You are on page 1of 2

கிரகங்கள் அளிக்கும் தீயபலன்கள்:

கீழ்க்கண்டவாறு கிரகங்கள் இருந்தால் காரக அழிவையும் தீயபலன்களையும் தருமென்று மூலநூல்கள்


கூறுகின்றன. அவை:
1. நீசமடைந்து பங்கமடையாத கிரகங்கள்.
அதாவது நீசராசியில் உள்ள கிரகங்கள் எல்லாம் நீசகிரகங்கள் கிடையாது. நீசமடைவதற்காக கூறப்பட்டுள்ள
குறிப்பிட்ட பாகை அளவிற்குள் உள்ள கிரகமே நீசமடையும்.

2. கி்ரகயுத்தத்தில் தோல்வியுற்ற கிரகங்கள்.


கிரகயுத்தம் என்பது இரண்டு கிரகங்கள் ஒரே பாகைக்குள் இருக்கும்போது கிரகயுத்தத்தில் இருக்கும்.
இதில் அதிக பாகைகள் பெற்ற கிரகம் வெற்றிபெறும். குறைந்த பாகைபெறும் கிரகம் கிரகயுத்தத்தில்
தோல்வியுறும். இந்த தோற்ற கிரகம் யோக கிரகமானாலும் தனது தசாவில் யோகத்தை தராது என்பதோடு
சட்பல கணிதமுறையிலும் ஒரு ரூப பலத்தை இழக்கும். அதாவது கிரகயுத்தத்தில் வென்ற கிரகத்திற்கு ஒரு
ரூப பலத்தை கூட்டிக்கொள்ளவேண்டும். தோற்ற கிரகத்தின் சட்பல வலிமையிலும் ஒரு ரூபத்தை
கழித்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக 8. 23 ல் குருவும் 9.20 ல் சனியும் ஒரே ராசியில் இருப்பதாக கொள்வோம் . இதில் வென்ற கிரகம்
சனி. தோற்ற கிரகம் குரு.

3. பகைவீட்டில் உள்ள கிரகங்கள்.


உச்சம் பெறுவது மட்டும் விதிவிலக்கு. சிலர் சனி வீடாட மகரத்தில் செவ்வாய் உச்ஞமடையும் போதும் அது
பகைவீட்டில் உள்ளது என்று கணிப்பர். அது தவறு. இவ்வாறு பகைவீட்டில் உள்ள கிரகங்கள் பொதுவாக
நன்மை தராது. இதிலும் நிறைய விநிவிலக்குகள் உள்ளன.

4. ராசி சந்தியிலுள்ள கிரகங்கள்.


ஒரு கிரகமானது ராசியின் கடைசி ஒரு பாகையிலும் ஆரம்பத்தில் ஒரு பாகையிலும் இருக்கும்போது அது
உச்சமானாலும் யோகபங்க நிலையையே அடையும். பாவசந்தியில் உள்ள கிரகங்களும் நன்மைகளை தனது
தசாவில் தராது. இதற்கு துல்லியமான பிறந்த நேரம் அவசியம். இந்த விதியிலும் ஏராளமான விதிவிலக்குகள்
உள்ளன.

5. பாவரோடு சேர்ந்த ,பாவக்கிரகங்களால் பார்க்கப்பட்ட அல்லது இரண்டு பாவக்கிரகங்களுக்கு இடையில்


உள்ள கிரகங்கள் நிச்சயமாக யோகபலனை தராது.
இங்கே பாவரோடு சுபரும் சேர்நது
் பார்த்தால் மட்டுமே சுபக்கிரகங்களின் வலுவுக்கேற்ப நன்மை உண்டாகும்.

6. வக்கிரம் பெற்ற கிரகம் ராகுவோடு அல்லது சூரியனோடு பத்து பாகைக்குள் அஸ்தமனம் அடையும்போது
நன்மை தராது. இந்த விதியிலும் விதிவிலக்குகளாக பரிவர்தத
் னை, வர்கக
் ோத்தமனம் போன்றவை உள்ளன.
அவை குறைந்த அளவிலேயே நிவர்த்தி செய்யும்.

7. ராசியிலும் வலிமையிழந்து சட்பலத்திலும் வலிமையிழந்த கிரகம். இதைப்பற்றிய விளக்கத்தினை விரிவாக


தனிப்பதிவில் தருகிறேன்.

8. பாவக்கிரகங்களுடன் தொடர்புகொண்ட 6,8,12 ஆம் அதிபதிகள்.

9. ஒரு பாவாதிபதி அந்த பாவத்திற்கு எட்டாமிடத்தில் அஸ்தமனம், நீசம், பகை, சுபக்கிரகங்களின் சேர்க்கை
அல்லது பார்வையில்லாமல் இருந்தால் அந்த குறிப்பிட்ட பாவமானது 100 சதவீதம் முற்றிலும் நசமடையும்
என்று உத்தரகாலாமிர்தம் கூறுகிறது. மேலும் அப்பாவத்தில் சுபக்கிரகங்கள் அமர்ந்திருந்தாலும் நன்மை
ஏற்படாது என்றும் கூறுகிறது.
உதாரணமாக மீனம் லக்னமாகி லக்னாதிபதி குரு எட்டில் பகைபெற்று சனி அல்லது ராகுவுடன்
சேர்ந்திருந்தால் லக்னத்தில் சுபர்கள் இருந்தாலும் லக்னம் பலமிழக்கும் என்பது பொருள். இதற்கும்
பரிவர்த்தனை, புஷ்கர நவாம்சம் போன்ற பல அமைப்புகள் விதிவிலக்குகளாக உள்ளன.

10 அம்சத்தில் நீசச
் ம், பகை ஆனாலும் தசாநாதன் நன்மை தராது.

You might also like