுகை போன்றதாகும்

சிறுகுறு தொழில்களும் விசைத்தறி யும் தமிழ்நாட்டில் பெருமளவுக்கு வேலை


வாய்ப்பை அளிக்கும் துறைகளாகும். லாபமற்று கூலிக்காக மட்டுமே இயங்கும் எளிய
மக்களின் வாழ்வாதாரமாகும். இந்த கட்டணங்கள் உயர்த்தப்படுவது பெரும் பகுதி
மக்களின் வாழ்க்கையை பாதிக்கும். பெரும் லாபம் வேட்டை கொண்ட
காற்றாலைகள் சட்டவரம்புக்குள் கொண்டுவர முடியாத போது, மின் பகிர்மான
கழகம் எளிய மக்களின் வாழ்க்கை ஆதாரத்தை கேள்விக்குறியாக்குகிறது. இது
கைவிடப்பட வேண்டும்.

காலவரம்புக்குள் செயல்படும் தொழில்களான அரிசி ஆலைகள்


நிலைக்கட்டணத்தால் பெரிதும் பாதிக்கப்படும் பயன்படுத்த படாத காலங்களில்
நிலைக்கட்டண சலுகை தரப்பட வேண்டும் ஒரு நாளில் 10 மணி நேர மின்சார
உற்பத்தி செய்யும் அதானி நிறுவனத்திற்கு 400 கோடி அளவிற்கு மின்சார வாரியம்
மூலதனம் செய்துள்ளது ஆனால் அதானிடம் இருந்து எந்த நிலை கட்டணமும்
வசூலிக்கப்படவில்லை. மாறாக மிக அதிகபட்ச விலையாக யூனிட் ரூபாய் 7.01 க்கு
இவரிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது .மீண்டும் பணக்காரர்களுக்கு
சாதகமாகவே மின்சார கட்டமைப்பும் கட்டணமும் நிர்ணயிக்கப்படுகிறன.

வீடுகளுக்காக கட்டண உயர்வு என்பதில் 500 யூனிட்டுக்கு மேல்


பயன்படுத்துபவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்பது பொருத்தமாக
இல்லை இவர்களிடமிருந்து 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கான கட்டணமான 4
ரூபாய் 50 பைசா வசூலிக்கப்பட வேண்டும் 10 லட்சம் இணைப்புகளில் இருந்து இதன்
மூலம் 270 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் இந்த வருவாயைக் கொண்டு
விசைத்தறிகளுக்கும் சிறு குறு தொழிலில் உத்தேசிக்கப்பட்டுள்ளார் 285 கோடி
கட்டண உயர்வை ஈடுகட்ட முடியும்

பெரிய GATED COMMUNITY) என்று சொல்லப்படும் 50 வீடுகளுக்கு மேலான


கட்டமைப்பிற்கு உயர் மின்னழுத்த இணைப்புகள் தரப்பட வேண்டும் இதனால்
மின்வாரியத்தின் நிர்வாகச் செலவும் கணக்கீடுச் செலவும் வெகுவாக குறையும். I
D கட்டணம் இவர்களுக்கு பொருத்தமாகலாம் 10, 12 குடியிருப்புகளை கொண்ட
அப்பார்ட்மெண்டுகளை புதிய I D பட்டியல் பாதிக்கும் . மின் தூக்கி, தண்ணீர் ஏற்றம்
,பொது பாதுகாப்பு விளக்குகள் இவைகள் இலவசமற்ற I A பட்டியலில்
பட்டியலிடப்படலாம்

ஒன்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மாத கட்டணம் 225 விதிப்பது


பொருத்தமற்றது. ஏற்கனவே பெரும் துயரிலுள்ள வாடகை குடியிருப்புகளை இது
பாதிக்கும். மின்சார சட்டத்தில் இது போன்ற கட்டணம் விதிக்க வழி ஏதுமில்லை.
இது சட்டத்திற்கு புறம்பானதாகும். விதி மீறல்களை ஒழுங்குப் படுத்தப்பட
வேண்டுமே தவிர ஒழுங்காக உள்ள குடியிருப்புகளை துயரத்திலாற்றும் நடவடிக்கை
சரியானது அல்ல.

மின் தேவை (DEMAND) ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையை பொருத்தது அதனை


மின் பகிர்மான கழகமே சதுர அடி கணக்கில் நிர்ணயிப்பது சட்டமீறல் ஆகும்.

8|Page
சட்டபூர்வமான நடவடிக்கைக்குள் காற்றாலைகளை கொண்டு வர முடியாத மின்
பகிர்மான கழகம்- நீதிமன்றத்தில் உள்ள நிலுவைகளை கண்டு கொள்ளாத மின்
பகிர்மான கழகம்- மக்கள்மீது பகை யுடனான இதுபோன்ற நடவடிக்கைகள்
மோசமானவையாகும்.

சிறு வணிக நிறுவனங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கை ஆதாரமாகும் இவர்கள்


மாதத்தில் 50 யூனிட்டு கூட பயன்படுத்த முடியாதவர்கள் இவர்களுக்கான நிலை
கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டிருக்கிறது இருமாத நிலைக்கட்டணமே
இவர்களின் மொத்த வருவாயில் பாதிக்கு மேல் சென்று விடும். சிறு வணிக
நிறுவனங்களுக்கு என தனியான குறைந்தபட்ச கட்டண பட்டியல் நிர்ணயிக்கப்பட
வேண்டும்.

பல ஆண்டு கட்டண என்ற MULTI YEAR TARIFF -MYT வருங்காலத்திற்கும் மக்கள்


கருத்து கேட்பில்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தும் மின் பகிர்மான கழகத்தின்
கோரிக்கை பொருத்தமற்றதாகும் .ஐந்தாண்டுகளாக கணக்குகளை சமர்ப்பிக்க
முடியாத நிறுவனம்- ஐந்தாண்டுகளுக்கு பின்னும் பாதி கணக்குகளை
சமர்ப்பித்திருக்கும் நிறுவனம் வருமானங்களில் எந்த கணக்கீடும் இல்லாமல்
கட்டண உயர்வை கேட்கும் தகுதியை கோர முடியாது மின்சார சந்தை 2008 ஆம்
ஆண்டில் இருந்து மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது எரிபொருள்
விலைகளும் பொருளாதார தேக்கத்தினால் மின் தேவை வளர்ச்சியின் முடக்கமும்
உற்பத்தி நிலையங்கள் செயல்படாத சொத்தாக மாறுகின்ற நிலையும் நடந்தேறி
உள்ளன. எனவே ஆண்டுதோறும் முழு கணக்கீடுகளை சமர்ப்பிக்கவும்
தேவைப்படும் கட்டண சீர்திருத்தங்களை ஆணையம் மேற்கொள்வதும் தான்
பொருத்தமாக இருக்கும். நியாயமான கட்டணத்தை மக்கள் செலுத்துவதை உறுதி
செய்யும் பொறுப்பு ஆணையத்திற்கு உண்டு மின் கட்டண நிர்ணயமே
ஆணையத்தின் தலையாய பொறுப்பாக சட்டம் வரையரை செய்து இருக்கிறது
எனவே MYT என்ற பல ஆண்டு கட்டண உயர்வு முழுமையாக கைவிடப்பட வேண்டும்
இதற்கு கேரள மாநிலத்தை முன் உதாரணமாக எடுக்க முடியாது. கேரளத்தின் மின்
தேவை என்பது கிட்டத்தட்ட சென்னை பெருநகரின் மின் தேவை அளவுக்கு
உள்ளது. கேரளாவின் மின் தேவை புனல் மின் உற்பத்தியிலும் மத்திய தொகுப்பு
மின்சாரத்திலும் சந்திக்கப்படுகிறது. எனவே அங்கு MYT பொருத்தமாக
இருக்கலாம் ஆனால் தமிழ்நாடு அப்படிப்பட்ட மாநிலம் அல்ல மின்சார பசியுடைய
தொழில் நிறுவனங்கள் கொண்ட மாநிலம் ஆகும் மரபுசாரா மின்சாரம், சந்கை
கொள்முதல், நிலக்கரி சார்ந்த மின்சாரம் என பல முனை சார்ந்தது ஆகும் இது
ஆண்டுதோறும் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் எனவே MYT திட்டம்
மேற்கூறிய காரணங்களுக்காக கைவிடப்பட வேண்டும் என வற்புறுத்தி
கேட்டுக்கொள்கிறோம்

8. ஆலோசனைகள்

* மின் பகிர்மான கழகத்தின் வழக்காடு திறன் மிகவும் குறைவாக உள்ளது


பெருந்தொகைக்கான நீதிமன்றத்தில் வழக்காட வேண்டிய பகிர் மான கழகம்
வலுவான சட்ட வல்லுனர் அமைப்பை கொண்டிருக்க வேண்டும்.

9|Page
* மின்சார வாரியம் வணிக நிறுவனம் ஆகும். அரசு நிர்வாக எந்திரம் அல்ல. வணிக
திறமை கொண்ட நிபுணர்களே இதன் தலைவராக நியமிக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து ஐஏஎஸ் பணிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன

* மாநில அரசின் எந்த துறையை விட அனைத்து தரப்பு மக்களையும்


இணைத்துள்ளதும்- மூன்று கோடி இணைப்புகளை கொண்டதும்- மாநில முழுவதும்
நிர்வாக கட்டமைப்பு கொண்டதும் -மாநில நிறுவனம் மின்வாரியம் ஆகும். இது மிகப்
பெரிய வணிக கட்டமைப்பாக பார்க்கப்பட வேண்டும். மின்சாரத்துடன் வேறு
சாத்தியமான இணை தொழில்களையும் வாரியம் ஏற்று நடத்த வேண்டும்.

TNEB IS NOT A LIABILITY BUT BUSINESS ASSET.

PRIVATISE PROFIT AND SOCIALISE LOSSES என்பதே இதன் மோசமான


அணுகுமுறையாகும்

நேர் எதிராக இது மாற்றப்பட வேண்டும்

09/08/2022 சா.காந்தி.

10 | P a g e

You might also like