You are on page 1of 234

சுத்த

கிராமப்புறம்
நினைவுகள் 100

ஜெ.தார்வேந்தன்.
முன்னுரை
வணக்கம் நண்பர்களே!

திரைக் காகிதத்தில் திரட்டியிருக்கும் கவி


வரிகளில் தமிழினத்தின் அடையாளம்
அடங்கியிருக்கிறதுப், புழுதிக் காட்டின்
தென்றல் வசியிருக்கிறது,
ீ நாம்
இழந்துவிட்ட பொதுவான நினைவுகள்
திரும்பி இருக்கிறது, நிதானமற்ற நிஜ
வாழ்க்கையில் நேரத்தோடு
சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
நகரவாசிகளிடம் தகர்ந்துப் போன இயல்பு
நிலைக்குக் காரணம் நவனமயமாதலே

பாரம்பரியத்தின் பகுதிக் கிளைகள் துளிர்
விட்டுக் கொண்டேத் தான் இருக்கிறது.
உதாரணமாக அன்று மடித்துக் கட்டிய
வேட்டி சேலைகள் இன்று தனித்துக்
காட்ட அவ்வப்போது உடுத்திக்
கொள்கிறார்கள். உணவு பழக்கத்தை
உளுக்கி விட்ட அந்நிய வகைகளை
தடுத்துவிட்டு தினை அரிசிக்கு தயாராகி
வருகின்றனர். இதில் வேடிக்கை
என்னவென்றால் அன்று சாமானியனின்
அடுப்பில் வெந்ததைப்போல் இன்றைக்கு
சாத்தியமில்லை. ஏனெனில் அவை
மலிவிலிருந்து மலையேறிவிட்டது.
மீ ண்டும் அரிசியின் அலை வச

வேண்டும்.

நான் எழுதியுள்ள "சுத்தக்கிராமப்புறம்


நினைவுகள் 100" என்ற கவிதை
தொகுப்பானது கிராமத்தானின்
கிறுக்கல்கள். இதோடு பயணிக்கும்
நேரமானது உங்களுக்கு பசுமை நிறைந்த
காட்சிகளையும் மனதில் மறைந்துபோன
நிகழ்வுகளையும் கண்முன்
அழைத்துவருமென்று நம்புகிறேன். இவ்
புத்தகத்தை பதிவிறக்கம் செய்த தமிழ்
நெஞ்சங்களுக்கு நன்றிகள்.

சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
சிந்திக்கத் தொடங்கி விடுங்கள்
முடிந்தவரை மனிதன் ஆக
முயற்சியுங்கள்.

நட்புடன்,
ஜெ.தார்வேந்தன்.
முன்னுரை 2
1. அரசு வேலையா 10
2. சீலைப் பெண் எங்கே 12
3. இரட்டைக்கிளவி 14
4.வயலோடு வாலிபம் 16
5. சித்திரை லீவு 18
6. தேர்வு அறையில் 21
7. கனவின் விதி 22
8. அடுப்பங்கரை பொன்னுத்தாயி 24
9. கொலுசுப் பூக்கள் 26
10. நிலாச்சோறு 28
11. படித்த விவசாயி 31
12. தெருக்கூத்து 33
13. அலைகள் ஓய்வதில்லை 35
14. மேனியின் ரகசியம் 37
15. வேட்டிக் கட்டு 39
16. காலை எதிர்பார்த்த வேளை 42
17. பெண் எனும் பூ 44
18.செல்ஃபி 46
19. மிதிவண்டி பயணம் 48
20. சிந்தும் சிந்தும் 51
21. நடைப்பயிற்சி 53
22. புகை வேண்டாம் 56
23. ரோஜா வா! 58
24. மறப்பேன் உன்னை 60
25. மேய்ச்சலில் கவிப் பாய்ச்சல் 62
26. அதிகாலை தரிசனம் 64
27. சன்னலோரக் கவிதை 66
28. கூந்தல் பிரவேசம் 68
29. ராணுவம் போற்றுவோம் 71
30. காதல் பசுமை 74
31.எங்க ராசாப் போன 77
32. கடிகாரம் 80
33. தினக் காட்டி 83
34.களவி ஒழுக்கம் 86
35. அறுவடை 88
36. காற்று 90
37. பட்டம் 93
38. இதயம் 95
39. திரையரங்கம் 98
40. அடக்குவதற்கு உகந்தவை 100
41. தங்கம் 103
42. பாசனம் 105
43. புட்டு வாங்க போனேன் 107
44. தினவாசி 109
45. குறவனுக்கு ஒருத்தி 112
46. மூக்கு கண்ணாடி 115
47. மைலாஞ்சி 117
48. அருவி 119
49. வடை 121
50. சுத்தக் கிராமப்புறம் 123
51. மாணவத் தொழிலாளி 126
52. வானவில் 128
53. உயர்கல்வி 130
54. இலக்கணக் காதல் 133
55. இக்காலத்தில் மலை 135
56. தேர்வுத் தேதி வந்தது 138
57. உணவு மேசை 140
58. ஏற்றம்× இறக்கம்= வாழ்க்கை 142
59. மாடித்தோட்டம் 144
60. அடுப்பின் மாறுவேசம் 146
61. சிறைக் குளியல் 149
62. ஒரு வார்த்தை 152
63.மறுத்தாய் மகள் 155
64. சுற்றுலா 157
65. அவள் எழுச்சி 160
66. காதல் கண்டேன் 162
67. பனைமரம் 165
68. போர்வைக் காலம் 167
69. காடுகளை தேடுங்கள் 170
70. திரை ஆட்டம் 172
71. வாழையிலையில் ஒருவேளை 175
72. காதல் காத்திருந்தேன் 177
73 தண்ணீர் மரம் 180
74. மார்ச் 8 182
75. குப்பை 185
76. பட்டிமன்றம் 187
77. பல் துலக்கி பல வருஷம் 190
78. பெண் பொட்டு 192
79. மின்சாரம் காணாத தூரம் 195
80. கடிதங்களில் கடைசி வரிகள் 197
81. காவல்துறை உங்கள் நண்பன் 200
82. விழாக்காலம் புதுத்துணி 202
83. வேலை இல்லை 205
84. அழித்துவிட்டால் அழகாக 207
85. வள்ளுவம் வாசிப்போம் 210
86. மீனவம் 212
87. மழை நம்மோடு 215
88. பிறந்தநாள் வாழ்த்துக்கள் 217
89. பானை 220
90. வீட்டுக்கு விருந்தாளி 222
91. கூட்டுக்குடும்பம் 225
92. களையெடுத்த கள்ளி 228
93. வாடகை வீடு 230
94. காதல் எனும் பெயரில் 233
95. ஆங்கிலம் 235
96. தாலாட்டும் குழல் 237
97. எருது 240
98.கடவுள் ஒழிக 242
99. காலனி ஆதிக்கம் 245
100. பால் கறவை 247
1. அரசு வேலையா

மண்ணிற்குள் மூழ்கிய வித்து


தமிழிற்கு அடையாளச் சொத்து
களஞ்சியமாகத் தழுவியத் தஞ்சை
கண்ணிற்கு அழகியப் புஞ்சை

சகதிக்கு ஏர் ஏங்கியது


பகுதிக்கோர் தானியம் புழங்கியது
பொன்னை விளைத்து நவமணியை
அருத்தச் சொந்த நிலத்திலே
சில என்னுடன் பலக் கற்கள்
சுற்றித் தடைப் போட்ட வேலி
முற்கள்

அரசு வேலையில் சொகுசு இருக்கு


கை நீட்டப் பலத் தினுசு இருக்கு
உறவிலே அப்படி என்ன இருக்கு
உலகமேச் சொந்தமானது அதுக்கு
விவசாயம் வெறுக்கும் வாழ்க்கை
எதுக்கு அதைப் பானையில் போட்டு
மண்ணிலே பதுக்கு

அரசியலில் பலத் துறைகள் உண்டு


விவசாயம் வளர்க்க வழி இல்லை
இந்திய அரசுச்சட்டத்திலலே
நியாயமானத் திருத்தம்
விவசாயத்தை அரசு வேலையாக
அறிவிப்பதே அறிவுடைமயின்
பொருத்தம்.
2. சீலைப் பெண் எங்கே

பருத்திப் பஞ்சியின் தமிழ் தாகம்


உருமாறும் சிலையாகத் தேசப்
பெண்மையின் தன்மைக்கேற்பப்
பழகும் மூ வேலையாக

பூ வேலைப்பாடுப் பாகுபாட்டை
விலக்கும் மடிப்புத் திருப்பங்கள்
திராவிடத்தைப் பிரதிபலிக்கும்
இடையேப் புகுந்த
அந்நிய வர்ணம்
கலாச்சாரத்தைக் கலைக்க
முக்கியக் காரணம்

ஔவையும் கண்ணகியும் உடுத்திய


பூஞ்சிலைத் தீஞ் சாலையானதே
கிளியோபாட்ராவும் எலிசபெத்தும்
போட்டக் கவுனு மவுஸசுப் பேசுதே
சலவைப் பெட்டியில் மிதக்கும்
உடைத்தான் நீச்சல் போடுது
தன்மானம் என்ற ஒன்று
கூச்சல் போடுது

பூவையரின் அங்கங்கள் தங்கம்


போன்றது மறைக்க மறைக்க
மதிப்பு கூடும்
குறைக்கக் குறைக்கக் கலப்பு நாடும்
அயல்நாட்டு மோகம்
அக் கரையிலே
தாய்நாட்டு மானம் பெண்ணின்
அக்கறையிலே.
3. இரட்டைக்கிளவி

சேர்த்துவிட்டாய் எழுத்துப்பிளவை
பெருகிவிட்டாய் மொழியின்
அளவை; தேடுகிறேன் உன்னில்
பொருளை வாக்கியத்தை விளக்கிய
விளக்கமற்ற விடை நீ பலப்பல
மொழியிலில்லா சிலசில
இலக்கியம் சொல்லா வழித்
தொடர் நீ தமிழ்த்தாயின் சுவை
மதிப்பற்ற அணிகலன் நாக்கு
அதிரும் கோர்வை உதிரும் ஒலி
மூலம் ஓர் வர்ணனை
வாசிப்பவருக்கு பேசும் பஞ்சனை
இலக்கணமில்லாமல் இலக்கியம்
இல்லை இரட்டைக்கிளவி
இல்லாமல் இலக்கணமில்லை
வார்த்தையில் உயிரோட்டமும்
இல்லை ஒரு சொல்ல இரு
சொல்ல
பேர் சொல்கிறதா அது போதும்
தமிழுக்கு!
4.வயலோடு வாலிபம்

கலப்பை நடமாடும் நிலத்தில்


விளைச்சல் கவிபாடும் சுகத்தில்
காங்கேயம் மயங்கியது
காலைப் பொழுதில்; மழலை
சுற்றுலா ஆலம் விழுதில்
தவளை இடுப்பில மன்மத
கனையின் கடுப்பிலா

மையிட்ட விழியில் நெய்யிட்ட


கண்ணனின் குழலோசை
முத்திட்டக் குழியில் சிரிப்பிட்ட
மொழியின் புதுப்பாசை
வாழை நார் வளச்சிப் போட்ட
கூந்தல் அதில் சஞ்சீ வி
வேரிட்டச் செங்காந்தள்
பச்சைப் பூமியில் சுட்டித் தேவதை
மெச்சிப் பொழிந்திடும் கட்டி
தேன்மழை; வாயாடியின்
வயசென்னவோப் பதினாறாம்
பரிசம் போடத் துடிக்கும் நெஞ்சமோ
பலநூறாம்; பகலெல்லாம்
பட்டிக்காட்டில்
பறந்துவிட்டு இரவெல்லாம்
காலையின் கனவில் ஊர்வலமாம்.
5. சித்திரை லீவு

பட்டாபிஷேகம் செய்துக் கொண்ட


பகல்; சிட்டாகப் பொய்த்துப்போன
வயல்; அக்னி நட்சத்திரத்தில் ஏறிய
அரியணை மண்வெட்டி
சண்டையிட்டக் கல்லணை

மாணவ மணிச்சுடர் விளையாட்டு


ஏரிக்கரை புங்க மர குயில் பாட்டு
ஆத்தங்கரை கெண்டைக்கு
தூண்டில் போட்டு
எச்சி ஊர மீ னுக்குத் தீமூட்டு

நெட்ட மர சிகப்புக் காய்


கொடுக்காப்புளிக்குக் குப்பனும்
முத்துப் பையனும் சண்டப் போட
தோட்டக்கார ஒத்தக் கண்ண
விரட்டியோடக் கொட்டையில
தேர்வு முடிவு
பிரிச்சிப் போடக் குட்டையில
குளிக்கையில சுந்தரி
பாத்துப்புட்டாத் தப்பியோடி
முள்ளுப் புதருல ஒலிய முடியல
செடிக் கிளையில்
பொண்ணு வண்டு புலம்பல் தீரல

கண்ணேதிரே ரெட்டப் பனை


நுங்கு காட்டுது வயிறு முட்ட
தின்னுப்புட்டாக் கண்ணு சொக்குது
மேற்கையிலேக் குருட்டு வெளிச்சம்
பயமுறுத்துது மூணு நாளா வடு

தங்கள அம்மா ஏசுது.
6. தேர்வு அறையில்

விடைகள் படைக்கத் தடைகள்


இல்லை; தாளில் விதைத்த
விடைகள் வெள்ளை; நினைவில்
நின்ற மறக்கும் மௌனங்கள்
மறந்துக் கிடக்கும்
நினைவு வசனங்கள்

அருகில் பார்த்தால் பார்ப்பவை


கிடைக்கும்; பார்ப்பவர் பார்த்தால்
பார்வையைப் பழிக்கும் இறுதியில்
மிஞ்சியதுக் காலிக் காகிதம்
உறுதியாய் தங்குவது
நேரத்தில் கற்ற ஆயுதம்.

7. கனவின் விதி

விழித்தக் கனவு பூத்தது


இருக்கும் கரங்கள் உழைத்தது
செழிக்கும் வேகத்தில் விமானம்
ஜெயித்தும் உள்ளத்தில் நிதானம்

மனதின் வலிமை இழந்தாலும்


வாகையின் உவமை மறந்தாலும்
நம்பிக்கையில் நதியாய் ஓடனும்
சான்றோரின் விதியை நாடனும்
போக்கிடமின்றி திசையாவும்
புறம் போக்காலாம்
நோக்குமிடமெங்கும் நிறையின்றி
கருவேலமாகலாம் உதிக்கும்
பக்கம் பாதையை அமைத்திடு
பாதையின் தடைகளைச் சுகமாக
ரசித்திடு எடுத்துக்கூற
நல்லவன் நண்பனாகனும்
படித்துப் பழகப் புத்தக
ரசிகனாகனும் புரட்டிப்போட
வாழ்க்கை விளையாட்டாகனும்
ரகசியப் புன்னகை
வெளிச்சத்தில் அம்பலமாகனும்

கனவுக் காணக் கதவுகள்


அடைப்பதில்லைக்
கண்டவரெல்லாம்
எளிமையாய் அடைந்ததில்லை
காவேரிப் புயலில் நிதானத்தை
நினைக்கக்கூடாதுக் கொம்பேறி
தேனெடுக்க அவசரத்தை
அழைக்கக்கூடாது.
8. அடுப்பங்கரை பொன்னுத்தாயி

விரகு கட்டையின் சங்கமம்


அழகு நெற்றியில் குங்குமம்
மண்பானையின் அஸ்தமம்
புகை பூ மலரும் குடிசை கூண்டின்
புழுக்க அறையிலே

கருஞ் சாணி மெழுக


சிறு தேனி புழக சிற்றெரும்பின்
சாரங்கள் ஜன்னலோரத்தில்
பசும்பாலை குசும்பாலேக்
குடிக்க பூனை
புகுந்தது மன்னன் வேடத்தில்

ஓடையோரம் தேடி பிடித்த


கெண்டங்கெளுத்தி மீ னை ஆஞ்சி
காட்டு கரம்பில் ஓடிப் பிடித்த
நாட்டுக்கோழியை நறுக்கி
கொதிக்க கொதிக்க கிளறி
இறக்கிய குழம்பின் வாசம்
மறுநாள் மீ தி சட்டியில் பேசும்

கருமை தூவல் முகத்தில் புகையை


சுவாசித்த சுகத்தில் புன்முறுவல்
அகத்தில் கரும்பொன் வெளிச்சம்
உலை கொதிக்கிறது
அரிசி இட்டாயா
அடுப்பங்கரை பொன்னுத்தாயி!
9. கொலுசுப் பூக்கள்

ஜதிச் சொல்லும் முத்துமணி


வழி எங்கும் தங்கமணி
குழவியின் தொட்டிலை
ஆட்டிவிட்டு
அங்கத்தில் தங்கும்
வெள்ளைத் தங்கம்

காற்றிலேப் பிறப்பது இசையானால்


நீயும் ஓர் இசைக்கருவி
நீரையே மூழ்கடிப்பது
இசையானால் நீயும் ஓர்
இசையருவி- இதை
இணைய சமூகத்திற்குத் தெருவி

உலோகப் பூக்கள் உன்னில் பூக்கும்


மதி நிலவும் பூப்பரிக்க ஏங்கும்
வழியிலேத் துள்ளிக் குதித்து
செல்கையில் விழியை அள்ளி
அணைத்துப் போகிறாய் முத்தம்
வைத்தக் குட்டி வானம்.
10. நிலாச்சோறு

மின்மினி வெளிச்சம் காட்டும்


வேளையில் கண்மணி குளிக்கும்
வண்ணச் சோலையில்
ஆற்றில் நீந்தி மனதை ஏந்தி
எட்டா வானில் சிட்டாய்
பறக்கும் நிலா

ஆய்ந்து ஓய்ந்த மாலையில்


கழனிக் காட்டு
சகதியில் உழவனாய்
மண்ணோடு உறவாடி ஓடிவருவான்
வட்டிற்குச்
ீ சுகம் தேடி

மகளுக்கு ஒரு முத்தம் மகனுக்கு


ஒரு முத்தமென
பிரித்துக் கொடுத்துவிட்டு
களைப்புக்கு மருந்திட்டுக் காற்றாட
அமருவான் சொர்க்கத்
திண்ணையில்
வயிற்றுப்பசி அழைக்கும்
அமிர்தப் பானையில்

மண் சட்டிக் கடலானதைப் போல


ஒரு சட்டியில் சோறோடு
குழம்பைக் குழைத்து
உருண்டையாக
கையில் கொடுக்கையில்
உலகத்தையேக் கையில்
வைத்ததைப் போல் சந்தோசம்

நீர் குடுவைக்குள் விழுந்துக்


கிடக்கும் மதியழகனைப்
பரிமாறவிட்டு பசியாறுவோம்
அக்கம்பக்க உறவோடு
உரையாடிவிட்டு.
11. படித்த விவசாயி

பரீட்சைகள் பலவிதம் நோக்கமோ


ஒரு விதம் எழுதினால் கிடைக்குமா
என்ற உயிர் வதம்; கிடைத்தது
ஒரு வேலை முடிந்தது
மண் வாசச் சாலை

பெயருக்குப் பின்னால் எழுத்துக்கள்


காகிதம் தந்தால் பருக்கைகள்
பிறந்தோமே விவசாய வேடத்தில்
மறந்தோமே மண்ணை
விலைப் பேசும் வேகத்தில்
இல்லா மக்கள் காலூன்றும்
கழனியில் இந்த மக்கள்
கை நுழைக்கும் பானையில்
பல்லாண்டுப் படிக்கும் பண்டிதர்கள்
செவிசாய்க்க வேண்டும் செய்தி
அறிவுகள் பெருக்குன ீர்கள்
பதவிகள் அடிக்கின ீர்கள்
எல்லாம் சரி
அகப்பை நிரப்ப என்ன வழி

எல்லாம் நிழலறையை
விரும்பினால் யார்தான்
மண் கறையை ஏற்பது?
இன்றே இயற்ற வேண்டிய சாசனம்
படித்தால் பதவி மட்டும் போதாது
மண் புழுதியும் வேண்டும்.
12. தெருக்கூத்து

பண்டைக்காலப் பாட்டன் பூட்டன்


வகுத்த வித்தையை
வதியில்
ீ விட்டான் மூன்றாம்
பிரிவை
உயிராய் பெற்றான்
பொழுதுபோக்கை வியக்கவிட்டான்

கோமணம் முதல் ரவிக்கை வரை


ஓடவிட்டான் ஒய்யாரமாய் நிற்கும்
கட்டை மேடைக்கு தோல் நரம்பின்
இசை முழக்கம் காட்சியாளனின்
வியப்போசை ஒலிக்கும்
கால் சலங்கை வேல் முழங்கை
ஏந்தி நிற்கும் காட்சி ஊர்க்காவல்
வேங்கை சொல்லும் சாட்சி
கட்டைக் கூத்தைக் காணோம்
பெட்டிக் காட்சி வேணுமென்ற
தலைமுறை இருக்கையில்
இதிகாசம் எழாது இம்சை
திரையிலேப் பழையதும்
பதுங்காது
ஆதவன் அடங்கவில்லை.
13. அலைகள் ஓய்வதில்லை

சூரியன் சாயும் மாலை


சலனத்தைத் துளைக்கும் வேளை
லேசாகத் தென்றலடிக்கிறது
இதயத்தில் ஈரம்; சிறியப் பசி
சிந்தித்த வினாவிற்குப் பாதை
ஓரத்தில் பதிலுணவு; முதுமையும்
வாலிபத்தை நோக்கி பயணிக்கும்
நேரமிது; மணலிலேக் கால்
பதித்தால் பல வகையான
முத்தங்கள் பாதத்திற்கு
கன்னிக் களஞ்சியம் காற்றோடு
விளையாடிக் கைகோர்த்த
கரையோரம் முத்திற்கு
முத்தமிட்ட
அலைகள் சல்லாபம்
போதவில்லை
திங்களும் போகவில்லையென்று
காதைக் கடிக்கிறது
கிசுகிசுவென்று.
14. மேனியின் ரகசியம்

தாமரை இதழின் கூடலும்


மூங்கில் துளையின் பாடலும்
இணைந்த ரகசியச் சங்கதி
உன் இடை!

வானம் நைந்தச் சிலையாக


கட்டியணைக்கும் மஞ்சத்தை
திருநுதல் திருடுகிறது
வெளிச்சத்தை
அவ் வெளிச்சத்தில்
மேற்கிந்திய நடனம்
அபூர்வப் புருவங்கள்

ரதிச் சுவைத்தத் தேன்கனி


உருண்டோடுது உதட்டோரம்
அதைக் கண்டக் காமனின் அம்பு
அசைந்தாடுதுக் காதோரம்

மங்கைக்கு அழகுத் தீனிப் போட்ட


ஜீவன் யார் அழகை
கொள்ளைக் கொள்ளும்
கன்னிப் பூவே விடைச் சொல்வாயா
வெள்ளி வானம் மினுக்கும் வரை.
15. வேட்டிக் கட்டு

தாத்தன் தந்தச் சட்டம்


இடுப்பிற்கு வந்தது வட்டம்
தமிழ் மண்ணில் பிறந்தது
அந்நியக் கண்ணும் பணிந்தது

மண் பிடித்த அழுக்கு


வானுக்குக் கிடைத்தக் கிழக்கு
கையைப் பற்றி உடலைச் சுற்றி
விடலைப் பருவத்தைக் கடலாய்
மாற்றினாய் பின்னாலே
பொம்மைகள் ஆட்டம் தந்தாயே
இளந்தமிழ் தோட்டம் கம்பத்தில்
ஏறினாள் சமாதானம்; பட்டு
பிம்பமாய் மாறினால்
கன்னியாதானம் முழங்கால் வரை
தோன்றினால் பணிவு
இடைக்காலோடு
மடங்கினாள் துணிவு

முழம் போட்டுப் பிரித்து வைத்தாலும்


நாற்காலிக்கு வந்தவுடன்
வந்து விடுகிறாய் மன்னவர்களும்
பிடித்தார்கள் வாக்கு
சொன்னவர்களும் பிடித்தார்கள்
திரை வேடனும் தரித்தான்
விதை மனிதனும் மதித்தான்
உன்னை; எத்தனைப் பரிமாணம்
நிச்சயம் கறைப் படிந்திருக்கும்
உரைக் கிணற்றில் விழுந்து
எழுந்தாலும் தீரப்போவதில்லை
ஆள் பார்த்து அடையாளம் தந்தால்
தரணியும் சுற்றிக்கொள்ளும்
உன்னை

ஒரு காலத்தில் வேட்டியைத் தவிர


வேறு வழியில்லை வேற்று
உடையை உடுத்திப் பார்த்ததில்
பிழை இல்லை நடக்கும் காலத்தில்
வேட்டியோடு நடந்தால் பழையதும்
திரும்பிவிடும் அது புதிய
வழக்கமாய் பதிந்துவிடும்
வெண்மைப் புரட்சி வேண்டும்
வேறுபாடின்றி.
16. காலை எதிர்பார்த்த வேளை

பரவியிலே அலையடிக்க
ஆதவன் எழுகிறான் முன் சந்தியில்
பரையிலேக் கைமுட்டியதைப்போல்
சேவலின் துதிப்பாடல்

ஏர் கலப்பைத் தோளிலே


நீற்றுச் சோறுக் கைதூக்கிலே
ஏந்தி செல்கையில்
வாழ்த்துப் பாடிய வாய்பேசும் காற்று
சுறுசுறுப்பைச் சொல்லிக்காட்டும்
நீரூற்று

புத்துணர்ச்சிப் பூ
காலையில் கமழ்ந்திட
தானாகப் பூக்கும் இதழில் சிரிப்பு
வழக்கமானக் கடமைகள்
கைகோர்க்கும் உன்னுடன்
மனம் புலம்பெயரும் வானகத்தில்
வட்டமிடும் கவிக் காகிதம்
கண்ணுடன்.
17. பெண் எனும் பூ

மேட்டுக் கரையில் மேவிய


பூங்காற்று கூட்டுக் கிளையில்
அழகிய இதழ் கீ ற்றுப் பசுமை
அன்னைத் தீட்டிய சித்திரம்
இளங்கண்ணைத்
தூண்டிய மந்திரம்

முகில்களுக்குக் கண் முளைத்தது


நீ குளிப்பதைக் கண்டுகளிக்க
மங்கையின் மானம் காக்கும்
ஆயுதம் மனதில் தொட்டக் கையை
இடரும் கூர் முள்

பகலவன் வருகிறான் உன்னை


காண மோகத்தில் நீட்டினாய்
இதழைப் பூ வடிவில் சாமத்தில்
காட்டினாய் மொட்டு
வண்ணங்களை ஏக்கத்தில்
வாட்டினாய் கன்னங்குழி
கிண்ணங்களை

தேனின் சுவை தேன ீக்கள்


பாடும் வரை மேனிப் பூவின் மனம்
மணாளனை நாடும் வரை.
18.செல்ஃபி

நவன
ீ விஞ்ஞானக் குழந்தை
மனிதன் மன்றாடும் தன் கை
நினைக்கும் போது எடுத்தப் புகை
இறுதிப் படமானது எடுக்கும்போது
பதிந்தப் புகை மாதிரிப் படமானது
இரண்டுமே இன்று வரை
உருப்படவில்லை

ஒளிவட்டம் தலைக்குப்
பின்னாலல்லத் திரைக்கு
முன்னால் எடுப்பவன் முகம்
மட்டுமின்றி கூட இருப்பவன்
முகமும் பிடித்துத் தந்துவிடுகிறாய்
போகும் இடமெங்கும் இயற்கை
வரும்போதுக் கூடக் கூட்டி
வருகிறாய்
ஒரு விரல் அசைவில்

வாய் கோனிக்கும் கண்கள்


மேல் நிற்கும் இருந்த முகம்
இருக்காது இருக்கின்ற முகம்
தேவைப்படாது உச்சி மலையில்
வச்சி எடுத்தவனும் பாயும் புயலில்
தலைசாய்த்து எடுத்தவனும்
அவன் படம் எடுக்கவில்லை
படம் அவனை எடுத்துவிட்டது
கவனம் தேவை செல்ஃபியில்
உதாரணமாகும்
உன்னைத் தேடலில்.
19. மிதிவண்டி பயணம்

பாதையை மிதிக்கும் இரும்புக்கூடு


சேர்ந்தே வசிக்கும் வளர்ப்புக்காடு
இரு கையில் பிடிபட்டப் பிள்ளை
ஒருகணமும் பிரிந்ததே இல்லை
குழந்தைக்குத் தாய்
பாலூட்டுவாள்
எஃகுக் குழந்தைக்கு
காற்று ஏற்றுவோம் இரண்டுமே
ஒன்றுதான் வார இறுதி
எண்ணைக்குளியல்
இரு காலோருக்கு மட்டுமல்ல
இரு சக்கரத்தாருக்கும் கூட
மேலே இருப்பவன் கீ ழே
இறங்குவதும் கீ ழே இருப்பவன்
மேலே ஏறுவதும் சமானத்தில்
சத்தமின்றி இருப்பதும் மிதியடி
சொல்லும் தத்துவம்

பள்ளியர்களின் பயணப் பட்டியல்


எளியவர்களின் விமானச் சுற்றுலா
தந்திக் காரனுக்கு வேலை தந்தவன்
முந்திப் போறவனுக்கு வேகம்
தந்தவன் உதைத்தக்
காலுக்கு வந்தது
முறுக்கு வண்டி அது மிதிவண்டிக்கு
சதி வண்டி எடுத்த எடுப்புக்கு
உருண்டதுச் சாலையில்
புகை சேருவதற்கு முன்னாள்
மூலையில் சிறைப் பூட்டித் தள்ளி
உடற்பயிற்சிக்கு விடுவிப்பது
இந்நாள்.
20. சிந்தும் சிந்தும்

எத்திசையும் எரிகிறது வறண்ட


நிலம் அத்திசையும் தெரிகிறது
கானல் நீர் குளம் விவசாயியின்
விடுபடா உழைப்பில் வியர்வையும்
கண்ணரும்
ீ சிந்தும் அதுகூட
போதவில்லை விளைச்சலுக்கு

ஆவினங்கள் அழுகிறதுக் கண்ணர்ீ


வரவில்லைத் தாகத்திற்கு
தண்ண ீரும் வரவில்லை
ஐந்தில் ஒரு பூதம்
கிளம்பியது வளங்களை
வாரி முழுங்க

மண் வாசம் வசுமாயென



எதிர்பார்த்தேப் பலச் சுவாசங்கள்
அடங்கியது அக்னிப் பரிட்சை
நடக்கிறது இதில் தோல்வியுற்ற
இயற்கைப் பட்டுப்போன மரத்தில்
வட்டமானக் கூடு
விட்டுப் போன சிறகு

பருக்கை இல்லாமல் வெறும்


கையேந்தாமல் கிடக்கும் பலகை
வறட்சியின் வளர்ச்சியைக் கண்டு
உயிர்களெல்லாம் உதிர்ந்து
கிடப்பதைக் கண்டால் சிந்து நதியும்
துளிச் சிந்தும் கண்ண ீரை.
21. நடைப்பயிற்சி

தற்காலிக நாடோடி காலை


வேளையில் நடைபயிற்சியெனும்
பெயரில் பறக்கும் வாகனத்திற்கு
திரை போட்டு மூடி வைப்பர்
வளம் வரும் பொழுது
சூரியன் எட்டிப் பார்ப்பர்
பாவம் இவர்கள் விவரம்
பத்தாதவர்கள் களப்பையோடு
ஓடியவனுக்கு ஒன்றும்
அண்டவில்லை நோயும்
நொறுங்கிய பேராசையும்
உட்கார நேரமில்லை
தொப்பையோடு ஓடும் உங்களுக்கு
தொற்றியது பேர் தெரியா நோயும்
வலியறியா ஊனும் உட்கார்ந்த
நேரம் போகவில்லை
பிடித்துத் தள்ளியும்

அடியெடுத்து அசைந்துப் போவது


தனியாக அல்ல கொழுத்தவர்களின்
அணியோடு செல்லப்
பிராணிகளையும் உடன் இழுப்பர்
நீங்கள் கெடுவது மட்டுமின்றி
அவைகளையும் சேர்த்து
கெடுக்கிறீர்கள் வாயிருந்திருந்தால்
மூன்று நாட்களுக்கு மூச்சுவிடாமல்
திட்டி தீர்த்திருக்கும் உங்களை
வியர்வைக் கசிவதை உழைப்பில்
கண்டனர் உழைத்துத் தேய்ந்த
அனுபவ மேதைகள் வியர்வையை
அதிசயமாகக் காண்பதுப் படித்து
பழகும் முட்டாள் பேதைகள்
கடித்து முழுங்கும் வளையதல
வேலைகளோடு இருக்கும்
வேலையை இடுப்பு வணங்கி
செய்திருந்தால் பிணித் துரத்த
போவதில்லை மூச்சு வாங்க
ஓடத் தேவையில்லை.
22. புகை வேண்டாம்

விரல் இடுக்கில் வில்லங்கம்


துண்டுச் சுருளில் தீப்பந்தம்
உள் உதட்டில் கருங்கோடு
ஒழுக்கம் கிழிந்த நாளேடு
மூக்கின் பிடியில் புகைந்தது
இறுதிப் பயணத்திற்கு அழைத்தது
உறக்கத்திற்கு தூக்கமில்லை
பழகிப் பேச யோகிதையில்லை
வயசுக்கு வைக்கும் மதிப்பில்லை
நடுக்கத்தில் நாள் குறிப்பது
கவனம் திரும்பினால் உவகை
உன்னுள் ஊர்ந்துச் செல்லும்
பிடித்ததில் புகை வந்தது
தடுத்ததில் சுகம் வந்தது
நிலைத்திருக்கும் வழியும் வந்தது
நீண்ட ஆயுளுக்குத் தீண்ட
தேவையில்லைப் புகையை.
23. ரோஜா வா!

கவிதைகள் பல யோசித்தேன்
எண்ணற்ற அழகி அவளை
நேசித்தேன் ரசனைக்கு உதாரணம்
ரதியெல்லாம் அவள் முன்
சாதாரணம்
தேனிலே மலர்ந்தப் புன்னகை
புஷ்பம் நீ பறிக்க ஏங்கினாள் முள்
இடரும் ரோஜாவா

கம்பன் கவிதைகளை
காட்சிப்படுத்தும் காலமிது
காட்சியில் நாயகன் நான் நாயகி நீ
ஆட்சியிலே அறம் வேண்டும்
காட்சியிலேக் கதை வேண்டும்
மனசாட்சியே உயிர் திறக்க
என் ரோஜா வா!
24. மறப்பேன் உன்னை

இமைகள் இசைக்கிறது அன்பை


வழியில் சொல்லச் சுமைகள்
குறைகிறது உன் அன்பு
விழியை வெல்ல வாழ்க்கையில்
இரு பக்கம் ஒரு பக்கம்
தாயின் தாலாட்டு மறுபக்கம்
தாரத்தின் பண்பாடு ஒரு பக்கம்
யுகமுள்ள வரை மறுபக்கம்
உயிருள்ள வரை தேகத்தில்
சமபங்கு மோகத்தில் சரி பங்கு

உன்னை நினைத்தால் நீரிலே


நிலாக் கூட்டம் மறந்தால் தேரிலே
அச்சாணியாட்டம் நிலவோடு
நீந்தி மகிழ நொடிப்பொழுதும்
மறப்பேன் உன்னைக் கோடி முறை.
25. மேய்ச்சலில் கவிப் பாய்ச்சல்

கொட்டகைக் கூடாரத்தில் ஆரம்பம்


முன்னங்கை ரேகையில்
கையிர் பிம்பம் ஒத்தப் பாதையை
பற்றி போகிறான் தாம்புக்
கயிற்றுக் சுற்றி போகிறான்

கம்பங் கொள்ளையில
மேச்சிப் புடாத அரைடவுசுரு
அண்ணாமல ஜோப்பிக் குழியில்
அவுச்சி வெச்ச வேர்கடல
மாயாண்டித் தோட்டத்து
பிஞ்சு சோளம் வேணும்
வரப்பத் தாண்டி வயலுக்குள்
நானும்

ஆத்துப்பக்கம் ஆடு மாடுக்கு


தண்ணிக் காட்டலாம் அந்த நேரம்
ஆடிப்பாடிக் குளியல் போடலாம்
மரத்துப் பக்கம் நிழலுக் கூட
அசந்துக் கெடக்குது விருந்து
வைக்க மையிலுக் கூட
அசைந்து ஆடுது

கொக்குப் புறாவும் திரும்புது


மேற்கையில மசங்குது அம்மாவும்
பால் கறக்கணும் நானும்
கோலி ஆடனும் திரும்புவோம
நான்குப் பாத நண்பர்களே.
26. அதிகாலை தரிசனம்

நீ வாசத் தெளிக்க
நான் எழுந்ததேன் எதிர் வட்டுல

உன் வாசம் முழுக்க தூங்கவிடல
தலைமாட்டுல தெருவெல்லாம்
ஈரப் புன்னகை விடி வெள்ளி
தூறும் பொன்னகைக்
குடிசை மேலே
சேவைக் கொறிக்கும்
குடுவ முல்லை தேகம் வெடிக்கும்
முந்தானைப் பக்கம் பூப்போட்ட
நூலு
புடவை இந்த மாமனை மணக்க
எப்போக் கூரைப் புடவை

பச்சைத் துண்டுக் கூந்தல் மேலே


ஓவியமாகுது கன்னம் ரெண்டும்
செங்கோவைப் போல சிவப்பாகுது
வெள்ளை மாவு மூ விரலை விட்டு
பறக்க அல்லிப்பூவு சித்திரமாய்
சிதறிக் கெடக்க பூவே
பூகோலத்தைக்
கண்டக் கண்ணைத்
தாவணி இழுக்க
கையில் உள்ளச் சாயத்தை
பூசி மகிழ வருவாயா
என் விடியலின் வியப்பே.
27. சன்னலோரக் கவிதை

தெற்கிலே ஏரு ஓட்ட


சைக்கிள ஒதச்சி ஓட்ட
எதுத்தாப்புல எதார்த்தப் பார்வை
கம்பித் தடுப்புலக் கவர்ந்த பார்வை
புத்தகத்தில் புதைந்த அவளை
சன்னலுக்குள் இருப்பதுக் கவலை

காந்தப்பூ வெளியே வந்தால்


நெஞ்சுக்குச் சங்கீ தம் கிடைக்கும்
நிலவை மேகம் மறைக்கலாம்
வெளியே வரும் வெளிச்சம் தரும்
விதையை மண் அணைக்கலாம்
மேலே வரும் விருட்சம் தரும்
நீ வெளியே வருவது எப்போது
தொடாமல் பேசினால் தப்பாகாது
உள்ளுக்குள் ஆயிரம் ஆசைகள்
ஒவ்வொன்றும் இசைக்கின்ற
ஓசைகள் வெளிவந்தால்
செயலுக்குப் புரியும் வாழ்க்கையின்
தூரமும் தெரியும் முத்தத்தால்
நாக்கிற்குச் சிறை
உன் வெட்கத்தால்
உயிருக்குச் சிறை
சன்னலுக்குப் பின்னால்.
28. கூந்தல் பிரவேசம்

இழை நீண்ட இடுப்பளவு


மலர் கண்டப் புதுக் கனவு
முதுகிற்குப் பின்னால் உறக்கம்
மங்கைக்கு முன்னாள் சிரிக்கும்
ஒருவகை ஓவிய மயிரிழை

உதிர்ந்துக் காற்றில் மிதக்கையில்


ஸ்வரங்கள் கேட்கும் மனதில்
எண்ணிக்கையில் நட்சத்திரம்
மாதிரி; காலத்தில் இலையுதிர்
மாதிரி; பன்ன ீரிலோத்
தண்ண ீரிலோ
மூழ்கினால் சிந்தும் துளி
தீர்த்தமாகும் பிறவியே
உன்னென உள்ளவனுக்கு
குழந்தையின் கையில் கிழிந்த
பொம்மை அவளுக்கு வாய் மேல்
செய்த மீ சை அதை நிலவுக்கும்
வைக்கச் சின்ன ஆசை
செம்பருத்திச் சீக்காய் கண்ட
கிழவிக் கூடக் கருங்கூந்தலை
குவித்துக் கட்டுது நுரைத் தள்ளும்
பசையைப் போட்ட அழகிக் கூட
சாயம் பூசுது ஆணியில் கிழட்டி
மாட்டும் அவலநிலையில் கூந்தல்
சீப்போடு சலசலப்பு முரண்பாடல்ல
பண்பாடு வரும் காலங்களில்
முடியின் நிறம் கருப்பென்று
ஆராய்ச்சியைத் தொடங்குவார்கள்
இயற்கையின் நிழலை நவனம்

நெருங்கும் போது.
29. ராணுவம் போற்றுவோம்

தலைமைப் போற்றும் வலிமை


சேவையாற்றும் இளமை
பற்றுக்கொண்டப் பாதமிது
உற்று நோக்கும் தேசமிது
விரும்பும் உறவை விட்டுச் சென்று
நெருங்கும் பகையை விரட்டி
தள்ளும் தாய் நாட்டு மன்னர்கள்

பனி வெயில் புயல் மழை உங்கள்


நண்பர்கள் உணவுப் பசி
உறக்கக் கனவு உங்கள் எதிரிகள்
மலைத் தொடர்களில் மன்றாடும்
போதும் துன்ப இடர்களைக்
கையாளும் போதும் மனதில் பாடும்
மந்திரம் வந்தே மாதரம் சுவாசம்
சொல்வது வெற்றி இந்தியா
பொங்கல் ரமலான் கிறிஸ்துமஸ்
கொண்டாடுவர்கள்
ீ உறவோடு
உங்கள் உறவோடு அல்ல
நம் உறவோடு விடுதலைத்
தேசத்தை கலையா
வேசமாக்குவது உங்கள் கையில்
துணிந்தவன் கண்களுக்கு
ஆயுதமும் அன்பு முத்தங்களாகும்
உங்கள் வானவில்லில் மூன்று
வண்ணங்கள் அணையாமல்
வைக்கத் துணையாக இருப்பது
ஈடு இணையில்லா தேசப்பற்று
தேசமேத் தலை வணங்கும்
உங்கள் சேவையில்.
30. காதல் பசுமை

பச்சைக் காடு
சிறுப் புல் மேடு
தேன ீக் கூடு
ஒருகல் தேடு
சுனைத் தண்ணி நாக்கின்
வினைப்பயன்
உனையெண்ணி சுற்றத்தில்
பச்சை நலன்

அவரை இலை ரேகைச் சொல்லும்


நீ இருக்கும் இடத்தை
சங்குப்பூ கூவிக் கொல்லும்
நீ பழகும் விதத்தை நெருஞ்சி முள்
கோபம் சமயத்தில் இம்சையான
இன்பம் தினப் பொழுதும் தித்திக்க
கிடைக்கும் சருக்கத்தில் விழும்
என்னை அவள் நெருக்கத்தில்
உருட்டி விடட்டும் ஆனந்தப்
பயிராய்
துளிர் விடுவேன்

மணத்தக்காளிக் கீ ரையே
நெஞ்சைக் குணப்படுத்தி போறியே
கண்மாய் சேற்று நாரையே
சிறகைப் பறித்துப் பறக்க சொல்லும்
பாவியே மண்ணில் விழுந்த
விதை ஒன்று வனமானது
இயற்கையின் மனமானது
உன்னில் விழுந்த நான் என்று
நலமாவது நானிலத்தை உழுதாவது
உணவில் பச்சை முக்கியம்
நினைவில் வேண்டும் வைத்தியம்
இரு ஐம்பதைத் தாண்டுவது
சத்தியம்.
31.எங்க ராசாப் போன

கொடியில் மலர்ந்த இனிமையே


மடியில் வளர்ந்தப் புதுமையே
நுறைத் தெளிந்த நீர் ஆவியாகுது
அவசரத்தில் குளிப்பாட்ட
கூட இல்லையே
தென்னம்பிள்ளை தெருவோரம்
எறும்பு வரிசை ஊருது
ஊறப்போட்டக் குண்டு நெல்லு
மொளச்சிக் கிளம்புதய்யா
விதைப் போடக் கூட இல்லையே
எங்க ராசாப் போன

உருகுப் பனி கூரையிலே


விழுந்து ஒழுகுது
மெழுகுதிரி ஒளிராமக் குளிர்ந்து
அடங்குது போர்வை போர்த்தி
கண்ணசரக் கூட இல்லையே
சோளக் கஞ்சிக் கொதிக்காம
ஆறி அடங்குது பிஞ்சி மிளகா
முத்தாம வெடித்து செதறுது
பெத்த வயிறு காயுதய்யா
ஒருவா சோறூட்ட கூட இல்லையே
எங்க ராசாப் போன

பொல்லாதக் காட்சியெல்லாம் வாய்


வைத்து பேசுதய்யா
தாய் பட்டக் கண்ண ீரை காணாமல்
கரைக்க நீ கூட இல்லையே
பெரியவங்கப் படிச்ச
படிப்பெல்லாம்
நீ கற்றுக் கரையேற
கல்நெஞ்சம் தவிக்குதய்யா
யார் பெற்றப் பிள்ளை இவன்
பார் போற்றும் பிள்ளை இவன்
ஊர் சொல்லக் கேட்கணுமய்யா
நான் காண கூட இல்லையே
எங்க ராசாப் போனே.
32. கடிகாரம்

எண் எழுதும் உன்னைப்பற்றி


கண் தொடரும் தலைசுற்றி
உன்னுடைய நோக்கம் தூரமில்லை
இயக்கத்தின் தாக்கம் பாரமில்லை
முள் இல்லாப் பாதையில்
பயணிக்கும் காலத்திற்காக
முள்ளோடு பயணிக்கும்
சுவர் சுற்றும் ஞாலம்
முன்னேறி நகரும் அனைத்தும்
வட்டத்தில் சிக்கியது அந்த வட்டம்
நீ இட்டது என்னால் எழுந்ததோ
அந்நாளிலிருந்து

விதிக்கப்பட்ட நேரம் செய்யும்


செயலுக்காகவும் சிந்தும்
வியர்வைக்காகவும் வாழும்
மனிதனிடம் நீதி இல்லை
போகும் நேரத்திடம் பொறுமை
இல்லை கையில் கட்டி வருவது
பொன்னை அள்ளுவதற்காக
இல்லை என்னை வெல்வதற்காக
சிகரம் தொட்டவர்க்கும்
வரலாற்றில் வந்தவர்க்கும்
சரியான சந்திப்பு வைத்த அடி
தவறியவர்க்கும் உழைத்தும்
பலன் பார்க்காதவர்க்கும்
அடக்க அனுபவ காத்திருப்பு
உன்னனைப் பொன்னோடு
பொருத்தியது தவறு
மூச்சுக் காற்றோடு
முடிந்திருக்கனும்
அப்போதாவது சரியாக
பயன்படுத்துகீ ரார்களா பார்ப்போம்.
33. தினக் காட்டி

இரவும் பகலும் உன்னுடையது


புவியின் அசலும் உன்னுடையது
உருவ வணக்கம் உதயமாகிறது
இருக்கு என்பவனுக்கு வழிபாட்டு
அறையிலும் மறுப்பு
சொல்பவனுக்கு
நாள் காட்டும் வரையிலும்
நல்லதொரு நகர்வு
அடுத்தப் பிறப்பிற்கு

என்னக் கிழித்துவிட்டீர்களென்று
சொல்பவர் கூட தினமும் கிழிப்பர்
உன்னை வளரும் நிலவை
காகிதத்தில் காட்டி விடுவாய் மாதம்
ஒருமுறை வருடந்தோரும்
புதுப்பிப்பது வழக்கம்தான்
உறுதிமொழியை மெய்ப்பிப்பது
கடினம்தான் பக்கம் பக்கமாய்
அச்சிட்ட எண்ணை பொழுதும்
பின்தொடர பிடித்து வைத்தாய்
என்னை

கட்டம் கட்டிக் கணிக்கும் கதையை


சத்தமின்றி சிந்தனையில்
சொல்லுவாய் பிறந்துவிட்டோம்
காலம் நம்மை அழைத்து
செல்லுமென்று சுபம் செய்ய
செவிக்கு வருவாய் பஞ்சாங்கம்
எனும் பெயரில் நலம் பெற
நாள் பார்த்து உழைத்தால்
ராஜாங்கம் உன்னருகில் சாதனை
சாமானியர்களின் உதயமும்
மறைவும் வரித் தொடர்களில்
வரைந்திருப்பாய் வெற்றிக் கண்டு
புத்திச் சொல்பவராக.
34.களவி ஒழுக்கம்

நட்ட நடு ராத்திரியில்


ஏரிக் காவா இறக்கத்தில்
ஊசிப் புள்ளப் பிச்சிப் போடும்
பிடிவாத மனசு ;பிடித்துத் தழுவ
நடையைக் கட்டும் நாட்டு
மலைக்காரன் மலை நரி
ஊளையிடும் காட்டுப்புலி சீறிவரும்
கால் வைத்த கல்லின் விரிசல்
கண்டுக் காணாமல் போகும்
இருட்டுக் கருப்புக் கண்ணில் பட
கொடுக்குப் பூச்சிச் சத்தம் வர
நெஞ்சம் வழிப் போகும் கண்ண ீரில்
நனையும் நினைவைத் தேடி

பயணம் முடிந்துப் பெண்ணைக்


காணும் வார்த்தையைத் தள்ளி
அழுகை முந்தும் கட்டியணைத்து
கவலைக் சொல்லும் சாமகாலம்
சத்தமில்லை நீள வானம் நிலவும்
இல்லை நீரில் மூழ்கி நித்திரை
கொள்ளும் நீந்தும் அனைத்தும்
சாட்சி சித்திரைத் திங்களில்
கைப்பிடித்துக் கனவனாக
நான் வருவேன் வாழ்வதற்கு
பகல் வந்து இரவோடுப் போகும்
காதல் தந்த வலியோடு வாழும்
நம் மனதிற்கு மறைவு பொழுதுகள்
நிறைவாக இருக்கும் ஊரறிய
மணநாள் காணும் வரை.
35. அறுவடை

சோகைப் பழுத்துடுச்சி
தண்டுப் பெருத்துடுச்சி
மும்மாதம் முடிஞ்சிடுச்சி
அறுக்கச் சொல்லிடுச்சு
கடன் வாங்கி உரம் போட்டு
கை மோதிரம் வச்சிப் போட்டு
மீ ட்டெடுக்க மிகையாகுமா
அறுவடையில் சுமைத் தீருமா
வரப்பை மிஞ்சி கதிர்க் கிளம்ப
நன்றிகடன் சூரிய வழிபாடு
உழவாளி அருவாவுடன் புறப்பாடு
குனிந்த முதுகுடன் பயிரை
துண்டுப் போடு நெற் கட்டை
தூக்கிக் குலவைப் போடு
அது விவசாயத்தில் வாங்கிய
உலகக் கோப்பை

கங்காணி நிலத்தில் கட்டடிக்க


அடிவயிறு மூச்சி இழுத்துப் பிடிக்க
நெல்லுமணி கோபுரங்கள் இடித்து
மூட்டை பிடி மரக்காய் நிரப்ப இரு
கைப்பிடி சொனைப் புடுங்க
உடம்பை சொரி சமைப் போட்டு
வெக்கப் பிரி விவசாயி
விலைப் பேச வேண்டும்
விடுபட்ட விதியை நாம்
எழுத வேண்டும் கடங்கார அரசிடம்
நாயங் கேளுங்கள் உழைத்த
உழைப்புக்கும் கூலிக் கேளுங்கள்.
36. காற்று

வசியது
ீ அனைத்தும் அசைகிறது
சத்தம் கேட்கிறதுப் பூவரச இலை
எச்சம் விழுகிறது ஆலங்கிளை
ஆடியின் அவசர நிலை
உள்ளேச் செல்வது வெளியே
வருவதில்லை வெளியே வருவது
உள்ளேச் செல்வதில்லை
கொடுக்கல்-வாங்கலில் நுரையீரல்
நுட்பம் மனப் பரிவர்த்தனை
நடக்கிறது மல்லிகை வங்கியில்
வரையறுக்காதவை உருவத்தை
மறைக்கும் கலை இசை விரும்பி
எடுத்துச்சென்று உயிர்களின்
காதில் ஊற்றும் உழவனின்
தூற்றலில் துணைபோவது
இணையாகாது ஐந்தில் சிறந்தவை
தூசிப் பூசிப் பிறந்தவை

சூறாவளியின் சுறுசுறுப்பு சுற்றும்


பூமியின் பரிதவிப்புக் காற்றினால்
சிட்டுக்குருவிக்குக் கவலை
ஜீ கம்பங்களின் நடுகை
பனைஓலை விசிறி
தலையிலிருந்துக் கால் வரை
போயிட்டு வரவில்லை
சாதாரணக் காற்று ஏழ்மையின்
எல்லைக் குளிர்சாதனக் காற்று
ஆரோக்கியமில்லை நெகிழி
புகையால் ஆகாய மண்டலத்தில்
ஆழப் பொந்துகள்
வாகன புகையால்
நூதனக் கொலையாம்
ஆய்வறிக்கை தகவல்
பச்சைக் காட்சியை
சொச்சம் வையுங்கள் சுவாசிக்கும்
காற்றைச் சுத்தம் செய்யுங்கள்
ஏனெனில் மாசுபாடு ஆக்சிஜன்
தட்டுப்பாடு வரும் காலங்களில்
ஒருநாள் சுவாசிக்க
ஒரு கோடி முதலீடு.
37. பட்டம்

காகிதக் கட்டம் ஆனதுப் பட்டம்


ஆகாயம் போனது மேகத்தில்
மச்சம்; எதிர்காற்றில் ஏவி
விட வேண்டும் நூலைப் பிடித்து
ஏற்றிவிட வேண்டும் வாலாட்ட
திரைக் காற்றும் திரும்பும்
உண்மைத் தோழனின் பாசமிகு
கடமைப் போலக் காற்றில் ஆடிய
ஆனந்தத் தாண்டவம் பச்சிகள்
பார்க்க அதிசயம் தோன்றனும்
நான்குமுனைப் பொழுதுபோக்கு
சேனை உச்சி மரத்தில்
உரசக் கூடாது ஆணை

வண்ண ஓவியம் விடுவதற்கு முன்


விசாலமான இடத்தில்
வரையவேண்டும் தமிழ்பெயர்கள்
தாமதிக்காமல் எழுதவேண்டும்
உன்னைப்போல் உன்னுடன்
பல பேர் கைதூக்கிக் காலை வார
நினைப்பார் சிக்கல் கண்டதும்
நூலறுந்த நிலை வாழ்வில் பார்த்த
பகுதி அலை உயிரை அறுக்கும்
இத்துனூண்டு மாஞ்சா
ஒப்பாரி ஓசை பொழுது சாஞ்சா
தவிர்த்திடுங்கள் இப்பட்டமும்
பல்கலைக்கழகமாகும்.
38. இதயம்

கூடுகட்டி வாழ்க்கை நடத்தி


சூடுத் தணிய சாந்தப்படுத்தி
சதையறையில்
நைந்துக் கிடைக்கும்
பிடியளவு ரத்தக் கடல்
ஈரம் இருக்க வேண்டும்
பாரம் சுமக்க வேண்டும்
வலிகள் தாங்க வேண்டும்
வடுக்கள் எழுத வேண்டும்
இத்தகைய இதய மனிதன்
பேசப்படுவான் சாதனை வரிகளில்
காலத்தைக் கடந்தும் சுவடுகளில்
சுமப்பான் அவன் நினைவுகளை
மிருகங்கள் உறங்கியிருக்கும்
மிகை ஆனந்தம் மிதந்திருக்கும்
எழுப்பி விடாதே அமைதி
விலகியிருக்கும்

அம்பு விட்டவன் அரை பைத்தியம்


விட்ட நேரத்தில் அவளை
புரிந்திருந்தால் இதயமவள்
சம்மதத்தில் முடித்திருப்பாள்
உதைத்தவன் காலைப் பிடித்து
அழுபவன் அப்பாவியாவான்
ஏழ்மை வஞ்சிக்கும் சுருளில்
சிக்கியவன் சிந்தியக் கண்ண ீரை
துடைப்பவன் காணிக்கை இடுவான்
அவனிடம் இதயம் இருக்கும்
மனிதன் உபயோகத்தில் இருக்கும்
இரவோடு இசை மயக்கம் புரியாத
மழலை பாஷைக்கும் இருக்காத
இதயம் கல்லோடு சொன்னாலும்
உள்ளமென்று அழைப்பது
ஆபத்தானது இருக்கின்ற
இதயத்தில் இன்பத்தை ஏற்றுங்கள்
அன்பகங்கள் திறக்கப்படும்
நோய்நொடிகள் முறியடிக்கப்படும்
துடிக்கின்ற துடிப்புகளை
அதிவேகத்தின் அடைமொழி
ஆக்கினால் சட்டென்று
சாய்த்துவிடும் சத்தமில்லாமல்.
39. திரையரங்கம்

மணல் குவித்து இடம்பிடித்து


வெள்ளை வேட்டியில்
விடியாக் கண்கள்
ரேடியோவுக்கு ஜூட் விட்டு
மூன்று தமிழ் ஒரு சேர ஒரு காட்சி
காணொளி பதிவு நவன
ீ அரங்கம்
எட்டா வானை எடுத்து வந்து
வெட்டுப்போட்டுத் திரை அமைத்து
நடித்தப் படத்தைப் படிக்கவைத்து
ரசிகர் மனதைப் பசிக்க வைத்து
கதாப்பாத்திர கூட்டம் பிம்பத்தில்
ஓட்டம் முன்னே இருப்பவன்
குள்ளமாக வேண்டும்
சோளப்பொறி வாயை
அரைத்தாக வேண்டும்
ஜோடியோடு வந்தால் களைகட்டும்
உனக்கொரு ஜோடி இங்கு ஒட்டும்
இரண்டரை மணி நேரம் நீயாக
இருக்காதே ஓடும் காட்சியில்
மறைய நினைக்காதே.
40. அடக்குவதற்கு உகந்தவை

மரியாதை மனிதன் மயங்காத


புகழ் சிரிக்கத் தெரிந்தவன்
கருத்துக் கொடுப்பவன் ஏழாம்
அறிவின் உரிமை இழந்தான்
சிருமணம் வைத்தே சாத்தானின்
சாயலிவன் ஊடுருவும் உள்ளத்தில்
கோபம் கொப்பளிக்கும் வார்த்தை
கொந்தளித்த விசக் கறை
உணர்ச்சியின் உயர்வால்
மனித மதிப்புச் சரிவு அருகருகே
ஆட்கள் முட்டிக் கொள்ளும்
பழுக்காதச் சொற்கள் சத்தம்
தாங்காமல் வெடித்தக் கற்கள்
அடக்கி வைத்தவன் ஞானி ஆவான்
அடக்க நினைப்பவன் மனிதன்
ஆகட்டும் மூக்கிற்கு மேல் கோபம்
முளைக்கும்போது மூன்று முறை
நீண்ட மூச்சு அத்தனையும்
நீர்த்துப்போகும் சாது பிள்ளையாவர்ீ
பாலேடுப் போல்மிதப்பபீர்
ஆறிப்போன மனதில்
ஆரவாரமில்லாமல் குண்டூசி
அமைதி குழவி அழுகைப் போல்

பட்டமரம் காத்திருக்கும்
காலத்திற்காகக் கோடையை காட்டி
பழிதீர்க்கும் பல் கடித்து புல்
கருக்கும் கல்லெறிந்தவன்
கடவுளாவன் குறி வைத்த மரம்
முள் மரமென்றால் வேரறுக்கும்
வேட்டைக்காரனின் கோபம்
நியாயம்தான் நீதி இருக்கு
கோபம் என்பது மேலோட்டமானது
அடுப்பின் அனலை போல்
பொங்கியதும் அடங்கும்
வெறுப்பு என்பது சாகாதது உலவும்
உயிர்களை கறுவறுப்பது
பாசம் இருந்த இடத்தைப் பிடித்து
பாவ கணைகள் நட்டு நாசம்
செய்பவைகள் மழை செய்த
மண் படிகத்தில் செதுக்கி
வையுங்கள் கோபம் கொளுத்த
பொசுங்கி விடாமல்
அடக்கிவிடலாம்
பிராட்லி தத்துவம் குணத்தின்
சிலையாக்குவோம் மனிதனாய்
வாழ முயற்சிப்போம்.
41. தங்கம்

மண்ணோடு மண்ணாய்
கண்ணுறுத்தக் கண்ணாய்
கட்டியடித்துத் தட்டையாக்கி
கலை வண்ணத்தைக் கைமாத்தி
சேதாரமனைத்தும் ஆபரணமானது
அங்கம் மின்னும் தங்கப் பிடி
மதிப்புக் காட்ட அந்தஸ்துக் கொடி
கஞ்சிக்கேச் சிங்கியடிக்க
வெருங்கால் வெற்றுநடைகாரனுக்கு
குண்டு மணியும் மலையைப்
போன்றது வாங்கி அணிய
வக்கற்றுப் போனது தங்கப்புதையல்
கடாலடிக்கும் கீ ழ் கேட்பாரற்று
கிடந்தாலும் கீ ழிருந்து மேல்வரை
கிலோ கணக்கில் தொங்க
விடுபவள்களால் தோல் தாவணி
எலி வாய் வாங்கிய வசந்த
பெண்களுக்கு தலைகுனிவை
தருகிறது ஏழையின் கையில்
பெண் குழந்தை
குத்த வைக்கும் வரை
நேரம் இருக்கிறது சிறுக சிறுக
பொறுக்கி வையுங்கள்
உலோகத்திற்காக ஊணை
உருக்கியாவது.
42. பாசனம்

கவலையேறி ஊற்றெடுத்து
ஊத்திவிட்டு உஷ்ணம் போச்சி
கிணறு வெட்டக் குழிப் பறிச்சி
குலம் வாழத் தயாராச்சி
சாகுபடிக்கும் சாகடிக்கவும்
துளித் தண்ண ீர் கொள்ளாது
முழுகும் அளவிற்கு மொண்டு
வந்து பங்குப் போட வேண்டும்
பஞ்சத்தில் பரதேசி நாங்கள்
அண்ட வெட்டி அழகுபடுத்தி
வளரவிடாமல் வரப்பாக்கி
கொந்திவிட்டக் கால்வாயில் நீர்
ஓடட்டும் நினைக்கும் பொழுது

மண் ஈரம் மங்களச் சீரும்


பொது வாழ்க்கையில்
முளைப்பு வந்தது விவசாயி எனும்
தலைப்புத் தந்தது தும்பிக்கையில்
உறிஞ்சி வந்து தெளிக்கும் தண்ண ீர்
தேங்காயில் தேங்கி நிற்க
வழிப்பிள்ளையாருக்கு வாங்கி
உடைத்து சிந்திய நீரை சிந்தாமல்
அனுப்பி வைப்போம் கடைமடைக்கு
முனை மின்சாரம் அணை
தேக்கங்கள் தேடி வரவேண்டும்
சோறு தருபவருக்கு ஓடும் ஆறு
எவனுக்கும் சொந்தமில்லை
திறந்துவிட சொல்லவும்
தேவையில்லை.
43. புட்டு வாங்க போனேன்

பொண்ணுக்கு வயசு வந்தது


உட்கார நேரம் வந்தது
பெத்தவனுக்குப் பொறுப்பு வந்தது
தலைக்கு மேலேத் தவிப்பு வந்தது
தென்னங்கீ ற்று மூணுநாளு
மஞ்சத்தண்ணி சுத்தும் நாளு
பங்காளி வரிசை அடுக்க வேண்டும்
சுமங்கலி வரை துணைக்கு
வேண்டும் சவரம் பண்ண
சல்லிக்காசுச் சினுங்கவில்லை
பவுனுப் பண்ணப் பட்டுக் குட்டிக்கு
கொடுப்பினை இல்லை
சமஞ்சவளுக்குச் சடங்குச் செய்ய
வாடகைக்கு வண்ண விளக்கு
சனங்கக் கூட்டிப் பந்தல் நட்டு
விஷயத்தைக் காட்டவேண்டும்
பச்சரிசியை நுணுக்கி
கருப்பட்டியை இணுக்கி
புட்டாக்கி அள்ளிக் கொடுப்பாங்க
அறந்த வாலுடன் வயசுப் பசங்க
வருவாங்க வாங்கும் சாக்கில்
வெட்கத்தின் ஆரம்பம்
அவளைப் பாப்பாங்க
முறை மாமனுக்கு முழு உரிமை
முடிச்சிப் போடவும்
கடைசியில் அவனே.
44. தினவாசி

பெரியோர்களால் பெற்றெடுத்த
பிறப்பற்றவை வரிகளுக்குள்
காட்சிகள் திரையற்றவை
புரட்டிப்போட்டப் புத்தகம்
திரட்டிப் பாருங்கள் தினந்தோறும்
திணறுகின்றன விடுதலையற்ற
மூளைக்குள் அலமாரியில்
அடங்கிக் கிடக்கும் அசைவற்ற
உலகம் ஊமைப் பக்கங்கள்
பேசுவதற்கு சுலபம் உறங்கும்
போது
தலையைத் தாங்க தலையணைக்கு
பதிலாவது நூலை நுழையுங்கள்
அப்போதாவது அதிலுள்ள
கருத்துக்கள் தலைக்கு
ஏறுகிறதாப் பார்ப்போம்

அடுக்கி வைத்து முடக்கி


விடாதீர்கள்
தடுக்கி விழுந்தேத் தலையிழந்து
போவர்ீ கோபம் குறைக்கப்படும்
மோகம் மறுக்கப்படும்
சோகம் சரிபார்க்கப்படும்
வேகம் வகுக்கப்படும்
வாசித்த வயதினருக்கு வருகின்ற
வளர்ந்த அறிகுறிகள் இது
ஓலை இருக்கிறது
எழுதி இருக்கிறது எழுத
நினைப்பவருக்கு
வேலையிருக்கிறது
மரக்கூழ் திடல் மடல்களிலிருந்து
இது நவனக்
ீ காலம் வாசிக்கும்
பழக்கத்தைப் பிடுங்கியக் காலம்
எப்படி ஏடுகளைத் திருப்பியாவது
இணையம் இன்றி இருபது நிமிடம்
எழுதியப் புத்தகத்தை இறுக்கியபிடி
தேவையானவைத் தேடல்
வாழ்க்கையில்.
45. குறவனுக்கு ஒருத்தி

ஊசியில் மணிக் கோர்த்த


கொட்டாங்குச்சியில் அரிசி வடித்த
வளையல் வரிசை அழகுக்கரசி
ஆடைப் பாதி அணிந்தவன் செய்தி
கேட்டுக் கொள் மணிகள்
மொய்க்கும் முகவோரக் காதிடம்
குற்றால அருவி அடிவார
ஆட்கள் நாம் திரிகூடராசப்ப
கவிராயர் சொன்னது திறந்தவெளி
நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற
வடு
ீ திறந்த மனது அதில் கதவு
அடைத்து விடாதே
ரகசியமாகிவிடும்
சாரங்கட்டிய சாக்கு வடு

சட்டி முட்டுக்கள் மண் ஓடு
கவுச்சி வாடை அடுப்பை மூட்டும்
போதெல்லாம் மூக்கிற்கு வரும்

இருட்டுக் கொளுத்த கொஞ்சம்


பயம்
பயப்படாதே துப்பாக்கி எடுப்பேன்
வைக்கும் குறி இருபத்திமூன்றாம்
புலிகேசி உடையது உனக்கும்
எனக்கும் ஒற்றுமை உண்டு
குடுமியில் அதற்காக குடுமிப்பிடி
சண்டைங்குச் சாத்தியமில்லை
குறிச் சொல்ல குறத்தியின் கூடை
புறநகருக்குப் போயிட்டு வரும்
வருங்காலத்தை வாய்வழியே
வழங்கிட்டு வரும் சேரும்
வாழ்க்கை
நமக்கானது பாசம் வழங்க
பாசிமணிப் போதுமானது அதுவே
உரவானது மறுத்துவிடாதே
குறத்தி மகளே குருவி
சுடுபவனுக்கு அரளி விதையின்
அவசியம் அப்போது வரும்
இருக்கும் வரை உன்னோடு
சிங்கி மனது என்னோடு.
46. மூக்கு கண்ணாடி

குறுகுறுப் பார்வைக் குறுகியது


சிடுசிடு மூஞ்சி முழிக்கிறது
கொட்டை எழுத்து சுருங்கி
அழிந்தது
குருட்டான் போக்கு
வெளிச்சம் தீர்ந்தது
கண் முன் கண்ணாடி உற்றுப்பார்க்க
காட்சிகள் தேடி மூக்கின் கிரீடம்
என்றும் சொல்லலாம்
மூத்தோர்களின் பிறப்புரிமை
செய்தித்தாள் எனும் நண்பன்

ஏட்டின் எழுத்துப் பார்வைக்கு


எட்டவில்லை எடுத்து அணிந்தால்
ஒரு செய்தியை மற்றொரு
செய்தியோடு பொருத்தும் அளவுக்கு
பொலிவு வந்துவிடும்
பார்வையற்றவன் பார்க்கும் உலகம்
பார்க்கவேண்டியக் காட்சிகள்
உள்ளத்தில் பிரகாசிக்கும்
கண்களுக்கு உரிமையாகாது
இந்த காலத்தில் இழவுக் கண்கள்
திருட்டுத் திரையை இரவோடு
கழிக்கும் காய்ந்தக் கண்கள்
குருடாகட்டும் நல்லக் காட்சியை
கண்ணாடியில் வைத்து
மூக்கோடு ஒட்டி விடுவோம்
47. மைலாஞ்சி

சின்டு முடிந்த ரெண்டு இதயம்


துண்டுப் போலப் பறந்ததென்ன
உண்டில்லை உனக்குள் நுழைய
மண்டைச் சூடுத் தாங்காமல் ஏறிய
ஏகபத்தினி எழுப்பிக்கொள் மனதை
ஏணிப் போட்டு ஏறுகிறேன்
உன் வயிற்றிலிருந்து மழுப்பிவிட்ட
மாப்பிள்ளையாவேன் கல்லெறிய
மாங்கொல்லையாவேன் ஆற்றில்
அப்பளம் அம்புலி தொட்டுவிடாதே
நொறுங்கிவிடும் ஆழத்தில்
அலசினால் கிடைப்பதில்லை
ஆம்பளையின் அன்பைத் தவிர

வகுடு முடி அளவு நெற்றியில்


அலைக்கழிக்க அவிழ்ந்து விழும்
அவசரத்தில் ஒதுக்க ஓடிவரும்
விரல்கள் தெரிவிக்கும் குரல்கள்
இமையிருப்பில் நான் இருப்பேன்
ஒப்புக்கொள் தப்பித்துவிடுவேன்
தவிர்த்துவிட்டால் தப்பாகிவிடுவேன்
ஓ..ஓ... காதல் ஒவ்வாமை
என் அம்மாவை ஆட்டி வைக்கிறதா
சொல் மகளேச் சொந்தக்காரனாகி
உறவாடியே உண்டாக்குவேன்
உனக்கானக் காதல் தோழனாய்.
48. அருவி

கீ ழே விழுகிறாய் கைகொடுக்க
மனம் வரவில்லை விழுவது
வளர்வதற்காக எந்திரிக்க
ஏளனமில்லை விழவைத்தவன்
விதி என்றால் உழவைக்க
சதியென்னக் குற்றாலக் குளியல்
கொட்டிக் கொட்டிச் சட்டித்
தலைகள்
சப்பையாகிப்போச்சி சலசல
சங்கீ தம் மீ ட்டிய நீர் வணை

கார்மேகம் தூக்கிய வெண்பானை
கார்மேகம் உரசி பச்சை
பயணம் கிள்ளி
முகர்ந்தால் பெருமூச்சிக்கு
பேராயுல் பெயர்ந்து வரும்
கூந்தலோடு ஜடை மாடை
கவிஞர்கள் எழுதியாச்சி
பூ வைக்க பூலோகம் பூத்தாச்சு
ஈர்ப்பு விசை இழுத்து வந்ததால்
கடும் பாறையில் கசிவு வந்தது
விதை விளைந்துப் பசிப் போனது
முதலறிவு முதல் தவழவிட்ட
தாயை ஆறறிவு பாவிகளின்
ஆசையில் ஆவியாகி மீ ன்கள்
நீந்தவில்லை எழுந்துப் போக
எந்த அருவியும்
ஏமாந்து போகவில்லை.
49. வடை

செயற்கைக்கோளின்றி
சென்றுப்போய் சந்திரமண்டலத்தில்
இந்திராக் கிழவிக்கு வடைச் சுட
வாய்ப்பு வந்தது நெருப்புக்கு
விறகில்லை சூரியனிடம்
வெப்பத்தை ஒப்பந்தத்தில் வாங்கி
பாறை நிழலில் பருப்பு மாவை
தட்டிப் போடக் குமிழ் குளியல்
குடைக் கம்பியில் குத்தியெடுக்க
காக்காத் திருடன்
அபேஸ் பண்ணினான்

கோபத்தில் கிழவிக் காதை திருகி


காற்றோடு வசினாள்
ீ விபரீதம்
விழுந்தது எரிமலை குழம்பில்
ஒன்றும் பாதியுமாய் வெங்காய
சங்கத்தில் நாட்டாங் கடை
காலனாக் கடலை வடை
நாக்குல்ல வாயெல்லாம்
கடன்காரன் தான் வாஸ்து பார்த்து
வாழயிலைக்கு வரவில்லை
பந்தியில் அழையா விருந்தாளியும்
பசியிழக்கும் பாக்கியத்தில் பருப்பு
வடையின் உழைப்பும் உண்டு.
50. சுத்தக் கிராமப்புறம்

திண்ணை வடுகள்

மண்சுவர் கூரைகள்
வட்டிற்குள்
ீ வடு

குருவிக்கூடு
கொல்லைமேடு
விவசாய நாடு
அம்மிக்கல் அரவை
ஆற்றுக்குள் குறவை
பாட்டிலோர் தெம்மாங்கு
பாட்டியேக் கெவுரு நோன்பு

மாடி வடெல்லாம்
ீ அருங்காட்சியகம்
எங்கள் ஊரில் கூன் போட்டு
குடிசைக்குள் குடியேறுவோம்
காலை கடனெல்லாம் கரம்போடு
கழியும் கண்களின் காவல் தீவிரம்
ஏரெடுத்து எழுதிய எழுத்து
மூத்தக் குடியின் தலையெழுத்து
முதல் பட்டதாரியை
உருவாக்குவோம்
விவசாயம் முடிந்துப் போகாது
விஞ்ஞானத்தில்
விதையெழுப்புவோம்
கள்ளிச்செடியில் தமிழ் எழுதி
நல்லாசிரியர் விருது நாம்
பெற வேண்டும் பாறைக் குழியில்
பல்லாங்குழிக் கணக்குப் பெண்கள்
ஏற்ற போகும் எதிர்கால விளக்கு
காளை மாட்டின் வாலடித்து
சுரிலென்ற முதுகுத் தட்டை
தோலில் ஏந்தும் நட்சத்திரப் பட்டை
நட்டாலும் இட்டாலும் சொட்டாதநீர்
செழுமைக்குப் பெயர் போகாது
நாட்டுப்புறம் தாண்டி நாடாள
சென்றாலும் வயலோர வாசம்
வந்துப் போகணும்
வணங்கி நிக்கணும்.
51. மாணவத் தொழிலாளி

எப்படி ஏதோப் பிறப்பு


தற்குறி எழுதிய எழுத்து
சூரியன் சூடுச் சுட்டு
தூக்கம் கலையும் காதுத் தொடும்
வயசில் வறுமை வந்த பயன்
சிறுமை வளராத அனுபவம்
வேலைக்கு போனது காசு தொட்ட
கைகள் கல்வி எட்டுவதேதென்று
எடுத்துப் பேசியப் பொல்லாப்பு
வாய்கள் பகுதிநேர
பாடுபாடெல்லாம் படிப்பை
நேசிக்கத் தானேச் சிறுவயது
பெரும் படிப்பு

பிடித்த உயரங்கள் சிகரம்


அல்லவோ சின்ன எண்ணங்கள்
சிந்திக்கும் செயல் சேமிப்பு புத்தகம்
அரைப் பெடலில்
அதிகாலை அவசரம்
செய்தித்தாள் வினியோகித்து
இணையாகாத இந்தியர் சந்தித்த
சவால்கள் எழுப்பிவிடும் சோர்வில்
பள்ளி வழிபாட்டுப் பாடவும்
வருகைப் பதிவேட்டில் பதியவும்
இம்மாணவனுக்கு ஒரு நாள்
அதிசயம் ஈன்ற பொழுதின்
சான்றோரெனக் கேட்கப் போகும்
தாயிக்குச் சமர்ப்பணம்.
52. வானவில்

வனப் பூக்களின் சிட்டிகை


நிற வெண்பாக்களின் அட்டிகை
தேயாத ஆகாயத்தின் அலங்காரம்
சாயாதச் சிகரத்தின் சிங்காரம்
கைநீட்டிக் கலைக்க முயன்றேன்
கண்தீட்ட பூமிக்கு அழைத்தேன்
திரவத்தில் ஏழுக் கோடு
ஓவியங்களால் தொட
முடிந்தது வளைந்ததின்
பின்னணி என்ன? கண்ணாடி
வளையலின் உடைந்தப் பாதியா
மயில் கொண்டையின் கிழிந்த
மீ தியா நிமிடப் பொலிவு
நாணல் காரணமா ஆடைத் தைக்க
அளவுக் கொடு
இரவில் வர மாட்டாயா
கருந்திரள் வளாகத்தில்
நிலவுடன் போட்டியா அழகுக்கு
அலகீ டுத் தேவையா
கண்கவர் வித்தையை
மெத்தையாக வைத்துக்கொள்
அடுக்கு வண்ணத்தை ரசிக்கும்
காட்சிகள் சிலிரூட்டும் சிமிட்டும்
நேரத்தில் வந்து போகும்
நிறங்களின் நிழல்கள்
கருப்பு தானே இரவில்
வானவில்லை சேலை
முந்தானையில்
முடியும் வரை காண்போம்.
53. உயர்கல்வி

அங்கே ஒரு ஊர் இயற்கையின்


இன்றியமையாதச் சீர்
வரைபடத்தில் ஐக்கியமானது
மன வரைபடத்தில்
மறைந்துப் போனது பொதுத்
தகவல்கள் போய் சேரவில்லை
கடமையின் வாய்கள் மூடிவிட்டது
அ-ன ஆ-வனாவில் தொடக்கம்
பலப்பம் தீர்ந்ததும் முடக்கம்
கற்கள் தடைக்கு வைக்கவில்லை
நடைக்கு உதரப்பட்டது ஆடு
மேய்க்க
ஆறு வயது கல்வி எட்ட
வேண்டும் சொகுசு அடுப்படிக்கும்
அவ்வளவு போதும்
சின்னஞ் சிருமி அறியாத
வெகுளிக்கு தண்டனைப் பெத்தக்
கடமையெனும் பெயரில் குழந்தைத்
திருமணம் வேறு வழியில்லை
வேரூன்ற கல்வி இல்லாதபோது
படிப்பை மட்டும் மலையடி
குடிசை வரை கொண்டு
சேர்த்துவிட்டால் வேலங்கட்டையை
வெட்டக் கத்திப் பிடிக்கும் கைகள்
அறுவை சிகிச்சைக்கு பிடிக்க
வாய்ப்புக் கிடைக்கும் அடிப்படைத்
தேவையில் கல்வியில்லை மனித
உரிமையில் அடங்கியிருக்கிறது
தொடங்கிவிடுங்கள் இல்லாத
இடத்திலும் செல்லாத இடத்திலும்
எழுத்தறிவும் பாடசாலையும்
அறச் செயலாகும்.
54. இலக்கணக் காதல்

பாத முத்திரையில் விழித்திரை


வைத்தேன் நீலக் கடற்கரையில்
முத்துக்கள் பறித்தேன்
அவள் அழகிற்கு சத்துக்கள் சேர்க்க
காதலிக்கக் காத்துக்கிடந்து
சோதனைகள் சேர்த்து வளர்த்து
நிழலுக்கு உருவம் கொடுத்தேன்
பாவனையில் புன்சிரிப்பு
தோரணையில்
எடுத்துக்கொண்டேன்
சம்மதமென்று.

தலை முக்காடு முன்வரவில்லை


ஊர் சுற்ற நெஞ்சத்தில்
உல்லாசமில்லை நேசத்தின்
உண்மை ஒழுக்கத்தின் தன்மை
நுனி விரலும் குத்தும் ஈட்டியாகும்
மணமுடியும் முன்னால் விரல்
மேல் பட்டால் செய்கையின்
சத்தமே
உன்னைப் பிடிக்கும் நூலானது
காதலின் வலிமை இளமைக்கு
தெரியாது அழகின் அவசியம்
உள்ளத்தில் இருக்காது மாடு முட்டி
மலை சாயுமாத் தென்றல் தொட்டு
இலைத் தேயுமாக் காதலின் சுகம்
கட்டுப்பாட்டில் இருக்கிறது.
55. இக்காலத்தில் மலை

தரையில் முளைத்த மாளிகை


தண்ண ீர் தருவதில் ஆதிரை
அருவி ஆர்ப்பரித்த அழகு
காற்றில் கலைந்த வெண்கூந்தல்
ஜீவநதிக்குப் பிறவிக் கொடுத்து
அடிப் பாதத்தில் தவழவிட்டாய்
தவழ்ந்தப் பின் நடக்கும்
உயிரினங்கள் செழிக்கும்
காற்றோடு மோதி விளையாடு
முகிலோடுப் பேசி நகையாடி
தேடிப் பிடிப்பாய் நிலவை
ராப் பொழுதும் பொறுமை
கொள்ளாமல் கிளைக் கோர்த்த
காடுகள் கலைச் சேர்த்த முகடுகள்
பறவையினத்தின் பாடல்கள்
அசையும் அனைத்தும் ஆடல்கள்
ஆடு மேய்க்கும் ஆயர்களை
அன்றாடும் அழைத்து மகிழுவாய்

தெரியாத இடத்தில்
சொட்டும் தேனை
தெவிட்டும் வரை சுவைத்துணர
வாய் பிளந்தே வாழ்ந்து கிடக்கு
கொடுத்தக் குரலைத் திருப்பிக்
கொடுத்து எதிரொலி என்பாய்
ஏவிய காற்றிடம்
போர்த்தியப் பனியில்
பறக்காதப் பஞ்சுபோல் நடுங்க
நனைந்தாய் பன்னிரெண்டில்
குறிஞ்சியை எழுப்பி ஆகாயம் வரை
வாசம் தெளிப்பிய் குண்டு வைத்து
குவாரி என்றனர் குழி வைத்து
குகை என்றனர் வந்து போக வழி
வெட்டினர் வெட்டும் சாக்கில்
பையை நிரப்பினர் உலகில் உயர்ந்த
உன்னை எரும்பைப் போல் சிறுகச்
சிறுக எடுத்து பெருக பெருக
அழித்தனர் அவரும் அழிந்தனர்
இயற்கையின் பிடியில்.
56. தேர்வுத் தேதி வந்தது

உயர்வுக்கு வழிப் படிப்பு மட்டுமே


தேர்வுக்குத் தேதி வேகம் காட்டுமே
வெற்றி ஒன்றே எழுதும் இலக்கு
உழைப்பு ஒன்றே ஏற்றம் நமக்கு
ஏடும் கையுமாய் பேனா மையுமாய்
தோற்றம் கொடுக்கும்
போகும் பொழுதெல்லாம் கற்றலின்
வழியிலே கடக்கும் இரவில்
தூக்கத்தைத் துரத்த தேன ீர்
கோப்பைக் கொட்டாவி விடும்
சேவல் வணக்கம் தினம்
காதைத் தொடும் தேதிக்கண்டு
களத்தில் இறங்கியவர்கள்
ஒரு ரகமென்றால் களத்தில்
இறங்கித் தேதிக் கண்டவர்கள்
ஒரு ரகம் எழுதும் நாளுக்காக
பழகும் நாளெல்லாம் பயிற்சி
நாளாகட்டும் வெற்றியை
முடிவில் காண்பாய்.
57. உணவு மேசை

செவ்வக மேசை
பாத்திர ஓசை
நளபாகப் பூசை
நாவிற்கு ஆசை

சமயல்கள் சங்கமிக்கும் உணவை


வளையல்கள் பகிர்ந்ததில் மகிமை
பக்கத்தில் எதிரெதிரே அமர்ந்து
அருசுவையை அனுபவிக்க அருமை
உப்பும் உரப்பும் வாய் முனுக்க
தாளம் தட்டிப் பசியை அழைக்க
வெகுமானம் கிடைக்கும்
முடியும் வரை சமதளத்தில்
இருப்பவருக்கேச் சேரும்

இது வட்டமேசை மாநாடு


கருத்துகள் பகிரப்படும்
ஆசைகள் திணிக்கப்படும்
திட்டங்கள் வகுக்கப்படும்
தீர்வுகள் எட்டப்படும் தட்டைச்
சுற்றி
காய்ந்திருக்கும் நாற்காலிச் சற்று
திசைத் திரும்பும் கையில் சேர
தண்ண ீர் விரும்பும்
வெத்தலைப் பாக்கை
சுண்ணாம்போடு மடி சாப்பிட்ட
மேசையை துணி வைத்து துடை.
58. ஏற்றம்× இறக்கம்= வாழ்க்கை

கைகள் இழந்தவன் ஓவியம்


தீட்டினான் விரல்கள் மறந்து
வணை
ீ மீ ட்டினான் கைகள் பல
பாராட்டி வந்தது தவறி விழுந்தவன்
எழுந்தான் உச்சியை எட்ட
முயற்சிப் படிகள் அருகில் வந்தது
உயர்வில் உள்ளம் மலர்ச்சி கண்டது
கால்கள் பிரிந்து அமர வந்தவன்
சன்னலைத் தாண்டி தனிமை
கண்கள் புத்தக காதலுக்கு கவிதை
வந்தது கூட்டு கற்பனை
தொகுப்பாய் நின்றது
மூட்டையை பிடிக்க மூக்காலே
அழுதவன் ஒத்த ஆளாக
கோட்டையைப் பிடித்தான்
கூட்டங்கள் சேர்ந்தது
கோசங்கள் எழுந்தது துன்பத்தை
துடைத்துப் போடு தூக்கி
சுமந்துவிடாதே தோல்வி கண்டு
முடங்கிவிடாதே வெற்றியின்
வேலையை தொடங்கிவிடு
படிக்கட்டுகள் மேலே ஏறுவதற்கு
மட்டுமல்ல கீ ழே இறங்குவதற்கும்
தான் இவ்வுலகில் வாழ கசப்பு
கலந்த தோல்வியே கைகொடுக்கும்
வெற்றியானது அவ்வப்போது
இன்பம் கொடுக்கும்.
59. மாடித்தோட்டம்

வானத்தின் கீ ழ் பச்சை தோட்டம்


விட்டத்தில் வாழ் வளர்ச்சி கூட்டம்
சோலை வந்து வட்டில்
ீ தங்கும்
பாலை சென்று பசுமை வாங்கும்
நிலத்தை இறுக்கி வட்டை
ீ எழுப்பிய
நகர வாசிக்கு நல்ல வாய்ப்பு
விதையை எடுத்து மாடியில் போடு
விருந்தாளி குருவி கட்டியக் கூடு
மழைக்கு கொஞ்சம் வழியை விடு
செடியை கொஞ்சி வெயிலில் விடு
தினம் ஒரு பார்வை இடு
இயற்கை விலகாத காய்கனி வரும்
நிறங்கள் நிரம்பிய மலர்கள் வரும்
கோடைக்கு குற்றால
குளுமை வரும்.
60. அடுப்பின் மாறுவேசம்

கல்லை மூட்டிக் கனல் கன்டு


நெல்லைத் தூற்றிச் சுவை உண்டு
சோறுப் பொங்க அவசியமாய்
இருந்தது ஏழைக்குடும்பத்தில்
அதிசயமாய் எரிந்தது
அடியில் நெருப்பு வைத்து
சமைப்பவர் மொழியில் சிரிப்பு
தைத்து புகையை தூது விடுவாள்
வயிற்றுப் பசிக்கு
கறிக்கட்டை அனல்
அடங்கி எழுதிய ஆரோக்கிய
கடிதம்

அடுப்பு என்றும் விடுப்பு


எடுத்ததில்லை மறுப்பு
சொல்லிருந்தால் வாய்க்கும்
வயிற்றுக்கும் வேலையில்லை
மழையில் விரகு ஈரமாய் வரும்
உலையில் ஜோதி வரமாய்
ீ எழும்
சுள்ளிக் குச்சியை முதலில் அனுப்பி
ஆலங்கட்டையை நெடுக்கப் பிளந்து
பக்குவமாய் வைக்கணும்
ஊதுக்கோலில் ஊதனும் குளிரில்
தீ மூட்டியதில்லை அருகில் வந்து
அமர்ந்தால் போதும் சிலிர்த்த
உடலுக்கு இதமானச் சூடு

எண்ணெய் ஊற்றி காற்று


அடித்தனர் தனக்குத் தானே
வேட்டு வைத்தனர் நெருப்புத்
தொட்டு தழும்பு வந்தது அடுப்புக்கு
தனக்கும் சம்பந்தம் உள்ளது
எரிவாயு என்று உருண்டு வந்தது
சிறு பொறி பறந்தே உயிரை
திண்றது பொறுமைக் காத்து
வெந்ததை திண்றனர் முதுமை
வந்தும் முப்பதில் இருந்தனர்
அவசர
ஆட்கள் அடுப்பை மறந்தனர்
சமைத்தது யாரென்றே அறியாத
உணவை உள்ளுக்குள் போட்டனர்
பிழைக்க வழியின்றி
காலத்தை முடித்தனர்
61. சிறைக் குளியல்

கரை இறங்கிக் கழுத்துவரை


ஒட்டுத் துணியில் உல்லாச
குளியல்
கட்டி கரைத்தது இல்லை நீச்சல்
போட்டிக்கு குறைவே இல்லை
வெட்டவெளியில் வேட்டி
காத்தோடு
மரக்கிளையில் தொற்றிக்க
ஓனாங்குச்சியோடு எம்பி
பார்த்ததுண்டு மூச்சை பிடித்து
ஆழம் பார்த்து கல்லையெடுத்து
வானத்தில் ஏறியனும்
எண்ணிக்கையில் நூறைத் தாண்டி
உள் நீச்சல் போடணும்
தண்ணிக்குள்ளே கண்ணாமூச்சி
ஒளியும் அவனை தேடணும்
எருமை மாட்டை இறக்கி
விடுவார்கள் ஏரோட்டி சகதியோடு
வருவார்கள் மீ ன்கள் மேஞ்சி நீந்தி
வந்தது சின்ன பொக்கை கடியில்
காலை தீண்டுது அளுக்கா தூக்கி
ஆத்துல போட்டு கத்துக்குட்டிக்கு
நீச்சல் தெரிந்ததும்
கிணற்றில் குதித்து
கல்லில் மோதி கண்கள் சிவந்த
காலத்தைக் கடந்தவர்கள்
நினைவை பிள்ளைக்கு காட்டுங்கள்
தூர்வாரி துடைத்து வைத்தாலும்
மேகம் மனது வைப்பதில்லை
அப்படியே நிரம்பி வழிந்தாலும்
ஆர்வம் அழைப்பதில்லை
சுவர் எழுப்பி
தாழ்பாள் போட்டு தொட்டித்
தண்ண ீரில் தொட்டுத்தொட்டு
குளித்தனர் நாகரீகம்
எனும் பெயரில்.
62. ஒரு வார்த்தை

அரிசிப் புடைத்துக் குருணை


எடுத்தவளே அரசி நடையில்
அதிகாரம் செய்தவளே
மலையெல்லாம் மல்லாந்து
கெடக்கு காற்றின் கவிதை
காதில் விழுந்ததில்
கோழிக்கொண்டைப் பூ
தோழியோடு கொண்டாடிய
வண்ணங்கள் மண்ணின் மணம்
வேரில் புதைந்ததில்
கானாங்குருவியின் கானகீ தங்கள்
பாடி வந்து மனதில் சேருங்கள்
ஒற்றை நாற்று வரிசைப் புள்ளி
கோலத்தில் தெரியும் சீப்பு சீவிய
ஒற்றை முடி பூமத்திய
ரேகையில் சேரும்

நீச்ச தண்ண ீரில் தாகம் தீர்த்தவன்


வச்சி
ீ அருவாய் தேகம்
வளர்த்தவன்
அருவாமனையில் கீ ரை அஞ்சிய
அத்தையவள் மகளைப் பார்த்ததில்
விழுந்தேன் வழக்கம்போல்
காதலில் வாடிப்பட்டி காளையோடு
வம்புச் சண்டை போட்டதுண்டு
பக்கத்தூரான் பகையைக் கூட
பஞ்சாயத்தில் தீர்த்ததுண்டு
புருவத்தை புரட்டி உருவத்தை
கொடுத்தவளே இருக்கின்ற
இதயத்தை இல்லாமல்
எடுத்தவளே
சொல்லாமல் தவிக்கிறேன் ஒரு
வார்த்தையை கண்கள மூடிவிடு
மூச்சை எண்ணிக் கொள்கிறேன்
சொல்லிவிட்டால் நின்றுவிடுமோ.
63.மறுத்தாய் மகள்

மகளாகப் பிறக்கவில்லை
தாயாக மாறிய அத்தையிடம்
தனியாளாகப் பெத்தத் தாயை
நினைவில் வைத்து வாழவருவாள்
புதிய உறவாக விளக்கை
ஏற்றுவாள்
விடியும் விழிப்பெல்லாம் கணவன்
முகத்தில் அத்தை மாமாவின்
காலில் விழுந்து தாய் தகப்பனென
தினம் தொழ வேண்டும்
மருமகளானாலும் மகள் தானே
மாமியாரானாலும் தாய்தானே
பிரிந்து வருவதாலே உறவு
தொடங்கும் விட்டுக் கொடுப்பதாலே
பிரிவு அடங்கும்
வட்டை
ீ ஒழுங்குப்படுத்தி குலத்தை
விரிவுபடுத்தி வாழ்க்கையை
தெளிவுபடுத்துவது வாழ
வந்தவளின் கடமை பாராட்டு
சொல்லெல்லாம்
வாழ்க்கை கொடுத்தவனிடம்
வாங்குவது பிறந்த
வட்டிற்கு
ீ பெருமை மாமியார்
சண்டை வழிப்பது மருமகள்
குடும்பத்தை பிரிப்பது என்ற
பேச்செல்லாம் அடங்கட்டும்
புதிய தாய் மகளென்று
இனி வாழட்டும்.
64. சுற்றுலா

சுற்றுவதற்கு ஆசை வந்தது


சுற்றுலாவின் சுதந்திரம் வந்தது
பட்டியலில் பல ஊர்கள்
சென்று வந்தவர்கள் சொன்ன
பெயர்கள் சொந்த ஊரைவிட்டு
எங்கும் போனதில்லை
நடந்தப் பாதையெல்லாம்
எல்லைகல்லைத் தாண்டியதில்லை
பேருந்தில் ஏறியதும் சன்னலோர
இருக்கையைப் பிடித்திட வேண்டும்
பார்க்கபோகும் காட்சியெல்லாம்
கற்பனையில் வந்திடவேண்டும்
வேர்கடலையில் ஊப்பைக் காட்டி
வறுத்து வைத்திடவேண்டும்
புளிச் சோற்றை மூன்றுப்
பொட்டலம் கட்டிக்க வேண்டும்

மாநகருக்கு முதன்முதலில்
போரோம் வான்வரை கட்டிடத்தை
காணப் போறோம்
கன்னிமரா நூலகம் போறோம்
கருவாச்சி காவியம் படித்து
வாரோம்
கடற்கரையில் வடுக்
ீ கட்டித்தான்
வாடகையை வாங்கப்போறோம்
வரும் அலையைத் துரத்திச் சென்று
சங்கெடுத்து சங்கதிச் சொல்ல
வேண்டும் நொறுக்குத் தீனியை
நொடி தவறாமல் வாயில் போட்டு
கொறிக்க வேண்டும் காணும்
அனைத்தையும் போட்டோ
பிடிக்கணும்
வேணும் அனைத்தையும் வாங்கி
குவிக்கணும் சுத்தி சுத்தி
காலடித் தேயனும் ஊருக்குப் போக
உள்ளத்தைத் திருப்பனும்
வட்டுக்குப்

போனதும் ஓய்வுக் கொடுக்கணும்
மறுநாள் எழுந்ததும் சினேகிதம்
தேடணும் சுற்றுலா காட்சியை
ஊரெல்லாம் சொல்லணும்
சொல்லும் நேரத்தில் ஒருவாரம்
போகணும் அடுத்த வருடமும்
கொண்டாடும் நிகழ்வு வருமென்று
மனதில் தோன்றலும்.
65. அவள் எழுச்சி

மாதரின் மானிட அவசியம்


மனையாள் தொட்டு முடிவதில்லை
வான்புகழ் தொட்ட வார்த்தைகள்
பேசி கைவசி
ீ நடக்க வேண்டும்
அடுப்பில் வெந்து வாசலுக்குள்
வாழ்ந்து அடங்கி போனதில்
அக்னி கவிஞன் ஆவேசத்தில்
எழுந்தான் எழுச்சி குரலாய்
வட்டைவிட்டு
ீ நாட்டுக்கு வாருங்கள்
ஏட்டைப் பிடித்து எதையும்
செய்யுங்கள் மென்மைக்கு
அதிக அவசியம் கூடாது
பெண்மைக்கு அது அடிமை தருவது
சின்னக் கோபம் கொஞ்சம் வரம்

மானத்தைக் காக்கும் சீண்டலின்
போது தேர்ச்சி பட்டியலில்
முதலிடம் தானே சாதனைப்
புத்தகம்
உங்களுக்காகத் தானே
விண்ணுக்குச் சென்று விண்மீ னை
பிடித்து வட்டில்
ீ அடைத்து
விட்டீர்கள்
விளையாட்டை முடித்து விமானம்
எடுத்து நாட்டைக் கடந்து சாதித்து
வருகிறீர்கள் பெண்ணின் மீ தி
ஆனென்று ஆகட்டும் தலையில்
கணத்தை ஏற்றி வைக்காத வரை.
66. காதல் கண்டேன்

காதல் வந்தது சந்தித்த மனதிற்கு


பெயர் தெரியாது ஊர் அறியாது
குலம் கேட்காது சாதித் தீண்டாது
பெத்தவங்க கவனத்தில்
காணாத வரை நேசித்த
நெஞ்சத்தில் நேர்மை வேண்டும்
யோசித்தப் பின் காதல் வேண்டும்
பருவத்தின் பசிக்கு பெயர் வேறை
வாழ்க்கையில் காதலே சுபஓரை
உத்தமன் ஒருவனுக்கே உள்ளமென
பத்தினி பெண்கள் நினைப்பர்
நித்திரைக் கண்களுக்கு காவலாக
அவன் அன்பை அணைப்பர்
பிடித்தவன் எதையும் கொடுத்தவன்
இன்பத்தையும் நீங்காத
துயரத்தையும் கலங்கி நிற்கும்
கண்களை வார்த்தை மருந்தில்
வாழ வைத்தவன்

காதல் செய்பவர்கள் நிஜத்தை


விரும்பாதவர்கள் கற்பனை
காலத்தை நிறைவாக வாழ்பவர்கள்
கண் பட்டு காதல் வருவதுண்டு
கைப்பட்டு கற்பு போனதுண்டு
அந்தப்புர ஆட்டமெல்லாம்
அங்கேயே அடைந்து விட்டு
மணப்புரத்தில் வந்ததும் என்ன
செய்வர்கள்
ீ அனுபவித்த ஆசையை
வைத்து ஒழுக்கம் காதலின் விதை
அதை பழக்கம் ஆக்குவதே திறந்த
மனதில் சலனமற்றச் சல்லடை
காதல் கல்யாணத்தில்
முடிவதில்லை வெட்டிக் காதல்
தட்டிக் கொள்ளும் தாக்குப்
பிடிக்காமல் ஆதாரம் வைத்த
உண்மைக் காதல் உலகில் வாழும்
உள்ளத்தில் உயிரோடு.
67. பனைமரம்

ஒத்தையில நெட்டக் குச்சி


கடிக்குதுக் கருக்கு வச்சி
உச்சியில ஓலக் குடுமி
இடிவிழுந்துக் கருகிப் போச்சி
நிழலில்லைச் சாபக்காரன்
சூட்டு மண்ணின் சொந்தக்காரன்
நிழல் தருவது மரத்தின் குணம்
பச்சையை பொசுக்கி உடலில் பூசிய
இப்படியும் ஒரு மரம்
ஆறுதல் அடைகிறேன்
பல கைகள் வைத்திருப்பார்கள்
கையாடல் செய்திருப்பார்கள்
பனமரமென்று அழைப்பதால்
நீரை தேடுவதில்லை
குயில்கள் பாடுவதில்லை உன்மேல்
தமிழ் மரம் அந்தஸ்து
திருஷ்டிக்குத் தானோ.
68. போர்வைக் காலம்

மேகத் துகள்கள் மேலோட்டமாய்


தூங்கி வழிந்த அடைக்காலம்
பச்சை புற்கள் வெளுத்த
பவளம் ஆதவன் அதை இழந்த
அவலம் கொட்டாவி கோட்டையில்
வெள்ளை பூதங்கள் வெளியே
வரும்
காலங்கள் உடல் ரோமங்கள் நடுநடு
நாதங்கள் உயரம் அளந்து
படுக்கையை தேடும் பற்கள்
இசைந்து வாத்தியமாகும்
சொற்கள் உறைந்து ஊமையாகும்
இரு கையைத் தேய்த்து
கண்ணத்தில் வைத்த மாயாவி
வெப்பம் நீராவி வண்ணம் நிறைந்த
இரவுகள் தண்ணரும்
ீ கல்லாகி
கரையும் நினைவுகள்

இழுத்துப் போத்தி கற்காலத்திற்கு


போகும் இக்கால மனிதர்கள்
இறுக்கி அனைத்து
வெதுவெதுப்பைப் பரிமாற
மாலையில் உகந்தவை இலையின்
ஈரம் தலையணை நேரம்
மன்மதத் தேவைகள் சேவையில்
தீரும் தனிமையில் தீபம் தள்ளாடி
மசங்கும் ஊதக்காற்று ஒருமையில்
ஒருவனின் முத்தம் மூங்கில்
குழல் பாட்டு பச்சைத் தண்ண ீரில்
அதிகாலை குளியல் துணிச்சல்
வேண்டும் இளம் வெயிலில்
குளிரின் பிடியில் சுகம்
காண வேண்டும்.
69. காடுகளை தேடுங்கள்

மரங்களின் நிரந்தர மாநாடு


நிழல்கள் சரிந்தது தாலாட்டு
தரையைப் பார்க்க வானம்
முயற்சித்தும் முடியாமல் போனது
காட்டில் இன்னொரு பச்சை வானம்
வடென்றே
ீ அறியா
மனிதன் விலங்கை
அடித்து விருந்து வைத்தான்
விருந்திற்கு மழை வந்தது
சைவக் கோலத்தில் ஊர்வன
ஊர்ந்ததுப் பறப்பனப் பறந்தது
நீர்நிலை நிறைந்தது மூலிகை
முளைத்தது பூமியில் பூசிய காயாத
ஓவியம் இசையின் இருதயம்
துடித்தது இங்கிருந்து கலையின்
கால்கள் நடந்தது இங்கிருந்து

முல்லை நிலத்தில் கொள்ளை


நடந்தது உயரும் மரங்கள் நிலத்தில்
விழுந்தது வேட்டைக்கு வந்தவன்
கொள்ளைக்கு வந்தவன்
காட்டைத் தின்றான் உயிரை
கொன்றான் விலங்கின கூட்டத்தை
வதியில்
ீ பார்த்து தலைப்பாடாய்
அடித்தான் நீரை உறிஞ்சி பானம்
கலந்தான் இயந்திரச் சூட்டில்
ஆற்றை அழித்தான் காடுகள்
காணாமல் போனதுத் தேடியும்
தெரியாமல் ஆனது.
70. திரை ஆட்டம்

அசராக் கண்கள் அவசரக் கைகள்


அசையும் விரல்கள் அதிகாரத்
திரைகள் ஓடி ஆடிய ஆனந்தம்
அறையில் தேடினால்
கிடைப்பதில்லைப் பிறை நிலவை
விரட்டியடித்துக் கரைக் கிளையில்
தும்பிப் பிடித்து விளையாடி வட்டை

அடைந்ததுண்டு ஒய்யார
நாற்காலியில் ஓயாமல் உட்கார்ந்து
மின்விசிறிக் காற்றைப் பிடித்ததில்
பினிக்கொண்ட காலங்கள்
பிற்காலத்தில் வருவதுண்டு
ஆடுபுலி ஆட்டம் நின்றுப் போனது
அடியவர்களின் கனவில்
வந்துப் போனதுச் சுட்டிக்காட்டி
சுட்டுத்தள்ளும் கணினி ஆட்டம்
கழுத்தை அறுத்தது

வெயிலில் வெளியேறி
நிலத்திற்கு நிழல் தந்தனர்
குழந்தையாய் இருந்தவர்கள்
திரையில் குடியேறி குழப்பத்தில்
தடுமாறி விழுந்தனர் குழந்தையாய்
இருப்பவர்கள் பேராண்டியின்
மைதான விளையாட்டு
மூக்குக் கண்ணாடியில் பார்த்தனர்
வேட்டித் தாத்தாக்கள்
மூக்குக் கண்ணாடியோடு
பேரப் பிள்ளையைப் பார்ப்பது
செல்போன் சேட்டைகள்
மண்ணள்ளி தலையில் போட்டு
தட்டித்தட்டி சுத்தமானது
வதி
ீ விளையாட்டு விருப்பமானது
மண்ணில்லா தரையிலிருந்து
தடவி தடவி பொழுதையோட்டும்
பிள்ளைகளைப் பிடித்துவைத்தது
விஞ்ஞானத்தில் உருவான
உண்மை இல்லா ஆட்டங்கள்
தொல்லையானத் தோற்றங்கள்.
71. வாழையிலையில் ஒருவேளை

வாழையில் வாழ்ந்து
வாய்க்குப் பின்
குப்பையில் காய்ந்து
முடிந்துப் போகும்
சுருங்காத வயிற்றுக்காக

காற்றிடம் போரிட்டு கிழியாமல்


தப்பித்துத் தலை வாழையின்
வருகைப் பசியாறும் பண்பாட்டு
பெருமைச் சுடுசோறு இலையின்
மையம் குழம்பு ஆறாய் பொழியும்
பச்சை வாசனைப் பசிக்கு யோகம்
வழித்து வாயில் போட்டு
கையை நக்கி ரசித்து உண்பது

சுகம் தந்ததுச் சொரணை இருந்தது


பீங்கான் துண்டுகள் அதன் மேல்
வரைந்தப் பூச்செண்டுகள்
கரண்டியில் அள்ளிப் போட்டனர்
மண்ணள்ளிப் போடுவதைப் போல
பச்சை இலையில் ஒருவா விருந்து
நாளைக்கு ஒரு வேளை.
72. காதல் காத்திருந்தேன்

மடிச் சாய்ந்து மொழிப் பகிர்ந்து


விழிக் கூர்ந்துத் தினம் மகிழ்ந்து
நிழலில் உருவம் ஒன்றுச் சேர்ந்தது
நிலவுக்கு நன்றி நிச்சயம்
சொல்லுவேன்; காதலுக்காக
காத்திருந்தேன் நற்குண
தங்கைக்காக நான் கிடந்தேன்
நிஜக்கதையில் தேவதை அழகு
போதையில் மருகினேன் பூக்களின்
பிறவி வாசம் அவள் நாக்கினில்
பரவிப் பேசும் பாதம் பட்ட மண்
சிலையாகும் பாதை கோயிலாகும்
தண்ண ீர் கோழியின் தலைக்குக் கீ ழ்
வறட்சியில்லைப் பெண்ணே
பெத்தவளின் அருமை உன்னிடம்
பரிட்சையில்லை

பூவுக்காக மொட்டுக் காத்திருக்கும்


சாம வளர்ச்சியில் பூத்திருக்கும்
பாலுக்காக கன்று வாய் திறக்கும்
மடிக் காயாமல் காத்திருக்கும்
மயில் தோகையின் ஒரு இறகு
கண்மணியை உரசிய இரவு
இருட்டை எரித்து வெயில்
கொளுத்தும் நினைவில்
வந்துவிட்டால் வாராதக்
கற்பனைக்காக
தோற்றம் பார்த்ததில்லை
தோற்றுப் போனதில்லை
மனப்பிரமை உண்மைக் கொள்ள
ஊமைவிழிகள் தியானம் செய்யும்
செய்கை உரையாடல் சாயும்
நேரத்தில் வேண்டும் சத்தமின்றி
சாந்தம் கொள்ள முகம்
கேட்கவில்லை மூச்சோடு வாழ
அகம் கேட்கிறேன் உன்னோடு வாழ
உன்னைப் பார்க்கும் முன்னே
உள்ளம் பார்த்தது என்னை
காத்திருக்கிறேன் காலம் கழிய
வந்து சேரு முதல் பார்வைக்காக.
73 தண்ணர்ீ மரம்

குடம் ஏறி இடுப்பில் அமர்ந்து


தலைவாரி வெளியில் வந்து
அண்ண நடையில் சாய்வு வகை
பயணம் மழைபெய்தச் சாட்சி
சுற்றுக் கிணறை குடித்தக் குளத்தில்
தெரியும் குடம் மூழ்கி முழுமை
கொள்ளும் தூக்கிச் சுமக்கும் படி
சுவை நிறைந்த தாகம் சொல்லும்
நீர் நிலையில் மரம் இருந்தது
வெயில் அலையில் நிழல்
தெரிந்தது வேர் இறங்கி மண்
புதைந்தது நிலத்தடி நீரும் மேலே
வந்தது கைப்பிடி கோடாரியின்
கோபம் மேகத்திடம் வாங்கிய சாபம்

அருந்தும் நீர் உருவம் பெற்றது


பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை
சந்தையில் விலைப்பட்டியலில்
தண்ண ீர் வந்தது தாகம்
வருவதற்கு முன் பயம் வந்தது
தண்ண ீரே உணவானது ஒரு நேரம்
பட்டினி கிடந்து தண்ண ீர்
வாங்குவது இந்நேரம்- இது
விளையாடும் காலம்
விதைப்பந்தோடு
வதி
ீ வதியாய்
ீ பசுமை வெற்றிக்காக
களம் இறங்குவோம்.
74. மார்ச் 8

பெண்ணியத்திற்கு ஒதுக்கிய நாள்


அவள் சேவையை செதுக்கிய நாள்
ஆயிரம் ஜென்மங்கள் அடைப்பட்டு
சாதிக்கும் சாத்தியம் தடைபட்டு
உறைந்து கிடந்தது முடிவை
எட்டியது
ஈரோட்டுப் பாட்டன் பாட்டைக்
கேட்டு
ஓடி வந்தீர்கள் சுயசார்பு
சுந்தரிகளாய் வெற்றியின்
முன்னால் வழிகாட்டி தோல்வியின்
பின்னால் மனம் தேத்தி உயரம்
தந்தவள் உயர்ந்து வந்தவள்
நில நீர்மையில் பெண்ணிருக்கும்
குணத் தீமையில் பெண்ணிருக்கும்
மனத் தூய்மையின் துளிர் சிரிப்பை
மருந்தாக தருவாள் தவித்த
நெஞ்சத்திற்கு மதுரையை
எரித்தவள் தீயணைப் பிடித்தவள்
பூமியை கொடுத்தவள் பெண்தானே

முதுகெலும்பில் பிறந்தவள்
கருக்கோலம் சுமந்தவள்
பிரசவ வலியில் வாழ்வை
அளித்தவள் ஆனந்தத் துயரத்தில்
மறுவாழ்வைப் பெற்றவள்
சக்திக் கொண்டு உழைத்தோம்
அச்சக்திப் பெண்தானே
மன புத்திக் கொண்டு பிழைத்தோம்
அப்புத்தி பெண்தானே
பெண்ணில்லா வடு
ீ தலைவன்
இல்ல நாடு தண்டவாளம் தவறிய
ரயிலானது தாலி வாங்கினாலும்
சமூக சீர்திருத்த வேலை
வாங்கினாலும் ஒழுங்குப் பெறுவது
உங்கள் கடமை பெண்ணிற்காக
ஆதிக்க ஆட்கள் பாதிக்காத
பக்கங்கள் தமிழ்ப் படைப்பாளி
பைத்தியம் எழுதுவது மகளிரே
மகள் நீரே வாழ்த்துவோம்
வணங்குவோம் தந்தையாய்
சகோதர நண்பனாய்.
75. குப்பை

நினைத்த இடத்தில் வசினோம்



கால நிலையத்தை மாற்றினோம்
புவியின் புனிதம் மண்ணில்
செவியின் கதறல் கேட்கும்
உலகமயம் வெப்பமயம்
உருக்குலைக்கும் நெகிழிமயம்
பனை ஓலையில் நீராதாரம்
உனக்கும் நிலத்திற்கும் சுகாதாரம்
பிளாஸ்டிக் புட்டியில்
குடிப்போரும்
சூழலியல் சுழற்சித் தடுமாறும்
அடைத்த உணவின் சட்டையைக்
கழற்றி சாலையில் போட்டு சீட்டு
வாங்கினோம் சிவலோகப் பதவிக்கு
குப்பையின் புகை வானைத்
தாண்டியது காற்றின் வடிகட்டி
ஓசோன் உடைந்தது சுத்தமான
இடத்திற்கு குப்பைத்தொட்டியின்
மூலை முடுக்கை மனித
மூளையில்
வைக்க வேண்டும் துடைக்கும்
சுத்தத் தொழிலாளியை துப்புரவு
எண்ணாதீர் சுகாதார மன்றத்தில்
துப்பும் உறவாகிப்போவர்.

76. பட்டிமன்றம்

அணிகள் பிரித்து தலைப்புகள்


கோர்த்து வாதாடும் வழக்குகள்
புதிர் வைத்த எதிர்பாரா
வார்த்தைகள் கேட்கும் ஆர்வத்தில்
அதுவா இதுவா எட்டும் சுமூகம்
மெதுவாப் பொருளின் நாயங்கள்
அறிந்து ஆராயும் நீதிபதி நடுவர்
மணிக்கணக்காய் மன்றாடி
கிறுக்கிய குறிப்பேட்டை கண் தேடி
விரிவான உரையாடல் வாதாடி
வாய் பிடுங்க எதிர்த்தரப்பு ஏமாளி
நளினப் பேச்சி நல்லரங்கின்
நிகழ்ச்சி நாக்கின் எழுச்சி
வாளின் வச்சி
ீ திரட்டியக் கருத்துகள்
இன்சொல் சிறப்புகள்
காதின் வழி இருவழிப்பாதை
தொடக்கத்தில் முடிவை அறிந்தவன்
மேதை சமூகச் சீர்திருத்தங்கள்
வாலிப அர்த்தங்கள் பொதுவான
பொருத்தங்கள் வாழ்க்கையின்
திருப்பங்கள் விவாதிக்க
விஷயங்கள் இருக்கிறது
வார்த்தைப் போருக்கு பேராசைத்
தொடக்கமல்ல அறியா மனிதனின்
தெரிகின்றப் பாசைகள்
பேச்சுப் பிழை பிடித்ததாக இருக்கும்
பாப்பையாவின் நடுநிலைப் பாடம்
பயன்படும் அறிவின் ஆழம்
லியோனியின் வாய்ப்பாட்டு
பண்திறன் பிடிக்கப் போகும்
எதிர்கால ஏணிகள் இறுதி
நிமிடம் நடுவருடையது
உண்மைத் தீர்ப்புகள்
திருப்பமுடையது ஒன்றுபட்டு
நீதி திருப்தியடைந்தது.
77. பல் துலக்கி பல வருஷம்

ஈக் காட்டி உமிழ்க் கூட்டி


பல்வரிசை ஒன்றுதிரட்டி
உதட்டை திறந்து ஊமையாய்
இருந்து சிரிப்பில் தெரிந்தது
முப்பத்திரண்டு அடுக்கு இடுக்கு
கடைவாய் கடைசி ஈருகளுடன்
நிர்பந்தம் எச்சிலுடன் ஒப்பந்தம்
உறுதி பிடிப்பு பிற்காலத்திலில்லை
எங்கிருந்தோ எனாமல்
ஒட்டிக்கிட்ட
வெள்ளை தேய்த்து வைப்பது
வாயின் உரிமை மறைந்து
தாக்குவது கிருமியின் வலிமை
முட்டை விட்டுத் தூஉனுத் துப்பி
அப்பி வைத்த ஒட்டுப் பசையால்
அசையாப் பற்கள் ஆட்டம் கண்டது
ஆலம் வேலம் புறப்பாட்டில்
மட்டுமல்ல பர்க்கட்டுகளிலும்
பரவிக்கிடந்தது சொத்தை
குழியெல்லாம் வாய் மறந்தது
இரும்பைக் கடிக்க
கருங்கல்லாய் இருந்தது கரும்பை
கடிக்க கடைவாய் நோகுது
பச்சரிசி படுகின்ற வயதில்
கசப்பு குச்சியை கையில்
கொடுங்கள் கரும்பைக்
கடிக்க என்பது வரும்.
78. பெண் பொட்டு

புருவ இடையில் உருகிய


நேற்றி மத்தியில் நிறுவிய
விரலை பிடித்து முகத்தில் பதித்து
கிழிந்த இமையின் அருகாமை
பிரிவு செவ்வான வண்ணங்கள்
துணைவி நெற்றித் தூரல்
உழவனின் உள்ளம் இருந்த
செம்மண்ணில் கிளறிய கீ ரல்
குங்குமம் குறுகிய வட்டமாகும்
அதுவே பொட்டுக்கு சட்டமாகும்
வியர்வை ஊற்றெடுத்து
கரைத்ததில் கலவரம் ஓய்ந்ததும்
காய்ந்து போகும் சாயும் சூரியன்
பெண்ணின் நெற்றியில் மறுநாள்
உதயம் மறந்தது பயணத்தை
உச்சி நெற்றி உணர்ச்சிமிக்கவை
கணவனின் கையால்
கண்டெடுத்தவை
அழகாய் அழியும் ஆனந்த
அமளியில் பரிமாறி பூசிய
மாறனின்
மஞ்சத்தில் பார்க்கும்
கண்ணாடியில்
சிந்திய உருவங்கள் பொட்டின்
பொருத்தம் மதத்தின் வழியில்
இல்லாமல் போகலாம்
அறிவியலின்
அழகில் முக்கியத்துவம் ஆகலாம்
நரம்பின் மய்யம்
நெற்றியில் கூடும் பொட்டின்
அழுத்தம் புத்துணர்வு சேரும்
சின்ன புள்ளியில் பொருளை
தேடுங்கள் உங்கள் உருவத்தை
பொட்டு தாருங்கள்.
79. மின்சாரம் காணாத தூரம்

கம்பங்கள் கால் வைக்காத காலம்


திண்ணைகள் வெறுமை காணாத
காலம் பகலின் வெளிச்சம் மாட்டு
சாணத் தாளத்தில் தொடக்கம்
விளக்கின் இரவு விடியலின்
திறவுகோல் பொடி நடையில்
சூரியக் கடிகாரத்தோடு சுற்றத்தை
நாம் காண சுற்றிய நேரத்தில் சுழல்
காற்றுடன் சத்திர சந்தர்ப்பம்
ஓய்வுக்கு களைப்பு சொந்தம்
வேசங்கட்டிய ஆட்டக்காரன்
அரசமரத்தடியில் கூட்டம் சேர்த்து
பாடம் நடத்திய புராணக் கதைகள்
பொழுது போக்கிய காட்சிப்
புதையல் ஏற்றம் இறைத்து விதை
விளைந்தது சட்டம்
இயற்றிய அண்ணல் காலத்தில்
மின்சாரமில்லை வாழ்க்கை
இருந்தது பொத்தானின் போக்கு
அழுத்திய பழக்கம் நம்மோடு
வந்தது
நமக்காக வந்தது அதை
பயன்படுத்தும் பகிர்வு
நம்மிடமில்லை
சேமித்து வைக்க தாராளமில்லை
அடுத்த தலைமுறைக்கு மிச்சம்
வையுங்கள் இல்லை மின்சார
கதையை நிலா கதையோடு
சோறூட்ட வைத்துக்கொள்ளுங்கள்.
80. கடிதங்களில் கடைசி வரிகள்

செய்திகள் பயணித்தது காகிதத்தில்


வார்த்தைகள் பிறந்தது இதயத்தில்
பேனாவின் முனை வாசம்
விடுநரின்
இணைப்பாசம் கசங்கிய
உருக்கக் கண்ண ீர்
வாசித்தவர் மனதில் பெறுவர்ீ
கல்வியின் பயனை படித்தவர்
கூட கடிதத்தின் கலையை கற்பர்
அவரின் நினைவை
நினைப்பவரிடம் கொடுத்து
இயற்றுவர் எங்கோ இருப்பவருக்கு
சிவப்பு பெட்டி வாய் திறக்கும்
எழுத்துக்களின் பசியை
உரியவரிடம் கசிவதற்கு
காக்கி தபால்காரன் விலாசம்
அரிவான் அஞ்சலையெடுத்து
பார்த்து விடுவான் உரைமேல்
முகவரியை
கதவை தட்டிய கடிதத்தை
கைச் சேர்ப்பான்

கடிதத்தில் பாசம் இருந்தது


பகை இருந்தது எதிர்பார்த்த தேவை
இருந்தது அத்துமீ றிய அன்பின்
ரத்தம் இருந்தது எதிரியின் சூழ்ச்சி
நிறைந்த சூனியமும் வைத்திருந்தது
ஏட்டு பழக்கத்தை மூட்டை
கட்டினோம் தபால் புழக்கத்தை
தீயில் வாட்டினோம் பேச்சுக்களைக்
குறைத்தோம் மன இறுக்கத்தை
வளர்த்தோம் எழுத்துக்கள்
எழுப்பியது மன உறக்கத்தை
இன்று இணையங்கள் முனைப்பு
காட்டியது இணைக்கும்
கருத்துக்களை கிழிக்கும் அழிவு
அம்சங்களாய் இன்றும் கடிதங்கள்
வாழ்கிறது அழகிய ட்விட்டர்
பக்கத்தில் ஆனால் காகித சுதந்திரம்
இன்றில்லை இனி அதுவும்
கடிதங்களின் கடைசி வரிகள்
முடிவுரை முடியட்டும்.
81. காவல்துறை உங்கள் நண்பன்

முத்திரைப் பதித்த நட்சத்திரங்கள்


கறைப் படியாத சரித்திரங்கள்
களவாணியைப் பிடிக்க
களவாணியாக
மாறிய காவல்துறை
சிங்கத் தலையில் அங்கத்தை
வைக்கும் காக்கித் துறை முயற்சி
பயிற்சிக்குப் பின் பணி
புரட்சி சமுதாயத்தில் சீருடை அணி
உறக்கத்திலும் துப்பறியும்
கவனங்கள் ஆவணப்படுத்தும்
ஆராயும் தகவலை
விருப்பமடைந்த சேவையில்
பொறுப்பு சேர்க்கும் வேலையில்
விடுப்பை எடுத்து துப்பாக்கில்
வையுங்கள் உபயோகத்தில்
வெடிக்கும் அன்பு நிறைந்த அதிகார
வேலைக்காரன் கையூட்டு
கலாச்சாரம் கலங்கப்படுத்தும்
காவல நண்பனே கடமையில்
நேர்மை அவதாரமெடுக்கும்
நம் மரியாதை மண்ணில்.
82. விழாக்காலம் புதுத்துணி

வருஷத்தில் மூன்று ஜோடி


கந்தலானாலும் மானம் தேடி
விழாக்கள் பூத்தது வரிசையாக
உடுப்பு எடுப்பது பரிசாக
தபால் ஓட்டை
அழுக்கு மூட்டை துணிகளெல்லாம்
தூக்கி போடு புதுசாக உடுத்தி
ஊரை சுற்றி சிங்கார நடையில்
அழகுப் போட்டி தந்தை வேட்டியில்
நூல் பிரிந்திருந்தாலும் மகன்
சூட்டில் ராஜாங்கம் இருக்கும்
கடைக்காரன் எடுத்துப் போட்ட
எல்லாம் பிடித்தது சுருக்குப் பையை
நெருங்கும்போது மலிவைத் தேடுது
ஆண்டு முழுதும் ஆண்டு வரணும்
சூளைமண் கறையும் ஒரே அலசில்
போகணும் சினிமா பிரபலம்
காதல் காட்சியில் போட்ட
துணியை
போல் இருக்கணும் அந்தத்
துணியில் அவரைப்போல்
நானும் நடிக்கணும்

பாவாடையில் பட்டுக் கறை


இருக்கணும் பூ பின்னல்
பூத்துக்குலுங்கும் தாவணியில்
குட்டிமணி அடித்த மணியில்
அலங்காரம் தெரியனும் புடவைக்கு
ஒரு வாய்ப்பு தமிழச்சியின் பெரும்
பொறுப்பு உடலை மறைக்கும்
உள்ளூர் ஆடைகள் உங்கள்
சலிப்பில் காஞ்சியிலிருந்து
கல்யாணத்திற்கு திருப்பூரிலிருந்து
பஞ்சாக ஒட்டிக்கொள்ள

காந்தி சுற்றிய ராட்டினத்தை


நெசவாளன் நேசித்துவிட்டான்
வந்தவாசி பாயில் வண்ண வண்ண
உறக்கத்தோடுப் பருத்தியையும்
சேர்த்துவிடுங்கள்.
83. வேலை இல்லை

எப்பவோப் படிச்சி பட்டத்தை பிடிச்சி


வதிக்கு
ீ வந்து பிழைப்பைத்
தேடினோம் நரைத்த முடி உதிரும்
வரை ஆட்சி மாறியது விலைவாசி
ஏறியது சொன்னதை
செய்யவில்லை செய்யவும்
பணித் தரவில்லை முதல் பட்டதாரி
குடும்பமே அவனை நம்பி
சம்பளத் தேதி சோறு இறங்கும்
நேரத்தில் அப்பாவின்
புராணம் தண்டச் சோறு எனும்
தலைப்பில் சமூகப் பார்வையில்
வெட்கம் விட வேண்டும் கேட்கும்
கேள்வியில் துக்கப்பட வேண்டும்
திறமை இருக்கிறது
சும்மா இருக்கிறோம்
வித்தை இருக்கிறது
வட்டில்
ீ இருக்கிறோம் வாய்ப்பு
வந்துவிட்டால் வானம்
படைக்கிறோம் சீராய் இயங்கும்
இயந்திரம் மேகங்களாய்.
84. அழித்துவிட்டால் அழகாக

வண்ணத்துப்பூச்சிகளின் வரவுகள்
இனிய இன்னல்களின் தரவுகள்
பெண்ணருகே பஉடுருவினேன்
முன்னால் வந்து உடல்
இருக்கினேன் ஆரம்ப வார்த்தை
அரை மௌனம் நேசிக்கிறேன்
உன்னை நேரடியாக
சொல்லிவிட்டேன் முழி மாறியது
குரல் ஏறியது நீயா என்னைச்
சீயென்று
சீறினாள் சொற்களின் விதியை
மீ றினால் அகத் தோற்றம் பார்த்து
புற மனதை மறுத்தாய் அழகே
அன்றே புரிந்தது அழகென்பது
தொலில் இல்லை பாலின வயதின்
பக்குவத்தில் இருக்கிறது
தெரியாமல் தேர்ந்தெடுத்துவிட்டேன்
அறியா மகளின் வளராத
முடிவுகள் தேராத வாழ்க்கையில்

வாய்ப் பேச்சை கொடுக்கென்பேன்


கொட்ட கொட்ட மரணம் நிகழும்
மறுபிறவி உடனே திகழும்
உப்பள ஆவியை அன்றாடம்
சுவாசிப்பாயோக் கோபம் சற்று
தூக்கலாய் இருக்கிறது பச்சை
பிள்ளையாய் அழ வைத்தாய்
பாசிப் பாதையில் விழ வைத்தாய்
அடம்பிடிக்க ஆசையாய் இருக்கிறது
உன்னை நினைத்தல்ல மறந்தும்
நினைக்காமல் இருக்க காதல்
வலியின் காயங்கள் வேண்டும்
உன்னைப்போல் பெண் மாதிரி
இன்றுடன் இல்லாமலிருக்க
இகழ்ந்துவிட்டாய் உகந்தவனல்ல
என்று பார்ப்பாய் என்னை
நல்ல காலம் வரும்பொழுது
சாவித்திரியின் சாயலில்
கண்ணகியின் கலையோடு
தம்பதிகளாய் வளமான
வாழ்க்கையை திமிராலே
அழித்தோமென்று.
85. வள்ளுவம் வாசிப்போம்

முப்பால் ஊற்றிய பொதுமறை


வாழ்வியல் ஏற்றிய வழிமுறை
இன்பம் வட்டோடு
ீ அறம் நாட்டோடு
பொருள் மனதோடு இருக்கட்டும்
நூறோடு முப்பத்திமூன்று
காலத்தில் திருவள்ளுவர் ஆண்டு
பத்து பத்தாக பிரித்து பற்று போடும்
அறிவை கலங்கள் காணாத
மனங்கள் மொழி வளர்ப்பு
மொழிபெயர்ப்பு மொழி கற்ப்பு
சர்வதேசம் கண்டது போப் எனும்
தமிழ் மாணவனால் சுருங்கிக்
கொண்ட அடிகள் கால் பங்கில்
இரண்டாகும் ஹைக்கூ போல
ஒன்றாகும் வாசுகியின் தலைவன்
வழங்கிய பொக்கிஷம் ஒருநாள்
ஒரு குறல் உலக
குறிப்புகள் நுனிவிரல்.
86. மீ னவம்

வலை வசிய
ீ வகையறா
தலைதூக்கிய கடல் சுறா
நட்சத்திரம் விழுந்து மீ னானது
வானத்தின் வரைபட நகலானது
புதைமணலில் கால் வைத்து
சதை மனதை சீல் வைத்து
தேவாலய மணி அசைவில்
தெய்வகம்
ீ தேடிய மீ னவர் கட்டுமர
கட்டுக்கள் மூங்கில் பிணை
தட்டுக்கள் ஏலேலோப் பாட்டுகள்
துடுப்பை எடுத்து நீட்டுங்கள்
திசையின் விசையை மாற்றுங்கள்
சிக்கு வலையை தோளில்
ஏற்றுங்கள் எழுந்து விழும்
அலையில் தவழ்ந்து நகரும் படகில்
நீரோடு ஓட்டப்பந்தயம் ஓடாத
மீ னுக்காக நீந்திய கடலுடன்

என்னை வடியும் முகம் பரல்


சிக்கிய
நகம் குடித்தனம் குப்பத்து குடில்கள்
திறக்கணும் மீ னோட செதில்கள்
சிப்பிக் குகையில்
முத்துச்சிங்கங்கள்
உருக்கும் நகையில் ஒன்றாக
சேருங்கள் கப்பலை ஓட்டுங்கள்
தூண்டிலை போடுங்கள்
மழைக்கால மாதங்கள் புயல் சேத
காயங்கள் காயட்டும் கடல்நீரில்
சிங்களத்தான் சீண்டிப் பார்ப்பான்
சிங்கத் தமிழனைச்
சாய்க்கப் பார்ப்பான்
பாண்டிய கொடியில் முள் மலர்கள்
நாம் கட்சதீவை உரிமையென்போம்
லட்சம் முறை நாயமென்போம்
ஊருக்கே உப்பு போட்ட உவர்
மக்கள்
தோனியின் தோன்றிய
கடல்மட்ட சொந்தங்கள்.
87. மழை நம்மோடு

கொழுந்துவிட்டக் கோடை
கால் உடைந்த ஓடை
கருமேகங்கள் கரையும் நேரம்
வெடிப்பு தரையில் வெள்ளம் ஊரும்
ஓட்டின் ஓரத்தில் கொட்டும் நீரால்
அருவியின் ஆனந்தம் அந்நேரம்
வாழை இலையில் சறுக்கல்
சாகசம்
இரும்புத் தகடு தட்டும் வான் நீர்
சொக்கிய காது சாரல் சன்னலில்
சகதியினா மேல் வேடிக்கை
அள்ளி பூசவேண்டும் சந்தனத்தை
மின்சாரத்தை பறிகொடுத்து
வாய் வார்த்தையை படமெடுத்து
ஓட்ட வேண்டும் இருட்டு நிழலில்
மழைக்காலத்தில் துவைத்த
துணியைக் காய வைப்பது
இயல்பான மழையை
எதிர்பார்ப்பதும் எளிதான
காரியம் அல்ல.
88. பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஒரு படி வசந்தம்


அடுத்தடுத்து வளர்ந்தோம்
அறுபட்ட தொப்புள் கொடி
துளிர்விட்ட அனுபவச் செடி
அம்மாவின் வழியறிந்து பிறந்த
கணமே அழுதோம் தாய்மையின்
சுகம் கொடுத்து மடி அணையில்
தமிழன் என்றோ ஒருநாள்
பிறந்தோம் வருடத்தில் வரும் நாள்
அது பிறந்தநாள் இது பிறந்த நாள்
தெரிந்த நாள் தத்தித் தத்தி நடந்து
அப்பாவின் சுண்டுவிரல் கைபிடித்து
யானை சவாரி ஆசிரியர் ஆனவரா
கற்பித்து நடை போட்டு விழுந்ததில்
வெற்றி பிறந்த நாள் முதலே
மெழுகுவர்த்தி ஏற்றினோம்
வாழ்த்துக்கள் வழங்கினோம்
வெட்டினோம் பிச்சி முகத்தில்
அப்பினால் என்ன கண்டீர்கள்
ஈ மொய்ப்பதை தவிர
கொண்டாட்டம்
எனும் பெயரில் வந்துவிடுவார்கள்
புட்டி நண்பர்கள் தள்ளாடுவார்கள்
கூட்டு சேர்த்து பட்டாக்கத்தி
வெட்டுகள் நல்லவனுக்கு அழகல்ல
சண்டி தனத்தின் வகை
பிறந்தநாள் பரிசுகள் வழக்கத்தில்
உண்டு மிட்டாயை முழுங்கி
வேலையை முடிப்பதில்
என்ன கடமை உள்ளது பூமிக்கு
வதிக்கு
ீ ஒரு கன்று பிறந்த
நாளன்று
ஒவ்வொருவருக்கும் உருப்படி
புத்தகம் சந்ததியில்
பிறப்பவையெல்லாம் கொண்டாடும்
பிறந்தநாளை அவர்களுடையதல்ல
உன்னுடையது.
89. பானை

மண்ணாங்கட்டி தூளாத் தட்டி


தண்ணிக் கொட்டி சேராகப் பிரட்டி
சேத்து மண்ணில் குஸ்தி நடனம்
குழவனுக்கும் இஷ்டம் வரணும்
புளிச்சி வரும் புடிச்சி செய்து
சக்கரத்தை சுற்றி தட்டிக் கொய்து
முழு உருவத்தை காயாமல்
காட்டும்
வெயிலுக்கு விண்ணப்பம் நீட்டும்
சூளையில் சுருண்டு வெந்ததும்
உருண்டு உலை எடுக்க திரண்டு
வரும் பொங்கலுக்கு மட்டும் தானா
பொங்க வேண்டும் உங்களுக்காகத்
தானே அரிசி கலையும்
போதெல்லாம் அடுப்பில் அமரட்டும்
சில்வர் சீற்றங்கள் மாற்றங்கள்
ஆகட்டும் பீட்சாவை பிரித்து
திணைக்கு திரும்புவோம்
மண்பாண்டங்களையும் மண்
வாசனையையும் தூண்டுவோம்
குழவனின் குமுறல் உலோகத்தை
உதறல் வடித் தண்ண ீரில் மூன்று
நாள் பழகட்டும் நெடி மிளகாய்
கீ ரையை கடையட்டும்.
90. வட்டுக்கு
ீ விருந்தாளி

வெறிச்சோடிய வடு

வறுமை ஒழிந்திட வேண்டும்
வயிற்றுக்கு ஆறின கஞ்சி
ருசி தேடாது பசிக்கு அஞ்சி
வட்டிற்கு
ீ வருகை விருந்தாளி
வாசலில் கதவு கருங்காலி
முகத்தில் சிரிப்பு வட்டினர்

காணாத சிறப்பு ஒருவகை
ஒற்றுமை நடிப்பு அங்குலப்
பாயை தாழ்வாரத்தில் விரிப்பு
படி சொம்பில் பதநீர் பகிர்வு
கவனிப்பு நலன் விசாரிப்பு
பங்காளி பகையாளி
வேண்டியவன் வேண்டாதவன்
செத்தவன் சாகாதவன்
ஏன் அவர்கள் வட்டு
ீ பசுமாடு
கன்று போட்டது வரை
கதை அளப்பார்கள்

ஆம்படியான் பொன்டாடியின்
கௌரவ சண்டை உறவாளி
ஊர் திரும்பும் வரை
அடங்கியிருக்கும் கோபம்
தணிந்திருக்கும் வந்தவருக்கு
ஆக்கி போடவேண்டும் உப்பு
மிளகாயில்லை ஊறப்போட
அரிசியில்லை அண்ணாச்சி
கடையில் நிலுவைக்கு வாங்கி
சிக்கனச் செலவில் பதார்த்துடன்
விருந்து வயிறுமுட்ட வாயிலடக்கி
இறுதியில் இலையை மடக்கினர்
பல்லில் குச்சியைத் திருகினார்
உறவென்றாலே சிறு வெட்கம்
இருக்கும் அவ்வட்டு
ீ குமாரர்களுக்கு
அதுவும் அத்தை மாமனென்றால்
சற்று கூடவே இருக்கும்
கிளம்பும்போது சும்மா கெடைக்காம
என்ன செய்யற? அடுத்து என்ன?
என்று கொளுத்திவிட்டு போவார்கள்
ஆறுவதற்கு அரை நூற்றாண்டாகும்.
91. கூட்டுக்குடும்பம்

ஒரு குடும்பம் பெருங் குடும்பம்


ஊரில் குடும்பமில்லை ஊரே
குடும்பமாய்
இருக்கும் சொந்தங்களின்
அகராதி குடில் இல்லங்களில்
நாகரீக மடல் ஒரு உலை அடுப்பு
சோற்று மலை குவிப்பு
உண்பதற்கு வாய் ஒன்றுதான்
அள்ளி ஊட்டுவது பலகையாக
இருக்கும் தாய் போல தவிக்கும்

அக்கா சொல்லி தந்த பாடம்


பரிட்சைக்கு மட்டுமின்றி வாழ்க்கை
சுழற்சிக்கும் பொருந்தும் பல்
துலக்கையில் பற்பசையை விழுங்க
அண்ணன் கூட்டு வைக்க அவன்
கையை நான் கடிக்க
வேடிக்கையான சண்டை வேலியிட
ஆளில்லை அம்மா அப்பாவின்
சலசலப்புக்கு தாத்தா கிழவன்
பஞ்சாயத்துத் தலைவர்
கழிவறைக்கு வரிசை காத்திருப்பு
காலையில் கடமை பரபரப்பு

தப்பு செய்தால் தண்டிக்க மூத்தோர்


இருந்தனர் பயமும் இருந்தது பாசம்
பகிர பக்கத்தில் இருந்தனர்
துளியளவும் துக்கம் தீண்டவில்லை
நெருக்கம் சற்று விலகிவிட்டது
உறவும் விட்டு பிளவுபட்டது தனித்
தீவுகளில் தனிக்குடும்பம் இனி
வாழ்வது கூட்டத்தில் தனித்து
கூட்டு
குடும்பத்தை குழியிட்டு புதைத்து
பாட்டி கதையில் கேட்போம்
கூட்டுக்
குடும்பத்தை மடியில் அல்ல
காணொளி திரையில்.
92. களையெடுத்த கள்ளி

ஜோடி மாட்டை ஏறு பூட்டி


காஞ்ச மண்ணில் புழுதி ஓட்டி
உழவுக்கு வந்த வாலிப விவசாயி
சேற்றி சிவந்த சின்னவள் பாதம்
சில்லுனு சிரிக்கும் மார்கழி மாதம்
பாவாடை இழுத்து இடுப்பில்
செருகும் கீ த்து மாளிகையின்
குறைவற்ற செல்வம்
வெட்டிபையன்
வெத்தலையை மெள்ளவா
மெதுவா வந்து இடுப்பை கிள்ளவா
கஞ்சி குடிக்க களத்து மேட்டுக்கு
வா
தொட்டுக்க உதடு கொடு சத்த
நேரம்
மடியில் படு கனவில் நான்
வருவேன் களையெடுக்க
வந்த புள்ள ஆலயெடுத்து
போன புள்ள அஞ்சாத ஆன் மனச
பஞ்சாக்கி பரந்த புள்ள புல்லெடுத்து
மாலை பின்னி பூவாக
நான் தொடுப்பேன் ரிப்பன் வைத்து
கட்டியது சிகையை மட்டுமா
என் விழியையும் தானா
வெள்ளாமையில் நாட்டமில்லை
மூட்டைக்கு வந்து சேரவில்லை
வயிறு பசிக்க அச்சம் வருது
நாட்கள் கடக்க நஷ்டம் வருது
கிராமத்தான் வாழனும் பாடி
நல்லவன் தாலிக்கு வாடி.
93. வாடகை வடு

சொந்தங்களோடு வடு

சொந்தமில்லை தூக்கங்கள் தந்த
கனவில்லை உள்ளுக்குள் இது
அடுத்தவருடையது வாசலுக்குள்
வலி வாட்டியெடுப்பது
மாதம் ஒருமுறை
மொழி வைக்கணும் வாதம்
வறுத்தெடுக்க பஜனை கேட்கணும்
விழாக்களும் முழுமை பெறாது
வாழ்க்கைக்கும் புதுமை வராது
சுவற்றில் ஆணி அடித்தாலுமு
கடிகார மணி அடித்தாலும் நெஞ்சில்
கடப்பாரை துளைத்ததை
போலிருக்கும் போராட்ட
புகலிடத்தில் ஈசல் புற்று போல
இடம்
சுதந்திரத்தை சுட்டுத் தள்ளிய இடம்
விருந்தாளியின் விருந்துக்கு கூட
விண்ணப்பம் போட வேண்டும்
ஒற்றை வாசலில்
ஒண்ட விட்டவனுக்கு

உழைத்த பணம் வயிற்றுக்கே


பாக்கி வைக்க எங்கிருந்து
சொந்த வடு
ீ உண்பதுஒரு பருக்கை
ஆனாலும் அரை பருக்கையை
சேமித்தால் அடுக்குமாடி ஆசைகூட
உண்மைக்கு வரும் ஈரிரண்டு
பக்கச்சுவர் சொல்லிய உண்டியல்
உபதேசம் மனதில் மாளிகை
கட்டினாலும் மண்ணில்
குடிசையாவது
பின்ன வேண்டும் கிழக்கின்
வெளிச்சம் தன் வடு
ீ கோலத்தின்
விழவேண்டும் மேகம் கரைந்து
தன் வடு
ீ கழுவ வேண்டும்
உறக்கத்தில் உலகை மறக்க
வேண்டும் தனக்கென்ற வட்டில்

தலை வைத்து சாயும் போது.
94. காதல் எனும் பெயரில்

அலைபாயும் வயசின் நேரம்


பக்குவத்தின் பக்கத்தில் தூரம்
ஆசைகள் அவிழ்ந்த மனதை
சுத்தவிடும் வேண்டாத உலகில்
அப்பன் சொல்லித்தந்த பாடம்
ஆத்தாள் சொன்ன புத்தியும்
எடுபடாது எல்லையை கடந்தபின்
வார்த்தையில் பொய்மை ஓடும்
பார்வையில் தனிமை தேடும்
புன்னகை மொழியை களவாடும்
பொழுதுகள் சீரற்ற காலத்தில்
வற்றிய கண்ண ீரோடு கழிக்க

குழந்தை பெண் குமரியாவாள்


குணத்தை சுமந்து வழியில்
போவாள் வட்டின்
ீ நினைவு
மெள்ள அடங்கும் கண்ணில்
படுவான் காணாமல் போவதற்காக
பின்னாலே வருபவன் சொல்லாலே
இனிப்பவன் இன்றி வாழ்க்கை
இல்லை என்று நிறுத்துவான்
உன்னை வயிற்றில் பிள்ளையோடு
காதல் எனும் பெயரில்.
95. ஆங்கிலம்

மொழி ஞாயிறு மண் உயிரு


கண் மறைவு கேட்க குறைவு
பிழைக்க வந்தவன் பிடித்து வைத்து
குளிர் தேசத்து கொட்டம் எல்லாம்
வெப்ப மண்டலத்தில் அடித்தவன்
தோற்றவன் பழமை
வலிமையென்று
சிரமப்பட்டு ஏற்றவன்
இருநூற்று நாற்பத்தேழை வழ்த்த

இருபத்தி ஆறா கல் உருண்டையை
கண்ணாடி உடைப்பதா காவேரி
பாலத்தை குண்டூசி இடிப்பதா
முதலில் கணினியில் ஏறினாய்
பின்னணி கண்டறிந்தது உங்கள்
ஊர்க்காரன் வார்த்தைகள்
கடன் வாங்கியது உலகெங்கும்
உங்கள் கை ஓங்கியது சேக்ஸ்பியர்
நாடகம் நடத்தியது வள்ளுவன்
வருகைக்கு அப்பால் தானே
இனிய மொழி சர்க்கரை மொழி
எங்களிடம் கரும்பு உள்ளது
சுவைக்க தமிழ் உள்ளது.
96. தாலாட்டும் குழல்

மூங்கில் துண்டின் குழல்


விரல் தண்டின் சுழல் உதட்டில்
உஷ்ணத்தில் உருகிய உயிர் காற்று
ஓட்டையை மூடித் திறக்கையில்
இழைந்தது தாங்காத நெஞ்சம்
உருகி உருகி பாதியாக குறையும்
ஏழு எட்டிய ஆரின் துளையில்
தூங்காத விழிகள் மூடிக்கிடக்கும்
சுவாசித்த குழல் அலையில்
பிருந்தாவனத்தின் பிடிபடாத
பூவையை தேடி போவதில்லை
மயக்கும் கருநீலன்
புல்லாங்குழலை
எடுத்து இதழில் வைத்தால் மேகம்
கருத்து கலைந்தது சிரிக்கும்
சத்தங்கள் பெண்ணின் இஷ்டங்கள்
மாதவனின் மடியில் இனிய
இசைக்கருவி மழலையின் மொழி
பரவி ஈடு கொடுக்க முடியவில்லை
யாழோடு இணை சேர்ந்தும்

காவேரி மொட்டு தரையில் நான்


எடுத்து வாசித்த பொழுது வசப்பட்ட
வாசமலர்கள் எசப்பாட்டு என்னுடன்
பாடும் தோகை வண்ண மயில்கள்
மஞ்சப் பூ மரக்கிளையின் அமைதித்
தூக்கம் தெரிகிறது அடக்கி வாசிக்க
வருத்தம் கரை கடைசி நுரைகள்
வெடிக்கும் சத்தம் என் இசையில்
பக்கவாத்தியம் தனிமை வரம்
கேட்பேன் தலைவனிடம் தவம்
கிடப்பேன் இசைந்து இசைந்து
இறுக வேண்டும்
மூங்கில் துளையில்
அடங்க வேண்டும்.
97. எருது

சங்கிலி மணி உலுக்க


மூக்கணாங்கயிறு முறுக்க
பாட்டன் சொன்ன என் அப்பன்
இவன் வால் வளைந்து முதுகில்
அடித்த அரைசதம் சாணி
உருண்டை
மண்ணில் சிதறிய பச்சை எரிமலை
திமில் எழுப்பும் சத்தம் சண்டைக்கு
சீரிய அறைகூவல் சொன்னது ஒரு
வார்த்தை அம்மாயென்று அன்பில்
தழுவ தலையிடும் சொந்தங்கள்
தமிழ் தலைமுறை பீட்டாவின்
பிடிவாதம் பொடிப்பட்டு போனது
கடற்கரை திறலில் ஜல்லிக்கட்டு
ஜலங்கள் வாடிவாசல் காலங்கள்
பாய்ந்தது ரேக்ளா ரகளை
ஜாட்டிகோல் வேகங்கள்
மாட்டு வண்டி மனிதன்
மஞ்சுவிரட்டு
பின்னால் விரட்டு முனை
கையிறை
முந்தி பாரு முடிந்தால்
கொம்பை தொட்டுப் பாரு.
98.கடவுள் ஒழிக

முக்கால் மனிதன் அரைகுறை


பிறப்பு ஒரு கால் ஊன்ற மறுகால்
இல்லை யோகமொன்று பாகமாகும்
படைத்தவர் வாழ்க்கையில்
என் வாழ்க்கையில் பாகம்
அனைத்தும் சோகம் சேர்த்து
எழுதியவன் யோகிதையற்ற
இறைவன் வெயிலடங்கி
குளிர் வரும் பணி பனி இறுகி
மழை வரும் துயர் தொலைந்து
இன்பம் வரும் கால காலங்கள்
காத்திருந்தேன் நம்பிக்கையில்
வெம்பி கிடந்தேன் நாதி இல்லை
நல்லதொடு அல்லது மட்டும்
கண்ண ீரோடு கடக்கும் நாட்கள்
நஞ்சை பிசைந்து ஆகாரமாகும்
நாள்காட்டி பார்த்தும் நல்ல நேரம்
இல்லை கைகூப்பி பணிந்தும்
கரிசனம் இல்லை தரிசனத்திற்கு
கூலி கேட்கும் கலிகால கடவுள்
ஈரளவும் புண்ணியம் இல்லை

என்னைப் படைத்தது
பொழுதுப் போக்கிற்காகவா
சோதனை செய்வதை
சாதனையாக கொண்ட
வேதனை ஜென்மங்களே
புரோஜனம் இல்லை புவியில் வாழ
நரகத்திற்கு சென்றால் நல்லது
நடக்குமோ என்னவோ எடுக்கும்
முயற்சிகள் முருங்கக் கிளையாய்
முறிந்தது வாழ்க்கை சுழற்சிகள்
சதுர சக்கரம் போல் சுத்தாமல்
அழிந்தது புத்தி பக்தியை பழித்தது
ஆன்மீ கத்திற்கு எதிராக பிரச்சாரம்
செய்வேன் கருவறைக்குள்
மண்ணள்ளி துற்றுவேன் பிற்பிறப்பு
சந்தோச படைப்பாய் இருக்க
வேண்டும் முறையிடுவேன்
சாத்தானிடம் கடவுள் ஒழிக என்று
கோசமிடுவேன் ஆத்திரம்
அடங்கும்வரை.
99. காலனி ஆதிக்கம்

வாசப்படி ஓரம் ஒதுக்கம்


மிதியடி ரப்பர் பதக்கம்
ஒரு ஜதை ஒரு ஆளுக்கு
வரநடை
ீ விதிப்பு காலத்து
முதலில் முன்னாள் வலதின்
வழக்கம் தயக்க கண்ணால்
தோல்வி கொடுக்கும் முள்ளின்
மூக்கு முழுநேர வேலை அருந்த
செருப்பு பதம் பார்க்கும் காலை
உரசிய நடையில் தேய்மான சாலை
கல் மோதி கவிழ்த்தது ஆளை
செருப்பு மாலை அணிந்தால்
அவமானம் அயோக்கிய சேவைக்கு
பதவி பிரமாணம் போகாத
இடம் இல்லை ஒரு அரை மறுப்பு
ஆரிய அட்டகாசம் அதிலும் இருக்கு
ஒத்த செருப்பின் ஓட்டம் விருதை
தந்தது பார்த்திபனுக்கு உன்னை
தைத்து பழக்கம் வல்லரசு
வசமானது ஆபிரகாமுக்கு.
100. பால் கறவை

மணி நாலு கரந்த பாலு


முளை குச்சி அடிச்சி கட்டிய மாடு
அவிழ்த்த முடிச்சி முதலில்
கன்றுக்கு
சமஞ்ச பொண்ணு லிட்டர் அழகு
முட்டிக்கால் போட்டு பாத்திரம்
நழுவு
எட்டி உதைக்கும் ஆத்திரம் பழகு
விளக்கெண்ணெய் மடி தடவி
காம்பை இழுக்க வழவழ பார்த்து
நகம் பட்டுவிட போது லட்சுமிக்கு
வலிக்கும் மூக்கு மேலே தீவன
திட்டு
பொன்னி தவிடு ஒரு படி கொட்டுது
கல்ல புண்ணாக்கு ஊறிய புட்டு
கறவை மாட்டுக்கு கஞ்சித்தண்ணி
சத்து வடுதோறும்
ீ மாடு இருந்தது
அதோடு நல் உறவு இருந்தது
தென்னை தென்றலடித்த
அன்றொரு காலம் சாணி அல்ல
சந்தர்ப்பம் இல்லை
பஞ்சகவியத்தில் வாசமில்லை
பொட்டல பாலின் கட்டளை
புட்டியில்
பாலை தூளாக்கி கரைத்தது
பாலில் தண்ண ீர் கலந்தால்
கிடைத்த தண்டனை ரத்தத்தை
பாலாக்கி கொடுக்கிறது பசுவின்
வேலையப்பா பாலில் தண்ண ீரை
கலக்கிறது மனிதனின்
மூளையப்பா கவிப்பேரரசு வரிகள்.

You might also like