You are on page 1of 14

டப்ளின் நகரத்தா

Page 1 of 14
டப்ளின் நகரத்தா
₹180

Author: ேஜம்ஸ் ஜாய்ஸ்

Publisher: தமிழினி

No. of pages: 240

Other Specifications

Translator: க.ரத்னம்

Category: நாவல், ெமாழிெபயப்பு

Subject: பிற

Language: தமிழ்

Published on: 2015


Book Format: Paperback

க.ரத்னம் ெமாழியாக்கம் ெசய்து தமிழினி பதிப்பகத்தால்

ெவளியிடப்பட்ட ’டப்ளின் நகரத்தா’ என்ற நூைல

வாசித்துக்ெகாண்டிருந்தேபாது, அல்லது வாசிக்க

முயன்றுெகாண்டிருந்தேபாது, அல்லது முயற்சிைய

Page 2 of 14
ைகவிட்டுவிட்டிருந்தேபாது, ேபேயானின் இந்தக் கட்டுைரைய

வாசித்ேதன். துயரத்துடன் ‘ஆமா! ஆமா!’ என்று

ெசால்லிக்ெகாண்ேடன். [தமிழில் ேபேயான்]

ேஜம்ஸ் ஜாய்ஸின் டப்ளினஸ் என்னும் புகழ்ெபற்ற சிறுகைதத்

ெதாகுதியின் தமிழாக்கம் இந்நூல். இைத ெமாழியாக்கம் ெசய்த

க.ரத்னம் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாள. கல்லும் மண்ணும்

என்னும் நாவைலயும் கைதகைளயும் எழுதியவ.

அைரநூற்றாண்டாக பறைவ ஆய்வு ெசய்பவ. தமிழகத்துப்

பறைவகைளப் பற்றி ேகாட்ேடாவியங்களுடன் இவ

ெவளியிட்டுள்ள தமிழகத்துப் பறைவகள் [தமிழினி] ஒரு

முக்கியமான நூல். எல்லாம் சrதான், ஆனால் ெமாழியாக்கம்

ெநஞ்ைச அைடக்கச்ெசய்வது.

என்ன சிக்கல்? இலக்கணப்பிைழகேளா ெமாழியாக்கப்பிைழகேளா

அல்ல. உண்ைமயில் அைவ ஒரு பிரச்சிைனேய அல்ல. ஆசிrயrன்

அகெவளிப்பாட்டுடன் இைணந்துெகாள்ளும் ெமாழி என்றால் நாம்

அவற்ைற கவனிக்கேவ ேபாவதில்ைல. ெமாழியில் கல்ெபாறுக்கிக்

ெகாண்டிருக்கும் சில்லைறத்தனெமல்லாம் வாசகனாக எனக்கு

கிைடயாது. நான் ஒரு நூைல எடுத்ததுேம தCவிரமாக அதன்

Page 3 of 14
ெமாழியுலகுக்குள் நுைழயேவ முயல்ேவன்.

ெசாற்ெறாடகளிலிருந்து காட்சிகைளயும் உணவுகைளயும்

உருவாக்கிக்ெகாள்ள முடிந்தவைர முயல்ேவன். அந்த

ஆசிrயனுக்கு ெமாழிசாந்த எல்லா சலுைககைளயும் அளிப்ேபன்.

ஏெனன்றால் அந்த உளநிைல இன்றி எவரும் நவன


C இலக்கியத்ைத

வாசிக்கமுடியாது. இலக்கியம் நாளிதழ் அல்ல. காரணம்,

அன்றாடெமாழியில், சராசr ெமாழியில் ஒருேபாதும் பைடப்பூக்கம்

ெவளிப்பட முடியாது. அைனவருக்குெமன தரப்படுத்தப்பட்ட

மாறாெமாழியைமப்புேபால வாசகனுக்கு சலிப்பூட்டுவதும்

ேவறில்ைல. ஆகேவதான் நம்மால் ஆங்கிலத்தில் ேஜம்ஸ்

ஜாய்ைஸயும் தமிழில் லா.ச.ராைவயும் வாசிக்க முடிகிறது.

இலக்கணப்பிைழகள் மலிந்த ைவக்கம் முகமது பஷCrன் ெமாழி

அந்த ெமாழியின் தைலசிறந்த புைனவுெமாழியாக கருதப்படுகிறது.

’டப்ளின் நகரத்தா’ என்னும் நூலின் புைனவுெமாழியில் உள்ள

சிக்கல் இதில் அகஒழுங்கு இல்ைல என்பேத. புறஒழுங்கின்ைமைய

அகஒழுங்கு முழுைமயாகேவ நியாயப்படுத்திவிடும். வாசகனாக

நாம் ேதடுவேத ெமாழியின் அகஒழுங்ைகத்தான். அைத இப்படி

ெசால்கிேறன். நாம் ‘சும்மா’ இருக்கும்ேபாது நம்முள் ஓடும்

Page 4 of 14
ெமாழிக்கு ஓ ஒழுங்கு, தாளம் இருக்கிறது அல்லவா? அேதேபால

அந்த ஆசிrயனின் அகத்துள் ஓடும் ெமாழிக்கு இருக்கும் ஒழுங்கும்

தாளமும்தான் அந்த அகஒழுங்கு. அது தன்னியல்பாக

ெவளிப்படுவது. அைதத்தான் உைரநைடயின் ஒழுக்கு என்கிேறாம்.

அந்த அகஒழுங்ைக ெமாழியினூடாக நாம் அைடயும்ேபாேத எதிrல்

ஒரு மனிதன் இருந்து நம்முடன் ேபசிக்ெகாண்டிருக்கிறான் என நாம்

உணகிேறாம். அந்த ஆசிrயனின் அகவுலகுக்குள் நுைழகிேறாம்.

அந்த அகஒழுங்குக்கு ஏற்ப ெமாழியின் புறஒழுங்கு எத்தைன

சிைதந்திருந்தாலும் ெபாருட்படுத்துவதில்ைல. அந்த அகெமாழியின்

நுட்பங்கள், பாய்ச்சல்கள் மட்டுமல்ல தயக்கங்கள், குழப்பங்கள்,

சிடுக்குகள், முரண்பாடுகள், பிைழகள்கூட பைடப்பூக்கத்ைதச்

சாந்தைவேய என உணகிேறாம். நாம் வழிபடும்

ெபரும்பைடப்பாளிகளின் ெமாழிெவற்றிகைள மட்டுமல்ல

ெமாழிச்சிக்கல்கைளக்கூட நாம் நிைனவில் ைவத்திருக்கிேறாம்.

ேமலும், அறிந்தும் அறியாமலும் நிகழும் ெமாழிமயக்கங்கள்

என்பைவ கைலயின் இன்றியைமயாத பகுதிகள்.

ெமாழியாக்கங்கைள எடுத்துைவத்துக்ெகாண்டு ெசால் ெசால்லாக

சrபாத்து தங்கைள அறிஞகளாக காட்டிக்ெகாள்பவகைள

Page 5 of 14
ஒருவைக அற்பகளாகேவ எண்ணுேவன் – அவகளால்

புைனவுகளுக்குள் நுைழய முடியாது. நம் சூழலில்

ெமாழியாக்கங்கைளப் பற்றி அவ்வப்ேபாது கருத்து ெசால்பவகள்

இவகேள. இவகள் மீ தான அச்சத்தால் ெசால்லுக்குச் ெசால்

‘அப்படிேய’ ெமாழியாக்கம் ெசய்யும் அசட்டுத்தனம்

ெமாழிெபயப்பாளகளிடம் உருவாகியிருக்கிறது

ரஷ்ய இலக்கியங்கைள முதலில் ஆங்கிலத்தில் ெமாழியாக்கம்

ெசய்த திருமதி கான்ஸ்டன்ஸ் காெனட் [Constance Garnett] பல

ெசாற்பிைழகளுடன், ெசாற்ெறாடபிைழகளுடன், சிலவற்ைற

விட்டுவிட்டுத்தான் ெமாழியாக்கம் ெசய்தா என்று இன்று

ெசால்கிறாகள். இைடவிடாது ெவறியுடன் ெமாழியாக்கம் ெசய்தவ

அவ. ஆங்கிலவாசககளுக்கு ரஷ்ய இலக்கிய ேமைதகள் அவ

வழியாகேவ அறிமுகமானாகள். உலக இலக்கியப் பரப்ைப

காெனட்டின் ஆங்கில ெமாழியாக்க வடிவம் வழியாகேவ அந்த

ேமைதகள் பாதித்தாகள், மாற்றியைமத்தாகள்.

ஆங்கில இலக்கிய விமசககள் பல காெனட்ைட

ெமாழியாக்கங்களின் அரசி என புகழ்ந்திருக்கிறாகள். அவ

ெமாழியாக்கம் ெசய்தைமயால்தான் ரஷ்யாவின் இலக்கியம்

Page 6 of 14
ஆங்கில உலகில் அத்தைன வாசிக்கப்பட்டது. ஏெனன்றால் ரஷ்ய

நிலம் அவகளுக்கு அன்னியமானது. ரஷ்யாவிலிருந்த

கீ ைழத்ேதயச் சாயல்ெகாண்ட ஆன்மீ கம் ேமலும் அன்னியமானது.

ெசால்லுக்குச் ெசால் ெமாழியாக்கம் ெசய்த ஒரு மனித இயந்திரம்

அப்பைடப்புக்கைள ேமலும் அன்னியமாக்கியிருக்கக்கூடும்.

காெனட் தன் ஆன்மாைவ அந்த ஆசிrயகளுக்கு அளித்தா.

அந்தப்பைடப்புகளில் வாழ்ந்தா. நாம் வாசிப்பது காெனட்டின்

அகெமாழிைய.

அதன்பின் இன்றுவைர நூற்றுக்கும் ேமற்பட்ட ‘சrயான’

ெமாழியாக்கங்கள் வந்துவிட்டன. சமீ பத்தில் காெனட்

ெமாழியாக்கம் ெசய்த டால்ஸ்டாயின் அன்னா கrனினாைவ

வாசித்ேதன். காெனட் ெமாழியாக்கம் அளிக்கும் ெமாழிஒழுக்கும்

உணவின் அணுக்கமும் பிறகு வந்த எந்த ெமாழியாக்கத்திலும்

இல்ைல என்ேற ெசால்ேவன். தமிழில் அவ்வாறு ஓ ஆசிrயருக்கு

தன் ஆன்மாைவ அளித்த ெமாழிெபயப்பாள என்றால்

காண்ேடகருக்காகேவ வாழ்ந்த கா.ஸ்ரீ.ஸ்ரீைய ெசால்லேவண்டும்.

க.ரத்னம் ெமாழிெபயத்திருக்கும் நைட இப்படி இருக்கிறது. “உள்ேள

நுைழந்து நான் அவைர பாக்கவிரும்பினாலும் கதைவத் தட்டும்

Page 7 of 14
ைதrயம் இல்லாததனால் நான் மாைலெவயில் காயும் ெதருவின்

மறுபக்கமாக கைட ஜன்னல்களில் ெதாங்கும் பலைககளின்

விளம்பரங்கைளப் படித்தபடி நடந்ேதன்.’ இதில் ஒரு நான் மிகுதி

என்பைதத்தவிர ெபrய பிைழ ஏதுமில்ைல. ஆனால் ஒழுக்கு

இல்ைல. இத்தைகய ெசாற்ெறாடகள் வழியாக ெசல்லும்ேபாது நம்

மூைள சலிப்புறுகிறது. ெமல்லெமல்ல ெபாறுைமயின்ைமயும்

எrச்சலும் ெகாண்டவகளாகிேறாம்.

சமீ பத்தில் ெவளிவந்துெகாண்டிருக்கும் ெபரும்பாலான

ெமாழியாக்கநூல்கள் அகஒழுங்கு அற்ற உைரநைடயால்

மிகப்ெபrய துன்ப அனுபவங்களாக மாறிவிடுபைவ. நான்

பணம்ெகாடுத்து வாங்கி படிக்கமுடியாமல் ைவத்திருக்கும்

இத்தைகய நூல்களின் ஒரு பட்டியேல உள்ளது. எவrடமாவது

ெகாடுக்கலாம் என்றால் எவருக்கு மனமறிந்து அந்தக் ெகாடுைமைய

ெசய்வது? நூலகங்களுக்கு அளிக்கலாம், எவரும் படிக்காமல்

சுவrல் ெசங்கல் ேபால கட்டுமானத்தின் பகுதியாக அங்ேகேய

இருந்துெகாண்டிருக்கும்.

ெமாழியாக்கத்தில் அகஒழுங்கு எப்படி அைமயமுடியும்? அதில்

இருப்பது மூலஆசிrயனின் அகெமாழி. அைத தமிழுக்கு எப்படி

Page 8 of 14
ெகாண்டுவரமுடியும்? ெமாழியாக்கம் ெசய்பவனுக்குக் கிைடப்பது

அந்த ெமாழிக்கட்டுமானம் மட்டும்தாேன? அைத அப்படிேய

தமிழுக்கு மாற்றுவைதத்தாேன ெசய்யமுடியும்? ெசால்லுக்குச்

ெசால், ெசாற்ெறாடருக்குச் ெசாற்ெறாட சrயாக இருக்கிறதா,

இலக்கணம் அைமந்துள்ளதா என்று மட்டும்தாேன நாம்

பாக்கமுடியும்? – இப்படி ேகட்கலாம். ஆனால் அது உண்ைம அல்ல.

என்னதான் ெசான்னாலும் ெமாழியாக்கம் ெசய்பவனும்

அப்பைடப்புக்கு ஓ ஆசிrயேன. அவைன இைணயாசிrயன் என்ேற

ெசால்லலாம். நாம் வாசிக்கும் ெமாழியாக்கப் பைடப்பில்

முதன்ைமயாக ெவளிப்படேவண்டியது அந்த

ெமாழிெபயப்பாளனின் அகெமாழிதான். நாம் அவனுடன்தான் உளம்

பrமாறிக்ெகாள்கிேறாம். நாம் வாசிப்பது அவனுைடய

ெமாழிெயாழுங்ைகத்தான். மூலஆசிrயைன நாம் ேநரடியாக

அணுகேவ முடியாது.

மூலஆசிrயனின் அகெமாழி எப்படி அப்பைடப்பில் ெவளிப்படும்?

அந்த ெமாழிெபயப்பாளனின் அகெமாழியில் அது ஒரு

ெசல்வாக்ைக ெசலுத்தியிருக்கும், அச்ெசல்வாக்காகேவ நாம் அைத

உணரமுடியும்.

Page 9 of 14
உதாரணமாக இரு நூல்கள். பாவண்ணன் ெமாழியாக்கத்தில்

ெவளிவந்த எஸ்.எல்.ைபரப்பாவின் கன்னட நாவலான பவா.

இன்ெனான்று சி.ேமாகன் ெமாழியாக்கத்தில் ெவளிவந்த ஜியாங்

ேராங் எழுதிய சீன நாவலான ‘ஓநாய்குலச்சின்னம்’. இரு

ஆசிrயகளுேம ெசாந்தமாக அகெமாழி ெகாண்டவகள். நாம் அந்த

ெமாழிைய ேவறுபைடப்புகள் வழியாகவும் அறிேவாம். இந்த

ெமாழியாக்கநாவல்களில் முதன்ைமயாகத் திகழ்வது அந்த

ெமாழிெபயப்பாளகளின் அகெமாழியின் ஒழுங்ேக. ஆனால் அதில்

மூல ஆசிrயகளின் அகெமாழியின் ெசல்வாக்கு வலுவானது

என்பைத அவகளின் ேவறு ஆக்கங்களுடன் இவற்ைற ஒப்பிட்டால்

உணரமுடியும்.

ஆகேவ ெமாழியாக்கம் என்பது ெமாழிக்கு ெமாழிைய ேநைவப்பது

அல்ல. மூல ஆசிrயனின் அகெமாழிக்கு ெமாழிெபயப்பாளன்

தன்ைன ஒப்பைடப்பேத. அதன்வழியாக தன் அகெமாழி மாற அவன்

அனுமதிக்கேவண்டும். அதன்பின் தன் அகெமாழி ெதளிவாக

ெவளிப்படும்வண்ணம் அவன் அம்ெமாழியாக்கத்ைத

நிகழ்த்தேவண்டும். அவனால் அவனுைடய ஒரு பைடப்பு எப்படி

Page 10 of 14
எழுதப்படுகிறேதா அப்படி அவன் அதில் ெவளிப்படேவண்டும்.

அதுேவ நல்ல ெமாழியாக்கம்.

ெமாழிெபயப்பாளன் இயந்திரம் அல்ல. அவன் மூல ஆசிrயைன

ேநாக்கி நம்ைம ெகாண்டுெசல்லும் இன்ெனாரு ஆசிrயன்.

அவனுைடய புைனவுெமாழி மூல ஆசிrயன் ஏறி நம்ைம

வந்தைடயும் ஊதி. நல்ல ெமாழிெபயப்பாளன் மூல ஆசிrயைன

திருத்தியைமக்க மாட்டான், எைதயும் ேசக்கவும் மாட்டான்.

ஏெனன்றால் அவன் மூலஆசிrயனுக்கு தன்ைன ஒப்பளித்தவன்.

இது பல ெமாழியாக்கங்களில் நிகழ்வதில்ைல. முதன்ைமக்காரணம்

பல சrவர புrந்துெகாள்ளாமேலேய ெமாழியாக்கம் ெசய்கிறாகள்.

மூலத்ைத புrந்து உணச்சிகரமாக உள்வாங்காதவரால்

ெசய்யப்படும் ெமாழியாக்கம் உடனடியாகேவ உயிrழந்துவிடும்.

இன்ெனான்று, ெமாழியாக்கச் ேசாம்பல். ஏராளமான

ெமாழியாக்கங்கள் எப்படிச் ெசய்யப்படுகின்றன என்பைத

கவனித்திருக்கிேறன். ஆங்கிலப்பைடப்ைப ஒருபக்கம்

ைவத்துக்ெகாண்டு பாத்து தமிழில் எழுதிக்ெகாண்ேட ெசல்வாகள்.

அந்தத் தமிழ்வடிைவ அப்படிேய அச்சுக்கு ெகாடுத்துவிடுவாகள்.

அதில் இலக்கணப்பிைழகள் மட்டும் திருத்தப்படும். பலசமயம்

Page 11 of 14
அதுவும் நிகழாது. விைரந்து ெமாழியாக்கம் ெசய்ய

விரும்புபவகளின் வழி இது.

இதில் என்ன நிகழ்கிறெதன்றால் அந்த ெமாழியாக்கதின்ேபாது

ெமாழிெபயப்பாளன் மூல ஆசிrயனின் ெமாழிக்கு அண்ைமயில்

ெசல்கிறான். மூலப்பைடப்பின் ெமாழியின் ெசாற்ெறாட அைமப்பு,

ெசால்லாட்சிகள் ஆகியைவ அவன் உள்ளத்தில் இருக்கின்றன.

ஆகேவ அப்ேபாது அவன் ெசய்வது ஒரு நகெலடுப்பு மட்டுேம. அந்த

ெமாழியாக்கத்தின் ெமாழிநைட மூலப்பைடப்பு அைமந்த ெமாழியின்

அேதவடிவில் இருக்கும். ேசாற்ைற சப்பாத்தி மாதிr

பரத்திக்ெகாண்டு ைவப்பதுேபாலிருக்கும் அந்த நைட.

ஆங்கிலம் நமக்கு மிக அயலான ெசாற்ெறாட அைமப்பு ெகாண்டது.

அதில் எழுவாய் பயனிைல அைமப்பு தைலகீ ழாக நிற்கக்கூடியது.

ஆகேவ அைத அப்படிேய எழுதினால் தமிேழ தைலகீ ழாக

நிற்பதுேபாலிருக்கும். ஆங்கிலம் கூட்டுச்ெசாற்ெறாடகள் அைமக்க

ஏற்ற ெமாழி. தமிழில் அந்த அைமப்பு இல்ைல. ஆங்கிலத்ைத

அப்படிேய ெமாழியாக்கம் ெசய்தால் ஒன்ேறாெடான்று ஒட்டாத

பகுதிகைள அள்ளி இைணத்ததுேபால, பிக்காேஸாவின் ெபண்

ஓவியம்ேபால, இருக்கும்.

Page 12 of 14
மைலயாளம், கன்னடம் ேபான்ற தமிழுக்கு மிக அணுக்கமான

ெமாழிகளிலுள்ள சிக்கல் இன்ெனான்று. அவற்றிலுள்ள

ெசால்லாட்சிகள், ெசாற்கள் தமிழிலும் இருப்பைவ. ஆனால்

ேவறுெபாருளில். ேவறு ெதானியில். அப்படிேய தமிழாக்கம்

ெசய்தால் ெமாழிேய உருகி உருக்குைலந்ததுேபால் இருக்கும். அைத

நம்மால் வாசிக்க முடியாது. நாம் புைனவுக்குள் ெசல்லமுடியாதபடி

அந்த ெமாழிச்சிக்கல் நம்ைம ேமேல தள்ளும்

முதலில் மூலத்திலிருந்து ெசால்ெசால்லாக, ெசாற்ெறாட

ெசாற்ெறாடராக ெமாழியாக்கம் ெசய்துவிட்டு மூலத்ைத தூக்கி

அப்படிேய விலக்கி ைவத்துவிடேவண்டும். அந்த மூலப்பைடப்பு

நம்மிடமிருந்து அகல, நாம் அதன் நைடைய மறக்க ஒரு

காலஇைடெவளி விடேவண்டும். நம் ைகயிலிருக்கும் அந்த

ெமாழியாக்கப் பிரதியிலிருந்து சற்று சுதந்திரமாக, நம் நைடயில்,

நம்மில்கிளரும் உணச்சிகளுடன் ஓ இலக்கியப்பிரதிைய நாேம

‘பைடக்கேவண்டும்’ அதுேவ ெமய்யான ெமாழியாக்கம். அந்த

மறுஆக்கம் நிகழாதேபாது ெமாழிெபயப்பாளனின் அகெமாழி

அப்பைடப்பில் ெவளிப்படாது. உைரநைட உள்ெளாழுங்கு

சிதறியதாக அைமயும். அைத வாசிக்கமுடியாது

Page 13 of 14
நான் ெசால்வது உண்ைமயான ெமாழியாக்க முயற்சிகைளப் பற்றி.

திறனற்ற, பயிற்சி அற்ற, எந்த அக்கைறயும் இல்லாத

ெமாழியாக்கங்கள் இங்கு வந்து குவிகின்றன. “Well, now I am on my way

sir!” என்பைத “நல்லது இப்ேபாது நான் என் பாைதயில் உள்ேளன்

ஐயா!” என ெமாழியாக்கம் ெசய்பவகைளப்பற்றி அல்ல. எந்த

ெமாழியாக்கமாக இருந்தாலும் அைத வாங்கி புரட்டி ஏேதனும்

இரண்டுபக்கத்ைத படித்துப்பாருங்கள். இயல்பான ஓட்டம் இருந்தால்

மட்டும் வாங்குங்கள். நான் ஏமாந்த புத்தகங்களின் ஒரு பட்டியைல

ேபாடலாம்தான், ெதாைலேபசி அட்டவைணேபாலிருக்கும்.

Page 14 of 14

You might also like