You are on page 1of 5

சாதி தோன்றிய காலத்தை உறுதியாக வரையறுக்கமுடியுமா?

Markandan Muthusamy

தோழரின் இந்தக் கேள்வி.. கொஞ்சம் உசுப்பிவிட.. இப்படியொரு பதிவாகிப் போச்சு.

வேத ஆரிய காலமும் மனுஸ்மிரிதி உருவான காலமும், நால்வருண கருத்துக்களை


உருவாக்கிய காலமும் ஏறக்குறைய கிமு 200-கிபி 200 வரையிலான காலம் என்று வரலாற்று
சான்றுகளும், வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்களும் காணக்கிடைக்கிறது.

பௌத்தர்களின் சமூக வாழ்வியல் அழுத்தத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், திணறிய ஒரு


காலகட்டத்தில், அதாவது புஷ்யமித்திர சங்க மன்னனின் காலத்தில், ப்ரிகு (Brigu) என்கிற ஒரு
பிராமண சாமியார் மனுஸ்மிரிதியை உருவாக்கி இருப்பதாக அண்ணல் அம்பேத்கர் தனது
Revolution and Counter-Revolution in India நூற்குறிப்பில் பதிவிடுகிறார். இதே கருத்தை
வரலாற்றாசிரியர் ரோமிலாதாபரும் தனது நூலில் தெரிவிக்கிறார்.

ஆரியனின் இந்த நால்வருண/சாதீய சதி என்பது எந்த அளவிற்கு அறிவாளிகளின் இதயத்தில்


பதியும் என்பதற்கு உதாரணமாக, நாம் ஜெர்மானிய தத்துவாதி பிரெட்ரிக் நீட்சேவின்
மனுஸ்மிரிதி மீ தான கருத்தை சொல்லலாம். அவன் சொல்கிறான்.. "an incomparably spiritual and
superior work" to the Christian Bible. He observed that "the sun shines on the whole book" and attributed its
ethical perspective to "the noble classes, the philosophers and warriors, [who] stand above the mass." இப்படி
பெருமிதமாக சொல்கிறான். அவனின் மூளையையும் சலவை செய்யும் அளவிற்கு அந்த
மனுஸ்மிரிதி இருந்திருக்கிறது. 

இப்போ நம்ம ஊருக்குள்ள வருவோம்.

கிட்டத்தட்ட இதே காலத்தில் படைக்கப்பட்ட புறநானூற்றின் பாடல்களில், மனிதனை உயற்சி


தாழ்ச்சி பேசும் பாடல்களையும் காண முடிகிறது. அதில் ஒன்று. "இழிபிறப்பாளன்" என்றே
சொல்கிறது. 

இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப


வலிதுறந்து இலைக்கும் வன்கண் கடுந்துடி – புறநானூறு(170)

மற்றொரு பாடலில்,

துடி எறியும் புலைய


எறிகோள் கொள்ளும் "இழிசின" – புறநானூறு(287)

புறநானூற்றில் குறிப்பிடப்படும் தமிழ்நிலப் பிரிவுகள் நான்கு. பாலையையும் சேர்த்தால் ஐந்து.


இந்த நிலங்களில் இருந்ததாக குறிப்பிடப்படும் உயர்ந்த, தாழ்ந்த சாதிகள்:

குறிஞ்சி
உயர்ந்தோர்: பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி
தாழ்ந்தோர்: குறவர், குறத்தியர், கானவர்

முல்லை
உயர்ந்தோர்: நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி
தாழ்ந்தோர்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்

மருதம்
உயர்ந்தோர்: ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி
தாழ்ந்தோர்: உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்

நெய்தல்
உயர்ந்தோர்: சேர்ப்பன், துறைவன், புலம்பன், பரத்தி, நுளைச்சி
தாழ்ந்தோர்: நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்

பாலை
உயர்ந்தோர்: விடலை, இகுளை, மீ ளி, எயிற்றி
தாழ்ந்தோர்: மறவர், எயினர், எயிற்றியர், மறத்தியர்
(தரவு நூல்: ஐங்குறு நூறு, எம்.நாராயண வேலுப்பிள்ளை).

சங்க இலக்கியத்தில் அந்தணர்கள் பாடிய பாடல்களும், அவர்களின் வாழ்வுமுறை,


வழிமுறைகளைப் பற்றிய குறிப்புகள்தாம் அதிகம். நக்கீ ரர், மாமூலனார், பரணர், கபிலர்.. இப்படி
அவாள்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது.

வள்ளுவனிடமும் ஒரு சந்தேகம் உண்டு. குறள் 409-ல் மேற்பிறந்தார், கீ ழ்பிறந்தார் என்கிற


குறிப்புதான் சந்தேகத்தை கிளப்பும் குறிப்பு.

மேற்பிறந்தாராயினும் கல்லாதார் கீ ழ்ப்பிறந்தும்


கற்றார் அனைத்திலர் பாடு. (திருக்குறள் 409)

இந்தவித உயர்வு நவிற்சி சொன்ன வள்ளுவன் எப்படி கீ ழ்வரும் குறளை சொன்னான்


என்பதும்தான் பெரிய முரண்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (திருக்குறள் 972)

ஆக, எங்கோ இடறுவதையும் / இடைச்செருகல்களையும் நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது.

அகநானூற்றிலும் சாதீயக் குறிப்புகளின் வழி பிரிவுகளைக் காணலாம்.

அகநானூற்றில் உள்ள சாதிகள்: 


அண்டர்/ இடையர், அத்தக் கள்வர், அந்தணர், உமணர், உழவர், குயவர், கொல்லர், தட்டார்,
பரதவர், பழையர், பானர், யானைப்பாகர், வேளாப் பார்ப்பார்,

குறவர் குடி–அகம் 13, உழவர் குடி— அகம் 30, பரவர் குடி –அகம் 10, நுளையர்- அகம் 366, எயினர்
— அகம்.79, மறவர்- அகம்.35, வேட்டுவர்— அகம்.65.

தொல்காப்பியனும் மனுவின் நால்வருணக் கோட்பாட்டை தூக்கிச் சுமக்கிறான். அவனும்


மேலோர், கீ ழோர் எனும் பாகுபாட்டை குறிக்கிறான்.
மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம்
கீ ழோர்க் காகிய காலமும் உண்டே 
கற்பியல் 144 நுற்.3, தொல்.11 22 வது பாடல்

அதே காலத்தில்.. இந்த சாதீய தாக்கத்தினால் கணியன் பூங்குன்றனும் அனுபவித்திருக்க


வேண்டும். சோதிடமும், கணிதமும் நன்கறிந்த அந்தப் புலவன், 

யாதும் ஊரே யாவரும் கேளிர்


தீதும் நன்றும் பிறர் தரவாரா

இது நால்வருணத்திற்கு எதிரான கூற்று.

அடுத்து சமயக் கொள்கைகளை பார்ப்போம்.. பிறப்பின் அடிப்படையிலான பிரிவு என்பது


சமணசமயக் கொள்கையில் இல்லை என்று தோன்றுகிறது. சமணத்தில் கூறப்படும், புலை
என்ற சொல் தீய செய்கை என்பதாகவும், இழி பிறப்பாளன் என்கிற சொல் மறுபிறப்பில்..
நரகத்திற்கு செல்வோனின் தாழ்ச்சியை ஏற்படுத்தும் தொழிலைச் செய்வோன் என்றும்
பொருளாகக் கொள்ளப்படுகிறது. ஆக, இங்கு பிறப்பின் அடிப்படையிலான சாதி என்கிற
கோட்பாடு இல்லை.

சமணத் இலக்கியமான ஏலாதியில் 67-ஆம் பாடலில் கணிமேதாவியார் (கிபி 7 ஆம் நூற்றாண்டு)


நரகத்தை ‘இழிகதி’எனக் குறிப்பிடுகிறார்.

வைணவ சமயத்தின் புலவர்களான ‘ஆழ்வார்கள்’ 8 நூற்றாண்டுக்கு பிறகுதான் வருகிறார்கள்.

சங்ககாலமான கிபி 2-ஆம் நூற்றாண்டிற்கும், கிபி 8-ஆம் நூற்றாண்டிற்கும் இடையில்தான்


தமிழகத்தில் ஆரிய, சமண, தமிழ் மக்களுக்கு இடையிலான போரும், சமூக கலாச்சார
வாழ்வியலும் நடந்திருக்கிறது. இங்குதான் பெருத்த இடைவெளி தோன்றுகிறது. இதே
காலகட்டத்தில்தான் களப்பிரர்களின் காலமும் தமிழகத்தை ஆண்டு, தமிழ் மக்களின்
வாழ்வியலில் பெருத்த மாற்றங்களையும், சாதீயப் பொதிகளையும் திணித்த காலம் என்று
கூறலாம்.

ஆக சாதியத்தின் தோற்றுவாய் என்பது தமிழகத்தில் கிபி.2-ஆம் நூற்றாண்டிற்கும், 


8-ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றுவித்து வளர்த்து வருகின்றனர் என்பதாக
தோன்றுகிறது.

பார்ப்பண நூலான நாலாயிர திவ்யபிரபந்தத்தில்.. தமிழரின் வெறியாட்டு சடங்கில் முழவுக்


கருவியை இசைப்பவனை "கீ ழ்மகன்" என்று நம்மாழ்வார் என்கிற பிராமணன் குறிக்கிறார்.
கீ ழ்மகன் என்றால் தாழ்ந்தவன் என்று பொருள் கொள்வோம்.
தமிழகத்தின் ‘பக்தி இயக்கம்’இப்படியொரு காலமாம்.. இந்தக் காலம் என்பது கிபி 6 முதல் – 9
ஆம் நூற்றாண்டுகளுக்கிடையிலான காலம், இதில் பக்தி மார்க்கம் என்ற புளுகுணி
கருத்துக்களை திணித்து.. சாதீய வகுப்புகள், மாற்றங்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கிறது என்று
நம்பலாம்..
கிபி 9-ஆம் நூற்றாண்டில், ஆசாரக்கோவை (92) என்கிற பார்ப்பண நூலில்.. சடங்குகளைச் செய்ய
நல்லநாள் குறித்து அறிய புலையரை கலந்தாலோசிக்க வேண்டாம் என்கிற கருத்தில் ஒரு
பாடல் இருக்கிறது. இந்த அறிவுரை பிராமணர்களுக்காம்.

திராவிட மொழிகள் (தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு.. இன்னும் சில மொழிகள்) பேசும்
மக்கள் தொன்மையான காலத்தில் தங்களிடையே தீண்டாமை என்பதையோ சாதிகள் என்ற
கோட்பாட்டையோ கொண்டிருக்கவில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

சாதீயம் எப்படி சமூக அரசியலாக்கப்பட்டது என்பதையும் கொஞ்சம் பார்ப்போம்.

தாசியின் மகனாக பிறந்து, சூதாடும் கூட்டங்களுக்கிடையில் வளர்ந்த கவாஷ மகரிஷி


என்பவர்.. நதிகளின் அருகில் யாகம் நடத்துகிறேன் என்கிற பேர்வழியாக.. நதிநீரை
பிராமணர்கள் தவிர்த்த மற்றவர்கள் பயன்படுத்த தடுத்த மஹான். இதை நான்
சொல்லவில்லை.. ரிக் வேதத்தில் உள்ள ஐதேரேய பிராமணம் சொல்கிறது. சூத்திரனுக்கு
மகனாக பிறந்திருந்தாலும்.. பிராமணர்களுக்கு தொண்டு செய்தால் அவனும் பிராமண
கௌரவத்தை பெற்றுவிடுகிறான். (இன்றைய அரசியல் நினைவுக்கு வந்தால் நான்
பொறுப்பில்லை).

ரிக்வேதத்தில்.. ஆரியர்களுக்கும், தஸ்யூக்களுக்குமான போர் நடந்ததாக குறிப்பு வருகிறது.


தஸ்யூக்கள் என்பவர்கள் யார்.. ? எந்த இனம்..? 

எனது சந்தேகம் அந்த தஸ்யூக்கள் என்பவர்கள்தாம் இன்றைய திராவிடப் பகுதி மக்கள் என்று
நினைக்கிறேன் அதை உறுதி செய்து, சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர், வேதங்களை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரின் Indology குறிப்பு சொல்கிறது. 

கிபி 3-ஆம் நூற்றாண்டின் பயணி மெகஸ்தனிஸ் தனது குறிப்பில், மிக கொடூரமாக


நால்வருணக் கோட்பாடுகள் மக்கள் மீ து திணிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். 

சாணக்கியனின் அர்த்த சாஸ்திரத்தில்.. இந்த நால்வருணக் கோட்பாடுகள் இல்லை.. 

மிகத் தெளிவாக, பிராமண பூர்ஷ்வாக்கள் உருவாக்கிய கொடுமையான நூலான


மனுஸ்மிரிதியிலிருந்துதான் சாதியத்தின் தோற்றம் என்பதும் உறுதியாகிறது.

மனுநீதியின் மீ தான காந்தியின் கருத்து:


I hold Manusmriti as part of Shastras. But that does not mean that I swear by every verse that is printed in the
book described as Manusmriti. There are so many contradictions in the printed volume that, if you accept one
part, you are bound to reject those parts that are wholly inconsistent with it. (...) Nobody is in possession of the
original text.
— Mahatma Gandhi, An Adi-Dravida's Difficulties

மனுஸ்மிரிதியின் கட்டமைப்பு என்பது மூன்று விஷயங்கள்

1. பிறப்பின் அடிப்படையிலான சாதீய அமைப்பு.

2. பார்ப்பணர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் கீ ழ்நிலையானவர்கள்.. அவர்களுக்கு


கடுமையான தண்டனைகளை கொடுத்ததும், உயர்சாதியினராக தங்களை அழைத்துக் கொண்ட
பிராமணர்களுக்கு சலுகைகளையும் வழங்கிய தீய அரசியல்.

3. பெண்களின் வாழ்வுக்கும் / உரிமைகளுக்கும் எதிரான விஷயங்களை பிரதிநிதித்துவபடுத்தும்


ஒரு கயமைநூல்.

இவ்வளவு கீ ழ்நிலையான கருத்துருவம் கொண்ட ஒரு ஆதிக்க செயலாக்க நூலான


மனுஸ்மிரிதியை, காந்தியின் சத்யாகிரகம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க.. டிசம்பர் 25, 1927 ல்
"மனுஸ்மிரிதி தகனம்" என்கிற பெயரில், தீண்டாமையைக் கற்பிக்கும் அந்த நூலை
கொளுத்துவோம் என்று சொல்லி பொதுஇடத்தில் வைத்து கொளுத்தினார் அண்ணல்
அம்பேத்கார்.

இன்று நாம் செய்ய வேண்டிய கடமை அதையே ஒவ்வொரு சங்கிகளின் தலையிலும் வைத்துக்
கொளுத்த வேண்டும்.

குலதெய்வ வழிபாடு, சிறு தெய்வம், கன்னி தெய்வம், ஆசீவகம், சமணம், சைவம், பவுத்தம்
போன்றவற்றை கடந்துவந்த தமிழனை இந்துவாக ஒற்றை அடையாளத்தில் பூட்டி புதிதாக
அரசியல் செய்யவருகிறது சங்கி/பாஜக கூட்டம். அதை உணராதத் தமிழனாய், அந்த சங்கி
மாடுகளுக்கு அடிவருடச் சென்றால்.. தமிழனின் வாழ்வியல் சிதைந்து போகும்..

புறநானூற்றில் வேத நால்வர்ணத்தை அடியொற்றி குறிப்பிடப்படும் "துடியன், பாணன்,


பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை (புறநானூறு (335.7-8))" என்று
தொல்குடி தமிழனை வகைபடுத்தியதும் குற்றம்தான். அதை அடியொற்றி அவனை திராவிடன்
என்று அழைப்பதும் தவறு என்றே படுகிறது. தமிழ்த் தொல்குடியிலிருந்து வரும்
வழித்தோன்றல்களை தமிழன், தமிழ்க்குடி, தமிழினம் என்று மட்டுமே அழைத்தால் போதும்.
திராவிட அடையாளம் என்பது தேவையற்றது என்பது எனது தாழ்மையான கருத்து. 
-யுகாந்தன்.
(என் சிற்றறிவுக்கு பட்டதை பகிர்ந்தேன்.)

You might also like