You are on page 1of 44

சுங்கை செனாருட் தோட்டத்


தமிழ்ப் பள்ளி

பிரார்த்தனைப் பாமாலை
2022

1
மௌனம்
தியானம்
பிரணவம்

பிரணவம் ( ஓம் என்ற பிரணவத்தை 3 முறை எல்லாரும் சேர்ந்து ஓதவும் )

விநாயகர் வணக்கம்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை


இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

. குரு வணக்கம்

குருர் பிரம்மா குருர் விஷ்ணு


குருர் தேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி


ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

கலைமகள் வணக்கம்
சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவதூமே ஸதா

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்


ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாரா திடர் (பாரதியார்)

சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவி, செஞ்சொல்


தார்தந்த என்மனத் தாமரை யாட்டி, சரோருகமேல்
பார்தந்த நாதன் , இசை தந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதி அம்போருகத் தாளை, வணங்குதுமே (சரஸ்வதி அந்தாதி)

விநாயகர் துதி பாடல்கள்

1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்


நோக்குண்டாம் மேனி நடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

2. திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்


பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்

2
காதலால் கூப்புவர்தம் கை

3 பிடியதன் உருவுமை கொளமிகு கரியது


வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வழி வலமுறை இறையே

4 மூஷிக வாகன மோதக ஹஸ்தா


சாமர கர்ணா விளம்பித ஸூத்ரா
வாமன ரூபா மஹேஸ்வர புத்ரா
விக்னவிநாயக பாதநமஸ்தே

5 சர்வேசா விநாயகா , சர்வேசா விநாயகா


பாசத்தின் அமுதே விநாயகா
வழிகாட்டும் தெய்வம் விக்னேஸ்வரா
தியாகத்தின் ஒளியே விநாயகா
சர்வேசா விநாயகா ....சர்வேசா விநாயகா

ஓம் கம் கணபதி விநாயகா


கஜமுக கஜமுக விக்னேஸ்வரா
யானை முகனே விநாயகா
சர்வேசா விநாயகா ..... சர்வேசா விநாயகா

பாச கயிறு கொண்ட விநாயகா


அங்குசத்தால் வழிகாட்டும் விக்னேஸ்வரா
தந்தத்தைத் தியாகம் செய்த விநாயகா
கீதையைத் தந்தாய் விக்னேஸ்வரா..... சர்வேசா விநாயகா

6. கலைநிறை கணபதி சரணம் சரணம்


கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவ நின் இணையடி சரணம் சரணம்
சரவணபவகுஹ சரணம் சரணம்

சிலைமலையுடையவ சரணம் சரணம்


சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவருமொரு பரை சரணம் சரணம்
உமைசிவை அம்பிகை சரணம் சரணம்

7. ஸ்ரீ கணநாதா சிந்தூர வர்ண கருணாசாகர கரிவதனா


லம்போதர லகுமிகரா
அம்பாசுத அமர விநோத
லம்போதர லகுமிகரா
சித சாரண கண சேவித சித்தி விநாயக தே நமோ நம (லம்போதர)
சகல வித்யாதி பூஜித சர்வோத்தம தே நமோ நம (லம்போதர)

8 விநாயகனே வினை தீர்ப்பவனே

3
வேழ முகத்தோனே ஞால முதல்வனே (விநாயகனே)

குணாநிதியே குருவே சரணம்


குறைகள் களைய இதுவே தருணம் (விநாயகனே)

உமாபதியே உலகம் என்றாய்


ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய் (விநாயகனே)

9. ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே

சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி


உந்தன் சந்நிதி சரணடைந்தோமே 2
சாந்த சித்த சௌபாக்யங்கள் யாவையும்
தந்தருள் சத்குரு நீயே 2 (ப்ரபோ)

ஆதிமூல கணநாத கஜானன


அற்புத தவள ஸ்வரூபா
தேவ தேவ ஜெய விஜய விநாயக
சின்மய பரசிவ தீபா 2 (ப்ரபோ)

தேடித் தேடி எங்கோ ஓடுகின்றார்


உன்னைத் தேடிக் கண்டு கொள்ளலாமே
கோடி கோடி மத யானைகள் பணி செய
குன்றென விளங்கும் பெம்மானே 2 (ப்ரபோ)

ஞான வைராக்ய விசார சார


ஸ்வர ராக லய நடன பாதா
நாம பஜன குண கீர்த்தன நவவித
நாயக ஜெய ஜெகநாதா 2 (ப்ரபோ)

பார்வதி பால அபார வார ஜய


பரம பாகவத சரணா
பக்த ஜன சுமுக ப்ரணவ விநாயக
பாவன பரிமள சரணா 2 (ப்ரபோ)

10. மஹா கணபதிம் மனஸ ஸ்மராமி


வசிஷ்ட வாம தேவாதி வந்தித ( மஹா கணபதிம்)

மஹா தேவ சுதம் குரு குஹ நுதம்


மார கோடி ப்ரகாசம் சாந்தம்
மஹா காவ்ய நாடகாதி ப்ரியம்
மூஷிக வாஹந மோதக ப்ரியம்
( மஹா கணபதிம்)

11 கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி


கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்
கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
4
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவனுறை ரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துயரது கொடு சுப்பிரமணிபடும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குறமகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே

12 உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி


ஒண்கடலில் தேனமுதத் துணர்வூறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
என்றன் உயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத்தால் அருள்கைக் கனியோனே
அன்பர் தமக்கானநிலைப் பொருளோனே
ஐந்து கரத்தானைமுகப் பெருமாளே
13 கணபதி கணபதி பாலயமாம் கௌரி தனயா பாலயமாம்
கௌரி நந்தன கஜவதனா கணேச வரதா மாம்பாஹி
கஜமுக கஜமுக கணநாதா கணேச வரதா மாம்பாஹி
கஜானனா ஓம் கஜவதனா கஜமுக வரதா கஜானனா
மூஷிக வாகன கஜானனா மோதக ஹஸ்தா கஜானனா
சாமரகர்ணா கஜானனா விளம்பித ஸூத்ரா கஜானனா
வாமனரூபா கஜானனா மஹேஸ்வர புத்ரா கஜானனா
விக்ன விநாயக கஜானனா பாத நமஸ்தே கஜானனா
பக்த ஜன ப்ரிய கஜானனா பார்வதிபுத்ரா கஜானனா
பாஹி பாஹி கஜானனா பார்வதி நந்தன கஜானனா

14. வாதாபி கணபதிம் பஜே ...ஹம்


வாதாபி கணபதிம் பஜே

பூதாதி ஸம் ஸேவித சரணம்


பூத பௌதிக பிரபஞ்ச பரணம்
வீதராகிணம் வினத யோகினம்
விஸ்வகாரணம் விக்னவாரணம் (வாதாபி)

குரா கும்பஸம் பவ முனிவர


ப்ரபூஜிதம் த்ரிகோண மத்யகதம்
முராரி ப்ரமுகாத் யுபாஸிதம்
மூலாதார சேஷ்த்ராஸ்திதம்
பராதி சத் வாரி வாகாத்மகம்

ப்ரணஸ்வரூப வக்ர துண்டம்


நிரந்தரம் நிடில சந்த்ரகண்டம்
நிஜவாமகர வித்ருதேட்சு தண்டம்

கராம்புஜ பாஸ பீஜாபூரம்


கலுஷ விதூரம் பூதாகாரம்
ஹராதி குருகுஹ தோஷித பிம்பம்
ஹம்ஸத்வனி பூஷித ஹேரம்பம் (வாதாபி)

5
15. உன்னைப் பாடிடும் போது நீ வருவாயே
விநாயகா விநாயகா
உன்னைத் தேடிடும் போது நீ அருள்வாயே விநாயகா

விநாயகா விக்னேஸ்வரா ஸ்ரீகணநாதா விநாயகா ( 2) ( உன்னை)

கணபதி நாதா விநாயகா


பிள்ளையாரே விநாயகா
லம்போதரா விநாயகா
யானைமுகனே விநாயகா (
உன்னை)

16. உச்சி பிள்ளையார் கோயில் கொண்ட இடம் திருச்சி மலையினிலே


நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும் அமர்ந்தார் மனதினிலே
சச்சிதானந்த சற்குருவாகிய விமலன் ,
புவி தந்தையானபின் தாயுமான திருநகரன்
அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன் –அந்த
ஆனைமுகம் கொண்ட ஆதிநாதனாம் இறைவன்
பாடுதலும் பணிபரவுதலும் தொழிலாகும் ,
துணை நாடுதலும் அருள் நன்னுதலும் அருளாகும்
கூடுதலும் கரம் கூப்புதலும் நமதெண்ணம்,
விதி ஓடுதலும் வினை ஒடுங்குதலும் இனித் திண்ணம்

17 கணேச பஞ்சரத்னம்

முதா கராத்த மோதகம் சதா விமுக்தி ஸாதகம்


கலாத ராவ தம்ஸகம் விலாஸி லோக ரட்சகம்
அநாய கைக நாயகம் விநாசி தேப தைத்யகம்
நதாசு பாசு நாஸகம் நமாமி தம் விநாயகம்

நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்


நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதி காப துத்தரம்
ஸுரேச்வரம் நிதிச்வரம் கஜேச்வரம்
மஹேச்வரம் தமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

ஸமஸ்தலோக சங்கரம் நிரஸ்த தைத்யகுஞ்சரம்


தரேதரோத ரம்வரம் வரேபவக்த்ரம் அக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்


புராரி பூர்வநந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்சனாசபீஷணம் தனஞ்சயாதி பூஷணம்
6
கபோலதானவாரணம் பஜே புராணவாரணம்

நிதாந்தகாந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம்


அசிந்த்யரூப மந்தஹீன மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

மஹாகணேச பஞ்சரத்னம் ஆதரேண யோன்வஹம்


ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரன் கணேச்வரம்
அரோகதாம தோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோசிராத்

18. விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்


பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்


அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்


திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்


தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்


திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி


ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

7
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே


இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை


விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி


இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்


தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து


வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)


அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி


வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட


வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

8
அம்பாள் துதி பாடல்கள்

19 சர்வ மங்கள மாங்கல்யே


சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே

20. தனம்தரும் கல்வி தரும்ஒரு நாளும் தளர்வறியா


மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன வெல்லாம் தரும் அன்ப ரென்பவர்க்கே
கனந்தரும் பூங்குழ லாள்அபி ராமி கடைக் கண்களே

21. உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்


மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே

22 பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்


காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவாமுகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

23 மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த


அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்த பின்னே

24 ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்


பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளைப் புவியடங்கக்
காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கரும்பு வில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே

25 கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்


கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமி உமையே

26 சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ தனயை


மாதேவி நின்னைச் சத்தியமாய் நித்யம் உள்ளத்துள் துதிக்கும்
உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்வி தனம் தான்யம்
அழகு புகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள் வெற்றி
9
ஆகுநல் ஊழ்நுகர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி
சுகானந்த வாழ்வளிப்பாய்
சுகிர்தகுணசாலி பரிபாலி அனுகூலி திரிசூலி
மங்கல விசாலி
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ ? மகிமை
வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ்நாமி சிவகாமி
மகிழ்வாமி அபிராமி உமையே

27 சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ- பதில்


சொல்லடி அபிராமி

நில்லடி முன்னாலே
முழுநிலவினைக் காட்டு உன் கண்ணாலே ( சொல்லடி)

பல்லுயிரும் படைத்த பரமனுக்கே


சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ – நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ – இந்த
சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ ( சொல்லடி)

வாராயோ ஒருபதில் கூறாயோ


நிலவென வாராயோ அருள்மழை தாராயோ

வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்


நடுவில் நின்றாடும் வடிவழகே
கொடிகளாட முடிகளாட குடைபடை எழுந்தாட வரும் கலை அழகே
பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம்
பேரிகை கொட்டிவர மத்தளமும் சத்தமிட (வாராயோ)

செங்கையில் வண்டு கலின் கலின் என்று


ஜெயம் ஜெயம் என்றாட – இடை
சங்கதமென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட
இரு கொங்கை கொடும்பகை வென்றனையென்று
குழைந்து குழைந்தாட
மலர் பங்கயமே உன்னைப் பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ , எழுந்து வாராயோ, கனிந்து வாராயோ
காளி பயங்கரி சூலி மதாங்கினி கண்களில் தெரிகின்றாள்
கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்
வாழிய மகன் வாழிய என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்
அன்னை தெரிகின்றாள் ; என் அம்மை தெரிகின்றாள்

28. மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி


தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவந்தோம்
அம்மா பாடவந்தோம் .. அம்மா பாட வந்தோம்

அருள்வாய் நீ இசைதரவா நீ
இங்கு வருவாய் நீ நலம் தரவே நீ அம்மா.... ( மாணிக்க )

நாமணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்


10
பூமணக்கப் பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் ( மாணிக்க )

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் - எங்கள்


உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பர்க்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ
வாணி ஸரஸ்வதி மாதவி பாரதி பாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகன ரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
ஞான மனோகரி கல்யாணி
அருள்வாய் நீ இசைதரவா நீ
இங்கு வருவாய் நீ நலம் தரவே நீ அம்மா ( மாணிக்க
)

29 வரணும் அம்மா வரணும் அம்மா


மூகாம்பிகை தாயே சரணம் அம்மா

ஊமைகளைப் பேச வைக்க உண்மைகளை வாழ வைக்க


செவிடர்களைக் கேட்க வைக்க குருடர்களைப் பார்க்க வைக்க ( வரணும் )

ஊனர்களை நலமாக்க, கூனர்களை நிமிர வைக்க


வீணர்களை ஓட வைக்க , உலகினிலே அமைதி நிலைக்க ( வரணும்)

சேயன்பு பால் குடிக்க , தாயருளில் கலந்திருக்க


மாயை இருள் விலகி நிற்க தூய மனம் எனக்கிருக்க ( வரணும்)

என்றும் உனை நினைத்திருக்க தூய ஒளி ஒளிர்ந்திருக்க


குழந்தைகள் எமை நீ காக்க மூகாம்பிகை வரங் கொடுக்க ( வரணும்)

வரணும் வரணும் அம்மா சரணம் சரணம் அம்மா ( 4 )

30 சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி


சிவகங்கை குளத்தருகே சீர்துர்க்கை சிரித்திருப்பாள்
பெண்ணவளின் கண்ணழகோ பேசி முடியாது
பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது ( சின்ன)

மின்னல் போல் மேனி அன்னை சிவகாமி


இன்பமெல்லாம் தந்திடுவாள் எண்ணமெல்லாம் நிறைந்திடுவாள்
பின்னல் ஜடை போட்டு, பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனமும் ஆடிடுவாள் ( சின்ன)

31 சுந்தரி சௌந்தரி நிரந்தரியே


சூலி எனும் உமையே குமரியே ( சுந்தரி)

அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே ( 3)


11
அமரியெனும் மாயே , பகவதி நீயே
அருள்புரிவாயே பைரவி தாயே ( அமரி)
உன் பாதம் சரணமே ( 2)
( சுந்தரி)
சீலமும் வீரமும் சீரும் செல்வமும் ( 3)
சேர்ந்த கலை ஞானம் பாடும் நிதானம்
மாந்தரின் மானம் காத்திட வேணும்
கண்காணும் தெய்வமே ( 2)
( சுந்தரி )

32 ஜகஜ் ஜனனி சுகபாணி கல்யாணி (3)

சுகஸ்வரூபிணி மதுரவாணி
சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி ( ஜகஜ் )

பாண்டிய குமாரி பவானி அம்பா - சிவ


ரஞ்சனி பரமேஸ்வரி
வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ
வேத வேதாந்த நாதஸ்வரூபிணி ( ஜகஜ் )

33 தேவி ......நீயே துணை (அம்பா)


தென்மதுரை வாழ் மீன லோசனி (தேவி)
தேவாதி தேவன் சுந்தரேசன்
சித்தம் கவர் புவன சுந்தரி
(தேவி)

மலைய துவஜன் மாதவமே


காஞ்சனமாலை புதல்வி மகாராணி
அலைமகள் கலைமகள் பணிகீர் வாணி
அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி)

34 ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி


துர்கா தேவி சரணம் (2)
துர்கை அம்மனைத் துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயும் அவளைத்
தரிசனம் கண்டால் போதும்
கர்மவினைகள் ஓடும்
சர்வ மங்களம் கூடும் (ஜெய)

பொற்கரங்கள் பதினெட்டும் நம்மைச் சுற்றி வரும் பகை விரட்டும்


நெற்றியிலே குங்குமப் பொட்டும் வெற்றிப் பாதையைக் காட்டும்
ஆயிரம் கண்கள் உடையவளே ஆதிசக்தியவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மைக் காப்பவளே. (ஜெய)

சங்கு சக்கரம் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலுடன் சூலமும்


தங்கக் கைகளில் தாங்கி நிற்பாள் சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்
திங்களை முடி மேல் சூடி நின்றாள் மங்கள வாழ்வும் தந்திடுவாள்
மங்கையர்க்கரசியும் அவளே, அங்கையர்க்கண்ணியும் அவளே (ஜெய)

35 ரக்ஷ ரக்ஷ ஜெகன்மாதா , சர்வசக்தி ஜெய துர்கா

12
ரக்ஷ ரக்ஷ ஜெகன்மாதா, சர்வசக்தி ஜெய துர்கா

மங்களவாரம் சொல்லிடவேணும் மங்கள சண்டிகை சுலோகம்


இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும்....
உமையவள் திருவருள் சேரும்.... (2)
ரட்ச ரட்ச ஜெகன்மாதா சர்வசக்தி ஜெய துர்கா 2
(ரக்ஷ)

படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்தி


அபயம் என்றவளை சரண்புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி
ஜெய ஜெய சங்கரி கௌரி மனோகரி, அபயம் அளித்தருள் அம்பிகை பைரவி
சிவசிவசங்கரி சக்தி மகேஸ்வரி திருவருள் தருவாய் தேவி
திருவருள் தருவாய் தேவி.
( ரக்ஷ)

கருணையில் கங்கை கண்ணனின் தங்கை கடைக்கண் திறந்தால் போதும்


வருகிற யாவும் வளர்பிறை ஆகும் அருள்மழை பொழிவாள் நாளும்
நீல நிறத்தொடு ஞாலம் அளந்தவள் காளியெனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள் நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
(ரக்ஷ)

36 ஸ்ரீ ஜெகதீஸ்வரி ராஜ ராஜேஸ்வரி சித்தம் இரங்கி அருள் – பரமேஸ்வரி

பீஜாட்சர நிலயே சுந்தரி ...... பீதிநாசினி பாபமோசினி


(ஸ்ரீ)

ஓதற்கரிய ஒலியானவளே உண்மைப் பொருளே ஓம் எனும் ஒலியே


சாதனை ஏதும் செய்தறியேனே வேதனை போதும் விரைவாய் வருவாய்
(ஸ்ரீ)

பிந்துநாத நிலயே நவாட்சரி பண்டாசுர சம்ஹாரிணியே


புவனேஸ்வரியே லலிதாம்பிகையே புன்னகை செய்தருள் புவனம் விளங்கவே (ஸ்ரீ)

37 பர்வத ராஜகுமாரி பவானி , பஞ்சய கிருபயா மமதுரிதானி


தீனதயாபரி பூர்ணகடாக்ஷி , த்ரிபுர சுந்தரி தேவி மீனாட்சி
(பர்வத)

ஆரணி நாரணி காரணி நீலி, பூரணி யோக புராதன சீலி


சங்கர நாயகி சாந்த மகேஸ்வரி சுந்தரி வேத விக்ஷணி கௌரி
(பர்வத)

அமபசிதம்பர நாதநடேஸ்வரி அம்பணகாதலி தேவி சர்வேஸ்வரி


சம்புமோகினி சாந்ததயாமணி துக்கபேதினி சோகநிவாரணி
(பர்வத)

பஞ்சதசாட்சர பஞ்சரவாசினி குஞ்சிதபாத மகேசவிலாசினி


காஞ்சிகாமாட்சி காசிவிசாலாட்சி காருண்ய லாவண்ய அகிலாண்டேஸ்வரி (பர்வத)

13
37. ஆதிபராசக்தி தாயம்மா எங்கள் அகிலாண்ட நாயகி நீயம்மா
ஆனந்தத்தின் எல்லைதானம்மா எங்கள் அன்னபூர்ணேஸ்வரி தாயம்மா -- அம்மா

திருவேற்காட்டில் வாழும் கருமாரியே எங்கள் திருநாட்டில் உருமாறி வரும்தேவியே


திரிசூலி திருமாலின் சோதரியே உன்றன் திருக்காட்சி தந்தருள வேண்டுமம்மா
உன்னை எண்ணி எண்ணி நெஞ்சம் உருகினேன் உன்னை எங்கெங்கோ தேடி நான் ஓடினேன்
பண்ணிசைத்து உன் புகழைப் பாடினேன் நீ பாராமுகம் இது நியாயமோ - அம்மா

கோடி கோடி தவம் செய்தாலும் உன்றன் கோலம் காண்பேணோ என்றன் வாழ்விலே


திரிசூலி திருமாலின் சோதரியே உன்றன் திருக்காட்சி தந்தருள வேண்டுமம்மா
உன்னை எண்ணி எண்ணி நெஞ்சம் உருகினேன் உன்னை எங்கெங்கோ தேடி நான் ஓடினேன்
பண்ணிசைத்து உன் புகழைப் பாடினேன் நீ பாராமுகம் இது நியாயமோ - அம்மா ஆதிபரா

கருணைக்கடல் தேவி காளியம்மா என் கவலைகளைத் தீர்த்திடவே வாருமம்மா


காணும்பொருள் தன்னில் நீதானம்மா என்று கண்டுகொண்டேன் உன் அருள்தானம்மா
உன்னை எண்ணி எண்ணி நெஞ்சம் உருகினேன் உன்னை எங்கெங்கோ தேடி நான்
ஓடினேன்
பண்ணிசைத்து உன் புகழைப் பாடினேன் நீ பாராமுகம் இது நியாயமோ - அம்மா ஆதிபரா

38 ஹிமகிரி தனயே

பல்லவி

ஹிமகிரிதனயே ஹேமலதே – அம்பா


ஈஸ்வரி ஸ்ரீலலிதே -– மாமவ
ஹிமகிரிதனயே ஹேமலதே

அனுபல்லவி

ரமா வாணி ஸம் சேவித சகலே


ராஜ ராஜேஸ்வரி ராம சகோதரி ( ஹிமகிரி)

சரணம்

பாசாங்குசேஷு தண்டகரே – அம்பா


பராத்பரே நிஜ பக்த பரே
ஆசாம்பர ஹரி கேஷ விலாசே
ஆனந்த ரூபே அமித ப்ரதாபே - (ஹிமகிரி)

39 ஸ்ரீசக்ரராஜ சிம்மாசேனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே- புவனேஸ்வரி


ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோகரி ஞான விக்னேஸ்வரி ராஜ ராஜேஸ்வரி (ஸ்ரீ)

பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும் பாடிக்கொண்டும் அன்பர் பதமலர் சூடவும்


உலகமுழுதுமென ஜெயமுற காணவும் ஒருநிலை தருவாய் காஞ்சி காமாட்சி (ஸ்ரீ)
நிழலெனத் தொடர்ந்த முழுக் கொடுமையை நீக்கச் செய்தாய்
நித்யகல்யாணி பவானி பத்மேஸ்வரி (ஸ்ரீ)

துன்பம் தணிந்து தூயவனாக்கிவைத்தாய்


தொடர்ந்த உன் மாயம் நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய் 2
அடைக்கலம் நீயே அம்மா அகிலேண்டேஸ்வரி (ஸ்ரீ)

14
40 காமாட்சி அஷ்டகம்

மங்கள ரூபினி மதியணி சூலினி மன்மத பாணியளே


சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

கானுறு மலரெனக் கதிரொளி காட்டிக் காத்திட வந்திடுவாள்


தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே


பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எங்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தநல் துர்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

தணதண தந்தன தவிலொலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்


கணகண கங்கண கதிரொளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிட பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே


கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேலனைக் கொடுத்தநல் குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

எண்ணிய படிநீ அருளிட வருவாய் எங்குல தேவியளே


பண்ணிய செயலின் பலனது நலமாய் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளியதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

இடர்தரும் தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்


சுடர்தரும் அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி


ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

41 ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை


ஆக்கும் தொழில் ஐங்கரனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே

மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே


மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே

கற்றும் தெளியார் காடே கதியாய்க்

15
கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெளியார் நினையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருட் சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மூலக்கனலே சரணம் சரணம்


முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக் குவையே சரணம்
நீலத் திரு மேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

முத்தே வரும் முத்தொழிலாற்றிடவே


முன்னின்றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாதவரம் தரவே வருவாய்
மத்தே றுததிக் கிணை வாழ்வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

அந்தி மயங்கிய வான விதானம்


அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிரம்ப வளம் பொழியாரோ
தேம்பொழிலாம் இது செய்தவளாரோ
எந்தை யிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுமவர்க்கருள் எண்ணமிகுந்தாள்
மந்திர வேத மயப் பொருளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

காணக் கிடையாக் கதியானவளே


கருதக் கிடையாக் கலையானவளே
பூணக் கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித் திருநாமமும் நின்துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மரகத வடிவே சரணம் சரணம்


மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்
அரகர சிவ என்றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

பூமேவிய நான் புரியும் செயல்கள்


பொன்றாத பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெய சக்தி யெனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
16
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்
மாமேருவிலே வளர்கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

ரஞ்சனி நந்தினி அங்கனி பதும


ராக விகாசவி யாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாசினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

வலையொத்த வினை கலையொத்த மனம்


மருளப் பறையா ஒலியொத்தவிதால்
நிலையெற்றெளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற்றசை வற்றநு பூதிபெரும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

எவர் எத்தினமும் இசைவாய் லலிதா


நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தியெலாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வார் அவரே

42 சகலகலாவள்ளி மாலை (குமர குருபரர்)

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்


தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே!

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்


பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்


குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!

17
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் என்


நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே!

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்


எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே!

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்


கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே சகலகலாவல்லியே!

சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல


நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே!

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன


நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே

மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்


பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்

18
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

- குமரகுருபர சுவாமிகள்

(குமரகுருபர சுவாமிகள் அருளிய  சகலகலா வல்லி மாலை தினமும் படிப்பதால்


குழந்தைகள்

கல்வியில் சிறந்து விளங்குவர். சரஸ்வதியின் பரிபூரண அருள் கிட்டும்.)

43 தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி


தேவி கருமாரி துணை நீயே மகமாயி
ஆயிரம் கண்கள் உடையவளே
ஆலயத்தின் தலைமகளே
கடைக்கண்ணாலே பார்த்தருள்வாய்
காலமெல்லாம் காத்தருள்வாய் - தாயே

அன்னை உந்தன் சன்னிதியில்


அனைவரும் ஒன்றாய்க் கூடிடுவோம்
அம்மா உந்தன் பொன்னடியில்
அனுதினமும் சரணடைவோம் - தாயே

சிங்கமுக வாகனத்தில் சிங்கார மாரியம்மா


வந்து வரம் தந்திடுவாய் எங்கள் குலதெய்வமம்மா – தாயே

44 முத்துமாரி அம்மனுக்குத் திருநாளாம் - அவள்


முகத்தழகை காணவரும் ஒருநாளாம்
சித்திரப் பூமாலையிலே தோரணமாம் – அவள்
சிங்காரத் தேரினிலே ஊர்வலமாம்

பாலோடு பன்னீரும் அபிசேஷகமாம் – அவள்


பொன்மேனி மலர்களிலே அலங்காரமாம்
மங்கலக் குங்குமத்தில் திலகமாம் – அவள்
மஞ்சள் நிற ஆடை கட்டி வந்திடுவாளாம் ( முத்து)

திரிசூலம் கொண்ட திரிசூலியாம் - அவள்


திக்கெட்டும் காத்துவரும் காளி அம்மனாம்
கற்பூரச் சுடரினிலே சிரித்திடுவாளாம் – அவள்
தீராத நோயெல்லாம் தீர்த்திடுவாளாம் ( முத்து)

சர்க்கரையில் பொங்கலிட மகிழ்ந்திடுவாளாம்


மாவிளக்கேற்றி வணங்கிடவே வரம் தருவாளாம்
முழங்கிவரும் முரசங்களைக் கேட்டிடுவாளாம்
முன்னின்றே நல்லருளைத் தந்திடுவாளாம்

44 நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே


மீனாட்சி என்ற பெயர் எனக்கு
கங்கை நீராட்சி செய்துவரும் வடகாசி தனில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு

19
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலைக் காஞ்சிதனில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு – கொடும்
கோலாட்சிதனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு

ஆறென்றும் நதியென்றும் ஓடையென்றாலும்


அது நீரோடும் பாதொதனைக் குறிக்கும்
நிற்கும் ஊர்மாறிப் பேர்மாறிக் கருமாரி உருமாறி
ஒன்றே ஓம்சக்தியென உரைக்கும்

45 கற்பூர நாயகியே கனகவல்லி

கற்பூர நாயகியே கனகவல்லி


காளி மகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்த வள்ளி தெய்வ யானையம்மா
விற்கோல வேதவல்லி விசாலாக்ஷி
விழிக்கோல மாமதுரை மீனாக்ஷி
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே (கற்பூர நாயகியே)

புவனமுழு தாளுகின்ற புவனேஸ்வரி


புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி
நவநவமாய் வடிவாகும் மாகேஸ்வரி
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி
உவமானப் பரம்பொருளே ஜெகதீஸ்வரி
உன்னடிமை சிறியேனை நீயாதரி (கற்பூர நாயகியே)

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த


உறவிடத்தில் முறையிடுவேன் தாயே என்றன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அந்நியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா
கண்ணீரைத் துடைத்துவிட ஓடிவாம்மா
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா
சின்னவனின் குரல்கேட்டு உன்முகம் திருப்பு
சிரித்தபடி என்னை தினம் வழி அனுப்பு (கற்பூர நாயகியே)

கண்ணிரண்டும் உன்னுருவே காணவேண்டும்


காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்
பண்ணமைக்கும் நா உனையே பாட வேண்டும்
பக்தியோடு கை உனையே கூட வேண்டும்
எண்ணமெல்லாம் உன்நினைவே ஆகவேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா
மகனுடைய குறைகளைத் தீரும் அம்மா (கற்பூர நாயகியே)

நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்


நெஞ்சினிலே திருநாமம் வழிய வேண்டும்.
கற்றதெல்லாம் மேன்மேலும் பெருக வேண்டும்.
கவிதையிலே உன்நாமம் வாழ வேண்டும்
சுற்றம் எல்லாம் நீடூழி வாழ வேண்டும்.
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்
மற்றதெல்லாம் நான் உனக்குச் சொல்லலாமா
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா (கற்பூர நாயகியே)
20
அன்னைக்கு உபச்சாரம் செய்வதுண்டோ
அருள்செய்ய இந்நேரம் ஆவதுண்டோ
கண்ணுக்கு இமையின்றிக் காவலுண்டோ
கன்றுக்குப் பசுவின்றிச் சொந்தமும் உண்டோ
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுமுண்டோ
முழுமைக்கும் நீ என்றன் அன்னை அன்றோ
எண்ணெய்க்கும் விளக்குக்கும் பேதம் உண்டோ
என்றைக்கும் நான் உன்றன் பிள்ளை அன்றோ (கற்பூர நாயகியே)

அன்புக்கே நானடிமை ஆகவேண்டும்


அறிவுக்கே என்காது கேட்க வேண்டும்
வம்புக்கே போகமல் இருக்க வேண்டும்
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்
பண்புக்கே உயிர்வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நான் என்றும் பணிய வேண்டும்
என் பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்
என்னோடு நீயென்றும் வாழவேண்டும் (கற்பூர நாயகியே)

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை


கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை
நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை
நடந்திடவே காலிரண்டால் ஆகவில்லை
செம்பவள வாயழகி உன் எழிலோ –இந்தச்
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை
அம்பளவு விழியாலே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவும் இல்லை (கற்பூர நாயகியே)

காற்றாகிக் கனலாகிக் கடலாகினாய்


கருவாகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகிப் பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை (கற்பூர
நாயகியே)

46 கருணையுள்ளம் கொண்டவளே கருமாரியம்மா


உன் கடைக்கண்ணால் நலம் கொடுப்பாய் அருள்மாரியம்மா
அம்மா கருமாரியம்மா- அம்மா ( கருணை)

கரகம் எடுத்து ஆடி வந்தோம்


காணிக்கை செலுத்த நாடி வந்தோம்
கரங்கள் குவித்துப் பாடி வந்தோம்
வரங்கள் குறித்துத் தேடி வந்தோம் – அம்மா

குத்துவிளக்கை ஏற்றிநின்றோம் ; எங்கள் குலவிளக்கைப் போற்றி நின்றோம்


முத்துமாரி உனைப் பணிந்தோம் பக்தி கொண்டோம், பலனடைந்தோம் – அம்மா

21
அன்னவாகனம் அமர்ந்து வந்தாள் அம்மா எங்களுக்கருள வந்தாய்
புன்னகை முகம் கொண்டவளே பொன்மலர் பாதம் தந்தவளே - அம்மா (கருணை)

47 கருணை வடிவானவளே கரம் குவித்தோம் அம்மா


கவலையெல்லாம் தீர்த்து வைக்கும் கருமாரி அம்மா – கருணை
அருள் பொழியும் ஆயிரம் கண்ணுடைய தாயே உந்தன்
அடிமைகளைக் காத்தருள்வாய் அனுதினமும் நீயே – கருணை
புரிந்தும் புரியாது செய்த பெரும் பிழைகள் எல்லாம்
பொறுத்தருள வேண்டும் உந்தன்
பொன்னடியை வணங்குகின்றோம்
மகிமை பல செய்து வரும் மகாசக்தி அன்னை – இந்த
மெய்தலத்தில் அவதரித்தாள் என்ற வார்த்தை உண்மை
தேசமெல்லாம் போற்றிவரும் தேவி எங்கள் கருமாரியை
ஈஸ்வரியே இன்பமெல்லாம் தந்தருள்வாய் கருமாரி
மாசுகளை நீக்கிடுவாய் மங்கள குண மாரி
மனிதர்குல தெய்வமாய் விளங்கும் உபகாரி

48 கற்பகவல்லிநின் பொற்பதங்கள் பிடித்தேன்


நற்கதி அருள்வாய் அம்மா - தேவி
பற்பலரும் போற்றும் பதிமயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரம் கோயில் கொண்ட – கற்பக

நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தாய்


நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ
ஏனிந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும்மம்மா

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி


நல்லாக்கி வைத்திடும் நாயகியே - நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உள்ளாசியே உமா உனை நம்பினேனம்மா
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ் ஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகில் துணையம்மா

அஞ்சன மையிடும் அம்பிகையே எம்பிரான்


கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா – கற்பக

49 மஹிஷாசுர மர்த்தினி ஸ்தோத்ரம்

அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே


கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 1

ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே


22
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 2

அயி ஜகதம்ப மதம்ப கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே


சிகரி சிரோமணி துங்க ஹிமாலய ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 3

அயி சதகண்ட விகண்டித ருண்ட விதுண்டித சுண்ட கஜாதிபதே


ரிபுகஜ கண்ட விதாரண சண்ட பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட விபாதித முண்ட பதாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 4

அயிரண துர்மத சத்ரு வதோதித துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே


சதுர விசார துரீண மஹாசிவ தூதக்ருத ப்ரமதாதிபதே
துரித துரீஹ துராசய துர்மதி தானவ தூத க்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 5

அயி சரணாகத வைரிவ தூவர வீர வராபய தாயகரே


த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி சிரோதி க்ருதாமல சூலகரே
துமிதுமி தாமர துந்துபி நாத மஹோ முகரீக்ருத திக்மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 6

அயி நிஜஹும்க்ருதி மாத்ர நிராக்ருத தூம்ர விலோசன தூம்ரசதே


ஸமரவிசோஷித சோணிதபீஜ ஸமுத்பவ சோணித பீஜலதே
சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ தர்ப்பித பூத பிசாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 7

தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே


கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே

23
க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க கடத்பஹுரங்க ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 8

ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த பரஸ்துதி தத்பர விச்வ நுதே


ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர ஸிஞ்ஜித மோஹித பூதபதே
நடித நடார்த்த நடீ நட நாயக நாடித நாட்ய ஸுகான ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 9

அயி ஸுமன: ஸுமன: ஸுமன: ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே


ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே
ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர ப்ரமர ப்ரமரா திபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 10

ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக மல்லி தரல்லக மல்லரதே


விரசித வல்லிக பல்லி கமல்லிக ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே
சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண தல்லஜ பல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 11

அவிரலகண்ட கலன்மத மேதுர மத்த மதங்கஜ ராஜபதே


த்ரிபுவன பூஷண பூதகலாநிதி ரூப பயோநிதி ராஜஸுதே
அயிஸுத தீஜன லாலஸ மானஸ மோஹன மன்மத ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 12

கமல தலாமல கோமல காந்தி கலா கலிதாமல பாலலதே


ஸகல விலாஸ கலாநிலய க்ரம கேலிசலத்கல ஹம்சகுலே
அலிகுல சங்குல குவலய மண்டல மௌலிமிலத் பகுலாலிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 13

கர முரளீரவ வீஜித கூஜித லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே


மிலித புலிந்த மனோஹர குஞ்ஜித ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே
நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே

24
ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி ரம்யக பர்தினி சைலஸுதே 14

கடிதடபீத துகூல விசித்ர மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே


ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர தம்சுல ஸன்னக சந்த்ரருசே
ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித நிர்பர குஞ்ஜர கும்பகுசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 15

விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர கரைகநுதே


க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக ஸங்கர தாரக ஸூனுஸுதே
ஸுரத சமாதி ஸமான ஸமாதி ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 16

பதகமலம் கருணா நிலயே வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே


அயி கமலே கமலா நிலயே கமலா நிலய ஸகதம் நபவேத்
தவ பதமேவ பரம்பதமித் யனு சீலயதோ மமகிம் ந சிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 17

கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்


பஜதி ஸகிம் நசசீ குசகும்ப தடீ பரிரம்ப ஸுகானுபவம்
தவ சரணம் சரணம் கரவாணி நதாமரவாணி நிவாஸிசிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 18

தவ விமலேந்து குலம் வதனேந்துமலம் ஸகலம் நனு கூலயதே


கிமு புரஹூத புரீந்துமுகீ ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே
மமது மதம் சிவநாமதனே பவதீ க்ருபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 19

அயி மயி தீனதயாலு தயா க்ருபயைவ த்வயா பவித்வயமுமே


அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி யதாஸி ததா நுமிதாஸிரதே
யதுசித மத்ர பவத்யுரரீ குருதா துருதாப மபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே 20

சிவபெருமான் துதி பாடல்கள்

1. தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி


காடுடைய சுடலைப்பொடி பூசிஎன் உள்ளங் கவர்கள்வன்
ஏடுடைய மலரான்உனை நாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மான் இவனன்றே

25
2. மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே

3. இடரினுந் தளரினும் எனதுறுநோய்


தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல் தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை யாளுமாறீவ தொன்றெமக்கில்லையேல்
அது வோ வுனது இன் அருள் ஆவுடுதுறையரனே

4. சொற்றுணை வேதியன் சோதி வானவன்


பொற்றுணை திருந்தடி பொருந்த கைதொழ
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே

5. பூவினுக்கருங்கலம் பொங்கு தாமரை


ஆவினுக்கருங்கலம் அரனஞ்சாடுதல்
கோவினுக்கருங்கலம் கோட்டமில்லது
நாவினுக்கருங்கலம் நமச்சிவாயவே

6. இல்லக விளக்கது இருள்கெடுப்பது


சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவே

7 அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்


அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

8 சிவசிவ என்கிலர் தீவினையாளர்


சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ எண்னச் சிவகதிதானே

9 கூற்றாயினவாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தனன் நானறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறையம்மானே

10. எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி


எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்விளையாட்டதே

11. உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்


பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலை முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவாவண்ணம் அறுமே

26
12. சிவனடியே சிந்திக்கும் திருபெருகு சிவஞானம்
பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்

13. பலரும் பரவ படுவாய் சடைமேல்


மலரும் பிறையொன்று உடையாய் மருகல்
புலரும் தனையும் துயிலால் புடைபோந்து
அலரும் படுமோ அடியாள் இவளே

14. அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடிபரவ


மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செங்கயலார் புனல் செல்வமல்கு சீர்கொள் செங்காட்டம் குடியதனுள்
கங்குல் விளங்கெரி ஏந்தி ஆடும் கணபதியீச்சரம் காமுறவே

15. மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைமடமானி


பங்கயச் செல்வி பாண்டி மாதேவி பணிசெய்து நாள்தொறும் பரவி
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே

16. தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்


பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி
பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோன்
விண்பாலில் யோகெய்தி விடுவர்காண் சாழலோ

17. கண்ணாய் ஏழுலகும் கருத்தாய அருத்தமுமாய்


பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னைஅல்லால் இனியாரை நினைக்கேனே

18. தலையே நீ வணங்காய் - தலை


மாலை தலைக் கணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்
கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்டோள் வீசி நின்றாடும் பிரான்தன்னைக்

கண்காள் காண்மின்களோ
செவிகாள் கேண்மின்களோ- சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும்-

செவிகாள் கேண்மின்களோ
வாயே வாழ்த்து கண்டாய் - மத
யானையுரி போர்த்துப்
பேய்வாழ் காட்டகத்தாடும் பிரான் தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்

நெஞ்சே நீ நினையாய் - நிமிர்

27
புன்சடை நின் மலனை
மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்

கைகாள் கூப்பித் தொழீர் - கடி


மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனைக்
கைகாள் கூப்பித் தொழீர்

உற்றார் ஆருளரோ - உயிர்


கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்
குற்றார் ஆருளரோ

தேடிக்கண்டு கொண்டேன் - திரு


மாலொடு நான்முகனுந்
தேடித்தேடொணாத் தேவனை யென்னுளே
தேடிக்கண்டு கொண்டேன்

19. மாப்பிணைத் தழுவிய மாதோர் பாகத்தன்


பூப்பிணைத் திருந்தடி பொருந்தக் கை தொழ
நாப்பிணைத் தழுவிய நமசிவாய பத்து
ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே

20. வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப்


பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா எனநின்று
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே

21. நானாவித உருவாய் நமை ஆள்வான் நணு காதார்


வானார் திரிபுரம் மூன்று எரியுண்ணச் சிலை தொட்டார்
தேனார்ந்தெழு கதலிக்கனி உண்பான் திகழ் மந்தி
மேனோக்கி நின்றிறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே

21. தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்


ஆயினும் ஈசன் அருளறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல்லன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடையோனே

22. மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்


நடை யுடை மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவினப்படை நின்று இசை பாடவும் ஆடுவர்
அவர் படர் சடை நெடு முடியதோர் புனலர்
வேதமோடேழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்திரை
இரைந் நுரை கரை பொருது விம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே

23. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி


ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

24. வடிவுடை மழுவேந்தி மதகரி யுரி போர்த்துப்

28
பொடியணி திருமேனி புரிகுழல் உமையோடும்
கொடியணி நெடுமாடக் கூடலை ஆற்றுரில்
அடிகள் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே

25. மாதர் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடி


போதொடு நீர்சுமந்தேத்திப் புகுவார் அவர் பின்புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதனக் கண்டேன்

26. பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா


எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தா உனக்காளாயினி அல்லேன் எனலாமே

27. மாசில் வீணையும் மாலை மதியமும்


வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே

28. வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்


தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வா வினையேன் நெடுங்காலமே

29 அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்


உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியொஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்

30 ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை


ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே

31 மடையில் வாளை பாய மாதரார்


குடையும் பொய்கை கோலக் காவுளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சுங் கீழ்
உடையும் கொண்ட உருவம் என்கொலோ

32 தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே


நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே

33 திருவருட்பா

அருட்ஜோதித் தெய்வமெனை ஆண்டு கொண்ட தெய்வம்


அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்
பொருட்சாரு மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயிர் நாதாந்த தெய்வம்
இருட்பாடு நீக்கியொளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணியநான் எண்ணி யவாறு எனக்கருளும் தெய்வம்
தெருட்பாட லுவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்

29
34. கங்கை அணிந்தவா
கண்டோர் தொழும் விலாசா
சதங்கை ஆடிடும் பாத விநோதா
லிங்கேஸ்வரா நின் தாள் துணை

தில்லை அம்பல நடராஜா


செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா
வா வா அமிழ்தானவா

எங்கும் இன்பம் விளங்கவே


அருள் உமாபதி
எளிமை அகல வரந்தா
வாவா வலம் பொங்க வா

பலவித நாடும் கலை ஏடும்


பணிவுடன் உனையே துதிபாடும்
கலை அலங்கார பாண்டியராணி நேசா
மலையின் வாசா மங்கா மதியானவா

35. ஆடுகின்றானடி தில்லையிலே - அதைப்


பாடவந்தேன் அவன் எல்லையிலே
திங்களும் ஆட சூலமும் ஆட
விரிசடை மீதொரு கங்கையும் ஆட ( ஆடுகின்றானடி )

உலகெனும் மாபெரும் மேடையிட்டான் - அதில்


உயிர்களை எல்லாம் ஆடவிட்டான்
அசைந்த்திடும் மரம் செடி கொடிகளிலே - அந்த
அம்பலத்தரசன் ஆடுகின்றான் ( ஆடுகின்றானடி )

தந்தையும் தாயும்போல் அவனிருப்பான் - ஒரு


தந்தையும் தாயும் அவனுக்கில்லை
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
ஆடிய ஆட்டம் முடியவில்லை ( ஆடுகின்றானடி )

பிட்டுக்கு ஏனோ ஆசை கொண்டான் - அவன்


பிரம்படி தனையே தாங்கிக் கொண்டான்
மண்ணைப் படைத்தவன் மண் சுமந்தான் - அது
மதுரையில் ஆடிய ஆட்டம் அன்றோ ( ஆடுகின்றானடி )

36 போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ (4)


கங்காதர சங்கர கருணாகர
மாமவ பவ சாகர தாரக (போ) 3

நிர்குண பரப்ரம்ஹ ஸ்வரூப


கம கம பூத ப்ரபஞ்ச ரஹித
நிஜ குஹ நிஹித நிதாந்த னந்த
ஆனந்த அதிசய அக்ஷய லிங்க (போ)

திமித திமித திமி திமி கிட தக தோம்


தோம் தோம் தரிகிட தரிகிட கிட தோம்

30
மதங்க முனிவர வந்தித ஈசா
சர்வ திகம்பர வேஷ்டித வேஷா
நித்ய நிரஞ்சன நித்ய நடேசா
ஈசா சபேசா சர்வேசா

போ சம்போ சிவ சம்போ சுயம்போ

37 நம பார்வதி பதயே ஹரஹர ஹரஹர மஹாதேவா


ஹரஹர ஹரஹர மஹாதேவா சிவசிவ சிவசிவ சதாசிவா
மஹாதேவா சதாசிவா ஹரஹர மஹாதேவா
சிவசிவ சிவசிவ சதாசிவா

சந்த்ரசூட சிவ சந்த்ர கலாதர சந்த்ர சேகரா சாம்பசதாசிவ


ஓங்காரேஸ்வர உமா மகேஸ்வர த்ரயம்பகேஸ்வர
சிவதவ சரணம்

ஓம்சிவ ஓம்சிவ பராத்பரா ஓங்காரேஸ்வர சிவதவ சரணம்


நமாமி சங்கர பவானி சங்கர
ஹரஹர மஹாதேவா சிவசிவ சிவசிவ சதாசிவா

38 போலோ நாத உமாபதே சம்போ சங்கர


நந்தி வாகன நாகபூஷண சந்த்ர ஸேகர ஜடாதரா
கங்காதர கௌரி மனோகர கிரிஜா ரமண சதாசிவா (போலோ

கைலாச வாஸா கனகசபேசா கௌரி மனோஹர - விஸ்வேசா


ஸ்மசானவாஸா சிதம்பரேசா நீலகண்ட மஹாதேவா (போலோ)

சூலாதர ஜ்யோதிப்ரகாசா விபூதி சுந்தர பரமேசா


பம்பம் பம்பம் டமருநாதா பார்வதி ரமண
சதாசிவா (போலோ) 2

39 சம்போ மஹாதேவ சிவசங்கரா கைலாசவாசா கங்காதரா


பரமேஸ்வரா பஞ்சலிங்கேஸ்வரா, ஆனந்த தாண்டவ நடனாகரா
மகேஸ்வரா சந்த்ர மௌளீஸ்வரா , பராத்பரா தீன கருணாகரா
பரிபூரணா பக்தபரிபாலனா 2

லிங்காஷ்டகம்

தஸ்மை நம; பரமகாரணாய காரணாய


தீப்தோஜ்வல ஜ்வலித பிங்கல லோச்சனாய
நாகேந்த்ர ஹரக்ர்த குண்டல பூஷணாய
ப்ரமேந்திர விஷ்ணு வரதாய நமசிவாய

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்


சிவாய நம ஓம் நமசிவாய
சிவாய நம ஓம் சிவாய நமஹ
சிவாய நம ஓம் நமசிவாய

31
1. பிரம்ம முராரி சுரார்சித லிங்கம்
நிர்மலபாஷித சோபித லிங்கம்
ஜென்மஜ துக்க விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ( ஓம்)

2. தேவமுனிப்ர வரார்ச்சித லிங்கம்


காமதஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ( ஓம்)

3. ஸ்ர்வ சுகந்தி ஸுலே பித லிங்கம்


புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ( ஓம்)

4. கனக மஹாமணி பூஷித லிங்கம்


பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ( ஓம்)

5. குங்கும சந்தன லேபித லிங்கம்


பங்கஜ ஹார சுசோபித லிங்கம்
ஸஞ்சிதபாப விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ( ஓம்)

6. தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்


பாவையர் பக்தி பிரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ( ஓம்)

7. அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்


ஸர்வ ஸ்முத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ( ஓம்)

8. ஸுர குருஸுரவர பூஜித லிங்கம்


ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
( ஓம்)

லிங்காஷ்டக மிதம் புண்யம்


ய; படேச்சிவ சன்னிதெள
சிவலோக மவாப்னோதி
சிவென ஸஹ மோததே

சுலோகம்

வந்தே சம்பும் உமாபதிம் சுரகுரும் வந்தே ஜகத் காரணம்


வந்தே பன்னக பூஷணம் ம்ருகதரம் வந்தே பசசூனாம்பதிம்
வந்தே சூர்ய சசாங்க வஹ்னி நயனம் வந்தே முகுந்த ப்ரியம்
வந்தே பக்த ஜனாஸ்ரயஞ்ச வரதம் வந்தே சிவம் சங்கரம்

32
முருகன் துதி பாடல்கள்

1. வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வடிவேல் அழகா வடிவேல் அழகா


கந்தா கடம்பா வேல்முருகா கார்த்திகேயா வேல்முருகா ( வேல்முருகா)
சூரசம்ஹாரா வேல்முருகா சுப்ரமண்யனே வேல்முருகா ( வேல்முருகா)

2. பத்தியால் யானுனைப் பலகாலும்


பற்றியே மாதிருப் புகழ்பாடி
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே
உத்தமா தானசற் குணர்நேயா
ஒப்பிலா மாமணி கிரிவாசா
வித்தகா ஞானசத் திநிபாதா
வெற்றிவே லாயுதப் பெருமாளே

3. அகரமு மாகி அதிபனு மாகி


அதிகமு மாகி - அகமாகி
அயன் எனவாகி அரியென வாகி
அரன் எனவாகி - அவர்மேலாய்
இகரமு மாகி எவைகளு மாகி
இனிமையும் ஆகி - வருவோனே
இருநிலமீதில் எளியனும் வாழ
எனதுமுன் ஓடி - வரவேணும்
மகபதி ஆகி மருவும் வலாரி
மகிழ்களி கூரும் - வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை
மகிழ்கதிர் காமம் - உடையோனே
செககண சேகு தகுதிமி ஓதி
திமியென ஆடும் - மயிலோனே
திருமலிவான பழமுதிர் சோலை
மலைமிசை மேவு - பெருமாளே

4. முருகா சரணம் முருகா சரணம்


முருகா சரணம் முருகா சரணம்
அன்பர்கள் நேயா அம்பிகை புதல்வா
துன்பம் அகற்றிடும் சீலா பாலா (முருகா)

சிவகுமாரா முருகா வருக


பரம புருஷா வரந்தா வருக
கலங்கா தெனையே காத்திடு முருகா
மலந்தான் அணுகா வரந்தா முருகா ( முருகா)

காவா முருகா கார்த்திகை முருகா


வாதா முருகா சாகா வரந்தா
வாவா முருகா வினை தீர்த்திடவே
யோகா முருகா பகை தீர்த்திடவே ( முருகா)
5 முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக் கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட் பரமற்குச் சுருதியின்
முற்பட்டதுக் கற்பித் திருவரு
33
முப்பத்து முவர்க்கத் தமரரும் அடிபேண

பத்துத்தலை தத்தக் கணை கொடு


ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டபகல் வட்டத்திகரியில் இரவாகப்
பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தருபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வது மொருநாளே

தித்தித் தெய வொத்தப் பரிபுர


நிர்த்தப் பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக் கழுகொடு கழுதாட
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப் பவு ரிக்குத் திரிகடக எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை


குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழு நட்பற்றவுணரை
வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
குத்துப் பட வொத்துப் பொரவல பெருமாளே

6. முருகா உனக்குப் புகழ்மாலை


சூட்டுவதே தினம் முதல் வேலை
கந்தா உன்திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை

தூவிடக் குறிஞ்சி மலருண்டு


தேன்தினையோடு கனி உண்டு
பாதத்தில் வைத்திட மனம் உண்டு
பூஜையை ஏற்பாய் நீ வந்து

ஆலயம் என்பது நிழல்தானே


அணையா தீபம் உன் அருள்தானே
காலமும் துணையே நீ தானே
கருணையைப் பொழிவதும் விழிதானே

தெய்வயானை ஒருபுறமும்
மான்மகள் வள்ளி மறுபுறமும்
தோன்றிட நீ தரும் திருக்காட்சி மங்களம் வழங்கிடும் அருட்காட்சி

8. வருவாண்டி தருவாண்டி மலையாண்டி


வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி – ஆண்டி பழனிமலையாண்டி

சிவனாரின் மகனாகப் பிறந்தாண்டி


அன்று சினம்கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி
என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி

பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி – சுவை


பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
கந்தா என்றால் இங்கு வந்தேன் என்று சொல்லி

34
சித்தர்கள் சீடர்கள் பலகோடி – அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி ....முருகனின் செல்வாக்கு
பக்தர்கள் தினந்தோறும் பலர்கூடி
திருப்புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி
பழனி மலையாண்டி பழனி மலையாண்டி பழனி மலையாண்டி - ஆண்டி

9. பச்சை மயில் வாகனனே சிவ பால சுப்பிரமண்யனே வா


இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயம் இல்லையே (பச்சை)–

கொச்சை மொழியானாலும் உன்னைக் கொஞ்சிச் கொஞ்சிப் பாடிடுவேன் –


சர்ச்சையெல்லாம் மறைந்ததப்பா இங்கு சாந்தம் நிறைந்ததப்பா

நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அங்கு நேர்மையென்னும் தீபம் வைத்தேன்


நீ செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - முருகா சேவற் கொடி மயில்வீரா

வெள்ளமது பள்ளம் தனிலே பாயும் தன்மை போல் உள்ளந்தனிலே –


நீ மெல்ல மெல்லப் புகுந்துவிட்டாய் - எந்தன் கள்ளமெல்லாம் மறைந்ததப்பா

ஆறுபடை வீடுடையவா எனக்காறுதலைத் தரும் தேவா –


நீ ஏறுமயில் ஏறிவருவாய் முருகா எங்கும் நிறைந்தவனே

அலைகடல் ஓரத்திலே என் அன்பான சண்முகனே


நீ அலையா மனம் தந்தாய் உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

10. வடிவேல்க்கு இணையேதும் இல்லை - வேல் வேல்


வள்ளி மணவாளன் அருளாலே குறையொன்றும் இல்லை (வடிவேல்க்கு)

நாடுநலம் கழனிகளைக் காக்க - வேல் வேல்


நாடு உயர் பழனிமலை பரணாகக் கொண்டாய்
பரணாகக் கொண்டாய் பரணாகக் கொண்டாய் வடிவேல்க்கு)

பச்சை பசும் தோகை நாட்டில் வேல் வேல்


பால் குடிக்கத் தவழ்ந்து வரும் பாப்பாவைப் போல
பாப்பாவைப் போல பாப்பாவைப் போல (வடிவேல்க்கு)

இச்சையுடன் பச்சைமயில் ஏறி - வேல் வேல்


இச்சாகம் பூச்சூடும் பவனி வரும் வேலா
எங்கள் வடிவேலா எங்கள் வடிவேலா (வடிவேல்க்கு)

11 திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்


திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்

35
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்

நீ கொடுத்த தமிழல்லவா புகழ் எடுத்தது அந்த


தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது
முருகா முருகாஆஆஅ
முருகாஆஆஅ

நீ கொடுத்த தமிழல்லவா புகழ் எடுத்தது அந்த


தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது
நீ சிரித்த பிறகல்லவா சிரிப்பு வந்தது
நீ சிரித்த பிறகல்லவா சிரிப்பு வந்தது
உன் நினைவிருக்கும் மனமல்லவா
பெருமை கொண்டது

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்


எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்

சந்தனத்தில் நிறம் எடுத்ததால் அழகன் ஆனவன்


சரவணத்தில் உருவெடுத்ததால் வேதம் ஆனவன்
முருகாமுருகாஆ முருகாஆஅஅஅ
அஅஅ அஅஅ அஅஅ

சந்தனத்தில் நிறம் எடுத்ததால் அழகன் ஆனவன்


சரவணத்தில் உருவெடுத்ததால் வேதம் ஆனவன்
கந்தன் என்னும் பேர் எடுத்ததால் கருணையானவன்
கந்தன் என்னும் பேர் எடுத்ததால் கருணையானவன்
அந்தக் கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன்
அந்தக் கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன்
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்

12 சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா


உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா

பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே


பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும்


அழகன் எந்தன் குமரனென்று மன மொழி கூறும்
முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும்
அழகன் எந்தன் குமரனென்று மன மொழி கூறும்
உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது

36
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ கந்தா உன் அருளன்றோ
முருகா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா


உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

உலகில் ஆடும் தொட்டில் எல்லாம் உன் பெயர் பாடும்


உண்மை பேசும் மொழிகள் எல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும் போது
யுகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும் போது
உன் முகமலரின் அழகு மட்டும் முதுமை வராது கந்தா முதுமை வராது குமரா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா


உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

மஹாவிஷ்ணு துதி பாடல்கள்

1 குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா


குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா


கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம்

வேண்டியதைத் தந்திட வெங்கடேசன் நின்றிருக்க


வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 2
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா சரணம் 3

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா


குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 4

கல்லினார்க்கு இரங்கி கல்லிலே இறங்கி


நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

37
சரணம் 5
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
2 புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கைமலர் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல்)

பன்னீர் மலர்ச்சொரியும் மேகங்களே


எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்
தென் கோடி தென்றல் தரும் ராகங்களே
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்


ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் (புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ்காக்கத் தன் கை கொடுத்தான்


அந்தப் பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான்
நாம் படிப்பதற்குக் கீதை என்னும் பாடம் கொடுத்தான்
நாம் படிப்பதற்குக் கீதை என்னும் பாடம் கொடுத்தான் (புல்லாங்குழல்)

3 கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா


நந்த முகுந்த கோபாலா நவநீத சோரா கோபாலா
வேணு விலோல கோபாலா விஜய கோபாலா கோபாலா
ராதா கிருஷ் ண கோபாலா ரமணீய வேஷா கோபாலா (கோபாலா)

காளீய மர்த்தன கோபாலா கௌஸ்துப பூஷண கோபாலா


முரளீ லோல கோபாலா முசுகுந்த ப்ரிய கோபாலா
யசோத பாலா கோபாலா யதுகுலதிலகா கோபாலா
ராதா ரமணா கோபாலா ராஜீவ நேத்ரா கோபாலா

4 அச்சுதம் கேசவம் ராமநாராயணம்


கிருஷ்ண தாமோதரம் வாசுதேவம் ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
ஜானகி நாயகம் ராமசந்த்ரம் பஜே

5 அலைபாயுதே கண்ணா என்மனம் மிக அலைபாயுதே


உன் ஆனந்த மோகன வேணுகானமதில் அலைபாயுதே
நிலைபெயராது சிலை போலவே நின்று நேரமாவது அறியாமலே

38
மிகவிநோதமான முரளீதரா -- என மனம் அலைபாயுதே

தெளிந்த நிலவு பட்டபகல் போல் எரியுதே


திக்கை நோக்கி என் இரு புருவம் நெறியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கன்கள் செருகி ஒருவிதமாய் வருகுதே
கதித்த மனத்தில் இருத்திப் பதத்தை எனக்கு அளித்து மகிழ்ந்தவா
ஒரு பனித்த மனத்தில் உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென முகிலென கடலென அளித்தவா
கதறி மனம் உருகி நான் அழைக்கவோ , இதர மாதரொடு நீ களிக்கவோ
இது தகுமோ, இது முறையோ , இது தர்மம் தானோ
குழலூதிடும் பொழுதில் ஆடிடும் குலைகள் போலவே மனது வேதனை மிகவோடு

6 கார்முகில் வண்ணனைக் காருண்ய சீலனைக் கிருஷ்ணவதாரனைப் பாடுவோமே


யமுநா தீரனை நந்தக் குமாரனை ராதா கிருஷ்ணனைப் பாடுவோமே

நந்த குமாரனை நவநீத சோரனை ,ராதா மாதவனைப் பாடுவோமே


வேணு விலோலனை துளசி மாலனை மனமோகனனைப் பாடுவோமே

முரளிதரனை முகுந்த மாதவனை கீதா கோவிந்தனைப் பாடுவோமே


தசரத மைந்தனை ஜானகி ராமனை பிருந்தா வாசனைப் பாடுவோமே

7 கண்ணன் எங்கள் கண்ணனாம் கார்மேக வண்ணனாம்


வெண்ணை உண்ட கண்ணனாம் மண்ணை உண்ட கண்ணனாம் ( கண்ணன் )

குழலினாலே மாடுகள் கூடச் செய்த கண்ணனாம்


கூட்டமாகக் கோபியர் கூட ஆடும் கண்ணனாம் ( கண்ணன்)

மழைக்கு நல்ல குடையென மலைபிடித்த கண்ணனாம்


நச்சுப் பாம்பு மீதிலே நடனம் ஆடும் கண்ணனாம் ( கண்ணன்)

7 ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்


ஹரிததீஸ்வரம் ஆ ராத்ய பாதுகம்
அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
39
சரண கீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோ லுபம் நர்த்தனாலஸம்
அருண பரஸுரம் பூத நாயகம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரேய

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்


ப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரேய

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

துரக வாகனம் ஸுந்த ரானனம்


வரக தாயுதம் தேவ வர்ணிதம்
குருக்குருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

த்ரி புவனார் சுதம் தேவாத்மகம்


த்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

பவபயா பகம் பாவு காவகம்


புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாகனம் திவ்ய வாரனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

40
களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜி வாகனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

ச்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்


ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

மங்களம்

சர்வ மங்கள மாங்கல்யே


சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே

சங்கராய சங்கராய சங்கராய மங்களம்


சங்கரி மனோகராய சாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம் தத்தாத்ரேய மங்களம்
கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம்
ராஜாராம மங்களம் வேணுகிருஷ்ண மங்களம்
சீத்தாராம மங்களம் ராதாகிருஷ்ண மங்களம்

41
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்ன


கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைக்கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

ஆத்தாளை எங்கள் அபிராமி வல்லியை அண்டமெல்லாம்


பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக்க்
காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கரும்பு வில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒருதீங்கீல்லையே

காயத்ரி மந்திரம்

ஓம் பூர் புவ ஸ்வஹ


தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோ யோ ந ப்ரசோதயாத்

மஹா மிருத்யுஞ்சய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜா மஹே


சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

சாந்தி மந்திரம்

ஓம் பூர்ணமத பூர்ணமிதம்


பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமேவ அவசிஷ்யதே

ஜோதி வழிபாடு

ஜோதி ஜோதி ஜோதி சுயம்


ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்

வாம ஜோதி சோம ஜோதி


வான ஜோதி ஞான ஜோதி
மாக ஜோதி யோக ஜோதி
வாத ஜோதி நாத ஜோதி

ஏம ஜோதி வியோம ஜோதி

42
ஏறு ஜோதி வீறு ஜோதி
ஏக ஜோதி ஏக ஜோதி
ஏக ஜோதி ஏக ஜோதி

ஆதி நீதி வேதனே


ஆடல் நீடு பாதனே
வாதி ஞான போதனே
வாழ்க வாழ்க நாதனே.

வாழ்த்தொலி

தென்னாடுடைய சிவனே போற்றி


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க


பக்தியின் வலையில் படுவோன் காண்க

குவளைக் கண்ணி கூறன் காண்க


அவளும் தானே உடனே காண்க

அண்ணாமலை எம் அண்ணா போற்றி


கண்ணாரமுதக் கடலே போற்றி

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி


பாகம் பெண் உரு ஆனாய் போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி


சிராய்ப்பள்ளி மேவிய சிவனே போற்றி

நம பார்வதி பதையே
ஹர ஹர மஹாதேவா

சிற்சபேசா
சிவசிதம்பரம்

43
ஸ்ரீ வள்ளி காந்த ஸ்மரணே
சிவசுப்ரமண்யம்

ஸ்ரீ லட்சுமி காந்த ஸ்மரணே


ஜெய ஜெய ராம்

கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்


கோவிந்தா கோவிந்தா

இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க

44

You might also like