You are on page 1of 31

சூரியன்

ஶ்ரீ சூர்யாய நமஹ


ஸ்ரீ பாஸ்கராய நமஹ
ஸ்ரீ பாநவே நமஹ

முன்னுரை

உலக மக்கள் அனைவரும் கிழக்கு நோக்கி நின்று தலைக்குமேலே


கரங்களைக் குவித்து சூரிய வந்தனம் செய்கின்றனர்.

ஆம் !

செவ்வண்ண சுடரொளியே கிளப்பிக்கொண்டு அடிவானத்தில்


அடியெடுத்து வைக்கிறான் சூரியன்.

இப்படி மனிதனின் மனதை மகிழவைக்கும் பொருளாக மட்டும் சூரியன்


என்னும் இந்த தீகோளத்தை கருதினால் போதுமா? அது பற்றிய
உண்மைகளை உணர வேண்டாமா? அதன் தன்மை என்ன அமைப்பு என்ன
எவ்வாறு இயங்குகிறது அதன் பலன் என்ன என்ற ஏனைய
பிரச்சனைகளுக்கு விடை காண வேண்டாமா? இதனால் ஆறறிவு
உள்ள மனித இனம் எவ்வாறு பயன் அடைந்து வருகிறது ?

ஆம் இவை எல்லாம் அவசியமே ?

இந்த கட்டுரையில் சூரியனைப் பற்றி சிறு துளி கீ ழே


கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் ஒவ்வொரு செய்தியும் கண்டிப்பாக
உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சூரிய குடும்பத்தின் மையத்தில் உள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியன்.
பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் மிக முக்கிய ஆற்றல்
சூரியனிலிருந்தே
பெறப்படுகிறது.சூரியன் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இங்கே..

1
சூரியனைப் பற்றிய வானியல் தகவல்கள்.

1. பிரியனின் வயது 4,603 மில்லியன் வருடம்.


2. சூரிய ஒளி பூமியை அடைய 8.3 நிமிடங்கள் ஆகும் .
3. பூமியிலிருந்து சூரியன் சுமார் 148.06 மில்லியன் கிலோ
மீ ட்டர் தொலைவில் உள்ளது.
4. சூரியனின் விட்டம் சுமார் 14,00,000 கிலோமீ ட்டர்.
அதாவது ,பூமியின் விட்டம் போல் 109 மடங்கு அதிக
விட்டம் உடையது.
5. சூரியனின் ஈர்ப்பு சக்தி பூமியைப் போல் 28மடங்கு அதிகம்
6. குடும்பத்தின் மொத்த நிறையில் 99.86% நிறையை
கொண்டது.
7. ஒரு பெரிய நட்சத்திர குடும்பத்தை சேர்ந்தது.
8. பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் ( விண்மீ ன் ) சூரியன்.
9. பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் 365
1\4 நாட்கள் ஆகும்.
10. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் புதன்.
11. சூரியனின் தற்சுற்று காலம் 25 நாட்கள்

சூரியனைப் பற்றிய ஜோதிட தகவல்கள்


★ நமது ஜாதகத்தில் சூரியன் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம்
சார்ந்த விஷயத்தை நம்மால் அனுபவிக்க முடியாது. அதாவது சூரியன்
இருக்கும் பாவம் சார்ந்த விஷயங்கள் என்றைக்குமே நம்மை தேடி வராது
நாம்தான் அதனை தேடி செல்ல வேண்டும்.

★ சூரியன் இருக்கும் பாவம் சார்ந்த விஷயங்கள் என்றைக்குமே நமக்கு


காட்ட மட்டுமே செய்யுமே தவிர நமக்கு ஊட்டாது சூரியன் இருக்கும்
பாவம் சார்ந்த யாருமே நமக்கு உதவ மாட்டார்கள். சூரியன் தான் நம்மை
வேலை வாங்கும் தவிர நான் ஒரு போதும் சூரியனை வேலை வாங்கவே
முடியாது .

2
★ சூரியனுடன் எந்த கிரகம் சேர்கிறதோ அந்த கிரகத்தின் காரகத்துவம் சார்ந்த
விஷயங்களை அனைத்தையும் சூரியன் காட்ட மட்டுமே செய்வாரே தவிர
நமக்கு ஊட்ட மாட்டார் . அதாவது அந்த காரகத்துவம் சார்ந்த அனைத்து
விஷயங்களையும் நம்மைத் தேடி வராது நாம் தான் அதை தேடி செல்ல
வேண்டும்.

★ அதே போன்று நமது லக்னத்திலிருந்து சிம்மம் நின்ற பாவம் எத்தனாவது


பாவமாக வருகிறதோ. அந்த பாவம் சார்ந்த உறவுகளும் நாம் சொல்வதை
கேட்க மாட்டார்கள் அதேபோன்று அந்த பாவம் சார்ந்த விஷயங்களும்
என்றைக்குமே நம்மைத் தேடி வராது நாம்தான் அந்த பாவம் சார்ந்து தேடி
செல்ல வேண்டும். அதே போன்று சிம்மம் பாவம் சார்ந்த விஷயத்தையும்
யாரும் நமக்கு உதவ மாட்டார்கள்.

★ அதேபோன்று சூரியன் இருக்கும் பாவம் சார்ந்த உறவுகளும் நாம்


சொல்வதை கேட்க மாட்டார்கள்.

சூரியன் இருக்கும் பாவத்தை ஒரு போதும் நம்மால் ரகசியமாக மறைத்து


வைக்க முடியாது. அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிவிடும.
சூரியன் இருக்கும் பாவம் தான் நமக்கு அடையாளம் மற்றும் நமது
லக்னத்திலிருந்து சிம்மம் என்ற பாவம் எத்தனாவது பாவமாக வருகிறதோ
அந்த பாவமும் நமக்கு அடையாளம் ஆகும்.

நமது லக்னத்தில் இருந்து சூரியன் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த


பாவம் சார்ந்த நமக்கு பணக் கஷ்டம், பணப் பிரச்சினை ஏற்படும்.

சூரியன் பாவத்தில் நின்ற பலன்கள்

இப்பொழுது நமது ஜாதகத்தில் சூரிய பகவான் எந்த எந்த


பாவத்தில் இருந்தால் என்ன ஆகும் என்பதற்கு எந்த
கிரகத்துடன் என்றால் என்ன ஆகும் என்பதை ஒவ்வொன்றாக
பார்க்கலாம்.

3
(1ஆம் பாவம்)

லக்கினத்தில் சூரியன் அமையப் பெற்ற ஜாதகதாரர் சுறுசுறுப்பாக


இருப்பார். செந்நிற மேனியுடன், அவரின் தேகம் எப்போதும் சூடாக,
உஷ்ணமாக இருக்கக் கூடும்.
லக்னத்தில் சூரியன் இருப்பவர்களுக்கெல்லாம் என்றைக்குமே யாரையும்
ஏமாற்ற வேண்டும் அடுத்தவருக்கு துரோகம் செய்ய வேண்டும் என்ற
எண்ணம் இவர்களுக்கு இருக்காது நல்ல குணங்கள் தான் இவர்களுக்கு
இருக்கும்.

(2 ஆம் பாவம் )

இரண்டாம் பாவத்தில் யாருக்கெல்லாம் சூரியன் இருக்கிறதோ


இவர்களுக்கு குடும்பம் மூலமாக பணப் பிரச்சினைகள் ஏற்படும்.

இவருடைய குடும்பம் தான் இவருக்கு அடையாளமாக இருக்கும்.


இரண்டாம் வட்டில்
ீ சூரியன் இருக்க, சுமாரான கல்வி இருக்கும்.
ஆனால் கடின உழைப்பாளியாக இருந்து பொருள் சேர்ப்பார்.

(3ஆம் பாவம்)

மூன்றாம் வட்டில்
ீ சூரியன் அமையப் பெற்றிருந்தால் ஜாதகர் எதையும்
எளிதில் கடந்து செல்லக் கூடிய டேக் இட் ஈஸி அல்லது எதையும்
கண்டுகொள்ளாத அலட்டிக் கொள்ளாதவராக இருப்பார். எதிரிகளிடமே
என்ன சேதி என கேட்கும் அளவிற்கு திறமை உடையவாக இருப்பார்.

மூன்றாம் பாவத்தில் யாருக்கெல்லாம் சூரியன்இருக்கிறதோ இவர்கள்


சொல்வதை இளைய சகோதரர் என்றைக்குமே கேட்க மாட்டார்.

இவர்களின் ஆணைக்கு என்றைக்குமே இளைய சகோதரர் அடிபணிய


மாட்டார்.

மேலும் இளையசகோதரர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மூலம்


இவர்களுக்கு பணக் கஷ்டமும் பணப் பிரச்சினையும் ஏற்பட
வாய்ப்பிருக்கிறது.
இவரின் இளைய சகோதரர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் தான்
இவர்களுக்கு அடையாளமாக இருக்கும்.

(4ஆம் பாவம்)

நான்காம் பாவத்தில் சூரியன் இருந்தால் இவர்கள் சொல்வதை


என்றைக்குமே இவர்களின் தாய் கேட்க மாட்டார்.

இவர்களின் தாய் தான் இவர்களுக்கு அடையாளம்.

4
வடு
ீ வண்டி வாகனம் சொத்து படிப்பு சார்ந்த எந்த விஷயமும்
என்றைக்குமே இவர்களை தேடி வராது இவர்கள் தான் தேடி செல்ல
வேண்டும் யாருமே இவர்களுக்கு உதவ மாட்டார்கள்.

வடுீ வண்டி வாகனம் சொத்து படிப்பு இதன் மூலம் பணக் கஷ்டமும் பணப்
பிரச்சினை ஏற்படும்.

(5ஆம் பாவம்)

ஐந்தில் சூரியன் இருக்க, குடும்பம் அளவாக இருக்கக் கூடும். வாழ்க்கை


சிறப்பாகவும், வளமாகவும் இருக்கும். தந்தை வழி சொத்துக்கள்
அமையாது. இருப்பினும் சொந்த முயற்சியால் சொத்துக்களை
அடைவார்.

ஐந்தாம் பாவத்தில் சூரியன் இருந்தால் என்றைக்குமே இவர்கள்


சொல்வதை இவர்களின் குழந்தைகள் கேட்க மாட்டார்கள்.

இவர்களின் இடும் ஆணையை என்றைக்குமே இவர்களின் குழந்தைகள்


கேட்க மாட்டார்கள் மற்றும் அடிபணிய மாட்டார்கள்.

இவர்களின் குழந்தைகள் தான் இவருக்கு அடையாளமாக இருக்கும்


மேலும் இவர்களுக்கு குழந்தைகள் மூலம் பணக்கஷ்டம் பண
பிரச்சனைகள் ஏற்படும்.

(6ஆம் பாவம்)

ஆறாம் வட்டில்
ீ சூரியன் இருக்க பகைவர்கள் அருகில் கூட
வரமாட்டார்கள். ஜாதகரின் குடும்பமும் பெரியதாக இருக்கும்.

மருத்துவம் மூலமாகவும் அரசாங்கம் மூலமாகவும் மற்றும் தந்தை


மூலமாகவும் கடன் பிரச்சனை வம்பு வழக்கு அடிதடி சண்டை
போன்றவைகள் ஏற்படும்.

இவருடைய கடன் மட்டும் இவர்களின் எதிரி தான் இவர்களுக்கு


அடையாளமாக இருக்கும்.

மேலும் உத்தியோகம் சார்ந்த எந்த ஒரு வாய்ப்புகளும் இவர்களை தேடி


வராது இவர்கள்தான் அதனை தேடி செல்ல வேண்டும்.

5
(7ஆம் பாவம்)

ஏழாம் இடத்தில்சூரியன் அமையப்பெற்றவர் நோய்கள், வம்பு,


வழக்குகள், கடன், உள்ளிட்ட விவகாரங்கள் இல்லாதவராகவும்,
பாராட்டுக்களை அதிகம் பெறக்கூடியவராக, மனைவிக்கு அடங்கிப்
போகக் கூடியவராக இருப்பார். இருப்பினும் எதையும் சரிவர செய்து
முடிக்காதவராக இருப்பார்.

யாருக்கெல்லாம் ஏழாம் பாவத்தில் சூரியன் இருந்தால், இவர்கள்


சொல்வதை வாழ்க்கை துணை கேட்கமாட்டார்.

ஏழாம் பாவத்தில் யாருக்கெல்லாம் சூரியன் எங்கிருக்கிறதோ இவர்கள்


என்றைக்குமே கூட்டுத் தொழில் செய்யவே கூடாது மீ றி செய்தால் பெரும்
நஷ்டத்தைச் சந்திப்பார்கள்.

இதன் மூலமாக அவர்களுக்கு பணப்பிரச்சினை ஏற்படும்.

மேலும் ஆணாக இருந்தால் மனைவி தான் இவர்களுக்கு அடையாளமாக


இருப்பார் பெண்ணாக இருந்தால் கணவன் தான் இவர்களுக்கு
அடையாளமாக இருப்பார்.

(8ஆம் பாவம்)

எட்டில் சூரியன் இருக்கப் பெற்றவரின் ஆயுள் நீண்டதாக இருக்கும்.


எதற்கும், எவருக்கும் பணிந்து போகாதவராக, இரக்கமற்ற குணத்தை
கொண்டவராக இருப்பார். சிலருக்கு கண்களில் குறைபாடு இருக்கும்.

எட்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஆனால் PF, Pension,Retirement,LIC


Policy போன்ற விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
பணக்கஷ்டம் பணப் பிரச்சினையும் ஏமாற்றம் அடைய வாய்ப்பிருக்கிறது.

(9ஆம் பாவம்)

ஒன்பதாம் வட்டில்
ீ சூரியன் இருந்தால் தந்தைக்கு இடையூறு
ஏற்படக்கூடும். அவருக்கு தீய வழியில் பொருட்கள் சேரும்.
உறவினர்களுடன் விரோதம் ஏற்படலாம். சுய முயற்சியால் செல்வம்
உண்டாகலாம்.

6
ஒன்பதாம் பாவத்தில் யாருக்கெல்லாம் சூரியன் இருக்கிறது இவர்கள்
சொல்லுவதை என்றைக்குமே இவர்களின் தந்தை கேட்க மாட்டார்.

மேலும் இவரின் தந்தை தான் இவருக்கு அடையாளமாக இருப்பார்.

தந்தை மூலமாகவோ அல்லது கல்வி சார்ந்த விஷயத்திலும் வெளிநாடு


பயணம் மூலமாகவும் இவர்களுக்கு பணக்கஷ்டம் பணப் பிரச்சினை
ஏற்படும்.

மேலும் உயர்கல்வி படிப்பது மற்றும் வெளிநாட்டு பயணம் சார்ந்து


இவர்களுக்கு யாருமே உதவ மாட்டார்கள்.

(10 ஆம்பாவம்)

பத்தாம் ஸ்தானத்தில் சூரியன் அமைந்திருந்தால், அவருக்கு


நன்மைகள் உண்டாகும். ஜாதகருக்கு சொந்த தொழில் அல்லது வேலை
இருக்கும். அரசு சார்ந்த அல்லது அரசியலில் தொடர்பு இருக்கக் கூடும்.
உடல் நலம் சீராக இருக்கும். தன் சுய அறிவால் முன்னேற்றம்
அடைவார்.

பத்தாம் பாவத்தில் சூரியன் இருந்தால் தொழில் மூலமாக பணம்


கஷ்டத்தையும் பணப் பிரச்சினையும் ஏற்படும்.

தொழில் சார்ந்த எந்த விஷயத்தை இவர்களால் மறைத்து வைக்க


முடியாது சூரியன் பொருள் சார்ந்த அனைத்து ரகசியத்தையும் வெளிச்சம்
போட்டு காட்டி விடும்.

இவர்களுடைய தொழில் தான் இவர்களுக்கு அடையாளமாக இருக்கும்.

(11 ஆம் பாவம்)

பதினோராம் இடத்தில் சூரியன் இருக்க, ஜாதகருக்கு நீண்ட ஆயுள்


கிடைக்கும். பலரை வைத்து வேலை வாங்கும் திறனுடன் இருப்பார்.
நண்பர்கள், உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

பதினோராம் பாவத்தில் சூரியன் இருந்தால் மூத்த சகோதரர் மற்றும்


சித்தப்பா இவர்களின் மூலம் பணக்கஷ்டம் பணப் பிரச்சினை ஏற்பட

7
வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது சற்று இவர்களிடம் கவனமாக இருக்க
வேண்டும்.

(12 ஆம் பாவம்)

பன்னிரண்டாம் இடத்தில் சூரியன் அமையப்பெற்ற ஜாதகருக்கு தந்தை


வகையில் சுமூக உறவு இருக்காது. ஜாதகர் பயணங்கள்
மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவராக ஊர் சுற்றியாக இருப்பார்.
இவருக்கு அதிக செலவுகள் ஏற்படக்கூடும். சந்ததி குறைப்பாடு
இருக்கும். உழைத்து முன்னேறக் கூடியவர்.

யாருக்கெல்லாம் பன்னிரெண்டாம் பாவத்தில் சூரியன் இருக்கிறது


இவர்களுக்கு மருத்துவம் மூலமாகவும் சந்தை மூலமாகவும் அரசாங்கம்
மூலமாகவும் விரயச் செலவுகள் என்பது அதிகமாக இருக்கும்.

கிரகச் சேர்க்கை பலன்கள்

ஒருவரின் ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து காணப்படுவது


இயல்பு. ஒரு பாவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருக்கும்போது
ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றி பார்ப்போம்.

நவகிரகங்களில் சூரியனே முதன்மையானவர் என்பதால் சூரியனில் இருந்தே


தொடங்குவோம்.

சூரியன் – சந்திரன்: –

ஜனன ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் சேர்ந்து காணப்பட்டால், அந்த


ஜாதகருக்கு ஸ்திரமான புத்தி இருக்காது. சதா மனம் அலைபாய்ந்து கொண்டே
இருக்கும். அவப்பெயருக்கு ஆளாக நேரிடுவதுடன் அரசாங்க தண்டனைக்கும்
ஆளாகக் கூடும். கணவன் மனைவி இடையில் பணியின் காரணமாகவோ
அல்லது கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ தற்காலிகமான பிரிவு ஏற்படும்.

8
சூரியன் லக்னாதிபதியாக இருந்தால், லக்னாதிபதி கெடுபலன் செய்ய மாட்டார்
என்ற விதிப்படி மேற்கண்ட அசுப பலன்கள் சுப பலன்களாக மாறும். அதேபோல்
சூரியனோ அல்லது சந்திரனோ அங்கு ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலும்
கெடுபலன்கள் ஏற்படாது. மற்றுமொரு முக்கியமான விதியையும் குறிப்பிட
வேண்டும். அதாவது கேந்திர ஸ்தானாதிபதியும் திரிகோணாதிபதியும் யாரோடு
சேர்ந்திருந்தாலும், தான் நல்லது செய்வதுடன் தன்னுடன் இணைந்திருக்கும்
கிரகத்தையும் நல்லது செய்யவைக்கும்.

சூரியன் – செவ்வாய்: –

உடல் உஷ்ணம் அதிகம். நேரம் தவறாமையைக் கண்டிப்புடன்


கடைப்பிடிப்பார்கள். ஆண்மைக்கு உரிய கம்பீரம் இவர்களிடம் கூடுதலாகவே
காணப்படும். காவல்துறை, ராணுவம் போன்ற சீருடை சார்ந்த பணியாகவே
இவர்களுக்கு அமையும். அதிக சகோதரர்களும் அவர்களால் ஆதாயமும் உண்டு.
இந்த சேர்க்கையானது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் காணப்பட்டால், அந்தப்
பெண்ணுக்கு தலைமைப் பண்பு நிறைந்திருக்கும். அந்த வட்டில்
ீ மீ னாக்ஷி
ஆட்சிதான் நடக்கும் என்று சொல்லலாம். இந்த சேர்க்கை மேஷத்தில்
காணப்பட்டால், மேலே சொன்ன பலன்கள் கூடுதலாக நடக்கும்.

சூரியன் – புதன்:-

சூரியன், புதன் சேர்க்கை பெற்ற 8 பாகைகளுக்குள் ஜாதகர் பிறந்திருந்தால்,


புதனுக்கு அஸ்தங்க தோஷம் ஏற்பட்டு பலன் தராமல் போய்விடும். குறிப்பாக
புதனின் தசா புக்தி காலங்களில் கெடுபலன்களே நடைபெறும். 8 பாகைகளுக்குப்
பிறகு பிறந்தால்தான் பலன் தரும். சூரியன் புதனின் சேர்க்கையானது ஜாதகரை
கணிதத்தில் நிபுணத்துவம் பெறவைக்கும். அரசாங்க வகையில் ஆதாயம் உண்டு.
படிக்கவேண்டிய வயதில் படிக்காமல் தாமதமாகவே படிப்பை முடிப்பர்.
தகுதியைவிட உயர்ந்த இடத்தில் வேலைக்குப் போவர். இவருடைய பணி
பெரும்பாலும் அரசாங்கப் பணியாகவே அமையும். தாய்மாமன் உறவுமுறை
சுமுகமாகவும் ஆதாயம் தருவதாகவும் இருக்கும். வாக்குத்திறமை பெற்றிருப்பர்.

9
சூரியன்-குரு:-

சூரியன், குரு சேர்க்கை பெற்ற ஜாதகருக்கு பொதுவாக இரட்டை குழந்தைகள்


பிறக்கும் என்று சொல்லலாம். பொன் சம்பந்தப்பட்ட வியாபாரம் செய்யும்
குடும்பத்தில் இருந்து வாழ்க்கைத் துணை அமையும். கோயில் திருப்பணிகளிலும்
சமூகநலப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வர். நிதி அமைச்சகம்,
வங்கிகள், நிதிநிறுவனங்களில் வேலை அமையும். அத்தகைய பணியும்கூட
தலைமையிடத்தில் இருக்கும். ஒருசிலர் பேராசிரியராகவும் பணிபுரிவர்.
இயல்பிலேயே ஆன்மிக நாட்டம் கொண்டிருக்கும் இவர்களில் சிலர் ஆன்மிக
குருவாகவும் பிரகாசிப்பர்.

சூரியன் – சுக்ரன்:-

சூரியன் சுக்ரன் சேர்க்கையானது ஜாதகருக்கு எதிர்பாராத பொருள்வரவைத்


தரும். இவர்களுக்கு எதிலும் நஷ்டம் என்பதே ஏற்படாது. ராணுவத் தளவாடங்கள்
விற்பனை மூலம் பணம் சம்பாதிப்பர். வசதியான குடும்பத்தில் இருந்து
வாழ்க்கைத் துணை அமையும். அந்நியப் பொருள்களைப் பயன்படுத்துவதில்
ஆர்வம் அதிகம் இருக்கும். விலை உயர்ந்த சொகுசு வாகன பிராப்தி இவர்களுக்கு
உண்டு. இவருக்குச் சொந்தமான வட்டில்
ீ தண்ண ீர்ப் பஞ்சம் இருக்காது.

சூரியன் – சனி:-

பகலில் பிறக்கும் குழந்தைகளுக்கு பித்ருகாரகன் சூரியன் என்றால், இரவில்


பிறக்கும் குழந்தைகளுக்கு சனி பித்ருகாரகன். இந்தச் சேர்க்கையானது தந்தை
மகன் உறவில் விரிசலை ஏற்படுத்துவதுடன், கோர்ட், கேஸ் என்றும்
அலைக்கழிக்கும். அவ்வப்போது மன அமைதி பறிபோகும். சமையல்
கலைஞராகவும், கேன்டீன் காண்ட்ராக்டராகவும் பணம் சம்பாதிப்பர். இரும்புக்
கழிவுகளை வாங்கி விற்றும் ஜீவனம் நடத்துவர். கடினமான உழைப்பாளிகளான
இவர்கள் அரசாங்கத்துடன் இணக்கமாக நடந்துக்கொள்வர். சட்டத்துக்குப்
புறம்பான வழிகளில் பணம் சம்பாதிக்கவும், அதில் ஒரு பகுதியை ஆன்மிகப்
பணிகளுக்குச் செலவழிக்கவும் தயங்கமாட்டார்கள். எதையுமே புதியதாக
வாங்குவது இவர்களுக்குப் பிடிக்காது. மற்றவர்கள் பயன்படுத்திய கார், பைக்
போன்றவைகளையே வாங்குவர்.

10
சூரியன் – ராகு:-

சூரியன் ராகு சேர்க்கை அமையப் பெற்ற ஜாதகர்கள் சட்டத் துறையில்


நிபுணத்துவம் பெற்றிருப்பர். எதிலும் மாற்றுச் சிந்தனையும், புரட்சிகரமான
எண்ணங்களும் கொண்டிருப்பர். பிறருடைய சொத்துக்கள் எல்லாம் இவர்களுக்கு
எதிர்பாராமல் வந்து சேரும். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், கடல்வாழ்
உயிரினங்கள் போன்றவைகளை ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிப்பர்.
இவர்களுக்கு அமையக்கூடிய பணியும்கூட மீ ன்வளத்துறை போன்று கடல்
சார்ந்த பணியாகவே இருக்கும்.

சூரியன் – கேது:-

ஆன்மிகவாதியாக இருப்பர். ஆன்மிகம் தொடர்புடைய மரங்களைக்


கோயில்களுக்குக் கொடுப்பர். மரங்களை வெட்டி விற்பனை செய்வதால்,
இவர்கள் மரங்களை நட்டுப் பராமரிக்கவும் செய்வர். ஒருசிலர் காய்,கனி
வகைகளை விற்றும் ஜீவனம் செய்வர். இவர்களுக்கு வனத்துறை சார்ந்த
பணிகளே பெரும்பாலும் அமையும்.

சூரியன் வட்டில்
ீ கிரகங்கள் நின்ற பலன்கள்.

1.(சிம்மத்தில் "சூரியன்")

சிம்மம் சூரியனின் வடாகும்


ீ இங்கு சூரியன் இருப்பது மிகவும் சிறப்பாகும்.
பொதுவாக சிறப்பான பலன்களையே அளிக்கும். கல்வியில் ஆர்வமும்,
தேர்ச்சியும் பட்டம் பதவி பெறுதலும் கூடும். அரசு வேலை கிடைக்கும், பணி
உயர்வு வருமானம் அதிகரிக்கும் அரசியலில் தனித்துவம் பெற்று
விளங்குவார். வடு ீ வாகன யோகம் மிகவும் சிறப்பாக இருக்கும். ஜாதகர் உயர்
பதவியில் இருப்பார்.

2.(சிம்மத்தில் "சந்திரன்")

இயற்கையாக இந்த சிம்ம ராசியில் இருக்கும் சந்திரனுக்கு நட்பு பலத்தை


ஏற்படுத்தும் ராசியாக சிம்ம இராசி இருக்கிறது மேலும் சூரியனுக்குரிய ராசியான
சிம்மத்தில் இருக்கும் சந்திரனால் சூரியனுக்குரிய பல பண்புகள் இந்த
ராசிக்காரருக்கும் சில இருக்கும் அதாவது ஜாதகத்தில் சிம்மத்தில் சந்திரன்
இருக்க பிறந்தவர்கள் சூரியனுக்குரிய பல பண்புகளான தனித்தன்மையான

11
குணங்கள், ஆளுமைத் திறன், தனது குறிக்கோளுக்கு முக்கியத்துவம், அதிகாரம்,
கண்ணியம், விசுவாசம், தலைமைக்குரிய பண்புகள், பலருக்கு ஆணவமும்
இருக்கும், தனது குடும்ப பாரம்பரியத்தின் மீ தோ அல்லது தனது சுய
மரியாதையின் மீ தோ அதிக அக்கறை இது போன்ற சூரியனுக்குரிய பல
பண்புகள் இவர்கள் பெற்றிருக்கலாம். அது போக சந்திரன் சிம்மத்தில் இருக்க
பிறந்தவர்கள் மமகாரமான நடத்தை, தனது அந்தஸ்துக்கு குறைவாக இருப்பதை
நாடிச் செல்ல மாட்டார்கள்…

3.(சிம்மத்தில் "செவ்வாய்")

சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் வடு


ீ வண்டி வாகனம் சொத்து,விளையாட்டு
அல்லது உத்தியோகம் இது சார்ந்த விஷயத்தை முதலில்
முடித்துவிட்டுத்தான் இவர்கள் அடுத்த வேலையைப் பார்ப்பார்கள்.
உத்தியோகத்தில் ஏதாவது வேலை இருந்தால் முதலில் அதை முடித்துவிட்டு
தான் இவர்கள் அடுத்த வேலையைப் பார்ப்பார்கள்.
விளையாட்டுத்துறையில் யாராவது இருந்தால் முதலில் விளையாட்டில்
தான் முக்கிய கவனத்தை இவர்கள் செலுத்துவார்கள்.அதன் பிறகுதான்
மற்றது எல்லாம்.

4.(சிம்மத்தில் "புதன்")
சிம்மம் என்ற பாவத்தில் புதன் இருந்தால் படிப்பு மற்றும் mobile using and
games இது சார்ந்த விஷயத்தில் அதிக முக்கியத்துவமும் அதிக ஈடுபாடும்
இவர்கள் செலுத்துவார்கள்.
சிம்மத்தில் புதன் இருப்பவர்களெல்லாம் அதிக நேரம் mobile use செய்வார்கள்.
இவர்கள் ஒருவேளை ஜோதிடம் கற்றுக் கொண்டார்கள் என்றால் எந்த
நேரமும் ஜோதிடத்தில் தான் இவர்கள் இருப்பார்கள்.

5.(சிம்மத்தில் "குரு")

சிம்மத்தில் குரு இருந்தால் ஆன்மீ கம் சம்பந்தப்பட்ட விஷயங்களும் மற்றும்


குழந்தைகள் சம்பந்தபட்ட விஷயங்களும்,மற்றும் பணத்தைச் சேமிப்பதிலும்,
அடுத்தவர்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தை கற்றுக் கொடுப்பதிலும்
இவற்றில் தான் இவர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.

12
சிம்மத்தில் குரு இருப்பவர்கள் ஆன்மீ கம் சம்பந்தப்பட்ட விஷயத்தில்
இருந்தார்கள் என்றால் எந்த வேலையாக இருந்தாலும் முதலில் கடவுளுக்கு
பூஜை செய்து விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்பார்கள்.
கல்வித்துறையில் இருந்தார்கள் என்றால் முதலில் கல்வி சம்பந்தப்பட்ட
விஷயத்தை அடுத்தவர்களுக்கு சொல்லிக் கொடுத்து விட்டுத்தான் அடுத்த
வேலையை இவர்கள் பார்ப்பார்கள்.

எந்த நேரமும் இவர்களை எழுப்பி கல்வி சார்ந்து சந்தேகம் கேட்டாலும்


கொஞ்சம் கூட சலைக்காமல் பதில் சொல்வார்கள்.

6.(சிம்மத்தில் "சுக்கிரன்")

சிம்மத்தில் சுக்கிரன் இருந்தால் முதலில் தங்களை அழகு படுத்துவதிலும்,


ஆடம்பரமான உடை அணிவதிலும், காதல் சார்ந்த விஷயத்திலும்,காமம்
சார்ந்த விஷயத்திலும் இவர்களுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும்.
முதலில் இது சார்ந்த விஷயத்தை முடித்துவிட்டுதான் இவர்கள் அடுத்த
வேலையைப் பார்ப்பார்கள்.

7.(சிம்மத்தில் "சனி")
சிம்மத்தின் நாயகன் சூரியனின் கடும் எதிரியாக சனி வேத ஜோதிடத்தில்
குறிப்பிடப்படுகிறார். இருளும், ஒளியும் எதிரெதிரானவை என்பதன்
அடிப்படையில் அதிக ஒளியுள்ள கிரகமான சூரியனும், ஒளியற்ற இருள்
கிரகமான சனியும் எதிரிக் கிரகங்களாக நமது ஞானிகளால் சொல்லப்பட்டன.
சிம்மத்தில்சனி இருப்பது நல்ல நிலை அல்ல. சுபத்துவம் இல்லாத சனி இருக்கும்
பாவம் இருளடையும் என்பதன்படி இங்கே அமரும் சனி பாபத்துவம் மட்டுமே
பெற்றால், ஜாதகருக்கு உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படும். ஜாதகரின்
குணநலன்கள் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. சனியின் குணங்களை ஜாதகர்
அப்படியே பிரதிபலிப்பார்.

சிம்மத்தில் ராகு, கேது மற்றும் சந்திரன் இந்த மூன்று கிரகங்கள் இருந்தால்


அதற்கு இந்த சூட்சமம் பொருந்தாது.

13
மேலும் சிம்மம் என்ற பாவத்தில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரக
காரகத்துவம் சார்ந்த விஷயங்களின் மூலம் நமக்கு பணக் கஷ்டமும் பணப்
பிரச்சனையும் ஏற்படும்.

உதாரணமாக சிம்மத்தில் சுக்கிரன் இருந்தால் மனைவி மற்றும் மனைவி


சார்ந்த குடும்பம் அல்லது காதலன் அல்லது காதலி இவர்கள் மூலமாக
பணக்கஷ்டம் ஏற்படும்.

★ராகு கேதுவிற்கு இந்த சூட்சமம் பொருந்தாது.

சூரியனின் காரகத்துவம் அதிகம் உள்ள


மனிதர்களின் தன்மைகள்.

1. எங்கு சென்றாலும் முதல் மரியாதை, அவர் கடைசி வரிசையில் உட்கார்ந்து


இருந்தாலும் அவரை யாராவது மேடை ஏற்றி விடுவர். மரியாதை கேட்டு
வாங்கி பழக்கம் இல்லை.2. வள்ளல் தன்மை இருக்கும் பிறரிடம் உதவி
கேட்க தெரியாது. கொடுத்து தான் பழக்கம்.
3. சூரியனை சுற்றி கோள்கள் இயங்குகின்றன அது போல அவர் எங்கு
சென்றாலும் அருகில் பலர் வந்து அமர்வர்.
4. பேச்சு குறைவாக பேசினாலும் கர்ஜனை போன்ற தெளிவு இருக்கும்.
5. பிறர் மதிக்கவில்லை என்றோ மற்றவர் என்ன நினைப்பார்கள் என்றோ
சிந்திப்பது கிடையாது. மனதில் சரி என்று தோன்றினால் அதை செய்வர்.
6. செவ்வாய் அல்லது ராகு உடன் தொடர்பில் சூரியன் இருந்தால் ஆணவம் /
அதிகார திமிர் வரும்.
7. சூரியன் தினமும் காலை சரியான நேரத்தில் உதிக்கும், அதனால் சூரிய
காரகத்துவ மிகுதி மனிதர்கள் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பார்கள்.
8. சுத்தமான சுருக்கம் இல்லாத வெள்ளை நிற ஆடை அணிய விரும்புவர்.
9. அவர்களின் கை கடிகாரம் / வட்டுக்
ீ கடிகாரம் சரியான மணியே காட்டும்.
சூரியன் ராகு சேர்க்கை சரியான நேரத்தை விட கூடுதல்
நேரம். காட்டும்/வேகமாக ஓடும், கேது சேர்க்கை கடிகாரம் மெதுவாக ஒடும்.
10. நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார்கள் என்ன நடந்தாலும் சூரியன்
உதித்தே தீரும்.
11. வட்டில்
ீ சூரிய ஒளி மிகுதியாக இருக்கும். வலப்புறம் ஜன்னல் இருக்கும்.

14
12. மோதிர விரல் (சூரிய விரல்) நீண்டு காணப்படும். விரலின் கீ ழ் உள்ள சூரிய
மேடு பிரதானமாக இருக்கும்.
13. அவர் பெயர் சூரியனை குறிக்கும் பெயராக இருக்கும், புகழ் / ஜெயம் /
பாட்டன் பெயர் / அரசர்களின் பெயர் / வெளிச்சதினை குறிக்கும் பெயர் /
மலைகளின் பெயர் / சிவன் ஈஸ்வர் பெயராக இருக்கும்.

14. வட்டில்
ீ பூஜை அறை ஹாலில் இருக்கும்.
எனக்கு தெரிந்த ஒருவர் உத்திராடம் நட்சத்திரம் (சூரியனின் நட்சத்திரம்) ,
ஞாயிற்றுக்கிழமை (சூரிய நாள்) , மதியம் 12 மணிக்கு (சூரியன் திக் பலம்)
பிறந்தார், மேல் சொன்ன அனைத்து விதிகளும் அவருக்கு பொருந்தும்.

சூரியனின் சுபத்துவம்.

சூரிய பிரபு எப்பொழுது சுபர்? எப்பொழுது அசுபர்?

சூரியனுடன் சேரும் கிரகங்கள் சுப தன்மை அடையாது.

கேதுவால் ஏற்படும் சூட்சமம் சூரியனுக்கு கிடையாது.

மேலும் சுபர் பாபர் என்பதை ஒரு நுணுக்கமாக விதியாக புரிந்து கொள்ள வேண்டும்.

சனி முழு சுபர் செவ்வாய் முகால் அசுபர் சூரியன் அரை சுபர்.

ராகு கேதுக்கள் இருக்கும் இடத்தை பொருத்து சுபர் பாபர் ஆவார்.

தேய்பிறை சந்திரன் அவரது ஒளி இலக்கை பொறுத்து பாபர்.


தனித்த புதன் சுபர் .பாபர்களுடன் உடன் இருக்கும் புதன் பாபர்.

சூரியனுடன் சேரும் கிரகங்கள் நிச்சயமாக சுபத்துவம் அடையாது.

சுபர்கள் என்று வந்து விட்டாலே முழுமையான சுபர்கள் ஆன ‘குரு, சுக்கிரன்,


வளர்பிறை சந்திரன் & தனித்த புதன்’ தான் சுபர்கள் என்று சொல்லப்படுகிறது.

15
பாதி சுபர் என்ற நிலையில் இருக்கிற மீ தி அதிபராக இருக்கும் கிரகம் ஒருபோதும்
இன்னொரு கிரகத்தை சுபத்துவ படுத்த முடியாது.

சூரியன் தான் “தான் சுபத்துவம் அடையவேண்டுமே” தவிர


அவர் அடுத்த கிரகத்தை சுபத்துவப்படுத்த மாட்டார்.

“சூரியன் எப்போது சுபராகிறார” என்றால்


“சுப கிரகங்களை அஸ்தங்கப் படுத்தும் போது தான்” சுபராகிறார்.

குரு சுக்கிரன் இருவரையும் அஸ்தங்கப் படுத்தும் போதுதான் சுபராகிறார்.

குரு/சுக்ர அங்கு நீச்சமாக இருந்தாலும் சரி


எந்த ஒரு பகை வட்டிலும்
ீ இருந்தாலும் சரி
எந்த நிலையிலும் இவர்கள் சுபர்களே.

பாதி சுபர் / பாதி அசுபர் என்ற நிலையில் சூரியனை சூட்சும வலு பெறுபராகவும்
எடுக்க முடியாது.

பாப கிரகங்களோடு கேது சேர்வது சூட்சும வலு என்று சொல்லும்போது


சூரியன் கேதுவோடு சேர்வதை சூட்சுமவலு என்று சொல்லமுடியாது.

னெனில் அது கிரஹண மாகி விடும்.


சூரியன் குருவோடும் சுக்ரனோடும் இணையும்போது சுபத்தன்மை அடைகிறார்.

தனித்த புதனோடு அதாவது சூரிய புத மட்டுமே இருக்கும் போது சுபத்தன்மை


அடைவார்.

குருவோடு சேர்ந்து 100% சுபத்தன்மையை குருவின்(அளவிற்கேற்ப)


வலிமைக்கேற்ப அடைவார்.

சுக்கிரனோடு சேர்ந்து 50% சுபத் தன்மையை சுக்கிரனின் (அளவிற்கேற்ப)


வலிமைக்கேற்ப அடைவார்.
சூரிய சுக்கிர புத சேர்ந்திருந்தால், அங்கு புதனும் சுபத்துவமாகிவிடுவதால்
அங்கு கூடுதலாக ஒரு 30% சுபத்தன்மை அடைந்திருப்பார்.

குருவும் பூர்ண சந்திரனும் 100% சுபர்கள். சுக்கிரன் பாதி சுபர்.

பாபியருடன் சேராத தனித்த புதன் 30% சுபர்.


வளர்பிறை ச் சந்திரன் தன்னுடைய ஒளி அமைப்புகளுக்கேற்ப சுபராவார்.

16
சந்திரனோடு சூரியன் இணைந்தால் அது அமாவாசையாய் விடும்.

அமாவாசை சூரியன் முழுதும் பாபத்தன்மை பெற்றவர்.

ஒரே ராசியில் சூரிய சந்திர நின்றால் அது அமாவாசை தினமாகவோ அதற்கு


முந்திய/பிந்திய தினமாகவோ இருக்கலாம்.

சந்திரனோடு இணைந்திருக்கும் சூரியன் மிகக் கடுமையான


பாபத்துவமடைந்திருப்பார்.

அத்தகைய சூரியனை சுபத்துவப் படுத்த குரு பார்க்க வேண்டும்.

சுக்கிர பார்வை அவ்வளவு சுபத்துவப் படுத்தாது.


ஆகவே இங்கே சூரியனுடைய சுபத்துவம் என்பது.....குரு,சுயும் சுபத்துவப் படுத்தாது.

சுபர்களான 4 கிரகங்களின் தொடர்பில் இருக்கும்போது மட்டுமே சூரியன்


முழுமையான சுபராகுவார்.

சுக்ர/புத நிச்சயமாக ச் சூரியனை பார்க்க மாட்டார்.


வளர்பிறைச் சந்திரனும் சூரியனைப் பார்க்க மாட்டார். பௌர்ணமிச் சந்திரன் மட்டுமே
பார்ப்பார்.

சுக்கிர இணைவு... கூடுமானவரைக்கும் சூரிய எத்தனை (டிகிரியில்) பாகையில்


சுக்கிரனை அஸ்தங்கப் படுத்தியுள்ளார் என்பதைப் பொருத்து.

அப்போது அவரது காரகத்துவமான அரச லாபம் தந்தை லாபம் எலெக்ரிகல்


எலெட்ரானிக்ஸ் மின்சாரம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆத்மலாபம் அனைத்து
விஷயங்களிலும் தலைமை தாங்கும்
பண்பு, ஆகிய யாவும் சூரியனால் கட்டாயமாகத் தரப்படும்.
சூரியனின் சுபத்துவம் இங்குதான் இருக்கிறது.

குருவாலும்/பௌர்ணமிச் சந்திரனால் பார்க்கப் படும் போது சுபத்துவமடைவார்.

சுக்கிர புதனோடு இணையும் போது சுபத்துவமடைவார்.


புதனோடு மட்டும் இணைந்திருந்தால் அவர் ஒரு 30% மட்டும் சுபத்துவமடைவார்.

சுக்கிர புதனோடு இணைந்து குருவால் பார்க்கப் பட்டால் சூரியன் அதிக


சுபத்துவமடைவார்.

17
முழுமையாக அங்கே அவர் அனைத்து நல்ல பலன்களையும் தனது
காரகத்துவங்களான தலைமை தாங்கும் பண்பு அரசியல்வாதி அரசு அதிகாரி அரசு
அதிகாரம் ஆகியவற்றைக் தருகின்ற நிலையில் இருப்பார்.

பௌர்ணமிச் சந்திரனின் பார்வை குரு/சுக்கிரனோடு இணைவு....

குரு புதன் சூரியன் மூவரும் இணைந்திருப்பதாக க் கொண்டால் இந்த அமைப்பு


பூஜ்யஸ்ரீ மஹாபெரிவர் போன்ற மஹான்களின் ஜாதகத்தில் தான் இருக்கும். எந்த
ஒரு துறை என்பதை இரண்டாவதாகக் கொண்டு தலைமை தாங்குபவர்கள் அல்லது
எல்லோராலும் வணங்கத் தக்க நிலையில் இருப்பவர்களைப் பார்த்தீர்களேயானால்
சூரியனின் சுபத்துவம் அங்கு நிச்சயாக இருக்கும்.
அத்தகைய நிலைகளில் சூரிய சுபத்துவம் ஒரு மாறாத தன்மையாய் இருக்கும்.

குரு சுக்கிரன் புதன் இம்மூவரும் இணைந்து அதே நேரத்தில் பௌர்ணமிச்சந்திரன்


எதிர் நிற்பது
சுபத்துவத்தின் ஒரு மிகப் பெரிய அமைப்பாகும்.

அனைத்து சுப கிரகங்களும் சூரியபகவானுடன் சேர்ந்திருப்பது சிறந்த


சுபத்துவமாகும்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்கூட சூரியனுடைய பார்வை பார்க்கப்பட்ட கிரகத்தை


சுபத்துவப் படுத்தாது.

பிற சுப கிரகத்தால் சுபத்துவம் அடைந்த கிரகத்தின் பார்வையில் பாபத்துவம்


குறைந்திருக்குமே தவிர
அப்பார்வை எக்கிரகத்தை
குரு எந்த நிலையிலிருந்தும் பார்ப்பார்.

வரவேற்கத் தக்கது எதுவென்றால் குரு/பௌர்ணமிச் சந்திரனின் பார்வையே.


இணைவில் சுபத்துவ நன்மை தருவது சுக்கிர புதனாகும்.

சுபத்துவமடைய சூரியன் எந்த நிலையில் இருக்கவேண்டும்?

சுபத்துவத்திற்கு நீச்ச அமைப்பு கூட ஒரு பொருட்டல்ல.

முதலில் ஸ்தான பலத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

நீச்சம் ஸ்தான பலத்தில் மிகவும் குறைந்த நிலையல்லவா?

18
சூரியன் ரிஷபத்தில் பகை பெறுகிறார். அங்கும் அவருக்கு ஸ்தானபலம்
குறைவு.

அவருக்கு ஆகாத வடுகள்


ீ மகர கும்பம். நீச்சத்தில் சூரியன் சுக்கிரன் வட்டில்

சுபத்துவமாக இருப்பார்.

சனியின் வட்டிலிருக்கும்
ீ சூரியன் நீச்சத்தைவிடவும் மோசமான நிலையில்
இருப்பார்.

சூரிய பிரானுக்கு எரிச்சலூட்டக் கூடிய விஷயம் மகரத்தில் இருப்பது.


ஜாதகரையும் ஒரு எரிச்சலான மனநிலையில் வைத்திருப்பார்.

கும்பத்தில் இருக்கும் போது தன்னுடைய வட்டைத்


ீ தானே பார்த்து சிறப்பு
செய்வார்.

ஒளி அமைப்புகளுக்கு ஆகாத வடுகள்


ீ மகர கும்பம்.

இருள் வடுகளில்
ீ அமர்ந்து சூரிய தேவ் ஸ்தானபலம் இழந்திருக்கும்
நேரங்களில் சுப கிரக தொடர்பால் அவர் அடையும் சுபத்துவமும்
குறைவாகவே இருக்கும்.

சூரியனின் தன்மைகள்

சூரியன் ஆட்சி உச்சம் பெற்றாலும் கேந்திர ஸ்தானங்களில் நின்றாலும்


சூரிய பலம் ஏற்பட்டு சூரியனின் தன்மை அந்த லக்னத்தாருக்கு
வந்துவிடும். சூரியன் பகலில் வலு பெறுகின்ற கிரகம். சூரியன் ஆத்ம
காரகன். ஆத்மா என்பது உயிர். எனவேநல்ல ஆத்ம பலம் பெற்று நீண்ட
ஆயுளுடன் வாழ்வார்கள். சூரியனுக்குரிய திசை கிழக்கு எனவே
கிழக்கு திசை நோக்கி தான் இவர்கள் வெற்றிகள் அமையும். இவர்கள்
தடித்த ஆடைகளையே விரும்பி அணிவார்கள், மஞ்சள் நிற விழிகளை
உடையவராகவும், நடுத்தர உயரம் உடையவராகவும், கோரை
மயிர்உடையவராகவும்பித்ததேகம் உடையவராகவும்
இருப்பார்கள்.சாப்பாட்டை விரும்பி ருசித்து சாப்பிட
கூடியவர்களாகவும் இருப்பார்கள். நல்ல சம்பாத்தியம் செய்பவராகவும்
அரசாங்க வேலை அல்லது அரசாங்க தொடர்புடையவர்களாகவும்
இருப்பார்கள்.அதிகாரம், அந்தஸ்து, ஆழ்ந்த கருத்து
உடையவராகவும்,எவருக்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.
குலப்பெருமை காப்பார்கள். சுய தொழில் செய்வோருக்கும், அரசு,
அரசியல் ஈடுபாடு உள்ளோருக்கும், மருத்துவத் துறை

19
சார்ந்தவர்களுக்கும் சூரியன் வளமுடன் இருக்கும். சூரியன்
பலமிழந்திருந்தால் எவருக்கும் கீ ழ்ப்படியாத குணம் இருந்தும்
கீ ழ்ப்படிந்து நடக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும்.

கிரகங்களில் முதன்மை ஆனாவர் ராஜ கிரகம் என்ற பெயர் பெற்றவர்

சிம்மத்தில் ஆட்சி, மேஷத்தில் உச்சம் துலாத்தில் நீசம்


தந்தைக்குக் காரகர்.

அரசியல் சக்தியைக் குறிப்பவர் சத்திரியர்.

எண்கணித்தில் 1 ஆம் எண்குரியவர்.

சூரியனின் காரகத்துவங்கள்

சூரியன் காரகத்துவம் அப்பா, மகன், கிங், பிரதமர், ஜனாதிபதி, நிர்வாகி,


முதலமைச்சர், அரசு. அதிகாரிகள், அரசியல்வாதிகள், சோல், கடவுள்,
பெயர், புகழ், பொலிவு, தலைநகரம், பவர், அரண்மனை, வலது கண், வலது
பக்கத்தில், ஹவுஸ் வலது பக்க விண்டோஸ். தந்தை. எலும்பு. உள்
உஷ்ணம். மூத்த மகன். கௌரவம். நம்பிக்கை. நாணயம். மலை மேடான
பகுதி. மச்சு. கோட்டைகள். லாட்ஜ்கள். அதிகாரத் தன்மை. தலைமை
பொருப்பு. நாட்டின் நிதியை பெறுக்கக்கூடியவைகள். நாட்டின் நிதி
நிறுவனங்கள். அரசு. அரசு சார்புடைய நிறுவனங்கள். அரசு. அரசு
சார்புடைய இடங்கள். ஆண்மீ கத் தலைவர். வணிக வளாகம். தொகுப்பு
வடுகள்.
ீ நிரந்தர வருமானம் தரும் வாடகை வடுகள்.
ீ அரசியல், கோபம்.
காடுகள். வலது கண். சத்ரியன். தொந்தரவு செய்யாத நெருப்பு.
திருமணத்திற்குப் பின் மாமனார். பகல். பொற்கொல்லர். கடன்
கொடுப்பவர் மற்றும் பெறுபவர் (அரசு சார்பில்) ஆங்கில மருத்துவம்.
குற்றம். குற்றம் தீர்க்க அரசு நடவடிக்கை. அரசியல் தலைவர்கள். ஊரின்
பெரிய மனிதர்கள். மாடி வடு.
ீ சிவம். சித்த மருத்துவம் (சூரிய உச்சம்).

20
தண்டுவடம். வட்ட வடிவமான தங்கை நகைகள். அடிவயிறு. இருதயம்.
கிட்டத்துப் பார்வை. தூரத்துப் பார்வை. வைரம் பாய்ந்த மரங்கள்.
ஆலயங்கள். மிக்க காரங்கள் (மிளகாய் இல்லாத) கூரை. பந்தல்.

சூரியனை பற்றிய அறிய தகவல்கள்

சூரியனின் குணங்கள்

சூரியனை வழிபட்டால் நமக்கு எதிரிகள் இல்லாமல் செய்து விடுவார். தீராத


கவலைகள் தீரும். நினைத்த காரியம் நடக்கும். சூரிய நமஸ்காரம் செய்தால்
கண்நோய், இருதய நோய், மஞ்சள்காமாலை ஆகியவை தீரும். பிரகாசமான
எதிர்காலத்தை கொடுப்பார்.

சூரியனார் கோயில் செல்ல ஏற்ற நாட்கள்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம்.


ஆடிமாத கடைசி செவ்வாய், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகள், கார்த்திகை
சோமாவாரம், தை மாத அஷ்டமி திதி, மாசி சிவராத்திரி, குறிப்பாக பொங்கல்
திருநாளில் சென்று வழிபட்டு வருவது சிறப்பைதரும்.சூரியன் கிழக்கு
திசையில் உதிப்பவர் என்பதால், அவர் முகம் மேற்கு நோக்கி இருக்கும்.
இதைக் குறிக்கும் வகையில் சூரியனார்கோயில்,மேற்கு நோக்கி
அமைக்கப்பட்டுள்ளது. சூரியநாராயணர் மேற்கு நோக்கி நிற்கிறார்.

சூரியனுக்கு எதிரே குரு

சூரியனார் கோயிலில் அவருக்குரிய வாகனமாக ஏழு குதிரைகள் எதிரே


இருந்தாலும், அதற்கு முன்னதாக குருபகவான் மறைந்திருக்கிறார். அவரது
பார்வை படுவதால் சூரியனுக்கு உக்கிரம் குறைந்துவிடும். குருபார்வையால்
கோடி நன்மை பெறும் சூரியன் அதை அப்படியே பக்தர்களிடம்
வழங்கிவிடுவார்.

21
சூரிய பரிகாரங்கள்

சூரிய பகவானுக்கு விரதம் இருந்து, சூரிய பகவானை மந்திரங்களால்


துதித்து வழிபட்டு வர சூரியனால் நன்மைகள் உண்டாகும். மேலும்
உங்கள் சக்திக்கேற்ப ஞாயிற்றுக்கிழமைகளில் 8 மணிக்குள்ளாக
ஏழைகளுக்கு கோதுமை, வெல்லம், இளஞ்சிவப்பு நிற வஸ்திரங்கள்
போன்றவற்றை தானம் செய்வதும் சூரிய பகவானுடன் தோஷங்களை
போக்கும் சிறந்த பரிகாரமாகும். சூரியபகவானின் தோஷங்கள் நீங்கவும்,
அவரின் முழுமையான அருளாசிகளைப் பெறவும் ஏதேனும் ஒரு
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குள்ளாக தஞ்சையில் இருக்கும்
சூரியனார் கோவிலுக்கு சென்று, சூரிய பகவானுக்கு அபிஷேகம் மற்றும்
அர்ச்சனை செய்து, ஆரஞ்சு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்து,
கோயிலை 10 முறை வலம் வந்து வழிபட வேண்டும். இந்த
பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு
ஒருமுறையோ செய்வது சூரிய பகவானால் நன்மைகள் ஏற்பட
வழிவகை செய்யும். சூரியனார் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய
முடியாத நிலையில் இருப்பவர்கள், உங்கள் வட்டிற்கு
ீ அருகில்
இருக்கும் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8
மணிக்குள்ளாக சென்று, நவக்கிரக சன்னிதியில் இருக்கின்ற
சூரியபகவானுக்கு செந்தாமரைப்பூ சமர்ப்பித்து, கோதுமை கொண்டு
செய்யப்பட்ட உணவை நைவேத்தியம் செய்து, சூரிய பகவானுக்குரிய
காயத்திரி மந்திரம் மற்றும் ஸ்தோத்திரங்களை 108 முறை துதித்து
வழிபடுவதால், சூரிய கிரக தோஷங்கள் நீங்கி, வாழ்வில் நன்மையான
பலன்கள் உண்டாகும். இந்த பரிகாரத்தை 9 முதல் 27 வாரங்கள் வரை
செய்வதால் மட்டுமே உறுதியான பலன்களை பெற முடியும். மேற்கூறிய
இரண்டு பரிகாரத்தையும் செய்ய முடியாதவர்கள் தினந்தோறும்
அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியன் உதிக்கின்ற
கிழக்கு திசை நோக்கி நின்றவாறு ஓம் சூரிய நாராயண நமஹ என்கிற
மந்திரத்தை 108 துதித்து வழிபடுவதால் சூர்ய கிரக தோஷங்கள் நீங்கும்.

22
ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் ஒரு வேளை மட்டும் இனிப்பு உணவு அல்லது
கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவை சாப்பிட்டு, சூரிய பகவானுக்கு
விரதம் இருந்து, சூரிய பகவானை மந்திரங்களால் துதித்து வழிபட்டு வர
சூரியனால் நன்மைகள் உண்டாகும்.

சூரிய பகவான் ஸ்லோகம்

சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம்


போற்றும் ஞாயிறே போற்றி சூரியா போற்றி
சுந்தரா போற்றி வரியா
ீ போற்றி
வினைகள் களைவாய்.

உலகிற்கு ஒளியை தரும் சூரிய பகவானுக்குரிய இந்த தமிழ்


ஸ்லோகத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து நீராடிய
பின்பு, சூரியன் உதிக்கின்ற நேரத்தில் அச்சூரியனை தரிசித்தவாறே இந்த
ஸ்லோகத்தை 9 அல்லது 27 முறை கூறி ஜெபிக்க வேண்டும். இப்படி 27
ஞாயிற்றுக்கிழமைகள் சூரியனை மேற்கூறிய இந்த ஸ்லோகத்தை கூறி
வழிபட்டு வந்தால் முதுமை மற்றும் பிற காரணங்களால் கண்களில்
பார்வை திறன் குறைவதை தடுத்து கண்களின் ஒளி காக்கப்படும். நீண்ட
நாட்களாக உடலை வருத்திக்கொண்டிருக்கும் ரோகங்கள் நீங்கும். உடல்
மற்றும் மனம் உறுதிபெறும்.

23
சூரியக் கோவில்கள்
சூரியனார் கோவில் தஞ்சாவூர்

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு கிழக்கே


கும்பகோணம்-பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது.
ஆடுதுறை இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும்
பேருந்தில் ஏறி இக்கோவிலை அடையலாம். திருமங்கலக்குடி
காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்றுத் தொலைவு
நடந்து கோவிலை அடையலாம். இந்த கோவில் ஒன்பது
நவக்கிரகக்கோயில்களில் முதன்மையானதாகும்.

கொனார்க் சூரியன் கோயில், ஒடிசா.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்ற ஊரில் உள்ளது.


இக்கோவில் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் சிவப்பு
மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது.
கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவ சூரியக் கோவில். இது
கீ ழைக் கங்கர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற
மன்னனால் உருவாக்கப்பட்டது.

சூரியன் கோயில், குஜராத் அல்லது சூரியன் கோயில்,


மோதேரா.

சௌராட்டிர தேசத்தை ஆண்ட சோலாங்கி வமிச மன்னர் முதலாம்


பீமதேவனின் மனைவியால், மொதெரா நகரத்தில், கி. பி., 1026 இல் கட்டி

24
சூரிய பகவனுக்கு அர்பணிக்கப்பட்டது. அழகிய சிற்பங்களும் கலை
நுணுக்கங்களுடன் கூடிய இப்பெரிய சூரியன் கோயில் .

.மார்தாண்ட சூரியன் கோயில் காஷ்மீ ர்.மார்தாண்ட சூரியன்


கோயில் (Martand Sun Temple) இந்தியாவின் ஜம்மு காஷ்மீ ர் மாநிலத்தின்
அனந்தநாக் நகரத்திலிருந்து ஐந்து கிலோ மீ ட்டர் தொலைவில்
அமைந்துள்ள சூரிய பகவானுக்கு அர்பணிக்கப்பட்ட இந்துக் கோயில்

ஆகும்.[1] இக்கோயிலின் மூலவர் சூரியன்.

அரசவல்லி சூரியன் கோயில்ஆந்திரப் பிரதேசம்

அரசவல்லி சூரியன் கோயில் (Arasavalli Sun Temple), கி பி


ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சூரியன் கோயிலாகும். இக்கோயில்
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில், ஒடிசா
மாநிலத்தை ஒட்டியுள்ள வங்காள விரிகுடாவின் கடற்கரையில்
அமைந்த ஸ்ரீகாகுளம் நகரத்திலிருந்து ஒரு கிலோ மீ ட்டர் தொலைவில்

அரசவல்லி கிராமத்தில் அமைந்துள்ளது. [1] இக்கோயில் கலிங்க மன்னர்


தேவேந்திரவர்மனால் கி பி 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு,
சூரியபகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

25
தொகுப்புரை

விண்வெளியையும் மண்ணுலகையும் இணைக்கும் மெய்ஞான அறிவியலே


ஜோதிடம் ஆகும். கிரகங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு
மானுட வாழ்வியலில் ஏற்படும் சகலவிதமான சாதக பாதக விளைவுகளை
மையப்படுத்தி மெய்ஞ்ஞான அறிவியலின் மூல சக்தியாக விளங்குவது
கதிரோன் என்றும் பகலவன் என்றும் ஆதித்தியன் என்றும் அனந்தகோடி
நாமங்களால் புகழப்படும் சூரிய கோளேயாகும்.ஜோதிட சாஸ்திரத்தை சூரிய
குடும்ப சாஸ்திரம் என்று வழங்கினாலும் சாலப் பொருந்தும் என்பது
ஆன்றோர் நம்பிக்கை. இவ்வரிய சாஸ்திரத்தில் நவனகாலீ மானுட
குலத்தின் இதயங்களுக்கு செலுத்துவதிலும் இளைஞர்களுக்கு இவ்வரிய
கலையின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தவும் மாபெரும் சேவையாற்றி வரும்
நமது ‘‘உலகத்தமிழ் ஜோதிடர்கள் மஹாசபை பயிற்சி மையம்’’ நிச்சயம் சிவ
சூரிய நாராயண சுவாமி அநுக்கிரகிக்கப்பட்தே என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
எங்கள் குருநாதர் ஆசான் மறைந்து எங்களுடன் எப்போதும் வாழ்ந்து
கொண்டிருக்கும் ஐயா சித்தயோகி சிவதாசன் ரவி ஐயா அவர்கள், ஐயா
கவிஞர் மரையேந்தி அவர்கள், பேராசிரியர் ஐயா சண்முகவேல் அவர்கள்
,மற்றும் ஐயா ஆதித்யகுருஜி அவர்கட்கும் எங்களது நன்றியை சிரந்தாழ்ந்தி
தெரிவித்துக் கொள்கின்றேன்.இத்துடன் இந்த குழு பணியை பதிப்பு செய்ய
உதவி மற்றும் வகுப்பில் சந்தேகம் தெளிவுறச் செய்த நிர்வாகிகள்
அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல.

ஆய்வுக்கு பயன்பட்டவை :-

சித்தயோகி சிவதாசன் ரவி அய்யாவின் நூல்கள்.

ஆதித்ய குருஜி ஐயாவின் நூல்கள்.

வகுப்பறை பாடங்கள்.

இணையதளம்.

26
27
.

28
29
30
31

You might also like