You are on page 1of 3

Surat Makluman Kepada Ibubapa melalui Whatsapp

25.6.2020

பெற்றோர் பாதுகாவலர்களுக்கு,

அன்புடையீர்,

கரு: பாலர் பள்ளி வகுப்பு தொடக்கம்

வணக்கம். மலேசியக் கல்வி அமைச்சு பாலர் பள்ளிகளை 1.7.2020 முதல் திறப்பதற்கு அனுமதியினை

வழங்கியுள்ளது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். அதன் தொடர்பான விபரங்கள்

பின்வருமாறு:

 பள்ளி நேரம் காலை 7.45 முதல் மதியம் 12.00 வரை (பெற்றோர்கள் தங்கள்

பிள்ளைகளக் கட்டாயமாக மதியம் மணி 12.00 க்கு வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்)

 பிள்ளைகளை பள்ளியின் முன் வாசல் வழி அழைத்து வர வேண்டும்.

 பிள்ளைகளுக்குச் சளி, இருமல்,தொண்டை வலி, காய்ச்சல் போன்ற உபாதைகள் இருப்பின்

அவர்களைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கக் கூடாது.

 மாணவர்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப் படுவர் ( குழு A, குழு B )

 குழு A மாணவர்கள் 1.7.2020 அன்றும், குழு B மாணவர்கள் 2.7.2020 அன்றும் பள்ளிக்கு வருவர்.

 பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் பின்வருமாறு காலை மணி 8.00 க்கு

நடைபெறும்.

 ** குழு A மாணவர்களின் பெற்றோர்களுக்கு 1.7.2020 அன்றும், குழு B மாணவர்களின்

பெற்றோர்களுக்கு 2.7.2020 அன்றும் நடைபெறும்.

 கலந்துரையாடல் கூட்டத்தில் பெற்றோரில் ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள

அனுமதிக்கப்படுவர். குழந்தைகளை கலந்துரையாடலுக்கு அழைத்து வரக் கூடாது.

 பள்ளியின் முதல் நாள் மாணவர்கள் கட்டாயமாக புத்தகங்கள், பென்சில் பெட்டி, கலர் பென்சில்

ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். பென்சில் பெட்டி, கலர் பென்சில் பெட்டி ஆகியவற்றில்

பெயர் எழுதி அனுப்ப வேண்டும்.


 மாணவர்கள் தினமும் கட்டாயமாக முகக் கவரியை அணிந்து இருத்தல் வேண்டும்.

 மாணவர்கள் தினமும் பள்ளிக்கு மென்தாள் (திசு பேப்பர்) எடுத்துவர வேண்டும்.

நன்றி

24.7.2020

பெற்றோர் பாதுகாவலர்களுக்கு,

அன்புடையீர்,

கரு: பாலர் பள்ளி முழுமையான வகுப்பு தொடக்கம்

வணக்கம். மலேசியக் கல்வி அமைச்சு பாலர் பள்ளிகளை 1.7.2020 முதல் திறப்பதற்கு அனுமதியினை

வழங்கியுள்ளது என்பது பெற்றோர்கள் அறிந்த விசயமே.

2. இது வரையில் மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பள்ளிக்கு வந்தனர். எதிர்வரும்

27.7.2020 முதல் அனைத்து மாணவர்களும் எல்லா நாள்களிலும் பள்ளிக்குக் கட்டாயமாக வர

வேண்டுமென பள்ளி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.


3. பள்ளிக்கு வரத் தவறிய மாணவர்கள் கண்டிப்பாக கடிதம் மூலம் பள்ளிக்குத் தெரிவிக்க

வேண்டும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளி தயார் செய்த கடிதத்தைப் பாதுகாவலர்

அறையில் பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி.

இக்கண்,

____________________________

(திருமதி. மு.உதயசுந்தரி)

தலைமையாசிரியர்.

You might also like