You are on page 1of 35

கங்கையின் ஆசிர்வாதம் கிடைக்க செய்யும் மந்திரம்

பகீ ரதன் கங்கை பூஜை செய்தபோது ஸ்தோத்திரம் செய்து நமஸ்கரித்தான்.


அந்த ஸ்தோத்திரம் வருமாறு:- 
பாவத்தை அழித்து புண்ணியத்தைப் பெருக்குபவளுக்கு நமஸ்காரம்! 
கங்காதரனுடைய ஜடா முடியில் இருப்பவளுக்கு நமஸ்காரம்! 
கோடியோஜனை பரப்பும் கோடி யோஜனை ஆழமும், 
லட்சம் போஜனை நீளமும் கொண்டு கோலோகாத்தைச் 
சூழ்ந்திருக்கும் கங்கா தேவிக்கு நமஸ்காரம்! 
அறுபது லட்சம் யோஜனை அகலமும், 
அதை விட நான்கு பங்கு அதிகம் கொண்ட நீளமுமாக வைகுண்டத்தில் 
வியாபித்திருக்கும் கங்கைதேவிக்கு நமஸ்காரம். 
முப்பது லட்சம் யோஜனை பரப்பளவும், அதற்கு 
ஐந்து மடங்கு நீளமும் கொண்டு பிரம்ம 
லோகத்தை சூழ்ந்திருக்கும் கங்கா தேவிக்கு நமஸ்காரம். 
முப்பது லட்சம் யோஜனை அகலமும், 
அதற்கு நான்கு பங்கு நீளமும் கொண்டவளாக சிவலோகத்தில் 
வியாபித்திருக்கும் கங்கா மாதாவுக்கு நமஸ்காரம். 
லட்சம் யோஜனை அகலமும். ஏழு லட்சம் 
யோஜனை நீளமும் கொண்ட சந்திர மண்டலத்தில் 
ஓடுகின்ற கங்காயம்மாவிற்கு நமஸ்காரம். 
அறுபதினாயிரம் யோஜனை அகலமும், 
அதைவிட பத்து மடங்கு நீளமும் கொண்டு சூரிய
மண்டலத்தில் ஓடுகின்ற கங்கையம்மனுக்கு நமஸ்காரம்.  
லட்சம் யோஜனை அகலமும், ஐந்து லட்சம் யோஜனை 
நீளமும் கொண்டு தபோலோகத்தில் ஓடும் கங்கையம்மனுக்கு நமஸ்காரம். 
ஆயிரம் யோஜனை அகலமும், பத்தாயிரம் யோஜனை நீளமும் கொண்டு, 
ஜனர் லோகத்தில் வியாபித்திருக்கும் கங்கையம்மனுக்கு நமஸ்காரம். 
பத்து லட்சம் யோஜனை அகலமும், ஐம்பது லட்சம் யோஜனை 
நீளமும் கொண்டு மகாலோகத்தில் ஓடும் கங்கை மாதாவுக்கு நமஸ்காரம்.. 
ஆயிரம் யோஜனை நீளமும், லட்சம் யோஜனை அகலமும் கொண்டு 
இமாலயத்திலும், பத்து யோஜனை அகலமும், 
நூறு யோஜனை நீளமும் கொண்டு போகவதி என்ற பெயரோடு 
பாதாளத்திலும், அகல நந்தா என்ற பெயரில் பூமியிலும் 
ஓடும் கங்கா மாதாவுக்கு என் நமஸ்காரங்கள். 
கிருதயுகத்தில் பால் போன்றும், திரேதாயுகத்தில் 
சந்திரன் போன்றும், துவாபரயுகத்தில் சந்தனம் போலவும், 
கலியுகத்தில் தண்ண ீர் போன்றும், சுவர்க்கத்தில் எல்லா 
யுகங்களிலும் பால் போன்றும் இருக்கும் 
கங்கா மாதாவுக்கு என் நமஸ்காரங்கள். 
எந்த நதி தேவதையின் நீர்த்திவலை பட்டவுடன் 
பாவங்களை எல்லாம் நசிக்கின்றதோ 
அந்த கங்கா தேவிக்கு என் நமஸ்காரங்கள். 
இவ்வாறு பகீ ரதன் ஸ்தோத்திரம் செய்து ஒவ்வொரு முறையும் வணங்கி
எழுந்தான். இதைத் தினந்தோறும் துதிப்பவருக்கு அசுவ மேத யோகம் செய்த
பலன் கிடைக்கும். நல்ல மனைவி, சத்புத்திரன், அழியாத புகழ், வற்றாத நதி,
குன்றாத இளமை, தீர்க்காயுள், ரோகமற்ற வாழ்வு எல்லாம் பெறுவான்,
சிறையில் இருப்பவனும் விடுதலை அடைவான். மூர்க்கன் சாந்தம்
அடைவான். 
மூடன் அறிவாளியாவான். சிவராத்திரி அன்று படித்தால் சிவன் மகிழ்ந்து
வேண்டிய வரங்களை அளிக்கிறார். திருவாதிரை அன்று படித்தால் சிவனுக்கு
அபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும். தீபாவளி அன்று இந்த
ஸ்தோத்திர மகிமையைப் படிப்பதால் கங்கை மகிழ்ந்து ஆசீர்வதிப்பாள்.

ஏழ்மை, மனக்கவலை அகல பலன் தரும் ஸ்லோகம்


“கங்கா ஸிந்துஸரஸ்வதீ ச யமுனா கோதாவரீ நர்மதா 
க்ருஷ்ணா பீமரதீ ச பல்குஸரயூ: ஸ்ரீகண்டகீ கோமதி 
காவேரி கபிலாப்ரயாகவிநதா வேத்ராவதீத்யாதயோ நத்ய:
ஸ்ரீஹரிபாதபங்கஜபவா: குர்வந்து வோ மங்களம்” 
வாதிராஜர் அருளிய ஸர்வமங்களாஷ்டகம்.
பொதுப் பொருள்: 
மகாவிஷ்ணுவின் பாத கமலங்களிலிருந்து பிறந்த கங்கை நதி
மட்டுமல்லாது, சிந்து, சரஸ்வதி, யமுனா, கோதாவரி, நர்மதா, கருணா, சரயூ,
கண்டகீ , கோமதி, காவேரி, ப்ரயாகை ஆகிய எல்லா நதிகளையும்
நமஸ்கரிக்கிறேன். 
தம் தெய்வகத்தால்
ீ பூமிக்கு செழிப்பை உண்டாக்கும் நதிகளே, எனக்கும்
மங்களத்தை அருளுங்கள். என்னைச் சார்ந்தவர்கள் அனைவரும் நலம் பெற
திருவருள் புரியுங்கள். நமஸ்காரம்.

காரிய வெற்றி பெற ஆதித்ய ஹ்ருதயம்


நம: பூர்வாய கிரயே பஸ்சிமாயாத்ரயே நம:
ஜ்யோதிர்கணானாம் பதயே தினாதிபதேயே நம: 
ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோநம:
நமோ நம: ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம: 
பொதுப் பொருள்:
கிழக்கு திசையில் உள்ள பர்வதத்தில் இருப்பவருக்கு நமஸ்காரம். மேற்குத்
திசையிலுள்ள மலையில் இருப்பவருக்கு நமஸ்காரம். நட்சத்திரங்கள்,
கிரகங்கள் போன்றவற்றிற்கு அதிபதியுமான தங்களுக்கு நமஸ்காரம்.
ஜெயிப்பவரும் ஜெயத்தையும் மங்களத்தையும் கொடுக்கிறவரும் பச்சைக்
குதிரையை வாகனமாகக் கொண்டவரும் ஆயிரக்கணக்கான கிரணங்களுடன்
கூடிய சூரிய பகவானே, தங்களுக்கு மீ ண்டும் மீ ண்டும் நமஸ்காரம். மகத்தான
இந்த துதியை அகத்தியரிடமிருந்து ராமபிரான் உபதேசமாக பெற்றிருக்கிறார்.
பொங்கல் திருநாளன்று இந்த சூரிய துதியைப் பாராயணம் செய்ய நோய்கள்
நீங்கும்; எல்லா செயல்களும் வெற்றி காணும்.

சூரியனின் 12 நாமங்கள்
ஆதித்ய ஹிருதயம் படித்தால் அளவிலா பலன்களைப் பெறலாம். படிக்க
இயலாதவர்கள், சூரியனின் 12 நாமங்களான...
ஓம் மித்ராய நம 
ஓம் ரவயே நம 
ஓம் சூர்யாய நம 
ஓம் பானவே நம 
ஓம் ககாய நம 
ஓம் பூஷ்ணே நம 
ஓம் ஹிரண்யகர்ப்பாய நம 
ஓம் மரீசயே நம 
ஓம் ஆதித்யாய நம 
ஓம் சவித்ரே நம 
ஓம் அர்க்காய நம 
ஓம் பாஸ்கராய நம
என்பதை சொல்லலாம். இதையும் சொல்ல இயலவில்லையா? கவலையேப்
படாதீர்கள் 
‘ஓம் ஸ்ரீ சிவ சூர்யாய நம’ 
என்ற 12 தடவை சொல்லி சூரியன் இருக்கும் திசையை நோக்கி 12 தடவை
வழிபட வேண்டும். இந்த வழிபாட்டால் ஆரோக்கியம் பெருகும். கல்வி
விருத்தி அடையும். வெற்றிகள் உண்டாகும். எதிரிகள் அழிவார்கள். சிறப்பான
வாழ்க்கை வாழ வழிவகை ஏற்படும்.

காரியத்தடைகள் நீ ங்கும் கணபதி மந்திரம்


மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன :| 
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன|| 
இதைத் தினமும் 18 தடவை ஜெபித்து வர எல்லாக் காரியங்களிலும்
தடைகள் நீங்கும். ஏதேனும் ஒரு செயலில் இறங்கும் போது இந்த
ஸ்லோகத்தை 18 தடவை ஜெபித்து பின்னர் தொடங்க வெற்றி உண்டாகும்.

சரஸ்வதி தேவியை தியானிக்க சுலோகம்


சரஸ்வதி தேவியின் திருவுருவத்தைத் தியானிக்க ஒரு அருமையான
சுலோகம் இது! 
யா குந்தேந்து துஷார ஹார தவளா 
யா சுப்ர வஸ்த்ராவ்ருதா யா 
வணா
ீ வர தண்ட மண்டித கரா 
யா ஸ்வேத பத்மாஸனா யா 
ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி: 
தேவை: சதா பூஜிதா சா மாம் 
பாது ஸரஸ்வதி பகவதி 
நிச்சேஷ ஜாட்யாபஹா

நோயை விரட்டும் தியான சுலோகம்


அதர்வண வேத சரப மந்திரன் எல்லா பாபங்களையும் போக்கி நம்மை காக்க
வல்லது அந்த தியான சுலோகம் வருமாறு:- 
ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண: 
பக்ஷீ சதுர் பாஹுக: 
பாதா கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர: 
காலாக்னி கோடித்யுதி: 
விச்வ க்ஷோப நிருஸிம்ஹ தர்ப்ப சமன: 
பிரும்மேந்திர முக்யைஸ்துத: 
கங்கா சந்தரதர: புரஸ்த சாப: 
ஸத் யோரிபுக் னோஸ்து 
(சரபேஸ்வரருக்கு எட்டு கால்களும், 4 கைகளும், இரு இறக்கைகளும்,
கருடனைப் போன்ற மூக்கும், கால்களால் நரசிம்மத்தை சாந்தப்படுத்தி
வைத்தும், காலாக்னி போன்ற காந்தியும், கங்கை, சந்திரன், மான், மழு, ஏந்தி
உலகத்தின் கஷ்டத்தைப் போக்க மனம் கொண்ட சரபேஸ்வரர் என்முன்
தோன்றி என்னைக் காத்து அருள வேண்டும்.) 
இந்த தியான சுலோகத்தை மனப்பாடம் செய்து தினம் காலை மாலை
பாராயணம் செய்கிறவர்கள் பேராபத்திலிருந்தும், பெரும் நஷ்டத்திலிருந்தும்,
கொடும் நோயினின்றும் விடுபட்டு சகல மங்களங்களையும் பெறுவார்கள்
தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும்
திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின்
யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது
மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த
ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமகாவிஷ்ணவே நம:

ஆஞ்சநேயர் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்


ஆஞ்சநேயர் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:- 
ஸர்வ கல்யாண தாதாரம் 
ஸர்வ வாபத்கந வாரகம் 
அபார கருணா மூர்த்திம் 
ஆஞ்ச நேயம் நமாம் யஹம் 
தினமும் 21 முறை‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’என்ற மந்திரத்தையும்
கூறலாம்.

காலையில் கண் விழித்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்


கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ
கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்
நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம்
இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!
சரவண மந்திராக்ஷ ஷட்க ஸ்தோத்திரம் 
பவாய பர்காய பவாத்மஜாய 
பஸ்மாய மாநாத்புத விக்ரஹாய
பக்தேஷ்ட காமப்ரதகல்பகாய
பகாரரூபாய நமோ குஹாய
பொருள் :
மங்கள வடிவினனும் பாவங்களைப் போக்குகிறவனும் பரமசிவனின்
மனதுக்குகந்த புத்திரனும் விபூதியைத் தரித்த பேரழகுத் திருவுரு
கொண்டவனும் பக்தர்கள் கோரியவற்றை நிறைவேற்றும் கற்பக
விருட்சம் போன்றவனும் ‘ப’ என்ற (சரவணபவ) அட்சரத்தின் வடிவாய்த்
திகழ்பவருமான குஹப்பெருமானே, நமஸ்காரம்.

எதிரிகளை வெல்ல ஒரு எளிய மந்திரம்


திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய 'திருஆவடுதுறை' பதிகத்தில் இடம்பெறும்
வரும் இரு தேவாரப் பாடல்களைத் தொடர்ந்து பாராயணம்செய்து,
சிவபெருமானை மனதார வேண்டி நின்றால் சத்ரு பயம் நாசமாகும்.
வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும்! தானவர் தலைவர் போலும்!
துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வழ்ப்பர்
ீ போலும்
அக்கரை யார்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.
விடைதரு கொடியர் போலும்! வெண் புரி நூலர் போலும்!
படைதரு மழுவர் போலும்! பாய்புலித் தோலர் போலும்!
உடைதரு கீ ளர் போலும்! உலகமும் ஆவார் போலும்!
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே.

கஷ்டம் தீர்க்கும் ஏழுமலையான் ஸ்லோகம்


நமது கஷ்டங்கள் தீர ஏழுமலையானின் இந்த ஸ்லோகத்தை தினமும்
சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.
ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !
பொருள்:
திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே,
நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும்
வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல்
போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே,
துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை
பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.
இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல
ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.
உயர் பதவி கிடைக்க பலனுள்ள ஸ்லோகம்
ஓம் ப்ரதிவாதி முகஸ்தம்பாய நம: (ஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ர நாமாவளி - 649)
கண் பார்வை அருளும் சூரிய நமஸ்காரம்
‘ ஓம் நமோ ஆதித்யாய புத்திர்பலம் தேஹிமே! ’
கிழக்கு திசை பார்த்து என்று மூன்று முறை சொல்லுங்கள். இங்ஙனம்
செய்வதன் மூலம் கண் பார்வை அதிகரிக்கும். இதயம் பலப்படும். சரும
நோய்கள் நீங்கும். அறிவு வளம் பெருகும்.
வாழ்வை வளமாக்கும் ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்
முருகனுக்கு உகந்த இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள்
கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள்
வாழ்வை வளமாக்கும்.
ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.
இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது
மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை
மென்மேலும் சிறந்து விளங்கும். ஏனென்றால் புராண காலத்தில் முருகன்
அறுபடை வடுகளில்
ீ ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின்
பரிகாரத்தலமாக இருந்துள்ளது.

உயர் பதவி கிடைக்க பலனுள்ள ஸ்லோகம்


முறைப்படி கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, தடங்கல்கள் எல்லாம்
நீங்க கீ ழே உள்ள ஸ்லோகத்தை தொடர்ந்து எத்தனை நாட்கள் படித்து
வர வேண்டும் என்பதை பார்க்கலாம்.
த்ரயாணாம் தேவாநாம் திரிகுண ஜநிதாநாம் தவ ஸிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹந மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே ஸஸ்வந் முகுலித கரோத்தம்ஸ மகுடா:
(சௌந்தர்யலஹரி-25)
பொருள்:
ஈசனின் மனைவியான தேவியே நமஸ்காரம். உன் திருவடிகளில்
செய்யப்படும் பூஜை ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களால்
தோன்றிய நான்முகன், திருமால், ஈசன் ஆகிய மும்மூர்த்திகளால்
செய்யப்படும் பூஜையாகும். உன் திருவடித் தாமரைகளைத் தாங்கும்
ரத்ன சிம்மாசனத்தின் அருகில் கிரீடங்களுக்கு மேலாகத் தம்
கைகளைக் கூப்பியபடி அவர்கள் மூவரும் நின்று
கொண்டிருக்கிறார்கள். உன் திருவடிகளைப் பூஜித்தாலே அவர்களையும்
பூஜித்ததாக ஆகிவிடுமன்றோ?
இத்துதியை 45 நாட்கள் தினமும் காலையில் கிழக்கு முகமாக
அமர்ந்து 1000 தடவை பாராயணம் செய்தால் முறைப்படி கிடைக்க
வேண்டிய பதவி உயர்வு, தடங்கல்கள் எல்லாம் நீங்கி எளிதாகக்
கிட்டும்.
காயத்ரி மந்திரம்
பகவத் கீ தையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.
“மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்”.
அந்த அளவு சிறப்பு வாய்ந்தது காயத்ரி மந்திரம்.
இது மகரிஷி விஸ்வாமித்திரர் உபதேசித்த மந்திரம் என்று சொல்லப்படுகிறது.
அக இருளை நீக்கி ஞான ஒளியைத் தந்தருளும்படி இறைவனை வேண்டும்
மந்திரம் இது.
காயத்திரி மந்திரம் 24 அட்சர சக்திகள் கொண்டது.
அவைகள் ஒலி வடிவானவை.
மந்திரங்களுக்கே தலையாய காயத்ரி மந்திரம் இது தான்;
“ஓம்
பூர் புவ ஸ்வஹ
தத் ஸ்விதுர்
வரேணியம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ
ப்ரசோதயாத்”
இந்த மந்திரத்தைச் சொல்லும் போது இங்கு கொடுத்துள்ள படியே ஓம்
முதற்கொண்டு ஒவ்வொரு அடி இறுதியிலும் நிறுத்திச் சொல்ல வேண்டும்.
“பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தியான அந்தப்
பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நான் தியானிக்கிறேன். அந்தப் பரம
சக்தி ஒளி என் அறிவைத் தூண்டி என்னை உண்மையை அறிந்த நிலைக்கு
உயர்த்தட்டும்” என்பது தான் காயத்ரி மந்திரத்தின் பொருள்.
காயத்ரி மந்திரச் சிறப்புப் பற்றி புனித நூல்களும், மகான்களும், பேரறிஞர்கள்
இப்படிப் புகழ்ந்து கூறுகிறார்கள். ”இவ்வுலகத்திலும், பரவுலகத்திலும் எல்லா
விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் தவத்தை வளர்க்க காயத்திரியை விட
மேலான மந்திரம் இல்லை” என்கிறது தேவிபாகவதம்.
”மூன்று வருடங்கள் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வருபவன்
வாயுபோல சுதந்திரமாக இயங்கி பிரம்மத்தை அடைவான்”
எனக் கூறுகின்றது மனுஸ்மிருதி.
”நான்கு வேதங்களையும் தராசின் ஒரு தட்டில் வைத்து
அதற்கு சமமாக காயத்ரியை மட்டும் மறுதட்டில் வைத்தால்
எடை சரியாகவிருக்கும். 
காயத்ரி வேதங்களின் தாய்.
சகலபாவங்களையும் போக்குபவள்.
காயத்ரியைப் போல பவித்திரமான மந்திரம்
மண்ணுலகிலும் இல்லை,
விண்ணுலகிலும் இல்லை.
காயத்ரிக்கு மேலான ஜபம் இருந்ததுமில்லை,
இனிமேல் இருக்கப் போவதுமில்லை”
என்கிறார் யக்ஞவல்கியர்.
காயத்ரி மந்திரமானது உலகத்துக்கே பொதுவான ஒன்றாகும்.
அது எந்த ஒரு மதத்தையோ அல்லது கடவுளையோ குறிப்பிட்டு
சொல்லவில்லை. இம்மந்திரம் அனைவருக்கும் பொதுவான
பரம்பொருளை தியானிக்கச் சொல்லும் அருமையான மந்திரமாகும்.
எனவே இம்மந்திரத்தை அனைவரும் ஜபிக்கலாம்.
சந்தியா காலங்களில், அதாவது காலை மாலை நேரங்களில், காயத்ரி
மந்திரம் சொல்வது மிகவும் நல்லது.
இந்த காயத்ரி மந்திர ஜபத்தை சிரத்தையுடனும், அர்த்தம் நினைவில்
வைத்தும் தொடர்ந்து சொல்லி வந்தால் மனதில் நிதானமும்,
அமைதியும் ஏற்பட ஆரம்பிக்கும். நமது வாழ்க்கையில் சிக்கலான
சந்தர்ப்பங்களில் தெளிவாக முடிவெடுக்க முடியும். மாணவர்கள்
பாடங்களை பயிலும் முன் இந்த மந்திரத்தை ஜபித்துவிட்டு
தொடங்கினால் நிச்சயம் ஆழ்மனதில் நன்றாக பதியும்.
இந்த மகா மந்திரத்தைப் பயன்படுத்தி முன்னேறுவோமாக!
நன்றி : கணேசன் எழுத்தாளர் 

வட்டில்
ீ தினமும் ஐஸ்வரியம் பெருக விளக்கு ஏற்றுங்கள் | Vilakku
Mantra

காலையில் விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம் :

ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி


உலகாளும் நாயகியே போற்றி
செல்வ திருமகளே போற்றி
அறிவு கலைமகளே போற்றி
ஆதி சக்தியே போற்றி.

மாலையில் விளக்கு விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம் :

சுபம் பவது கல்யாணம்


ஆயுள் ஆரோக்ய வர்தணம்
மம துக்க விநாசாய
ஸந்தியா தீபம் நமோ நம.
ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம்
எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இத்துதியை
பாராயணம் செய்தால் அத்தொல்லைகள் சூரியனைக் கண்ட பனி
போல் அகலும். பயம் விலகும். கிரகபீடைகள் நீ ங்கும். ஆயுளை
வளர்க்கும். இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ததாலேயே ராமபிரான்
ராவணனை எளிதாக வெல்ல முடிந்தது. இந்த ஸ்லோகம் சூரியனைத்
துதிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம்
பொருள் இந்த பாடல் வரிகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது…

ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் பாடல் வரிகள்

ததோ யுத்தப் பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம்


ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்
தைவதைச்சஸமாகம்ய த்ருஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவத்ராமம்
ீ அகஸ்த்யோ பகவான் ருஷி: (1)

ராம ராம மஹாபாகோ ச்ருணுகுஹ்யம் ஸநாதனம்


யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி (2)

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்


ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் (3)

ஸர்வமங்கல மாங்கல்யம் ஸர்வபாப ப்ரணாசனம்


சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தன முத்தமம் (4)

ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்


பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் (5)

ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வ ீரச்மிபாவன:


ஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி: (6)

ஏக்ஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:


மஹேந்த்ரோ தனத: காலோ: யம: ஸோமோ ஹ்யமாம் பதி: (7)
பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யச்வினௌ மருதோ மனு:
வாயுர்வஹ்னி:ப்ரஜாப்ராண ருதுகர்த்தா ப்ரபாகர: (8)

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்


ஸுவர்ண – ஸத்ருசோ பானுர்-ஹிரண்யரேதோ திவாகர: (9)

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர் மரீசிமான்


திமிரோன்மதன: சம்புஸ் த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான் (10)

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:


அக்னிகர்ப்போ அதிதே: புத்ர: சங்க: சிசிரநாசன: (11)

வ்யோமநாத ஸ்தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:


கனவ்ருஷ்டிரபாம் மித்ரோ விந்த்யவதிப்லவங்கம:
ீ (12)

ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கல: ஸர்வதாபன:


கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ: (13)

நக்ஷத்ரக்ரஹதாராணா மதிபோ விச்வபாவன:


தேஜஸாமபி தேஜஸ்வ ீத்வாதசாத்மந் நமோஸ்துதே (14)

நம: பூர்வாய கிரயே பச்சிமாயாத்ரயே நம:


ஜ்யோதிர்கணானாம் பதயே தினாதிபதயே நம: (15)

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:


நமோ நம: ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம: (16)

நம உக்ராய வராய
ீ ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம: (17)

ப்ரஹ்மேசானாச்யுதேசாய ஸூர்யாயாதித்ய வர்ச்சஸே


பாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே நம: (18)
தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயாமிதாத்மனே
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: (19)

தப்தசாமீ கராபாய வஹ்னயே விச்வகர்மணே


நமஸ்தமோ பிநிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே (20)

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:


பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி: (21)

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஷ்டித


ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோ த்ரிணாம் (22)

வேதாச்ச க்ரதவைச்சைவ க்ரதூனாம் பலமேவ ச


யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு: (23)

ஏனமாபத்ஸு க்ருச்ச்ரேஷு காந்தாரேஷு பயேஷுச


கீ ர்த்தயன் புருஷ: கச்சித் நாவஸீததி ராகவ: (24)

பூஜயஸ்வை நமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்


ஏதத்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி (25)

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி


ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம் (26)

ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்டசோகோ பவத்ததா


தாரயாமாஸ ஸுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவான் (27)

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான்


த்ரிராசம்ய சுசிர் பூத்வா தனுராதாய வர்யவான்
ீ (28)

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்


ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத் (29)
அத ரவிரவதந் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
நிசிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ் த்வரேதி (30)

ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் பொருள்


ராம-ராவண யுத்தத்தை தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த
அகத்தியர், அப்போது போரினால் களைத்து,கவலையுடன் காணப்பட்ட
ராமபி ரானை அணுகிப் பின் வருமாறு கூறினார்.

மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா… ராமா… போரில் எந்த


மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லாபகைவர்களையும் வெல்ல
முடியுமோஅந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை
உனக்கு நான் உபதேசிக்கிறேன், கேள்.

எல்லா பகைவர்களையும் அழிக்கக்கூடியதும் மிகுந்த புண்ணியத்தை


அளிக்கக்கூடியதும் வெற்றியைத் தரக்கூடியதும்அளவற்ற உடல்
வலிமையை தரக்கூடியதும் உத்தமமான, மங்களகரமுமான ஆதித்ய
ஹ்ருதயம் என்ற ஸ்தோத்திரத்தை நீஅனுதினமும் ஜபிக்க வேண்டும்.
இந்த ஸ்தோத்திரம், சூரியனுடைய இதயத்தில் வசிக்கும் பகவானுடைய
அனுக்ரகத்தைஅளிப்பதாகும்.

எல்லாவகையான மங்களங்களையும் வழங்கக்கூடிய மந்திரங்களுக்கு


மேலான மந்திரம் இது. எல்லா பாவங்களையும்போக்கவல்லது.
மனக்கவலை, உடற்பிணிகளைத் தீர்க்கவல்லது. ஆயுளை விருத்தி
செய்யும். எல்லா மந்திரங்களை விடவும்சிறந்ததான இந்த
ஸ்தோத்திரத்தை நீ ஜபிக்க வேண்டும்.

ஒளிமிகுந்த கிரணங்களை உடையவனும் நித்தம் உதிக்கின்றவனும்


தேவர்களாலும் அசுரர்களாலும் துதிக்கப்பட்டவனும் எல்லா
ஐஸ்வர்யங்களையும் கொண்டவனும் ஒளிமிகச் செய்பவனும்
ஈஸ்வரனுமாகிய சூரியனை நீ பூஜை செய்ய வேண்டும்.

எல்லா தேவதைகளும் இந்த சூரியனுக்குள் அடக்கம். பிரகாசமாக


உடற்பொலிவு கொண்டவர். தன் கிரணங்களாலேயேஉலகை ரட்சிப்பவர்.
தேவர்கள், அசுரர்கள் மற்றும் இந்த உலகமனைத்தையும் தன்
கிரணங்களால் காப்பாற்றுபவர் இந்தசூரியனே.

இவரே பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் முருகனாகவும்


பிரஜாபதியாகவும் மகேந்திரனாகவும்குபேரனாகவும் காலமாகவும்
யமனாகவும் சந்திரனாகவும் வருணனாகவும் விளங்குகிறார்.

இந்த சூரியனே பித்ருக்களாகவும் அஷ்டவசுக்களாகவும் சாத்யர்கள் என்ற


தேவர்களாகவும் அச்விநி தேவர்களாகவும் ஸப்தமருந்துகளாகவும்
மனுவாக வும் வாயுவாகவும் அக்கினியாகவும் பிரஜைகளாகவும்,
பிராணனாகவும் பருவ காலங்களைஉருவாக்குபவராகவும் ஒளி
பரப்புபவராகவும் திகழ்கிறார்.

இந்த சூரியனே அதிதியின் புத்திரன். உலகை உண்டுபண்ணுகிறவர்.


கர்மாக்களைச் செய்யச் செய்பவர். ஆகாயத்தில்சஞ்சரிப்பவர். மழையால்
உலகையே வளமாக்குபவர். ஒளிமிகுந்த கிரணங்களைக் கொண்டவர்.
பொன்னிறமானவர். தங்கமயமான பிரமாண்டத்தை உருவாக்கியவர்.
பகலை சிருஷ்டித்தவர்.

பச்சை குதிரையை வாகனமாகக் கொண்டவர். ஆயிரக்கணக்கான


கிரணங்களை உடையவர். ஸப்த என்னும் பெயருள்ளகுதிரையை
உடையவர். பிர காசத்துடன் விளங்குபவர். இருளை அழிப்பவர். சுகம்
அளிப்பவர். உலகையே ஸம்ஹாரம்செய்பவர். உலகம் தோன்றுவதற்கு
முன்னாலேயே உருவானவர்.

தங்கமயமான பிரமாண்டத்துக்குரியவர் இந்த சூரியன். காம, க்ரோத, லோப


குணங்களைப் போக்குபவர். எரிச்சலைக்கொடுப்பவர். ஒளி மிகுந்தவர்.
எல்லோராலும் போற்றப்படுபவர். பகலில் அக்கினியைத் தன் கர்ப்பத்தில்
வைத்திருப்பவர்.அதிதியின் புத்திரன். ஆகாசம் முழுவதும் வியாபித்தவர்.
பனியை விலக்குபவர்.

இவர் ஆகாயத்தை உருவாக்கியவர். இருளைப் போக்குகிறவர். ரிக், யஜுர்,


ஸாம வேதங்களுடையப் பொழிவானஉபநிஷத்துகளால்
கொண்டாடப்படுகி றவர். அதிகமான மழையைக் கொடுப்பவர். நல்ல
நீர்நிலைகளை உருவாக்குபவர்.தட்சிணாயனத்தில் விந்திய மலை
வழியாக சஞ்சரிப்பவர்.

இவர் வெயிலைக் கொடுப்பவர். வட்டமான பிம்பம் உள்ளவர்.


நட்புருவானவர். பொன் நிறமுள்ளவர். நடுப்பகலில்அனைவருக்கும்
தாகத்தை உண்டு பண்ணுகிறவர். அனைத்து சாஸ்திரங்களையும்
உபதேசிப்பவர். உலகத்தை நடத்திச்செல்பவர். தேஜஸ் மிகுந்தவர்.
எல்லோரிடமும் அன்பு கொண்டவர். எல்லோருடைய உற்பத்திக்கும்
காரணமானவர்.

அஸ்வினி முதலான நட்சத்திரங்கள், நவகிரகங்கள், பிற ஒளிகள்


எல்லாவற்றிற்கும் அதிபர் சூரியன். உலகத்தைக்காப்பாற்றுகிறவர்.
அக்கினி முதலான ஒளிகளுக்கெல்லாம் மேலாக ஒளிர்பவர். பன்னிரண்டு
உருவங்களாக இருப்பவர்.இத்தகைய மகிமை பொருந்திய சூரிய பகவானே
நமஸ்காரம்

கிழக்கு திசையிலுள்ள மலைமீ திருப்பவரே நமஸ்காரம். மேற்கு


திசையிலுள்ள மலைமீ திருப்பவரே நமஸ்காரம்.நட்சத்திரங்களுக்கும்
கிரகங்களுக்கும் அதிபதியே, பகலுக்குத் தலைவனே நமஸ்காரம்.

என்றும் ஜெயிப்பவரே, வெற்றியையும் மங்களத்தையும் அளிப்பவரே,


பச்சை குதிரை வாகனரே நமஸ்காரம்.ஆயிரக்கணக்கான கிரணங்களைக்
கொண் டவரே, சூரிய பகவானே நமஸ்காரம்.

பாவிகளுக்கு பயங்கரமானவரே, சிறந்த வரரே,


ீ விரைந்து செல்பவரே
நமஸ்காரம். தாமரைப் பூவை மலரச் செய்பவரே, உலகிலேயே முதலில்
உண்டா னவரே சூரிய பகவானே, நமஸ்காரம்.

பிரம்மா, பரமசிவன், விஷ்ணு இவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனானவரே,


சூரியனே, ஒளிவடிவானவரே, எல்லா யாகங்களிலும்கொடுக்கப்படும்
ஹவிஸை ஏற்றுக்கொள்பவரே, உக்கிரமான சரீரம் கொண்டவரே,
நமஸ்காரம்.
இருளை விலக்குபவரே, பனியை உருக்குபவரே, எதிரிகளை அழிப்பவரே,
அளவற்ற ஆற்றல் கொண்டவரே, செய்நன்றியைமறப்பவரை
வழ்த்துபவரே,
ீ நட்சத்திரம் முதலான ஒளிகளுக்கு நாயகனே, நமஸ்காரம்.

உருக்கிய தங்கம் போல ஒளிர்பவரே, அக்கினி ஸ்வரூபமானவரே,


உலகத்தை உருவாக்கியவரே, அஞ்ஞானத்தைப்போக்குபவரே, பிரகாசம்
மிகுந்த வரே, உலகத்துக்கு சாட்சியானவரே, நமஸ்காரம்.

மகாபிரபுவான இந்த சூரியனே பிரளயத்தை உருவாக்குகிறார். மீ ண்டும்


உலகத்தை இவரே சிருஷ்டிக்கிறார். இவரேபாதுகாக்கிறார். இவரே
தவிக்கவும் வைக்கிறார். இவரே தன் கிரணங்களால் மழைபொழிய
வைக்கிறார்.

பிற அனைத்து பூதங்களும் உறங்கும்போது, அந்தர்யாமியாக இந்த சூரியன்


விழித்துக்கொண்டிருக்கிறார். இவரே யாகம்வளர்க்கும் அக்கினியாகவும்
அந்த அக்கினி யாகத்தின் பலனாகவும் திகழ்கிறார்.

வேதங்களாகவும் யாகங்களாகவும் யாகங்களின் பலனாகவும்


உலகத்திலுள்ள எல்லா செயல்களுக்கும் மூல காரணனாக இந்த
சூரியனே விளங்குகிறார்.

ராகவா! எந்த ஆபத்து காலத்திலும் சரி, எந்த வகையான கஷ்டம்


நேர்ந்தாலும் சரி, காய்ச்சல் முதலான உடல் நோய்கள்எப்போது
ஏற்பட்டாலும் சரி, காடுகளினூடே பயணம் செய்யும்போது எந்த ஆபத்து
எதிர்ப்பட்டாலும் சரி, எப்போது பயம்தோன்றினாலும் சரி, அப்போது
மேற்கண்ட ஸ்லோகங்களால் சூரியனைத் துதித்தால் போதும், எந்தத்
துன்பமும் நெருங்கமுடியாது, ராகவா!

ஒருநிலைப்பட்ட மனதுடன், தேவர்களுக்கெல்லாம் தேவனான,


உலகத்துக்கே அதிபதியும் ஆன இந்த சூரியனைவழிபடுவாயாக. இந்த
ஸ்தோத்திரத்தை மூன்று முறை ஜபித்தாயானால், இந்த யுத்தத்தில் நீ
நிச்சயம் வெற்றி பெறுவாய்.
மனிதருள் மாணிக்கமே, இந்தக் கணத்திலேயே நீ ராவணனை வென்று
வெற்றிவாகை சூடியவனாகிறாய், என்று சொல்லி,அகத்தியர் ராமனை
ஆசிர்வ தித்து விட்டுச் சென்றார்.

அகத்தியர் கூறியதைக் கேட்ட ராமன் அப்போதே தன் சோர்வு முற்றிலும்


நீங்கியவனானான். மிகுந்த சந்தோஷத்துடன், புதுஉற்சாகத்துடன் மேற்க
ண்ட ஸ்லோகங்களை ஜபிக்கத் தொடங்கினான்.

மூன்று முறை நீரெடுத்து ஆசமனம் செய்து, பரிசுத்தனாகி, சூரியனைப்


பார்த்து இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்து, புது பலமும்,புதுப்பிக்கப்பட்ட தன்
னம்பிக்கையுடனும் ராமன் தன் வில்லை எடுத்துக்கொண்டார்.

மகா வரனான
ீ ராமன், வில்லேந்தியவராய் சூரியனை நோக்கி ஜபம் செய்து
பரமானந்தத்தை அடைந்தார். திடமானமனோபலத்துடன் ராவணனுக்கு
எதிரான போருக்குத் தயாரானார். அவனை வதைக்க வேண்டும் என்ற
எண்ணத்தைமனத்திண்மையாகக் கொண்டார்.

அப்பொழுது தேவகணங்களின் நடுவிலிருந்த சூரிய பகவான், உவகை


பூத்து உள்ளக் களிப்புடன் ஸ்ரீராமரை நோக்கி, ‘ராவண வதத்தை துரிதமாய்
முடி’ என்று உபதேசித்து ஆசிர்வதித்தார்…

ஆதித்ய ஹ்ருதயம் பலன்கள்


மனச்சோர்வையும் நோய்களையும் தீர்த்து, உடலுக்கும் சக்தி தரும் அபூர்வ
ஸ்லோகமாக ஆதித்ய ஹ்ருதயம் கூறப்பட்டுள்ளது. ராவணனோடு யுத்தம்
செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு,
ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவருக்கு முனிவர்
அகத்தியர் உபதேசித்த அற்புத ஸ்லோகம் இது. ஆபத்துக் காலங்களிலும்
எந்த கஷ்ட காலத்திலும் எதற்காகவேனும் பயம் தோன்றும் போதும்
இத்துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும். துன்பங்கள்
தூள் தூளாகும்.  பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும். ஆயுளை வளர்க்கும்.

To purify Soul and get Libearation

Lord Shiva helps to purify karma

Om Mahadevaya Parmatma Karmatma Shanti Om Shantihi Om Shantihi


Ganga goddess helps to purify karma

Chathur bhujaam Trinayanaam

Suththaspadiga Sannibom

Thyayeham makaraaroodam

Subra vasthraam suusismithaam

Namo bhagavathyai dasapaapaharaayai

Gangaayai naaraayanyai revaathyai

Sivaayai dhakshaayai amrutaayai

Visvaroopinyai nandhinyai namo namaha

“I bow to Matha Ganga, who has four hands, three eyes, who has a crystal clear mind, who is
mounted on Makara (a kind of fish), who wears shining garments, who destroys ten kind of
sins, who is Ganga, who is worshipped by Narayana, who is Revathy, who is dear to Shiva,
Daksha and Amrita, who is in the form of the universe and who is pretty.”

Chant this sloka daily before having a bath.

By the grace of Maa Ganga, one can get rid of all diseases and ailments. It washes away ten
kinds of sins and gives peace to the souls and helps to attain Moksha or liberation of the
soul.

தீராத கஷ்டங்கள் தீர்க்கும் லட்சுமி நரசிம்மர் மந்திரம்..!

கீ ழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லட்சுமி நரசிம்மர் மந்திரத்தை தினமும்


தொடர்ந்து சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.

ஓம் நமோ நாரஸிம்ஹாய


வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
வஜ்ர தேஹாய வஜ்ராய
நமோ வஜ்ர நகாய ச
முதலில் ஒரு லட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னதியில் மாலை
வேளையில் இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க
வேண்டும்.
யாதேவி ஸர்வ பூதேஷூ – தேவி
மஹாத்மியத்தில் சொல்லப்பட்ட அபூர்வ
ஸ்லோகம்

தேவி மஹாத்மியத்தில் சொல்லப்பட்ட


அபூர்வ ஸ்லோகம்

சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் தமக்கு அளிக்கப்பட்ட வர பலத்தாலும்,


இயல்பான அரக்கத்தனத்தாலும் இந்திரன் மீ து போர் தொடுத்து,
தேவருலகத்தையே அடிமைப்படுத்தினர். தேவர்களின்
பொறுப்புகளையெல்லாம் தாமே ஏற்று நடைமுறைப்படுத்தவும்
முற்பட்டனர். தம் சுகபோகங்களையும், செல்வங்களையும் இழந்த
தேவர்கள், தேவியைத் தஞ்சமடைந்தனர். தங்களை அரக்கர்
பிடியினின்றும் காத்தருள வேண்டினர்.
“யார் தம்மை அவர்களது ஆபத்து காலத்தில் துதிக்கிறார்களோ,
அவர்களின் துயர் அனைத்தையும் அக்கணமே போக்குவேன்” என தேவி
அவர்களுக்கு ஏற்கெனவே வரமளித்திருந்தாள். அதனால் தேவர்கள்
மலையரசாகிய இமயத்தை அடைந்து விஷ்ணுமாயாவான பராசக்தியை
துதித்தார்கள்.

இத்துதி தேவி மஹாத்மியத்தில் இடம் பெற்றுள்ளது. ஆடி மாத


செவ்வாய்க்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் இத்துதியை
பாராயணம் செய்பவர்கள் அனைவரும் பதினாறு செல்வங்களும் பெற்று
பெருவாழ்வு வாழலாம் என்கிறது தேவி மகாத்மியம்!

Ya Devi Sarva Bhuteshu Lyrics in Tamil


யாதேவி ஸர்வபூதேஷு விஷ்ணு மாயேதி ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (01)
எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்தும் விஷ்ணு மாயை
உருவில் உறைந்திருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம்,
நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவி ஸர்வபூதேஷு சேதனேத்பிதீயதே


நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (02)

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிலும், தாவரங்களிலும், மரம்


செடி, கொடிகளிலும், பறப்பன, ஊர்வன, மிதப்பன மற்றும் மிருகங்கள்,
மனிதர்கள் என அனைத்து ஜீவராசிகளிலும் உறைந்திருக்கும் உயிர்ச்
சத்தாக, ஜீவசக்தியாக, ஆன்மாவாக அமைகிறாளோ, அந்த தேவிக்கு
நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதேவி ஸர்வ பூதேஷு புத்தி ரூபிணே ஸம்ஸ்திதா


நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (03)

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் புத்தியாக, ஞானமாக


இருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவி ஸர்வபூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா


நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (04)

இங்கே தூங்குவதற்குக் கூட தேவியைத் தொழவேண்டுமா என்று


கேட்கலாம். அந்த நித்திரை கூட அவ்வளவு சுலபமாக அனைவருக்கும்
வந்துவிடுகிறதா என்ன? எத்தனையோ பேர் பலவிதமான உபாதைகளால்,
தூக்கம் வராமல் தவிப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அப்படி நல்ல
தூக்கத்தைக் கொடுக்கக் கூடிய சக்தியாக விளங்கும் தேவியை தினமும்
இரவில் நினைத்து நம் கவலைகளை அவளின் பாதத்தில் சமர்ப்பித்தால்
அவள் தூக்கத்தின் வடிவில் நம்மை ஆக்கிரமிப்பாள். எந்த தேவியானவள்
அனைவரிடத்திலும், எல்லா உயிர்களிடத்திலும் நித்திரை வடிவில்
உறைகின்றாளோ, அதன் மூலம் உடல் அயர்ச்சியைப் போக்கிப்
புத்துணர்வு தருகின்றாளோ, அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம்,
நமஸ்காரம்.
யா தேவி ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (05)

மனிதர் மட்டுமின்றித் தாவரங்களுக்கும், மிருகங்களுக்கும், பட்சிகளுக்கும்


மற்றும் ஊர்வன என அனைத்து உயிர்களுக்கும் உணவு
தேவைப்படுகின்றது. தேவையான சமயத்தில் உணவு கிடைத்தால் மட்டும்
போதுமா? அந்த உணவை உண்ணும் அளவுக்குப் பசியும் இருத்தல்
வேண்டும் அல்லவா? என்னதான் அறுசுவை உணவை நம் கண்முன்
வைத்திருந்தாலும் நமக்கு பசி இல்லை என்றால் சாப்பிடமுடியாது. இந்த
உலகத்தில் எதையும் போதும் என்று நாம் சொல்லமாட்டோம். ஆனால்
சாப்பாடு மட்டும் வயிறு நிறைந்துவிட்டால் போதும், இனிமேல் சாப்பிட
முடியாது என்று கூறுவோம். அப்படி நாம் உயிர்வாழ நமக்கு
அத்தியாவசியமான அந்த உணவை உட்கொள்ளத் தேவையான பசி
உணர்வு நமக்கு தேவை. எந்த தேவியானவள் அனைத்து
உயிர்களிடத்திலும் பசி வடிவில் உறைகின்றாளோ அந்த தேவிக்கு
நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவி ஸர்வ பூதேஷு ச்சாயா ரூபேண ஸம்ஸ்திதா,


நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (06)

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் நிழல் வடிவில்


பிரதிபிம்பமாய் உறைகின்றாளோ அந்ததேவிக்கு நமஸ்காரம்.
வெயிலிலும், நிலவிலும் உயிர்வாழ் ஜீவராசிகள் அனைத்திற்கும்
பிரதிபிம்பங்கள் தோன்றுவதுண்டு. அந்தப் பிரதிபிம்பமாய் உறையும்
தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவி ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்திதா


நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (07)

எந்த தேவியானவள் சக்தி ரூபமாய் அனைத்து உயிர்களிடத்திலும்


உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம். நெருப்பில் உஷ்ணம்
எவ்வாறு உணரப்படுகின்றதோ, காற்றில் அதன் வலிமை எவ்வாறு
உணரப்படுகின்றதோ, வெயிலில் அதன் சூடு எவ்வாறு
உணரப்படுகின்றதோ, குளிரில் அதன் வாடை எவ்வாறு தெரிகின்றதோ
அவ்வாறு இயற்கையாகவே மனிதரிடம் உள்ள சக்தி உருவாய் தேவி
விளங்குகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவி ஸர்வ பூதேஷு த்ருஷ்ணா ரூபேண ஸம்ஸ்திதா


நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (08)

எந்த தேவியானவள் அனைவரிடத்தில் ஆசை அல்லது வேட்கை வடிவில்


உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம். த்ருஷ்ணா என்றால்
பேராசை என்ற ஒரு பொருளும் உண்டு. எனினும் இங்கே
குறிப்பிடப்படுவது தேவியை அடைய வேண்டும், அவள்
பாதாரவிந்தங்களைத் தியானிக்க வேண்டும் என்று எண்ணும்
பேராசையைத்தான். ஆகவே தேவியை அடைய நினைக்கும்
பேராசையைத் தோற்றுவிப்பவளும் அவளே என்று வர்ணிக்கப்
படுகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவ ீ ஸர்வபூதேஷு க்ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா


நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம: (09)

அனைத்து உயிர்களிடத்திலும் பொறுமை வடிவினளாக உறையும்


தேவிக்கு
நமஸ்காரம். ஒன்றை அடைய வேண்டுமானால் ஆசை மட்டும் இருந்தால்
போதுமா? அதற்காகப் பாடுபடவேண்டும், பொறுமை காக்கவேண்டும்.
தக்க தருணத்திலேதான் அடைய முடியும். அதுவரை பொறுத்திருக்க
வேண்டும். அந்தக் காத்திருப்புக்குக் கைகொடுக்கும் அன்னை பொறுமை
வடிவினளாய் வர்ணிக்கப் படுகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரம்,
நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவி ஸர்வபூதேஷு ஜாதிரூபேண ஸம்ஸ்திதா


நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (10)

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் ஜாதி வடிவில்


உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம். இதை லலிதா
ஸஹஸ்ரநாமம் வர்ணாஸ்ரம விதாயினி என்று கூறுகிறது. அவளே
வர்ணங்களை வகுப்பவள்.
யா தேவ ீ ஸர்வ பூதேஷு லஜ்ஜாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (11)

லஜ்ஜா என்றால் வெட்கம், நாணம் என்று அர்த்தங்கள் வருகின்றன.


என்றாலும் இந்த இடத்தில் இதற்கு அடக்கம், பணிவு என்பது பொருந்தும்.
நாம் செய்யும் தவறுகளுக்கு வெட்கப்படுவதோடு அல்லாமல், நாம்தான்
அனைத்தும் செய்தோம், நம்மால் தான் எல்லாம் என்ற நினைப்பும் வரக்
கூடாது. அடக்கமாய், பணிவாய், விநயமாய் இருக்கவேண்டும். அத்தகைய
கல்விதான் தேவை, இல்லையா? கல்வியால் பெறக்கூடிய இந்த லஜ்ஜை
என்னும் உணர்வாய் எந்த தேவி அனைவரிடத்திலும் உறைகின்றாளோ
அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவ ீ ஸர்வ பூதேஷு சாந்திரூபேண ஸம்ஸ்திதா


நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம: (12)

எந்த தேவியானவள் நம் அனைவரிடத்திலும் சாந்தி வடிவில்


உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம். இங்கே சாந்தி என்பது
மௌனம், பொறுமை, பகை தீர்ந்து அமைதி அடைதல் என்ற
அர்த்தங்களில் எடுத்துக் கொள்ளலாம். மற்றவர் நம்மிடம் கோபமாய்
இருந்தாலோ மன வேறுபாடுகள் இருந்தாலோ அமைதியா இரு என்று
சொல்கின்றோம் அல்லவா? அந்த அமைதிதான் இங்கே. மௌனமும் ஒரு
மொழியே.
மௌனமாய் இருந்தால் அதைவிடச் சிறந்ததொரு பேச்சு வேறு
கிடையாது. அனைத்தையும் உணர்த்தும் மௌனம். மௌனம்
கடைப்பிடிக்கப்பட்டால் அங்கே சாந்தி தானாகவே வந்து சேரும்.
தேவையான சமயங்களில் கட்டாயமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய
மௌனம், அமைதி என்ற உருவில் எந்த தேவி உறைகின்றாளோ
அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவ ீ ஸர்வ பூதேஷு ஷ்ரத்தா ரூபேணஸம்ஸ்திதா


நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம: (13)

சிரத்தை என்பது ஒருமித்த மனத்துடனும் தீவிரமான எண்ணத்துடனும்


ஒன்றை அடைய நாம் அக்கறையுடன் எடுத்துக்கொள்ளும் முயற்சியே.
எந்த தேவியானவள் நம்மிடம் சிரத்தை வடிவில் உறைகின்றாளோ
அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவ ீ ஸர்வ பூதேஷு காந்தி ரூபேண ஸம்ஸ்திதா


நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம: (14)

காந்தி என்றால் ஒளி, வெளிச்சம் என்றும் பொருள். தனிப்பட்ட முறையில்


அலங்கரித்துக் கொள்வதையும் குறிக்கும். அந்த அலங்கரிப்பினால்
ஏற்படும் தனிப்பட்ட கவரும் தன்மையையும் குறிக்கும். ஆனால், இங்கே
ஒளி என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒளி இல்லையேல்
உலகில்லை அல்லவா? பகலில் சூரிய ஒளி தேவைப்படுகின்றது. இரவில்
மாற்றாக சந்திரன் ஒளி குளுமையாகக் கிடைக்கின்றது.
வெறும் இருட்டு மட்டுமே இருந்தால் என்ன தெரியும்? எதுவும் தெரியாது,
புரியாது. நம் அனைவருக்கும் இவ்வாறு ஒளியின் அவசியம்
தேவைப்படுகின்றது. அதை உணருவது நம் கண்களே அல்லவா? நம்
அனைவருக்கும் அந்தக் கண்களுக்கு ஒளியைத் தரும் தேவியாக
உறைபவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவ ீ ஸர்வ பூதேஷூ லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்திதா


நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (15)

உயிர் வாழ அனைவருக்கும் உணவு தேவை, அந்த உணவை


எல்லாராலுமா உற்பத்தி செய்ய முடியும்? யாரோ உற்பத்தி
செய்கின்றார்கள். நாம் விலை கொடுத்து வாங்குகின்றோம். அதற்குப்
பணம் தேவை அல்லவா? பணம் இல்லை எனில் எதையும் வாங்க
முடியாது. தேவைக்குத் தக்க பணம் இல்லாமால் ஒருவராலும் இருக்க
முடியாது. நாம் ஆசைப்பட்டு சேர்த்து வைக்கும் பணம் இல்லை இது.
தேவைக்கான பணமே இங்கே குறிப்பிடப் படுகின்றது. அந்தச்
செல்வத்தைத் தருபவள் லக்ஷ்மி தேவி தான். அந்த லக்ஷ்மி தேவி
வடிவில் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள்,
நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

யா தேவ ீ ஸர்வ பூதேஷூ வ்ருத்தி ரூபேண ஸம்ஸ்திதா


நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: (16)
பொதுவாய் சொத்துக் குவிப்பையும், மேன்மேலும் வட்டி வாங்கிச்
சேர்ப்பதையுமே குறித்தாலும், வளர்ச்சியைக் குறிக்கும் இந்த வ்ருத்தி
என்னும் சொல்லானது இங்கேயும் நல் வளர்ச்சியை மட்டுமே
குறிக்கின்றது. செழிப்பாக இருக்கும் மனிதன், குடும்பத்தையும், குடும்பம்
சமூகத்தையும், சமூகம் நகரத்தையும் நகரம், மாவட்டங்களையும்,
மாவட்டங்கள் மாநிலங்களையும், மாநிலங்கள் நாட்டையும் எவ்வாறு
செழிப்பாக்குகின்றதோ, அந்தத் தனி மனிதனின் செழிப்பு, வளர்ச்சி
ஒவ்வொருவருக்கும் தேவை. அதைக் கொடுப்பவள் தேவியே. இங்கே
வ்ருத்தி வடிவில் உறைகின்ற தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்,
நமஸ்காரங்கள்.

யா தேவ ீ ஸர்வ பூதேஷு ஸ்ம்ருதி ரூபேணஸம்ஸ்திதா


நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (17)

ஸ்ம்ருதி என்றால் இந்த இடத்தில் திரும்பத் திரும்பச் சொல்லி


வேதங்களை நினைவு கூருதல் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளாமல்,
நினைவு, சிந்தனை, யோசித்துப் பாகுபாடு அறிந்து புரிதல் என எடுத்துக்
கொள்ள வேண்டும். அத்தகையதொரு நல்ல நினைவு நம்மிடம் தேவை
அல்லவா? தீயவற்றையே நினைத்தால் மனம் கெடுவதோடு
மட்டுமல்லாமல், உடல் நலமும் கெட்டுப் போகுமே! ஆகவே நல்ல
சிந்தனையை, நல்ல புத்தியை, நல்லவற்றையே நினைக்கும் மனதைக்
கொடுப்பவள் தேவியே. இப்படி அனைவர் மனதிலும் சிந்தனை உருவில்,
ஸ்ம்ருதியாக உறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம்,
நமஸ்காரம்.

யா தேவ ீ ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்திதா


நம்ஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (18)

தயை, கருணை, இரக்கம், பரிவு அனைத்துமே இங்கே பொருந்தும். சகல


ஜீவ ராசிகளிடத்திலும் கருணை காட்ட வேண்டும். பரிவு காட்ட வேண்டும்.
எளியோரிடம் இரக்கமும் பரிவும் இருக்க வேண்டும். இந்த தயை
அனைவரிடத்திலும் இருந்தாலே நல்லது அல்லவா? தயை உருவில்
அனைவரிடத்திலும் உறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம்,
நமஸ்காரம்.
யா தேவ ீ ஸர்வ பூதேஷு துஷ்டி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (19)

துஷ்டி, திருப்தி, சந்தோஷம். மனதில் போதுமென்ற எண்ணம் இருந்தாலே


சந்தோஷம் வரும் அல்லவா? இந்த உலகைப் படைத்த அன்னை உலகிலே
மற்ற அனைத்து ஜீவராசிகளையும் மட்டுமல்லாமல், நாம் உண்ணக் கூடிய
உணவாகக் காய், கனிகள் என அனைத்தையும் படைத்திருக்கின்றாள். பசு
மாடு பால் கொடுக்கின்றது. நாம் கொடுப்பதோ வைக்கோலும், தவிடுமே.
மாடு அதிலேயே திருப்தி அடைகின்றது. ‘கறந்த பாலைத் திரும்பக் கொடு’
என்று பசு கேட்டால் என்ன செய்ய முடியும்? பறித்த காய், கனிகளைத்
திரும்பக் கொடு என எந்தச் செடி, மரமாவது கேட்கின்றதா?
இல்லையே! நமக்கு எந்த மறுப்பும் காட்டாமல் நம் தேவைக்கு உதவும்
இந்தச் செடி, கொடிகளையும், மிருகங்களையும், பறவைகளையும்
பார்த்தாவது நமக்குப் போதுமென்ற மனம் வருகின்றதா? வரவில்லையே!
இந்தப் போதுமென்ற மனத்தைக் கொடுக்கும் தேவிக்கு, அந்த மனமாக
உறைகின்ற தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவ ீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா


நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (20)

அம்மா என்றால் அன்பு, பொறுமை, பாசம், இனிமை. அம்மா என்ற ஒரு


வார்த்தையே நாம் அனைவருக்கும் எத்தகையதொரு நிம்மதியையும்,
பாசத்தையும், ஆறுதலையும் தருகின்றது! எத்தனை வயது ஆனாலும்
அம்மா இருந்தால் என்ற எண்ணம் எழுவதையும், அம்மா நினைவு
வருவதையும் மறுக்கவோ, மறைக்கவோ முடியவில்லையே! பெண்கள்
அனைவரிடமும் தாய்மை சக்தி, உறைந்தே இருக்கின்றது. அதை
எவராலும் மாற்றவோ, மறைக்கவோ முடியாது. தேவையான
சமயங்களில் தன்னை மீ றி வெளிப்பட்டே ஆகும். பட்சிகள் ஆகட்டும், புழு,
பூச்சிகள் ஆகட்டும்,
மிருகங்கள் ஆகட்டும் அனைத்திலும் பொதுவாக பெண் இனமே குழந்தை
பெறுகின்றது. ஆகவே அந்த அன்னை என்னும் சக்தியாக உறைகின்றவளே
தேவிதான். அவளின் சக்தி இல்லை எனில் தாய்மை என்பது
கேலிக்கூத்தாக இருக்குமோ?அந்த தாய் வடிவான சக்தியாக
உறைந்திருக்கும் அன்னைக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யா தேவ ீ ஸர்வ பூதேஷு ப்ராந்தி ரூபேணஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம: (21)

ப்ராந்தி என்றால் சுற்றுதல், ஸ்திரமற்ற தன்மை என்று பொருள்படும்.


மாயை, என்றும் அர்த்தம் கொள்ளலாம். பூமியின் சுழற்சியை எடுத்துக்
கொள்ளலாம். இறை சக்தி இல்லை எனில் பூமி சுற்றுவது எங்கே?
என்றாலும் நமக்குத் தோன்றும் மாயையைக் களைய அன்னையின் சக்தி
வேண்டுமல்லவா? அந்த மாயையைத் தோற்றுவித்து, அதன் மூலம்
நம்மைப் பண்படுத்தி, நல்வழியில் திருப்பி, நம்மைப் பூரண சரணாகதி
அடையச் செய்யும், மாயா தேவி என்னும் சக்தியாக இருக்கும் அந்த
அன்னைக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

இந்த்ரியாணாம் அதிஷ்டாத்ரீ பூதானாஞ்சாகிலேஷு யா


பூதேஷூ ஸததம் தஸ்யை வ்யாப்தி தேவ்யை நமோ நம:

அனைத்து உயிர்களிடத்திலும் உறைந்திருக்கும் இந்திரியங்களை அடக்கி


ஆள்பவளாய் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம்,
நமஸ்காரம், நமஸ்காரம்.

சிதிரூபேண யா க்ருத்ஸன மேதத் வ்யாப்யஸ்திதா ஜகத்


நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

சைதன்யமாக, ஆன்மா, உயிர், ஜீவன், உணர்ச்சி அல்லது நம் புத்தியை


ஆட்டுவிக்கும் சக்தி என்று அந்த உணர்வாய் உறைபவளே, நம் ஆன்மாவே
அந்த தேவிதான். அப்படி சகல ஜீவராசிகளிலும் இவ்வாறே நிலைத்து
வியாபித்துப் பரவி இருக்கின்ற அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம்,
நமஸ்காரம்.

அனைவருக்கும் என்றும் மங்களமே உண்டாக அந்த சர்வேஸ்வரியைப்


பிரார்த்திப்போம்.

Maha Mrityunjaya Manthiram


ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ
பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
திருநீ ற்றுப் பதிகம்
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே… (1)

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு


போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (2)

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு


சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (3)

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு


பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (4)

பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு


பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே… (5)

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு


வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ண ீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (6)

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு


பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே… (7)
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே… (8)

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு


மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே… (9)

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட


கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே… (10)

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்


போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே… (11)

You might also like