You are on page 1of 1

பாடல் பாடிப் பழகுவோம்

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே

-திருமுறை 2, திருஞானசம்பந்தர்

மந்திரமாவது நீறு - மந்திரங்களில் எல்லாம் சிறந்த மந்திரமாவது


திருநீறு
வானவர் மேலது நீறு - வானில் வாழும் தேவர்கள் எல்லாம்
வணங்கி அணிவது திருநீறு
சுந்தரமாவது நீறு - அழகு தரும் பொருள்களில் எல்லாம்
மிகவும் அழகானது திருநீறு
துதிக்கப்படுவது நீறு - பெரும் பெருமையுடையது என்று
எல்லாராலும் துதிக்கப்படுவது திருநீறு
தந்திரமாவது நீறு - இறைவனை அடையும் வழிகளில் எல்லாம்
மிகச் சிறந்த வழியாக விளங்குவது திறுநீறு
சமயத்திலுள்ளது நீறு - சிவபெருமானை ஏத்தும் சைவ சமயத்தில்
பெருமையுடன் போற்றப்படுவது திருநீறு
செந்துவர் வாயுமை - சிவந்த திருவாயினையுடைய
பங்கன் திருஆல உமையம்மையை இடப்பாகத்தில்
வாயான் திருநீறு கொண்டிருக்கும் திருவாலவாயான
மதுரையம்பதியில் வாழும் சோமசுந்தரக்
கடவுளின் திருநீறே.

பொருள்:

சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமை அம்மையை தன்


உடலில் ஒரு பாதியாகக் கொண்டுள்ள சிவபெருமான் திரு ஆலவாயில்
எழுந்தருளியிருக்கிறார். அந்த இறைவனுக்கு உரியதே திருநீறாகும்,
அத்திருநீறு மந்திரங்களுக்கெல்லாம் மேலான மந்திரமாக அடியாரைக்
காக்கும் வல்லமை பெற்றது. அத்திருநீறு தேவர்களால் தங்கள் திருமேனி
மேல் பூசிக்கொள்ளப்படுவது; அழகு தருவது; எல்லா நூல்களாலும்
புகழப்படுவது. அக்து இறைவனுக்கே உரியதாக இருந்த போதும் அவன்
அருளால் நமக்கும் அருளப்பட்டுள்ளது.

You might also like