You are on page 1of 1

திருமண கால நிர்ணயம் ராவ்

 தசா புக்தி நாதர்கள் 7ம் பாவகம், 7ம் அதிபதி, லக்கினாதிபதி, அல்லது இவர்களோடு தொடர்பு கொண்ட
கிரகங்களோடு தொடர்பு கொள்வது. அம்சமும் சேர்த்து பார்க்க வேண்டும்
 லக்கினாதிபதியும் 7ம் அதிபதியும் திருமணத்திற்கு முன்னர் தொடர்பு கொள்வது. அல்லது இவர் அவர் மேல்
செல்வது. அல்லது அவர் இவர் மேல் செல்வது.
 தாரா காரகன் (குறைந்த பாகையில் உள்ள கிரகம்), தரகரகனின் அம்சம், தாரா பதம் (7ம் அதிபதி 7க்கு
எத்தனையாவது பாவமோ அத்தனை பாவகம் அவர் அமர்ந்த இடத்தில் இருந்து எண்ணுவது வரும் பாவகம்)
உப பதம் (12ம் இடம்) 7ம் அதிபதி
 கோச்சார குரு விவாக ஸ்தானத்தை பார்ப்பது
 கோச்சார குருவும் சனியும் ஒருசேர 7ம் இடம், லக்கினாதிபதி 7ம் அதிபதி விவாக ஸ்தானத்தோடு தொடர்பு
கொள்வது
 கோச்சார குரு சுக்ரன் அல்லது செவ்வாயை தொடர்பு கொள்வது

7ம் அதிபதி லக்கினத்தில் அல்லது 7ல் இருந்தால் அல்லது லக்கினாதிபதி லக்கினத்தில் அல்லது 7ல் இருந்தால்
திருமணம் 2ம் வீடு 2ம் அதிபதி 7ம் வீடு 7ம் அதிபதி தொடர்பு தேவை

10ம் அதிபதி 10ல் இருந்தால் ராசியில் 4ம் பாவகம், 4ம் அதிபதி, 7ம் பாவகம், 7ம் அதிபதி தொடர்பு தேவை. மற்றும்
நவாம்சத்தில் 1, 5, 7 வீடுகள் அதிபதிகள் தொடர்பும் பெறுகிறது.

You might also like