You are on page 1of 4

குரு நின்ற இடம் பாழ்

குரு எங்கு நிற்கிறாரோ அந்த ராசியில் அவர் வாங்கிய சாரத்தை நீங்கள் எடுக்க வேண்டும்.
உங்கள் லக்னப்படி அந்த சாரம் எந்த வீடு அந்த வீடும் அந்த வீட்டு அதிபதி எங்கு நிற்கிறாரோ அந்த இடமும்
பிரச்சனைக்கு உள்ளாகிறது.

ஒரு இருபது புகழ்பெற்ற 20 பேர்களின் _ ஜாதகங்களைக் குறிப்பிட்டு அவருடைய குரு எங்கிருக்கிறது? அவருக்கு
இதனால் என்ன பிரச்சனை என்பதை பாருங்கள்

முதலில் சந்திரபாபு நாயுடு


மேஷ லக்கினம்
12ல் குரு அவர் வாங்கிய சாரம் உத்திரட்டாதி
10 11 உடைய இவர்
ஆறில்
பத்தாமிடம் மாமியார்_இதில் ஒரு குழப்பத்தை பயன்படுத்தி - அவர் 10- பதவி - ஆட்சியைப் பிடித்தார்
குரு நின்ற சார அதிபதி சனி அவற்றில் -எதிர்ப்புகளால் வெடிகுண்டு விபத்து வரை சந்தித்தார்
அந்த ஆறாமிடம் பாழாக வேண்டும் என்பதனால் எதிரிகளையும் முறியடித்தார்

ஜெயலலிதா அம்மா அவர்கள்


அவர் மிதுன லக்னம்
ஏழில் குரு -குருவாங்கிய சாரநாதன் கேது அவர் துலாத் தில்-
அம்மையாருக்கு கடைசிவரை புத்திர பாக்கியம் இல்லை

அப்துல் கலாம் ஐயா அவர்கள் -


அவர் கடக லக்னம் லக்னத்திலேயே குரு அவர் வாங்கிய சாரம் ஆயில்யம் 3 12க்கு உரியவன் சாரம்
மூன்று என்றால் சிற்றின்பம் என்று பொருள் 12 என்றால் அயன சயன போகம் என்று பொருள் அவருக்கு திருமணமே
இல்லை போகம் இல்லை. அவருக்கு எப்பொழுதுமே _தூக்கம் என்பது சரிவர கிடையாது

அடுத்து தலைவர் கலைஞர் ஜாதகம்


கடக லக்னம் குரு 5ல் 3 12 குரிய புதன் சாரத்தில்
அந்த புதனோ - லக்னத்திற்கு பத்தில் .
பத்தாமிடம் என்பது உச்சி ஸ்தானம் அவரது முடி அழிந்து போனது அதாவது வழுக்கை
3 12 என்பதால் பிரயானத்தின் போது விபத்தால் அவருடைய கண் பாதித்தது அவருக்கு ஒரு கண் பாதிப்பு
எப்பொழுதுமே இருந்தது அது 12ஆம் இடம் கண்

அடுத்து மேன்மைமிகு இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் -


அம்மையாரும் கடகலக்னம் குரு பதினொன்றில் சந்திரன் சாரத்தில் அதாவது லக்னாதிபதியின் சாரத்தில்
அந்த சந்திரனோ ஏழில் அவருடைய திருமண வாழ்க்கை பற்றி உங்களுக்கே தெரியும் கணவரை அழித்தது
ஏழாமிடம் இரண்டாவது குழந்தை அவரையும் அழித்து விட்டது

அடுத்து ஹேமாமாலினி
அவரும் கடக லக்கனம் குரு ஆறில் மூல நட்சத்திரத்தின் சாரத்தில்
அந்த சாரநாதன் கேதுவும் நான்கில்
நான்கு என்பது தாய்மை கற்பு ஒழுக்கம் படிப்புப் பற்றியது அவர் சினிமாவில் இருந்தவர் எனவே நாலு என்கிற
இடத்தை தாங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்களோ எடுத்துக் கொள்ளுங்கள்

கவிஞர் கண்ணதாசன்
அவர் சிம்ம லக்னம் குரு மீனத்தில் உத்திரட்டாதி சனியின் சாரத்தில் அந்த சனியும் நான்கில்
சிம்ம லக்கினத்திற்கு ஏழாம் இடம் மனைவி அவருக்கு எத்தனை மனைவி என்று நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்
4-ஆம் இடம் ஒழுக்கம் - தண்ணீர் இவைகள் பற்றியது நீங்களே அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்

ரஜினிகாந்த் அவர்கள்
அவருக்கு குரு ஏழில் ராகுவின் சாரத்தில்
அந்த ராகு எட்டில் எட்டு என்பது உயிர் கண்டத்தை தருவது அவர் மிகப்பெரிய உயிர் கண்டத்தில் இருந்து
தப்பியுள்ளார் என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும்
மேலும் அந்த குருவும் ராகுவும் சார பரிவர்த்தனை
அவர் இரண்டாவது குழந்தையினால் - எவ்வளவு மனவேதனை பட்டார் என்பது உங்களுக்கே தெரியும்

அடுத்து மகாத்மா காந்தி ஐயா அவர்கள் -


அவர் துலா லக்னம் ஏழில் குரு கார்த்திகை நட்சத்திர சாரத்தில்
அந்த சூரியன் பன்னிரண்டில் கன்னியில் அவருடைய இறப்பானது - எவ்வாறு இருந்தது - அவருடைய சிறைவாழ்க்கை
12 இடம் - பார்த்துக்கொள்ளுங்கள்

அடுத்து புட்டபர்த்தி சாய்பாபா சுவாமி அவர்கள்


துலா லக்னம் குரு நாளில் அவிட்ட நட்சத்திரத்தின் சாரத்தில் அந்த நட்சத்திர அதிபதியான செவ்வாய் ஏழில் -
திருமணம் இல்லை
திருமணமே செய்யாமல் வாழ்ந்த மாபெரும் மகான்

எட்டாவது வள்ளல் எம் ஜி ராமச்சந்திரன் ஐயா அவர்கள்.


கும்ப லக்கனம் குரு மேஷத்தில் அஸ்வினி நட்சத்திர சாரத்தில்

அந்த அஸ்வினியின் நாயகன் கேதுவோ மிதுனத்தில் - 5ல்


எம்ஜிஆரின் மிகப்பெரிய குறை குழந்தை இல்லை என்பதை தவிர அவருக்கு என்ன குறை? என்ன குறை?

மாண்புமிகு நரேந்திர மோடி ஐயா ஜாதகம் .


விருச்சிக லக்கனம் கும்பத்தில் குரு அவிட்டம் நட்சத்திர சாரத்தில் அந்த செவ்வாய் லக்னத்தில்
தன்னைத்தானே வருத்திக்கொண்டு தனக்காக எதுவும் வைத்துக் கொள்ளாமல் - பல எதிர்ப்புகளுக்கிடையிலும் - சேவை
என்கிற ஒரே நோக்கத்துடன் செயல்படும் மனிதர்
பொதுவாகவே லக்னத்தில் - இந்த குரு நின்ற சார அதிபதி வந்தால் -அவருடைய உடல் சம்பந்தமாக அல்லது அவரே
பிரச்சினைக்குரியவராக - தனது குடும்பத்திற்கு மாறிவிடுகிறார்

அடுத்து திருபாய் அம்பானி ஐயா அவர்களின் ஜாதகம்


தனுசு லக்னம் குரு கன்னியில் உத்திரம் சாரத்தில்
அவர் நின்ற சாரநாதன் சூரியன் லக்னத்தில்
தலை சார்ந்த நரம்பு பிரச்சனையினால் அவர் பாதிக்கப்பட்டு பெராலிசிஸ் அட்டாக் அதாவது வாத நோயினால்
பிரச்சினையை சந்தித்தார்
அவருக்கும் முடி வழுக்கை

திரு அமிதாபச்சன் அவர்களுடைய ஜாதகத்தில் - கும்ப லக்னம் குரு நின்றது கடகத்தில் புனர்பூசம் நான்காம் பாதத்தில்
இங்கேயும் நீங்கள் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும் நான் வம்ச பிரச்சினை வருகிறது என்று சொன்னேன்
இவருடைய மூத்த மகனான அபிஷேக் பச்சனுக்கு ஒரே ஒரு பெண் குழந்தைதான்
ஆண் வம்சம் இல்லை என்பதை பாருங்கள்

மம்தா பானர்ஜி அம்மா அவர்கள்


மேஷ லக்னம் குரு கடகத்தில் புனர்பூசம் 4
அந்த குருவோ சுயசாரத்தில் கடகத்தில் கடகம் என்பது தாய்மை
அவர் தாய்மை அடையவே இல்லை திருமண பாக்கியமும் இல்லை
இங்கு குரு என்பது குருவின் நட்சத்திரத்தில் 4 ஆம் பாதத்தில் அமைந்துள்ளதை பாருங்கள்
வம்சம் இல்லை
வம்சம் சார்ந்த பிரச்சினைகளை இந்த குருவின் நான்காம் பாதம் அதிகம் சொல்கிறது
மேலும் மம்தா பானர்ஜி அம்மாவின் லக்கனப் புள்ளி அஸ்வினியில் அமைந்ததால் அதற்கு பத்தாம் இடமாக கடகம்
வருகிறது .அங்கு குரு நின்று சுயசாரம் பெற்றதால் - 10 என்பது தொழிற்சங்கங்கள் அதாவது நீண்ட காலம்
கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்த மாநிலத்தை அவர்களின் ஆட்சியை - செல்வாக்கை அழித்து - இவர் வெற்றி பெற்றார்
- என்பதையும் பாருங்கள்

ஆப்பிரிக்க தலைவர் திரு நெல்சன்மண்டேலா ஐயா அவர்களின் ஜாதகத்தில் - தனுசு லக்னம் குரு ஏழில்
திருவாதிரையின் சாரத்தில் அந்த ராகு பன்னிரண்டில் விருச்சிகத்தில்
12-ஆம் இடம் அயன சயன போகம் இவைகளை எதையும் அனுபவிக்க முடியாமல் அவர் நீண்ட நாள் சிறையில்
இருந்ததை நீங்களே எண்ணிப்பாருங்கள்
மற்றொரு முக்கியச்செய்தி உங்களுக்கு சொல்லி விடுகிறேன் குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம் நான்காம் பாதம்
விசாகம் நான்காம் பாதம் பூரட்டாதி 4ஆம் பாதம் இவைகளில் உங்கள் லக்ன அதிபதியே நின்றால் -புனர்பூசம்
நான்காம் பாதம் விசாகம் 4ஆம் பாதம் பூரட்டாதி 4ஆம் பாதம் இவைகளில் உங்கள் லக்னாதிபதி அல்லது எந்த
அதிபதி நின்றாலும் அது சார்ந்த பிரச்சினைகள் உங்களுக்கு வரும் என்பதை நான் எவ்வாறு இவ்வளவு

ஆணித்தரமாக கூறுகிறேன் என்றால் - பகவான் ராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகத்தில் சந்திரன் புனர்பூசம் நட்சத்திரத்தில்
கடக ராசியில் இருப்பதை பாருங்கள்👀

சந்திரன் அவருக்கு லக்னாதிபதி - எத்தனையோ கிரகங்கள் உச்சம் அடைந்து இருந்தபோதும் அவர் அடைந்த
துன்பத்திற்கு அளவு தான் என்ன?

இங்கு நான் வம்சம் சம்பந்தமான பிரச்சினை வரும் என கூறினேன் அவர் தனது குழந்தைகளை எத்தனை ஆண்டு
காலம் பிரிந்து வாழ்ந்தார் என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும்

அவர்களுக்கெல்லாம் வம்சம் தொடர்பான பிரச்சனை வருகிறது


மேலும் கர்ணன் பூரட்டாதி நட்சத்திரம் மீன ராசி கர்ணன் அடையாத துன்பங்கள் என்ன?- என்பதை யோசித்துப்
பாருங்கள் நண்பர்களே

அவர் குரு பரசுராமரிடம் பயின்ற -

மாபெரும் அஸ்திர வித்தையும் - தக்க சமயத்தில் பயன் தராமல் போனது ஏன்?- குரு சாபம் - ஒரு துரதிஷ்டமான
ஆன சம்பவம் என்பதையும் பாருங்கள் அர்ஜினனை கொல்ல மார்பில் அம்பு விடாமல் அர்ஜூனனின்தலைக்குக் கு
குறி வைத்து தோற்றதை பாருங்கள்

அல்லது தலை சம்பந்தமாக அதாவது வழுக்கை சம்பந்தமான பிரச்சனை கூட வருகிறது

எனவே நண்பர்களே -இந்த குரு நின்ற இடம் பாழ் என்பது அவர் நின்ற சாரநாதன் எங்கு இருக்கிறானோ அந்த வீடு
சம்பந்தமான அழிவு தான் வருகிறது என்பதுதான் எனது கருத்து

அடுத்து அந்தணன் தனித்து இருந்தால் அவதிகள் மெத்த உண்டு

இந்தப் பதிவிற்கு குரு மட்டும் தனியாக - அனைத்து கிரகங்களுக்கும் வெளியில் அதாவது ராகு கேதுவிற்கு வெளியில்
- குரு ஒரு புறமும்மற்ற கிரகங்கள் அனைத்தும் ஒரு பக்கமும் இருந்தால் இதுதான் தனித்திருத்தல் என்று பொருள்

அந்தமாதிரியான - குரு அவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் அந்த பாவக ரீதியாக அந்தகார ரீதியாக வருகிறது
சாதாரணமாக தனித்திருத்தல் என்றால் எங்கு நிற்கிறாரோ அது சம்பந்தமான ஒரு சில பிரச்சனைகளை தருவார்.
அவ்வளவே ஆனால் - அதற்கும் முழுக்க முழுக்க இங்கு தனித்திருத்தல் என்பது நான் கூறியபடி தான் இருக்க
வேண்டும் இந்தக் கருத்தின்படி உங்கள் ஜாதகத்தில் உங்கள் குரு இருக்கும் நட்சத்திர அதிபதி எங்கு இருக்கிறாரோ
அந்த பாவமும் அதில் நிற்கும் கிரகமும் பிரச்சனையைத் தரும்

You might also like