You are on page 1of 4

சிறுவர் ஊழியத்தின் எட்டு இலக்குகள்

சிறுபிள்ளைகளுக்கு இயேசுவைப்பற்றி அறிவிப்பதோடு சிறுவர் ஊழியம்


நின்றுவிடக்கூடாது. மத்தேயு 28:18,19 ன் படி, அவர்கள் சீஷராக மாறுவதற்கு
பின்வரும் எட்டு ஆவிக்குரிய காரியங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க
வேண்டும் என்பதே சிறுவர் ஊழியத்தின் நோக்கமாகும்.

1.ஜெபம்

சிறு பிள்ளைகள் ஒவ்வொருவரும், தாங்கள் ஏறெடுக்கிற ஜெபங்களுக்கு


தேவன் பதில் அளிக்கிறார் என்று உணர்ந்து, சிறந்த ஜெபவரராக
ீ மாற
வேண்டும்.

2.பரிசுத்த ஆவியின் அபிஷேகம்

சிறு பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒரு சாட்சியுள்ள கிறிஸ்தவ வாழ்கை


வாழ்வதற்க்கு தேவையான வல்லமையை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின்
மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

3.ஆராதனை

சிறு பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவர்கள் வயதிற்கேற்ற பாடல்களைப்


பாடி கரங்களை உயர்த்தி முழுமனதுடன் கருத்தாய் தேவனை ஆராதிக்க
வேண்டும்.

4.வேத அறிவு

சிறு பிள்ளைகள் ஒவ்வொருவரும் வேத வசனத்தை நன்றாக படித்து வேத


அறிவில் தேறினவர்களாக இருக்க வேண்டும்.

5.சுவிசேஷ ஊழியம்

சிறு பிள்ளைகள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்காக சாட்சியாக வாழ்ந்து,


பிறருக்கு இயேசுவைப் பற்றி சொல்லி, ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களாக
இருக்க வேண்டும்.

6.கொடுத்தல்
சிறு பிள்ளைகள் ஒவ்வொருவரும் கொடுப்பதி்ன் மேன்மையை அறிந்து
கொண்டு, தங்களுக்கு கிடைக்கும் பணத்தையும், நேரத்தையும்,
தாலந்துகளையும் ஆண்டவருக்காக கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

7.சேவை செய்தல்

தாலந்துகளையும் திறமைகளையும் பயன்படுத்தி மற்றவர்களுக்கு சேவை


செய்வதற்கான சந்தர்பங்களை உருவாக்கி கொடுப்பதன் மூலம் தேவ
ராஜ்ஜியத்தின் சேவையின் சிறப்பை சிறு பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும்
கற்றுக் கொடுக்க வேண்டும்.

8.ஞானஸ்நானம்

ஞானஸ்நானம் எடுக்கும் வயதுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும்


தேவனுடைய கட்டளைக்கு கீ ழ்படிந்து, தண்ண ீரில் மூழ்கி ஞானஸ்நானம்
எடுக்க வேண்டும்.

You might also like