You are on page 1of 10

ஓம் மாதங்க்யை வித்மஹே

உச்சிஷ்ட சாண்டால்யை தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத்.

காலம் காலமாக ஆத்மாவுடன் பயணம் செய்வது பாவமும்


புண்ணியமுமே. இன்றைய தலைமுறையில் எந்த ஒரு பிரச்சனைக்கும்
மூல காரணம் அதன் கர்ம வினைகள் தானே. இதன் சாரம்சமே வாழ்வின்
அமைதிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்வு அமைதியின்றி நிலை
தடுமாற புண்ணியதத்தின் பற்றாக்குறை தான் காரணம். கர்மவினை
பதிவுகள் நமது கருமையத்தில் பதிந்து, நாள் தோறும் நொடி தோறும்,
அலையாக கசிந்து, மென்மையான மனதினை சூழ்ந்துகொண்டு நம்மை
எதையும் முழுமையாக செய்யவிடுவதில்லை. இதை எல்லாம் விரட்டி
அடிக்க பல வழிகள். அதில் ஒன்று தான் இந்த ஸ்ரீ ஸ்யாமளா தேவி
தண்டகம்.
இதை யார் வேண்டுமானாலும் தூயமனதுடன் சொல்லலாம். நீர் போல,
காற்று போல அனைவருக்கும் பொது இது. இந்த ஸ்லோகங்கள் இறை
அலைகளை அப்படியே ஏதேனும் ஒரு விதத்தில் தாங்கிவரும் ஒரு
வார்த்தை கோர்வைகள்.

மனதை மிக நுண்ணிய அலைநீளத்தில் வைத்தவர்கள், என்றும்


இறைஅலைகளிலேயே திளைத்தவர்கள், சக்தியின் அருள் ஆற்றலை
உணர்ந்தவர்கள், மனதில் அன்பு எனும் சூட்சும ஆற்றலை வெகுகாலம்
நிலைநிறுத்தப் பழகியவர்கள், இவர்கள் இறை அலைகளை மிக அழகாக
உள்வாங்கி, அப்படியே உணர்ந்து, அதை யாவரும் உணரும் வண்ணம் மிக
சரியான அதிர்வுகள் தருமாறு, மிக சரியான பீஜங்களால் கோர்த்து,
வார்த்தைகளை வைத்து மிக அழகாக compose செய்து
கொடுத்திருக்கிறார்கள். மிகவும் போற்றப்படவேண்டியவர்கள். மிக உயர்ந்த
உள்ளம் கொண்ட ஆத்மாக்கள்.

॥ श्यामलादण्डकं कालिदासविरचितम् ॥ ஶ்யாமலாதண்டகம் காலிதாஸவிரசிதம் ॥

॥ அத ஶ்யாமலா தண்டகம் ॥ … ॥ अथ श्यामला दण्डकम् ॥

॥ த்யானம் ॥ … ॥ ध्यानम् ॥

माणिक्य वीणा मुपलालयन्तीं मदालसां मञ्जुलवाग्विलासाम् । माहेन्द्र नीलद्युति कोमलाङ्गीं मातङ्ग कन्यां मनसा स्मरामि ॥ १॥

चतुर्भुजे चन्द्रकलावतंसे कु चोन्नते कु ङ्कु मरागशोणे ।. पुण्ड्रेक्षुपाशाङ्कु शपुष्पबाण- हस्ते नमस्ते जगदेकमातः ॥ २॥

மாணிக்ய வணாம்
ீ முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம்
|

மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீ ம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி


||
சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே குசோன்னதே குங்கும ராகஸோனே |

புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண- ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத:


||

I always meditate on the daughter of Matanga Maharshi who playfully holds a Veena made of
Mankikya, who is lazy by intoxication, whose speech is picturesque and beautiful and whose body is
resplendent like the dark blue gemstone.

O The Mother of the Worlds who has four hands, whose head is adorned with the crescent moon,
who has a full bosom, who has a complexion red as kukum and who carries in her hands a bow of
sugarcane, arrows of flowers, the rope and the ankusa (goad), my prostrations before you.

தியான ஸ்லோகத்தில், அம்பிகை, மாணிக்கக் கற்கள் பதித்த வணையை



வாசிப்பதில் விருப்பமுடையவளாக, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக,
மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக, திருமார்பில் குங்குமச்சாந்து
தரித்தவளாக, தன் திருநெற்றியில், சந்திரகலையை அணிந்தவளாக,
கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம் கொண்டவளாக
சித்தரிக்கப்படுகிறாள்.

அம்பிகையின் திருக்கரங்களில் கிளியும் இடம்பெற்றிருக்கிறது. இதில்


அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது.
வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வணை,

சங்கீ த மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க
அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும்
குறிக்கிறது. மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும்
திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல்
ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

॥ विनियोगः ॥ … ॥ வினியோக:³ ॥

माता मरकतश्यामा मातङ्गी मदशालिनी । कु र्यात् कटाक्षं कल्याणी कदम्बवनवासिनी ॥ ३॥


மாதா மரகதஶ்யாமா மாதங்கீ ³ மத ³ ஶாலின ீ । குர்யாத் கடாக்ஷம் கல்யாண ீ
கத ³ ம்ப ³ வனவாஸின ீ ॥ 3॥

May the Mother, who is dark as the marakata gemstone, who is the daughter of Matanga maharshi,
who is exuberant, who is auspicious and who abides in the kadamba forest, cast on me the glances
from her eye-corners.
”ஸ்ரீ ஸ்யாமளா தேவி”

‘சியாமளா’ என்றும், ‘ஸ்ரீ ராஜ சியாமளா’ என்றும், ‘ஸ்ரீமாதங்கி’ என்றும்,


‘மஹாமந்திரிண ீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ
அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.

தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள்.


கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில்
மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக
அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால்
‘மந்திரிண ீ’ என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின்
மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.

ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில்


இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம்
நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக இருப்பவள். இதை ஸ்ரீ
லலிதா ஸஹஸ்ரநாமம், “மந்த்ரிண ீ ந்யஸ்த ராஜ்யதுரே நம:” என்று
போற்றுகிறது.

மேலும் ‘கதம்பவனவாஸின ீ’ என்றும் இந்த அம்பிகை துதிக்கப்படுகிறாள்.


ஸ்ரீ லலிதா தேவியின் வாசஸ்தலமான ஸ்ரீ நகரத்தில், சுற்றிலும்
கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்வதாலேயே சியாமளா
தேவிக்கு இந்த திருநாமம். மதுரை மீ னாட்சி அம்மன் இந்த அம்பிகையின்
அம்சமாகவே போற்றப்படுகிறாள். மதுரைக்கு ‘கடம்பவனம்’ என்ற ஒரு
பெயரும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

‘கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிண ீ-பரிசேவிதா’… (ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்)

गेयचक् ररथारूढ मन्त्रिणी परिसेविता ….. ललिता सहस्रनाम स्तोत्रम् பண்டாசுர வதத்தின் போது, கேயசக்ர
ரதத்தில் இருந்து அம்பிகைக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து,
பண்டாசுரனின் தம்பியான விஷங்கனை வதம் செய்தாள்.
‘மந்த்ரிண்யம்பா -விரசித- விஷங்கவத- தோஷிதாயை நம: ” … (ஸ்ரீ லலிதா
சஹஸ்ரநாமம்). मन्त्रिण्यम्बा विरचितव िषङ्गवध तोषिता ….. ललिता सहस्रनाम स्तोत्रम् சூக்ஷ்ம
அர்த்தங்களின்படி பார்த்தால், அகங்காரம் மிகுந்த ஜீவனே ‘பண்டாசுரன்’
(உலகாயத) விஷயங்களில் ஜீவனுக்கிருக்கும் ஆசையே விஷங்கன்.
மேலும், குறுக்கு வழியில் செல்லும் புத்தியையும் விஷங்கன் குறிக்கிறான்.
சியாமளா தேவி, நேர்வழியில் செல்லும் மனதிற்கும் புத்திக்கும்
ஆத்மஞானம் அறியும் மனநிலைக்கும் அதிபதி. ஆகவே, சியாமளா தேவியே
‘விஷங்க வதம்’ செய்கிறாள்.

ஸ்ரீ லலிதோபாக்கியானம், ‘சங்கீ த யோகினி சியாமா, ச்யாமளா, மந்திர


நாயிகா’ என்று துவங்கி அம்பிகையைப் போற்றுகிறது.

ஸ்ரீ ஸ்யாமளா தேவி தண்டகம் சர்வ வல்லமை படைத்தது. அருள்


அலைகளை ஈர்த்துப்பிடித்து இருக்கும் இடமெங்கும் பரப்ப கூடியது.
நம்முள்ளே ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. வாழ்வில் உயர
இந்த அருள் அலைகள் மிக மிக தேவை. வாழ்வு நல்ல வளம் பெற இந்த
அருள் அலைகள் தேவை. துஷ்ட தேவதைகளை விரட்டி அடிக்கும்
சக்தியுடையது. வாழ்வில் கல்வி, செல்வம், இவைகள் அமைய இந்த ஸ்ரீ
ஸ்யாமளா தேவி தாயின் அலைகள் மிகவும் இன்றியமையாதது. இவள்
இருக்கும் இடமெங்கும் அமைதி கரைபுரண்டோடும். இவள் கருணையோ
கடல் போன்றது.

காளிதாசர் அருளிய இந்த ஸ்யாமளாதேவி தண்டகத்தில் குறிப்பிட்ட ஒரு


சில பீஜங்களை சரியான உச்சரிப்பில் சொல்லும் போது அது ஒரு வித
அருள் அலைகளை தொட்டு உரசிச்செல்கிறது. இது மிகப்பெரும் ஆற்றலை
மனதிற்குள் திணித்துவிட்டு செல்கிறது.

இந்த ஸ்யாமளாதேவி தண்டகத்தில் ஒரு சில ஸ்லோகங்கள், அதில் ஒரு


சில வரிகள், ஒரு சில வார்த்தைகள், ஒரு சில பீஜ அதிர்வுகள், எங்கேனும்
ஒரு விதத்திலாவது, மனதினை மிக நுண்ணியதாக்கி, அமைதியை
திணித்து, அம்பாளின் சக்தியின் ஜீவ அலைகளை உணரவைக்கும்
சக்திவாய்ந்தவை. அந்த அதிர்வு நிலை, உணர்வு நிலை கிடைத்தவுடன்,
அப்படியே அதில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம். என்ன
ஒரு அற்புதமான அலை இந்த ஸ்லோகத்தினுள் இருக்கிறது.

कारुण्यवारांनिधिम् … मीनाक्षी पञ्चरत्नम् ( श्रीमच्छङ्करभगवत )

காருண்யா வாராம் நிதிம் .. மீ னாட்சி பஞ்சரத்னம் (ஆதிசங்கரர்)

இவளின் கருணை எவர் வரினும் அள்ள அள்ள குறையாத கடல். வாழ்வில்


பொருள் பெரியது அல்ல. நல்ல கல்வியறிவு வேண்டும், நல்ல
சொல்வன்மை வேண்டும், எதையும் எதிர்கொள்ள நல்ல தைரியம்
வேண்டும், கருணை நிறைந்த உள்ளம் வேண்டும், வாழ்வில் நம் அன்றாட
சாதாரண தேவைகள் சரிவர இன்னலின்றி பூர்த்திசெய்யவேண்டும்.
இவளின் ஒரு துளி கருணை அலைகளை அன்பால் உருகி, மெல்ல மெல்ல
இதன் அலைநீளம் பிடித்து, உட்சென்று, ஆழ்ந்து அமைதியின் விளிம்பில்
சென்று, கொட்டிக்கிடக்கும் தெய்வகத்தை
ீ உணர வேண்டும்.

श्रीराजराजेश्वर्यष्टकम् … नवयौवना शुभकरी

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் .. நவயௌவனா ஶுப⁴கரீ

எப்படி ஒரு பெண் என்றுமே இளமையுடன் அழகுடன் இருக்க முடியும்?


மானுட வாழ்வில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தானே அழகுடன் இருக்க
முடியும். பிறகு முதுமை ஆட்கொண்டுவிடுமே? ஆனால் இவளோ என்றுமே
ஒரு வசீகரிக்கும் அழகுடன் இருக்கிறாள். இவள் அழகும் நிறைந்தவள்,
தாய்மை சக்தியும் நிறைந்தவள், அன்பும் நிறைந்தவள், கண்களில்
கருணையும் நிறைந்தவள்.

இந்த ஈனப்பிறவியில் இவளின் கருணை வேண்டும். இவள் கருணை


இல்லையேல் அது ஒரு வறண்ட நிலத்திற்கு ஒப்பாகும். இவள் கருணை
இன்றி இந்த உலகத்தில் சுபிக்க்ஷம் நிலவாது. இவளை பற்றி, இவள்
பெருமை பற்றி, இவள் தரும் அன்பு பற்றி, இவள் தரும் ஆற்றல் பற்றி,
இவள் தரும் ஞானம் பற்றி, சிந்திக்க சிந்திக்க, என்னே மகிழ்ச்சி இவளுக்கு.

இவள் அருளும் பாக்கியங்களை இவளிடமே சொல்லி, இவள் அருள் உணர,


பேரானந்தம் பெருக்கெடுக்கிறது. கருணை துளியை அள்ளி வசுகிறாள்.

உருத்திரண்ட சக்தியொன்று உன்னத பெண் வடிவில். அழகிய முகம்,
அசையாத இமையும், அழகாண கண்களும், நீல நிற மேனியும், நிமிர்ந்த
பார்வையும், பார்ப்பவரை ஆழ்ந்து உட்நோக்க, தத்தம் கர்ம வினையையும்
கவனித்து, சூட்சுமத்தையும் தட்டி எழுப்பி, அருள் அலைகளை பரப்பும்
அற்புதம். எவரும் இப்பார்வைக்கு ஈடுகொடுக்க முடியாது. வசீகரிக்கும்
முகம். ஒரு சிறு பார்வை சுரீரென்று உறைந்து கிடக்கும் தெய்வக

தன்மையை தட்டி எழுப்பி சிந்திக்க வைக்கக்கூடியது. சர்வ வல்லமை
படைத்தது.

என்ன ஒரு அழகான பார்வை. ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை சிந்தனை


வாயிலாக அருவி போல் கொட்டவைக்கிறது. அ முதல் தொடங்கி
ஒவ்வொரு எழுத்தின் வாயிலாக இவள் பெருமையை சொல்லவைக்கும்
சொல்வன்மை நாவில், வாக்கில் துள்ளி எழுகிறது.

இவள் ஒரு சங்கீ தப்பிரியை. எங்கு சங்கீ தம் உள்ளதோ அங்கு இவள்
இருக்கிறாள். எங்கு உள்ளம் வருடும் பாடல் ஒலிக்கிறதோ, அங்கே இவள்
இருக்கிறாள். கைகளில் மாணிக்க வணையை
ீ ஏந்தியவள். இந்த வணை
ீ மிக
இதமாக இதயத்தை வருடி நல்ல அன்பின் ஜீவ அலைகளை தொடும்
சக்தியுள்ளது.

வணையின்
ீ நாதம் மனதோடு மிக நெருங்கிய தொடர்புடையது. மனதின்
அலைகளோடு ஒட்டி உறவாடி நல்ல அதிர்வுள்ள அலைகளை
எற்படுத்தக்கூடியது. எப்பொழுதேனும் உள்ளம் சோர்வுற்றால் வணை

ஒலியை மட்டும் கேட்டுப்பாருங்கள். சோர்வுஅலைகளை விரட்டி மெல்ல
மெல்ல நல்ல அலைகளை உள்ளமெங்கும் பரப்பும் மகத்துவம் வாய்ந்தது.

எந்த ஒரு பாடலில் வரும் வணையின்


ீ நாதத்தை மட்டும் சற்றே தனியாக
பிரித்து கவனித்து பாருங்கள், ஏதோ ஒரு ஈர்ப்பு அதில் உள்ளது என்பது
புலப்படும். அந்த ஈர்ப்பு மனதோடு உறவாடும் தன்மை வாய்ந்தது.
கீ ழக்கரை முஸ்லீம் ஒருவர் பங்களா கட்டுவதற்கு வெளிநாடுகளில்
இருந்து பலவகையான சலவைகற்களை இறக்குமதி செய்திருந்தார்.அவர்
கனவில் ருத்ர மூர்த்தியாக தோன்றிய சிவபெருமான் ஒரு குறிப்பிட்ட
கல்லை உத்திரகோசமங்கை கோவிலுக்கு கொடுத்துவிடுமாறு உத்தரவிட
அலரிஅடித்து எழுந்த பாய் விடிந்ததுமே அந்த கல்லை வண்டியில்
ஏற்றிவந்து கோவிலுக்கு கொடுத்து விபரம் சொன்னார். அதே இரவில்
கோவில் குருக்கள் கனவில் நடராஜப்பெருமான் உருவில் தோன்றிய
பகவான் நாளை காலையில் நான் வருகிறேன் ஒழுங்குபடித்தி
ஆராதிக்கவும் என்றுகூறி மறைந்தார்.... ஒன்றும் புரியாதிருந்த குருக்கள்
இப்போது தெளிந்தார். வந்திருந்த பாரைக்கல் பச்சை மரகதம் என்பது
அப்போது யாருக்கும் தெறியாது. அதில் நடராஜர் சிலை வடிக்க
முடிவானது. அப்போதுதான் அது மரகதக்கல் என தெறிந்தது... மத்தள
ஓசைக்கே உடையும் தன்மையுடைய மரகதத்தில் எப்படி சிலை வடிப்பது...?
சிற்பிகள் பின்வாங்கினர்.. ஆனாலும் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னால்
பல காலம் முயன்று மரச்சுத்தியல் கொண்டு பிரத்தியோகமான உளியால்
கடும் விரதமிருந்து இந்த சிற்பத்தை செதுக்கினார்களாம்.... ஒரு சிறிய
மரகதக்கல்லே பல ஆயிரம் என்கிற நிலையில் ஒரு பெரிய சிலையே
மரகதம் என்றால் நினைத்துப்பாருங்கள் இதன் மதிப்பு பல ஆயிரம் கோடி
என்கிறார்கள்.... இதற்கு ஆயுதம் ஏந்திய பலத்த பாதுகாப்பு போட்டு
கண்காணித்து வருகிறார்கள்... ஆருத்ரா தரிசண நாளில் பல லட்சம்
பக்தர்கள் இங்கே கூடுகிறார்கள்... நமது உறவுகளுக்காக இந்த பச்சை
மரகதத்திருமேனி நடராஜப் பெருமானை அனுப்பி வைத்திருக்கிறேன்...
கண்டு இன்புறுகவும்... ஓம் நமச்சிவாய...🙏

You might also like