You are on page 1of 1

முடக்கு ராசி

முடக்கு அல்லது லாடம் என்பது எந்த மூல ஜோதிடநூலிலும் கிடையவே கிடையாது. யோகம், கரணம், திதி போன்ற பஞ்சாங்க
ரகசியமும் அல்ல அந்த முடக்கு. அப்புறம் அந்த முடக்கு எதற்கு பயன்படுகிறது? பரிகாரம் சொல்லத்தான்.

முடக்கு என்றால் என்ன?


சூரியன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறானோ அந்த நட்சத்திரத்திலிருந்து மூலம் நட்சத்திரம் வரை கணக்கிடவேண்டும். இந்த
எண்ணிக்கையை பூராடம் நட்சத்திரத்திலிருந்து எண்ணும்போது எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திரம் இருக்கும்
ராசிதான் முடக்கு.

உதாரணம் :
ஒருவருக்கு அனுசம் நட்சத்திரத்திலே சூரியன் இருக்கிறது. இதிலிருந்து மூன்றாவது நட்சத்திரம் மூலம். மூலத்திற்கு அடுத்த
நட்சத்திரமான பூராடத்திலிருந்து எண்ண மூன்றாவது நட்சத்திரம் திருவோணம். இந்த நட்சத்திரம் உள்ள ராசியான மகரம் முடக்கு
ராசி. சனி முடக்கு கிரகம்.

வேறுமாதிரி விளக்கம்:
சூரியன் எந்த ராசியிலிருக்கிறதோ அதிலிருந்து தனுசு எத்தனையாவது ராசியாக வருகிறதோ அதிலிருந்து அத்தனையாவது ராசி
முடக்கு. சூரியன் சிம்மத்தில் இருந்தால் ஐந்தாவது ராசி தனுசு. தனுசிலிருந்து ஐந்தாவது ராசியான மேசம் முடக்கு அல்லது லாடம்.

இதன் பலன்கள் அந்த ஸ்தானபலத்தை முடக்கும். தடுக்கும். அந்த கிரக தசாவும் நன்மை தெரியாது. இதற்கு சில ஜோதிடர்களால்
பரிகாரம் கூறப்படுகிறது. 

விதிவிலக்குகள்:
இதற்கு விதிவிலக்காக முடக்கு அதிபதி வக்கிரம், நீசம், பகை, மறைவு, அஸ்தமனம், திதிசூன்யம் அடையவேண்டும்
என்கிறார்கள்.

எனது அனுபவத்தில் அக்கிரகம் ஆரம்பகாலத்தில் தடையேற்படுத்தி பிற்காலத்தில் மாபெரும் ராஜயோகத்தை தரும் என்பதே ஆகும்.
இதைத்தான் இந்த முடக்கை தடை என்றும் அதை நீக்க மாபெரும் தோச பரிபாரம் செய்யவேண்டும் என்றும் சில ஜோதிடர்களால்
கூறப்படுகிறது.

எப்போதுமே ஒரு கிரகம் தடையை தருகிறது என்றால் பல முயற்சிக்குபிறகு பெரும் வெற்றியை தரும் என்பது விதிதானே.
அதனால்தான் இதனை பற்றி மூலநூல்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு கிரகம் பலமிழந்தால், பாவபலமடைந்தால்
நன்மைதராது. சுப பலம் அடைந்தால் பெரும் யோகம் தரும். இந்த முடக்கு தடங்கல்களை தந்து பெரும் வெற்றிதரும் அமைப்பாகும்

You might also like