You are on page 1of 14

இந்த துர்கை மந்திரம் நீங்கள் வேண்டும் அனைத்தையும்

உங்களுக்கு வழங்கும்
இந்த அண்டசராசரத்தை பாதுகாக்கும் தேவியாகவும், சக்தியாகவும் இருப்பது
துர்கையம்மனே. சமஸ்கிருதத்தில் துர்கா என்றால் தகர்கக
் முடியாத கோட்டை
என்று பொருள். துர்கையை சிலர் துர்கதினாஷனி என்றும் அழைப்பார்கள் அதன்
பொருள் அனைத்து துயரங்களையும் நீக்குபவர் என்பதாகும். துர்கா தேவிதான்
நம்மை பாதுகாப்பாக பராமரிப்பவர், அதேசமயம் தேவைப்பட்டால் அழிக்கவும்
செய்பவர்.

சுருக்கமாக சொல்லப்போனால் நம்மை ஒரு தாய் போல பாதுகாப்பவரும் இவர்தான்,


நாம் தவறு செய்யும்போது தண்டிப்பவரும் இவர்தான். அதனாலேயே இந்து
மதத்தின் மிகசக்தி வாய்ந்த கடவுள்களில் ஒருவராக துர்கா தேவி உள்ளார்.
உங்களை அனைத்து தீயசக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும் துர்கையை
பக்தியுடன் வழிபடுவது உங்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றும்.
துர்கை அம்மனை வழிபடுவதில் முக்கியமான ஒரு வழி மந்திரங்கள் கூறி
வழிபடுவது, இந்த பதிவில் துர்கை அம்மனை மகிழ்விக்கக்கூடிய மந்திரங்கள்
என்னென்ன என்பதை பார்க்கலாம்

துர்கா தேவி தியான மந்திரம்

" ஓம் ஜதா ஜூத் சம்யுக்தமருதேன்னு க்ரித் லக்ஷ்மன்

லோகாயந்த்ரா சன்யுக்தம் பட்மெண்டு சத்ய ஷான் நாம் "


மற்ற துர்கை மந்திரங்களை கூறும் முன் இந்த மந்திரத்தை கூறி துர்கை
அம்மனை வழிபட தொடங்குவது நல்லது என கூறப்படுகிறது. இந்த மந்திரம் நம்
மனதை ஒருநிலைபடுத்தவும், வாழ்க்கையில் கவனத்தை அதிகரிக்கவும் உதவும்.

துர்கை மந்திரம்

" சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வதே சாதிகே சரண்யே

தரம்பிகே கௌரி நாராயணி நமோஸ்துதே "

இந்த மந்திரத்தை கிட்டத்தட்ட அனைத்து சுபகாரியங்களிலும் நீஙக ் ள்


கேட்டிருப்பீர்கள். துர்கா தேவி அனைத்தையும் விட புனிதமான, மங்களகரமான
கடவுள் ஆவார். மூன்று உலகிற்கும் கடவுளான துர்க்கைக்கு மிகவும் பிடித்த
மந்திரம் இதுதான். கௌரி தேவியாய் எழுந்தருளியிருக்கும் தேவியை மீண்டும்
மீண்டும் வணங்குகிறேன் என்பது இதன் பொருளாகும். இந்த மந்திரந்தை அடிக்கடி
கூறுவது உங்களுக்கு அறிவு, வலிமை மற்றும் செல்வத்தை கொடுக்கும்.

துர்கா தேவி ஸ்துதி மந்திரம்

" யா தேவி சர்வ பூதேட்சு, சாந்தி

ரூபேணே சகிஸ்தா

யா தேவி சர்வ பூதேட்சு, சக்தி

ரூபேணே சகிஸ்தா

யா தேவி சர்வ பூதேட்சு, மாத்ரி


ரூபேணே சகிஸ்தா

யா தேவி சர்வ பூதேட்சு, புத்தி

ரூபேணே சகிஸ்தா

நமஸ்த்தியை, நமஸ்த்தியை, நமஸ்த்தியை, நமோ நமஹ "

இந்த மந்திரம் ஒருவருக்கு ஆற்றலையும், நேர்மறை சக்தியையும், வளத்தையும்


வழங்கும். இது ஒருவரின் உள்ளார்ந்த அறிவாற்றலை அதிகரித்து மற்றவர்களுடன்
ஆரோக்கியமான உறவை வளர்கக ் உதவும். இது உங்கள் மனதில் உள்ள எதிர்மறை
எண்ணங்களை விரட்டியடிக்கும்.
துர்கா தேவி துஹ் ஸ்வப்னா நிவாரன் மந்திரம்

" சாந்தி கர்மானி சர்வத்ர ததா துஹ் ஸ்வப்ன தர்ஷனி

க்ராஹ் பிடாசு சோகரசு மாஹாத்ம்யம் ஸ்ரீனு யான்மம் "

இந்த மந்திரம் உங்களை தீயசக்திகளிடம் இருந்து பாதுகாக்கும். அதேசமயம் நம்


வாழ்க்கையில் சோதனையான காலகட்டத்தில் அமைதியை ஏற்படுத்தவும் இந்த
மந்திரத்தை கூறலாம். இது நம்மை எந்தவித தீயசக்திகளும் நெருங்காமல்
பாதுகாப்பதுடன் உங்கள் மனதிலும் தைரியத்தை வளர்க்கும்.

துர்கா சத்ரு - சாந்தி மந்திரம்

" ரிபாவஹ் சன்க்ஷாக்யம் யாண்டி கல்யாணம் சோப் பட்யதே


நந்ததே ச்சா குலம் புனசம் மாஹாத்ம்யம் மாம் ஸ்ரீனு யான்மம் "

நம் வாழ்வில் அனைவருமே எதிர்மறை சக்திகளால் ஒரு காலகட்டத்தில் நிச்சயம்


பாதிக்கப்படுவோம். இது நம் எதிரிகளாலோ அல்லது உடனிருப்பவர்களாலோ கூட
நேரலாம். இந்த தீயசக்திகளிடம் துர்கா தேவி உங்களை பாதுகாக்க இந்த மந்திரம்
உதவும். இது நம்மை பாதுகாப்பதோடு நம் முன்னேற்றத்திற்கு தடையாக
உள்ளவற்றை விலக்கும். இது எதிரிகளை அழித்து உங்க வாழ்வில் அமைதியை
கொண்டுவரும்.

துர்கா தேவி- சர்வ- பாத- முக்தி மந்திரம்

" சர்வ பாத வினிர்முக்தோ தான் தான்யா சுதந்தவிதஹ்

மனுஷியோ மத்ப்ரஸதீன் பவிஷ்யதி நா சன்ஷாய்ஹ் "


நம் வாழ்க்கையில் நல்லது நடக்க பொதுவாக தாமதமாகும். இது துரதிர்ஷட ் ம்
எனப்படும். இது போன்ற சூழ்நிலைகளில் துர்கா தேவி சர்வ பாத முக்தி மந்திரம்
உங்களை காப்பாற்றும். இது துன்பங்களில் இருந்து உங்களை பாதுகாக்கும். குறிப்பாக
குழந்தை வரம் இல்லாதவர்கள் இந்த மந்திரத்தை கூறுவது அவர்களுக்கு
விரைவில் நல்ல பலனை தரும்.

துர்கா அஷ்ஹந் சிசு சாந்தி பிரத்யாக் மந்திரம்

" பால் க்ரஹ பிபுகுடானம் பாலனாம் சாந்திகர்கக


் ம்

சங்கத்பேதே ச் ரினாம் மாத்ரி காரண் முத்மம் "

இது மிகவும் பயனுள்ள துர்கா மந்திரம் ஆகும். குறிப்பாக பெற்றோர்களுக்கு,


ஏனெனில் இது அவர்களின் குழந்தைகளுக்கு நன்மையை வழங்கும். ஒருவேளை
உங்கள் குழந்தை தீயசக்திகளால் பதிப்பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால் இந்த
மந்திரத்தை கூறுவது அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும். இந்த மந்திரம் உங்கள்
குழந்தைகளை பாதுகாக்க துர்கா தேவியை நேரடியாக அழைக்க உதவும் என்று
நம்பப்படுகிறது.

சக்தியின் சுபமந்திரம் அனைத்து இடர்பாடுகள் நீங்க, மனோதிடம் உருவாக


ஏணையோருக்கும் பற்றுடன் வணக்கம். 

  இப்பக்கத்தில் பதிவாகும் சுபமந்திரங்களை பின்பற்ற நினைக்கும் சகோதரர்கள். சகோதரிகள் பிறருக்கு துன்பம்

விளைவிக்கும் குணமுடையவர்களாக இருந்தால், சத்தியமாக இது போன்றவர்களுக்கு சுபமந்திரம், பலன் தராது

என்பது உறுதி. 
  எமக்கேற்பட்ட துன்பங்கள், ரொணச் சல்லியங்களில் அகப்பட்டு, சோர்நது
் போகுந்தருணத்தில் எமக்குத்

தன்னம்பிக்கையும், மனோதிடத்தையுங் கொடுத்து, அந்த இடர்பாடுகளிலிருந்து விடுவித்து, மன நிம்மதியைத்

தந்த சக்தியின் சுப மூலமந்திரத்தை இரு வேளையும் 108 உரு, நூறு நாள் முழு நம்பிக்கையுடன் ஜபித்து

வந்தோமானால் அதன் பலனை அடையலாம். 

மூலமந்திரம்

ஓம் நமோ பஹவதி

 ஆதிமூலத்தி ஆனந்தாயி, 

வீரவல்லி விஜயலக்ஷ்மி 

எம் தீவினையறுப்பாய் 

பார்வதி மஹேச 
பரந்த சாம்பவி 

எமை காத்தருளுவாய் 

ஐயுங், கிலியும், 

சௌவும், றீயும், 

ஸ்ரீயும் ஸ்வாஹ:

என்று ஜபிக்க வேண்டும்.

மனோ சக்தியின் வேகம் - பகைவர்களை வெல்ல இருட்டறை அப்பியாசம்


" ஸ்ரீ பொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை "
கீழ்வரும் சுபமந்திரத்தை அனுதினமும்"இருட்டறையில்" 1 மணி நேரம் உச்சரிக்க வேண்டும். இதனால்
நமக்கேற்படும் "நற்பயனும் பலனும்"மனம் ஒரு நிலைப்படும். துயரங்களேற்பட்டாலும் ஒரு சிலமணி
நேரங்கள்தான்நீடிக்கும். அடுத்த மணி நேரத்திற்குள் அத்துயரங்களை துரத்தி மனதுக்கு சாந்த நிலையைத்
தருவது மட்டுமல்லாமல், நமக்கேற்பட்ட ஏற்படவிருக்கின்ற பகையாளிகள், நம்மையெதிர்த்து நமக்கு தீங்கு
விளைவிக்க மாட்டார்கள். எப்படி? இச் சுபமந்திரத்தை சித்தி செய்வதின் மூலமே ! நமக்கு இன்னார் தான்
பகையாளிகள் என்றறிந்தால்,அவர்களை நேருக்குநேர் அவர் கண்களை உற்று நோக்கி கலந்துரையாடல்
செய்தோமானால், அவர் உயிர்காப்பான் தோழனாக மாறிவிடுவார்கள். வீம்பான பகையாளிகளை நட்புறவுக்
கொள்ள பயன்கொள்ள வேண்டாம். நம்மோடு நகமும் சதையுமாக பலகாலம் உறவோடிருந்து, வேண்டாதவர்கள்
செய்த கலகத்தினால் பகைப் பெற்று பிரிந்தார்களே! அவர்களுக்காப் பயன்படுத்தி, அவர்கள் மீண்டும் நட்பானதும்
பகைக்கான காரணத்தை விளக்கிச் சொன்னால் எடுத்துக் கொள்வார்கள். இச்சுபமந்திரம் சித்தியாக
"இருட்டறை அப்பியாசம்" என்று பெயர். இச்சுபமந்திரத்தை உச்சரித்து ஜெபிக்க எண்ணிக்கையோ, காலஅளவோ
கிடையாது. ஜெபம், அனுதினமும் செய்ய செய்ய, ஒரு சிறு ஒளி நம் கண்முன்னே தோன்றும் வரை செய்ய
வேண்டும். 

சுபமந்திரம்

ஓம்சக்தி உலகசக்தி ஆதிசக்தி ஆக்ஞாசக்தி 

சிவசக்தி சித்தசக்தி வாக்குசக்தி வசியசக்தி

எண்ணிய எண்ணம் எண்ணிய படியே என்னைப் பகைத்தோர் 

எனக்குற வாகவே என்னை நினைத்தோர் என்வசமாகவே இசைந்துநடக்க நானே நீயாய் நீயே செய்செய்
குறிப்பு: கீழ்த்தரமான தகாத எண்ணங்கொண்டு இச்சுபமந்திரத்தைப் பிரயோகிக்க எண்ணுபவர்கள், சித்தர்கள்,

ரிஷிகள், ஞானிகளின் சாபத்திற்காளாக நேரிடும் என்று மனதில் நினைவுக் கொள்ள வேண்டும்.

You might also like