You are on page 1of 1

பாதகாதிபதி எப்போது நன்மை செய்வார்

1. பாதகாதிபதி லக்ன திரிகோணத்தில் இருந்து, திரிகோண அதிபதி பலம் பெற நற்பலன்கள் உண்டாகும். முன்னோர்கள்
செய்த புண்ணிய காரியங்கள் ஜாதகனை காக்கும்.
2. பாதகாதிபதி லக்ன தொடர்பு கொள்ளாமல், லக்னத்துக்கு மறைவு பெறும் போது நன்மை செய்வார்கள். கெட்டவன் கெட
நற்பலன்கள் உண்டு
3. பாதகாதிபதி நீச பங்கம் பெற்று இருக்க நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
4. தன் சுய வீட்டிற்க்கு மறைந்திருந்தால் நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
5. பாதகாதிபதி திரிகோனாதிபதிகள் நட்சத்திரத்தில் இருக்க பலன் உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
6. பாதகாதிபதி வக்கிரம் பெற நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
7. பாதகாதிபதியை சனி பார்க்க நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
8. பாதகாதிபதி ராகு மற்றும் கேதுகளின் சமந்தம் பெற நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
9. பாதகாதிபதி பலம் இழந்தால் பாதக ஸ்தானமும் பலம் இழக்கும் என்ற கூற்றுபடி, பாதகாதிபதியால் பாதிப்பு பெரிய அளவில்
இருக்காது.
10. பாதகாதிபதி திரிகோண அதிபதியுடன் பரிவர்தத ் னை பெற்றால் நற்பலன்கள் உண்டு.
11. பாதகாதிபதி அஸ்தங்கம் பெற, அந்த கிரக காரகத்துவம் பாதிக்கபட்டு, பாதகா ஸ்தனம் பலம் இழக்கும்.
12. பாதகாதிபதி ராசியதிபதியாக வரும்போது தீமைகள் செய்வதில்லை.
13. பாதகாதிபதி ராசி அதிபதியாக வந்தால் பாதகம் செய்யமாட்டார்
குறிப்பு: குரு பாதகாதிபதி வரும் கன்னி மற்றும் மிதுன லக்ன ஜாதகத்தில், குருவின் பார்வை நமையே செய்யும். ஏனெனில்
பார்வை என்பது ஒரு கிரகத்தின் காரகத்துவ வெளிபாடு என்பதே. அது பாவஆதிபத்திய வெளிபாடு அல்ல.

You might also like