You are on page 1of 4

மறைவு ஸ்தானங்களில் உச்சமடையும் கிரகங்களின் பலம் என்ன ஐயா?

பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி இணைந்தால் எப்படி பலன் செய்யும்

யோகி கிரகமே ராகுவாக அமைந்து கேதுவின் சாரம் பெற்றால் ராகுவின் சாரத்திலமர்ந்த கேது யோகம்
செய்வாரா.

லக்கின பாவிகள் 8 ல் மறைந்து தசா நடத்தினால் நன்மையா.

நீஙபங்கராஜயோகம் பெற்ற கிரகம் எப்போது நன்மையான பலனை செய்யும். மற்றும் அது லக்கினத்திற்கு
மறைந்தால் யோகம் பங்கமாகுமா.

தாரதோச ஜாதகம் என்றால் தாரத்தை இழக்க நேரிடுமா ஐயா..

புதன் நீசமடைந்தால் தன்வீட்டை தானே பார்ப்பார் அந்த பார்வைக்கு பலமில்லையா

ஸ்தானங்களில் " சுபத்துவமாக" உச்சமடையும் கிரகங்களால் ஏராளமான யோகபாக்கியங்கள் தசாபுத்திகளில்


ஏற்படும். அது மறைவு பெறாது

சூரியன் கூட எந்த கிரகம் இருந்தாலும் அஸ்தமனம் என்று எடுத்து கொள்ளலாமாங்க?

புதன் அஸ்தங்கம் ஆகாது. மாறாக நிபுணயோகத்தை தருவதால் ஏதாவதொரு துறையில் சிறப்பு பெறுவார்.
சுபர்கள் அஸ்தங்கமடைந்தால் சூரியனின் யோகத்தன்மை உயரும்.

சனி அனுயோகியாக வரும்போது அவரின் பார்வை தீமை செய்யுமா நன்மை செய்யுமா

சனி சுபருடன் சேர்ந்தாலோ, பார்க்கப்பட்டாலோ மட்டுமே யோகம் தரும். ஏனென்றால் சனி இயற்கை பாவி

மறைவு பகை ஸ்தானங்களில் வக்கிரம் & வர்கோத்தமம் பெரும் லக்கின யோகர் நிலை என்ன வக்கிரம்
பெறும் கிரகங்கள் உச்சமாக மட்டும் இருக்க கூடாது. மற்ற வக்கிரம் காலம்தாழ்தத
் ி நல்ல பலனே தரும்.
வர்க்கோத்தம கிரகம் நல்ல யோகாதிபதி சாரம் பெற்று லக்ன யோகரானால் மட்டுமே பெரிய அளவில் யோகம்
தரும். லக்ன அசுபரோ , லக்ன அசுபரின. சாரமோ பயன்ற்றது.

லக்கினாதிபதி கேதுசாரம் பெற்றால் பொதுப்பலன் ஏதும் உண்டா

பொதுவாக குருவின் நண்பர்களது லக்னங்களுக்கு கேது யோகர். கேது இருந்த ராசிநாதனை பொருத்து
கேது பலன்தருவார்.
யோகிகிரகம் ராகு கேது சாரத்தில் இருக்கக்கூடாதென படித்தேன். ராகுவே யோகியானால் அவர் கேது
சாரத்தில் இருப்பது நல்ல அமைப்பா. அப்படியான ராகுவின் சாரம் பெற்ற கிரகம் எப்படியான பலன் செய்யும்
ஐயா

ராகு கேதுக்கள் சுபர் அல்லது பாவர் தொடர்பில் உள்ளதா என்று பார்க்க வேண்டும். அதாவது ராசிநாதனின்
வலுவையும் சேர்த்து கணிக்க.

இரு ஆதிபத்தியம் உள்ள கிரகங்களின் தசையில் அவை அமர்ந்த வீட்டின் பலன் மூலம் எந்த ஆதிபத்தியம்
அதிகமாக செய்யும்!

மூலத்திரிகோண ஆட்சி வீட்டின் ஆதிபத்தியம்.

மற்றும் எந்த வீட்டிற்கு சாதகமாக உள்ளதோ அவ்வட


ீ ்டின் ஆதிபத்தியம்.

தாரதோசம் என்றால் தாரத்தை இழக்க நேரிடுமா

திருமண விசயத்தில் கூடவோ குறையவோ தீமை. கிரகபலத்திற்கேற்ப இது நடக்கும். கண்டிப்பாக இழப்பு
ஏற்படவேண்டிய அவசியமில்லை.

அவயோகி கிரகம் யோகியின் சாரம் பெற்று ராகுவுடன் 10 டிகிரியில் சேர்க்கை பெற்றால் பலன் என்ன?
தாங்கள் முன்பு கூறியது போல் அவயோகி ராகுடன் சேர்ந்தால் யோகம் தானே. கூடவே யோகியின் சாரம்...
அதனால் சந்தேகம்.

தீமை செய்யாது. அளவோடு நன்மை செய்யும்.

சனி ஆட்சி வக்கரம் பெற்று , தூலமில் இருந்து குரு பார்க்க.. சனி கன்னி லக்கனத்திற்கு நல்லது செய்வாரா
இல்லை கெட்டது செய்வாரா

சனி தசா பொதுவாக இவ்வமைப்பில் நன்மை செய்வார்.

அய்யா லக்னாதிபதி 8 ல் அவயோகியுடனும் 12 க்கு உரியவனுடன் சேர்க்கை பெற்றால் லக்னாதிபதி தசா


அல்லது புத்தி நன்மை செய்வாரா
பாவியுடன் லக்னாதிபதி எத்தனை பாகைகள் நெருக்கமாக சேர்க்கை பெறுகிறதோ அவ்வளவு
கெடுபலன்களை தருவார். சுபரோடு சேர்ந்தோ,சுபரின் பார்வையோ பெற்ற லக்னேசன் யோகத்தை தருவார்.

சூரியன் மேசம் 10.

சந்,ரிசபம்3.

செவ்,மகரம்28.

புதன் ,கன்னி 15.

வியா, கடகம் 5.

சுக்கி, மீனம்27.

சனி துலாம் 20.

மேற்காணும் பாகைகள் உச்சபாகைகளாகும். இதற்கு 180 வது பாகை நீச பாகையளவாகும்.

சனி லக்கினாதிபதி ஆகி அவர் 3 ம் வீட்டில் கேதுவுடன் இணைந்து மற்ற கிரகங்களை பார்தத
் ல் தீமையா
அல்லது நன்மையா ஐயா?அல்லது லக்கினாதிபதி பார்வை நன்மையாக மட்டுமே இருக்குமா ஐயா?

சனி கேதுவுடன் இணைவது மிகுந்த நன்மை தரும். ராகு, செவ்வாய், சூரியனுடன் மட்டும் சனி
இணையக்கூடாது.

வக்ரம் பெற்று பரிவர்தத


் னை பெற்ற கிரகம் நன்மை செய்வதில்லை என்று படித்துள்ளேன் இது உண்மையா?
லக்னாதிபதி சனி வக்ரம் அடைந்து குருவுடன் பரிவர்த்தனை பெற்றால் பலன் எப்படி

அப்படியல்ல. 1,2,4,5,7,9,10,11 க்கிடையேயான பரிவர்த்தனை எந்த நிலையிலும் யோகமே செய்யும். உயர்ந்த


நிலையை தரும்

பொது அசுபர், லக்ன சுபராக வந்து வக்கிரமாகி வர்கோதமானால் பலன் என்ன ஐயா?

பொது அசுபரானாலும் தனித்து யோகம் தராமல் பாவத்துவமே அதிகரிக்கும். அது பார்தத


் ,இருந்த இடம்
பாழ். பாவர் லக்ன சுபராக வரும்போது சுபராசி, அம்ச,பார்வை பெற்றாலே யோகம்.

ஜாதகருக்கு லக்னாதிபதி யே நன்மை செய்ய இயலாத அமைப்புகள் எவை?


லக்னாதிபதி பாவிகளோடு நெருங்கி இணைந்து சுபர் பார்வை சேர்க்கை பெறாத அமைப்பு தீமை தரும்.
லக்னாதிபதி பகை, நீசமானாலும் வலுபெற்ற சுபர் பார்வை, சேர்க்கை நன்மைதரும்.

காந்தா்வ யோகம் என்றால் என்ன ஐயா

யோகியின் நட்சத்திர புஷ்பகார பாகை அவயோகி நட்சத்திரசாரத்தில் இருந்தால் யோகியின் தசா யோகமா?
யோகபங்கமா?

யோகி தன் புஷ்பகார பாகையில் திசை நடந்தால்?

மிகுந்த யோகம் தரும்.

யோகியின் புஷ்பகார பாகை அவயோகி புஷ்பகார பாகையில் திசை நடந்தால்? யோகியின் தசா யோகமா?
யோகபங்கமா?

யோகி யோகத்தை செய்பவர்.

அதேபோன்று புஷ்கராம்சம் பெற்ற லக்ன யோகர்களும் யோகத்தையே செய்வார்கள் . லக்ன அசுபர்கள்


யோகம்தர மாட்டார்கள்.

ஒரு கிரகத்தின் திசா யோகம் தர சாரநாதன் ஆதிபத்தியசுபம் முக்கியமா?ஸதானபலம் முக்கியமா?

முதலில் ஆதிபத்திய லக்ன சுபராக இருக்க வேண்டும்.அப்புறம் தான் சட்பலம், சாரபலன் போன்றவை.

கேது யோகி ஆகி அவர் , அவயோகியான ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்தால் , கேது யோகியின்
வேலையை செய்வாரா அல்லது, தான் அமர்ந்த அவயோகியின் வேலையை செய்வாரா...

முற்பகுதி நன்மையை தந்து கடைசியில் கெடுப்பார்.

You might also like