You are on page 1of 12

ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம் -

விளக்கவுரை)
ShakthiPrabha
39–49 minutes

உள்ளடக்கம்

அணிந்துரை

முன்னுரை

பதிப்புரை

மந்திரப் பொருளுடைய நாமங்கள்

அம்பிகை ஆட்கொண்ட பாஸ்கரராயர்

அறுபத்து நான்கு கோடியின் பட்டியல்

சிந்தூர வண்ணத்தினாள்

கருணை ஸ்வரூபம்

காக்கும் மகாராணி

பரமேசுவரியின் புன்னகை மனத்தின் பாய்ச்சல்

தத்தரிகிட தித்தோம்

ஆயிரம் சூரியன்களின் பிரகாசம்

காமேசுவரி பயம் போனபின்....


புதுமலர் ஐந்தும் கரும்பும்

ஆட்கொள்ளும் சரணங்கள்

காளிதாஸர் முதல் மகாகவி வரை...

வரம் தரும் அம்பிகை

பிறை நிலவும் முழு நிலவும்

நஞ்சை அமுதாக்கிய கன்னிகை

சிவமும் சக்தியும்

மேருவின் உச்சியில்...

அமுதக் கடலில் அன்னை

சக்தியின் சேனை

பாலாவின் வீரம்

தசாவதாரி

சலனம் நீக்கும் சக்தி

அம்பாளின் கவலை

அம்சமும் ஆற்றலும் அளிப்பவள்

உயிர் தரும் மருந்து

அரவணைக்கும் அன்னை

பிராணனைக் கொடுப்பவள்

கல்யாண குணங்களில் உறைபவள்


சௌபாக்கியம் தருபவள்!

அரணாகக் காப்பவள்!

மனத்துக்குள் ஒளிரும் மணி!

தாண்டவ தத்துவம்!

அம்பாளின் திருநடனம்!

பூரண சந்திரனாக ஒளிர்பவள்!

கருணை விழிகள்!

ஆத்மாவின் உயிராக இருப்பவள்

தொழில்களை நடத்துபவள்

ஆயிரம் கண்ணுடையாள்!

சகல சிருஷ்டிக்கும் காரணி!

தர்மம் தழைக்கச் செய்பவள்!

திருத்தங்கச்சி!

கண் இமைக்காமல் காப்பவள்!

தமயந்திக்கு அருளிய காத்யாயனி!

வேதஸார நல்முத்து!

பக்தர்களுக்கு அருள்பவள்

தோழமையுடன் விளையாடும் ரமணி!

அதர்மத்துக்கு அக்னியானவள்!
உயர்ந்த ஆசைகளை அருள்பவள்!

கண்களின் அசைவால் காப்பாள்

புண்ணிய பூமியில் கலந்தவள்!

கலி தீர்க்கும் கற்பகக் கொடி!

தஞ்சம் அளிப்பவள்

சிருஷ்டி ஸ்வரூபமாய்த் திகழ்பவள்!

அகத்திருள் நீக்கும் அம்பிகை!

அம்பாளின் ஆத்மானந்தம்!

தாயாகும் தயாபரி!

நம்முள் உறையும் ரகசிய சக்தி!

எட்டியும் எட்டாதிருப்பவள்!

அளப்பறிய ஆனந்தம் அளிப்பவள்!

குமுதம் மலர்த்தும் குளிர் நிலவு!

இடையறாது பொழியும் ஒளி!

திருப்தியின் உறைவிடம்!

ஆதாரச் சக்கர ஆராதனை

அச்சம் தந்து அருள்பவள்!

ஸ்ரீ சக்கர சிம்ஹாசனேசுவரி!

அனைத்து வர்ணங்களின் அணிகலன்!


வேத வடிவினள்!

விமர்ச ரூபிணி!

காலனை அழிப்பவள்!

தேவியின் தாம்பூலச் சிறப்பு!

துணைவரும் தயாபரி!

உமா ஹைமாவதி!

ஐச்வர்யம் தருபவள்!

மகளான மகேசுவரி!

உதிக்கின்ற செங்கதிர்!

பிரபஞ்சத்தை ரக்ஷிக்கும் பார்வை!

குஹ ஜனனி

பரமானந்தம் தருபவள்!

பார்வையால் பாவனம் தருபவள்!

ஆன்ம அனுபவம் அருள்பவள்!

ஹிமவான் குலத்துக் கொடிமரம்

ஒப்புவமை இல்லா எழில் பாவை

உள்ளும் புறமும் உறைபவள்

துணிவென்னும் செல்வம் தருபவள்

முன்னைப் பழம்பொருளுக்கும் பழம்பொருள்!


பரமானந்தம் தருபவள்

சிருஷ்டி ஸ்வரூபமாய் திகழ்பவள்

உயர்பொருள் நாயகி

வேதாந்த நாயகி

நல்மரபுகளின் நாயகி

தேன் பிலிற்று மலர்ச் செண்டு!

ஞான வடிவினள்!

அம்பிகை என்னும் அமுத மழை

இருள் நீக்கும் குளிர் நிலவு

அம்பிகையின் அனுக்ரஹ மழை

செம்பருத்தி நிறத்தினள்!

குணம் கடந்த குன்று!

சிறியதில் சிறியவள்!

சங்கீத ரசிகை

பூத்தவண்ணம் காத்தவள்!

எங்கெங்கு காணினும் சக்தி!

அமுதநிலை அருள்பவள்!

பிரம்மத்தின் பெருமிதம்

தாடங்க மகிமை!
ஆத்மானந்தத்தில் லயிப்பவள்!

ஹிமவான் தந்த ஸ்ரீதனம்!

ஸ்ரீ சக்கர வாஸினி

அன்புக்கு வசப்படும் அம்பிகை

மனம் ஆளும் மகராசி!

தர்மத்தின் தலைவி

ஞானக் கடல்

அருட்கனிவின் திருவுரு

அம்பாள் வழிபாட்டு முறைகள்

அணிந்துரை

மனிதப் பிறவி மிகவும் அரிதானது. இம்மானிடப் பிறவியில்தான் தன்


வாழ்க்கையில் முன்னேற்றத்தையடைவதும் பரலோக சுகங்களை
நாடுவதும் இறைவன் அருளை முழுமையாகப் பெறவல்லதும் எல்லா
பிராணிகளுக்கும் உதவுவதும் தான் மற்றொரு பிறவியை தவிர்த்து
ஆனந்தக் கடலில் சுகம் அனுபவிக்கவல்லதும் முடியும். மானிடப்
பிறவி கிடைத்தும் நமக்கு அதன் உயர்வை அறிந்து கொள்வதற்கு
தருணம் இல்லாமலேயே காலம் செல்கிறது. ஸம்ஸார வாழ்க்கையில்
முழுகி வாழ்நாள் முழுவதும் ஆனந்தத்தைத் தேடிக் கொண்டே சேர
வேண்டிய இடம் அறிந்து கொள்ளாமலேயே வாழ்க்கைப் பயணம்
கடந்து கொண்டிருப்பது கண்கூடு. இறைவனின் அருளாலேயே சிலருக்கு
மகான்களின் சேர்க்கை உண்டாகிறது. அவர்கள் இறைவனின்
கருணையையும் அருள்பாலிப்பையும் கூறும்போது கேட்டு மனிதர்களின்
வாழ்க்கை பயணம் நற்திசையில் திரும்புகிறது.
மகான்களின் சேர்க்கையில், மறைகள், புராணங்கள், பரமனின் பல
லீலைகள், அவதார சிறப்புகள், மந்திரங்களின் உட்கருத்துகள்
போன்றவை அறியப்படும். இவைகள், வேதங்கள், இதிஹாஸ
புராணங்கள், தந்த்ரங்கள், ஆகமங்கள் போன்ற பல ஆன்மீக
பொக்கிஷங்களில் சிதறிக் கிடக்கிறது. அம்முத்துகளைச் சேர்த்து
அழகான மாலையாகத் தொடுத்து இறைவனின் வடிவத்தில் சாற்றி
அந்த அழகை மனக்கண்ணால் கண்டு களித்து சுவைத்து ரசித்து
மனதின் மலங்களை அகற்றி பசுபதியின் ஸ்வரூபத்தை அடையலாகும்.

இங்ஙனம் காணப்படும் பல சிறந்த ரத்னஹாரங்களில் ரஹஸ்ய நாம


ஸாஹஸ்ரம் என்று கூறப்படும் லலிதா ஸஹஸ்ரநாமம் மிகச்
சிறந்ததாகும். இது பிரம்மாண்ட புராணத்தில் உத்தர காண்டத்தில்
ஹயக்ரீவருக்கும், அகத்திய மாமுனிவருக்கும் நடைபெற்ற
ஸம்வாதரூபமாக அமைந்துள்ளது. இதில் மந்த்ர காண்டம், ந்யாஸ
காண்டம், பூஜா காண்டம், புரஸ்சரண காண்டம், ரஹஸ்ய காண்டம்
போன்ற பல காண்டங்கள் அமைந்துள்ளது. பற்பல விஷயங்கள் இதில்
தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆன்மீகமான விஷயங்கள் மட்டுமன்றி மனித
நேயம் நீதி சாஸ்திரம், இறையாண்மை, வாழ்க்கை நெறி, சுற்றுப்புற
சூழல் பராமரிப்பு, ராஜநீதி போன்ற பல விஷயங்களும் தெளிவாகிறது.
மனிதனின் முழு வளர்ச்சிக்கு மன நிம்மதி, தெளிவு, ஒருமுனைப்பாடு
மிகவும் அவசியம். இவைகளை சிறப்பான முறையில்
அளிக்கவல்லதாக அமைந்துள்ளது இந்த ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்.

சக்தி தத்துவம்

இறைவனின் வடிவங்கள் பலவற்றை உலகத்தில் நாடுவதை நாம்


பார்க்கிறோம். பல பெயர்களுடன் பல உருவங்களுடன் வழிபடப்பட்ட
போதிலும் உண்மையில் இவைகள் எல்லாம் ஒன்றே ஆகும். காற்றைப்
போல், நீரைப்போல், இறைவனுக்கு தனிப்பட்ட உருவம் இல்லை.
ஆயினும் எந்தெந்த வார்ப்புகளில் சேருகிறதோ அந்தந்த உருவங்கள்
காணப்படுவது. நீர் ஒரு குவளையிலோ, தட்டிலோ, வயலிலோ
விட்டபோது அது அந்தந்த உருவங்களைக் கொள்கிறதல்லவா! காற்றும்
பற்பல வடிவங்களான பொம்மைகளிலும், பலூன்களிலும் விட்டபோது
அந்தந்த உருவங்களை கொள்வதைக் காண்கிறோம். அதேபோல
இறைவனும் போற்றுபவர்களின் மனதிற்கு பிடித்த உருவங்களாக மாறி
காணப்பட்டு அவர்களை அருளிச்செய்து சந்தோஷப்படுத்துகிறார்.

ஆகையாலே, அவருக்கு பல உருவங்கள் காணப்படுகின்றன. வங்கி


ஒன்றாக இருந்தபோதும், அதற்கு பல கிளைகள், பல இடங்களில்
ஜனங்களின் வசதியை முன்னிட்டு அமைக்கப் பெற்றுள்ளதை நாம்
அனுபவிக்கிறோமல்லவா! அதே போல் ஓர் தத்துவம் அடியார்களின்
வசதிக்காக பல உருவங்களுடன் பெயர்களுடன் லீலைகளுடன் நம்
முன்னோர்களால் கருதப்பட்டுள்ளது. இதுவே நம் மதத்தில் பல இறை
உருவங்களுக்கு அடிப்படைக் காரணம் ஆகும்.

இப்படி காணப்படும் உருவங்களில் ஜகன்மாதாவான சக்தி தத்வம்


மிகவும் சிறந்தது. பிறந்த மனிதர்கள் எல்லோர்க்கும் முதல் முதலில்
அன்பையும், அரவணைப்பையும், பாதுகாப்பையும், அபயத்தையும்
அளிப்பது தாயல்லவா! அதேபோல் வளர்ந்த தருணத்தில் வாழ்க்கைத்
துணைவியாகவும் பெண்ணாகவும், மாட்டுப்பெண்ணாகவும் உதவுவதும்
அந்த தாய்மையே ஆகும்.

சகல ஜீவராசிகளும் தன் கஷ்டங்களில் முதலில் நினைப்பது தன் தன்


தாயையே. அந்த மாத்ரு ஸ்வரூபம் - தெய்வமாக வழிபடப்படுகிறது.

உலகத்தை படைப்பது, காப்பது, தன்னிடம், ஒடுக்குவது, அருள்புரிவது, தன்


ஸ்வரூபத்தை மறைப்பது என இல்லற வாழ்க்கையில் பல
ஏற்றத்தாழ்வுகளை அனுபவிக்கச் செய்து வைராக்கியத்தை ஏற்படுத்தி
வாழ்க்கையில் முன்னேற்றத்தை அளித்து மனிதனை முழு மனிதனாக
ஆக்கி அருள்பாலிக்க அமைந்தவளே சக்தியாகும். இந்த சக்தியை
உபநிடதங்கள் ஸத் என்றும் சித் என்றும் ஆனந்தம் என்றும்
உரைக்கும். புராணங்கள் - லலிதா, புவனேஸ்வரீ, தாரா, தூமாவதி,
நீலாஸரஸ்வதி, மாதங்கீ, வாராஹீ, ஜ்வாலாமாலினீ, பகளாமுகி,
மஹாலக்ஷ்மீ, காமாக்ஷீ, சாரதா, ரேணுகா, வாக்வாதினீ என்றெல்லாம்
கூறுகிறது. இவ்வடிவங்களின் வழிபாடுகள் நம் நாட்டில் மூலைக்கு
மூலைப் பரவியுள்ளது. கிராமங்களும் காத்தாயி (காத்யாயனீ), பேச்சாயி
(வாக்வாதினீ), படவேட்டம்மன் (பராபட்டாரிகா) என்றெல்லாம்
வழிபடுவதை நாம் காண்கிறோம். இவ்வாறு பக்தர்களின் மனதை
சூழ்ந்து அவர்களின் பல்வேறு ஆசைகளை நிறைவேற்றி வாழ்க்கையில்
அவர்களை முன்னேற்றி அருள்கின்ற சக்திகளில் மூலமான உருவம் ஸ்ரீ
லலிதா மஹாதிரிபுரசுந்தரியே ஆகும். மூவுலகத்தையும் கவருகின்றதான
ஸ்வரூபம் அவளே. அவள் ஒருவளே அழகின் முழு வடிவம்.
கருணைக்கடல். அந்த தெய்வத்தை பல கோணங்களில் பார்த்த
ஹயக்ரீவர் உயர்ந்த அதிகாரம் பெற்ற அகத்திய மாமுனிவருக்கு
ஆயிரம் நாமாக்களின் தத்துவத்தை உபதேசித்தார். பல நாமங்கள்
இருந்த போதிலும் இந்த ஆயிரம் நாமங்களுக்கு ஓர் சிறப்பு உண்டு.
அம்பாளே தன் பெயர்களை ஸஹஸ்ரநாம மாலையாக அமைக்க
வசினீ, காமேச்வரீ, அருணா, மோதினீ போன்ற பேச்சு திறமைப்பெற்ற
வாக்தேவிகளுக்குக் கட்டளையிட்டாள். அது தங்களுக்குக்
கொடுக்கப்பட்ட ஓர் சிறந்த அனுக்ரஹம் எனக் கருதி, வாக்தேவிகள்
இந்த ஸஹஸ்ரநாமத்தை அமைத்தனர். அவர்கள் வெறும்
வாக்தேவிகள் மட்டுமல்ல. அம்பாளின் திருவருளால்
வாக்விலாஸத்தைப் பெற்றவர்கள். எப்போதும் தாயின் திருநாமங்களை
வாக்கில் வைத்துள்ளவர்கள். அம்பாளின் இருப்பிடமான ஸ்ரீ சக்ரத்தின்
ரஹஸ்யங்களையும், மந்த்ரங்களையும், சூக்ஷ்மங்களையும் நன்றாக
அறிந்தவர்கள்.

ஆகையால் அவர்களுக்கு இச்சிறந்த வாய்ப்பு கிட்டியது. அதை


பயன்படுத்தி இந்த ஸஹஸ்ரநாமத்தை செய்து தங்கள் வாழ்க்கையை
ஸ :பலமாக ஆக்கிக் கொண்டனர். இந்த ஸஹஸ்ரநாமத்தை அம்பாளின்
திருப்பாதங்களிலேயே அர்ப்பணம் செய்தனர். இதை பெரிய சபையில்
அரங்கேற்றினர். அச்சபையில் பல கோடி தேவர்களும் அவர்களின்
சீடர்களும், துணைவிகளும், யக்ஷர்கள், கந்தர்வர்கள், கிந்நரர்கள்,
கிம்புருஷர்கள் பல இனத்தைச் சேர்ந்தவர்களும், இந்த அரங்கேற்ற
தருணத்தில் இருந்தனர்.

இதைக் கேட்ட அம்பாள் மிக சந்தோஷத்தை அடைந்தாள். பல


மந்த்ரங்களின் நுட்பமான விஷயங்களும் தந்த்ர ரஹஸ்யங்களும்,
திவ்யமான லீலைகளும், வேதாந்தக் கருத்துகளும் பக்தி
பாவணைகளும், இதில் நிரம்பியுள்ளதைக் கண்டு மிகவும் ஆனந்த
பரவசமாகி இதற்கு தன் முழு அங்கீகாரத்தை காட்டுவது மட்டுமன்றி,
இதை வாசிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், உரைப்பவர்களுக்கும்,
அர்த்தத்தை உணர்ந்தவர்க்கும், ஸமஸ்த க்ஷேமங்கள் அமையும்படி
அருள்புரிந்தாள். அதிலிருந்து எல்லா உலகங்களிலும் இந்த
ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பாராயணம் செய்யப்பட்டும்,
அர்ச்சிக்கப்பட்டும் வருகிறது. நம் நாட்டில் ஆண், பெண் பேதமின்றி
எல்லோரும் இந்த ஸஹஸ்ரநாமத்தை பக்தியுடன் தினந்தோறும்
அல்லது பண்டிகைகள், செவ்வாய், வெள்ளி தினங்களில் பக்தி
ச்ரத்தையுடன் கையாள்வதும் அனைவரும் அறிந்ததே. ஸாதாரணமாக
ஓர் தோத்திரமாக காணப்பட்ட போதிலும், இதில் பல தந்த்ர
ரஹஸ்யங்களும், மந்த்ர சூக்ஷ்மங்களும் இறைவனின் பற்பல
லீலைகளும், காருண்ய விசேஷங்களும், வேதாந்தங்களும், சாஸ்திர
நுட்பங்களும், ஆகம ரஹஸ்யங்களும் காணப்படுகிறது. இந்த
ஸஹஸ்ரநாமமே அம்பாளின் பீஜமந்த்ரமான ‘ஸ்ரீ’ என்ற சொல்லால்
தொடங்குகிறது. முதல் மூன்று நாமாக்களும் கடைசி மூன்று
பெயர்களும்

‘ஸ்ரீ’ என்ற அடைமொழியுடன் அமைந்துள்ளது. இதை படிப்பவர்களுக்கு


இம்மையில் செல்வமும், மறுமையில் சுகமும் சிறந்த புருஷார்த்தமான
மோக்ஷமும் (வீடு பேறு) கிட்டும்.

இந்த ஸஹஸ்ரநாமத்திற்கு பல உரைகள் அனாதிகாலமாக தொன்று


தொட்டு வருகிறது. விமர்ஸானந்தீயம், வித்யாரண்ய பாஷ்யம்,
பட்டநாராயண பாஷ்யம் போன்றவை வெகு நாட்கள் முன்பு இருந்ததாக
அறிகிறோம். பாசுராநந்த நாதர் எனும் பாஸ்கரராயர் இதற்கு
வடமொழியில் மிகச் சிறந்ததான ‘சௌபாக்ய பாஸ்கரம்’ எனும்
உரையை அளித்துள்ளார். அது பல மொழிகளில் மொழிபெயர்ப்பை
அடைந்துள்ளது. பல சாஸ்திரங்களில் தேர்ச்சிப் பெற்றவர்களாலேயே
அதன் உட்கருத்துக்களை அறிந்து ஆனந்தப் பெருக்கை அடைய
முடியும்.
யாந்திரிக ஜீவனமுறையை மேற்கொண்ட தற்காலிக மனிதர்களுக்கு
மேற்கூறிய உரைகளை வாசிக்கவோ, புரிந்து கொள்ளவோ, சுவைத்து
ரசிக்கவோ, தருணமின்மையாயினும், அவர்கள் மனதில் பக்தியும்,
ச்ரத்தையும், முன்னேறும் அவாவும் நிறைந்துள்ளன. இதை தக்க
சமயத்தில் அவர்களுக்கு கூறவல்ல ஆசான்களும் அரிதாக உள்ளனர்.
இப்படிப்பட்ட சமயத்தில்

டாக்டர். சுதா சேஷய்யன் அவர்கள் எளிய நடையில் எல்லோராலும்


கையாளத்தக்க அழகிய தமிழ் உரையில் கங்காப்ரவாஹம் போன்ற
நடையில் மனதில் பக்தி பாவத்தை வளர்க்கும் வண்ணம் அருளிய
இந்த பக்திப் பெட்டகம் ‘ஸ்ரீ லலிதா’ ஆகும். வாசிக்கும்பொழுது
புத்தகத்தை மூடி வைக்க மனம் இடம் கொடுக்கா வண்ணம், சுவையாக
ஜனங்களின் மனதை புரிந்து அமைக்கப்பட்ட கட்டுரைக் கோவையே
இப்புத்தகம். இதிலுள்ள விஷயங்கள் வாசகர்களின் மனதைக் கவர்ந்து
ஊக்கத்தையளித்து பக்தியை வளர்த்து ஆனந்த பரவசத்தை
அளிக்கவல்லது. இதை சிற்சில பகுதிகளாக அவ்வப்போது படித்துக்
களித்து இன்புறச் செய்வதாகவும் ஆங்காங்கு தகுந்த தலைப்புகளுடனும்
அழகிய சித்திரங்களுடன் படிப்பதற்கு வசதியாக கிரி டிரேடிங்
நிறுவனத்தினர் அவர்கள் பதிப்பித்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு
ஜகன் மாதாவின் பாதங்களுக்கு சிறந்த தொண்டை அளித்துள்ளனர்.
இவர்களுக்கும், இப்புத்தகத்தை வாசித்து அம்பாளின் திருவருளைப்
பெற்று பேரானந்தத்தை அடையத்தக்க வாசகர்களுக்கும் இறைவனின்
பேரருளும், அழியாச் செல்வமும், வளமான ஆரோக்கியமும், சிறந்த
வாழ்க்கையும், மன நிம்மதியும் பெற திவ்ய ஆசிகளுடன்,

You might also like