You are on page 1of 9

கிரக யுத்தம்

----------------------

ताराग्रहाणामन्योन्यम् स्याथाम्युद्ध समाकमौ


समाकम ससान्गेन: सूर्येणास्थमनम्सह:
‘தாராக்ரஹாணா மந்யோந்யம் ஸ்யாதாம்யுத்த ஸமாகமௌ
ஸமாகம: சசாங்கேந ஸூர்யே ணாஸ்தமநம் ஸஹ :‘ ( சூரிய சித்தாந்தம்)

வான மண்டலத்தில் சூரிய சந்திரர்களைப் போன்று ஒளி தரக்கூடியவர்களாக இல்லாமல்


நட்சத்திரங்களைப் போல் இருக்கும் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும்
தாராக்கிரகங்கள் எனப்படும். இவர்கள் சூரியனோடு ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் கூடினால் அஸ்தமனம்
அடைவர். சந்திரனோடு ஒரே பாகை கலையில் கூடினால் சமாகமம் அடைவர். மேற்கண்ட ஐவருள்
ஏதேனும் இருவர் ஒரே பாகை கலையில் கூடினால் அதற்குக் கிரக யுத்தம் என்று பெயர். இதனை சாதக
சாகரம் கீழ்கண்டவாறு உரைக்கிறது.

‘செங்கதிர்வெண் மதிபோல்மிக் கொளியுடன்விண் மீது


திகழாமல் உடுக்கணம்போல் விளங்கிடும்ஓர் ஐவர்
அங்கிபுதன் குருவெள்ளி நீலன்இவர் உடுக்கோள்
ஆவர்இவர் அருக்கனைவந்து அடுத்திட்டால் மூடம்
திங்களைவந்து அடுத்திடினே சமாகமமென் றுரைப்பார்
சேய்முதலோர் தமில்இருவர் இராசியில்ஒன் றாகத்
தங்கிகலை வரைச்சமமாய் இருந்தக்கால் அதனைத்
தாராக்கோள் சமரம்என அறிதல்நெறி யாமே.‘

கிரகங்கள் வான வெளியில் ஒருவருக்கொருவர் பலகோடி மைல்கள் வித்தியாசத்தில் தத்தமது சுற்றுப்


பாதைகளில் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு சுற்றி வந்து கொண்டிருக்கும்
போது சில சமயங்களில் ஒரே நேர் கோட்டில் இரண்டு கிரகங்கள் சஞ்சாரம் செய்யும். அதாவது
மேற்கண்ட இரண்டு கிரகங்களும் ஒரே பாகை ஒரே கலையில் சஞ்சரிக்கும் போது பூமியிலிருந்து
பார்க்கும்போது அவை ஒன்றோடு ஒன்று சேர்ந்திருப்பது போலவும் ஒன்றின் மேல் ஒன்று
அமர்ந்திருப்பது போலவும் தோற்றமளிக்கும். இவ்வாறு ஒரே பாகை கலையில் சேர்ந்திருப்பதையே கிரக
யுத்தம் என்று சொல்லுவார்கள். இதனை பிருஹத் சம்ஹிதை கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கிறது.

‘வியதி சரதம் க்ரஹாணாம் உபர்யுபர்ய


ஆத்ம மார்க சமஸ்தானம்
அதிதூரத் த்ருக் விஸாஹயே
சமதாமிவ சம்ப்ரயாதனம்‘.

கிரக யுத்தமானது முக்கியமாக முந்தை(Muntane Astrology) என்று சொல்லக் கூடிய இயற்கை சோதிடம்,
பிரச்சனம்,ஆரூடம் மற்றும் வருடபல ஜாதக முறைகளுக்கு முக்கியமாகப் பயன்படக் கூடியதாகும். மனித
ஜாதகங்களுக்கும் இதனைக் கணித்துப் பயன்படுத்திப் பலன் சொல்ல வேண்டியதாகவும் உள்ளது. மேலும்
இதுபோன்ற கிரக யுத்தம் ஏற்பட்ட காலம் மனிதர்களுக்குத் தோஷம் தருவதாகும். எனவே அதற்குக்
காம்ய சிராத்தம் செய்ய வேண்டும் என விஷ்ணு புராணம் எடுத்துரைக்கிறது. ‘நக்ஷத்ரக்ரஹபீடாஸு
துஷ்டஸ்வப் நவலோகநே, இச்சாச்ராத்தா நிகுர்வீத நவஸஸ்யாகமேதத‘. என்பதால் இதனை அறியலாம்.

கிரகயுத்தம் சம்பந்தமான விதிகள் :

1. செவ்வாய் முதல் சனி வரையிலான ஐந்து கிரகங்களில் ஏதேனும் இரு கிரகங்கள் ஒரே பாகை ஒரே
கலையில் இருக்க வேண்டும்.
2. இதில் ஒரு கலை மாறுபட்டிருந்தாலும் கிரக யுத்தம் நேரிடாது.
3. அவ்விரு கிரகங்களின் விக்ஷேபமும் (Latitude) ஒரே திக்கில் இருக்க வேண்டும்.
4. விக்ஷேபங்கள் (Latitude) மாறுபட்டிருந்தால் அதற்குக் கிரகச் சேர்க்கை (Conjunction) என்று
பெயரேயன்றி யுத்தம் அல்ல. கிரகச் சேர்க்கை என்பது அடிக்கடி ஏற்படக் கூடியதாகும். ஆனால் கிரகச்
சேர்க்கை ஏற்படும் ஒவ்வொரு முறையும் யுத்தம் நிகழ வேண்டுமென்பதில்லை. யுத்தம் அவ்விரு
கிரகங்களின் விக்ஷேபமும் ஒரே திக்கில் இருந்தால் மட்டுமே நிகழும்.
5. விக்ஷேபம் ஒரே திக்கில் இருக்கும் போது வடக்கு கிராந்தி (Declination) உடைய கிரகம் யுத்தத்தில்
வெற்றி பெறும். தெற்கு கிராந்தி உடைய கிரகம் யுத்தத்தில் தோல்வியைச் சந்திக்கும். ‘உதகஸ்தோ
தீப்திமாந் ஸ்தூலோ ஜயீயாம்யே பியோபலீ‘. (சூரிய சித்தாந்தம்). அதாவது : வடக்கு திசையில் இருந்தும்,
பார்வைக்குப் பிரகாசமாகக் காணப்பட்டும், பிம்ப கலையில் அதிகமாகவும் இருக்கும் கிரகம் யுத்தத்தில்
வெற்றியடைகிறது. தெற்குத் திசையில் இருந்தும், பிரகாசம் இல்லாமலும், பிம்பகலை குறைவாகவும் உள்ள
கிரகம் தோல்வியடைகிறது. ஆனால் சுக்கிரன் எந்த திக்கில் இருந்தாலும் வெற்றி பெறும். ‘உதகஸ்தோ
தக்ஷிணஸ்தோவா பார்கவ : ப்ராயசோஜயீ‘. (சூரிய சித்தாந்தம்).

யுத்தத்தின் வகைகள் :

‘உல்லேகம் தாரகாஸ்பர்ஸாத் பேதபேத ப்ரகீர்த்யதே


யுத்தமம்ஸுர் விமர்தாக்யம் அம்ஸுயோகே பரஸ்பரம்
அம்ஸாதூநே அபஸவ்யாக்யம் யுத்தமே கோத்ரஸேதநு:
ஸமாகமே அம்ஸாததிகே பவதத்சேத் பலாந்விதௌ ‘ ( சூரிய சித்தாந்தம்)

கிரக யுத்தம் நான்கு வகைப்படும். அவையாவன : 1. உல்லேக யுத்தம் 2. பேத யுத்தம் 3. அம்ஸுமர்த்தன
யுத்தம் 4. அபசவ்ய யுத்தம் ஆகியவையாகும். இதுவன்றி ஐந்தாவதாக மேலும் ஒரு யுத்தமும் உண்டு.
அதற்கு கூட யுத்தம் என்பது பெயர். இந்த ஐந்து வகை யுத்தமும் எவ்வாறு ஏற்படுகின்றன ? அவற்றைக்
கணிப்பது எவ்வாறு ? அதனால் ஏற்படும் பலன்கள் என்ன ? என்பதைப் பற்றி இனி வரும் பதிவுகளில்
விரிவாகக் காண்போம்.

கடந்த பதிவில் கிரக யுத்தம் ஐந்து வகைப்படும் என்பதைப் பார்த்தோம்.அவையாவன : 1. உல்லேக


யுத்தம் 2. பேத யுத்தம் 3. அம்ஸுமர்த்தன யுத்தம் 4. அபசவ்ய யுத்தம் 5. கூட யுத்தம் ஆகியனவாகும்.
இனி இவை பற்றிய விளக்கங்களைக் காண்போம்.

சுத்தமுறும் சமரவகை ஐந்தாகும் அவற்றுள்


சூழிரண்டு கிரகபிம்பத் தொன்றற்பமாகி
நத்தியமற் றொன்றதிகம் எனில்கூட மற்றும்
நவின்றவண மிருந்தவற்றின் இடைகலையொன் றுக்குள்
சித்திக்கின் அபசவ்யம் இயம்பும்இரு பிம்பச்
சேர்க்கையின்பா தியுமிடையும் குறையாமல் நிறையாய்
ஒத்திருக்கின் உல்லேகம் ஒன்றையொன்று மறைக்கின்
உரைத்திடுவர் பேதமென்னும் பெயர்ச்சமரம் என்றே.

என்றியம்பும் கிரகபிம்பச் சேர்க்கையின்பா திக்கே


இயம்புபிம்பாந் தரம்அற்பம் அதிகமுறின்அதுதான்
துன்னமிசு விமர்த்தனமாம் ........................................

1. உல்லேக யுத்தம் :

யுத்தம் ஏற்பட்டிருக்கக் கூடிய இரண்டு கிரகங்களின் பிம்பங்களைக் கூட்டி இரண்டால் வகுத்துக் கொள்ள
வேண்டும். அதுபோன்றே அவ்விரண்டு கிரகங்களின் பிம்பங்களில் பெரியதில் இருந்து சிறியதைக்
கழித்துக் கொள்ள வேண்டும். இவ்விரண்டும் வித்தியாசம் ஏதுமின்றிச் சமமாக இருக்குமானால் அதற்கு
உல்லேக யுத்தம் என்று பெயர்.

உதாரணமாக யுத்தம் ஏற்பட்டிருக்கும் இரண்டு கிரகங்களில் ஒன்றின் பிம்பகலை 15 என்று வைத்துக்


கொள்வோம். மற்றொன்றின் பிம்பகலை 5 எனக் கொள்வோம். இவ்விரண்டையும் கூட்ட 15 + 5 = 20.
அதை இரண்டால் வகுக்க = 10ஆகும். அடுத்து இவ்விரண்டில் பெரிய பிம்ப கலை உடையது 15, சிறியது
5. இதில் பெரியதில் இருந்து சிறியதைக் கழிக்க = 15- 5 = 10. ஆக இரண்டு வகையில் கணிக்கும்போதும்
விடை 10ஆகவே வருகிறது. இரண்டும் சமமாக இருப்பதால் இது உல்லேக யுத்தம் ஆகும். இவ்வகை
யுத்தத்தில் இரண்டு கிரகங்களின் பிம்பங்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்கும். ஆனால்
ஒன்றை ஒன்று மறைக்காமல் இருக்கும். அதனாலேயே இதற்கு ஸ்பரிசம் என்று பெயர். மேலும் ஒன்றின்
ஒளியை ஒன்று தடை செய்வதால் இதற்கு ரோதனம் (Obstruction) என்னும் பெயரும் உண்டு.
ஆங்கில நூல்களில் இந்த யுத்தத்திற்கான விளக்கம் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது. “When the rims
of two planetary paths touch each other but does not overlap, it is called Ullekha. In other words, when the
graha-bimbas (discs) of planets seem to touch each other it is called Ullekha”.

2. பேத யுத்தம் :

யுத்தம் ஏற்பட்டிருக்கக் கூடிய இரண்டு கிரகங்களில் ஒன்றின் பிம்பமானது மற்றொரு கிரகத்தின்


பிம்பத்தை மறைக்குமானால் அதற்கு பேதயுத்தம் என்று பெயராகும். இந்த வகை யுத்தத்தில் ஒரு
கிரகமானது பூமிக்கு அருகில் இருக்கும். மற்றொன்று தூரத்தில் இருக்கும். இரண்டு கிரகமும்
நேர்கதியிலேயே (வக்கிரம் அடையாமல்) இருக்கும். ஒன்றை ஒன்று விழுங்குவது போல் காணப்படும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சூரிய சந்திர கிரகணங்களைப் போன்று கிரகங்களுக்குள் ஏற்படும்
கிரகணமே (Occultation) பேதயுத்தமாகும். இதற்கு சதனம் என்னும் பெயரும் உண்டு.

ஆங்கில நூல்களில் பேதயுத்தம் பற்றிப் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது. “When two planets appear to
have a same direction of movement on account of overlapping they fight in Bheda. In this case the planet
nearer to us on earth completely obstructs the farther one”.

3. அம்சுமர்த்தன யுத்தம் (அ) அம்சுவிமர்த்தன யுத்தம் :

யுத்தம் ஏற்பட்டிருக்கக் கூடிய இரண்டு கிரகங்களின் பிம்பத்தைக் கூட்டி இரண்டால் வகுத்து வைத்துக்
கொள்ள வேண்டும். மேலும் அவ்விரண்டு கிரகங்களின் பிம்பங்களில் பெரியதில் இருந்து சிறியதைக்
கழித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கழித்த தொகையானது மேலே சொல்லியபடி பிம்பங்களைக்
கூட்டி இரண்டால் வகுத்த தொகையை விட சிறிதளவு அதிகமாக இருக்குமானால் அதற்கு அம்சுமர்த்தன
யுத்தம் என்று பெயராகும்.

உதாரணமாக ஒரு கிரகத்தின் பிம்பகலையானது 17 எனவும் மற்றொன்றின் பிம்பகலை 5 எனவும்


வைத்துக் கொள்வோம். இவ்விரண்டையும் கூட்டி இரண்டால் வகுக்க 17+5 = 22/2 = 11. பெரியதில்
இருந்து சிறியதைக் கழிக்க : 17 - 5 = 12. இதில் பெரியதில் இருந்து சிறியதைக் கழித்த தொகையான 12
என்பது இரண்டு பிம்பங்களையும் கூட்டி இரண்டால் வகுத்த தொகையான 11 விடச் சற்று அதிகம்
என்பதால் இங்கு அம்சுமர்த்தன யுத்தம் ஏற்பட்டிருக்கிறது என அறியலாம்.

இவ்வகை யுத்தத்தில் ஒரு கிரகத்தின் ஒளிக்கதிரானது மற்றொரு கிரகத்தின் ஒளிக்கதிரில் மோதிக்


கலக்கும். அதனாலேயே இந்த யுத்தத்தைக் கிரண சங்காதனம் என்றும் ரஸ்மி மர்த்தனம் என்றும்
சொல்லுவார்கள். ஆங்கில நூல்களில் இதை “When the rays of two planets appear to clash each other, it is
termed Amsu-mardana” என்று சொல்லப்படுகிறது.

4. அபசவ்ய யுத்தம் : யுத்தம் ஏற்பட்டிருக்கக் கூடிய இரண்டு கிரகங்களின் பிம்பங்களில் ஒன்று


பெரியதாகவும் மற்றொன்று சிறியதாகவும் இருந்து இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசமானது ஒரு
கலைக்கு உட்பட்டிருக்குமானால் அதற்கு அபசவ்ய யுத்தம் என்று பெயராகும். இந்த யுத்தத்தில் ஒரு
கிரகம் நேர்கதியிலும் மற்றொன்று வக்ர கதியிலும் இருக்கும். முன்னர் சொன்ன மூன்று வகை யுத்தத்திலும்
கிரகங்கள் ஒன்றுக்கொன்று அருகருகே இருக்கும். ஆனால் இந்த யுத்தத்தில் கிரகங்கள் ஒன்றுக்கொன்று
தூரத்தில் இருக்கும். ஆங்கில நூல்களில் இவ்வகை யுத்தத்தை “When a planet's disc, covering each other
moves south (in opposite direction, in retrograde motion), Apasavya occurs” என்று சொல்லப்பட்டுள்ளது.

5.கூட யுத்தம் :

யுத்தம் ஏற்பட்டிருக்கக் கூடிய இரண்டு கிரகங்களின் பிம்பங்களில் ஒன்று பெரியதாகவும் மற்றொன்று


சிறியதாகவும் இருந்து அவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசமானது ஒரு கலைக்கும் அதிகமாக
இருந்தால் அதற்குக் கூட யுத்தம் என்று பெயராகும்.
இதுவரை ஐந்து வகையான கிரக யுத்தங்களும் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதைப் பார்த்தோம். இனி
வரும் பதிவுகளில் அது பற்றிய விளக்கங்களைக் காண்போம்.
கிரக யுத்தம்
----------------------
ताराग्रहाणामन्योन्यम ् स्याथाम्यद्ध
ु समाकमौ
समाकम ससान्गेन: सूर्येणास्थमनम्सह:
‘தாராக்ரஹாணா மந்யோந்யம் ஸ்யாதாம்யுத்த ஸமாகமௌ
ஸமாகம: சசாங்கேந ஸூர்யே ணாஸ்தமநம் ஸஹ :‘ ( சூரிய சித்தாந்தம்)

வான மண்டலத்தில் சூரிய சந்திரர்களைப் போன்று ஒளி தரக்கூடியவர்களாக இல்லாமல்


நட்சத்திரங்களைப் போல் இருக்கும் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து
கிரகங்களும் தாராக்கிரகங்கள் எனப்படும். இவர்கள் சூரியனோடு ஒரு குறிப்பிட்ட
பாகைக்குள் கூடினால் அஸ்தமனம் அடைவர். சந்திரனோடு ஒரே பாகை கலையில்
கூடினால் சமாகமம் அடைவர். மேற்கண்ட ஐவருள் ஏதேனும் இருவர் ஒரே பாகை
கலையில் கூடினால் அதற்குக் கிரக யுத்தம் என்று பெயர். இதனை சாதக சாகரம்
கீ ழ்கண்டவாறு உரைக்கிறது.

‘செங்கதிர்வெண் மதிபோல்மிக் கொளியுடன்விண் மீ து


திகழாமல் உடுக்கணம்போல் விளங்கிடும்ஓர் ஐவர்
அங்கிபுதன் குருவெள்ளி நீலன்இவர் உடுக்கோள்
ஆவர்இவர் அருக்கனைவந்து அடுத்திட்டால் மூடம்
திங்களைவந்து அடுத்திடினே சமாகமமென் றுரைப்பார்
சேய்முதலோர் தமில்இருவர் இராசியில்ஒன் றாகத்
தங்கிகலை வரைச்சமமாய் இருந்தக்கால் அதனைத்
தாராக்கோள் சமரம்என அறிதல்நெறி யாமே.‘

கிரகங்கள் வான வெளியில் ஒருவருக்கொருவர் பலகோடி மைல்கள் வித்தியாசத்தில்


தத்தமது சுற்றுப் பாதைகளில் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு
சுற்றி வந்து கொண்டிருக்கும் போது சில சமயங்களில் ஒரே நேர் கோட்டில் இரண்டு
கிரகங்கள் சஞ்சாரம் செய்யும். அதாவது மேற்கண்ட இரண்டு கிரகங்களும் ஒரே பாகை
ஒரே கலையில் சஞ்சரிக்கும் போது பூமியிலிருந்து பார்க்கும்போது அவை ஒன்றோடு
ஒன்று சேர்ந்திருப்பது போலவும் ஒன்றின் மேல் ஒன்று அமர்ந்திருப்பது போலவும்
தோற்றமளிக்கும். இவ்வாறு ஒரே பாகை கலையில் சேர்ந்திருப்பதையே கிரக யுத்தம் என்று
சொல்லுவார்கள். இதனை பிருஹத் சம்ஹிதை கீ ழ்க்கண்டவாறு எடுத்துரைக்கிறது.

‘வியதி சரதம் க்ரஹாணாம் உபர்யுபர்ய


ஆத்ம மார்க சமஸ்தானம்
அதிதூரத் த்ருக் விஸாஹயே
சமதாமிவ சம்ப்ரயாதனம்‘.

கிரக யுத்தமானது முக்கியமாக முந்தை(Muntane Astrology) என்று சொல்லக் கூடிய இயற்கை


சோதிடம், பிரச்சனம்,ஆரூடம் மற்றும் வருடபல ஜாதக முறைகளுக்கு முக்கியமாகப்
பயன்படக் கூடியதாகும். மனித ஜாதகங்களுக்கும் இதனைக் கணித்துப் பயன்படுத்திப் பலன்
சொல்ல வேண்டியதாகவும் உள்ளது. மேலும் இதுபோன்ற கிரக யுத்தம் ஏற்பட்ட காலம்
மனிதர்களுக்குத் தோஷம் தருவதாகும். எனவே அதற்குக் காம்ய சிராத்தம் செய்ய
வேண்டும் என விஷ்ணு புராணம் எடுத்துரைக்கிறது. ‘நக்ஷத்ரக்ரஹபீடாஸு துஷ்டஸ்வப்
நவலோகநே, இச்சாச்ராத்தா நிகுர்வத
ீ நவஸஸ்யாகமேதத‘. என்பதால் இதனை அறியலாம்.

கிரகயுத்தம் சம்பந்தமான விதிகள் :


1. செவ்வாய் முதல் சனி வரையிலான ஐந்து கிரகங்களில் ஏதேனும் இரு கிரகங்கள் ஒரே
பாகை ஒரே கலையில் இருக்க வேண்டும்.
2. இதில் ஒரு கலை மாறுபட்டிருந்தாலும் கிரக யுத்தம் நேரிடாது.
3. அவ்விரு கிரகங்களின் விக்ஷேபமும் (Latitude) ஒரே திக்கில் இருக்க வேண்டும்.
4. விக்ஷேபங்கள் (Latitude) மாறுபட்டிருந்தால் அதற்குக் கிரகச் சேர்க்கை (Conjunction) என்று
பெயரேயன்றி யுத்தம் அல்ல. கிரகச் சேர்க்கை என்பது அடிக்கடி ஏற்படக் கூடியதாகும்.
ஆனால் கிரகச் சேர்க்கை ஏற்படும் ஒவ்வொரு முறையும் யுத்தம் நிகழ
வேண்டுமென்பதில்லை. யுத்தம் அவ்விரு கிரகங்களின் விக்ஷேபமும் ஒரே திக்கில்
இருந்தால் மட்டுமே நிகழும்.
5. விக்ஷேபம் ஒரே திக்கில் இருக்கும் போது வடக்கு கிராந்தி (Declination) உடைய கிரகம்
யுத்தத்தில் வெற்றி பெறும். தெற்கு கிராந்தி உடைய கிரகம் யுத்தத்தில் தோல்வியைச்
சந்திக்கும். ‘உதகஸ்தோ தீப்திமாந் ஸ்தூலோ ஜயீயாம்யே பியோபலீ‘. (சூரிய சித்தாந்தம்).
அதாவது : வடக்கு திசையில் இருந்தும், பார்வைக்குப் பிரகாசமாகக் காணப்பட்டும், பிம்ப
கலையில் அதிகமாகவும் இருக்கும் கிரகம் யுத்தத்தில் வெற்றியடைகிறது. தெற்குத்
திசையில் இருந்தும், பிரகாசம் இல்லாமலும், பிம்பகலை குறைவாகவும் உள்ள கிரகம்
தோல்வியடைகிறது. ஆனால் சுக்கிரன் எந்த திக்கில் இருந்தாலும் வெற்றி பெறும்.
‘உதகஸ்தோ தக்ஷிணஸ்தோவா பார்கவ : ப்ராயசோஜயீ‘. (சூரிய சித்தாந்தம்).

யுத்தத்தின் வகைகள் :

‘உல்லேகம் தாரகாஸ்பர்ஸாத் பேதபேத ப்ரகீ ர்த்யதே


யுத்தமம்ஸுர் விமர்தாக்யம் அம்ஸுயோகே பரஸ்பரம்
அம்ஸாதூநே அபஸவ்யாக்யம் யுத்தமே கோத்ரஸேதநு:
ஸமாகமே அம்ஸாததிகே பவதத்சேத் பலாந்விதௌ ‘ ( சூரிய சித்தாந்தம்)

கிரக யுத்தம் நான்கு வகைப்படும். அவையாவன : 1. உல்லேக யுத்தம் 2. பேத யுத்தம் 3.


அம்ஸுமர்த்தன யுத்தம் 4. அபசவ்ய யுத்தம் ஆகியவையாகும். இதுவன்றி ஐந்தாவதாக
மேலும் ஒரு யுத்தமும் உண்டு. அதற்கு கூட யுத்தம் என்பது பெயர். இந்த ஐந்து வகை
யுத்தமும் எவ்வாறு ஏற்படுகின்றன ? அவற்றைக் கணிப்பது எவ்வாறு ? அதனால் ஏற்படும்
பலன்கள் என்ன ? என்பதைப் பற்றி இனி வரும் பதிவுகளில் விரிவாகக் காண்போம்.
கடந்த பதிவில் கிரகங்களின் பிம்பகலை பற்றிச் சொல்லியிருந்தேன். கிரகங்களின்
பிம்பகலை என்றால் என்ன ? அதை எப்படிக் கணிப்பது? என்பன போன்ற விபரங்களை இனி
காணலாம். பிம்பகலை என்பது கிரகங்களின் விட்டமேயாகும் (Apparent Diameter). அதாவது
நமது கண்களுக்குப் புலனாகும் கிரகங்களினுடைய விட்டத்தை யோஜனை என்னும்
அளவட்டில்
ீ சொல்வதையே பிம்பகலை எனலாம். கிரகங்களின் மத்திம தூரத்தை (Mean
Distance) யும் சந்திரனின் மத்திம தூரத்தையும் அனுசரித்து கிரகங்களின் விட்டம் அல்லது
பிம்பகலையினை சூரிய சித்தாந்தம் பின்வருமாறு எடுத்துரைக்கிறது.

"குஜார்சிக்ஞா மரேஜ்யாநாம் த்ரிஸதர்தார்த வர்ஜிதா :


விஷ்கம்பாச் சந்த்ரகக்ஷாயாம் ப்ருகோ : ஷஷ்டி ருதாஹ்ருதா : "

செவ்வாயின் பிம்பகலையானது 30 யோஜனை ஆகும். அதன் கால் பங்கான ஏழரை


யோஜனையை சனி புதன் குரு சுக்கிரன் ஆகியோருக்கு முறையே கூட்டிக் கண்டது
அந்தந்தக் கிரகங்களின் பிம்பகலைகளாகும்.

அதாவது செவ்வாயின் பிம்பகலை 30 யோஜனை. அதில் கால்பங்கான ஏழரையை 30 உடன்


கூட்ட வரும் 37'30" சனியின் பிம்பகலையாகும். அத்துடன் 7.5 ஐக்கூட்ட வரும் 45 புதனின்
பிம்பகலையாகும். அத்துடன் 7.5 ஐக்கூட்ட வரும் 52'30" குருவின் பிம்பகலையாகும்.
அத்துடன் 7.5 ஐக்கூட்ட வரும் 60 சுக்கிரனின் பிம்பகலையாகும். சூரிய சந்திரர்களுக்கு
இடையில் உள்ள தூரத்தைக் கொண்டு 15 யோஜனைகளுக்கு ஒரு கலையாக கிரகங்களின்
பிம்ப பரிமாணத்தைக் (Magnitude) கணக்கிடலாம். அவ்வாறு கணக்கிடும்போது செவ்வாயின்
பரிமாணம் 2 கலையாகும். சனிக்கு பரிமாணம் 2'30" கலையாகும். புதன் 3 கலை பரிமாணம்
உடையதாகும். குருவிற்கு 3'30"ம் சுக்கிரனுக்கு 4 ம் பரிமாணமாகும்.

ஆரிய பட்டர் தமது ஆரிய பட்டீயம் நூலில், "சந்திரனின் விட்டமானது 315


யோஜனைகளாகும். அதன் ஐந்தில் ஒரு பங்கான 63 சுக்கிரனின் பிம்பகலையாகும்.
சந்திரனின் விட்டத்தில் பத்தில் ஒரு பங்கு குருவினது பிம்பகலையாகும். அதுபோன்றே
புதன் சனி செவ்வாய் ஆகியோருக்கு முறையே சந்திரனின் விட்டத்தில் 15,20 மற்றும் 25 ல்
ஒரு பங்குகளாக பிம்பகலை அமையும்" என்று கூறுகிறார். இதன்படி பார்க்கும்போது
சுக்கிரன் 63, குரு 31'30", புதன் 21, சனி 15'45",செவ்வாய் 12' 36" ஆகியவை அவற்றின்
பிம்பகலைகளாகும். லல்லர் தமது புவனகோசம் என்னும் நூலில் கிரக யுத்தாதிகாரத்தில்
சந்திரனின் விட்டம் 320 யோஜனை எனக் கூறுகிறார். அவ்வாறெனில் சுக்கிரனுக்கு 64 ம்,
குருவிற்கு 32 ம், புதனுக்கு 21 கலை 20 விகலையும், சனிக்கு 16 ம்,செவ்வாய்க்கு 12 கலை 48
விகலையும் பிம்பகலைகளாக வரும்.

டைகோ பிரே என்னும் வானியல் அறிஞர் செவ்வாய் 25, சனி 27'30", புதன் 32'30", குரு 41'15",
சுக்கிரன் 48'45" ஆகியவையே அவற்றின் பிம்பகலைகளாகக் குறிப்பிடுகின்றார். அதாவது
இவற்றின் பரிமாணங்களாக இவர் குறிப்பிடுவதாவது : செவ்வாய் 1’40", சனி 1’50", புதன்
2’10", குரு 2’45", சுக்கிரன் 3’15".

மேலே கொடுக்கப்பட்டுள்ளவை கிரகங்களின் மத்திம பிம்ப கலைகளாகும். இதில் சூரிய


சித்தாந்தத்தையே பெரும்பாலானவர்கள் பின்பற்றுகிறார்கள். இதனை அடிப்படையாகக்
கொண்டு அவற்றின் சுத்த பிம்பகலைகளைக் கணிக்க வேண்டும். அது எவ்வாறு என்பதை
இங்கே காண்போம்.

"த்ரிசதுஷ்கர்ண யுக்த்சாப்தாஸ்தே த்விக்நாஸ்த்நிஜ்யயாஹதா :


ஸ்புடா : ஸ்வர்ணஸ்தித்யாப்தா பவேயுர்மாந லிப்திகா : "
செவ்வாய் முதலாகிய கிரகங்களின் மூன்றாவது மந்தக்கிரியை என்னும் கணிதத்தின்படி,
சீக்கிர கர்மத்தைப்போல் புஜையின் மீ து கோடியைக் கணித்து அதைக் கொண்டு
சலகர்ணத்தைக் கணித்துக் கொண்ட பின்னர் மேலே கண்ட மத்திய பிம்பகலைகளை
இரட்டித்து திரிஜ்யாவினால் பெருக்கி நான்காவது சலகர்ண யோகத்தினால் (Fourth
hypothenuse) வகுத்த ஈவு அந்தந்தக் கிரகத்தின் சுத்த பிம்ப கலைகளாகும். அம்மாடியோவ் !
என்னென்னமோ சொல்லிக் குழப்பறீங்க எங்களுக்கு ஒண்ணுமே புரியலையே என்று
நீங்கள் சொல்வது எனக்கும் கேட்கிறது. சற்றுப் புரியும்படி விளக்குகிறேன்.

படம் :1 ஐ நன்கு கவனியுங்கள். வானில் ஒரு கிரகம் இருக்கிறது. அதனுடைய


உண்மையான விட்டம் (Actual Diameter) மேலே அம்புக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
ஆனால் நாம் பூமியிலிருந்து பார்க்கும்போது நமது கண்களுக்கு அந்தக் கிரகத்தின்
முழுமையான விட்டம் புலனாவதில்லை. நாம் பார்க்கும் சமயத்தில் அந்தக் கிரகமானது
பூமியிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்தும் நாம் பார்க்கும்
கோணத்தைப் பொறுத்தும் அந்தக் கிரகத்தின் பிம்பத்தின் அளவு மாறுபட்டதாகத் தெரியும்.
இதையே பிம்பகலை (Angular Diameter) என்று சொல்லுவோம். அதுதான் மேற்கண்ட படத்தின்
கீ ழ்ப்பகுதியில் அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பூமியிலிருந்து கிரகம் தற்போது
இருக்கும் தூரத்தைப் பொறுத்து அதன் பிம்பகலை எவ்வாறு மாறுபடுகிறது என்பதைக்
கீ ழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்கள் (படம் : 2 & 3) உங்களுக்கு உணர்த்தும்.

பூமிக்கும் கிரகத்திற்குமான தூரம் குறைவாக இருக்கும்போது பார்வையின் கோணம்


விரிவடைவதால் அங்கு பிம்பகலை அதிகமாக இருக்கும். தூரம் அதிகரிக்க அதிகரிக்க
பார்வையின் கோணம் சுருங்குவதால் அப்போது பிம்பகலை குறைவாக இருக்கும். இதையே
மேற்கண்ட இரண்டு படங்களும் காட்டுகின்றன. இப்போது உங்களுக்குப் பிம்பகலை
என்றால் என்ன என்பது தெளிவாகப் புரிந்திருக்கும். அடுத்ததாக அந்த பிம்பகலையினைக்
கணிக்கும் முறையைக் காண்போம். மேலே உள்ள படத்தைப் பாருங்கள். அதில் நீள்
வட்டமாக இருப்பது கிரகமாகும். அதன் குறுக்கே
அம்புக்குறியிட்டு d என்று குறிப்பிட்டு இருப்பது அக்கிரகத்தின் உண்மையான விட்டம்
(diameter) ஆகும். இடது ஓரத்தில் இருந்து கிரகத்தின் நடுப்பகுதி வரை அம்புக்குறியிட்டு D
என்று குறிப்பிட்டு இருப்பது பூமியிலிருந்து அக்கிரகம் தற்போது சஞ்சரிக்கும் பகுதி
வரையிலான தூரமாகும் (Distance). படத்தின் இடது பக்கத்தில் ஒரு கொக்கி போல் ()
தொங்கிக் கொண்டிருப்பது தான் பிம்பகலை ஆகும். இப்போது பிம்பகலைக்கான சூத்திரம்
இதோ :

பிம்பகலை = 2 arctan ( ½ d / D )

You might also like