You are on page 1of 21

GMP ஜனன ஜாதக ஆய்வு

1. 3 ம் வீடு எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும்


2. 6 ம் வீடு எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும்
3. ஜனன ஜாதகத்தில் 12 9 11 வீடுகள் மிக முக்கியம். முதலில் இந்த பாவங்களை பார்க்க வேண்டும்.
4. கோணங்கள் எப்படி அமைந்திருக்கின்றன என்று பார்க்க வேண்டும்.
5. லக்கினம் எப்படி அமைந்துள்ளது என்று பார்க்க வேண்டும்
6. கேந்திர பலம் பார்க்க வேண்டும்.
7. லக்கினத்திற்கு 3 6 8 11 என்பது உபஜெய ஸ்தானங்கள். ஒவ்வொரு வீட்டின் அதிபதியும் அந்த வீட்டிற்கு 3 6 8
11 இம் வீடுகளில் இருந்தால் அது நல்ல யோகம் தரும்.
8. 3 6 8 11 ல் தீய கிரகம் இருந்து அதை லக்கினாதிபதி பார்க்காமல் இருப்பது
9. பலிதங்கள் கூறும் போது கிரகம் ஏறிய சாரம் முக்கியம்.
10. காரக கிரகத்துடன் காரக பாவத்தையும் இணைத்து பார்த்து பலனும் கால நிர்ணயமும் செய்வது

சுப கிரகங்களும் 3 கேந்திரங்களும்


1. ஒரு ஜாதகத்தில் கேந்திரத்தில் சுப கிரகங்கள் இருந்தால் பால்ய வயதில் நன்மை
2. பண பரத்தில் சுப கிரகங்கள் இருந்தால் மத்திய வயதில் நன்மை
3. ஆபோகிளிமத்தில் சுப கிரகங்கள் இருந்தால் கடைசி வயதில் நன்மை

ஒரு பாவத்தின் பலம் பார்க்க அதன் 2/12 பார்க்க வேண்டும்.


ஒரு பாவத்தின் ஆசைகள் நிறைவேற அதன் 11 ம் பாவம் பார்க்க வேண்டும்.

1 4 7 10 2 3 11 வீடுகளுக்கு சாரம் பார்க்க வேண்டும். 5 6 8 12 வீடுகளுக்கு நவாம்சம் பார்க்க வேண்டும்.

4 ம் இட அதிபதிக்கு கோணத்தில் கேது வந்தால் விபத்து.

செவ்வாய் சனி ராகு இவர்களில் ஆறாவது இருவர் ஒரு பாவத்தை பார்த்தல் அந்த பாவம் கெடும்
GMP யில் கேந்திர விதி அல்லது கேந்திரம் என்றால் என்ன?
GMP விதியில் கிரகங்கள் தங்களுக்குள் கேந்திரமாய் இருப்பது கேந்திரம் எனப்படும். அவைகள் லக்கினத்திற்கு
கேந்திரமாக அமைந்துள்ளதா இல்லையா என்று பார்க்கக்கூடாது. அதாவது, இரண்டு கிரகங்கள் ஒரே ராசியில் சேர்ந்து
இருப்பது, ஒன்றுக்கு ஒன்று 1/7 ஆகவோ, அல்லது 4/10 ஆக இருப்பது கேந்திரம்.

கேந்திரத்தையும் கோணத்தையும் ஆட்சி செய்யும் கிரகங்கள் (ஜோதிட விதிகள் எப்படி எழுதப்பட்டன)


o செவ்வாய் இரத்தம்
o சந்திரன் மன அழுத்தம்
o சூரியன் நல்ல எண்ணங்கள்
o சுக்ரன் மகிழ்ச்சி
o குரு தனம் சுகம்
o சனி கஷ்டம் தாமதம்

 சனிக்கு அஷ்டமத்தில் சூரியன். எனவே சனி சூரியனின் நல்ல


எண்ணங்கள் தராமல் தீய எண்ணம் கொடுப்பான்.
 குருவுக்கு அஷ்டமத்தில் சந்திரன். குரு பொருள் சுகம்
கொடுப்பான் அதே நேரத்தில் மன அழுத்தம் கொடுப்பான்.
 குருவுக்கு 11 ல் சுக்ரன் வந்தால் அவன் வாழ்க்கை சுகமாய்
இருக்கும்
 சனி கேந்திரத்தில் செவ்வாய் வந்தால் அவன் யுயர்ந்த நிலை
அடைவான்
 சந்திரனுக்கு 4, 11 ல் சுக்ரன் இருந்தால் வீடு வாகனம் சுகம் கிடைக்கும்
 சூரியனுக்கு 5 ல் குரு இருந்தால் உயர்ந்த பதவி, எதிர்பாராத தனம் கிடைக்கும்
 சனி சூரியன் சேர்ந்து எங்கு உள்ளதோ அந்த பாவம் வலிமை பெரும்
 சனி செவ்வாய் சேர்ந்தால் விபத்து. ஆனால் ஜனன ஜாதகத்தின் சனியுடன் கேந்திரமாய் அமைந்தால் விபத்து
தராது.
 சனி+செவ்வாய்; ராகு+செவ்வாய்; குரு+ராகு சேர்ந்தாலும் விபத்து
 சூரியன் செவ்வாய் இணைவு படிப்பு அந்தஸ்து கெளரவம்
 சூரியன் சுக்ரன் சுகம் பணம் அந்தஸ்து
 சந்திரன் சுக்ரன் நல்ல குடும்பம் லாபம்
 சந்திரன் செவ்வாய் குழந்தை கெளரவம்
 புதன் கேது அல்லது சூரியன் ராகு காதல் தரும்
கோணமும் கேந்திரமும் அமைந்தவிதம்
விதி 1
1. கேந்திராதிபதியும் கோணாதிபதியும் இணைந்து கேந்திரத்தில் இருந்தால் வாழ்க்கை நன்று இருக்கும். ஜாதகர்
மேன்மை அடைவார். நல்ல யோகம் தரும்.
2. கேந்திராதிபதியும் கோணாதிபதியும் இணைந்து கோணத்தில் இருந்தால் நஷ்ட யோகம் தரும். எந்த
கேந்திரதிபதி கோணத்தில் இருக்கின்றதோ அந்த கேந்திரம் (Bhavam) பாதிக்கப்படும்.
3. கேந்திரம் என்பது சந்திரனிடமிருந்தா, சூரியனிடமிருந்தா, லக்கினதிடமிருந்தா என்பது பொறுத்து யோகம்
அமையும்.
4. 9,10 க்கு உரியவன் சேர்ந்து அஷ்டமத்தில் இருந்தாலும் வாழ்க்கை சிறப்பு.

விதி 2
1. சக்தி கேந்திர அதிபதிகளும் (1, 4, 7 10) பணபர கேந்திர அதிபதிகளும் (2, 5, 8, 11), சக்தி
கேந்திரத்துக்குள்ளோ அல்லது பணபர கேந்திரத்துக்குள்ளோ இருந்தால் நல்லது. அதிர்ஷ்டம். மேன்மை தரும்.
2. இவைகள் அபோக்கிலிமா வீடுகளுள் இருந்தால் கெடுதல்.
3. ஆபோகிளிமங்கள் சக்தி கேந்திரத்திலோ அல்லது பணபரத்திலோ இருந்தால் கஷ்டம்.
4. ஆனால் அதேநேரத்தில் ஆபோகிளிமங்கள் ஆபோகிளிமத்தில் இருந்தால் ராஜா யோகம். அதிர்ஷ்டம்.
மேன்மை தரும்
5. 6 8 12 அதிபதிகள் 6 8 12 ல் இருந்தால் ராஜயோகம்

விதி 3
1. 5 ம் அதிபதியும் 9 ம் அதிபதியும் லக்கினத்துடன் இணைந்து நல்ல இடத்தில் இருந்தால் மேன்மை தரும்.
2. கோணாதிபதிகள் கேந்திராதிபதிகளுடன் எந்த விதத்திலாவது இணைய வேண்டும். அதாவது, கேந்திரதிபதியை
பார்ப்பது, கேந்திரதிபதியுடன் சேர்ந்து இருப்பது, கேந்திரத்தை பார்ப்பது போன்றவை.
3. அல்லது கோணாதிபதி லாபஸ்தானத்துடன் இணைய வேண்டும்.

விதி 4
1. பாவ பிணைப்புகள் அனைத்தும் நவாம்சத்திலும் பார்த்து கஷ்ட நஷ்டம் முடிவு செய்ய வேண்டும்.

விதி 5
1. செவ்வாய் சனி ராகு இவர்களில் யாராவது இருவர் ஒரு பாவத்தை பார்த்தல் அந்த பாவம் கெடும்.
2. ஒரு பாவத்தின் 3 ம் பாவ அதிபதி அந்த பாவத்திற்கு கோணத்தில் இருந்தால் அந்த பாவம் பலம் பெறுகிறது.
அதாவது லக்கினத்திற்கு 3 ம் பாவ அதிபதி 3 ம் பாவத்திற்கு 5, 9 ல் இருந்தால் லக்கினம் பலமுடன் உள்ளது.
3. ஒரு பாவத்தின் 11 ம் அதிபதி அந்த வீட்டிற்கு 2/12; 6/8 என்றால் அந்த பாவம் பலம் குறைகிறது.

குரு அவரின் வட்டு


ீ அதிபதியைப் பார்ப்பது
குரு லக்ன அதிபதியைப் பார்ப்பது
லக்னாதிபதி குருவைப் பார்ப்பது

[தனுர், மீ ன லக்ன ஜாதகருக்கு முதல் விதி]

வாழ்க்கை சுமுகமாக இருக்கும், இல்லையென்றால் கஷ்டப்பட்டு முன்னேற வேண்டும்.


தத்துவங்கள் அடிப்படியில் பாவ பிணைப்பு:
லக்கினாதிபதி 1, 2, 5, 6, 9, 12 என்ற அதிபதிகளுடன் இருக்கின்றான். இதை தத்துவங்கள் அடிப்படையிலும் பார்க்க
வேண்டும். லக்கினம் புதன் நிலத்துவம். 2 காற்று தத்துவம் சுக்ரன் 7 ம் பாவம் நீர் தத்துவத்துடன் உள்ளது. லக்கினம்
புதன் நிலத் தத்துவம் 5 ம் பாவ நில தத்துவம் சனி 7 ம் பாவம் நீர் தத்துவத்துடன் உள்ளது

காரக கிரகத்துடன் காரக பாவத்தையும் இணைத்து பார்த்து பலனும் கால நிர்ணயமும் செய்வது:
காரக கிரகம் இருக்கும் இடத்தில இருந்து பாவம் பார்க்க வேண்டும். ஜனன ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து வரும்
4 ம் வீட்டிற்கு (தாய்க்கு காரக பாவம்) சந்திரன் (தாய்க்கு காரகன்) எப்படி இருக்கின்றார் என்று பார்க்க வேண்டும். 6/8
என்றால் தாயாருக்கு கஷ்டம்.

எப்போது கஷ்டம் வரும். சந்திரன் இருக்கும் வீட்டிற்கு 4 ம் வீட்டில் இருக்கும் கிரகம் திசை நடத்தும் நேரத்தில்
அல்லது அந்த பாவ அதிபதி திசை நடத்தும் நேரத்தில் கஷ்டம் வரும்.

அதே 4 பாவம் கல்வியையும் காட்டும். கல்வி என்பதற்கு காரக கிரகம் புதன். எனவே புதன் 4 க்கு எங்கு
இருக்கின்றான் என்று பார்த்து பலன் சொல்ல வேண்டும்.

இதை நவாம்சத்திலும் பார்க்க வேண்டும். அம்சத்தில் நடக்காது என்றால் நடக்காது. அம்சத்திலும் நடக்கும் என்றால்
மட்டுமே நடக்கும்.

வாழ்க்கையில் திடீர் என்று நடக்கும் காரியங்களுக்கு அந்த குறிப்பிட்ட பாவமும், 8 ம் பாவமும், குறிப்பிட்ட காரக
கிரகமும் இணைந்து பார்க்க வேண்டும். உதாரணமாக நிலம் வாங்க செவ்வாயும் 8 ம் பாவமும் 4 ம் பாவமும்.
அதேபோல் வீடு வாங்க அல்லது விற்க சுக்ரனும் 8 ம் பாவமும் 4 ம் பாவமும் இணைத்து பார்க்க வேண்டும்.
லக்கின திருத்தம்
ராசி
ஒருவர் எந்த ராசியில் பிறப்பர் என்பது 5, 9 பாவங்களை கொண்டு உள்ளது.
குழந்தை பிறந்த நேர திசையோ புக்தியோ அல்லது அந்தரமோ லக்கினத்துடன் இணைய வேண்டும்.
லக்கினாதிபதியாக வரலாம்
லக்கினாதிபதியின் நட்சத்திரதிபதியாக வரலாம்
அங்கு அமைந்து இருக்கும் கிரகமாகவும் வரும்.
தாய் தந்தையின் லக்கணத்திற்க்கோ அல்லது ராசிக்கோ நம்முடைய லக்கினம் கேந்திரமாகவோ கோணமாகவோ
அமைய வேண்டும்.

திருமணம்
திருமணம் நடக்கும் லக்கினத்திற்கு அல்லது அன்றைய சந்திரனுக்கு கேந்திரத்தில் தான் அவர் பிறந்து இருப்பார்.

பிறந்த திசை
பிறந்த திசை லக்னத்திலோ அல்லது 7 ம் பாவத்திலோ இருக்க வேண்டும்.
லக்கினம் தசா புக்தி அந்தரத்துடன் இணைய வேண்டும். லக்கினாதிபதியாக வரலாம். லக்கினாதிபதியின்
நட்சத்திரதிபதியாக வரலாம். அல்லது அங்கு அமர்ந்த கிரகமாகவும் வரலாம்.

சந்திரன்
ஜனன ஜாதகத்தில் சந்திரனுக்கும் லக்னத்திற்கும் தொடர்பு இருந்தால் லக்கினம் சரியே. உதாரணம். சந்திரன்
நட்சத்திரத்தில் லக்கினம் இருப்பது

லக்கின திருத்தம் முறை 1a திசையும் கர்ப்ப செல் இருப்பும் (Correcting the horoscope by pre-natal)
ஒரு குழந்தை பிறந்த பின் கர்ப்ப செல் போக என்று குழந்தை பிறந்த பின் மீதம் உள்ள திசை கொடுக்கப்-
பட்டிருக்கும். அந்த திசை ஆரம்பநாளான்று சந்திரன் எந்த நட்சத்திரம் ராசி என்று பார்க்க வேண்டும். அதற்கும்
குழந்தை பிறந்த ஜனன ஜாதக லக்னத்திற்கும் தொடர்பு இருக்கும். அபப்டி இல்லையென்றால் லக்கினம் பிழை என்று
அர்த்தம்.

லக்கின திருத்தம் முறை 1b பிறந்த திசை புக்தி


ஒருவர் பிறந்த திசை அவர் பிறந்த ராசியிலோ அல்லது அதற்கு எதிர் ராசியிலோ இருக்க வேண்டும். அப்படி
நட்சத்திரம் இல்லாவிட்டால் அந்த ராசி அதிபதியின் திசையிலாவது பிறந்திருக்க வேண்டும்.

லக்கின திருத்தம் முறை 2 பிரசன்னம்


ஜாதகம் கொடுத்த நேரத்தில் பிரசன்ன ஜாதகம் போட்டு, அதன் லக்கினாதிபதியும் லக்கின நட்சத்திரமும் கொடுத்த
ஜனன ஜாதகத்தில் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்து முடிவு செய்வது.

கேந்திரமாய் வந்தால் திருத்தம் தேவை இல்லை.


3/11 ஆக இருந்தால் மாதகங்களில் எதோ தவறு உள்ளது. மாதங்கள் என்றால் ராசி மாற்றப்பட வேண்டும்.
6/8 ஆக வந்தால் ஜாதகம் தவறு.

அதேபோல் பிரசன்ன லக்கினமோ அல்லது லக்கினாதிபதியோ ஜனன ஜாதக லக்கினத்திற்கு 1/7 ஆக வரவேண்டும்

பிரசன்ன ஜாதகத்தில் உள்ள 8 ம் பாவமும், ஜனன ஜாதகத்தில் உள்ள 8 ம் பாவமும், எதோ ஒரு வகையில்
இணைந்தால் ஜாதகர் இறந்தவர் ஜாதகம்.

பிரசன்னம் ஜாதகம் மூலம் கொடுத்த ஜாதகம் சரியா? கேட்ட கேள்வி சரியா? என்றும் தெரிந்து கொள்ளலாம். பிரசன்ன
ஜாதக லக்னம் துலாம் என்றால் வந்தவர் திருமணம் பற்றி கேட்கிறார், விருட்சிக லக்கினம் என்றால் பிரச்சினை பற்றி
கேட்பார்.

லக்கின திருத்தம் முறை 3 ஆனா பெண்ணா


ஒரு ராசியில் 9 பாதங்கள் உண்டு. இதில் ஒற்றைப்படை பாதங்கள் எல்லாம் ஆன் குழந்தை. இரட்டைப்படை
பாதமெல்லாம் பெண் குழந்தை. ஜாதகர் ஆணா பெண்ணா என்று பார்த்து லக்கினம் விழுந்த பாதம் முன்போ பின்போ
மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஜாதகர் ஆனா பெண்ணா
ஒரு ஜாதகம் ஆனா பெண்ணா என்று பார்க்க லக்கினத்திற்கு 7 ம் வீட்டை பார்க்க வேண்டும். 7 ம் அதிபதி எங்கு
இருக்கின்றார், எந்த ராசியில் இருக்கின்றார், யாரால் பார்க்கப்படுகிறார், அவருடன் இணைந்த கிரகங்கள் யார் யார்,
எந்த சாரத்தில் இருக்கின்றார் என்பதை பொறுத்து ஆன் பெண் என்று முடிவு செய்யலாம். ஆண் கிரகங்கள் அதிகம்
இருந்தால் ஜாதகர் ஆண். பெண் கிரகங்கள் அதிகம் இருந்தால் ஜாதகம் பெண் ஜாதகம்

சகோதர பாவம்
3 ம் பாவ அதிபதி யார், அவர் யார் வீட்டில் இருக்கின்றார், அவருடன் இணைத்த கிரகங்கள் யார் யார், யாரால்
பார்க்க படுகின்றார், எந்த சாரத்தில் இருக்கின்றார், இந்த விஷயங்கள் அனைத்தையும் பார்த்து கூட்டி கழித்து எத்தனை
சகோதரர் சகோதரி என்று தெரிந்து கொள்ளலாம்.
கால நிர்ணயம்
கால நிர்ணயம் செய்ய கோச்சார குருவும் சனியும் எந்த வருடத்தில் நடக்கும் என்று காட்டுவார்கள்.
கோச்சார ராகுவும் கேதுவும் எந்த மாதத்தில் நடக்கும் என்று காட்டுவார்கள்.
கோசார கோச்சார சூரியனும் சந்திரனும் எந்த நாட்களை என்று காட்டுவார்கள்.

லக்கினத்திற்கு கேந்திரத்தில் உள்ள கிரகத்தின் திசை/புக்தி 100 சதவிகித பலன் தரும்


சூரியனுக்கு கேந்திரத்தில் உள்ள கிரகத்தின் திசை/புக்தி 60 சதவிகித பலன் தரும்
சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ள கிரகத்தின் திசை/புக்தி 40 சதவிகித பலன் தரும்

ஒரு பாவத்திற்கு 3 ம் பாவ அதிபதியின் திசை அல்லது அதற்கு கேந்திரத்தில் உள்ள கிரகங்களின் திசையில் அந்த
பலனுக்கு பிரச்சினை கஷ்டம் இருக்கும்.
ஒரு பாவத்திற்கு 11 ம் பாவ அதிபதி அதற்கு கேந்திரத்தில் உள்ள கிரகங்களின் திசையில் மிகவும் நன்மையான பலன்
கிடைக்கும்.

என்ன காரகமோ, அந்த காரக பாவத்தின் அதிபதி, அந்த பாவத்திற்கு 3 11 பாவத்தின் அதிபதிகள் திசையில் அந்த
பலன் கிடைக்கும்.
அல்லது அந்த கிரகங்கள் அமர்ந்த இடத்திற்கு கேந்திரதில் அமர்ந்துள்ள கிரகங்கள் திசையில் அந்த பலன்
கிடைக்கும்.

1 5 9 பாவங்கள் இணையும் காலகட்டத்தில் ஒரு காரியம் தீர்மானமாக நிறைவேறும். நினைத்த காரியம் நடக்கும்.

4 ம் பாவத்தில் உள்ள நட்சத்திர அதிபதிகள் திசை நடக்கும் வரை படிப்பு உண்டு. அதன் பின் 5/11 பாவ பிணைப்பு
எப்படி என்பதை பொறுத்து மேற்கொண்டு படிப்பு தொடரும்.

தொழில் வேலை என்பது 10 க்கு 3 11 அதிபதிகள் திசை அல்லது அந்த கிரகங்களுக்கு கேந்திரத்தில் உள்ள
கிரகங்களின் திசையில் அந்த பலன் கிடைக்கும். 10, 12, 8 ம் பாவ அதிபதிகள் அவருக்கு கேந்திரத்தில் உள்ள
கிரககங்களின் திசை நடக்கும் காலகட்டத்தில் தான் நடக்கும்
தசை புக்தி அந்தரம்
 தசை புக்தி சந்திரனையும் கொண்டும்
 அந்தரம் சூரியனை கொண்டும் பார்க்க வேண்டும்
 திசையை விட புக்திக்கு முக்கியத்துவம் தர வேண்டும்
 தசை 360 நாள் கணக்கு எடுக்க வேண்டும். 365.25 நாள் என்றால் தவறாய் வரும்

திசை புக்தி
 திசா நாதனும், புக்தி நாதனும் அமைந்த விதம்
 திசா மற்றும் புக்தி நாதனும், காரக கிரகமும் அமைந்த விதம்
 திசா மற்றும் புக்தி நாதனும் ஒரு பாவத்தின் அதிபதியும் அமைந்த விதம்

தசை புக்தி 1:
ஜனன ஜாதகத்தில் 3 ம் பாவம் எதிர்மறையாகவும் 11 ம் பாவம் சாதகமாகவும் வேலை செய்யும்.
என்ன காரகமோ அந்த காரகத்திற்குறிய பாவத்திற்கு 3 ம் பாவதிபதி, அதன் கேந்திரத்தில் உள்ள கிரகங்கள் மற்றும்
அதன் கேந்திர பாவ அதிபதிகளின் கிரகங்களின் தசை நடந்தால் காரியத்தில் காலதாமதம், கவலைக்கிடம்,
இடையூறுகள், நடக்காமல் போவது, போன்றவற்றை காட்டும்.
அதேநேரத்தில் காரகத்திற்குறிய பாவத்திற்கு 11 ம் பாவதிபதி, மற்றும் அதன் கேந்திர பாவ அதிபதிகளின் கிரகங்களின்
தசை நடந்தால், காரியம் உடன் நடக்கும்.
 தொழில் என்றால் 10 க்கு 3/ 11
 உத்யோக மாற்றம் 9 க்கு 3/11
 திருமணம் 7 க்கு 3/11
 வெளிநாட்டு பிரயாணம் 9 க்கு 3/11

தசை புக்தி 2a:


எந்த கிரகம் திசை அல்லது புக்தி நடத்துகிறதோ அந்த கிரகத்தின் நட்சத்திரம் ராசி கட்டத்திலும் நவாம்ச கட்டத்திலும்
என்தெந்த பாவங்களில் உள்ளதோ அந்த பாவ கரகம் நடக்கும். உதாரணமாய் சுக்ரனின் நட்சத்திரம் காலபுருஷ
தத்துவத்திற்கு 1 5 9 ல் உள்ளது. சுக்ர திசை அல்லது புக்தியின் போது 1 5 9 பாவங்கள் ஜாதகருக்கு லக்னத்திலுருந்து
எத்தனையாவது பாவங்களோ அந்த பாவகாரகம் கிடைக்கும்.
*
சுக்ர திசை
*
* லக்

தசை புக்தி 2b:


ஒரு கிரகத்தின் திசை அல்லது புக்தி ஆரம்பித்த நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருந்தார் என்று பார்த்து அந்த
கிரகத்தின் நட்சத்திரங்கள் எங்கு உள்ளதோ ஜாதகருக்கு அந்த பாவ காரகங்கள் கிடைக்கும். அதாவது சுக்ரனின்
திசையில் 1 5 9 பாவங்கள் செயல்பட்டாலும், திசை ஆரம்பித்த அன்று சந்திரன் சூரியனின் நட்சத்திரத்தில் இருந்தால்
சூரியன் இருக்கும் 1, 2, 5, 6, 8, 9 (காலபுருஷ தத்துவத்திற்கு) பாவங்களின் காரகங்கள் அந்த திசை முழுவதும் நடக்கும்.
இந்த பாவங்கள் லக்கினத்திற்கு எத்தனையாவது பாவங்கள் என்று பார்த்து அந்த காரகங்கள் செயல்படும் என்று
எடுத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணம்: திசை ஆரம்பித்த நாள் 11.02.2016 சந்திரன் கார்த்திகை நட்சத்திரம். அதிபதி சூரியன். எனவே 3, 4; 7,8;
11,12 பாவங்களின் செயல்கள் நடக்கும்.
அன்று கார்த்திகை நட்சத்திரம் மேஷத்தில் இருந்தது. மேஷம் லக்கினத்திற்கு 7 ம் பாவம். எனவே சமூகம் எனக்கு
ஒத்துழைப்பு கொடுக்கும். அதுவே 11 ல் இருந்தால் லபமாய் இருக்கும். 3 ல் இருந்தால் ஜாதகர் மற்றவரின் உதவியை
நாடி சென்றிக்க வேண்டும்.
# #
சுக்ர திசை
# #
# லக் #

தசை புக்தி 2c:


அதேபோல் திசை அல்லது புக்தி ஆரம்பித்த நாள், சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை பார்க்கும் கிரகம், அல்லது
சேர்ந்து இருக்கும் கிரகம் என்று என்று ஏதேனும் வந்தால், பார்க்கும் கிரகமும் சேர்ந்து இருக்கும் கிரகமும் முக்கியமாய்
வேலை செய்யும். சந்திரன் நின்ற நட்சத்திரம் வேலை செய்யாது.
உதாரணம்: லக்கினத்தில் இருந்து செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்தை (அதாவது சந்திரனை) பார்த்தால் அந்த திசை
முழுவதும் செவ்வாயின் வீட்டு தாத்பரியத்தை தான் கொடுப்பர்.

$ $
சந்
சுக்ர திசை
$
$

லக் $ $
செவ்
கோட்சரம்
1. லக்கினம் சூரியன் சந்திரன் இவைகளுக்கு கேந்திரத்தில் உள்ள கிரகங்கள் மட்டுமே தசை புக்தி மூலம் வேலை
செய்யும். மற்றவை கோச்சாரத்தில் மட்டுமே வேலை செய்யும்.
2. லக்கினத்திற்கு அதன் கேந்திரத்தில் உள்ள கிரகங்கள் மூலமும், சூரியனுக்கு இருக்கும் இடத்தில் இருந்து
அதனுடைய கேந்திரத்தில் உள்ள கிரகங்கள் மூலமும் சந்திரனுக்கு இருக்கும் இடத்தில் இருந்து அதனுடைய
கேந்திரத்தில் உள்ள கிரகங்கள் மூலமும் பலம் கிடைக்கும்.
3. கோட்ச்சரம் லக்கினத்தை வைத்து பார்க்க வேண்டும். சந்திரனை வைத்து அல்ல.
4. நவாம்சத்தில் கிரக நிலை பார்க்க வேண்டும்.
5. குரு சனி செவ்வாய் ராகு கேது மட்டுமே கோட்சரத்தில் பலன் தருவார்கள்.
6. மற்ற கிரகங்கள் அனைத்தும் அந்த கிரகங்கள் பெற்றுள்ள அஷ்டவர்க்க மதிப்பெண் படி பலன் தரும்.
7. ஒரு கேந்திர கிரகம் ஜனன ஜாதகத்தில் உள்ள, லக்னத்திற்க்கோ சூரியனுக்கோ சந்திரனுக்கோ அல்லது 10 ம்
வீட்டிற்க்கோ கேந்திரத்தில் வந்தாலோ அல்லது பார்த்தாலோ நல்ல பலன்.
8. ஜனன ஜாதகத்தில் குருவுக்கும் சனிக்கும் கேந்திரத்தில் ஒரு கிரகம் வரும் போது அந்த கிரகத்தின் மூலம்
சந்தோஷமும், கோணத்தில் வரும் போது கஷ்டங்களும் வரும்.
9. லக்கினாதிபதி நவாம்சத்தில் எங்கு இருக்கிறார். அந்த அதிபதி ராசியி எங்கு இருக்கிறார். அவர் மூலம்
சந்தோசம் கிடைக்கும்.
10. தனஸ்தானத்திற்கு கேந்திரத்தில் சுக்ரன் வரும் வேளையில் தனம் வந்து சேரும். அதாவது பணபர வீடுகளுக்கு
கோட்சர குருவும் சுக்ரனும் வரும் வேளையில்.
11. கோச்சார குருவும் சுக்ரனும் லக்கினத்திற்கு எந்த பாவத்தில் சஞ்சரிக்கின்றார்களோ அந்த பாவ காரகம் மூலம்
தனம் வரும். உதாரணமாய் சுக்ரன் லக்கினத்திற்கு 5 ல் வரும் நேரம் புத்திசாலித்தனம் மூலம் தனம் வரும்.
ஷேர் மார்க்கெட் கேம்பளிங் போன்றவை மூலம்.

கோட்சரம் மூலமாக பலன் பார்ப்பது: லக்கினாதிபதியும் நவாம்சமும்


உதாரணமாய்:
 சுக்ரன் லக்கினாதிபதி.
 சுக்ரன் அம்சத்தில் குரு வீட்டில்.
 குரு ஜாதகருக்கு சந்தோசம் தருவார்.
 குரு ராசியில் சனியுடன் சேர்ந்து உள்ளதால் தடங்கல் கொடுத்து சந்தோசம் தருவார்.
உதாரணமாய்
 7 ம் அதிபதி செவ்வாய் அம்சத்தில் குருவின் வீட்டில் இருக்கிறார். குரு ராசி கட்டத்தில் 8 ல் இருக்கிறார்.
எனவே சமூகம் மூலம் கஷ்டமுண்டு.
 5 ம் அதிபதி சனி அம்சத்தில் சனி வீட்டில். சனி ராசியில் 8 ல். எனவே சந்தோசம் தடங்களுடன் உள்ளது.
தினப்பலன் பார்க்கும் முறை அல்லது இன்றைய நிகழ்வுகள்

கோச்சார சூரியனும் சந்திரனும் ஜனன ஜாதகத்தில் உள்ள சூரியனுக்கும் சந்திரனுக்கும் எப்படி அமைந்துள்ளார்கள்
என்று பார்த்து கண்டறிய நிலவரம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பாவத்திற்கு உரிய காரக கிரகமும் அந்த பாவ அதிபதியும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்து அந்த
பாவத்தின் வலிமையை முடிவு செய்ய வேண்டும்.

பார்க்கும் கிரகங்களையும் பாவ அதிபதியுடன் சேர்த்து பார்க்க வேண்டும்.

ராகு கேதுக்கள் அந்த பாவத்தில் இருந்தால் அவர்கள் அந்த பாவ அதிபதிக்கு எப்படி என்றும் பார்க்க வேண்டும்

பாவத்திற்குஉரிய காரக கிரகம்


1 ம் பாவம் தன் பாவம் சூரியன் சந்திரன் ஜனன ஜாதகத்தில் லக்கின படி
2 ம் பாவம் தனம் குரு சுக்ரன் அந்த பாவ அதிபதி
3 ம் பாவம் சகோதரம்-செவ்வாய்; பயணம்-ராகு & கேது; communication
4 ம் பாவம் மாதா-சந்திரன்; கல்வி-புதன், கேது
5 ம் பாவம் புத்திர பாவம் குரு
6 ம் பாவம் ரோகம் சனி
7 ம் பாவம் களத்திரம் குரு சுக்ரன்
8 ம் பாவம் ரினபாவம் சனி செவ்வாய்
9 ம் பாவம் ஞானம் பித்ரு சூரியன் குரு
10 ம் பாவம் கர்மா காரகன் சனி
11 ம் பாவம் லாபம் குரு சுக்ரன்
12 ம் பாவம் நஷ்ட பாவம் ராகு கேது சந்திரன்
ராகு/ கேது
இவர்கள் எந்த ராசியில் இருக்கிறார்களோ, அந்த ராசியின் தன்மையும், அந்த ராசி அதிபதி இருக்கும் வீட்டின் தன்மையும்
சேர்த்து பலிதங்கள் கொடுப்பார்கள்.

இவர்கள் வேறு கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது அடுத்தடுத்த ராசியில் கிரகங்கள் இருந்தாலோ அந்த
கிரகங்களின் தசா காலங்களில், அந்த கிரகங்களை அதிக பலன் கொடுக்க விடாமல் தன்னுடைய தசா புக்தி காலங்களில்
அந்த கிரகங்களின் பலித்ததை கொடுப்பார்கள்.

இவர்கள் ராசியிலோ அல்லது நவாம்சத்திலோ சந்திரன் அல்லது கேதுவிற்கு கேந்திரத்தில் அமர்ந்து விட்டால் ஜாதகர் நல்ல
நிலைக்கு வந்து விடுவார். மேலும் நவாம்சத்தில் கோணத்தில் குரு அல்லது சந்திரன் அமர்ந்து அவர்களுக்கு கோணத்திலோ
அல்லது அடுத்த ராசியிலோ அமர்ந்து இருந்தாலோ அல்லது சேர்ந்து இருந்தாலோ உயர்வான நிலையை தருவார்கள்.

2 11 அதிபதிகள் ராகு கேது நட்சத்திரத்தில்இருந்தால், ராகுவும் கேதுவும் 5 9 ல் அமைந்தால் ஜாதகருக்கு சொத்து சுகம்
உண்டு.

கேது
கேது தான் பார்க்கும் இடத்தையும் இருக்கும் இடத்தையும் கெடுப்பான். 2 ல் இருந்தால் பேச்சை குறைப்பான்.
லக்னத்தை பார்த்தால் லக்கினத்திற்கு கஷ்டம் தருவான். இந்த கஷ்டம் நவாம்சத்திலும் இருக்க வேண்டும். அப்படி
கஷ்டம் தராமல் இருக்க கேது எரிய சாரம் வலிமையுடன் இருக்க வேண்டும் அல்லது இருக்கும் வீடு சுப வீடாய்
இருக்க வேண்டும்.
ஜாதகருக்கு கிடைக்கும் மகிழ்ச்சி:
ஜாதகத்தில் 9 ம் இடம் என்பது மகிழ்ச்சி கொடுப்பது. 9 ம் இடத்தில இருக்கும் கிரகங்கள், அது நவாம்சத்தில் இருக்கும்
இடம், போன்றவை பொறுத்து மகிழ்ச்சி கிடைக்கும்.
குரு புதன் சுக்ரன் போன்றவர்கள் மகிழ்ச்சி தரும் கிரகங்கள்
முதலில் லக்கினாதிபதி, ராசி மற்றும் நவாம்சத்தில் எப்படி இருக்கின்றார் என்பது பொறுத்து மகிழ்ச்சி அமையும்.
அதாவது லக்கினாதிபதி நவாம்சத்தில் யாருடைய வீட்டில் இருக்கின்றாரோ அவர் மூலம் தான் மகிழ்ச்சி கிடைக்கும்.
அவர் ராசியில் இருக்கும் வீட்டை வைத்து அந்த காரகம் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.
அடுத்து சப்தமாதிபதியும், கடைசியாக பஞ்சமாதிபதியும் அமைந்த விதம் பொறுத்து மகிழ்ச்சி கிடைக்கும்.
இந்த லக்கினாதிபதி, சப்தமாதிபதி மற்றும் பஞ்சமாதிபதி போன்றவர்களுக்கு கோச்சாரத்தில் ஒரு கிரகம் கேந்திரத்தில்
சஞ்சரிக்கும் நேரத்தில் மகிழ்ச்சியும், கோணத்தில் வரும் நேரத்தில் எதிர்மறையாகவும் நடக்கும்.
அடுத்து 9 ம் வீட்டு அதிபதியை கோச்சார குரு தாண்டும் நேரத்தில் சௌக்கியத்தை கொடுப்பான்
படிப்பு
ஜாதகத்தில் 2, 5 க்கு உரிய கிரகங்களும் சந்திரன், குரு, கேது மற்றும் புதன் போன்றவர்களும் 6/8 ஆக வர கூடாது.
வந்தால் படிப்பு தடங்கல் வரும். அப்படி 6/8 ஆக வராமல் இருந்தால் படிப்பு தடங்கல் இல்லாமல் இருக்கும்.

உத்தியோகம்:
சனிக்கு 10 ம் வீடும் 3 ம் வீடும் உத்யோகம் அல்லது தொழில் காட்டும்.
அதேபோல் சூரியனுக்கு 10 ம் இடமும் பார்க்க வேண்டும். அந்த பாவங்கள்வும் மூலமாக தொழில் அமையும்.
சனி இருக்கும் தத்துவம் பொறுத்து தொழில் அமையும்.
சனிக்கு 10 ம் அதிபதி எந்த தத்துவத்தில் உள்ளாரோ அதன் படி தொழில் அமையும்.
சனியை பார்க்கும் கிரகங்கள் காரகமும் சேர்த்து பார்க்க வேண்டும்
அக்னிஎன்றால் உற்பத்தி.
நிலமென்றால் என்றால் நிதி, வங்கி போன்ற துறைகள்
காற்றென்றால் மேலாண்மை கன்சல்டேஷன் ஆசிரியர் போன்ற துறைகள்
நீரென்றால் வக்கீல் பொறியியல் மருத்துவம் போன்ற துறைகள்
லக்கின தத்துவமும் சனியின் தத்துவமும் வேறு வெருவாக இருந்தால் ஜாதகர் படித்த படிப்பு ஒன்றாகவும் பார்க்கும்
தொழில் வேறாகவும் இருக்கும்.
சனி செவ்வாய் ராகுவை பார்த்தால் technical சம்பந்தமான படிப்பு
சுக்ரன் புதன் மருத்துவ தொழிலை காட்டும். லக்கினத்துடன் தொடர்பு ஏற்பட்டால்
10 ம் பாவ அதிபதி ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை தொழிலில் சில மாற்றத்தை காட்டுகின்றது.
லக்கினம் சூரியன் சந்திரன் இவர்களுக்கு கேந்திரத்தில் உள்ள கிரகங்கள் நடத்தும் திசையில் நடக்கும்.
GMP - வீடுகள் மற்றும் தத்துவங்கள் :

இங்கு வீடுகள் மூன்று விதமாக பிரிக்கப்படுகிறது

சக்தி கேந்திரம் - 1 , 4 , 7 , 10 - வீடுகள்


பணபரம்- 2 , 5 , 8 , 11 - வீடுகள்
ஆபோகில்மம்- 3 , 6 , 9 , 12 - வீடுகள்

வீடுகள் தத்துவங்களுடன் இணைவு :


பணபர வீடுகள் சக்தி கேந்திரத்துடனும் சக்தி கேந்திரங்கள் பணபரத்துடனும் இணையலாம். ஆனால் இவைகள்
ஆபோகிலம வீடுகளுடன் இணைய கூடாது. ஆபோகிலம வீடுகள் ஆபோகிலமதில் இருந்தால் அது ராஜ
யோகம் தரும்.

கேந்திராதிபதிகள் கோணாதிபதிகளின் நட்சத்திரத்தில் இருப்பதோ, கோணாதிபதிகள் கேந்திராதிபதிகள் நட்சத்திரத்தில்


இருப்பதோ வாழ்க்கையில் வளத்தைக் கொடுக்கும். அவர்கள் இணைந்து விட்டால் அவர் வாழ்க்கை இன்னும் வளமாய்
இருக்கும்.
1 5 9 கிரகங்கள் கேந்திரத்தை அடைய வேண்டும் அல்லது லாபத்தை அடைய வேண்டும் அல்லது லக்னத்துடன்
இணைய வேண்டும்
ஒவ்வொரு கிரகத்திற்கும் அல்லது ஒவ்வொரு பாவத்திற்கும் அதன் 2 4 7 10 11 பாவங்கள் துணை போக வேண்டும்.
அந்த பாவங்களில் உள்ள கிரகத்தின் திசை புக்தியில் அந்த பாவம் நன்கு வளம் தரும்

சுப கிரகங்கள்:
1 4 7 10 வீடுகளில் சுப கிரகங்கள் இருந்தால் ஜாதகரின் சிறு முயற்சி பெரிய வெற்றி தரும்.
சந்திரனுக்கு 8 12 ல் சுப கிரகங்கள் இருந்தால் பலவீனமாகி பிரச்சினை தருவார்கள். 6, 12 ல் இருந்தால் விபத்தில் சிக்க
விடுவார்கள்.

யோகம் ஆண்கள்
ஒருவருடைய பேச்சு (2 ம் வீடு), அறிவு (4, வீடு) ஆற்றல் & மதிநுட்பம் (9 ம் வீடு) இவைகளை பிணைக்கும் போது ஏற்படும்
லாபம் (11 ம் வீடு) என்பதை வைத்து சொல்ல வேண்டும்.

இந்த வீடுகளில் உள்ள கிரகங்கள் பலம், நல்ல சேர்க்கை, அல்லது லக்கினாதிபதி இவர்களுடன் சேர்வது, பார்வை பெறுவது,
அல்லது பரிவர்த்தனை பெறுவது என்பது யோகம். அது யோக ஜாதகம்.

யோகம் பெண்கள்
ஜாதகத்தில் சந்திர லக்கினத்திற்கு 4 ம் வீட்டையும், (சுகஸ்தானம்) 5 ம் வீட்டையும், (புத்திரஸ்தானம்) 9 ம் வீட்டையும்,
(பாக்கியஸ்தானம்) 10 ம் வீட்டையும், (வெற்றி & கெளரவம்) வைத்து, அங்குள்ள கிரகங்களின் சேர்க்கை வைத்து சொல்ல
வேண்டும்.
யுரேனஸ்/ நெப்டுன்/ புளூட்டோ
 யுரேனஸ் சூரியன் லக்கினம் 10 ம் வீடு போன்றவற்றிக்கு கோச்சாரத்தில் கேந்திரத்தில் வரும்போதெல்லாம்
பதவி உயர்வு, வேலை மாற்றம், வேலை இழப்பு போன்ற திடீர் மாற்றங்களை தருவார்.
 நெப்டுன் சூரியன் லக்கினம் 10 ம் வீடு போன்றவற்றிக்கு கோச்சாரத்தில் கேந்திரத்தில் வரும்போதெல்லாம்
போது மனஉளைச்சல் தரும்
 புளூட்டோ சூரியன் லக்கினம் 10 ம் வீடு போன்றவற்றிக்கு கோச்சாரத்தில் கேந்திரத்தில் வரும்போதெல்லாம்
மிகப்பெரிய மாற்றத்தை தரும்
Instant முகூர்த்தம்:
பிரசன்ன சார்ட் போட்டு
லக்கினம் கணித்து
லக்கினம் நின்ற நட்சத்திரம் கணித்து
பின் உப கிரகங்கள் வரிசையாய் கணித்து எழுதிக்கொள்ள வேண்டும்
இந்த நட்சத்திரம், உப கிரகத்தில் எந்த இரண்டு கேந்திரமாய் வந்துள்ளது
அந்த நேரம் நல்ல முகூர்த்த நேரம்.
ஆனால் அந்த நேரம் உங்களின் லக்கினத்திற்கு பகை தத்துவமாகவோ அல்லது பிரசன்ன லக்கினமும் உங்களின்
லாபமும் 6/8/12 ஆக இருக்க கூடாது.
இந்த இரண்டும் சுப கிரகம் என்றால் நன்று
லக்கினத்திற்கு 3/11 ஆக வரும் கிரகங்கள் நட்சத்திரமாகவும் நட்சத்திரமாகவும் உபநட்சத்திரமாகவும் வந்து அவைகள்
கேந்திரமாய் வந்தால் சிறப்பு
GMP - ராசிகள் பஞ்சபூத்த தத்துவங்கள் மற்றும் அடிப்படை குணாதிசியங்கள்
நெருப்பு - மேஷம் , சிம்மம் , தனுசு
சுறுசுறுப்புணர்வர் , வேகமானவர், துணிச்சல் உடையவர், நல்ல நிருவாகிகள்.

நிலம் - ரிஷபம் , கன்னி , மகாரம்


நடைமுறைவாதிகள் , வலிமையானவர்கள் , விவாபாரிகள் , பணப்புழக்கம் உடையவர்கள்.

காற்று - மிதுனம் , துலாம் , கும்பம்


புத்திசாலிகள் , கவலை அற்றவர்கள், நகைச்சுவை உணர்வு, சமூக நோக்கம், ஆசை அதிகம்.

நீர் - கடகம் , விருச்சகம் , மீனம்


உணர்ச்சி வசப்படுவர்காள் , நுட்பமானவர்கள் , கலை உணர்வு, இயற்கையை நேசிப்பவர்கள், ஆன்மீகவாதிகள் ,
மோட்ச தத்துவம் பிரதானமாக இருக்கும்.

3 ம் பாவம் வைத்து வாழ்க்கை நிர்ணயம்


1 5 9 அதிபதிகள் இணைவு வாழ்க்கையில் உயர்வு
5 6 7 பாவங்கள் 10 11 உடனோ இல்லை மற்ற பாவங்களுடனோ இணைவது பொறுத்து வாழ்க்கை
யுரேனஸ் நெப்டுன் புளுடோ கிரகங்கள் சூரியன் 10 ம் பாவம் லக்கினத்திற்கு கேந்திரத்தில் வரும் போது உள்ள
பலிதங்கள்
லக்கினாதிபதியும் அஷ்டமாதிபதி கேந்திரமாய் இருந்தால் வாழ்க்கை நன்று
கால சக்ரத்தை நினைவில் வைத்துக்கொண்டு பலன் கூற வேண்டும்
சுக்ரன் புதன் சந்திரன் குரு இவர்கள் நால்வரும் கர்மா காரகனுடன் இணைந்து வேலை செய்தால் வாழ்க்கை நன்று

5 ம் அதிபதி 10 அல்லது 11 ல் அமைந்தால் நாடாளும் யோகம்.


10, 11 க்கு உரியவன் 11 ல் அமைந்தால் IAS அதிகாரி அல்லது CEO
2 ம் வீடென்றால் ஆசிரியர் பேசி வைத்து தொழில்
3 ம் வீடென்றால் விற்பனையாளர், கம்யூனிகேஷன, பேச்சாளர்,
4 ம் வீடென்றால் தொழில் குடும்பம்,
5 ம் வீடென்றால் விளையாட்டு வீரர்
6 ம் வீடென்றால் கூலி தொழில் கீழ்த்தரமான வேலை செய்வது
7 ம் உறவுகள் தொண்டர் படை,அல்லக்கைகள்
8 விபரீதமான கஷ்டத்துடன்
9 தனக்கு தெரிந்ததை சொல்லிக்கொடுத்து
1. ஒரு ஜாதகத்தில் 5 6 7 வீடுகள் எப்படி இணைத்துள்ளது என்று கவனமாக பார்க்க வேண்டும்.
வக்கிரம்
ஒரு கிரகம் வக்ரமாய் இருக்கும் இன்னொரு கிரகத்தின் சாரத்தில் இருக்கும்போது அந்த கிரகமம் வக்ரமாய்
இருப்பதாக அர்த்தம். ஆனால் ஒரு கிரகம் வக்ரமாய் இருந்தால் அந்த கிரகம் நின்ற பாவத்தில் அந்த கிரகத்தின்
நட்சத்திரம் இருந்தால், அதன் ஆதிபத்திய வீட்டில் இருந்தாலும் அந்த கிரகம் வக்கிரம் இல்லை

பரிவர்த்தனை
ஜனன ஜாதகத்தில் உத்ராணாயம் தட்சிணாயம் பொறுத்து பரிவர்த்தனை ஆகும். உத்ராணாயத்தில் பிறந்தவர்களுக்கு
தட்சியானத்திலும் தட்சியானத்தில் பிறந்தவர்களுக்கு உத்ரணயத்திலும் பரிவர்த்தனை ஆகும்.

இப்படி பரிவர்த்தனை ஆகும் போது, பரிவர்த்தனை ஆகும் கிரகத்துடன் அதே பாவத்தில் இருக்கும் அணைத்து
கிரகங்களும் ஒரு சேர பரிவர்த்தனை ஆகி விடும்.
இப்படி பரிவர்த்தனை ஆகும் போது ராகு அல்லது கேது பரிவர்த்தனை ஆனால் எந்த கிரகம் பரிவர்த்தனை
ஆகின்றோதோ அது மட்டும் ஆகும். அதாவது ராகுவுடன் உள்ள கிரகம் பரிவர்த்தனை ஆனால் ராகு மட்டும் ஆகும்.
கேது ஆகாது.

தத்துவங்கள்: நெருப்பு; நிலம்; காற்று; நீர்


ஒவ்வொரு ஜாதகத்திலும் 3 ம் வீட்டின் தத்துவத்தை வைத்து ஒருவரின் எண்ணங்கள் எப்படி என்று தெரிந்து
கொள்ளலாம்
3 ம் பாவம் நெருப்பு என்பது புதுமை, வீரியம், தொடர் முயற்சி, தர்மத்திற்கு கட்டுப்பட்டு
3 ம் பாவம் நீராய் இருந்தால் நிலையான எண்ணம் இருக்காது மாறிக்கொண்டே இருக்கும்
3 ம் பாவம் காற்றாய் இருந்தால் விஷயம் தெரிந்தது போல் பேசுவான் ஆனால் விஷயம் இருக்காது

5 ம் அதிபதி 1, 9 அதிபதிகளுடன் சேர்ந்து எப்படி இருக்கிறார்கள், எங்கு அமர்ந்து இருக்கிறார்கள் என்று பார்க்க
வேண்டும். எந்த பாவத்துடன் 5 9 பிணைக்கப் பட்டிருக்கிறதோ அந்த பாவப்படிதான் புக்தியானது வேலை செய்யம்.
இவர்கள் இணைந்து வேலை செய்தால் நல்ல யோகம். 1 5 9 பாவங்கள் 6/8 ஆக இருந்தால் ஜெயிலுக்கு போவார்
அல்லது பதவி குறிகிய காலம்.

6, 8 ம் வீடுகள் லக்கினத்துடன் பிணைக்கப்பட்டால் விபத்து நடக்கும். சனி பார்வை இல்லாவிட்டால் உயிர் சேதம்
இல்லை. பிழைத்து விடுவார். 6 8 என்ற பாவங்கள் இணையும் நேரத்தில் விபத்து நடக்கும். நவாம்சத்திலும் இந்த
விபத்து காட்ட வேண்டும். அப்படி காட்டாவிட்டால் நடக்காது. உதாரணமாய் குரு 6 ம் வீட்டு அதிபதி இருக்கும் இடம்
8 ல். 6 ம் 8, இணைகிறது. அம்சத்தில் 6 க்கு உடையவன் லக்கினாதிபதியுடன் இணைகிறான். எனவே எதிர்பாராமல் ஒரு
விபத்து நடக்கும்.
ராசியும் லக்கினமும் ஒன்றாய் புதன் வீட்டில் இருந்தால் மாற்றி மாற்றி பேசுவார்கள்

சனி கேது 2 ம் பாவத்தில் தொடர்பு பேச்சில் தடங்கல் அல்லது ஊமை

You might also like