You are on page 1of 5

உபாசனை தெய்வம்

உங்கள் உபாசனை தெய்வத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அதை ஜாதகம்


மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ கண்டறிந்து கொள்ளவும். குரு மிக மிக அவசியம். குரு
முறைப்படி உபாசிப்பதே மிக உயர்வானது. யாரை குருவாக எற்றுக் கொள்வது யாரிடம் தீட்சை
பெறுவது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உண்மையான ஆர்வம் இருப்பின்
குரு உங்களைத் தேடி வருவார்.யார் உங்களது ஆத்மாவை கவருகிறாரோ அவரை குருவாக
எற்றுக் கொள்ளலாம். ஜீவ சமாதி ஆகியுள்ளவர்களை அதில் நீங்கள் விருப்பப்படுபவரை
முதலில் மானசீக குருவாகக் கொண்டு அவரிடமே ஒரு உயிருடன் உள்ள குருவைக்
காண்பிக்கச் சொல்லுங்கள். நிச்சயம் நடக்கும்.

உபாசனைக்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.


உதாரணமாகக் காலை 5 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை .
முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் உபாசனையில் அமர வேண்டும். நேரத்தைப் பற்றிக்
குறிப்பிடும் போது தீவிர சாதனை புரிய பிரம்ம முஹூர்தத
் த்தில் உபாசிப்பது விரைவான
பலனைத் தரும். நடு நிசி பூஜையைத் தவிர்க்கவும்.

வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தை உபாசனைக்காகத் தேர்நதெ


் டுங்கள். அது பூஜை
அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை
இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக்
கொள்ளவும்.

அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு


நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக்
கொள்ளவும். வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது.

உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.


மூச்சை மெதுவாக இழுத்து விடவும். பிரணாயாமம் செய்வது இன்னும் விரைவான பலன்
தரும்.

மூச்சு சீரான பிறகு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை மௌனமாக மனதிற்குள்


சொல்ல ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் அது சிரமமாகத் தோன்றுபவர்கள் சில நாட்களுக்கு
மட்டும் வாய் விட்டே மெல்ல சொல்லலாம். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் மனதிற்குள்
மௌனமாக உச்சரிக்க ஆரம்பித்து விட வேண்டும்.

உங்கள் உபாசனை தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். உங்கள்


கோரிக்கை என்னவோ அதைப் பிரார்தத ் ிக்கவும். இதற்கு சங்கல்பம் என்று பெயர். எவன்
ஒருவன் சங்கல்பிக்கிறானோ அவன் சிந்திக்கிறான். பின்னர் செயல்படுகிறான். அதன் மூலம்
சாதிக்கிறான் என்பதை நினைவில் கொள்ளவும்.

உபாசனை தெய்வம் 1
ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் உபாசனை தெய்வத்தைத் தியானிக்கவும். மனம்
அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து உங்கள் உபாசனை தெய்வத்திடம்
வைராக்கியத்துடன் நிறுத்தவும்.

பின்பு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை ஜபம் செய்யவும். குறைந்த பட்சம் 108
முறையாவது ஜபம் செய்ய வேண்டும். சிலர் அதிகமாக செய்ய விரும்பினால் அது 1008,
10008, 10008 ஆக இருக்கட்டும்.

உங்கள் முழு கவனமும் நீங்கள் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே


இருக்கட்டும்.

எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் ஒரு லட்சம் முறை ஜபித்தால் தான் பலன் தர
ஆரம்பிக்கும் என்பதை மறக்க வேண்டாம். தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள்
அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழுங்கள்.

குருவிடம் அவ்வப்போது சத்-சங்கம் வைத்துக் கொள்ளவும். அது மேலும் உபாசனை


சித்திக்கு வழி கொடுக்கும்.

ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று பகவத் கீதையில் 6 வது


அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.

சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான் தோல் அல்லது வஸ்திரம் இவை


மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து
உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்தத
் வண்ணம் ஜபம் செய்ய வேண்டும்.

பூஜை அறை, பசுக்கொட்டகை, நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீப முகம்


இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.

✔ கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும்.


✔ மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும்.
✔ தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும்.
✔ அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும்.
✔ ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும்.
✔ கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.

சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம்,


முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம்,
கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப்
படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.

✔ கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி.

உபாசனை தெய்வம் 2
✔ வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்.
✔ மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்.
✔ புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்.
✔ வஸ்திர ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்தத
் ி. (வெள்ளை வஸ்திரம் சாந்தி.
சிவப்பு வஸ்திரம் வசியம்)
✔ கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.

இது சாத்வீக உபாசனை முறையாகும். இது மாந்திரீகம் அல்ல. எந்த ஒரு தவறான
நோக்கிலும் பயன்படுத்தக்கூடது. மற்றவர்க்குச் செய்கின்ற தீமை திரும்ப வந்து உங்களையே
தாக்கிவிடும். ஒரு சிலர் குரளி, எட்சினி, ஜின் போன்ற தேவதைகளை மந்திர உபாசனை மூலம்
வசியப்படுத்திக் கொண்டு அற்புதங்கள் செய்து காட்டுவார்கள். அவா்களால் ஒருவரை
ஆன்மிகத்தில் உயா்தத ் முடியாது. ஒருவரது ஊழ்வினையைக் கரைக்க முடியாது. தெய்வீக
அனுபவங்களைக் கொடுக்க முடியாது. ஆனாலும் அத்தகைய சிலா் மிகப் பெரிய மகான்கள்
போலவும், ஞானிகள் போலவும் தெய்வ அவதாரங்கள் போலும் தம்மைக் காட்டிக் கொண்டு
உலா வருவார்கள்.

மோடி மஸ்தான் வித்தை செய்பவா்கள் யார்? யட்சணி வித்தை செய்பவா்கள் யார்?


மந்திர சித்திகள் மூலம் அற்புதம் செய்பவா்கள் யார்? உண்மையான மகான்கள் யார்?
சித்தா்கள் யார்? தெய்வ அவதாரங்கள் யார்? என்றெல்லாம் புரிந்து கொள்ள ஆன்மிக அறிவு
வேண்டும். அனுபவ அறிவு வேண்டும். எனவே ஒரு சரியான குருவைத் தேர்ந்த்தெடுக்க பூர்வ
புண்ணியமும் சிறந்த அனுபவமும் வேண்டும். இதற்கு கீதையில் சொல்லியபடி நமது
உள்ளத்தில் இறைவன் இருக்கிறார். நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். நமது
பக்குவத்திற்கு தகுந்தபடி குருவைக் காட்டுகிறார். மாயை எனும் திரையால் தன்னை முழுதும்
மறத்துள்ளார்.

எனவே முடிந்த அளவு மற்றவர்க்கு நன்மை செய்வோம். தீயவை தீய பயத்தலால்


தீயவை தீயினும் அஞ்சப்படும் என்பது வள்ளுவன் வாக்கு.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் எல்லா உபாசனைகளுக்கும் பொருந்தும்.


முதலில் குருவிடம் பெற்ற மந்திரத்தை ஒரு லட்சம் முறை உச்சரித்து உரு ஏற்றிய பின்பே அருள்
சாதனங்களைக் கையாள வேண்டும். ஒரே நாளில் ஒரு லட்சம் உச்சரிப்பது என்பது உடலில்
காந்த சக்தியை திடீரென கூட்டி விடும் என்பதால் தினசரி 108 முறை காலை, மாலை
உச்சரித்து உரு எற்றுவதே சிறப்பு. இப்போதெல்லாம் சுமார் ஒரு மணி நேரத்தில் எல்லா
வகையான சித்தியும் கிடைத்து விட வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கிரார்கள் ஆனால்
உபாசனை உயர்வான மார்க்கம், இது சித்தர்கள் கண்ட சாத்வீக முறை. பொறுமை மிக மிக
அவசியம் தேவை. நாம் உச்சரித்த மந்திரங்கள் ஒரு லட்சத்தை தாண்டிய பின்னர் மேலே
சொன்ன அருள் சாதனங்களைக் கையால் தொட்ட உடனேயே நம்மிடம் உள்ள சக்தி அலைகள்
உடனடியாக அதில் பதிந்து அதை யார் பெறுகிறார்களோ அவர்களுக்கு உடனடியான நல்ல
பலன்கள் கிடைகின்றன. எனவே தான் மஹான்கள் தொட்டு ஆசிர்வாதம் செய்த விபூதி,
எலுமிச்சை போன்றவைகள் அருள் நிறைந்து அதன் மூலம் பல்வேறு அதிசயங்கள்

உபாசனை தெய்வம் 3
நடக்கின்றன. மந்திர உரு இல்லாமல் அருள் சாதனங்கள் வேலை செய்யாது. சாதரமாண
விபூதியை விட முறைப்படி தயார் செய்த விபூதியில் நமது கை பட்டவுடன் உடனடி நற்பலன்கள்
கிடைக்கிறது.

எளிமையான விளக்கத்தின் மூலமாக உங்கள் குலசாமியை அறிந்துகொள்ளலாம்.

உங்கள் ஜாதகத்தில் 5 ம் இடம் உங்கள் குலதெய்வத்தை குறிக்கும் இடமாகும். அதாவது


லக்னம் என்னும் கட்டம் ஒன்று என எண்ண ஆரம்பித்து கடிகாரச் சுற்றுப்படி எண்ணி வர 5 ம்
இடம் குலதெய்வத்தைக் காட்டும். சரி, கட்டம் தெரிந்து கொண்டோம். தெய்வத்தை எப்படி
அறிவது? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

 5 ல் சூரியன் இருக்க, சிவன் சம்பந்தபட்ட தெய்வம் குலதெய்வம் என்பதாகச்


சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.
 5 ல் சந்திரன் இருக்க சாந்த சொரூப சக்தி வடிவ அம்மன், குலதெய்வமாக
இருக்கிறாள் என்று அர்தத் ம்.
 5 ல் செவ்வாய் இருந்தால் முருகப்பெருமான் குலதெய்வம் என்றும், மற்றும் சக்தி
வடிவான அம்மன் தெய்வங்கள் குலதெய்வம் என்று அர்தத ் ம்.
 5 ல் புதன் இருக்க மகாவிஷ்ணு தொடர்புடைய ஆலயம் குலதெய்வக் கோயில் என்றும்
சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.
 5 ல் குருபகவான் இருக்க சித்தர்கள், ஞானிகள் தொடர்புடைய ஆலயங்கள் என்று
அர்த்தம்.
 5 ல் சுக்கிரன் இருந்தால் மகாலக்ஷ்மி, பெருமாள் தொடர்பான ஆலயங்கள் என்று
அர்த்தம்.
 5 ல் சனிபகவான் இருந்தால் எல்லைத் தெய்வங்கள், ஐயனார், ஐயப்பன், சாஸ்தா
முதலான தெய்வங்கள் குலதெய்வம் என்று அறிந்து உணரலாம்.
 5 ல் ராகு இருக்க ரத்தபலி கேட்கும் தெய்வங்கள், உக்கிரமான பெண் தெய்வங்கள்,
எல்லை தெய்வங்கள் முதலான தெய்வங்களில் ஒன்று, குலதெய்வமாக நம்மை
வழிநடத்துகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
 5 ல் கேது இருக்க எல்லை பெண் தெய்வங்கள், கூரைகூட இல்லாத வெட்ட வெளியில்
உள்ள தெய்வங்கள்,ஊருக்காக தியாகம் செய்து சாமியாக மாறியவர்கள்,சித்தர்
பீடங்கள், ஜீவசமாதி அடங்கிய ஆலயங்கள் குலதெய்வ தலம் ஆகும்.

இறைவனை வணங்கிட மனிதப் பிறவியும் வேண்டும் இந்த மாநிலத்தே என்று பாடி


இருக்கிறார் நாவுக்கரசர் பெருமான். அப்படி மனிதப் பிறவியை அடைந்த எல்லோருக்கும்
தெய்வ நம்பிக்கை இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. ஒருவருக்கு தெய்வ நம்பிக்கை
இருப்பதற்கும், அவருக்கு தெய்வ கடாட்சம் கிடைப்பதற்கும் அவருடைய பூர்வ
புண்ணியத்தின்படி ஜாதகத்தில் கிரக நிலைகள் அமைந்திருக்கவேண்டும்.

ஒருவருக்கு ஆன்மிக ஈடுபாடோ அல்லது தெய்வகடாட்சமோ பரிபூரணமாக


அமைவதற்கு, அவரது ஜாதகத்தில் 5 மற்றும் 9-ஆம் பாவங்களும், குரு, சனி, கேது ஆகிய
கிரகங்களும் சுப பலம் பெற்றிருக்க வேண்டும் என்கிறது ஜோதிடம்.

உபாசனை தெய்வம் 4
ஒரு ஜாதகத்தில் 5-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும், 9-ஆம் இடம் பாக்கிய
ஸ்தானம் அல்லது தர்ம ஸ்தானம் எனவும் அழைக்கப்படுகிறது. ஒருவரது சிந்தனை, செயல்,
அதிர்ஷ்டம் மற்றும் பூர்வ ஜென்மத்தில் அவர் செய்த பாவ-புண்ணியம் போன்றவற்றை 5-ஆம்
பாவமும், அவரது ஆன்மிக ஈடுபாடு, ஒழுக்கம், செய்யப்போகும் நற்காரியம், பெறப்போகும்
பாக்கியங்கள், ஆலயப் பணிகள், அவரின் முன்னோர்களின் நற்செயல்கள் ஆகியவற்றை 9 ம்
பாவமும் குறிக்கின்றன.

இப்படியான 5 மற்றும் 9-ஆம் பாவங்கள் சுப கிரகங்களின் வீடுகளாகி, அந்த


பாவங்களில் நல்ல கிரகங்கள் அமர்ந்தோ அல்லது சுப கிரகங்களின் பார்வை கிடைத்தோ பலம்
பெறுமாயின், அந்த ஜாதகர் இந்த பூமியில் பரம்பொருளின் கருணையைப் பெற்றவராக
இருப்பார் என்பது ஜோதிட விதி.

சுப கிரகமான குருபகவான் ஒருவரது ஜாதகத்தில் வலிமை பெற்று லக்னத்தையோ,


ராசியையோ அல்லது 5, 9-ஆம் பாவங்களையோ பார்வையிட்டால், அந்த நபர்
நேர்மையாளராகவும், ஆன்மிக ஈடுபாடு கொண்டவராகவும், பெரியோரால்
பாராட்டப்படுபவராகவும், ஆலயத்திருப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பைப் பெறுபவராகவும்
இருப்பார்.

குரு பகவான் ஞானிகளிடம் நெருக்கம், அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பு


மற்றும் மதிப்புக்கு உரிய பெரியோர்களின் அறிமுகம் வாய்ப்பதைக் குறிக்கும் கிரகம்.
ஜாதகத்தில் குரு நல்ல ஆதிபத்தியம் பெற்று வலிமையோடு இருக்கும் நிலையில், அந்த
ஜாதகருக்கு நேர்மையான வழிகளில் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

சுப கிரகமான குருவைப் போலவே பாப கிரகமான சனியும் ஆன்மிக உணர்வுகளுக்கு


காரணமான கிரகம் தான். அமானுஷ்ய சக்திகள், சித்து வேலைகள், யட்சினி உபாசனை,
மாந்த்ரீகம், கிராம தேவதைகளை வணங்குதல், அருள் வாக்கு மற்றும் குறி சொல்லுதல்
போன்றவைகளுக்கு சனி காரணம் ஆவார்.

ஒருவரது ஜாதகத்தில் சனி சுப பலமோ அல்லது சூட்சும வலுவோ பெற்று 5, 9-ஆம்
இடங்களைப் பார்க்காமல், வேறு வகையில் தொடர்பு கொள்ளும் நிலையில், மேலே நான்
சொன்ன பலன்களைச் செய்வார். மேலும் கூடு விட்டுக் கூடு பாய்தல், குண்டலினி சக்தி
போன்றவற்றிலும், சில வகையான முடிவற்ற ஆன்மிக தேடல்களில் ஆர்வத்தை அளிப்பவரும்
சனிபகவான் தான். குறிப்பாக, 'இறப்புக்குப் பின் மனிதனின் நிலை என்ன?’ என்பது போன்ற
சிந்தனைகளுக்கு சுப பலம் அல்லது சூட்சும வலு பெற்ற சனிபகவான் காரணமாக அமைவார்.

சனி தனது நட்பு வீடுகளான ரிஷபம் அல்லது கன்னியில் தனித்தோ, குரு அல்லது
கேதுவுடன் இணைந்தோ அல்லது குரு பகவானின் திரிகோணப் பார்வையில் இருப்பது இது
போன்ற அமைப்பைக் குறிக்கும்.

உபாசனை தெய்வம் 5

You might also like