You are on page 1of 7

ஆயுள் பலம்:

 ஆயுளை 3, 8, 12 பாவங்கள் கொண்டும், தத்துவ அடிப்படையிலும், இரண்டு விதமாக பார்க்க


வேண்டும். அப்படி பார்க்கும் போது இரண்டும் ஒருமாதிரியாக வர வேண்டும்.
இல்லையென்றால் ஜாதகத்தில் எதோ குளறுபடி உள்ளது என்று பொருள்.
 3 8 12 அதிபதிகள், மற்றும் ஆயுள் காரகர் சனி, போன்றோர் கால சக்ரத்திற்கும், லக்னத்திற்கும்
எத்தனையாவது ராசியில், எந்த ராசியில் அமர்ந்துள்ளார்கள், அவர்களை யார் பார்க்கிறார்கள்,
அவர்கள் என்ன தத்துவம், திக் பலம், ஸ்தான பலம், என்று பார்க்க வேண்டும். அந்த ராசியின்
காரக தன்மை கொண்டு அந்த கிரகங்கள் செயல்படும்.
 ஆயுள் காரகன் சனிக்கு சுப கிரகங்களின் பார்வை ஆயுள் கூடும். தீய கிரகங்களின் பார்வை
ஆயுள் குறையும்.லக்கணத்தையும்
 லக்கினத்தின் தன்மைகள் லக்கினாதிபதியுன் தன்மைகளை பொருத்திப்பார்த்தும் நிர்ணயிக்கலாம்.

மரணம்:
 3 8 12 பாவ அதிபதிகள் திசை நடக்கும் நேரத்தில் மரணம் நடக்கும். அல்லது 2/8 பாவ
அதிபதிகள் அந்த வீடுகளில் உள்ள நட்சத்திர அதிபதிகள் திசை புக்தியில் மரணம் நடக்கும்.
 8 க்கு 3/11 கிரகங்கள் அதற்க்கு கேந்திரத்தில் உள்ள கிரகங்கள் பார்க்க வேண்டும்
 அஷ்டமாதிபதியும் லக்கினாதிபதியும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
 1 4 7 10 பாவாதிபதிகள் தங்களுக்குள் எப்படி அமைந்து இருக்கிறார்கள் என்றும் இவர்கள்
லக்கினத்திற்கு எப்படி அமைந்து இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
 இவர்கள் 3/11 6/8 என்று இருந்தால் ஜாதகர் தற்கொலை செய்து கொள்வார்.
 லக்கினாதிபதியும் மரகதிபதியும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். இவர்கள்
2/12; 5/9 என்று வந்தால் இவன் அடுத்தவனால் கொல்லப்படுவான்
 ராகுவும் செவ்வாயும் சேர்ந்தால் விபத்து அல்லது ஜாதகர் அடுத்தவரை கொலை செய்வார்.

அத்திரி சூத்திரங்கள்

 கோச்சாரத்தில் எட்டாம் அதிபதியும் ராகுவும் சேர்ந்து ஜனன லக்கினத்திற்கு அல்லது ஜனன


லக்னாதிபதிக்கு 1, 5 9 அல்லது 6/8; 2/12 என்ற நிலையில் வந்தால் விபத்து அதன் மூலம்
மரணம் ஏற்படலாம்.
 நவம்ச லக்கினத்திற்கு 10ம் பாவ அதிபதி ராசியில் 6 8 12ல் அமர்ந்து இருந்தால் நஞ்சூண்டு
மரணம்.
ஆயுள் பலம் 1 - 3, 8, 12 பாவங்கள் பார்க்கும் முறை:
3, 8, 12 பாவங்கள் பார்க்க வேண்டும். 3, 8, 12 பாவங்களை சத்வம் அதசத்வமாய் பார்த்து, 2/12, 3/11,
5/9, 6/1 அல்லது கேந்திரம் என்று பார்க்க வேண்டும்.
 1:1 = பூர்ண வயது
 2:12 = மத்திம வயது மருத்துவ மனையில் சிகிச்சை
 3:11 = மத்திம வயது
 4:10 = அற்ப வயது/ பாலாரிஷ்டம்
 5:9 = அற்ப வயது/ பாலாரிஷ்டம்
 6:8 = திடீர் மரணம் மருத்துவ மனையில் சிகிச்சை.
 7:7 = நீண்ட ஆயுள் அல்லது உடன் மரணம்
சனி 3 அல்லது 8 ம் வீட்டை பார்த்தாலோ, அல்லது 3, 8 அதிபதிகளை பார்த்தாலும் 30 வருடம்
கூட்டிக்கொள்ள வேண்டும்.
3 ம் வீட்டிற்கு உரிய சனி 3 ம் வேட்டை பார்த்தல் 15 வயது மட்டும் சேர்க்க வேண்டும்
3, 8 அதிபதிகளுடன் இணைந்து இருந்தால் 15 வருடங்கள் கூட்டிக்கொள்ளலாம்.
 மற்ற வீடுகளை சர ராசியில் இருந்து பார்த்தல் 30 வயதையும்.
 ஸ்திர ராசியில் இருந்து பார்த்தல் 15 வயதையும்,
 உபய ராசியில் இருந்து பார்த்தல் 7 1/2 வயதையும் கூட்ட வேண்டும்.

3/11 இரண்டு முறை வந்தால் தீர்க்க ஆயுளில் பாதி மட்டுமே. 45 வயது.

6/8 இரண்டு முறை வந்தால் ஆயுள் பாதியாக குறையும்

2/12 வந்தால் 30 வயது

3/11 வந்தால் 45 வயது


ஆயுள் பலம் 1 - தத்துவங்கள் அடிப்படியில் பார்க்கும் முறை:
அக்னி என்பது 1 5 9 வீடுகள்.
நிலம் என்பது 2, 6, 10 வீடுகள்.
காற்று என்பது 3, 7, 11 வீடுகள்.
நீர் என்பது 4, 8, 12 வீடுகள்.
கிரகங்கள் எந்த தத்துவத்தில் அதிகம் உள்ளது என்று பார்க்க வேண்டும்.
 அக்னி தத்துவ வீடுகளில் அதிக கிரகங்கள் இருந்தால் தீர்க்கமான ஆயுள் - 70-100 வயது
வரை
 நில தத்துவ வீடுகளில் அதிக கிரகங்கள் இருந்தால் மத்திய ஆயுள் - 50-60 வயது வரை
 காற்று தத்துவ வீடுகளில் அதிக கிரகங்கள் இருந்தால் அற்ப ஆயுள் - 35-50 வயது வரை
 நீர் தத்துவ வீடுகளில் அதிக கிரகங்கள் இருந்தால் பாலாரிஷ்டம் - 35 வயதுக்குள்

7 கிரகத்துடன் ஒரு லக்கினம் சேர்ந்தால் 8*12=96 வயது. அதற்க்கு மேல் ராகு கேதுக்கள் பலத்தில்
நடக்கும் வாழ்க்கை.

ராகுக்கு கோணத்தில் செவ்வாய் வந்து குருவின் பார்வையும் விழுந்தால்


அறுவை சிகிச்சை.

குரு கேது தற்கொலை


ஆயுள் (Venkatesan)

மேஷம் 7 லக்கினத்தில் இருந்து ராசிக்குரிய எங்களை கூட்ட வேண்டும்


ரிஷபம் 16 லக்கினத்தில் கிரகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்குரிய எண்ணை
மிதுனம் 9 கூட்ட வேண்டும்
கடகம் 21
சிம்மம் 5 ஒரு ராசியில் 2 கிரகம் இருந்தால் அதே என்னை கூட்ட வேண்டும்
கன்னி 9 3 கிரகங்கள் இருந்தால் பாதி மட்டும் கூட்ட வேண்டும்
துலாம் 16 தீய கிரகங்கள் 3/11 இருந்தால் அந்த எங்களை கழிக்க வேண்டும்
விருச்சகம் 7 லக்கினம் 8 ம் பாவத்தில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் அந்த எண்னை
தனுசு 10 கூட்ட வேண்டும்
மகரம் 4
சனியை தீய கிரகங்கள் பார்த்தல் அந்த எண்னை கழிக்க வேண்டும்
கும்மம் 4
மீனம் 10
ஜெய்முனி முறையில் ஒருவரின் ஆயுள் நிர்ணயம் செய்யும் முறை

பெயர் : முன்னால் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி


பிறந்த தேதி: 20/08/1944
நேரம் : 5:50 A.M. இடம்: மும்பை
லக்னம் : கடகம் - 25 பாகை
சந்திரன்: சிம்மம் - 16 பாகை
சனி : மிதுனம் - 14 பாகை
இவை அனைத்தும் பின்னர் உதவும் என்பதற்காக.

Step 1:
ஆயுர் லக்னம் கணக்கிடும் முறை:
பிறந்த நேரம்: 05:50
சூரிய உதயம்: 06:15
இரண்டையும் கழித்தால்: 23:35
இதை நாழிகைக்கு மாற்றினால்: 23:35 * 2.5 = 59 நாழிகை 31 விநாடிகள் வந்த விடையை ஐந்தால்
வகுக்க வேண்டும் (ஒரு ராசியில் ஐந்து நாழிகை என்பதால்)
(59-31) / 5 = 11.431
இதில் 11 மட்டும் எடுத்து கொண்டு அதனுடம் 1 ஐ கூட்ட வேண்டும். 11 + 1 = 12
நவாம்சத்தில் சந்திரன் இருக்கும் ராசி : சிம்மம், இதில் இருந்து மேலே வந்த 12 ஐ கூட்டினால்
கிடைக்கும் ராசி கடகம்.
எனவே, ஆயுர் லக்னம் = கடகம்.

Step 2:
சதுர்தாம்ச லக்னம் கணக்கிடும் முறை:
(59-31) / 5 = 11.431
இதில் உள்ள 431 ஐ 4.31 ஆக எழுதி கொள்ள வேண்டும்.பின்னர் இதை 1.25 ஆல் வகுக்க
வேண்டும்.
ஒரு ராசிக்கும் ஐந்து நாழிகை அதை நான்கு தத்துவங்களாக பிரித்தால் கிடைப்பது 1.25, எனவே
(4.31)/(1.25) = 4
தோராய கணக்குகள், துல்லியமாக பின்னர் வரும் பதிவுகளில் கணக்கிடலாம்.
நவாம்ச சந்திரன் இருக்கும் இடம்:சிம்மம், இதில் இருந்து மேலே வந்த 4 ஐ கூட்டினால் கிடைக்கும்
ராசி விருச்சிகம்.
எனவே.சதுர்தாம்ச லக்னம் = விருச்சிகம்.

Step:3
பராசரர் முறையில் மேஷத்தை தர்மம்,ரிஷபம் அர்த்தம், மிதுனம் காமம், கடகம் மோட்சம் என்று
எடுத்து கொள்வோம்.ஆனால் ஜைமுனி முறையில் ஆயுர் லக்னம் வரும் ராசியை தர்மம் என்று
எடுத்து கொண்டு கணக்கிடுகிறோம்.
ஆயுர் லக்னம்: கடகம் - தர்மம்
இங்கிருந்து விருச்சிகம் - தர்மம் என்றே வரும்.
(சிம்மம் - அர்த்தம்;கன்னி - காமம், துலாம் - மோட்சம்)
ஆயுர் லக்னம்: தர்மம்
சதுர்தாம்ச லக்னம்: தர்மம்.
தர்மம் + தர்மம் = பாலரிஷ்டம் 
பாலரிஷ்டம் என்பதால் 16 வயது.
சனி 12 இல் சுபர் வீட்டில் உள்ளார்.மூன்றாம் பார்வையாக குருவை பார்க்கிறார்.குரு , சந்திரன்
இணைவு யோகம் உள்ளது.(குரு + சந்திரன் = ஜனன ஜாதகத்தில் சிம்மத்தில்)
சனி பார்வை பெற்றதால் சனியின் ஒரு சுற்றான 30 ஐ 16 உடன் கூட்ட வேண்டும். 16 + 30 = 46
(மத்திய வயது)
இங்கே ஒரு பார்முலாவை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
தர்மம் + தர்மம் = பாலரிஷ்டம்
தர்மம் + அர்த்தம் = குறைந்த வயது
தர்மம் + காமம் = மத்திய வயது
தர்மம் + மோட்சம்= நீண்ட ஆயுள்

Step 4:
இங்கே ஒரு பார்முலா உள்ளது. மத்திய வயது என்றால் 33 என்று எடுத்து கொள்ள வேண்டும்.
33 + (30 - 25) * 1.1 = 38.5
30 = ஒரு ராசியின் பாகை, 25 = லக்ன பாகை.
ஒரு ராசிக்கு 30 பாகை, 1 பாகைக்கு 1 ஆண்டு 1 மாதம் 6 நாள்; 30 பாகைக்கு 33 ஆண்டுகள்.இதையே
1.1 ஆக எடுத்து கொள்கிறோம்.
தற்பொழுது மீண்டும் சந்திரன் 16 பாகையை வைத்து.
33 + (30 - 16) * 1.1 = 48.4
சராசரி = (38.5 + 48.4) / 2 = 43.5
மீண்டும் மேலே உள்ளது போல் ஒரு கணிதம்:
33 + (30 - 16) * 1.1 = 48.4
33 + (30 - 14) * 1.1 = 50.6
14 என்பது சனியின் பாகை
சராசரி = (48.4 + 50.6)/2 = 49.5
இப்பொழுது மேலே கிடைத்த இந்த இரண்டு விடையின் சராசரி 43.5, 49.5 எடுக்க வேண்டும்.
(43.5 + 49.5) / 2 = 46.5 = 47 (தோராயமாக)
அவரின் பிறந்த வருடம் 1944, இத்துடன் 47 கூட்டினால் 1991, அவர் இறந்த வருடம்.

Step 5:
இதில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் குறிப்பிட்ட வயது கொடுக்கப்பட்டுள்ளது.அதை ஜோதிடரின்
திறமையை பொருத்து வந்த விடையுடன் கூட்டி,கழித்து இறுதி விடை காண வேண்டும் என்று
ஜெய்முனி அவர்கள் கூறியுள்ளார்.அதை இப்பொழுது எழுதினால் குழப்பம் ஏற்படும் என்பதற்காக
இத்துடன் இந்த நீண்ட பதிவை முடித்து கொள்கிறேன்.
மேலும் 5 ஆம் ஸ்டெப் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்

You might also like