You are on page 1of 8

ஒவ்வொரு கேள்விக்கும் A, B, C என்னும் மூன்று அல்லது A,

B, C, D என்னும் நான்கு தெரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.


அவற்றுள் ஒன்று மட்டுமே மிகச் சரியான விடையாகும்.
அவ்விடையைத் தெரிவு செய்து அனுப்பவும்.

1. ஆளுடைய பிள்ளையார் திருவவதாரம் செய்த ஊர் எது?

A சோழவள நாடு B திருத்தோணிப்புரம்


C சீகாழிப்பதிகம் D திருத்தோணி மலைச் சிகரம்

2. திருதோணிபுரத்து இறைவர் திருவருளால் திருவவதாரம்


செய்தவர் யார்?

A சிவபாத இருதையர்
B பகவதி அம்மையார்
C ஞானசம்பந்தர்

3. குளக்கரையில் அமர்ந்திருந்த பிள்ளையாருக்குப் பால்


கொடுக்கக் ஆணையிட்டவர்...

A சிவபாதர்
B உமையம்மை
C தோணியப்பர்
D பகவதியார்

4. ‘தோடுடைய செவியன்’ என்ற பதிகத்தின் வழி சம்பந்தர்


யாரைச் சிறப்பிக்கும் முறையில் பாடியருளினார்?

A தன்னை ஈன்ற அன்னையை

1
B தோணிப்புரத்து அன்னையை
C திருத்தோணிப்புரத்து ஈசனை

5. திருஞானசம்பந்தர் இறை அருளால் நிகழ்த்திய அற்புதங்கள்


ஒன்றைத் தவிர.

A தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப்


பச்சையாய் எடுத்தது.
B பாலை நிலத்தை நெய்தல் நிலமாகும்படி செய்தது.
C முத்துப்பந்தரும், உலவாக் கிளியும் பெறவில்லை.
D சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது.

6. திருநாவுக்கரசர் சுவாமிக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர்..

A மகேந்திர பல்லவனைச்
B மருள்நீக்கியார்
C தர்மசேனர்
D அப்பர்

7. சமண சமயத்தில் இருந்த போது திருநாவுக்கரசர்


தர்மசேனர் என்றழைக்கப்பட்டார். காரணம்...

A சமண சமயத்தில் சேர்ந்ததால்


B சைவக் குடும்பத்தில் பிறந்ததால்
C சமண மதத்திற்குத் தலைவரானதால்
D இறைவனால் ஆட்கொள்ளப்பட்டதால்

8. மருள்நீக்கியாருக்குக் கடுமையான சூலை நோய் ஏற்பட்டப்

2
போது அவர் யாரை நாடி வந்தார்?

A பகவதி அம்மையாரை
B திலகவதியாரை
C நாவுக்கரசரை
D மகேந்திர பல்லவனைச்

9. அப்பர் பெருமான் யாருடன் இணைந்து தல யாத்திரை


மேற்கொண்டார்?

A சமணத்தவர்களோடு
B பல்லவப் பேரரசனோடு
C திருஞானசம்பந்தரோடு
D மகேந்திர பல்லவனோடு

10. திருநாவுக்கரசர் நமக்குக் காட்டிய நெறி...

A சரியை நெறி B ஞான நெறி


C யோக நெறி D தொண்டு நெறி

11. திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில் பிறந்த


சுந்தரர் எந்தக் குலத்தைச் சார்ந்தவர்?

A ஆதி சைவ B பிராமண C வேளாண் D வைணவ

12. மணநாளன்று முதியவர் ஒருவர் எதனைக் காட்டிச்


சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை

3
என்றார்?

A சூலை B ஓலை C பாலை D தாளை

13. சுந்தரர் இறைவன் பால் கொண்டிருந்த பக்தி ...................


என்று அழைக்கப்படுகிறது.

A சற்புத்திர மார்க்கம் B சன் மார்க்கம்


C சக மார்க்கம் D தாச மார்க்கம்

14. ‘நீள நினைந்தடியேன்’ என்று தொடங்கும் தேவாரப்


பாடலை எந்த ஊரில் பாடினார்?வாரப் பதிகம் மூலம்,

A திருமுனைப்பாடி
B குண்டலூரில்
C திருநாவலூரில்

15. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய எந்த நூலில் 63


நாயன்மார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன?

A தேவாரத்தில்
B திருவாசகத்தில்,
C திருக்கோவையாரில்
D திருத்தொண்டத் தொகையில்

16. திருவாதவூரார் எதனை ஆராய்ந்து சிவ வழிபாடு


மேற்கொண்டு பின் பற்றி வரலானார்?

A சிவத்தை
B திருவாசகத்தை
C சைவசித்தாந்தத்தை

4
17. இறைவன் _______________________ குதிரைகளாக மாற்றி
மதுரைக்கு அனுப்பிவைத்தார்.

A சிவகணங்களைக் B யானைகளைக்
C வரர்களைக்
ீ D நரிகளை

18. வந்திக் கிழவி இளைஞனுக்குக் கூலியாக எதனைக்


கொடுத்தார்?

A உதிராத புட்டை B பணத்தை


C உதிர்ந்த புட்டை D பொன்னை

19. இளைஞன் மீ து பட்ட பிரம்படி உலகத்தில் உள்ள


அனைத்து உயிர்களின் மீ தும் பட்டது என்றால்
இளைஞனாக வந்தவர்...

A திருச்சிற்றம்பலமுடையார் B வைகுண்டமுடையார்
C நான்முகனார் D உமையம்மை

20. மாணிக்கவாசகர் இரண்டு நூல்களைப் பாடியுள்ளார்.


அவை...

A திருவாசகமும், திருக்கோவையும்
B திருமந்திரமும், திருவாசகமும்
C திருவாசகமும், திருவிசைப்பாவும்
D திருக்கோவையும், திருப்பல்லாண்டும்

21. சுந்திரமூர்த்தி சுவாமிகள் எவ்வாறு தோன்றினார் ?

5
A நான்முகனின் பிம்பத்திலிருந்து
B திருமாலின் பிம்பத்திலிருந்து
C சிவபெருமானின் அவதாரம்
D ஈசனின் பிம்பத்திலிருந்து

22. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இரு சிறுவர்களும் ஊர்


குளத்தில் குளித்த மகிழ்ந்தனர்?

A ஏழு B மூன்று C நான்கு D ஐந்து

23. உபநயனம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குழந்தையின்


பெயர்....

A திருஞானசம்பந்தர் B திருநாவுக்கரசர்
C சுந்திரமூர்த்தி D மாணிக்கவாசகர்

24. சுந்தரமூர்த்தி சுவாமிகள் எதனை இந்த உலகுக்குக் காட்ட


வேண்டும் என்று உளம் கொண்டார்.

A மனிதனின் துக்கத்தை அறுக்க வல்லது இறவனின்


திருவடியே
B மனிதனின் பாவத்தை அறுக்க வல்லது இறவனின்
திருவடியே
C மனிதனின் பிறப்பை அறுக்க வல்லது இறவனின்
திருவடியே

6
25. சுந்தரர் பாடிய பாடலில் காலனையே என்ற சொல்லுக்கு
ஏற்ற பொருள் என்ன?

A பிரம்மனையே B திருமாலையே
C கூற்றுவனையே D ஈசனையே

26. சாக்கிய நாயனார் காஞ்சிபுரம் சென்று அங்கிருக்கும்


சமணர்களிடம் பழகக் காரணம் என்ன?
A முக்தி பெற வேண்டி B சிவனைக் காண வேண்டி
C நன்னெறிப் பெற வேண்டி D சிவனடியார்களைக் காண
வேண்டி

27. பாடலில் காணும் சங்கரன் தாள் எனும் சொல் யாரைக்


குறிக்கிறது?

A சிவனடியார்களின் திருவடியை
B முனிவர்களின் திருவடியை
C அன்னையின் திருவடியை
D சிவனின் திருவடியை

27. சாக்கிய நாயனார் ஐந்தெழுத்து மந்திரத்தை


உச்சரித்தப்படிஎதனை லிங்கத்தின் மேல் எறிந்தார்?

A மலரை B கல்லை C நீரை D திருநீற்றை

29. ‘வெறுப்பின் மிகுதியால் இதைச் செய்கிறேன் என்று

எண்ணுவார்கள்’ என்ற கூற்று சாக்கிய நாயனார் ................

7
என்று காட்டுகிறது.

A சமணர் B சைவன் C வைணவன் D சாக்தன்

30 சாக்கிய நாயனார் நமக்குக் காட்டிய நெறி...

A பக்தி நெறி B யோக நெறி C அன்பு நெறி D சிவ நெறி

-------------------- முற்று --------------------

You might also like