You are on page 1of 7

வாஸ்து

ஊரில் குறைந்தது பத்தாயிரம் மக்கள் வாசித்தால் மட்டுமே வாஸ்து பார்க்க வேணடும். அல்லது தேவையில்லை.

வாஸ்த்துவிற்கான பழங்கால புத்தகங்கள்


 வாஸ்து லவலட்சனா
 வாஸ்து குபேர லட்சனா
 வாஸ்து ரத்னகா 14 நூற்றாண்டு

இடம் வாங்குவதற்காக, இடம் பார்க்க போகும் முன் சகுனம் பார்க்க வேண்டும். சகுனம் சரியில்லையென்றால் இடம்
பார்க்க போகக்கூடாது.

வாங்கும் மனையின் உள் மண் நல்ல வாசனையுடன் இருக்க வேண்டும். கெட்ட வாசனை அல்லது வாசமில்லாமல்
இருந்தால் மனை வாங்க கூடாது.
பூமி பரிசோதனை அல்லது மண் பரிசோதனை செய்ய வேண்டும்

பரிகாரம்
அப்படி வசம் இல்லாத மனை வாங்கும் சூழல் வந்தால் வாசல் திசை பார்த்து அந்த திசைக்கு உரிய எந்திரம் வைத்து
வாஸ்து பூஜை செய்ய வேண்டும்.

சூரிய/சந்திர தோஷம்
பிளாட் கிழக்கு மேற்கு திசையில் நீளமாய் இருந்தால் சூரிய தோஷம்
வடக்கு தெற்கு திசையில் ஜீலமாய் இருந்தால் சந்திர தோஷம்

வைசாக தோஷம்
வீட்டில் பாம்பு பூரான் எறும்பு/கரையான் புற்றுக்கள் பூச்சிகள் கூடு கட்டுவது போன்றவை வீட்டில் தோஷம் உள்ளது
என்று காட்டும்.
மனை
நீரோட்டம், சாக்கடை சமாதி கோவில் இருக்கும் இடத்தில் இருந்தால் 100 அடி தள்ளி மனை இருக்க வேண்டும். 100
அடிக்குள் இருந்தால் தோஷம் வரும்.
சதுரம் நீள்சதுரம், கிழக்கில் சாய்வான மனைகள் நன்று
வட்டமாய் அல்லது கிழக்கு அல்லாமல் வேறு திசையில் சாய்வான மனைகள் தோஷம்
கோவிலுக்கு பக்கத்தில் உள்ள வீடுகள் தோஷம் இல்லை.ஆனால் எதிர் உள்ள வீடுகள் கோவிலின் வாசலுக்கு 45
டிகிரி சாய்வாக நூறு அடி தள்ளி மட்டுமே இருக்க வேண்டும். 45 டிகிரி சாய்வாக 100 ஆடி தூரம் 3 வீடுகள் தோஷம்.
நல்ல விதமாய் இருக்க மாட்டார்கள். கோவிலுக்கு எதிர் இருக்கலாம் தோஷம் இல்லை. ஆனால் 45 டிகிரியில் உள்ள
வீடுகள் மட்டும் தோஷம். சின்ன கோவிலோ, பெரிய கோவிலோ, தோஷம் உண்டு.
சமாதியை பார்க்கும் விதமாக வீடு இருக்க கூடாது. அப்படி இருந்தால் உயரமான சுவர் கட்டி கொள்ளலாம்

சுற்று சுவர்
வீடு கட்டுமுன் முதலில் சுற்றுச்சுவர் அல்லது வேலி கட்டியபின் வீடு கட்ட வேண்டும். அல்லது அடுத்த மனையின்
தோஷம் நம் மனைக்குள் நுழைந்துவிடும்

அல்லது தென் மேற்கு மூலையில் 2 செங்கல் வைக்க வேண்டும். அடுத்து தென் கிழக்கில், அடுத்து வாடா மேற்கில்,
கடைசியாய் வடகிழக்கில் வைத்தது பின் வாஸ்து பூஜை செய்ய வேண்டும். வாஸ்து பூஜை செய்யும் முன் சுற்றுச்சுவர்
அல்லது வெளி அல்லது செங்கல் வைக்க வேண்டும்.

வாசல்
ஜாதகம் பார்த்து வைக்க கூடாது. வீடு காட்டும் காலத்தில் வீட்டில் உரிமையாளர் யாரோ அவர் பெயரின் முதல்
எழுத்து வைத்து வாசல் எந்த திசையில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.
அனைத்து கதவுகளும் இடது கையில் திறப்பது போல் வைக்க வேண்டும்
முன் வாசலும் பின் வாசலும் நேர் கோட்டில் வர கூடாது. விதவைகள் உருவாகுவார்கள்.
முன் வாசலுக்கு 45 டிகிரியில் பின் வாசல் அல்லது ஒரு ஜன்னல், ஒரு துவாரம் போன்று ஏதாவது இருக்க வேண்டும்.
வீட்டில் உள்ள கதவு ஜன்னல் வெண்டிலேட்டர் எஸ்ஹஸ்ட் பேன் அல்லது காற்றுக்காக உள்ள ஓட்டைகள் எல்லாம்
சேர்த்து மொத்தமாக இரட்டை படையில் இருக்க வேண்டும். தனித்தனியாக வாசல் இரட்டைப்படை ஜன்னல்
இரட்டைப்படை என்று அல்ல.
நிலைப்படி கடைசியில் சிமெண்ட் பூசும் முன் தான் வைக்க வேண்டும்.
முதலில் வீட்டுக்காரன் தாண்ட வேண்டும். மற்றவர் கூடாது.
வாசல் கதவு ஒன்றாவும் இருக்கலாம் இரண்டாகவும் இருக்கலாம். ஆனால் 2 பலகை சேர்தது ஒரு கதவாய் செய்ய
கூடாது.
வாசல் கதவு உரிமையாளரின் உயரத்தை விட ஒரு அடி மட்டுமே அதிகம் இருக்க வேண்டும்.
வாசல் கதவிற்கு மேல் கண்ணாடி டிசைன் ஜன்னல் வைக்க கூடாது.
சுவற்றில் இருந்து ஒரு செங்கல் தூரமாவாது தள்ளி இருக்க வேண்டும். சுவரை ஒட்டி இருக்க கூடாது.
நிலையுடன் சேர்ந்து உள்ள ஜன்னல் கூடாது. நிலை தனியாக இருக்க வேண்டும். ஜன்னல் குறைந்தது ஒரு செங்கல்
அளவிற்காவது தள்ளி இருக்க வேண்டும்.
முதலில் எல்லா வாசல் நிலையும் வைத்து விட்டு பின் கடைசியாக தான் மெயின் நிலை வைக்க வேண்டும். மெயின்
நிலை வைத்த பின் மற்ற நிலைகள் வைக்க கூடாது.
வாசல் வைக்கும் நாள் கோழி பலி வேண்டும்.
9 பாகமாக பிரித்து கிழக்கு வாசல் என்றால் கிழக்கில் இருந்து என்ன வேண்டும். வடக்கு பார்த்த வாசலென்றால்
கிழக்கில் இருந்து மேற்கு திசையில் என்ன வேண்டும். தெற்கு பார்த்த வாசலென்றால் கிழக்கில் இருந்து தெற்கு
திசையில் என்ன வேண்டும். மேற்கு வாசலென்றால் வடக்கில் இருந்து தெற்காக என்ன வேண்டும்.

1 சூரியன் 2 சந்திரன் 3 செவ்வாய் 4 புதன் 5 சுக்ரன் 6 குரு


வாசல் புதன் குருவில் மட்டும் இருக்க வேண்டும்.
தெற்கு பக்க வாசலென்றால் சந்திரன் இருக்கும் இடத்தில் மட்டும் வாசல் வைக்க வேண்டும். அப்படியில்லையென்றால்
தெற்கு பக்கம் மட்டும் மத்தியில் வைக்கலாம்.
வடக்கு வாசல்: வடமேற்க்காக வாசல் இருந்தால் 6 ஆதி தள்ளி இருக்க வேண்டும்.

பெயரின் முதல் வாசல் திசை


எழுத்து
அ க கிழக்கு வடக்கு
ஆ ச வடக்கு கிழக்கு
இ ட மேற்கு வடக்கு
ஈ த கிழக்கு வடக்கு
உ ப தெற்கு வடக்கு
ஊ ம தெற்கு மேற்கு
ஏ ய வடக்கு மேற்கு

மனையில் மத்திமம் பிரம்மஸ்தானம். கேது


அதிபதி
கிழக்கு இந்திரன் சூரியன்
மேற்கு வருணன் புதன்
வடக்கு குபேரன் சுக்ரன்
தெற்கு எமன் ராகு
தென்கிழக்கு அக்னி செவ்வாய்
தென் மேற்கு நைரிதி சந்திரன்
வடமேற்கு சனி வாயு
வடகிழக்கு குரு ஈசன்

1. வடக்கும் தென் மேற்கும் 90 டிகிரி இருக்க வேண்டும்.


2. வடகிழக்கு ஒரு நூல் அளவாவது வளர்ந்து இருக்க வேண்டும். பூசும் சிமெண்ட் கொஞ்சம் மொத்தமாக பூசி
செய்யலாம். மனையில் நீளம் 40 அடியென்றால் 1 அடி வரை வளர்ந்து இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால்
போலீஸ் வருமானவரி போன்றவை பிரச்சினை வரும்.
3. கிழக்கு அதிக இடம் இருக்க வேண்டும். திறந்து இருக்க வேண்டும்.
4. வடகிழக்கில் நிரந்தர சுமை வைக்க கூடாது கார் பார்க்கிங் போன்று வைத்து கொள்ளலாம்
5. தெற்கு தென்மேற்கு வலுவாக இருந்தால் சுகம். சுமை வைக்கலாம். படுக்கை கூடாது. சித்தபிரமை குழந்தை
பிறக்கும். வாழ்க்கை சீர் அடையாது. அப்படி இருந்தால் தென் மேற்கில் பிரித்து கழிவறையும் குளியலறையும்
கட்டிக்கொள்ளலாம். அல்லது வார்டரோப் அமைத்துக்கொள்ளலாம் அப்படியும் இல்லாவிட்டால் 5 அடி
விட்டுவிட்டு பயன்படுத்த வேண்டும். தென்மேற்கில் பெண்கள் படுத்தால் கர்ப்பப்பை பிரச்னை வரும். நோய்கள்
வரும்.
6. தெற்கு அல்லது வடக்கில் படுக்கை வைக்கலாம். சுமை வைக்கலாம்
7. தென்கிழக்கு தண்ணீர் தொட்டி வைக்க கூடாது. அடுப்படி வைக்கலாம்.
8. மேற்கு பக்கம் சுமை வைக்கலாம்
9. வடகிழக்கு திறந்து இருக்க வேண்டும். காலியாக இருக்க கூடாது. அடைத்தால் சுகம் கெடும்
10. தென்மேற்கு/ மேற்கு கழிவறை நல்லது
11. வடக்கு கனமான சுமை கூடாது. லேசான சுமை வைக்கலாம்
12. வடக்கில் இருந்து வடமேற்கு வரை குபேரஸ்தானம், படுக்கை குழந்தைகள் இருக்கும்/படுக்கும் இடம், படிப்பு
வசதி, பணம் வைக்கும் இடம் போன்றவை வைக்கலாம்.
13. தென் மேற்கில் over head tank வைக்கலாம்
14. தென் மேற்கு சுவரும் அஸ்திவாரமும் அழுத்தமாய், வலுவாக இருக்க வேண்டும்.
15. கல்லூரி விரிவுரையாளர் வடமேற்கில் பக்கம் வாசல் வைக்கலாம். அல்லது மேற்கில் தலை வைத்து படுக்கலாம்.
அல்லது மேற்கில் படுக்கை வைத்து கொள்ளலாம்.
16. மேலாளர் கிளெர்க் போன்றவர்கள் வடக்கில் தலை வைத்து படுக்க வேண்டும்.
17. ஜோதிடர் வடக்கு, மேற்கு, வடமேற்கு திசையில் தலை வைத்து படுக்கலாம்
18. யாரும் எங்கும் (வெளியூர் சென்றாலும் கூட) தெற்கில் தலை வைத்து படுக்க கூடாது.
19. பரிகாரம்: எப்படி எங்கு படுக்கை இருந்தாலும் தலையை வடக்கு வைத்து படுக்க வேண்டும். அதேபோல்
படுக்கையை சுவர் ஒட்டி போடக்கூடாது. சுவரை விட்டு கொஞ்சம் தள்ளி போடவேண்டும்.
20. டைனிங் ஹால்: தெற்குப்பக்கம் அல்லது அஷ்டவர்க்கப்படி எந்த திக் அதிக பரல்கள்/ பலமோ, அந்த திசை.
அப்படியில்லையென்றால் வடக்கில் உற்கார்ந்து தெற்கு பார்த்து சாப்பிட வேண்டும். அல்லது சனி ஜாதகத்தில்
எந்த தத்துவமோ அந்த தத்துவ திக் பார்த்து சாப்பிட வேண்டும்.
21. வடகிழக்கில் போர்டிகோ borewell. வடகிழக்கு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து நீரை கிழக்கில் எடுத்டுகொண்டு
போய் பின் தென்மேற்கு மூலையில் ஏற்ற வேண்டும்.
22. தெற்கில் டைனிங்
23. தென் மேற்கு பக்கம் கழிவறை
24. செப்டிக் டேங்க் வடக்கின் மத்திய பாகத்தில் இருந்து ஒரு அடி தள்ளி கட்ட வேண்டும்.
25. படுக்கைகளை சுருட்டி தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் வைக்கலாம். கழிவறை மேல் உள்ள பரணி
போட்டு வைத்து வைக்கலாம்
26. மேற்கு utilities
27. தென்மேற்கு, வடமேற்கு படுக்கை. படுத்து கொண்டு பார்த்தல் கதவு தெரியும்படி படுக்க வேண்டும்.
28. வலது கையில் மட்டுமே காப்பு போடவேண்டும்.
29. தென்மேற்கு பணப்பெட்டி
30. கிழக்கு ஹால்
31. வீட்டில் கழிவு நீர் வடகிழக்கு நோக்கி செல்ல வேண்டும்.
32. வடகிழக்கு வடமேற்கு பூஜை அறை நல்லது. தென்கிழக்கில் உள்ள சமையல் அறையில் வடமேற்கில் கூட சாமி
படம் வைத்து கும்பிடலாம். வீட்டில் பூஜை செய்யும் சாமியை மற்றவர்கள் பார்க்க கூடாது. நாம் செய்யும் பூஜை
சாமி கும்பிடுவதை மற்றவர்கள் பார்க்க கூடாது.
33. வடக்கு வடகிழக்கு வடமேற்கு திசைகளில் சாமி பூஜை செய்வது நல்லது
34. வடக்கு குபேரஸ்தானம். இங்கு பணம் வைக்கலாம்.
35. ஆனால் தென்மேற்கு மூலையில் பணப்பெட்டி வைக்க வேண்டும்.
36. தொட்டி முற்றம் - காலப்போக்கில் செல்வம் குறையும்.
37. மாடிப்படி லாபம் நஷ்டம் லாபம் நஷ்டம் என்று முடியவேண்டும் என்பது சரியல்ல. எப்படி
வேண்டுமென்றாலும் இருக்கலாம்

பொது
 தாத்தாவின் பெயரை வைப்பது பரம்பரை சொத்து போகாது என்பதால்
 வடக்கில் தலை வைத்து படுப்பது விசேஷம்
 ஒருவர் ஜாதகத்தில் சனி இருக்கும் திசைக்கு எதிர் திசை அமர்ந்து வேலை செய்ய வேண்டும். அதாவது
சனியை பார்க்க கூடாது.
o அக்கினி தத்துவம் கிழக்கு
o நில தத்துவம் மேற்கு
o காற்று தத்துவம் தெற்கு
o நீர் தத்துவம் வடக்கு

 வீட்டை சுத்தம் செய்வது பழைய சாமான் தூக்கி போடுவது எல்லாம் சனி புதன் மட்டும் செய்ய வேண்டும்.
 6 மாதத்திற்கு மேல் பயன்படாது பொருள்கள் எல்லாம் 6 மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்து வைக்க
வேண்டும். உபயோகம் இல்லையென்றால் யாருக்காவது கொடுத்துவிட வேண்டும். அல்லது தூர எறிந்துவிட
வேண்டும். வீட்டில் வைத்தால் தரித்திரம்
வாஸ்து பூஜை
வாஸ்து தேவன்: உரிமையாளரின் ஒரு சான் அளவு மட்டுமே லிங்க வடிவில் இருக்க வேண்டும். கோவில் அரண்மனை
கட்ட ஒன்னறையடி இருக்கலாம். வீட்டிற்கு ஒரு சான் மட்டுமே. அடிப்பக்கம் தஞ்சாவூர் பொம்மை போன்று லேசாக
வளைந்து இருக்க வேண்டும். அதில் மூன்று வட்ட கோடுகள் போட்டு மூன்று பாகங்களாக பிரித்து கொள்ள வேண்டும்.

வாஸ்து பூஜை செய்யும் முகூர்த்தம் அந்த வீடு எதனை ஆண்டுகள் சுபீட்சமாய் இருக்கும் என்று காட்டும்.
மனையின் மத்தியில் இருந்து வடக்கே 10 அடி தள்ளி வாஸ்து பூஜை செய்ய வேண்டும்.
பூஜை செய்வதர்க்கு முதல் நாள் உரிமையாளரின் கையில் ஒரு முழம் அளவிற்கு நீளம், அகலம் ஆழம் பள்ளம்
பறித்து, அதில் சல்லிய தோஷம் விலக 4 லிட்டர் பால் விட்டு மஞ்சள் குங்குமம் பூக்கள் போட்டு வைக்க வேண்டும்.
மிக முக்கியமாக ஊற்றிய பாலை பூமி உறிஞ்சிவிட வேண்டும். 2 லிட்டர் பாலுடன் 2 லிட்டர் தன்னீர் கலந்து விடலாம்.
நன்கு பூமியில் உறிஞ்சும்.பள்ளம் பறிக்கும் மண்ணை பள்ளத்திற்கு வடக்கில் மட்டும் வைக்க வேண்டும்.

அடுத்த நாள் 12 செங்கல்கள் எடுத்து முதல் கல் மேற்கில் அடுத்து தெற்கில்,


அடுத்து வடக்கில் அடுத்து கிழக்கில் வைக்க வேண்டும். மீண்டும் இதே போல் 2
சுற்றுக்கள் வைத்து, நவதானியங்கள் போட்டு லிங்கத்தை (வாஸ்து தேவன்) வைக்க
வேண்டும்.

லிங்கம் வைக்கும் பொது உரிமையாளர் “நந்தே நந்தயஹா, வசிஸ்டோ வசுபிஹி,


சம்புவிஷி பிராஜஹா” என்ற மந்திரம் சொல்லி வைக்க வேண்டும். பொதுவாக
வாத்தியார்கள் சொல்லும் மந்திரம் இதன் பின் தான் சொல்ல வேண்டும். பின் மற்ற
பூஜைகளை செய்து மண்ணை எடுத்து மூடிவிடவேண்டும்.

பரிகாரம் 1
இப்படி வாஸ்து பூஜை செய்யாமல் வீடு கட்டி விட்டால்
4 பிராமணாள் வரவேண்டும்
108 மண் கலசம் வாங்கி, அதில் சமுத்திர மண், மூன்று ஆற்றின் மண், கோவில் மண் எல்லாம் போட்டு, அதில் ஒரு
பெரிய பானையில் எல்லாம் போட்டு, அதில் நவதானியங்கள் போட்டு, நவரத்திரங்கள் போட்டு வாஸ்து பூஜை செய்து,
பிரச்சிர்த்த ஹோமமும் செய்து பின் அந்த பெரிய பானையை, வடகிழக்கில் உள்ள சுற்று சுவரில் ஒரு பிறை போன்று
செய்து அதில் வைத்து சிமெண்ட் கொண்டு மூடி விட வேண்டும். சுற்றுச்சுவர் அகலம் கம்மியாக இருந்தால்
அதிகப்படியாக ஒரு சுவர் கட்டி அதில் வைத்து மூடிவிடலாம்.

பரிகாரம் 2: வாடகை வீட்டிற்கு:


அப்படி இல்லாவிட்டால் நமது ஜாதகத்தில் குரு எந்த இடத்தில் அதிக பரல்கள் கொண்டுள்ளாரோ அந்த இடத்தில்,
அந்த திசையில், அது எந்த திசையாக இருந்தாலும், அந்த இடத்தில டேபிள் அல்லது ஸ்டாண்ட் போட்டு அதில் ஒரு
லிங்கம் (நவராத்திரி கொலு பொம்மை போன்று போதுமானது) வாங்கி வைத்து விடவேண்டும். முதல் நாள்
சாதாரணமாய் பூஜை செய்து வைக்க வேண்டும். வேறு எந்த சிறப்பு பூஜையும் எந்த நாளிலும் கூடாது.லிங்கத்தின்
தண்ணீர் விழும் பாகம் தெற்கு நோக்கி இருந்தால் நல்லது. ஆனால் முக்கியம் அல்ல. இது முக்கியமாக வாடகைக்கு
இருக்கும் வீட்டில் செய்யலாம்.

எப்போது கிரக பிரவேசம் செய்யலாம்:


கால புருஷன் எப்போதும் சூரியன் இருக்கும் திசை நோக்கி பார்த்து இடது கையை தலைக்கு தலையணை போன்று
வைத்து படுத்து இருப்பார். அவருக்கு முதுகு பக்கம் வாசல் உள்ள வீடுகள் மட்டும் கிரகப்பிரவேசம் செய்யலாம். கால
புருஷன் பார்க்கும் திசையில் உள்ள வீடுகள் கிரகப்பிரவேசம் செய்ய கூடாது. பிரம்ம முகூர்த்தத்தில் கிரகப்பிரவேசம்
கூடாது. பகல் வேலை நல்ல முகூர்த்தம் பார்த்து செய்ய வேண்டும்.

கிரகப்பிரவம் செய்யும் நாளுக்கு முதல் நாள் சூரிய அஸ்தமனம் முன் வீட்டை சுத்தம் செய்து கோலம் போட்டு,
சாமிபடம், விளக்கு திரி அடுப்பு வைத்து விட்டு வரவேண்டும். வாசலுக்கு மஞ்சள் பூ மாலை எல்லாம் போட்டு வைக்க
வேண்டும். எண்ணெய் தீப்பெட்டி வைக்க கூடாது. வேறு எந்த பொருளும் வைக்க கூடாது. கதவு ஜன்னல் எல்லாம்
மூடி வைக்க வேண்டும். ஓட்டைகள் எல்லாம் காதிகம் கொண்டு அடைத்து வைக்க வேண்டும். பேய் பிசாசுக்கள் உள்
நுழைந்துவிடும்.
எத்தணை மணிக்கு பிரவேசம் செய்ய வேண்டுமோ அத்தனை மணிக்கு 10 நிமிடம் முன் சென்று மந்திரம் சொல்லி
கற்பூரம் காட்டி கதவை திறந்து உள் செல்ல வேண்டும். 9 மந்திரங்கள் சொல்லி மட்டுமே உள்ளே செல்ல வேண்டும்.
சென்ற உடன் சாமிக்கு விளக்கு ஏற்றி கும்பிட்டு பால் காச்சி. காச்சிய பாலை வந்தவர்களுக்கு இனிப்புடன்
கொஞ்சமாய் தர வேண்டும். நிறைய தர கூடாது. சாஸ்திரத்திற்கு தர வேண்டுமே தவிர நிறைய தந்தால் லஷ்மி விலகும்.
அதன் பின்தான் வாத்தியார் வைத்து ஹோமம் செய்ய வேண்டும். ஹோமம் செய்யும் முன் அடுப்பு ஏற்றி பால்
காச்சலாம். அடுப்பை பற்றவைத்து லக்ஷ்மியை வரவைத்து விடவேண்டும். பின் ஹோமம் செய்யவேண்டும்.
நடுராத்திரியில் எந்தவிதமான ஹோமமும் பூஜையும் செய்ய கூடாது.

நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம், லட்சுமி கணபதி ஹோமம் செய்யவேண்டும். வீட்டில் குழந்தைகள் நிறைய
இருந்தால் 22 செய்ய வேண்டும். குழந்தை குறைவாய் இருந்தால் 9 உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

திகபந்தனம்: பூசணிக்காய் வெட்டி ஒவ்வொரு மூலையிலும் 8 திக்கும் ஒரு மந்திரம் சொல்லி வைக்க வேண்டும்.
ஹோமம் செய்யும் வாத்தியார் செய்வார்.

கிரகப்பிரவேசம் செய்யும் முன் உரிமையாளர் சொல்ல வேண்டிய மந்திரம்.


ஹஸ்ய மம நூதன கிரஹஸ்ய சர்வதோஷ பரிஹாரார்த்தம் சர்வதேஜஸ் திஷ்யத்ம் துஷ்யஸ்தம் புஷ்யஸ்தம்
அபுதாஸ்தம் வாஸ்துதேவதாம் பூஜாம் கரிஸ்யே

பணப்பிரசிச்சினைக்கு பரிகாரம்
மலேசியன் மூங்கில் செடியை தென்மேற்கு மூலையில் காம்பௌண்ட் உள்ளே வைக்க வேண்டும். அதை நான்கு
அடிக்கு மேல் வளரவிடாமல் நறுக்கி வைக்க வேண்டும்.

வைசாக தோஷங்கள் இருந்தால்


முதலில் சில வாரங்களுக்கு செவ்வாய் வெள்ளை மாலை 5-7 மணிக்குள் வீடு முழுவதும் எட்டுத்திக்கும் சாம்பிராணி
போட வேண்டும்.
பின் 6 புதிய மண் பானை வாங்கி தண்ணீரில் போட்டு ஊற வைத்து பின் நன்கு காயவைத்து வைத்து கொள்ள
வேண்டும். அதில் ஒரு பானையில் ரொம்பும் அளவிற்குதேன் ஊற்றி, வெள்ளை நிற புதுத்துணி கொண்டு மூடி, கருப்பு
கயிற்றில் கட்டி வீட்டின் வடகிழக்கில் மூலையில் தொங்க விட வேண்டும். வெளிப்பக்கம் தொங்கவிடுவது மிகவும்
சிறப்பு. முடியாத பட்சத்தில் உள்பக்கம் தொங்க விடலாம்.

சரியாக 1 மாதம் கழிந்தபின் பானையை தனியாகவும் துணி கயிறை தனியாகவும் குளம் ஆறு கிணற்றில் போட்டு
விட்டு புதிய பானையில் புதிய தேன் ஊற்றி, புதிய வெள்ளை துணி கொண்டு மூடி, கருப்பு கயிற்றில் கட்டி
வடகிழக்கில் தொங்கவிடவேண்டும். இப்படி 5 மாதம், 5 பானை ஆன பின், ஆறாவது பானையை 1 வருடம் கட்டி
வைக்க வேண்டும். பின் ஏழாவது பானையை 3 வருடம் கட்டி வைக்க வேண்டும். பின் அதையும் நீரில் விட்டுவிட
வேண்டும். பின் எதுவும் தேவையில்லை

You might also like