You are on page 1of 6

12 வீடுகளுக்கான வேலை 7 பலம்

1. முதல் வீடு (லக்கினம்)


அ) தோற்றம். உடல் வாகு, நிறம், உயரம், தோற்றத்தால் உண்டாகும் வசீகரம் போன்றவை.
ஆ) குணம். குண நலன்கள். மற்றவர்களை அனுசரித்துப்போகும் குணம். வக்கிர குணம். நல்லவற்றையே
செய்யும் குணம். எதிலும் ஆதாயத்தை எதிர்பார்க்கும் குணம், பொறுமை, சகிப்புத்தன்மை, கோபம்,
இரக்கம், தாபம், காமம், சுயநலம், கஞ்சத்தனம் போன்ற அத்தனை குணங்களும் இதில் அடங்கும்.
இ) சந்திக்க இருக்கும் வெற்றிகள், புகழ், பெருமை, சிறுமை போன்றவை

2. இரண்டாம் வீடு
அ) குடும்ப நிலைமை, குடும்ப வாழ்க்கை.
ஆ) நிதி நிலமை. பணம். வரவு. செலவு போன்ற பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
இ) வாக்கு. பேச்சு, வாக்கைக் காப்பாற்றும் தன்மை. பேச்சுத் திறமை போன்றவை

3. மூன்றாம் வீடு
அ) உடன் பிறப்புக்கள். சகோதரன் சகோதரிகள். அவர்களூடன் ஆன உறவுகள். அவர்களுடன் கூடிய
மேன்மையான உறவு. அல்லது சண்டை, சச்சரவுகள் நிறைந்த தன்மை. விசுவாசமில்லாத உறவுகள்
போன்றவை.
ஆ) உறவினர்கள். பங்காளிகள். போன்றவை
இ) தைரியம். துணிச்சல்.நல்லது. கெட்டது என்று எதையும் எதிர்கொள்ளும் தன்மைகள் போன்றவை

4. நான்காம் வீடு.
அ) தாய்.
ஆ) கல்வி.
இ) சொத்து. சுகங்கள், நிலபுலன்கள். வீடு. வாகனங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான எல்லோரும்
ஆசைப்படும் மேட்டர்கள்.

5. ஐந்தாம் வீடு.
அ) இறைநம்பிக்கை, இறையுணர்வு, பூர்வ புண்ணியம், வாங்கி வந்த வரம் முதலியவை.
ஆ) அறிவு, புத்திசாலித்தனம், புத்திக்கூர்மை, உணர்வுகள், உணர்ச்சிகள், உயர்நிலைக் கல்வி போன்றவை.
இ) குழந்தை. குழந்தை பாக்கியம், குழந்தையால் ஏற்படவுள்ள மேன்மைகள்.

6. ஆறாம் வீடு
அ) நோய்கள், பிணிகள், தீராத வியாதிகள் முதலியன.
ஆ) எதிரிகள்.
இ) கடன்கள். துரதிர்ஷ்டங்கள்.

7. ஏழாம் வீடு
அ) திருமணம்
ஆ) மனைவி அல்லது கணவன்
இ) திருமணத்தால் ஏற்படும் சந்தோஷங்கள் அல்லது துக்கங்கள்

8. எட்டாம் வீடு.
அ) ஆயுள்.
ஆ) மரணம். மரணம் ஏற்படும் காலம், ஏற்படும் விதம் முதலியன.
இ) கஷ்டங்கள். சிக்கல்கள். ஏற்றத்தாழ்வுகள். மதிப்பின்மை, அதாவது மதிப்பு, மரியாதை இல்லாத
நிலமைகள் போன்றவை
9. ஒன்பதாம் வீடு
அ) தந்தை. பூர்வீகச் சொத்துக்கள்
ஆ) அறம், கொடை, தர்மச் செயல்கள் போன்ற நிகழ்வுகள். அவற்றைச் செய்யும் பாக்கியங்கள்.
இ) தலைமை. தலைமை ஏற்கும் வாய்ப்பு, புகழ், சமூக அந்தஸ்து போன்றவை.

10. பத்தாம் வீடு.


அ) தொழில், வேலை, வணிகம் போன்ற செய் தொழில்கள்.
ஆ) வாழ்க்கை, அதில் வாழ்கின்ற விதம் முதலியன.
இ) அடைய இருக்கும் பெருமைகள். விருதுகள் முதலியன.

11) பதினொன்றாம் வீடு.


அ) லாபங்கள்.
ஆ) தேடிப் பிடிக்கும், தேடிக் கைவசமாக்கும் செல்வங்கள். பாக்கியங்கள் (Something acquired or gained)
இ) துன்பங்கள், துயரங்கள் இல்லாத நிலைமை. சுதந்திரமான வாழ்க்கை.

12) பன்னிரெண்டாம் வீடு.


அ) இழப்புக்கள். விரையங்கள்
ஆ) செலவுகள். முக்கியமாக பணத்தை வைத்து ஏற்படும் செலவுகள். நேரத்தை வீணாக்கிச்
செலவழிப்பதும் செலவுதான்.
இ) உணவு, உடை, உறக்கம் போன்றவை. அத்துடன் பெண் சுகம்.பெண்ணிற்கு ஆணின் பரிசம். உடல்
உறவுகள் போன்றவை.
ஒரு வீட்டின் பலம் (Strength of a house)
1. வீட்டு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று இருத்தல். (exchange of houses) சூரியன் மற்றும்
சனீஷ்வரனின் ஆகிய இருவரும்  பரிவர்த்தனை பெற்றிருத்தல் விதிவிலக்கு. இந்தக் கணக்கில் வராது.
2. வீட்டின் அதிபதி உச்சம் பெற்று இருத்தல்.
3. உச்சம் பெற்ற கிரகம் அமர்ந்திருக்கும் வீடு. (A house occupied by an exalted planet - எந்த
கிரகமாயிருந்தாலும் சரி.
4. வீட்டின் இருபுறமும் நன்மை பயக்கக்கூடிய கிரகங்கள் அமர்ந்திருப்பது. (hemmed between two good
planets) சுபக்கிரகங்கள், யோககாரகர்கள் ஆகியவர்கள் அப்படி இரு பக்கமும் அமர்ந்திருக்கும்
`நிலைமை.
5. வீட்டின் அதிபதி அந்த வீட்டிலேயே ஆட்சி பலம் பெற்று அமர்ந்திருக்கும் நிலைமை.
6. பார்வை பறிமாற்றம் பெறும் வீடுகள். உதாரணம் சனியின் வீட்டை செவ்வாயும், செவ்வாயின் வீட்டை
சனியும் பார்க்கும் நிலைமை.
7. உச்சமான கிரகத்தின் பார்வையைப் பெறும் வீடு அல்லது வீடுகள்
8. வீட்டு அதிபதியின் பார்வையைப் பெறும் வீடுகள்.

மேலே கொடுத்திருக்கும் விதிகள் ஒரு வீட்டின் வலிமையை அதிகப் படுத்துவதாகும். அந்த எட்டு
விதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விதிகளின்படி அமைந்திருக்கும் வீடுகள் வலிமை
உடையதாகும்.

முதல் விதிதான் இருக்கும் விதிகளில் அதீத பவரானது. உங்கள் மொழியில் சொன்னால் சூப்பர்
பவரானது. மற்றதெல்லாம் அதற்கு அடுத்ததுதான். அதுவும் 2 to 8 என்று இறங்குமுக வரிசையில்
இருக்கும். பலமும் அப்படித்தான் அமையும்.

அதாவது, முதல் விதிப்படி 8 மடங்கு பவர் என்றால், அடுத்த விதிக்கு ஏழு மடங்கு பலம் என்று
குறைத்துக்கொண்டே வந்து பலனைப் பாருங்கள்.

பலம் எப்போது குறையும் அல்லது இல்லாமல் போகும்?


1. 6, 8 & 12 ஆம் வீட்டு அதிபதிகளின் (Owners of inimical houses) பார்வையில் விழும் வீடுகள்
வலிமையை இழக்கும்.
2. 6, 8 & 12 ஆம் வீட்டு அதிபதிகள் வந்து அமரும் வீடுகளும் (houses occupied by the lord of 6, 8
&12th houses) வலிமையை இழக்கும்
3. ஒரு வீட்டின் அதிபதி  6, 8 & 12 ஆம் வீடுகளில் போய் அமர்ந்தாலும், அவர் தன் வலிமையை
இழந்து விடுவார். உதாரணம் லக்கினாதிபதி 12 ல் அமர்ந்தால் - அது விரைய வீடு - தன் வலிமையை
இழந்து விடுவார். அதுபோல எந்த அதிபதி அங்கே அமர்ந்தாலும் தன் வலிமையை இழந்துவிடுவார்.
அந்த அமைப்புள்ள ஜாதகனின் வாழ்க்கை அவனுக்குப் பயன் படாது. மற்றவர்களுக்குத்தான்
பயன்படும். அவன் அடுத்தவர்களுக்காக மட்டுமே உழைக்க நேரிடும். பொருள் தேட நேரிடும்.
4. ஒரு வீட்டின் அதிபதி அஸ்தமனமாகியிருந்தால் பலன் இல்லை. Combust Position.
5. சனியின் பார்வையால் ஏற்படும் விபரீதங்கள்:
a. சனி ஆட்சி பலம் பெற்று அமர்ந்து, அங்கிருந்து அவர் பார்க்கும் வீடுகள் நன்மையான பலன்களைத்
தராது. (Bad aspect)
b. சனி பகை வீட்டில் அமர்ந்து, அங்கிருந்து அவர் பார்க்கும் வீடுகள் நன்மையான பலன்களைத்
தராது. (Evil aspect)
c. சனி நீசமடைந்து, அங்கிருந்து அவர் பார்க்கும் வீடுகள் நன்மையான பலன்களைத் தராது.(worst
aspect)
6. வீட்டின் இருபுறமும் தீமையான கிரகங்கள் அமர்ந்திருப்பது. (hemmed between two malefic planets)
7. நீசம் பெற்ற கிரகம் அமரும் வீடுகள்
8. வீட்டின் அதிபதி நீசமடைந்திருக்கும் நிலைமை
ஸ்திரமான வாழ்க்கை
ஒரு ஜாதகனுக்கு, ஸ்திரமான வாழ்க்கை அமைய எது முக்கியம்?
சந்தேகமில்லாமல், லக்கினம்தான் முக்கியம். லக்கினம் வலுவாக இருந்தால், அதாவது வலிமையுடன்
(Strength) இருந்தால், கிடைக்கக்கூடிய நல்ல பலன்களை ஜாதகன் அனுபவிக்க முடியும். நல்ல பலன்கள்
உரிய நேரத்தில் வந்து சேரும்.

நன்மையான பலன்கள் என்னென்ன?


1. உடல் ஆரோக்கியம்
2. நீண்ட ஆயுள்
3. செல்வம் (உங்கள் மொழியில் சொன்னால் பணம்)
4. மகிழ்ச்சி
5..எடுத்த காரியங்களில் வெற்றி
6. செல்வாக்கு (சமூக அந்தஸ்து, புகழ், மதிப்பு, மரியாதை என்று எப்படி வேண்டுமென்றாலும்
வைத்துக்கொள்ளுங்கள்)

அதற்கான ஜாதக விதிமுறைகள்


கீழே குறிப்பிட்டுள்ள 7 பலாபலன்களில் ஒன்று இருந்தாலும் போதும்.
1. லக்கின அதிபதி திரிகோணம் ஏறி இருக்க வேண்டும். திரிகோணங்களில் அமர்ந்திருக்க வேண்டும்.
திரிகோணம் என்பது 1, 5, 9 ஆம் வீடுகள். அம்மூன்றில் வீடு பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீடு
மிகவும் சிறப்பான திரிகோண வீடாகும். லக்கினாதிபதி ஒன்பதில் இருந்தால், ஜாதகன் மிகவும்
அதிர்ஷ்டமானவன். பாக்கியசாலி.
2. அதற்கு அடுத்த நிலை (அதாவது லக்கினாதிபதி திரிகோணங்களில் இல்லாவிட்டால்)
கேந்திரவீடுகளில் இருக்க வேண்டும். கேந்திர வீடுகள் நினைவில் உள்ளதல்லவா? 4, 7, 10 ஆம்
வீடுகள் கேந்திர வீடுகள் ஆகும். இம்மூன்றில் 10 ஆம் வீடு மிகச் சிறந்த கேந்திர ஸ்தானமாகும்.
3. லக்கினமும், லக்கின அதிபதியும் சுபக் கிரகங்களின் பார்வையைப் பெற்றிருக்கும் நிலை.
சுபக்கிரகங்களை நினைவில் வைத்துள்ளீர்கள் அல்லவா? சந்திரன், சுக்கிரன், குரு ஆகிய மூன்றும்
சுபக்கிரகங்கள் ஆகும். அம்மூன்றில் குரு நம்பர் ஒன் சுபக்கிரகம் ஆகும். சந்திரனுக்கும்
சுக்கிரனுக்கும் ஏழாம் பார்வை மட்டுமே உண்டு. ஆனால் குரு பகவானுக்கு
7 ஆம் பார்வையோடு, 5 மற்றும் 9 ஆகிய விஷேசப் பார்வைகள் உண்டு.
4. லக்கினத்தில் சுபக்கிரகங்கள் வந்தமர்ந்திருந்தாலும் அல்லது லக்கின அதிபதி தான் அமர்ந்திருக்கும்
இடத்தில் சுபக்கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் நன்மையானது.
5. லக்கினம் அல்லது லக்கினாதிபதி ஆகியவற்றின் இருபக்கமும் (இருபக்க வீடுகளில்) சுபக்கிரகங்கள்
இருக்கும் நிலைமை. அதாவது லக்கினத்தையோ அல்லது லக்கினாதிபதியை சுபக்கிரகங்கள்
சூழ்ந்திருக்கும் நிலைமை.
6. வகோத்தம லக்கினம். லக்கினம் வகோத்தமம் அடைவது இயற்கையிலே வலுவான லக்கினமாகும்.
7. பார்வையால் மேன்மையுறுவது. லக்கினத்தின் இருபக்க வீடுகளும் சுபக் கிரகங்களின் பார்வையோடு
இருக்கும் நிலைமை. அதாவது லக்கினதிற்கு 6 மற்றும் 8 ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் இருக்கும்
நிலைமை
8. லக்கினத்தில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருப்பது.

இவைகள் எதுவுமே இல்லையா? கவலை வேண்டாம்!

லக்கினம் பலவீனமாக (weak - lacking strength) இருந்தாலும், சுபக்கிரகங்கள் ஜாதகத்தில்


வலுவாக இருந்தால் போதும். அதாவது அவைகள் ஆட்சி அல்லது உச்ச பலத்துடன்
இருக்கும் நிலைமை. அப்படி இருந்தால், ஜாதகன் அசமந்தமாக (அசடாக) இருந்தாலும், எல்லாச்
செல்வங்களும், எல்லா நன்மைகளும் அவனைத் தேடி வரும். (Less potential but much gain in life)
லக்கினம் பலமாக இருந்தாலும், சுபக்கிரகங்கள் ஜாதகத்தில் வலுவாக இல்லாவிட்டால், ஜாதகனின்
விருப்பங்கள், அபிலாஷைகள் நிறைவேறாது. வெறுப்பு மட்டுமே எஞ்சி நிற்கும்

லக்கினத்துடன் தீய கிரகங்களின் தொடர்பு இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை கஷ்டங்களும்,


துன்பங்களும் நிறைந்ததாக இருக்கும். சமூக சேவைகளிலும், பக்தி மார்க்கத்திலும் திளைப்பதற்கு
லக்கினமும் அதன் அதிபதியும் பலவீனமாக இருக்க வேண்டும். லக்கினம்
என்பது தன்னைத் தானே (self) குறிப்பது. அது இல்லாதவர்கள்தான் அதாவது தான் தன்னுடையது
என்கின்ற உணர்வு இல்லாதவர்கள் மட்டுமே பக்தி மார்க்கங்களில் ஈடுபாடு கொள்ள முடியும். அல்லது
பொது மற்றும் சமூக சேவைகளில் ஈடுபடமுடியும்!

You might also like