You are on page 1of 1

கிரக அஸ்தங்கம் - ஒரு பார்வை

• ஒரு கிரகம் என்னதான் பலம் பெற்றாலும் (உச்சம், மூலத்திரிகோணம், ஆட்சி, திக்பலம், சுயசாரம்....) அது அஸ்தங்கம்
அடைந்தால் தனது பலத்தை இழந்து விடும்.
• அஸ்தங்கம் அடைந்த கிரகத்தின் காரகத்துவம் மற்றும் ஆதிபத்தியம் பாதிக்கப்படும். அதாவது இருக்கும் டிகிரி
அடிப்படையில் அதன் பலன்கள் ஜாதகரிற்கு மிகக்குறைவாகவோ அல்லது அதன் பலன்களில் சிலது ஜாதகரிற்கு
நிராகரிக்கப்படலாம்.
• சூரியனிற்கு நட்பு கிரகங்கள் அஸ்தங்கம் அடையும் போது அதன் ஒரு பகுதியை சூரியன் எடுத்து வழங்குவார்.
• அஸ்தங்கம் என்பது ஒரு கிரகம் சூரியனிற்கு பின்னால் சென்று மறைதலாகும். இதனால் இவற்றின் கதிர்வீச்சு பூமியில்
விழாது. அஸ்தங்கம் பெறும் போது அக்கிரகம் பூமிக்கு தொலைவில் இருக்கும் (நீசம் போல - அதாவது நீசம் பெற்ற
கிரகம் பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும். அதனால் அதன் கதிர்கள் பூமியை மிகக்குறைந்தளவாகவே தாக்கும்.
அதாவது வலுவற்ற கதிர்வீச்சு.)
• இவை பரிவர்த்தனை பெற்றால் அஸ்தங்க தோஷம் தீரும்.
• அஸ்தங்கம் அடைந்த கிரகத்திற்கு பார்வை வலு இல்லை. (அதாவது அதன் அடர்த்தியான கதிர்வீச்சு பூமியில் விழாது.)
• கிரகங்கள் அஸ்தங்கம் பெறும் பாகை அளவு. சூரியனிற்கு முன், பின் உள்ளபோது;
• செவ்வாய் - 17°
• புதன் - 13°
• குரு - 11°
• சுக்கிரன் - 8°
• சனீஸ்வரன் - 15°
அஸ்தங்க எல்லையாக அஸ்தங்க டிகிரிக்கு முன் பின்;
செவ்வாயிற்கு சுமார் 2°உம் புதன் மற்றும் சனீஸ்வரனிற்கு அண்ணளவாக சுமார் 1°உம் எடுப்பேன். இந்த அஸ்தங்கம்
எல்லையில் நிற்கும் கிரகம் ஸ்தானபலம் பெற்றால் (ஓரளவு) வலுவாக உள்ளதாக கருதலாம்.
• சாயா கிரகங்கள் என்ற ராகு மற்றும் கேது சூரியனையே விழுங்கும் சக்தி ( கிரகணம்) பெற்ற காரணத்தால் அவைகளை
அஸ்தங்கம் செய்ய சூரியனால் முடியாது.
• சந்திரன் மற்றும் பூமிக்கு நடுவில் சூரியன் ஒருபோதும் வரமாட்டார். அதாவது சந்திரன் பூமியை சுற்றும் உபகோள்
என்பதால் சூரியனிற்கு பின்னால் சென்று மறைய மாட்டார். ஆகவே சந்திரனிற்கு அஸ்தங்கதோஷம் என்பது
ஒருபோதும் இல்லை.

You might also like