You are on page 1of 13

உலகத்தமிழ் ஜோதிடர்கள் மஹாசபை

பயிற்சி மையம், சென்னை


அரசு பதிவு எண்179/2016
அடிப்படை ஜோதிடவியல்

இளநிலை ஆய்வுக்கான தகவல் திரட்டு 10 வது குழு

தலைப்பு சுக்கிரன்

பங்களிப்பு ரா.சுந்தர்ராஜன்

மதிப்பெண்

பேராசிரியர் சண்முகவேல் ஆதித்யகுருஜி

வாழ்க வளமுடன்

1
முன்னுரை

குருவிற்கு அன்பு வணக்கம்.

எனது பெயர் சந்தர்ராஜன். நான் இந்த உலகத்தமிழ் ஜோதிடர்கள் மஹா சபை பயிற்சி
மையம் மூலம் ஜோதிடம் கற்றுக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். என் குரு
திரு.பத்மநாபன் அய்யா மூலம் கற்றுக்கொண்டதில் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன்.
எனக்கு தந்த இந்த பிராஜக்ட் ‘சுக்கிரனை‘ பற்றி என் ஆய்வினை அய்யாவிற்கு
சமர்பிக்கிறேன்.

2
பொருளடக்கம்

1. சுக்கிர பகவான் 1

2. சுக்கிரன் பார்வை 2

3. ஜோதிடத்தில் சுக்கிரனின் பங்கு 3

4. காரகத்துவங்கள் 4

5. சுக்கிரன் நின்ற பாவ பலன்கள் 6

6. உதாரண ஜாதகம் 9

7. சுக்கிரன் குனசீலங்கள் 10

3
சுக்கிர பகவான்

சுக்கிர பகவான் நவகோள்களின் பொருள் அணி குரு ஆவார். இவர் அசுர குரு என்று
அழைக்க படுபவர். இவர் எப்பொழுதும் சூரியன் மற்றும் புதனோடு சேர்ந்து பயணிப்பதால்
இவர்கள் முக்கூட்டு கிரகங்கள் என்று அழைக்கப்படுவார்கள். சுக்கிரனின் நிறம் பால்
வெள்ளை. ஆகாயத்தில் விடியற் காலையில் இவர் பளிச்சென்று மின்னுவதால் இவரை
விடிவெள்ளி என்று அழைப்பார்கள்.

இவருக்கு ரிஷபம் மற்றும் துலாம் ஆட்சி வீடுகள் ஆகும். துலாம் மூலதிரிகோன வீடாகும்.
மிதுனம், மகரம், கும்பம், கன்னி நட்பு வீடுகள் எனினும் கன்னியில் இவர் நீச்சம்
அடைவதால் பலம் குறைவு. இவர் குருவின் உபய வீடான மீனத்தில் உச்சம் அடைவார்.
இவருக்கு சனி, புதன், ராகு முதல் தர நட்பு கிரகங்களாகும்.

சுக்கிரனின் தசாஆண்டு 20 வருடமாகும். அவருடைய கோச்சார சஞ்சார காலம் ஓரு


ராசியில் 1 மாதம் ஆகும். சுக்கிரன் தான் நின்ற வீட்டிலிருந்து 7 ஆம் பார்வையாக
7 ஆவது வீட்டை பார்ப்பார். இவரது பார்வை சுப பலன்களை தரும்.

சுக்கிரன் பார்வை

வேத ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு அரைப்பார்வை மட்டுமே உண்டு என்று


குறிப்பிடப்பட்டிருக்கிறது.

1
இதற்கு காரணம் இவர் மஹாவிஷ்னு வாமனராக அவதாரம் எடுத்து அந்தனர் போல்
வந்து அசுர குல மன்னன் மஹாபலியிடம் மூன்று அடி கேட்டபோது, வந்திருப்பது
பகவான் விஷ்னுவே என்று அறிந்த அசுர குருவான சுக்கிராச்சாரியார், மன்னனை
தடுத்தார். வந்திருப்பது சாட்சாத் நாராயணனே என்று கூறினார். மன்னன் இவரின் பேச்சை
கேளாமல் மூன்று அடி தானம் செய்ய ஆயத்தமானான். தானம் தருவதற்கு நீரை வார்க
கமண்டலத்தை எடுத்தான். அப்பொழுது சுக்கிரன் ஒரு வண்டு உருவெடுத்து
கமண்டலத்தின் துவாரத்தை அடைத்தார். இதை அறிந்த மஹா விஷ்னு ஒரு தர்பயை
கொண்டு கமண்டலத்தின் துவாரத்தில் குத்தினார். அதனால் சுக்கிரனுக்கு ஒரு கண்
குருடாயிற்று. இதனால் ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரனின் பார்வைக்கு பாதி பலன் என்று
கூறுகிறார்கள்.

ஜோதிடத்தில் சுக்கிரனின் பங்கு

ஜோதிடத்தில் சுக்கிரனை பெண் கிரகம் என்று அழைப்பதுண்டு. சுக்கிரன் என்பவர்


களத்திரகாரகனாக முக்கிய பங்கு வகிப்பவர். சுக்கிரனை மனைவி, தங்கை,மகள்,மருமகள்
என்ரு கூறுவார்கள்.

சுக்கிரன் முக்கியமாக களத்திரம் சம்பந்தபடுவதால் ஜாதகத்தில் 7 ஆம் பாவமும்,


சுக்கிரனையும் வைத்து தான் ஆண் ஜாதகத்தில் திருமண பொருத்தம் பார்ப்பதற்க்கு
முக்கிய பங்கு வகிக்கும்.

2
சுக்கிரன் ஓரு ஜாதகத்தில் நீசம், பகை, மறைவு (3,8) முழு மறைவு பெற்றிருந்தாலோ அந்த
ஜாதகர் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் அல்லது
திருமணத்திற்கு பின் மனைவியால் எந்த சந்தோஷமும் அடைய முடியாமல் போகும்.
சுக்கிரனை அசுர குரு என்று வேத ஜோதிடத்தில் அழைப்பார்கள். இவர் பொருள் அணி
தலைவர் எனபதால் இவருக்கு சனி, புதன், ராகு நட்பு கிரகங்கள் ஆகின்றன. அருள் அணி
தலைவரான குரு இவருக்கு பகை கிரகமாக கருதப்படுகிறது. அதனால் குரு, சூரியன்,
சந்திரன், செவ்வாய், கேது இவருக்கு பகை கிரகங்களாகும்.

சுக்கிரனின் ஆட்சி வீடு ரிஷபம் மற்றும் துலாம் ஆகும். ரிஷபம் கால புருஷனுக்கு 2 ஆம்
வீடு என்பதால் அங்கு சந்திரன் உச்சம் ஆவதால் நல்ல குடும்பம், வாக்கு, தனம்
இவைகளில் இந்த ரிஷப வீடு முக்கிய பங்கு வகிக்கிறது. கால புருஷனுக்கு 7 ஆம் வீடு
துலாம் என்பதால் வாழ்க்கை துணை, பொது ஜன தொடர்பு, கூட்டு தொழில் இவைகளில்
முக்கிய பங்கு வகிக்கிறது.

காரகத்துவங்கள்

சுக்கிரன் பிரகாசமான கிரகம். இது நடுத்தர கிரகமாகும். இது இடமாகி சுய சுழற்சி
செய்கிறது. சுக்கிரன் கலைக்காரகன். அதனால் இயல், இசை, நாட்டியம், சினிமா இதில்
அவர் முக்கிய பங்கு வகிப்பவர். ஓருவர் கலைகளில் நல்ல பிரபலமாக இருக்கிறார்
என்றால் அவரக்கு ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாகவோ, மூல திரிகோன வீட்டிலோ,
ஆட்சியாகவோ இருக்கலாம். சுக்கிரன் பொன், பொருள், ஆடை, அலங்காரம், வாசனை
திரவியம், ஜொலிக்கும் பொருட்கள்-நகை, ற்றும் உள் அலங்கரிப்பு, இவைகளை குறிக்கும்.
சுக்கிரன் அழகை குறிக்கும்.

சுக்கிரனின் நட்டசத்திரம் பற்றிய விளக்கம்

பரணி, பூரம், பூராடம்.

பரணி – பரணி நட்சத்திரம் குறியீடு அடுப்பாகும். சுக்கிரன் வீட்டை குறிக்கும் கிரகம்


என்பதால் அடுப்பு வைத்து பால் காய்ச்சுவதற்க்கு உகந்த நட்சத்திரம ஆகும்.

3
பரணி நட்சத்திரம் மேஷ ராசியில் சனி நீசம் அடைவதால் வேலை ஆட்கள் குறைந்த
செலவில் கிடைப்பார்கள்.

பரணி நட்சத்திரத்தில் காஞ்சி காமாட்சியை வழிப்பட்டால் திருமண தடை நீங்கும்.


விரைவில் திருமணம் நடைபெரும்.

பூரம்

பூரம் அதி தேவதை துர்கை.

உருவம் கட்டில் கால் சதுரம் ஆகும்.

பில்லி, சூனியம் தோஷம் நீங்க துர்கைக்கு நெய் விளக்கேற்றி வழிபட தோஷங்கள் நீங்கும்.

பூரம் நட்சத்திரம் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று


வழிபட்டால் நினைத்தபடி வாழ்க்கை துணை அமையும்.

பூராடம்

பூராடம் நட்சத்திரம் குருவின் வீட்டில் இருப்பதால் நீண்ட துர பயணம செல்ல இந்த
நட்சத்திரத்தை பயன்படுத்தலாம்.

பூராடம் நட்சத்திரம் குருவின் வீட்டில் இருப்பதால் உயர் கல்வி சம்பந்தமான முயற்சியில்


ஈடுபடுவது நல்ல பலன் அளிக்கும்.

பூராடம் நட்சத்திரம் அன்று தன லஷ்மிக்கு பூஜை செய்து வந்தால் கடன் தொல்லை நீங்கி
பண வரவு பெருகும்.

4
சுக்கிரன் நின்ற பாவ பலன்கள்

சுக்கிரன் முதல் பாவத்தில் நின்றால் நல்ல அழகான தோற்றம், கலைகளில் ஆர்வம், நிறைய
நண்பர்கள், அதிக செலவு செய்பவர், ஆடம்பர வாழ்க்கை பிரியர்.

சுக்கிரன் இரண்டில் நின்றால் சாப்பாடு பிரியர் நல்ல வாழ்க்கை துணை அமையும். தன,
பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் எப்பொழுதும் சந்தோஷம் இருக்கும்.
கனிவான, இனிமையான பேச்சு இருக்கும்.

சுக்கிரன் மூன்றில் நின்றால் நல்ல ஓவியம், இசை, பாட்டு, எழுத்து இதில் சிறந்து
விளங்குவார். சிறு தூர பயணம் அடிக்கடி மேற்கொள்வார்.

இளைய சகோதரியால் லாபம் உண்டு. கலை நிகழ்ச்சி, சுற்றுலா பயணம், பெண்களுக்காக


அன்பளிப்பு போன்ற ஆடம்பர செலவு செய்வார்.

சுக்கிரன் நான்கில் நின்றால் நல்ல பணக்காரனாக இருப்பார். நிலபுலன், வீடு, வாகனம்,


நல்ல கல்வி இருக்கும். தாய் பாசமாக இருப்பார். இவருக்கு வீட்டின் உள் அலங்காரத்தில்
ஆர்வம் இருக்கும். வீட்டிற்கு நிறைய செலவு செய்வார்.

சுக்கிரன் ஐந்தில் நின்றால் கலைகளில் அதிக ஆர்வம், காதல், அரசியல் ஈடுபாடு,


அலங்காரம், சினிமா, நல்ல குழந்தைகள் இருக்கும். குழந்தைகளுக்காக நிறைய செலவு
செய்பவர். நல்ல உயர்தரமான உடை, அனிகலன்கள் மற்றவர்களை கவரும் தன்மை
உடையவர் ஆவார்.

சுக்கிரன் ஆறில் நின்றால் நல்ல மகிழ்ச்சியான உத்யோக சூழல் இருக்கும். இவர்களுடன்


சக வேலையாட்களின் நல்ல ஓத்துழைப்பு இருக்கும். நல்ல பாட்டு, டிசைன், வாத்தியங்களில்
நல்ல தேர்ச்சி பெருவார். மருத்துவம், விலங்குகள் பராமரித்தல். ஆறாம் இடம் அடி வயிறு

5
என்பதால் சுகர், செரிமான கோளாரு இருக்க வாய்ப்பு உண்டு. கிட்னி பிரச்சினை ஏற்பட
வாய்ப்பு உண்டு.

சுக்கிரன் ஏழில் நின்றால் வாழ்க்கை துணை அழகாக இருப்பாள். வாழ்க்கை துணை


மூலமாக நிறைய சொத்துக்கள் இருக்கும். ஜாதகர் ஆபரணம், உடை , டிசைன், மருத்துவம்,
சுகர் வியாபாரத்தில் நல்ல பண வரவு இருக்கும். நல்ல பெண் பார்ட்னர் வியாபாரத்தில்
வைத்து கொள்வது நல்ல முன்னேற்றம் தரும்.

சுக்கிரன் எட்டில் நின்றால் ஷேர் மார்கெட், தங்கம் ஆகியவைகளில் முதலீடு செய்வது


லாபம் தரும். சுக்கிரன் எட்டில் இருப்பது பல மர்ம உறுப்பு நோய் தாக்கம் இருக்க
வாய்ப்பு உண்டு. திருமண வாழ்கைக்கு உகந்த இடம் கிடையாது. ஜோதிடம்,
சைக்காலஜியில் நாட்டம் இருக்கும். எட்டாம் இடம் மறை பொருள் ஆராய்ச்சி.

சுக்கிரன் ஒன்பதில் நின்றால் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு, உயர் படிப்பு, கலை, இசை
இவைகளில் நல்ல தேர்ச்சி பெற வாய்பு உண்டு. கால புருஷனுக்கு ஒன்பதாம் இடம் குரு
வீடு என்பதால் தூர பிரயானங்களின் மூலம் நல்ல ஆதாயம் உண்டு கோவில் திருப்பணி,
ஆன்மீக ஈடுபாடு நல்ல முன்னேற்றம் தரும். தந்தை மூலமாக நல்ல உதவிகள் கிடைக்கும்.

சுக்கிரன் பத்தில் நின்றால் இயல், இசை, நாடகம், ஆடை, ஆபரணம், அழகு பொருள்
சாதனங்கள், வாசனை திரவியங்ள், வீட்டிற்கு உபயோகம் படும் அலங்கார பொருட்கள்,
இனிப்பு, சர்க்கரை ஆலை போன்ற வியாபாரத்தில் நல்ல புகழ் மற்றும் வருமானம்
இருக்கும்.

சுக்கிரன் பதினொன்றில் நின்றால் பெண்களால் நல்ல ஆதாயம் உண்டு. ஷேர் மார்கெட்


மூலமாக நல்ல லாபம் உண்டு. இசை, நடனம், நாடகத்தில் நல்ல எதிர்காலம் உண்டு.
இவர்கள் அலங்கார பொருட்கள் மூலமாக நல்ல லாபம் ஈட்டுவார்கள். ஆடம்பர
செலவுகளில் அதிக ஈடுபாடு இருக்கும். மூத்த சகோதரி மூலமாக நல்ல ஆதாயம் உண்டு.
நல்ல மனைவி, மக்கள் அமைய வாய்ப்பு உண்டு.

6
சுக்கிரன் பனிரெண்டில் இருப்பது தவறான செயலில் ஈடுபட வைத்தூ சிக்கலில்
மாட்டிக்கொள்வது, கனவு மற்றும் ஆசைகள் அதிகம் இருக்கும். வெளிநாட்டுக்கு செல்ல
வாய்ப்பு உண்டு. இவருடைய வாழ்கை துணை வெளிநாட்டவர் ஆக இருக்க வாய்ப்பு
உண்டு.

7
உதாரண ஜாதகம்

குரு சந் சூரி, புதன்,


செ

ராகு ல
ராசி
(பெண்)
சுக், கேது

சனி

DOB 2.7.1951 TOB 8.49 a.m. Place : TIRUNELVELI

இது கடக லக்ன ஜாதகம். என் தாயாருடையது. லக்னத்திற்கு 2 ல் சுக்கிரன் கேதுவுடன்


இணைவு. இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம் என்பதால் சுக்கிரன் கேது இணைவு
குடும்பத்தில் பிரச்சினை கொடுக்கிறது.

சுக்கிரன் 4 க்கும் – 11 க்கும் அதிபதி.

சுக்கிரனுக்கு வீடு கொடுத்த சூரியன் 12 ல் மறைவதாலும், செவ்வாய் புதனுடன் இனைவு


கொடுப்பதாலும் இவர் கடும் கோபக்காரர். பேச்சில் நிதானம் தவறுதல், நிறைய பண
விரயங்கள் ஏற்பட்டுள்ளது.

4 ம் அதிபதி 2 ல் – வீட்டிற்கு நிறைய செலவுகள் ஆனால் செலவு செய்தும்


திருப்தியின்மை.

11 ம் அதிபதி 2 ல் – மூத்த சகோதரியால் எந்த லாபம் இல்லை. உறவில் விரிசல்


ஏற்பட்டது.

சுக்கிரன் குனசீலங்கள்

ஆட்சி வீடு ரிஷபம், துலாம்


உச்ச வீடு மீனம்

8
மூல திரிகோன வீடு துலாம்
நீச வீடு கன்னி
நட்பு வீடு மிதுனம், கன்னி,மகரம், கும்பம்
அதிதேவதை லஷ்மி
பஞ்சபூதம் நீர்
குணம் சௌமிய குணம்
உலோகம் வெள்ளி
நிறம் வெண்மை
சுவை இனிப்பு
நவரத்தினம் வைரம்
தானியம் மொச்சை
தசை ஆண்டு 20 வருடம்
சஞ்சார காலம் 1 மாதம்
நாடி கபம்
உடல் உறுப்புகள் கன்னம், பால் உறுப்புகள்
வடிவம் சம் உயரம்
மலர் வெண் தாமரை
எண் 6
சமீத்து அத்தி மரம்
விலங்கு ஆண் யானை
வாகனம் கருடன்
வஸ்திரம் வெண்பட்டு
திசை தென் கிழக்கு
பருவ காலம் வசந்த காலம்
ஆலயம் ஸ்ரீரங்கம், கஞ்சனூர்
வாஸ்து சமையல் அறை
பொருட்கள் அலங்கார பொருள், கட்டில், மெத்தை,
இருக்கைகள், அலமாரி
பாராயணம் மஹாலஷ்மி அஷ்டகம்
பார்வை பலம் 7 ம் பார்வை

9
பின்னுரை

சுக்கிரனை பற்றி மேற்கண்ட விஷயங்களை நான் என் குருவின் மூலமாக படித்த


பாடத்திலிருந்தும், அய்யா சித்த யோகி சிவதாசன் ரவி அவர்களின்

1. அடிப்படை ஜோதிட போதினி மற்றும்


2. நட்சத்திர ஜோதிடம் புத்தகத்திலிருந்து ஆய்வுக்கு எடுத்துக் கொண்டேன்.

இந்த வாய்ப்பை தந்த என் குருநாதர் அய்யா பத்மநாபன் அவர்களுக்கு என் மனமார்ந்த
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரா. சுந்தர்ராஜன்

10

You might also like